“அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி அரசாங்கம்…

சபா அடையாளக் கார்டு திட்டம் மீது அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ வூய் கியோங் கூறுகிறார். என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அடுத்த ஆண்டு தனது முழு…

பிகேஆராலும் டிஏபி-யாலும் ஹூடுட்டைத் தடுக்க முடியாது, மசீச

கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாஸின் தோழமைக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் எதுவும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் கிளந்தான் மசீச செயலாளர் டான் கென் டென். இன்று ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்த டான், கிளந்தானில் ஒரு காப்பிக்கடை பணிப்பெண் கைகள் தெரிய உடை…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை ஜனவரி 9 முதல்…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை பராமரிப்பு, சோதனை நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதிலியிலிருந்து 15ம் தேதி வரை- அதாவது ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். வழக்கமாக நடத்தப்படும் அந்த ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்குப் பின்னர் அந்த ரயில் சேவை வழக்கம் போல் நடத்தப்படும்…

அழியா மையை சோதனை செய்ய இரசாயனத் துறை தயார்

வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்துவதற்கு இரசாயனத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைமை  இயக்குநர் அகமட் ரிட்சுவான் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். என்றாலும் அந்தச் சோதனையை நடத்துவதற்கான உத்தரவு எதனையும்…

ஹசன் அலியால் மட்டுமே சிலாங்கூரைக் காப்பாற்ற முடியும்-உத்துசான்

சிலாங்கூரைக் காப்பாற்றி மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்த ஒரே ஒருவரால் மட்டுமே முடியும். அந்த ஒருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான பாஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மூத்த ஆசிரியர் சைனி ஹசான் தம் வாராந்திர பத்தியில் இவ்வாறு கூறுகிறார். ஹசனை(வலம்) ஒரு போராளி என்று…

YONG PENG TAMIL SCHOOL NOT BUILT

-Senator Dr. S. Ramakrishnan Deputy Education Minister Wee Ka Siong can complete the SJK© Yong Peng on time to start enrolment on 1st January 2012 but the adjacent Tamil school which was promised to be…

32 ஆண்டுகால அரசியல் கைதி சியா தை போவுக்கு விருது

ஆசியா கண்டத்தின் வரலாற்றில் மிக நீண்ட கால அரசியல் சிறைவாசம் அனுபவித்த சியா தை போ (Chia Thye Poh), வயது 70, லிம் லியான் கியோக் ஆன்மா விருத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவ்விருது டிசம்பர் 18, 2011 இல் அவருக்கு வழங்கப்படும். சிங்கப்பூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான…

பல்கலைகழக நுழைவில் வஞ்சிக்கப்படும் ஏழை மலேசிய தமிழினம், இண்ட்ராப்

மலேசியாவில் இந்தியர்கள் மூன்றாவது பெரிய சமூகம் என்பது அப்பட்டம். ஆனால் நம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அவ்வாறு பிரதிபலிக்கப்படுவதிலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறது. அனைத்து சமூக பொருளாதார உரிமைகளிலிருந்தும் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம், வஞ்சிக்கப்படுகிறோம். இந்த அவலம் வெகு சாமர்த்தியமாக, கைதேர்ந்த கபடக்காரர்களால் மிக நேர்தியாக திட்டமிடப்பட்டு வெகுசாதுர்யமாக யாராலும் உணரப்படாத வகையில்…

கெரக்கான்: எம்ஏசிசி நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும்

எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் பிரதமர் துறைக்குப் பதில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற பரிந்துரையை கெராக்கான் ஆதரிக்கிறது. ஊழல் மீதான சிறப்புக் குழு தெரிவித்துள்ள அந்தப் பரிந்துரை நியாயமானது என அந்தக் கட்சியின் உதவித் தலைவர் மா சியூ கியோங் கூறினார். காரணம்…

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்த தேர்தல் ஆணையம்…

13வது பொதுத் தேர்தலில் அழியா மையைப் பயன்படுத்துவதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய அந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளதாக அதன் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார்  பெரித்தா ஹரியான்…

