அரசாங்கம் உட்பட முதலாளிகள், மன அழுத்தத்தைக் குறைக்கும் பணியிடங்களை நிறுவுவதன் மூலம், மன அழுத்தம் மற்றும் சோர்வு போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தொழிலாளர்களின் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ரிலேட் மலேசியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான மருத்துவ உளவியலாளர் டாக்டர் சுவா…
ஹரப்பான் கம்யூனிட்டி, நாளை சிலாங்கூர் மந்திரி புசாரை சந்திக்கிறது
ஜயிஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய விவகாரத் துறை, ஆகஸ்ட் 3ம் தேதி டமன்சாரா உத்தாமா தேவாலய வளாகத்தில் நடத்தப்பட்ட விருந்து நிகழ்வு ஒன்றில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அதிரடிச் சோதனை தொடர்பில் விருந்து ஏற்பாட்டாளரான ஹரப்பான் கம்யூனிட்டி என்ற அரசு சாரா அமைப்பு நாளை மந்திரி புசார் காலித் இப்ராஹிமைச்…
நிபுணர்: மரபணு மாதிரிகள் பயனற்றவையாக இருக்கலாம்
36 மணி நேரத்தை தாண்டி விட்ட மரபணு மாதிரிகள் "அர்த்தமுள்ள ஆதாரமாக" இருக்க முடியாது என ஆஸ்திரேலிய தடயவியல் உடற்கூறு நிபுணர் டாக்டர் டேவிட் வெல்ஸ் கூறுகிறார். அத்தகைய மாதிரியிலிருந்து முடிவுகளைப் பெறுவது மிகவும் சிரமம் என அவர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் கூறினார். அவர் பிரதிவாதித்…
“ஆவி” வாக்காளர்கள்: எம்பி-க்கு எதிராக உள்துறை அமைச்சு போலீஸ் புகார்
சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களுக்கான 6பி பொது மன்னிப்புத் திட்டம் மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாக பிகேஆர் அம்பாங் எம்பி சுராய்டா கமாருதினுக்கு எதிராக உள்துறை அமைச்சு இன்று போலீஸில் புகார் செய்துள்ளது. சிலாங்கூர் குடி நுழைவுத்துறை ஷா அலாம் செக்சன் 11 போலீஸ் நிலையத்தில் அந்தப் புகாரைச் சமர்பித்துள்ளதாக…
சிலாங்கூர் சுல்தான் அதிர்ச்சி அடைந்துள்ளார்
சிலாங்கூர் மந்திரி புசார் காலிட் இப்ராகிம் நேற்று அறிவித்திருந்த ஆலோசனை மன்றம் தேவைக்கு கூடுதலானது என்று இன்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரீஸ் ஷா அறிவித்தார். இது மந்திரி புசாருக்கு ஒரு பேரிடியாகும் என்று கூறப்படுகிறது. சிலாங்கூர் சுல்தான் அவ்வாறான ஆலோசனை மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கவில்லை…
Najib Does a Flip-Flop to Stay in Power
- Charles Santiago, MP for Klang Manipulation is a common tactic among dictators. In Malaysia, the guy who caricatures this is none other than Prime Minister NajibTunRazak. In a throwback to the 1980s Malaysia, which…
எம்பி: வெளிநாட்டவர் வாக்காளர் ஆனதற்கு ஆதாரங்கள் காட்டுவேன்
உள்துறை அமைச்சு விடுத்த சவாலை ஏற்றுக் கொண்டுள்ள அம்பாங் எம்பி சுரைடா கமருடின், வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கி “ஆவி வாக்காளர்கள்” உருவாக்கப்பட்டிருப்பதற்கு ஆதாரங்களைக் காண்பிப்பதாகச் சூளுரைத்துள்ளார். “இப்போது எதையும் வெளிப்படுத்த நான் விரும்பவில்லை. ஏனென்றால் போலீஸ் அதிரடிச் சோதனை போன்ற குறுக்கீடு நிகழ்வதை நான் விரும்பவில்லை. எல்லா ஆதரங்களுடனும்…
கிறிஸ்துவ தரப்புகள் விபச்சாரத்துக்கு இடமளிக்கின்றன
கிறிஸ்துவத் தரப்புகள் “மதமாற்ற இயக்கத்தை” நடத்தி வருவதாக பல்லவி பாடும் மலாய் நாளேடான சினார் ஹரியான் இன்று மேலும் ஒரு படி முன்னே சென்று அத்தரப்புகள் ஆண்களும் பெண்களும் கட்டுப்பாடற்ற முறையில் கலந்துறவாட ஊக்குவிப்பதாகவும் விபச்சாரத்துக்கு இடமளிப்பதாகவும் கூறியுள்ளது. நேற்று அந்நாளேடு திங்கள்கிழமைதோறும் இடம்பெற்றுவரும் 'Bicara Isnin' பத்தியில்…
லிம் குவான் எங்: பினாங்கை தக்க வைத்துக் கொள்ள முடியுமா?
