விதியென்று சொல்லி நாம் விலகப் போவதில்லை, புதிய வழியொன்று உருவாக்குவோம்!…

நீதிக்காக ஏக்கத்தோடு காத்திருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு சோகம் மிகுந்த நாள். உயிர்கள் மரணித்த இடம் முள்ளிவாய்க்கால், நீதி மரணித்தது ஐ.நாவிலா என்ற கேள்வியோடு இருள் சூழந்தது நேற்று. ஐ.நாவின் அறிக்கை வெளிவருவது ஆறு மாதத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது என்ற செய்தியே நீதிக்காக ஏங்கியோரின் நெஞ்சுகளை உலுக்கியது. தாமதத்தினால் நீர்த்துப்…

ஐ.நா. இலங்கையுடன் சேர்ந்து உருவாக்கிய போர்க்குற்ற ஆவணம்? – கெலம்…

இலங்கையில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஐ.நாவில் இருந்து  கிடைத்துள்ள ஆவணம் ஒன்று ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் அறிவித்தது. இது தொடர்பில் கெலம் மக்ரே தெரிவிக்கையில், இந்த ஆவணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/5yZ4nKhiLXg போரில் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விசாரணை மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும்…

தேர்தல் களத்தில் நான் யார் பக்கம்? – வட மாகாண…

எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பில் வட மாகாண சபை முதலமைச்சர் சி.விக்கினேஸ்வரன் அவர்கள் செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார். என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் வெளிநாடுகள் சென்ற சமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது.  நான் தற்பொழுது திரும்பி வந்துள்ளேன். தேர்தலில் உங்கள்…

போராளிகளுக்காக எழுதுகிறேன்…!

முள்ளிவாய்க்காலில் எம்மால் தவிர்க்க முடியாமல் போன அவமானகரமான தோல்வி, அதற்கடுத்து வந்த நாட்களில் எம்மீது தொடர்ச்சியான அவமானங்களை குவித்துகொண்டே இருக்கின்றது.... என குறிப்பிடுகின்றது முன்னாள் போராளிகளுக்கான ஓர் கடிதம். அன்பான உடன்பிறப்புக்களே, 2009 மே 18ம் நாளுக்கு முன்னர் நாம் உலகமே வியந்த ஒரு தலைவனின் தனிப்பெரும் வீரர்களாகவும்,…

எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள்: யாழில் ஜனாதிபதியிடம் கண்ணீர்மல்கிய உறவுகள்

எங்கள் பிள்ளைகளை படையினரும், ஆயுதம் தாங்கியவர்களும் கொண்டு சென்றார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர். யாழ்.மாவட்டத்திற்கு நேற்றைய வருகை…

திருமலை வதைமுகாம் தொடர்பில் கிடைத்த மாபெரும் சாட்சியம்!

இலங்கையின் வட கிழக்கில் மற்றும் பல பாகங்களில் வதை முகாம்களா....? இவைகள் ஆதாரப்படுத்தப்படவில்லை. ஆனால் இன்று வதைமுகாம் தடுப்பிலிருந்து தப்பியவரின் திடுக்கிடும் தகவல்களடங்கிய ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட். கடந்தகால, நிகழ்கால இலங்கை அரசுகள் வதைமுகாம் தொடர்பில் மறுத்துவரும் இந்நிலையில் வடக்கு கிழக்கு உட்பட்ட கொழும்பின் பல பாகங்களிலும் வதைமுகாம்கள்…

அரசியலும் வேண்டாம்! முன்னாள் போராளிகளிற்கு இந்தியா மிரட்டல்!!

யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென…

தெற்கு தீர்வை தர தயாராவில்லை! சுரேஸ் குற்றச்சாட்டு!!

தென்னிலங்கையைப்பொறுத்த வரையில் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறுகின்ற தெற்கு அரசியல் வாதிகள் எவருக்குமே தமிழ் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு வழங்கும் மனப்பான்மை இல்லை. அந்த வகையில் தான் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெற்கிற்கும் சந்வதேசத்திற்கும் ஒரு செய்தியை சொல்ல வேண்டி இருந்தது. அதன் பிரகாரம் தான் இனப்பிரச்சனைக்குத்…

13 பற்றி இனி பேசவேண்டாம் – சுரேஸ்!

இந்திய மத்திய அரசு 13 வது திருத்த சட்டத்தையே தமிழ் மக்களிற்கு தரமுற்பட்டாலும் நாம் அதனை நிராகரித்துள்ளதுடன் அதனை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ்பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தினில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் அவர் மேலும் உரையாற்றுகையினில் வட-கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வையே கூட்டமைப்பு…

சிங்கள ராணுவத்தை சர்வதேச நீதிமன்றி நிறுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்…

முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவை மின்சார நாற்காலியிலிருந்து காப்பாற்றியது தானே என தெரிவித்துள்ள பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, இலங்கை படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுசெல்வதற்கு நாங்கள் ஓருபோதும் அனுமதியோம். சர்வதே விசாரணைகள் எங்களிற்கு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆங்கிலபத்திரிகையொன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஜெனீவா…

கூட்டமைப்பின் வெற்றிக்கான மந்திரம்!

இருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், உயர்ந்தபட்ச பேரம் பேசும் பலம் ஒன்றைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதும் நம்பியிருப்பது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தான். காரணம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலக்கு வைத்திருக்கும் 20 ஆசனங்களில் மூன்றில் ஒரு…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பான் கீ மூனின் பாரிய திட்டம்…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.நா மற்றும் உலக நாடுகளின் திட்டம் என்ன..? நடை பெற உள்ள தேர்தலில் மேற்குலகின் இலக்கு யார்...? ஐ.நா.செயலாளரின் திட்டம் என்ன..? செப்ரம்பர் மாதக் கூட்டத் தொடரை இலக்கு வைத்துள்ளதா? நாடாளுமன்றத் தேர்தல் தமிழரின் வாக்குக்குகள் யாரைத் தெரிவு செய்யும்..? தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன..?…

தமிழ் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது அவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக அமையட்டும்!

இது கறுப்பு ஜுலை வாரம். தாயகத் தமிழர்களின் இதயங்களில் விடுதலை நெருப்பை மூட்டிய வாரம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து படிப்படியாக ஈழத் தமிழினம் தனது உரிமைக்களை இழக்க ஆரம்பித்திருந்தது. தமிழ் மக்களினதும், தமிழ் தலைவர்களினதும் வேண்டுகோள்கள், கோரிக்கைகள் என்பன காலத்துக்கு காலம் இலங்கையை ஆண்ட சிங்கள அரசுகளால்…

இந் நாட்டில் இரண்டாந்தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை!: இரா.…

இந்த நாட்டில் இரண்டாம் தரப் பிரஜைகளாக நாங்கள் வாழத் தயாரில்லை  என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ்.மருதனார் மடம் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கான முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். அங்கு…

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது! (தேர்தல் அறிக்கை…

பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் மருதனார்மடத்தில் இன்று ஆரம்பமாகிய முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்றைய பிரச்சார கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.…

ஆயுதபலத்திற்கே தெற்கு மரியாதை தந்தது! சித்தார்த்தன் கூறுகின்றார்!!

தமிழ் மக்களது ஆயுதபலம் இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையினில் தென்னிலங்கையிலுள்ள இருபிரதான கட்சிகளும் தமிழ் மக்களிற்கு எதனையும் தராது இழுத்தடிக்கவே முற்பட்டுள்ளன.ஆனால் 2000 மாம் ஆண்டுகளினில் சமஸடி பற்றி தென்னலிங்கை ஆட்சியாளர்கள் பேசிக்கொண்டிருந்தனரென தெரிவித்தார் தர்மலிங்கம் சித்தார்த்தன். அதே வேளை ஓன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கிய வகையில் கூட்டமைப்பின்…

எமது மக்கள் ஏற்றுக்கொள்ளும் சுயாட்சி தீர்வே எமக்கு வேண்டும்: த.தே.கூ

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுயாட்சி தீர்வே எமக்கு வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் மற்றும், உறுப்பினர்களின் கருத்துக்கள் இங்கே திருகோணமலையில் ஒரு ஆசனத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவோம்: இரா.சம்பந்தன் திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…

ஒரு உறுப்பினரைக்கூட தெரிவு செய்யமுடியாத கட்சிகளும் களத்தில்: இரா.சம்பந்தன்

தேர்தலுக்கு பின்னர் தாமதமில்லாமல் மிகவிரைவாக ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதற்காக மிக நீண்டகாலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். லங்கசிறியின் 24 செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு…

ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு: ஐதேமு தேர்தல் அறிக்கை

ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ரணில் விக்கிரமசிங்க   இலங்கையின் சகலதரப்பின் இணக்கத்திற்கு அமைய ஒரே நாட்டுக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு மூலமே இனப்பிரசனைக்கான தீர்வு மேற்கொள்ளப்படும் என்று நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும்…

இனப்பிரச்சினை தீர்வுக்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: மங்கள சமரவீர

இலங்கையில் தொடர்ந்து வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பி.பி.சி.யின் சிங்கள சேவைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையில் நீடிக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நாட்டில் தற்போது இருக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில்…

இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த பேரினவாதத்துடன் ஈழத் தமிழர் தேசம்…

இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ் மக்கள் தமது ஆன்மாவில் உரம் ஏற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட…

தமிழகத்தில் கைதானவர் வாய் திறக்கவே இல்லை: புலிகள் இயக்கத்தில் இருந்தவர்…

75 சயனைட் குப்பிகளுடன் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களின் பின்னணியில் பாரிய சதித் திட்டம் இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட இலங்கையர் உள்ளிட்ட மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இதுவரை அவர்கள் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என தெரியவருகிறது. ராமநாதபுரம் தனிப்பிரிவு பொலிஸார் நேற்று முன்தினம்…

இலங்கை தேர்தல் முடிவு முழு உலகிற்கும் முக்கியமானது – அமெரிக்க…

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் முடிவுகள் முழு உலகிற்கும் முக்கியமானது என அமெரிக்க புலனாய்வு பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் டெனிஸ் பிளயார் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொதுத் தேர்தல் முடிவு இந்திய பிராந்திய வலய நாடுகளைப் போன்றே முழு உலகிற்கும் முக்கியமானது. தென்கிழக்காசியாவின் பிரதான போக்குவரத்து கேந்திர நிலையமாக இலங்கை…