இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மகப்பேறு விடுப்பிற்குப் பின் உதவித்தொகை உட்பட பல்வேறு முன்முயற்சிகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். 2017ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவித் தொகைக்கு அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம்,…
ஆத்திரமடைந்துள்ள வணிகர்கள் அம்பிகா கைது செய்யப்பட வேண்டும் என விரும்புகின்றனர்
பெர்சே 3.0 பேரணியால் தங்களது வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக கூறிக் கொண்டுள்ள மலாய் வணிகர்கள் குழு ஒன்று, இந்த நாட்டில் மேலும் குழப்பம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பெர்சே கூட்டமைப்பின் கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது. கோலாலம்பூரில் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் கடைத்…
அம்னோ மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் பேரணி…
அம்னோவின் 66வது ஆண்டு நிறைவை ஒட்டி மே 11ம் தேதி புக்கிட் ஜலில் அரங்கத்தில் நடைபெறும் மாபெரும் கூட்டம் 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் வலிமையைக் காட்டுவதாக அமையும் என அந்தக் கட்சியின் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். மற்றவர்களுக்குத் தீங்கை ஏற்படுத்தாமல் நூறாயிரக்கணக்கான அம்னோ…
முன் கூட்டியே வாக்களிக்கும் முறை பிஎன் வெற்றிக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கும்…
முன் கூட்டியே வாக்களிக்கும் முறையை அறிமுகம் செய்வதை பெர்சே அமைப்பும் எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ள போதிலும் அதன் அமலாக்கத்திற்கு தெளிவான நடைமுறைகள் இல்லாததால் அது வாக்கு மோசடிகளுக்கு வழி வகுத்து பிஎன்-னுக்குச் சாதகமாக அமையக் கூடும் என பிகேஆர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார். தேர்தல் முகவர்களை பயிற்றுவிப்பதில் தனித்துவம் பெற்றுள்ள…
பக்காத்தான் பெர்சே தகவல் ‘போரை’ தொடங்குகிறது
நொறுக்கப்பட்ட போலீஸ் கார், மோட்டார் சைக்கிள் பற்றிய படங்களை நாட்டின் முக்கியப் பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் பெளியிட்டு பெர்சே 3.0ல் பங்கு கொண்டவர்களை வன்முறை கலகக்காரர்கள் என அரசாங்கம் முத்திரை குத்திய ஒரு வாரத்திற்கு பின்னர் அதனை முறியடிப்பதற்கு பக்காத்தான் ராக்யாட் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. "போலீஸ் முரட்டுத்தனத்தாலும் வன்முறையாலும்…
அஞ்சல் வாக்காளர் யோசனை மீது இசி, அனைத்துலகக் குழுவிடம் பொய்…
தீவகற்ப மலேசியாவில் வேலை செய்யும் சபா, சரவாக் வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குகளை அறிமுகம் செய்யும் யோசனையை நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது எனத் தேர்தல் ஆணையம்(இசி) அனைத்துலகக் குழு ஒன்றிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில்…
நஜிப்- ஒரு பில்லியன் டாலர் மனிதர்
"இதனை ஒப்பு நோக்கினால் 250 மில்லியன் ரிங்கிட் மாட்டு ஊழலில் ஒன்றுமே இல்லை. நஜிப் ஏன் ஷாரிஸாட்டை மன்னிக்கிறார் என்பது இப்போது தான் தெரிகிறது." பிரஞ்சு வழக்குரைஞர்கள்: நஜிப் பெரிமெக்காருக்காக ஒரு பில்லியன் டாலர் கோரினார் ஜோ லீ: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பில்லியன் டாலர் மனிதர்.…
தேர்தல் ஆணையம்: அம்பிகா “ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்”
பெர்சே 3.0 பேரணியில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி தூய மற்றும் நேர்மையான தேர்தலுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தேர்தல் ஆணையம் அந்த தேர்தல் சீர்திருத்தம் கோரும் அமைப்பை மட்டந்தட்டியதோடு பெர்சேயின் இணைத் தலைவர் அம்பிகாவை "ஜனநாயகத்தை அழித்தவர்" என்றும் கூறியுள்ளது. தேர்தல் சீர்திருத்த விவகாரம் குறித்து…
பெர்சே 3.0 பேரணி மீது வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக்…
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி தொடர்பிலான விசயங்களை விவாதிக்க வழக்குரைஞர் மன்றம் அவசரப் பொதுக் கூட்டத்தைக் (இஜிஎம்) கூட்டுகிறது. அந்த இஜிஎம் கோலாலம்பூர் ஹோட்டல் ஒன்றில் அடுத்த வெள்ளிக்கிழமை நிகழும் என அந்த மன்றத்தின் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரத்துவச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பெர்சே 3.0,…
