பொதுத் கசையடியை அனுமதிக்கும் சட்டங்களை மறுபரிசீலனை செய்து திருத்தம் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் திரங்கானு அரசாங்கத்தை மலேசியன் வழக்கறிஞர் மன்றம் வலியுறுத்தியுள்ளது. நாளைத் திரங்கானுவில் உள்ள மசூதியில் உடல் ரீதியான தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த அழைப்பு வந்துள்ளது. பொது ஒழுக்கம் மற்றும் சமூக…
எம்சிஎம்சி விளக்கம் மீது வீடியோ தயாரிப்பாளர் ஆத்திரமடைந்துள்ளார்
வாக்களியுங்கள் என்ற 'Undilah' பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவை தயாரித்த பீட் தியோ, அந்த வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு வழங்கியுள்ள உத்தரவு குறித்து மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) அளித்த விளக்கம் மீது ஆத்திரமடைந்துள்ளார். அந்த பொதுச் சேவை ஒளிநாடா ஒளிபரப்பாவதற்கு முன்னரே…
பேராக் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள பிரதமர் பஸ்ஸில் சென்றார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடு முழுவதும் தாம் மேற்கொண்டு வரும் பயணத்தின் ஒரு பகுதியாக பேராக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பஸ்ஸில் புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் அவரது குழுவினரும் பஸ்ஸில் பயணம் செய்தனர். "வழக்கமாக காரில் செல்வோம். இந்த…
இசா சட்டத்தை ரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூர் நிராகரிக்கிறது
சிங்கப்பூரில் விசாரணை இல்லாமல் தடுத்து வைப்பதற்கு வகை செய்யும் பிரிட்டிஷ் காலனித்துவச் சட்டம் ஒன்றை ரத்துச் செய்யுமாறு முன்னாள் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை அந்த நாட்டு அரசாங்கம் நிராகரித்துள்ளது. அந்த முன்னாள் இசா கைதிகள் 'கீழறுப்பு நடவடிக்கைகளுக்காக' தடுத்து வைக்கப்பட்டனரே தவிர அவர்களுடைய அரசியல் சிந்தனைகளுக்காக அல்ல…
மாட் சாபுவை நோபள் பரிசு பெற்ற இலக்கியவாதி ஒருவருடன் ஒப்பிடுகிறார்…
பாஸ் துணைத் தலைவர் மாட் சாபுவை, துருக்கிய வரலாறு குறித்து துணிச்சலாகப் பேசிய நோபள் பரிசு பெற்ற அந்த நாட்டு இலக்கியவாதியான ஒர்ஹான் பாமுக்-குடன் பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். "நோபள் பரிசு பெற்றவரான ஒர்ஹான் பாமுக் முதலாவது உலகப் போரின் போது ஆர்மினியர்கள்…
‘Undilah’ வீடியோவை திரைப்படத் தணிக்கையாளர்கள் ‘இன்னும் அங்கீகரிக்கவில்லை’
வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும் சர்ச்சைக்குரிய வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் எனத் தான் உத்தரவிட்டதற்கான காரணத்தை மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் (எம்சிஎம்சி) விளக்கியுள்ளது. இசைக் கலைஞர் பீட் தியோ தயாரித்த நான்கரை நிமிடங்களுக்கு ஒடும் அந்த பொதுச் சேவை அறிவிப்பு வீடியோவுக்கு திரைப்படத்…
எப்படி நல்ல திருடர்களாக இருப்பது என திருடர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்
"உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என்பது இங்கு கேள்வியே அல்ல. நீங்களும் மக்களைப் போல ஏழைகள் என்று அவர்களை ஏமாற்ற வேண்டாம் என்பதே முக்கியம்." உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம் என மகாதீர் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை யார்…
