முன்னாள் இசி தலைவர்: அழியா மை பற்றி ஆராய்வதாகக் கூறப்படுவது…

2008 தேர்தலின்போது அழியா மையைப் பயன்படுத்த முடிவுசெய்து பின்னர் அம்முடிவு கைவிட்டதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்ட தேர்தல் ஆணையத்தின் (இசி) முன்னாள் தலைவர் அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மான், இப்போது அழியா மை பயன்படுத்தப்படுவதை முழுமையாக ஆதரிக்கிறார். சொல்லப்போனால், தேர்தலுக்கு முன்னதாக முடிவை மாற்றிக்கொண்டது அவரை மிகவும் பாதித்திருக்கிறது. அதைத்…

மதம் மாற்றத்தைத் தடுக்க சட்ட அமலாக்கம் கடுமையாக வேண்டும்

இந்த நாட்டில் மதம் மாற்றம் நிகழ்வதைத் தடுப்பதற்கு இஸ்லாம் அல்லாத சமயங்களின் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்துவது மீதான சட்டத்தை அமலாக்குவது கடுமையாக்கப்பட வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் ஜமில் பாஹாரோம் கூறுகிறார். அத்தகைய சட்டம் 1980ம் ஆண்டு இயற்றப்பட்ட பின்னர் அதனை ஏற்றுக் கொண்ட மாநிலங்கள் அந்தச் சட்ட…

எதிர்க்கட்சிகள் தங்கள் சொந்த நன்மைக்காக மனித உரிமைகளைப் பயன்படுத்துகின்றன”

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மனித உரிமைப் பிரச்னைகளை பயன்படுத்தி வருவதாக முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்துள்ளார். மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் அரசியல் நோக்கங்களுக்காக 'மனித உரிமை அலை' பயன்படுத்தப்படுவது மீது சில தரப்புக்கள் தெரிவித்துள்ள கவலையைத் தாம் ஒப்புக் கொள்வதாக அவர்…

மாட் சாபு மீது டிசம்பர் 19ம் தேதி விசாரணை

புக்கிட் கெப்போங் போலீஸ்காரர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினர் மீதும் அவதூறு கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு மீதான விசாரணை டிசம்பர் 19 ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும். அந்தத் தேதிகளை இன்று பட்டர்வொர்த்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் நிர்ணயம்…

வழக்கைத் துரிதப்படுத்த அல்டான்துயாவின் தந்தை வேண்டுகோள்

கொலையுண்ட மங்கோலியப் பெண்ணான அல்டான்துயாவின் தந்தை, மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக தாம் தொடுத்துள்ள ரிம100மில்லியன் சிவில் வழக்கின் விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். 2006, அக்டோபர் 19-இல், ஷா ஆலம் காட்டுப்பகுதி ஒன்றில்  அல்டான்துயா கொடூரமாக கொல்லப்பட்டதன் தொடர்பில் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் மலேசிய அரசாங்கத்துக்கு எதிராகவும்…

“ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாதது மனோதத்துவப் போரின்…

ஜுலை 9 பேரணியில் தாம் கலந்து கொள்ளாததை,  பெர்சே 2.0 அமைப்புக்கு எதிராக தாம் நடத்திய மனோதத்துவப் போரின் ஒரு பகுதி என பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி நியாயப்படுத்தியுள்ளார். "தலைமைத்துவம் ஒரு முடிவைச் செய்யும் போது நீங்கள் அது குறித்து நிறைய கேள்விகளை எழுப்ப வேண்டிய அவசியமில்லை. …

“தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை அமைச்சரவைக்கு செல்ல வேண்டியதில்லை”

அரசியலமைப்பு வல்லுநர் அப்துல் அஜிஸ் பேரி, தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் அமைச்சரவை சம்பந்தப்பட்டுள்ளது தவறு என்கிறார்.  ஏனெனில் அது அரசியலமைப்பு உணர்வுக்கு எதிரானதாகும். கூட்டரசு அரசியலமைப்பின் 107வது பிரிவின் கீழ் அந்த அறிக்கையை தலைமைக் கணக்காய்வாளர் தயாரிக்க வேண்டும். மக்களவையில் சமர்பிக்கப்படுவதற்காக அது மாமன்னரிடம் சமர்பிக்கப்பட வேண்டும் என…

பெர்க்காசா ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கூடிய “பொருத்தமற்றவர்கள்”

"முன்னாள் ஐஜிபி, ஒரு நல்ல விஷயத்தையும் கெட்ட விஷயத்தையும் இணைத்து அதனை தீயதாகக் காட்டுவது உண்மையில் வியப்பைத் தருகிறது." "மனித உரிமை அலை" குறித்து முன்னாள் ஐஜிபி ரஹிம் நூர் எச்சரிக்கிறார் இடைத் தேர்தல் விசிறி:"'மனித உரிமை அலை' பற்றி எச்சரிக்கையாக இருங்கள். அந்த அலை நமது நாடு…

எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தீபாவளி வாழ்த்து

மலேசியாஇன்று, செம்பருத்தி வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் எல்எல்ஜி கலாச்சார மேம்பாட்டு மையத்தின் தீபாவளி வாழ்த்துகள்.