“லெம்பா பந்தாயில் என்னமோ அக்கப்போர் நடக்குதுங்கோ”

"குறுகிய காலத்தில் வாக்காளர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. தவிர, வேறு பல குளறுபடிகளும் நிகழ்ந்துள்ளன. வாக்காளர் பட்டியல் ஒழுங்காய் இல்லீங்கோ." "பாலாய் போலீஸ் கெரிஞ்சி" என்னும் பெயரில் ஒரு வாக்காளர் பதிவாகியுள்ள அதிசயம் மலேசியன் 53: லெம்பா பந்தாயில் வாக்காளர் எண்ணிக்கை 56,000-இலிருந்து 70,000ஆகியுள்ளதா?எப்படி?அதுவும் மூன்றாண்டுகளில்.…

“அன்புள்ள மலேசிய மலாய்க்காரர்களே, நாட்டின் தலைவிதி உங்கள் கைகளில்”

"இது உண்மையில் விரக்தி அடைந்த பேச்சு. அறிவாற்றல் நேர்மை எங்கே போனது? வெவ்வேறு வகையான மக்களிடம் வெவ்வேறு வகையாக பேசுவது எல்லாம் வாக்குகளுக்காக!" பிரதமர் நஜிப்: பக்கத்தான் ஆட்சியில் மலாய்க்கார்களுக்கு அழிவு ஏற்படும். கிளவுட்னைன்: மகாதீர் காலம் தொட்டு படாவி, இப்போது நஜிப் வரை சில தலைவர்களுடைய நிதி…

“நஜிப் தமது சுயவழிபாட்டை உருவாக்குகிறார்”

"மலாய்க்காரர்கள் உட்பட நாம் அந்த மனிதர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தம்மை சர்வ வல்லமை பெற்றவராக மாற்றிக் கொள்ள முயலுகிறார்." தேர்தலில் ஆதரவு கொடுத்தால் பெக்கிடாவுக்கு நஜிப் உதவுவார் டிவிஜிஎஸ்: நாட்டை நிர்வாகம் செய்வதற்கு நஜிப்புக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதா அல்லது தமது கட்சிக்குப் பிரச்சாரம் செய்வதற்கு சம்பளம்…

ஜைட் இப்ராகிம் இப்போது பக்கத்தானை ஆதரிக்கிறார்

சமீபத்தில் முடிவுற்ற அம்னோ பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆவேசமான உரைகளால் நம்பிக்கை இழந்த கித்தா (Parti Kesejahteraan Insan Tanah Air) அதன் ஆதரவை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க தீர்மானித்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த கித்தா "ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக" எதிரணியின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளது. "எதிரணி வேட்பாளர்…

பாஸ் கட்சி தனது சமய உறுதி மொழியை ( bai’ah…

பாஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் பூர்த்தி செய்ய வேண்டிய  சமய உறுதி மொழியை ( bai'ah ) அந்தக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் விளக்கியுள்ளார். அது மூன்று துறைகளை உள்ளடக்கியிருப்பதாக அவர் சொன்னார். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் வேறு கட்சிகளுக்குத் தாவுவதை…

‘Darul kartun’ பேராக் அரச குடும்பத்தை அவமானப்படுத்துவதாகும் என்கிறார் மந்திரி…

'Perak Darul Kartun' என அழைத்ததின் மூலம் பேராக் டிஏபி செயலாளர் இங்கா கோர் மிங், மாநிலத்தையும் அரச குடும்பத்தையும் அவமானப்படுத்தியுள்ளதாக பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர் கூறுகிறார். தைப்பிங் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் அத்தகைய சொற்களைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. ஏனெனில் தலைவர் என்னும்…

புவா: கடந்த கால ஊழல்கள் தற்காப்புத் தளவாட ஒப்பந்தங்கள் ஆய்வு…

தற்காப்புச் செலவுகள் மீது இரு தரப்பு நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கான தேவையை நிராகரிக்க தற்காப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது, அதனிடம் வெளிப்படையான போக்கும் பொறுப்புணர்வும் இல்லை என்பதைக் காட்டுவதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். அந்த நிலை, அரசாங்கத்தின் உருமாற்றத் திட்டத்துக்கு முரணாக…

