குர்திஷ் இன மக்களும் புலிகளுடன் தான்: லண்டனில் நடந்த கூட்டத்தில்…

விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு நாளான இன்று(14) லண்டனில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் குர்திஷ் இன விடுதலைக்காக நீண்ட நாட்களாக, குரல் கொடுத்துவரும், Dr.Ibrahim ,  Dr.Mohammad Kayani,   Dr.Ayar Ate  ஆகிய 3 செயல்பாட்டாளர்கள் , தமிழீழ செயல்பாட்டாளர்களோடு கலந்துரையாடியுள்ளார்கள். இதில்…

தமிழரசுக் கட்சிக்கு வேகத்தடை போட்டது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த ஆசனப்பங்கீட்டுப் பிரச்சினைகளை அடுத்து, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, தமிழரசுக் கட்சியின் ‘வீட்டு’ச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தது. ஏற்கெனவே, சுரேஷ் பிரேமசந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில்,…

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் நாடுகடத்தல்

படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் நாடுகடத்தல் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற 29 இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று காலை தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவிலிருந்து  பண்டாரநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ள நிலையில், விசாரணைக்காக குடிவரவுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை கையாண்டு வரும் ஆஸ்திரேலிய அரசு படகு வழியே வருபவர்களை திருப்பி அனுப்பி வருகின்றது. அந்த வகையில்  அப்படி கடந்தாண்டு 12 அகதிகளோடு வந்த ஒருஇலங்கை படகு திருப்பி அனுப்பப்பட்டது.…

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56…

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து அநுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட 7 பேரை கொலை செய்த குற்றத்தை ஏற்றுக்…

தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி

தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்து வருவதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூரில் தமிழ்நாடு காவல்துறையின் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழ்நாடு காவல்துறையினதும், இந்திய இராணுவத்தினதும் பயன்பாட்டில் இருந்த ஆயுதங்கள், தளபாடங்களும், பழங்கான போர்கருவிகள் உள்ளிட்டவையும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.…

நல்லாட்சி அரசின் வாக்குறுதியை நம்பமாட்டோம்! – கேப்பாப்பிலவு மக்கள் சூளுரை

நல்லாட்சி அரசின் வாக்குறுதியை நம்பமாட்டோம்!  காணிகள் விடுவிக்கப்படும்வரை களமாடுவோம்!! – கேப்பாப்பிலவு மக்கள் சூளுரை (photo) “கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்’  என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் நாடாளுமன்றில் வாக்குறுதியளித்துள்ளார். நல்லாட்சி…

சிங்கள மொழி தோன்ற முன்னர் சிங்கள மன்னன் எப்படி உருவானான்?-…

அண்மையில் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவால் ‘சிலோன் ருடே’ ஊடகத்திற்கு ‘விக்னேஸ்வரன் பதவி விலகவேண்டும்’ என்கின்ற தலைப்பில் வழங்கப்பட்ட நேர்காணல் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய தேவையுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் 23 நவம்பர் 2017 அன்று திகதியிடப்பட்ட ‘சிலோன் ருடே’ ஊடகத்தில் வெளியாகிய அட்மிரல்…

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை…

கொழும்பு, இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா- ஐரோப்பா இடையே பல்வேறு துறைமுகங்களையும், சாலைகளையும் இணைத்து செயல்படுத்த உள்ள பெல்ட் மற்றும் சாலை திட்டத்தில் இந்த துறைமுகம் முக்கிய பங்காற்றும் என்று சீனா நம்புகிறது. இதற்காக இந்த துறைமுகத்தை சீனா, இலங்கையிடம் இருந்து 99…

கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிணமிக்க வேண்டும் – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைவரையும் உள்ளடக்கிய – பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள ஆசனப் பங்கீட்டு குழப்பங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “சுயநலம் மேலோங்கும் போது இவ்வாறான…

முடிவுக்கு வந்தது கூட்டமைப்புக் கலகம் – சுமுக தீர்வு எட்டப்பட்டதாக…

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், மாவை. சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே…

வடக்கில் இன்னமும் இராணுவத்தின் வல்லாட்சியே நீடிக்கின்றது: சிவஞானம் சிறிதரன்

“வடக்கில் இராணுவத்தின் வல்லாதிக்க ஆட்சியே இன்னமும் தொடர்கின்றது. இராணுவத்தின் சிறையில் இருக்கும் வடக்கில் சிவில் நிர்வாகத்தைக் கொண்டு வாருங்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள்…

ஆசனப் பங்கீட்டுக்காக த.தே.கூ உடைந்தது என்கிற அவப்பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது:…

‘ஆசனப் பங்கீட்டுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்தது என்னும் கேவலமான பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது. அதற்காக சகலரும் விட்டு கொடுப்புக்களை நிச்சயமாக செய்யவேண்டும்’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் உருவாகியிருக்கும்,…

