இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்கு
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரிய தற்போது, பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க மனித உரிமை குழுக்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன. மருத்துவ மனைகள் மீது…
3 முறை வடி கட்டிய சயனைட் குப்பி: பகலவனிடம் தயாரிக்குமாறு…
முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் இடம்பெற முன்னர், ஆனந்தபுரம் சமர் நடந்துகொண்டு இருந்தவேளை. அங்கிருந்து ஒரு பஜீரோ வாகனத்தில் தலைவரின் மனைவி மதிவதனி அக்கா, மற்றும் துவாரகாவை ஏற்றிக்கொண்டு முள்ளிவாய்க்கால் பக்கமாக சென்றவர் தான் "நிலவன் தம்பி". இவரை பலருக்கு தெரிந்திருக்காது. "நிலவன் தம்பியே" மதிவதனி அக்கா மற்றும் மகள்…
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் சாதித்தது என்ன..?
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்துடன் தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் வேறு வடிவத்தை பெற்றிருந்தது. கடந்த காலத்தில் அகிம்சை ரீதியாக போராடிய தமிழ்த் தேசிய இனத்தின் கோரிக்கைகளையும், அபிலாசைகளையும் தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. மாறாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ரீதியான போராட்டங்களை அடக்குவதிலும்,…
வடக்கு மாகாண முதல்வரிடம் கொள்கையில்லை: யாழில் கடும் விசனம்
பொதுவாக வடக்கு மாகாண சபை வினைத்திறனற்றுச் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. எங்களுக்கு அனுபவம் குறைவாகவுள்ள காரணத்தால் திறம்பட இயங்க முடியாதுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சரும் ஒரு தடவை கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அரசியலாளர்கள், புத்திஜீவிகளால் கடும் விசனம் முன்வைக்கப்பட்டுள்ளது.…
இந்திய மீனவர்களுக்கு உதவுவதே சிறந்த வழி : கடற்படையின் புதிய…
இந்திய மீனவர்களின் கடல் எல்லை பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும் முகமாக அவர்களுக்கு உதவும் செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். இலங்கையின் அரச ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் கடந்த 100 வருடங்களாக இலங்கையின்…
வடக்கு மாகாண சபையிலுள்ளவர்கள் தகுதியற்றவர்கள்!
வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிப்பவர்கள் மாகாண சபையை இயக்குவதற்கான எந்தவிதத் தகுதிகளுமற்றவர்கள் என பூநகரி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலைப் பிரதி அதிபருமான பொ. ஸ்ரீஸ்கந்தராஜா குற்றம் சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச மார்க்சியக் குழுவின் ஏற்பாட்டில் "வடக்கு மாகாண சபையும் வரலாற்று…
பிரபாகரனின் மனைவியும் மகளும் எங்கே? பொட்டு அம்மான் என்ன ஆனார்?…
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் குறித்து இன்று வரை பல வினாக்கள் தொடுக்கப்பட்ட வண்ணம் உள்ளன. பல்வேறு தரப்பினர் முன்வைத்த கேள்விகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இது தொடர்பில் இன்றுவரை உறுதியான ஒரு விடை கிடைக்காமல் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது. அப்போதைய காலட்டத்தில் கடமையில் இருந்தவர்களும், ஆட்சியில் இருந்தவர்களும்…
பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை! இறந்து விட்டதாக இராணுவத்தினரே அறிவித்தனர்! மனம்…
பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்து விட்டதாக யுத்தகளத்தில் இருந்த இராணுவத்தினரே எனக்கு அறிவித்தனர் என இறுதி யுத்தத்தின் உக்கிர மோதல் குறித்து கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். மே மாதம் 16ஆம் திகதி இரவு வேளையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான…
இறுதிவரை நம்பிக்கையுடன் இருந்தார் பிரபாகரன்: கே.பியிடம் ஆயுத உதவி கோரினார்
தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார் என முன்னாள் பாதுகாப்புச் செலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தின்…
20 ஆவது திருத்தச் சட்டவரைவை வட மாகாணசபை ஆதரிக்க வாய்ப்பில்லை…
சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவுக்கு, வடக்கு மாகாணசபை ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பில்லை என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு மாகாணசபைகளின் அங்கீகாரத்துக்காக அரசாங்கத்தினால் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து வடக்கு மாகாண முதலமைச்சரிடம் நேற்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப்…
அரசியல் கைதிகளின் விடுதலை! தொடர் நடவடிக்கைக்கு தயாராகும் வடக்கு முதல்வர்
