தமிழரசுக்கட்சியின் “அநீதிக்காக” மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது: அனந்தி

தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பளிக்க மறுத்த தமிழரசுக் கட்சியின் அநீதிக்காக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள மற்ற தமிழ்க்கட்சிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதனாலேயே, தான் சுயேச்சையாக போட்டியிடவில்லை என்கிறார் அனந்தி சரிதரன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தமிழரசு கட்சி வாய்ப்பளிக்காமல் தனக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும், ஆனால் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருக்கும் மற்ற தமிழ்க்கட்சிகள்…

தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா? நிலாந்தன்

கடந்தவாரம் தமிழ்த் தரப்புச் செய்திகளில் அதிகம் கவனிப்பைப்பெற்றவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் மிதவாத அரசியலில் இறங்கப் போவதாக வெளிவந்த அறிவிப்புக்களே. முன்பு ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மிதவாத அரசியலில் இறங்குவது என்பது இலங்கைக்குப் புதியதல்ல. அது உலகளாவிய தோற்றப்பாடும் கூட. நெல்சன் மண்டேலா, யசீர் அரபாத்போன்ற…

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தப் போவதில்லை: சிறிலங்கா

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை நிறுத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். எல்லைத் தாண்டி சட்டவிரோதமான முறையில் மீண்பிடியில் ஈடுபடுகின்ற நிலையிலேயே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு எல்லைத்தாண்டி வருகின்றவர்களை கைது செய்யாமல் இருக்க முடியாது. இந்த கைதுகள்…

இலங்கையை காப்பாற்ற புதிய வழியை தேடும் அமெரிக்கா!

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் அமெரிக்காவுக்கு தற்போது அக்கறையில்லை என ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் தீவிர செயற்பாட்டில் இருப்பதாக அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளின் சர்வதேச நிதி வலைப்பின்னல் தொடர்ந்து இயங்கி வருவதாக…

வித்தியின் விளையாட்டு: அப்பாவி முன் நாள் புலிகளை களம் இறக்குவதில்…

ஜனநாயகப் போராளிகள் என்று ஒரு கட்சியை தாம் ஆரம்பித்துள்ளதாகவும் , அதில் முழுக்க முழுக்க முன் நாள் விடுதலைப் புலிகளை இணைத்துள்ளதாகவும் வித்தியாதரன் தெரிவித்துள்ளார். வரும் பொதுத் தேர்தலில் இக்கட்சியூடாக களம் இறங்கும் வித்தி , அப்பாவி முன் நாள் விடுதலைப் புலிகளை பலிகடா ஆக்கியுள்ளார். வடக்கில் தமிழ்…

வடக்கிலிருந்து பொலிஸார் அடித்து விரட்டப்படவேண்டும்! விஜயகலா குற்றச்சாடடு!!

சட்டத்தினை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் சட்டத்தினை மதிப்பதே இல்லை. கசிப்பு உற்பத்தியிலும், போதைப் பொருள் உற்பத்தியிலுமே அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்று முன்னாள் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று வேட்புமனுவினை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.இவ்விடையம்…

நல்லிணக்கம் குறித்து வட மாகாண முதல்வருக்கு, அமெரிக்கா கடுமையான அழுத்தம்!

அமெரிக்கா ராஜாங்க திணைக்களத்தின் கடுமையான அறிவுறுத்தலை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பெற்றுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. இனப்படுகொலை விடயத்தில் மென்மைப்போக்கை கடைப்பிடித்து வடக்கு மாகாண மக்களின் நல்லிணக்கம் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணங்கிச் செல்லுமாறு, அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரிகள் வலிறுத்தியுள்ளனர். வட மாகாண முதலமைச்சர், அமெரிக்காவுக்கும்…

அடுத்து வரும் அரசாங்கத்துடன் அனைத்துலக ஆதரவோடு எமது பிரச்சினைக்கு முடிவு…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார். இன்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்தபின் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இனவிடுதலைப் பிரச்சினை, அன்றாட பிரச்சினைகளைத் தீர்பதற்கு எமது மக்கள் நம்பிக்கை வைத்து எங்களுக்கு…

மில்லியனை நெருங்கும் ஐ.நாவை நோக்கிய கையெழுத்து வேட்டையில் திருமாவளவன்! தேனிசை…

இலங்கைத்தீவில் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதென்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் அவர்களது கருத்து, பலரது கவனத்தினை பெற்றுள்ள நிலையில், ஐ.நாவை நோக்கிய கையெழுத்துப் போராட்டம் மில்லியனை நெருங்கி வருகின்றது. சிறிலங்காவினை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரி உலக தமிழர்…

உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்: இரா. சம்பந்தன்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும், முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் அனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம் என்றும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திற்கான வேட்புமனுக்களைத் தாக்கல்  தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம்…

எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற…

தமிழ் தேசியக்கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் நாளை(10) வெள்ளிக்கிழமை மதியம் வேட்பு மனுத்தாக்கலை ஒன்றாக மேற்கொள்ளவுள்ள நிலையில் அதற்கான சகல ஏற்பாடுகளும் இடம் பெற்று வருகின்றது. எமது மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான ஒரு விடிவை நோக்கிச் செல்லுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை மக்கள் ஆணையாகத்தர வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாக…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை…