கூட்டமைப்பு குழப்பங்களைத் தீர்க்க உயர்மட்ட முயற்சிகள்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆசனப்பங்கீட்டில் இணப்பாடு ஏற்படாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள், ஏற்பட்ட குழப்ப நிலையை தீர்த்து வைக்கும் உயர்மட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களில், இணக்கப்பாடு ஏற்படவில்லை. யாழ்ப்பாண மாவட்டத்தில் புளொட் ஏற்கனவே கோரிய மூன்று உள்ளூராட்சி…

கூட்டமைப்பின் பெயரில் கூத்தடிக்கும் கூத்தாடிகளை விரட்டி அடிப்போம்!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தலைவர் பிரபாகரன் உருவாக்கியதன் நோக்கமே, தமிழர்களின் ஒற்றுமையை ஐக்கியப்படுத்தவே. மக்கள் மத்தியில் மதிப்புகள் – கௌரவங்கள் – ஏதுமற்றுக்கிடந்த இரத்தக்கறை படிந்த – ஆயுதக்குழுக்களை கௌரவ சகவாழ்வுக்கு இட்டுச்சென்ற பெருமை பிரபாகரனையே சாரும். அத்தனைக்கும் அவரிடமிருந்த உறுதியான காரணம் ”நாம் தமிழர்கள்” என்ற ஒற்றுமைக் குடையே!…

வீணாகிப்போகும் உயிர்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கும்?

அரசியலை அனைவரும் கையில் பிடித்துக் கொண்டிருக்கையில், சமூக விரோதச் செயல்களின் அதிகரிப்பு பெரும் பொதுப்பிரச்சினையாக மாறிவருகிறது. இதனை ஞாபகப்படுத்தத்தான் வேண்டும் என்றில்லை. இது வெளிப்படையாகவே தெரிகிறது. இதனை எவ்வாறு எதிர்கால சந்ததியினருக்காக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே கருப்பொருள். நகரங்களில், வெளிநாடு என்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் பயணங்கள்…

பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?

தமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம்…

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காகிய நிலை’, ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப்போல’ என்று சொல்வார்களே, அப்படியானதொரு நிலைக்கு வந்திருக்கிறது தமிழ் மக்களுடைய அரசியல். அதிலும் உள்ளூராட்சித் தேர்தல் நடக்கப்போகிறது என அறிவிக்கப்பட்டதோடு, அது ‘நாறி’யே போய்விட்டது எனலாம். நிலைமைகளை அவதானிப்போர் இதை எளிதாகவே புரிந்து கொள்வர். அடுத்து என்ன நடக்கும் என்று…

ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை

“ஈழத்தின் தலைநகரம் திருகோணமலை என தெரிவித்து இந்தியாவின் தமிழ்நாட்டு மக்கள் 1000 பேர் ஒன்றிணைந்து பாடல் ஒன்றைப் பாடி வெளியிட்டுள்ளதாக“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 80 மில்லியன் மக்கள் தனி ஈழத்திற்காக ஒத்துழைப்பை நல்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “பிரபாகரன் தமிழ்நாட்டு மக்களின்…

KP வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி எங்கே செல்கிறார் என்று…

2018ல் லண்டனில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் KP கலந்து கொள்ள உள்ளாராம். இது போக அவரை வெளிநாடு செல்ல விடக் கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியில் முடிவடைந்துள்ளதை அதிர்வு இணையம் அறிகிறது. KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.…

இரண்டு வருடங்களில் 50 வழக்குகளுக்கு தீர்ப்பு

யாழ்ப்பாணம்-உயர்நீதிமன்றில் கிடப்பில் காணப்படும் வழக்குகளை துரிதப்படுத்தி இரண்டு வருடங்களுக்குள் தீர்ப்பினை வழங்கவுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் அறிவித்துள்ளார். யாழ்-உயர்நீதிமன்றில் பாரிய குற்றங்கள் தொடர்பான 50 வழக்குளை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கவுள்ளதாக  சட்டமா அதிபரிடம் தான் உறுதியளித்துள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் இன்று(4) தெரிவித்துள்ளார். யாழ் மேல்நீதிமன்றத்திற்கு புதிய…

தமிழ்க் குடும்பத்தை சிறிலங்காவுக்கு நாடுகடத்தியது கனடா

ஐந்து ஆண்டுகளாக கனடாவில் வசித்து வந்த தமிழ்க் குடும்பம் ஒன்று, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமாலை மொன்றியல் விமான நிலையத்தில் இருந்து இவர்கள் விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளனர். லோரன்ஸ் என்பவரை தலைவராக கொண்ட இந்தக் குடும்பத்தினர், மனிதாபிமான அடிப்படையில் கனடாவில்…

உள்ளூராட்சித் தேர்தலினால் பொறுப்புக்கூறலுக்குப் பின்னடைவு

கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதாலும், உள்ளூராட்சித் தேர்தலினாலுமே, காணாமல்போனோர் பணியகத்தை செயற்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் இழுபறிப்படுவதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடுகையில், “தற்போதைய  அரசாங்கம்  நல்லிணக்கம் மற்றும்…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பௌத்த பீடங்களின் தேரர்கள், த.தே.கூ.வுக்கு இடையில்…

புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களுக்குமிடையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் அவசர சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் புதிய அரசியலமைப்புக்கான இறுதி…