‘அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டாலும் ஊடகங்கள் இன்னும் பிஎன்…
அச்சுக்கூட, வெளியீட்டு சட்டத்தில் அண்மையில் பல திருத்தங்கள் செய்யப்பட்ட போதிலும் மலேசிய அச்சு ஊடகங்கள் மீது பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் இன்னும் நிறைவான கட்டுப்பாட்டை பெற்றுள்ளதாக சுயேச்சை இதழியல் மய்யம் ( Centre for Independent Journalism-CIJ) கூறுகிறது. காரணம் கோரும் கடிதங்கள், 'ஆலோசனை' கூறுவதற்கான ஊடகங்களை…
உத்துசான்: 4 பக்காத்தான் தலைவர்கள் பற்றிய “சூடான” வீடியோக்கள் விரைவில்…
நான்கு பக்காத்தான் தலைவர்களை சம்பந்தப்படுத்துவதாக கூறப்படும் "சூடான Read More
சுஹாக்காம்: பெர்சே 2.0ன் போது போலீசார் மனித உரிமைகளை மீறினர்
கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது. "போலீசார் சில சமயங்களில் குறிப்பாக…
மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடியதை மறைக்கவே பெர்சே வன்முறைக்குத் திட்டமிடப்பட்டது
கடந்த சனிக்கிழமையன்று பெர்சே 3.0 பேரணியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொண்டது மீது கவனம் செலுத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு அந்தப் பேரணியின் முடிவில் வன்முறைகள் திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதா ? இன்று அந்தக் கேள்வியை ஷா அலாம் எம்பி காலித் சாமாட் எழுப்பினார். மக்கள் பெரும் எண்ணிக்கையில்…
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தனர்
உள்ளூர் பத்திரிக்கையாளர்கள், பத்திரிக்கையாளர் கழகம் ஒன்றை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளனர். அது மலேசிய இதழியல் துறைக்கு புதிய கால கட்டத்தை தோற்றுவித்துள்ளது என்றால் மிகை இல்லை. பல மூத்த பத்திரிக்கையாளர்களும் செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுமான 80 பேர் நேற்றிரவு தேசிய பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூடி அந்த புனிதமான தொழிலுக்கு…
ஆயுதம் இல்லாத ஆர்ப்பாட்டக்காரர்களிடம் துப்பாக்கியைக் காட்டுவது- இன்னொரு வழக்கமான நடைமுறையா…
உங்கள் கருத்து: "பொது மக்கள் பங்கு கொள்ளும் பேரணியில் போலீசார் தங்கள் ஆயுதங்களை உருவுவதே கிரிமினல் அச்சுறுத்தலாகும். ஹிண்ட்ராப் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டை ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் சுமத்தியது என் நினைவுக்கு வருகிறது." "போலீஸ் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரரை துப்பாக்கியை குறி வைத்ததை நான்…
சுஹாகாம்: பெர்சே பேரணியில் போலீஸ் நடத்தை “ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல”
பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றவர்களை கலைப்பதற்கு போலீசார் எடுத்துக்கொண்ட "முரட்டுத் Read More
ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென்னிடம் NST மன்னிப்பு கோரியது
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 2009 ஆம் ஆண்டில் இஸ்லாத்திற்கு எதிராகப் பேசினார் என்று ஆஸ்திரேலிய செனட்டர் ஸென்னபென் பற்றி வெளியிட்ட செய்திக்காக நியு ஸ்டிரெட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி) மன்னிப்பு கோரியுள்ளது. அதன் வலைதளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள அறிக்கைகளில் "பெரும் தவறு" இழைக்கப்பட்டுள்ளது என்று என்எஸ்டி…
தாக்கப்பட்ட சன் நிருபருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது
சன் நிருபர் ராட்ஸி ரசாக்கிற்கு பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அசுந்தா மருத்துவ மனையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்ட போது அவருக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. அதற்கு பின்னர் அவரது தாடை எலும்பில் கம்பி போட்டுக் கட்டப்பட்டுள்ளது. "கோலாலம்பூர் மருத்துவமனை என்னுடைய முகத்தை சோதிக்கவில்லை. என்னுடைய…
ம.இ.கா இளைஞர் தரப்பினர் வன்செயலில் இறங்கியது கண்டித்தக்கது!
