பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நிர்வாகத்தின் கீழ் ஊழல் வழக்குகளிலிருந்து பெரும் "சுறாக்களை" விடுவிப்பதாகக் கூறுவதை The Malaysian People’s Advocacy Coalition (Haram) கண்டித்துள்ளது. ஹராமின் பொதுச்செயலாளர் ஆதாம் நோர், துணைப் பிரதம மந்திரி அஹ்மத் ஜாஹித் ஹமிடி மற்றும் ரோஸ்மா மன்சோர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றிக்…
பாஸ்: ஏஜியை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும்
நாட்டின் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுக்கு எதிராக கூறப்படும் ஊழல் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாஸ் கோருகிறது. "அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஏஜியின் அலுவலகத்திற்கு இது ஒரு கரும்புள்ளியாகும்", என்று…
‘அகமட் சார்பைனியின் மரணத்தில் சூது ஏதுமில்லை’என நீதிமன்றம் தீர்ப்பு
சுங்கத் துறையின் மூத்த அதிகாரியான அகமட் சார்பைனி, எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோலாலம்பூர் அலுவலகக் கட்டிடத்தின் ஓரத்தில் நின்ற பின்னர் விழுந்ததாக கோலாலம்பூர் குரோனர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவரது மரணத்தில் எம்ஏசிசி சம்பந்தப்பட்டுள்ளதாக கூறும் வாதம் ஏற்கத்தக்கதல்ல என குரோனர் அய்ஸாத்துல் அக்மால்…
கீர்: மாளிகையை விற்குமாறு சம்சுடினை கட்டாயப்படுத்தியதில்லை
ஒரு மாளிகையை வாங்கிப் பின்னர் அதைத் தம்மிடம் விற்குமாறு ஒரு மேம்பாட்டாளரைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுவதை சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார், முகம்மட் கீர் தோயோ மறுத்தார். இன்று ஷா ஆலம் உயர்நீதி மன்றத்தில் தமக்கு எதிரான ஊழல் வழக்கில் சாட்சியமளித்த கீர், 2004-இல் ஒரு சந்திப்பின்போது டிடாமாஸ் இயக்குனர்…
‘கைரி அவர்களே, ஹுடுட் சட்டத்துக்காக திருத்தங்கள் கொண்டு வர கடைசி…
கிளந்தான் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் இளைஞர் பிரிவு வரவேற்றுள்ளது. "ஹுடுட் தொடர்பாக அம்னோவில் அதன் தலைவர் உட்பட முக்கிய நிலைகளில் உள்ள உறுப்பினர்கள் பின்பற்றுகிற நிலைக்கு மாறாக…
ஹுடுட் பிரச்னையால் பக்காத்தான் ‘நிலை குலையாது’.
கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் யோசனை காரணமாக பக்காத்தான் ராக்யாட் கூட்டணி நிலை குலையாது. இவ்வாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஹுடுட் விவகாரத்தை வரும் புதன் கிழமை அந்தக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் விவாதிக்கவிருக்கும் வேளையில் மூன்று கட்சிகளின் தலைமைச்…
அந்தப் பேட்டியின் எழுத்துப் படிவம், லிம் ஜோகூரை பழிக்கவில்லை என்பதை…
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலிக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வழங்கிய பேட்டியின் எழுத்துப் படிவம், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிக் கொள்வது போல அவர் ஜோகூர் பாதுகாப்பு குறித்து எதுவும் கூறவில்லை என்பதை மெய்பிக்கிறது. முஹைடின் சொன்னது தவறு என்பதை காட்டுவதற்காக, ஆசிய நடப்பு …
“கிளந்தானியர் பலரும் ஹூடுட் சட்டத்தை விரும்புகிறார்கள்”