பினாங்கு மாநிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என தாம் உறுதியாக எண்ணவில்லை என அந்த மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கூறுகிறார். அதனால் பக்காத்தான் ராக்யாட் தொடர்ந்து அடக்கமாக நடந்து கொள்வதோடு நல்ல சேவைகளையும் தொடர்ந்து வழங்கி வர வேண்டும் என அவர் சொன்னார். "அரசியலில்…
மருத்துவர்: குதத்திற்குள் பிளாஸ்டிக் நுழைக்கப்பட்டதாக சைபுல் என்னிடம் சொன்னார்
பிளாஸ்டிக் பொருள் ஒன்று தமது குதத்திற்குள் நுழைக்கப்பட்டதாக புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தெரிவித்தார் என இன்று இரண்டாவது பிரதிவாதித் தரப்புச் சாட்சியான புஸ்ராவி மருத்துவமனை மருத்துவர் டாக்டர் முகமட் ஒஸ்மான் அப்துல் ஹமிட் இன்று கூறினார். தமது மருத்துவ அறிக்கையில் அது குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.…
அன்வார் சரியான முடிவைச் செய்துள்ளாரா?
"குற்றச்சாட்டை நிரூபிக்கும் சுமையை சைபுலிடம் மாற்றி விட்டது, அன்வாரின் சரியான முடிவா? உங்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதாக நீங்கள் யார் மீதாவது குற்றம் சாட்டினால் அதனை நிரூபிக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்." "நான் சைபுலுடன் உடலுறவு கொள்ளவில்லை" பெர்ட் தான்: விசாரணை நீதிபதி, அரசு வழக்குரைஞர்கள்…
நஜிப், ரோஸ்மா, மூசா ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை
பிரதமர் நஜிப், அவரது மனைவி ரோஸ்மா மன்சூர், முன்னாள் போலீஸ்படைத் தலைவர் மூசா ஹசான் மற்றும் மலாக்கா மாநில முன்னாள் போலீஸ் தலைவர் முகமட் ரௌடான் முகமட் யுசூப் உட்பட எழுவருக்கு சாட்சி அளிப்பதற்கு நீதிமன்றம் வருவதற்கான அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது என்று அன்வாரின் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்…
அன்வார் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் (விரிவாக)
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுத்தார். அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக்…
தேவாலயச் “சோதனை”: பிரச்னையைத் தீர்ப்பதற்கு சிலாங்கூர் குழு ஒன்றை அமைக்கிறது
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது ஜயிஸ் என்ற சிலாங்கூர் மாநில இஸ்லமிய விவகாரத் துறை நடத்திய சர்ச்சைக்குரிய சோதனை குறித்த பிரச்னையைத் தீர்ப்பதற்கு மாநில அரசாங்கம் ஆலோசனை மன்றம் ( syura ) ஒன்றை அமைத்துள்ளது. மாநில முப்தி தாமியெஸ் அப்துல் வாஹிட், துணை முப்தி…
நாளேடு:மதமாற்ற இயக்கம் வெளிப்படையாகவே நடக்கிறது
முஸ்லிம்களை மதமாற்றும் நடவடிக்கை சட்டப்படி குற்றமாகும். ஆனால் அந்த “மதமாற்றும் இயக்கம்” வெளிப்படையாகவே நடக்கிறது என்று கூறுகிறது மலாய்மொழி நாளேடான சினார் ஹரியான். “முன்பெல்லாம் மோட்டார் சைக்கிள்களிலும் கார் கண்ணாடித் துடைப்பான்களிலும் அஞ்சல் பெட்டிகளிலும் துண்டறிக்கைகளை விட்டுச் செல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது துணிச்சலுடன் அதைச் செய்கிறார்கள்”, என்று…
“நமக்கு அதிகச் செலவு பிடிக்கும் அந்நிய ஆலோசகர்கள் தேவை இல்லை”
மித மிஞ்சிப் பெருத்து விட்ட நாட்டின் வரவு செலவுத் திட்டத்தைக் குறைப்பதற்கு உதவித் தொகைக் குறைக்கப்படுவது உதவும் எனச் சொல்வதற்கு நமக்கு அதிகச் செலவு பிடிக்கும் அந்நிய ஆலோசகர்கள் தேவை இல்லை. இவ்வாறு பாஸ் கட்சி, பொருளாதாரத் திட்டப் பிரிவுக்குப் பொறுப்பான அமைச்சர் நோர் முகமட் யாக்கோப்பிடம் கூறியுள்ளது.…
“நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தேர்தல் குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியாகாது”