இந்திய சமூகத்தின் வருத்தங்களையும், பாதிப்புகளையும் நம்நாட்டின் பிரதமரிடம் எடுத்துக் கூறுவதற்கும் மனு வழங்குவதற்கும் சென்ற பி.கே.ஆர் எதிர்கட்சியைச் சார்ந்தவர்கள் அடங்கிய குழுமீது, ம.இ.கா இளைஞர் பிரிவின் பெயரில் வன்செயல் நிகழ்ந்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் ஜி. குமார் அம்மான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…
பெர்சே 3.0 தொடர்பில் 49 பேர் தேடப்படுகின்றனர்
கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியில் பங்கேற்றது தொடர்பில் தேடப்ப்படும் 49 பேருடைய படங்களை போலீஸ் இன்று வெளியிட்டுள்ளது. குற்றவியல் சட்டத்தின் கீழ் பல்வேறு கிரிமினல் குற்றங்களுக்கான விசாரணைகளில் உதவுவதற்காக அவர்களுடைய வாக்குமூலங்கள் தேவைப்படுவதாக கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே இன்று நிருபர்களிடம் கூறினார்.…
அஸ்மின் உத்துசானிடமிருந்து 100 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோருகிறார்
'கழிப்பறை ஏற்பாடு' ஒன்றில் தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக நேற்று முதல் பக்கச் செய்தியாக வெளியிட்ட உத்துசான் மலேசியாவிடமிருந்து இழப்பீடாக பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி 100 மில்லியன் ரிங்கிட் கோரியுள்ளார். அந்தத் தகவலை அஸ்மினுக்கு வழக்குரைஞராக செயல்படும் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் இன்று வெளியிட்ட ஒர்…
ஊடகங்களுக்கு எதிரான வன்முறைகளை மலேசியாகினி ஆட்சேபிக்கிறது
மலேசியாகினி உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தை ஒட்டி, பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு இன்று 30 நிமிடங்களுக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. கோலாலம்பூரில் பங்சார் உத்தாமாவில் அமைந்துள்ள அந்த செய்தி இணையத் தளத்தின் அலுவலகத்துக்கு வெளியில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மலேசியாகினியின் 50 ஊழியர்களுடன் மற்ற…
பாரிஸ் நீதிமன்றம், அழைப்பாணை (சபீனா) நிராகரிக்கப்பட்டால் கைது ஆணையைப் பிறப்பிக்கலாம்
ஒரு சாட்சி, சபீனா வெளியிடப்பட்ட பின்னர் விசாரணைக்கு உதவ மறுத்தால் பிரஞ்சு நீதிபதி ஒருவர் அனைத்துலகக் கைது ஆணையை பிறப்பிக்க முடியும். இவ்வாறு பிரஞ்சு வழக்குரைஞரான ஜோசல் பிரெஹாம் கூறியிருக்கிறார். அவர், ஆயுத விற்பனையில் பல மில்லியன் ரிங்கிட் கையூட்டாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது மீது சிவில் வழக்குத் தொடுத்துள்ள…
பிரஞ்சு வழக்குரைஞர்கள்: ” நஜிப் பெரிமெக்காருக்கு 1 பில்லியன் அமெரிக்க…
பிரான்ஸ்- மலேசிய ஆயுதப் பேரங்களை விசாரிக்கும் பிரஞ்சு அரசாங்க வழக்குரைஞர்கள், அப்போதைய தற்காப்பு அமைச்சரான நஜிப் அப்துல் ரசாக், ஒர் உள்ளூர் நிறுவனமான பெரிமெக்காருக்காக பிரஞ்சு தற்காப்புத் தளவாட தயாரிப்பு நிறுவனமான டிசிஎன்-னின் துணை நிறுவனமான டிசிஎன்ஐ-டமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டாலரை ( 3 பில்லியன் மலேசிய…