கிளந்தானுக்கு மேற்கொண்ட வருகை ஹூடுட் சட்டம் பற்றி அம்மாநில மக்கள் கொண்டுள்ள கருத்தை அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் அரசமைப்பு வல்லுனர் ஒருவர். “ஹூடூட் பற்றி தோக் குருவிடம் (கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்) எடுத்துரைக்க கிளந்தான் சென்றேன். அங்கு சாதாரண மக்களிடம் பேசிப்…
சொத்துவிலை உயரும், மேம்பாட்டாளர்கள்
ஜூலை மாதம் மலேசிய முழுக்க சொத்து மேம்பாட்டாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பாதிக்கு மேற்பட்டோர் கட்டுமானப் பொருள்களின் விலை உயர்ந்திருப்பதால் சொத்துவிலை அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆய்வில் பங்குகொண்வர்களில் பாதிக்கு மேற்பட்டோர், இவ்வாண்டு மேம்பாட்டு பணிகளைத் தொடங்கும்போது சொத்து விலைகளை 15 விழுக்காடு அதிகரிக்க எண்ணம் கொண்டிருப்பதாகக் கூறினார்கள் என…
கள்ளக்குடியேறிகள் மீது ஆர்சிஐ? அது, வெறும் கனவு
“நேர்மையானவர்கள் என்றால் மனம்போனபடி கள்ள அடையாள அட்டைகளை வாரிக் கொடுத்து நாட்டின் பாதுகாப்புக்கே மிரட்டலை ஏற்படுத்தியுள்ள அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.” சாபாவில் கள்ளக்குடியேறிகள் மீது ஆர்சிஐ அமைக்கப்படும் வாய்ப்பு உண்டு என்கிறார் முகைதின் கேஎஸ்என்: சாபாவில், மகாதிர் முகம்மட்/ஹாரிஸ் சாலே காலத்தில்…
மாட் சாபு சொற்பொழிவு நிகழ்வில் சிரம்பான் போலீஸ்காரர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனரா?
"அன்று இரவு தமது கடமையைச் செய்யத் தவறியதற்காக போலீஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அல்லது அதுதான் நோக்கமா?" மாட் சாபு சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கலவரத்தில் பலர் காயமுற்றனர் பெர்ட் தான்: பாஸ் சொற்பொழிவு நிகழ்வில் பெர்க்காசா ஏன் அத்துமீறி நுழைந்தது?…
லிம் குவான் எங்: பெர்னாமா மன்னிப்பு கேட்க வேண்டும்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், 'தவறான செய்திகளையும் பொய்களையும்' பரப்பியதற்காக பெர்னாமா நிபந்தனையற்ற பொது மன்னிப்புக் கேட்பதுடன் அந்தச் செய்தியையும் மீட்டுக் கொள்ள வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கையை அது எதிர்நோக்க வேண்டும் என எச்சரித்துள்ளார். செப்டம்பர் 20ம் தேதி ஆஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்…
ஹுடுட் சட்டம் மீது அம்னோ போடும் ‘வேடத்தை’ அன்வார் சாடுகிறார்
ஹுடுட் விவகாரத்தில் அம்னோ போடும் வேடத்தை அன்வார் சாடியிருக்கிறார். முஸ்லிம் அல்லாத மக்கள் கூடியிருக்கும் போது அந்த விஷயத்தை அம்னோ தாழ்வாகப் பேசுகின்றது. அதே நேரத்தில் பக்காத்தானை "சமயத் துரோகிகள்" என்றும் "முஸ்லிம் அல்லாதாருடன் ஒத்துழக்கிறது" என்றும் அது தாக்கிப் பேசுவதாக அனவார் குறிப்பிட்டார். "அரசியல் ஆதாயத்துக்காக ஹுடுட்…
ஹுடுட் சட்டம்: பக்காத்தான் தலைவர்கள் புதன் கிழமை விவாதிப்பர்
உணர்வுகளைத் தூண்டக் கூடிய ஹுடுட் பிரச்னை மீது எழுந்துள்ள அண்மைய சர்ச்சை பற்றி பக்காத்தான் தலைவர்கள் வரும் புதன் கிழமை தங்களது மாதக் கூட்டத்தில் விவாதிப்பர். பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பிகேஆர் நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்தத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.…