“மனித உரிமைகள் அலை”, எச்சரிக்கிறார் போலீஸ் படை முன்னாள் தலைவர்…

"மனித உரிமைகள் அலை"யின் வருகை இந்த நாட்டை தோற்றுவித்த கொள்கைகளுக்கு மிரட்டலாக அமையும் என்று போலீஸ் படையின் முன்னாள் தலைவர் அப்துல் ரஹிம் முகமட் நோர் இன்று கூறினார். இந்த அலையை ஒரு புதிய சமயம் என்று வர்ணித்த அவர், இது சுதந்திரத்தின் போது பல்வேறு இனங்களுக்கிடையில் ஏற்பட்ட…

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் காலிட் இப்ராகிம் தீபாவளி வாழ்த்து…

  வணக்கம். இவ்வினிய வேளையில்  எல்லா மலேசியர்களுக்கும் குறிப்பாக இந்துகளுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை கூறுவதில் மகிழ்ச்சி.  இந்துகளுக்கு தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாகும். ஒளியின் முக்கியத்துவத்தை உலக மக்களுக்கு  உணர்த்துவதாக உள்ளது தீபாவளி. இருள் எனும் அதர்மத்தை ஒழித்து, ஒளி எனும் தர்மத்தை மனிதர்களின் வாழ்வில் மலரச்செய்யும்…

தீபாவளி திருநாள் வாழ்த்துகள் (காணொளி இணைப்பு)

மலேசியாஇன்று, செம்பருத்தி அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து  மலேசியர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. http://www.youtube.com/v/iQdbpw7j2Eg?version=3&hl=en_US&rel=0

முற்றுப்பெறாத ரிம214 மில்லியன் இராணுவ முகாம் நொருங்கி விழுந்து கொண்டிருக்கிறது

கடந்த ஆண்டு பெப்ரவரில் கட்டி முடிக்கப்பட வேண்டிய சரவாக் முவாரா துவாங் இராணுவ முகாம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதோடு பல்வேறு பாகங்கள் நொருங்கி விழுந்து கொண்டிருக்கின்றன. அந்த முகாம் கட்டி முடிக்க வேண்டியதற்கான கால எல்லை மூன்று முறை நீட்டிக்கப்பட்டும் அந்த ரிம214.43 மில்லியன் திட்டம் 95.7 விழுக்காடுதான்…

ரித்துவான் தீ: ஹூடுட் சட்டம் “பலாத்காரமாக” அமல்படுத்தப்பட வேண்டும்

இஸ்லாமிய ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரே வழி அச்சட்டத்தை "பலாத்காரமாக" அமல்படுத்துவதுதான் என்று மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரித்துவான் தீ அப்துல்லா இன்று கூறினார். "இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு (இஸ்லாம் குறித்து) போதிப்பது பலவந்தத்தின் மூலமாக மட்டுமே முடியும்", என்று அந்த…

விலை ஏற்றம் குறித்து எதிர்ப்புத் தெரிவிக்குமாறு அறைகூவல்

பயனீட்டாளர் பொருட்களின் விலைகள் குறிப்பாக கோழி விலை ஏற்றம் கண்டிருப்பது மீது அடுத்த மாதம் தொடக்கம் அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள 1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களைப் பிரதிநிதிக்கும் கியூபாக்ஸ் எனப்படும் பொது, சிவில் சேவை ஊழியர் சங்க காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. நியாயமற்ற விலைகளில் பொருட்களை விற்கின்ற பொறுப்பற்ற…

என்எப்சி தோல்வி குறித்து “அம்பலப்படுத்தப் போவதாக” பிகேஆர் மருட்டுகிறது

என்எப்சி என அழைக்கப்படும் தேசிய விலங்குக் கூட மையத் திட்டம் மோசமான தோல்வியைத் தழுவியிருப்பது மீது தெளிவான பதில்கள் கிடைக்கா விட்டால் அந்தத் திட்டம் குறித்துக் கவனம் செலுத்தப் போவதாக பிகேஆர் மருட்டியுள்ளது. அந்தத் திட்டம் "ஒரே குழப்பத்தில்" மூழ்கியிருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை வருணித்துள்ளது. நெகிரி செம்பிலான்…

“நோ, விவசாயிகளுக்கான ரிம110மில்லியன் ஊக்கத்தொகை என்னவானது?”