“நஜிப் ஒரே மலேசியாவுக்கு மரணச் சான்றிதழில் கையெழுத்திட்டு விடலாம்”

நேற்றிரவு ஷா அலாம் நிகழ்வு ஒன்றில் மலாய்க்காரர்களுக்கு ஆத்திரத்தை மூட்ட வேண்டாம் என மலாய்க்காரர் அல்லாதாருக்கு "பகைமைப்" போக்குடைய எச்சரிக்கையை விடுத்துள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை  பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சாடியிருக்கிறார். நஜிப் "ஒரு பாவமும் செய்யாத" மலாய்க்காரர் அல்லாதாருக்கு விடுத்த எச்சரிக்கையை உண்மையான…

“ஞானாசிரியர்கள்” தேவைதான், கர்பால்

டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங், மூத்த தலைவர்களை ஞானாசிரியர்கள் என்று குறிப்பிடுவது தகாது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் முன்னேற்றத்துக்கு இப்படிப்பட்ட மூத்தவர்களும் தேவைதான் என்றாரவர். ஞானாசிரியர்கள் என்ற சொல் தப்பாக அர்த்தம் செய்துகொள்ளப்படலாம் என்று கூறிய கர்பால், கட்சிக்கு அதிகாரத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவோர்தான் தேவையில்லை…

ராமசாமி: டிஏபி-க்கு ஞானாசிரியர்கள் தேவையில்லை

டிஏபியில் தேர்தல்களின்போது தொகுதிஒதுக்கீட்டை முடிவு செய்வது மத்திய செயலவை (சிஇசி) தான் என்பதால் "ஞானாசிரியர்கள்" தேவையில்லை என்று பினாங்கு டிஏபி துணைத்தலைவர் பி.ராமசாமி அறிவித்துள்ளார். கட்சி, 2012-இல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்குத் தயாராகிவரும் வேளையில் இட ஒதுக்கீட்டை எந்தவொரு தனிமனிதரும் முடிவு செய்யக்கூடாது.  டிஏபி தலைவர்கள் பலரும்…

பாஸ்: அரசாங்கச் சேவையில் “எதிர்ப்பு” உருவாகும்

அரசாங்கச் சேவையில் உயர் நிலைப் பதவிகளுக்கு "வெளி நிபுணர்கள்" நியமிக்கப்படுவதை அனுமதிக்கும் முறையை அரசாங்கம் கைவிட வேண்டும் என பாஸ் கூறுகிறது. காரணம் அத்தகைய நடவடிக்கை அரசாங்க ஊழியர்களிடையே ஆத்திரத்தை மூட்டி விடும் என அது தெரிவித்தது. அரசாங்கத்தில் உள்ளவர்கள் குறிப்பாக மூத்த பதவிகளில் உள்ளவர்கள் அமைதியாக இருக்க…

“பாலாய் போலீஸ் கெரிஞ்சி” பிகேஆர் தொகுதி ஒன்றில் வாக்காளர்

லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 2,180 அஞ்சல் வாக்காளர்களில் பிரச்னைக்குரிய 90க்கும் மேற்பட்ட பெயர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அந்தத் தகவலை அந்தத் தொகுதிக்கான பிகேஆர் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் வெளியிட்டார். "தேர்தல் ஆணையத்தின் இணையத் தளத்தில் இல்லாத 97 வாக்காளர்களின் பெயர்களை…

கூட்டத்துக்கு ஏற்றவாறு பல்லவியை மாற்றுவது நம்பிக்கையைக் கொடுக்காது

அம்னோ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் மலாய்க்காரர் அல்லாதாரை மிரட்டி அவமானப்படுத்துவதில்   உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மிஞ்சுவதற்கு வழி வகுத்த அதே மனிதர்களே மலேசியா பல இன நாடு எனப் பிரகடனம் செய்கின்றனர். துணைப் பிரதமர்: 'வெற்றி பெற்ற பல இன நாடுகளில் மலேசியாவும் ஒன்று' பகுத்தறிவு: இனவாதத்தைத் தூண்டி…