மாட் சாபு கூட்டத்தில் அமளி: பலர் காயமுற்றனர்
நேற்றிரவு சிறம்பானில் நடந்த ஒரு கூட்டத்தில் இரு பாஸ் உறுப்பினர்கள் காயமுற்றனர். இது அக்கூட்ட்டம் நடந்த இடத்திற்கு எதிரில் மலாய் உரிமைகள் ஆதரவு அமைப்பான பெர்காசா நடத்திய ஓர் எதிர்ப்பு ஆர்பாட்டத்தால் நிகழ்ந்தது. இது ஒரு ஹரிராயா-செராமா நிகழ்ச்சி. இரவு மணி 9.00 க்கு தொடங்கவிருந்தது. ஆனால் மணி…
உண்மையான விசுவாசிகளை வரலாறு புறக்கணித்து விட்டது என்கிறார் கல்வியாளர்
நாட்டின் சுதந்திர வரலாறு பற்றிய விவாதம் நீடிக்கிறது- நாடு உண்மையிலேயே காலனித்துவ ஆட்சியில் இருந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அந்த வேளையில் நாட்டின் சுதந்திரத்திற்கு உண்மையில் போராடிய "விசுவாசிகள்" பற்றியும் "பாசாங்கு செய்கின்றவர்கள்" பற்றியும் விளக்க கல்வியாளரான குவா கியா சூங் முயன்றுள்ளார். ஆகவே யார் "விசுவாசிகள்" யார்?…
நஜிப், வாக்களியுங்கள் என்ற Undilah வீடியோவை புறக்கணிப்பதை ஏற்க முடியாது
'அந்த வீடியோவில் கட்சி சார்புடைய விஷயங்கள் ஏதுமே இல்லை. அம்னோவை அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் வாட்டுகிறது. அதனால் அது தனது சொந்த நிழலைக் கண்டு கூட பயப்படுகிறது' வாக்களியுங்கள் என்ற 'Undilah' வீடியோவை திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்கவில்லை’ பெண்டர்: அந்த 'Undilah' வீடியோவை நாட்டிலுள்ள…
ஹூடுட் சட்டம் குறித்து விவாதிக்க அவசரக் கூட்டம் நடத்த டிஎபி…
ஹூடுட் சட்டம் அமலாக்கப்பட வேண்டும் என்ற பாஸ் கட்சியின் சர்ச்சைக்குரிய திட்டம் குறித்து விவாதிக்கவும் ஒரு முடிவு எடுக்கவும் ஓர் அவசரக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று டிஎபி பக்கத்தான் கூட்டணியைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஓர் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப்படுவதை தமது கட்சி எப்போதுமே எதிர்க்கும் என்று கூறிய டிஎபியின்…
பிஎன் கள்ள நண்பர்களுக்குத்தான் சிலாங்கூர் பக்கத்தான் ஆட்சி சித்திரவதையாகும்
மாநில பக்கத்தான் ஆட்சி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு சித்திரவதையாகத்தான் இருந்துள்ளது என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறியதை அதாவது "அம்னோ-பிஎன் கள்ள நண்பர்களுக்கு", சிலாங்கூர் அரசு ஏற்றுக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளது. "இத்துறையினர் (பக்கத்தான் ஆட்சியின் கீழ் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள்) அம்னோ-பிஎன்னின் கள்ள நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினருமாவர். இவர்கள் …
அம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருது
மனித உரிமைக்காக வாதாடும் மலேசிய பெர்சே 2.0 இயக்கத்தின் தலைவரான அம்பிகாவின் சேவையை அங்கீகரித்து அவருக்கு பிரான்ஸ் அந்நாட்டின் மிக உன்னத செவாலியர் (Chevalier de Legion d'Honneur) விருதை வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விருது அந்நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதாகும். நேற்று, கோலாலம்பூர் பிரன்ச் தூதரகத்தில் அவ்விருதை…