தேர்தல் சீர்திருத்தம் மீதான தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அந்தப் பரிந்துரைகள் செல்லுபடியாகாது என மக்களவை துணை சபாநாயகர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாபார் கூறுகிறார். அந்தப் பரிந்துரைகளைப் புதிதாக பதவி ஏற்றுள்ள எம்பிக்கள் நிராகரித்தால் முழு சீர்திருத்த நடவடிக்கையும் தூக்கி எறியப்பட்டு விடும்…
பாஸ்: நஜிப்பும் நஸ்ரியும் நாடாளுமன்றத்தை அவமானப்படுத்துகின்றனர்
தேர்தல் சீர்திருத்தங்கள் மீது அண்மையில் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு தொடர்பில் முரண்பாடான போக்கைப் பின்பற்றுவதின் மூலம் மூத்த பிஎன் தலைவர்கள் நாடாளுமன்றத்தை அவமதிப்பதாக பாஸ் கட்சி இன்று குற்றம் சாட்டியது. "பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸும் நாடாளுமன்றத்தை…
தேர்வுக் குழு மீது நஜிப் முரண்பாடான அறிக்கைகளை விடுத்தாரா ?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேர்தல் சீர்திருத்தம் மீது நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்கப் போவதாக அறிவித்த பின்னர் ஏற்பட்ட நல்லெண்ணம் ஏன் ஒரு வாரத்துக்குள் காணாமல் போனது? அந்தக் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கப்படும் என்பதற்கு பிரதமர் உத்தரவாதம் அளிக்க முடியுமா…
நஜிப்,ரோஸ்மா-வுக்கு நீதிமன்ற அழைப்பாணை
அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் கர்பால் சிங், தங்கள் தரப்புச் சாட்சிகளாக எழுவருக்கு அழைப்பாணை அனுப்ப வேண்டும் என்று விண்ணப்பித்துக்கொள்ளப்போவதாக நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார். அந்த எழுவரில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் தலைவர் முகமட்…
ஆர்சிஐ-முடிவுக்கு எதிராக தியோ குடும்பத்தார் நீதிமன்றம் செல்வர்
தியோ பெங் ஹொக் தற்கொலை செய்துகொண்டார் என்ற அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) தீர்ப்புக்கு எதிராக அவரின் குடும்பத்தார் புதன்கிழமை மனுச் செய்வர். “ஆர்சிஐ முடிவைப் புறந்தள்ள நீதிமுறை மேலாய்வு ஒன்றுக்கு உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்யப் போகிறோம்”, என்று தியோ குடும்ப வழக்குரைஞர் கோபிந்த் சிங் கூறினார். கூட்டரசு…
அன்வார் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார்
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு மீது எதிர்வாதம் செய்வதற்கு எதிர்பாராத வகையில் சாட்சிக் கூண்டிலிருந்து சாட்சியமளிப்பதற்குப் பதில் குற்றம் சாட்டப்பட்டவருக்கான கூண்டிலிருந்து வாக்குமூலம் கொடுக்கிறார். அன்வாருக்கு மூன்று வழிகள் இருந்தன- சாட்சிக் கூண்டிலிருந்தவாறு சத்தியப் பிரமாணம் எடுத்துக்…
இனத்தைத் தூண்டுவதில் தோல்வி கண்டவர்கள் இப்போது சமயத்தைப் பயன்படுத்துகின்றனர்
"நாடு என்னும் முறையில் நாம் சுதந்தரமடைந்து 50 ஆண்டுகள் நிறைந்து விட்டன. ஆனால் நாம் இன்னும் பிளவுபட்டுள்ளோம். ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் பார்க்கிறோம். இதற்கு பல்வேறு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை வளர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களும் அரசியல்வாதிகளுமே காரணம்." டமன்சாரா உத்தாம மெதடிஸ்ட் தேவாலய 12…
2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை: பாராட்டுகுரியது, சார்ல்ஸ்
அண்மையில் நடைபெற்ற மைடஃப்தார் பதிவு வாயிலாக குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்களில் 2,500 இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பு மகிழ்ச்சி தரும் செய்தி. அரசாங்கத்தின் இம்முயற்சி வரவேற்கத்தக்கது என கூறினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. கடந்த பிப்ரவரி 19-26 வரை நடைப்பெற்ற பதிவுகளில் மொத்தம் 6,541…