இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது!– பிரித்தானியா

கடந்த ஜனவரி 8ம் திகதியின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதை அடுத்து இந்த முன்னேற்றம் காணப்படுவதாக பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொது நலவாய விவகார அமைச்சின் 2015ம் ஆண்டின் நடுப்பகுதிக்கான மனித உரிமை அறிக்கையில் இந்த…

மகிந்தவை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவே நான் தேர்தலில் குருநாகலில் போட்டியிடுகிறேன்-சிவாஜிலிங்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா , சரத் பொன்சோகாவையும் சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித தேர்தலிலும் போட்டியிட தயாராகியுள்ளேன். இத்தகைய நிலையில் எனக்கு பணம் மகிந்த ராஜபக்சாவினால் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவினால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது? என்;பதை அனைவரும்…

தமிழ் மக்களின் தெளிவும் மெளனமும்….திண்டாடும் அரசியல்வாதிகளும்

தேர்தல் வேட்பு மனு கொடுக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தேர்தல் திருவிழா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துவரும் அரசியல்வாதிகள், பல மில்லியன் ரூபாய்கள் செலவு செய்து கூட்டங்கள், விளம்பரங்கள் என்றும் உணவு உறக்கம் இன்றி நாடு முழுவதும் அலைந்து திரியும் நிலையில் கருத்து மோதல், கட்சித் தகராறு என்பதையே…

ஓற்றையாட்சிக்குள் வாழமுடியாது தமிழருக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும்!

சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்கு கீழ் தமிழ் மக்கள் வாழ முடியாது என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ் மக்களுக்கு தேசிய அந்தஸ்தும் சுயநிர்ணய உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சிறிலங்காவின் சட்டங்களும் தமிழர்களை அடக்கி ஆள்வதற்காகவே உருவாக்கப்பட்டன. உரிமை மறுக்கப்பட்டதாலும் அநீதி தொடர்ந்ததாலுமே எமது இளைஞர்கள்…

சர்வதேச நெருக்கடியிலிருந்து இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றச் செயற்படுகிறது கூட்டமைப்பு –…

சர்வதேச ரீதியான நெருக்கடியில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை முழுமையாக பாதுகாக்கும் வகையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டுவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளருமான எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் கோவிந்தன் வீதியில் சனிக்கிழமை அகில இலங்கை தமிழ் காங்கிரசின் அலுவலகத்தினை திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு…

மலையக மக்கள் முதலாளிகளின் அடிமைகளா? இயந்திர மனிதர்களா?

மலையகம் என்றவுடன் எங்களுக்கு, பச்சை பசேலென காட்சி தரும் செடிகளையும், அதன் அழகையும் தான் நாம் ரசிப்போம். அந்தப் பச்சை நிறத்துக்கள் எத்தனையாயிரம் தொழிலாளர்களின் இரத்தமும், வேர்வையும், பொதிந்து போய் கிடக்கின்றன என்பதை கவனிப்பதில்லை. பொதுவில் நாம் உண்டு நமது வேலை உண்டு என்று இருந்து விடுவோம். எம்…

வட கிழக்கின் தேர்தல் களத்தில் நுழைந்திருக்கும் புலனாய்வாளர்களும் றோவும்

நடக்க இருக்கும் பொதுத் தேர்தலில் முக்கிய தமிழின உணர்வாளர்கள் நாடாளுமன்றம் செல்வதை தடுக்கும் சூழ்ச்சித் திட்டங்களை இலங்கை, இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றமையை அண்மைய நாட்களில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் இருந்து பிறந்ததே தமிழ் தேசிய கூட்டமைப்பு. தமிழ்…

கொழும்பின் தலைவிதியை கூட்டமைப்பு தீர்மானிக்குமா ?

அடுத்தமாதம் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைக்காது என்ற அனுமானம் பரவலாகக் காணப்படுகிறது. இந்தக் கணிப்பு சரியாக அமைந்தால், அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமான ஒரு நிலையை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்பு, கூட்டமைப்பின் தலைவர்கள்…

இலங்கையில் அபாயம்…! மீண்டும் மகிந்த….?

ஆறு மாதங்களுக்கு முன்பு, இலங்கை அரசின் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடித்த மைத்திரிபால சிறீசேனாவால், அதே ராஜபக்ச இப்போது பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. கலைக்கப்பட்டுள்ள இலங்கை நாடாளுமன்றத்துக்கு, அடுத்த மாதம் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான மனுத்தாக்கல், ஜூலை…

ஆரம்பமாகிறது ஆட்சி மாற்றத்தின் இறுதி அத்தியாயம் – இதயச்சந்திரன்

ஆட்சிமாற்றத்தின் இரண்டாம் அத்தியாயத்தில் காலடி எடுத்து வைத்திருக்கிறது இலங்கை அரசியல். மகிந்தரின் 'நீடித்த' சனாதிபதி ஆசை ஜனவரி 9 இல் கனவாகிப்போக, புதிதாக வந்த அவரின் சக தோழர் மைத்திரி, 19 இன் ஊடாக சனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை 'மென்சக்தி' நிலைக்கு மாற்றி விட்டார். முதலாம் பாகத்தில், 'தமிழ் பேசும்…

திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழரின் தீர்வு! லண்டனில் வடக்கு முதல்வர்…

அரசியல் தீர்வுத் திட்டங்களைத் தயாரிப்போர் திம்புக் கோட்பாட்டினை மனதிற்கொண்டு செயலாற்ற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய சிறப்புரையும் கலாச்சார மாலையும் நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://youtu.be/4z0YZzzR1Nk…

தென்னிலங்கை தொடர்ந்தும் ஏமாற்றினால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதே ஒரே…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்காது தென்னிலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்றிவருமானால் சர்வதேச ஒத்துழைப்புடன் பிரிந்து செல்வதைத் தவிர வேறு வழிகள் ஏதும் இல்லை என்று செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகமொன்றிடன் கருத்து வெளியிடும் போதே அவர்…

அரசியல் தீர்வினை அடுத்த வருடத்திலாவது காணவேண்டும்!