ஜனாதிபதியுடனான சந்திப்புக்களின் போதும், பல்வேறு கடிதத் தொடர்புகள் மூலமாகவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அரசியல் கைதிகள் தொடர்பான சில விபரங்களை வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சர் கோரியிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாகவும் முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார்…
மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாள் அனுஸ்டிப்பு
மாமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வெற்றி நாள் இன்று முல்லைத்தீவு கற்சிலை பிரதேசத்தில் சிறப்பாக நடை பெற்றுள்ளது. வன்னிக்குறோஸ் கலாசார பேரவையின் தலைவரும் முத்தையன்கட்டு வலதுகரை வித்தியாலயத்தின் அதிபருமான சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பண்டாரவன்னியன் அறங்காவற்கழகத்தின் போசகருமான கௌரவ வைத்திய கலாநிதி…
அரசியல் கைதிகள் விடயத்தில் என்னிடத்தில் எந்த அதிகாரமும் இல்லை: டி.எம்.சுவாமிநாதன்
“அரசியல் கைதிகள் விடயத்தில் நீதியமைச்சே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும். என்னுடைய அமைச்சுக்கு அது தொடர்பில் எந்தவிதமான அதிகாரமும் இல்லை.” என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமயத்துறை அமைச்சரான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் குடும்பத்துக்கு…
இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேச மன்னிப்புச் சபை
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கை பாதுகாப்புத் தரப்பினருக்கு மனிதவுரிமைகள்…
170 ஆவது நாளாக தொடரும் போராட்டம்: அம்பாறை மாவட்ட மக்கள்…
தங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூற வேண்டும். அதுவரை தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று 170 ஆவது நாளாக…
இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடு கடந்த தமிழீழ…
காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது ஆகஸ்ட் 30ஆம் திகதியை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளாக பிரகடனப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தன்று (ஆகஸ்ட் 30) நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கருத்தரங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கு காணாமல்…
புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடித்த எனக்கு அச்சுறுத்தல்! கடற்படை தளபதி…
விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்த காரணத்தினால், அவர்களின் அச்சுறுத்தல் தனக்கு இருப்பதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தனக்கான அச்சுறுத்தல் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கடற்படை…
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும்…
போருக்கு முந்தைய இன விகிதாசாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல் நடத்தப்பட…
நாட்டில் தொடர்ச்சியாக பல முக்கியமான தேர்தல்கள் நடைபெற இருப்பதால், போருக்கு முந்தைய இன விகிதாசாரம் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசும்…
எங்களை தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றுகிறது:கேப்பாப்பிலவு மக்கள்
கடந்த ஆறு மாதங்களாக தெருவில் இருந்து போராடுகின்ற எங்களை தொடர்ந்தும் இந்த அரசு ஏமாற்றி வருகின்றது என முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு - கேப்பாப்பிலவு மக்கள் தங்களது பூர்வீகக் காணியை விடுவிக்கக்கோரி இன்றும் தங்களது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், கேப்பாப்பிலவு மக்களின் தொடர் நில மீட்பு…
இலங்கையர்களை அதிர வைக்கும் கஞ்சா பாவனையாளர்களின் எண்ணிக்கை! ஒரு நாளில்…
இலங்கையில் கஞ்சாப் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதாக அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையில் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் வரையான இலங்கையா்கள் கஞ்சா பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளதாக அபாயகர ஔடதங்கள் ஆணைக்குழுவின் பிரதி ஆணையாளர் பத்ரானி சேனநாயக்க தெரிவித்துள்ளார். இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்…
சம்பந்தனின் புதிய வியூகம்..?
நல்லாட்சி அரசாங்கம் உருவாகி இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த அரசை உருவாக்கிய கட்சிகள் மத்தியில் மெல்ல மெல்ல மனக்கசப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. தென்னிலங்கையின் இரு பிரதான கட்சிகளும் வரும் தேர்தலைகளை மையமாகக் கொண்டு தம்மை பலப்படுத்தி வருவதுடன், தேசிய அரசாங்கத்திற்குள்ளும் முட்டி மோதத் தொடங்கி விட்டனர். மஹிந்த…
கிழக்கிற்கு தமிழர் ஒருவரையே முதலமைச்சராக கொண்டு வர வேண்டும்
கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரையே முதலமைச்சராகக் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி புனரமைப்பு நிறைவடைந்த நிலையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,…


