இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
தமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்காது: அனந்தி சசிதரன்
தமிழ் பேசும் மக்களுக்காக இனியும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்படப் போவதில்லை என்பதையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் நிலைப்பாடு உணர்த்தியுள்ளதாக வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நீதி…
வட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் என்றைக்கும் இல்லாதளவுக்கு அடிதடி, மிரட்டல், ஆள் பிடித்தல், சாதி- மத அடையாள அரசியல் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதம் இருக்கின்ற நிலையில், இன்னும் என்னென்ன அடாவடிக் காட்சிகளைப் பார்க்க…
ரிரிவி தினகரன் – சுமந்திரன் சந்திப்பு
தமிழ்நாட்டில், சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, பெருவெற்றியைப் பெற்றுள்ள ரிரிவி தினகரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம், இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்துள்ளார். கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நத்தார் விழாவில் கலந்து கொண்ட போதே, ரிரிவி தினகரனுக்கும்,…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தது ஜனநாயகப் போராளிகள் கட்சி
உள்ளூராட்சித் தேர்தலில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் கட்சி போட்டியிடுவதாக, தமிழ் அரசுக் கட்சியின் இணைச்செயலரும், வடமாகாணசபை அவைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர்களுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக்…
வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை – யாழ்.…
விடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என்பது வெறும் வதந்தியே, வடக்கில் விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சிக்கு இடமில்லை என்பதை சிறிலங்கா இராணுவம் திடமாக நம்புகிறது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில வார இதழ்…
அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கை தமிழர்! ஐ.நா கடும் கண்டனம்
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலிய நாட்டில் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பிற்கான மனுவை மதிப்பீடு செய்யாது இலங்கை தமிழரான ராஜா என்ற இளைஞரை நாடு கடத்துவதற்கு அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபரை நாடு…
கைகூடாத கூட்டு
ஏனைய காலங்களை விட, தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளிடையே விநோதமான ஒற்றுமைகளும் பகைமை பாராட்டல்களும் ஏற்பட்டு விடுவது வழக்கமானது. மக்களைப் பேய்க்காட்டி, ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக ‘ஆறு கடக்கும் வரை அண்ணன் தம்பி உறவுபோல’ யாருடனும் கூட்டு வைத்துக் கொள்வதற்கு, சிறுபான்மைக் கட்சிகள் மட்டுமல்ல பெரும்பான்மைக் கட்சிகளும் பின்னிற்பதில்லை.…
தமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: வீ.ஆனந்தசங்கரி
“தமிழ் மக்கள் அரசியல் மாற்றமொன்றை விரும்புகின்றார்கள். எனவே, அவர்களின் விருப்பத்திற்கு அமைவாக எல்லோரும் ஒற்றுமையாக வந்தால் நான் கட்சித் தலைமையையும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கின்றேன்.” என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை தாக்கல் செய்த பின்னர்…
முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்
வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதாக, உலகம் தீவிரமாக கருத்தில் எடுத்துக் கொள்ளாது என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், ”தமிழர்களுக்கு எதிரான இனஅழிப்பைக் கண்டித்து அண்மையில் வடக்கு…
அடுத்தவாரம் காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது பயணிகள் கப்பல்
சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்காக, காங்கேசன்துறையில் இருந்து சென்னைக்கு பயணிகள் கப்பல் சேவையை நடத்த இந்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சு நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. “சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், டிசெம்பர் 24ஆம் நாள் தொடக்கம், ஜனவரி 3ஆம்…
இலங்கை: யானைகளைக் கொன்றால் ஆயுள் தண்டனை
காட்டு யானைகள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கு ஏதுவான வகையில் வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…
உள்ளூராட்சித் தேர்தல் ஜெனீவாவில் நீதி கோருவதற்கானது அல்ல: அ.வரதராஜப்பெருமாள்
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது ஜெனீவாவில் நீதி கோருவது சம்பந்தமானதோ, காணாமற்போனோர் சம்பந்தமானதோ, அரசியல் கைதிகள் சம்பந்தமனதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தமானதோ அல்ல” என்று முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை…
வடக்கின் தேவைகளை அறியும் குழுவை அனுப்புகிறார் மலேசியப் பிரதமர்