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின் போது தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அடுத்த வருடத்திலாவது தீர்வைக் காண முன்வர வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் கிளைக் கூட்டத்தில்…

கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை முடிக்க விரும்புகிறது! – எமது…

எமது சந்ததியினரின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலில் நாங்கள் ஒவ்வொரும் எங்களது பங்களிப்பை செய்து அதிகபடியான விகிதாசாரத்தை பெற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இன்று திகோணமலை மூதூர் பட்டித்திடலில் நடந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கிடையிலான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து…

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை: பிரித்தானியா

இலங்கையில் 2015ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், மனித உரிமைகள் நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சில கவலைக்குரிய விடயங்கள் தொடர்வதாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, பதவிக்கு வந்த, மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கம், மனித…

2016ம் ஆண்டுக்குள் தீர்வை பெற்றுத்தருவோம்!- இரா. சம்பந்தன் உறுதி!

தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தல் செயல்முறை தொடர்பில் கட்சியின் மாவட்ட கிளைக் காரியாலயத்தில் நேற்று…

விக்னேஸ்வரன் தான் திருப்புமுனை!

பதவி நாற்காலியில் பிசின், பெவிகால் எல்லாம் போட்டு பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ள முயலும் தலைவர்களையே பார்த்துப் பார்த்து வெறுத்துப்போனவர்கள் நாம். 'எல்லாம் நம்முடைய தலைவிதி' என்று நம்மை நாமே சலித்துக் கொள்வதிலும் நம்மை அடிக்க ஆளே இல்லை. இந்த சொந்த சோகத்தைத் தூக்கியெறிந்துவிட்டுத்தான் ஈழத்தைத் தரிசிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்…

தமிழர் தாயகத்தில் கட்டாய கருத்தடை, அடுத்த 15 வருடங்களில் தமிழ்…

வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் கட்டாய கருத்தடையும் சனத்தொகையைக் கட்டுப்படுத்தும் ஏனைய செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதால் அடுத்த 15 வருடங்களில் சிறிலங்காவில் தமிழ் மக்கள் 2 ஆம் நிலை சிறுபான்மை இனமாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக யாழ்.மருத்துவர் சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு 11.2…

அன்ரன் பாலசிங்கம் இரகசிய விடயங்களை எனக்குத் தெரியப்படுத்தினர்! – வித்தியாதரன்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகப் போராளிகள் கட்சி புலிமுகச் சிலந்தியைத் தமது சின்னமாகத் தெரிவு செய்திருப்பதாக, அதன் தலைமை வேட்பாளர் ந.வித்தியாதரன் தெரிவித்துள்ளார். ஜனநாயகப் போராளிகள் கட்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 10 வேட்பாளர்களை இந்த தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்றில் நிறுத்தியிருக்கிறது. யாழ். மாவட்டச் செயலகத்தில் சுயேச்சைக் குழுக்களுக்கு…

“சர்வஜன வாக்கெடுப்பு – 2020” ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான…

கனடா: ஈழத்தமிழரின் இறையாண்மைக்கான சர்வஜன வாக்கெடுப்பின் முக்கியம் இன்று மிகவும் கனிந்து வருகின்றது. இன அழிப்பின் உச்சத்தை 2009 ல் ஈழத்தமிழர்கள் தொட்டதன் பின்புதான் உலக அரசாங்கங்கள் தமிழர் தரப்பு நியாயங்களை செவிமடுக்கின்றதும் ஏற்றுக்கொள்கின்றதுமான ஒரு சூழ் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியிருக்கின்றார்கள். நடந்த இன அழிப்பின் ஆதாரங்கள் தொடர்ந்து…

வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டனர்! அதிர்ச்சியில் கருணா

தனக்குத் தேசியப்பட்டியலில் இடமளிப்பதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றி விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் விசனமும், அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளார், தேசியப்பட்டியலின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதாக சுசில் பிரேம் ஜெயந்தவும், அனுர பிரியதர்சன யாப்பாவும் எனக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் கடைசியில் எனது பெயர்…

பூகோள அரசியலுக்குள் சிக்குண்டுள்ள இலங்கைத் தீவின் அரசியல் – நிர்மானுசன்…

எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்ச கையொப்பமிட்டுள்ளார் என வெளிவந்துள்ள செய்திகள் மேற்குலக அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் தொடர்ந்த முரண்பட்ட நிலை,…

இந்திய உளவுப் பிரிவு நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைப்பு

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்கு வைத்து, இந்திய உளவுப் பிரிவான றோ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.விரிவான உளவுப் பணிகளை றோ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களில் சுற்றுலா வீசாக்களின் மூலம் பல்வேறு வழிகளில்…