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை கோருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து பூரண அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு அவசியமானது என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.…

தமிழ் தேசியத்தின் அடையாளம் தலைவர் பிரபாகரனும் போராளிகளுமே! புரளிகளுக்கு முற்றுப்புள்ளி…

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் குழப்பங்களையும், தமிழர்களின் வாக்குகளையும் சிதைப்பதற்கு விசமத்தனமான நடவடிக்கைகளை தமிழர் பகுதிகளில் இப்பொழுதே மேற்கொள்ளத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்நிலையில், பொதுத் தேர்தலில் கடுமையான போட்டிகள் உள்ள நிலையில் அதிக வாக்குகளை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களில் ஒருவரான முன்னாள் பா.உறுப்பினரும் வேட்பாளருமான சி.சிறீதரனுக்கு எதிராக விசமத்தனமான பிரச்சாரங்களை சில தமிழ்…

எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல, இன அழிப்புக்குள் அகப்பட்டுள்ளோம்!!…

எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல , இனப்படுகொலைக்குள் அகப்பட்டுள்ளோம், அமெரிக்கா கலிபோனியாவில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் https://youtu.be/qo3Upz2FKEs -http://www.tamilwin.com

மில்லியன் கணக்கான மக்களைக் காப்பாற்றத் தவறிவிட்டது ஐ.நா: மனித உரிமை…

இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதியுத்தத்தின்போது, பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டதாக, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்துள்ளார். பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நிலைமைகள் தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, காணொளி மூலம் கருத்து வெளியிட்ட போதே அவர்…

முன்னாள் போராளிகள் அரசியல் பலிக்கடாக்களா?

வடக்கில் முன்னாள் போராளிகளை மையமாக வைத்து உதயன், சுடரொளி பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான என். வித்தியாதரன் என்பவரின் ஒருங்கிணைப்பில் தோற்றம் பெற்றுள்ள “ ஜனநாயகப் போராளிகள் கட்சி” தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ் அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை அரசியல் ரீதியான விமர்சனங்கள் என நாம் ஒதுக்கித்…

யாழ்ப்பாணம் பெருமாள் ஆலயத்தில் தெலுங்கு பட்டாச்சாரியார்கள் பூசை யாழ்ப்பாண சைவர்கள்…

இந்தியா – ஆந்திரப் பிரதேசத்திலிருந்து கொண்டுவரப்பட்ட தெலுங்குப் பட்டாச்சாரியார்களைக் கொண்டு யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலில் வைணவ முறைப்படி பூசைகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு யாழ்ப்பாண சைவ சமயத்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்தப் பூசைகளை நிறுத்தி மீண்டும் சிவாகம முறைப்படியான பூசைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சைவ சமய அமைப்புகளின்…

ராஜீவ்காந்தியைத் தாக்கிய முன்னாள் சிப்பாய் நாடாளுமன்றத் தேர்தலில்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய சிறிலங்கா கடற்படையின் முன்னாள் சிப்பாய் விஜித் ரோகண விஜேமுனி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கம்பகா மாவட்டத் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார். பொது பல சேனாவின் அரசியல் கட்சியான பொது ஜன பெரமுன (பிஜேபி) சார்பிலேயே இவர் கம்பகா மாவட்ட தலைமை வேட்பாளராக…

மறைக்கப்படும் இசைப்பிரியாக்கள்!

தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கையில் பெண்களை இலக்கு வைத்து பல்வேறு திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்வது முதல் காதலித்து திருமணாம் செய்வது வரை மிகவும் நுட்பமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. வன்புணர்வுப் படுகொலை மற்றும் இனக்கலப்புத் திருமணம் என்ற இரண்டு…

‘உண்மையான போராளிகள்’ சயனைட் கடித்து இறந்துவிட்டார்கள்! – சொல்கிறார் சிறீதரன்

விடுதலைப்புலிகள் அமைப்பின் உண்மையான போராளிகள் முள்ளிவாய்க்காலில் சயனைட் உட்கொண்டு இறந்து விட்டதாகவும், புலம்பெயர் நாடுகளில் தப்பி பிழைத்திருப்பவர்கள் ‘போலிப்புலிகள்’ என்றும், உள்ளுரில் ஜனநாயக போராளிகள் என்று கூறுபவர்கள் ‘அரச முகவர்கள்’ என்றும், இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். இன்று (06.07.2015) தமிழ்…

முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும்…

20 ஆசனங்களை பெற்று பேரம் பேசும் சக்தியாக கூட்டமைப்பு திகழ…

பொதுத் தேர்தலில் 20 ஆசனங்களையாவது பெற்று பேரம் பேசும் பலம்மிக்க சக்தியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திகழ வேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி…

கூட்டமைப்பிடம் சில கேள்விகள்!- நிலாந்தன்

2009 மே மாதத்துக்குப் பின்னரான இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வரும் இரண்டாவது பொதுத் தேர்தல் இது. 2009 இற்கு முன்பு வரை ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் பிரதான அரசியல் போக்கைத் தீர்மானித்தது.…