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அங்குள்ள தேவைகள் குறித்து ஆராய்ந்து தகவல்களைத் திரட்டுவதற்காக, சிறிலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன், தமது நாட்டின் குழுவொன்றை அனுப்பவுள்ளதாக மலேசியப் பிரதமர் அப்துல் நஜீப் ரசாக் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கொழும்பில் உள்ள விடுதியொன்றில் நேற்றுக்காலை சந்தித்துப் பேச்சு நடத்திய…
மீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்தமில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன்
“சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றத்துக்காக நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்ட முன்னாள் புளொட் உறுப்பினர், 2012ஆம் ஆண்டே கட்சியைவிட்டு விலகிய நபர்” என்று புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த பின்னர் புளொட் அமைப்பிலிருந்த சகல ஆயுதங்களையும் ஒப்படைக்குமாறு அறிவித்திருந்த நிலையில்,…
யாழ். நகர மையத்தில் புளொட் உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிகள், வாள்கள்…
யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் புளொட் மூத்த உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து, துப்பாக்கிகள், ரவைகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ். போதனா மருத்துவமனை வீதியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தற்போது அடாத்தாக தங்கியிருந்தார். வெளிநாட்டில்…
மலேசியப் பிரதமரைச் சந்தித்தார் வடக்கு முதல்வர் – இணைந்து செயற்பட…
மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் ரசாக் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் இன்று முற்பகல் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்புத் தொடர்பாக கீச்சகப் பதிவு ஒன்றை இட்டுள்ள மலேசியப் பிரதமர் அப்துல் ரசாக், “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடனான சந்திப்பு…
சிங்கள இராணுவத்தால், வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழ் மக்கள்
இராணுவத்தின் வர்த்தக நடவடிக்கையால், வாழ்வாதாரத்தை இழக்கும் தமிழ் வர்த்தகர்கள். மன்னார், மடுரோட் சந்தியில் இராணுவம் மக்கள் உணவகம் என்ற பேரில், ஒரு மாபெரும் உணவகத்தை பெரும் ஆட்பலத்துடன் ( இராணுவம்) வெற்றிகரமாக கடந்த 08 வருடங்களாக நடத்தி வருகின்றனர்.. இதே பகுதியில்தான் பொதுமக்களும் பலசரக்குக் கடைகளையும், உணவகங்களையும் நடத்தி…
தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்? கூட்டமைப்பின் அடுத்த தலைவர்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழரசுக் கட்சியின் ‘வீட்டுச்’ சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. ஏற்கனவே, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்.) கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ரெலோவும்…
மனித உரிமைகள் குறித்த மேற்குலக நிலைப்பாடுகளை சிறிலங்கா, மலேசிய தலைவர்கள்…
இராணுவப் பயிற்சி, புலனாய்வுப் பரிமாற்றங்கள், முதலீடு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு மலேசியப் பிரதமரும், சிறிலங்கா அதிபரும் இணக்கம் கண்டுள்ளனர். சிறிலங்காவுக்கு மூன்று நாட்கள் அரசுமுறைப் பயணமாக நேற்று வந்த மலேசியப் பிரதமர் மொகமட் நஜீப் பின் துன் அப்துல் ரசாக்கிற்கு…
‘பலமாக இல்லாவிட்டால், நாம் தொலைந்தோம்’
“இது நாங்கள் உயிரை கொடுத்து போராடி உருவாக்கிய அரசாங்கம். எங்கள் மக்கள் வாக்களித்து உருவாக்கிய அரசாங்கம். ஆகவே, இது நமது அரசாங்கம்தான். என்றாலும் அதற்குள் நாம் பலமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், நாம் ஒட்டுமொத்தமாக தொலைந்தோம். எம்முடன் இருப்பவர்களே எம்மை தொலைத்து விடுவார்கள்” என, ஜனநாயக மக்கள் முன்னணி…
‘குடும்ப பிரச்சினையை தீர்த்து விட்டோம்’
“உள்ளூராட்சி மன்றங்களின் ஆசனப் பங்கீடுத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இருந்து வந்த பிரச்சினை, எமது குடும்ப பிரச்சினை. நாங்கள் தற்போது எமது குடும்பப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட்டோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநான் தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மன்னாரில்…
வடக்கு முதல்வரையும் சந்திக்கிறார் மலேசியப் பிரதமர்
சிறிலங்காவுக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்ளவுள்ள மலேசியப் பிரதமர் மொகமட் நஜிப் பின் துன் அப்துல் ரசாக், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். சிறிலங்கா செல்லும் மலேசியப் பிரதமர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சந்திப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய வெளிவிவகார…
வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் அன்ரன் பாலசிங்கம்!
அன்ரன் பாலசிங்கம்: வரலாற்றினுள் வெடித்தெழுந்தவர் ஐரோப்பாவிலிருந்து விடுபட்டு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் விரல் விட்டு எண்ணக்கூடிய குடிப்பரம்பலைக் கொண்ட ஒரு சிறு தீவிலிருந்து மழையும் புயலும் அடித்து ஓய்ந்து போன ஒரு நாளின் பின்னிரவில் இதை எழுத நேரிடுகிறது. வானத்திலிருந்து கொட்டிய தண்ணீர் முழுவதையும் உள்வாங்கியிருந்த கடல்…
