பிகேஆர் சிலாங்கூர், நெல்விவசாயிகளுக்கு  ஊக்கத் தொகை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரிம110மில்லியன் இன்னும் கொடுபடாமல் இருப்பதற்காக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் நோ ஒமாரைச் சாடியுள்ளது. அமைச்சு 73,291 விவசாயிகளுக்குக் கொடுத்திருக்க வேண்டிய ரிம110.67மில்லியனை இன்னும் கொடுக்கவில்லை என்று தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கை கூறுகிறது. விவசாயிகள் அவர்களின் விளைச்சலை…

ஏஜி அறிக்கை: ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு கொடுக்க ரிம770,000

தெனாகா நேசனல் பெர்ஹாட், அதன் கிராமப்புற மின்னளிப்புத் திட்ட (பிஇஎல்பி) த்தின் கீழ் ஒரே ஒரு வீட்டுக்கு மின்தொடர்பு ஏற்படுத்திக்கொடுக்க ரிம770,000 செலவிட்டிருக்கிறது. பகாங், இந்த்ரா மக்கோத்தாவில் 17 வீடுகளுக்கு மின்விநியோகம் அளிக்கத்தான் திட்டம் போடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தால் ஒரே ஒரு வீடுதான்…

இசி சந்தேகத்துக்குரிய 42,000 பெயர்களை வியாழக்கிழமை காட்சிக்கு வைக்கும்

இசி என்ற தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்குரிய 42,051 வாக்காளர்களுடைய பெயர்களை வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்குக் காட்சிக்கு வைக்கும். அந்த வாக்காளர்களுடைய பதிவுகளை உறுதி செய்ய முடியாமல் இருப்பதால் அவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 987 இடங்களில் வைக்கப்படும் 2011ம் ஆண்டின் மூன்றாவது கால் பகுதிக்கான வாக்காளர்…

ஏஜி அறிக்கை: பென்சன் பிரிவு ரிம4.6மில்லியனை அதிகப்படியாகக் கொடுத்துள்ளது

2007-க்கும் 2010-க்குமிடையே, பணிஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஓய்வூதியமாக ரிம4.6மில்லியன் கூடுதலாகக் கொடுக்கப்பட்டிருப்பதைத் தலைமைக் கணக்காய்வாளர்துறை கண்டுபிடித்துள்ளது. இத்தொகையில் ரிம2.57 மில்லியன், இறந்துவிட்ட அரசு ஊழியர்கள் 1975 பேரின் குடும்பத்தாருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் திரும்பப்பெறும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதுவரை ரிம850,000 திரும்பப் பெறப்பட்டுள்ளது. எஞ்சி…

அஜிஸ் பேரிக்கு எதிரான விசாரணை நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை

யூஐஏ என்ற அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் அப்துல் அஜிஸ் பேரி மீதான விசாரணையை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என 120க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும் ஆரய்ச்சியாளர்களும் கோரியுள்ளனர். அத்துடன் அஜிஸ் பேரிக்கு முழுமையான கல்விச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.…

கடன் மோசடியில் ஒர் உள்நாட்டு வங்கிக்கு 37 மில்லியன் ரிங்கிட்…

ஒர் உள்நாட்டு வங்கி தனது 26 ஆண்டு கால வரலாற்றில் மிகவும் பெரிய இழப்பை அடைந்துள்ளது. அந்த வங்கி 37 மில்லியன் ரிங்கிட் கடனை அங்கீகரித்த நிறுவனம் ஒன்று பின்னர் காணாமல் போய்விட்டது. 2009ம் ஆண்டு அந்தத் தொகையை வங்கி அங்கீகரித்ததாக வட்டாரம் ஒன்றை மேற்கோள் காட்டி உத்துசான்…

செனாய்-தேசாரு நெடுஞ்சாலை; சாலைச் சோதனையில் தோல்வி

ஜோகூரில் நீங்கள் 77 கிலோமீட்டர் நீள செனாய்-தேசாரூ பயணம் செய்திருந்தால் அந்தப் பயணம் ஏற்ற இறக்கமாக இருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதற்கு என்ன காரணம் ? சாலை நிர்மாணிப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்யவில்லை என்பதே அந்தக் காரணமாகும். அந்த நெடுஞ்சாலையின் சில பகுதிகள் குறைந்த பட்ச…