மனோகரன் ஆறு மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்
தேசியக் கொடி மீது சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததற்காக கோத்தா அலம் ஷா சட்டமன்ற உறுப்பினர் எம் மனோகரனை டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் குழு ஆறு மாதத்திற்கு இடைநீக்கம் செய்துள்ளது. கோலாலம்பூரில் உள்ள டிஏபி தலைமையகத்தில் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நீடித்த ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்குப் பின்னர்…
பெர்க்காசா: ஹுடுட் மீதான பாஸ்-டிஏபி பிணக்கு வெறும் ” நாடகம்…
ஹுடுட் சட்டம் மீதான பாஸ்-டிஎபி பிணக்கு வெறும் நாடகம், அந்த இஸ்லாமியக் கட்சிக்கு மலாய் ஆதரவை அதிகரிப்பதே அதன் நோக்கம் எனப் பெர்க்காசா கூறுகிறது. பாஸ் கட்சிக்கு மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பதை உறுதி செய்வதற்காக அந்த இரண்டு எதிர்க்கட்சிளும் தங்களுடைய பழைய நாடகத்தை மறு அரங்கேற்றம் செய்கின்றன…
தொழில்நுட்பக் குறைகளைச் சரிசெய்க, பெர்சே
தேர்தல் சீரமைப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி), சீரமைப்புகளை ஆராய்வதுடன் தேர்தல் ஆணைய(இசி)த்திலும் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி)யிலும் ஏற்படும் தொழில்நுட்பக் குறைகளுக்குத் தீர்வு காணவும் முயல வேண்டும். இவை கவலை தருவதாக பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் ஏ.சுப்ரமணியம் பிள்ளை இன்று கூறினார். மாற்றரசுக் கட்சியும்…
சாமிவேலுவுக்கு எதிரான வழக்கைப் பேசித் தீர்க்க முடிவு
மாஜு கல்வி மேம்பாட்டுக் கழக(எம்ஐஇடி) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பி.சித்ரகலா மஇகா முன்னாள் தலைவருக்கும் மேலும் இருவருக்கும் எதிரான அவதூறு வழக்குகளைப் பேசித் தீர்த்துக்கொள்வது பற்றி ஆலோசித்து வருகிறார். தம் கட்சிக்காரர் நீதிமன்றத்துக்கு வெளியில் விவகாரத்துக்குத் தீர்வுகாண விரும்புவதாக அவரின் வழக்குரைஞர் பிரகாஷ் லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.…
‘Undilah’ வீடியோ மீட்டுக் கொள்ளப் பட்டதை எம்சிஎம்சி விளக்க வேண்டும்
வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு ஊக்கமூட்டும், கட்சிச் சார்பற்ற வீடியோவை ஒளிபரப்ப வேண்டாம் என உள்ளூர் ஒளிபரப்பு நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் விளக்க வேண்டும் என லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கேட்டுக் கொண்டுள்ளார். ""பொதுச் சேவை அறிவிப்பான வாக்களியுங்கள் (…
நகல் வாக்காளர் பட்டியலிலிருந்து 200 அந்நியர்கள் நீக்கப்படுவர்
சிலாங்கூர் பாயா ஜாராஸ் சட்டமன்றத் தொகுதிக்கான 2011ம் ஆண்டு இரண்டாவது கால் பகுதிக்கான நகல் துணை வாக்காளர் பட்டியலிலிருந்து குடிமக்கள் அல்லாத 220 பேரை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் உள்ளூர் பாஸ் தொகுதி ஆட்சேபம் தெரிவித்த 222 பெயர்கள் மீது…
பினாங்கு முதலமைச்சர் பதவி மீது ஆரூடங்கள் வேண்டாம் என்கிறார் கோ
பொதுத் தேர்தலுக்கான தேதியைப் பிரதமர் அறிவிக்கும் வரையில் பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என பிரதமர் துறை அமைச்சர் கோ சூ கூன் எல்லாத் தரப்புக்களையும் வேண்டிக் கொண்டுள்ளார். வளர்ச்சித் திட்டங்கள் மீதும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் பொருத்தமான வேட்பாளர்களுடைய…
உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறாரே…
தூதுவன்: இண்ட்ராஃப் மனித உரிமை கட்சியின் உதயகுமார் எல்லாரையும் ‘மண்டோர்’ என்று சாடுகிறா Read More
நஜிப் கழுத்தைச் சுற்றியுள்ள கழுகுகள்
இந்த விவகாரம் நஜிப்பின் நம்பகத்தன்மை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அவர் தலைமை தாங்கும் அரசியல் கட்சியும் பெரிய முட்டுக் கட்டை ஆகும். அந்த ஜமீன்தார்கள் புதிய பொருளாதாரக் கொள்கையில் ஊறிப்போய் பயனடைந்தவர்கள். அவர்களுக்கு எப்படி விரைவாக பணக்காரராவது மட்டுமே தெரியும். நஜிப் உண்மை நிலைக்கும் கானல் நீருக்கும் இடையில் அல்லாடுகிறார்…
பொருளாதார மந்த நிலை குறித்த அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளது
உலகளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படக் கூடும் என்னும் அச்சத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "வால் ஸ்டீரிட் என்ற நியூயார்க் பங்குச் சந்தை கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது உங்களுக்குத் தெரியும். ஆகவே நாம் சூழ்நிலையை மிகவும் அணுக்கமாக கவனிக்க வேண்டியுள்ளது," என அவர்…
சடலம் குறித்த தகராற்றில் புதிய திருப்பம்
இஸ்லாத்துக்கு மதம் மாறியவர் எனக் கூறப்படும் லாரன்ஸ் செல்வநாதனுடைய சடலத்தை அவரது நண்பர்கள் சுயமாக செயல்பட்டு உடலைத் தகனம் செய்து விட்டதால் லாரன்ஸின் குடும்பத்துக்கு புதிய பிரச்னைகள் தோன்றியுள்ளன. இறுதிச் சடங்களுக்காக லாரன்ஸின் சடலத்தை சிரம்பானில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குக் கொண்டு சென்ற அவரது நண்பர்கள் அந்த சடலத்தித்…
கோ: பினாங்கு முதலமைச்சர் குறித்து ஊகங்கள் வேண்டாம்
பினாங்கு முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் குறித்து ஊகிப்பதில் அளவுமீறி பரபரப்பு காண்பிக்க வேண்டாம் என்று பிரதமர்துறை அமைச்சர் கோ சூ கூன் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்கள், பிரதமர் பொதுத்தேர்தல் தேதியை அறிவிக்கும்வரை காத்திருக்க வேண்டும். கெராக்கான் தலைவருமான கோ, கட்சிக்கென தனி வியூகம் இருப்பதாகவும் அது திட்டங்களிலும்…
ஹூடூட் சட்டம் கொண்டுவந்தால் மசீச அம்னோவைவிட்டு விலகிச்செல்லும்
மசீச, தன் ஹூடுட்-எதிர்ப்பு நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அம்னோ, இஸ்லாமிய சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்தால் நீண்டகாலத் தோழமைக் கட்சியான அதைவிட்டுப் பிரிந்து செல்லவும் தயாராக இருப்பதாக அது தெரிவித்தது. “அம்னோ ஹூடுட் சட்டத்தைக் கொண்டுவர முனைந்தால் மசீச அதற்கு உடந்தையாக இராது”, என்று கட்சித் தலைவர் டாக்டர் சுவா…
பிகேஆரும் தேர்தல் வேட்பாளர்களும்
பிகேஆர் ஒரு புதிய கட்சி என்பதால் கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களில்-2004 இலும் 2008 இலும்-வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களைத் தேடிப் பிடிப்பது அதற்குப் பெரும்பாடாக இருந்தது. அது, அப்போது. இப்போது அப்படி இல்லை என்கிறார் பினாங்கு பிகேஆர் தலைவர் மன்சூர் ஒஸ்மான். தகுதியான வேட்பாளர்கள் குவிந்து கிடக்கிறார்கள். யாரைத் தேர்வு…
இறந்தவர் முஸ்லிமா?
[2-ம் இணைப்பு] இன்று பிற்பகல் மணி 3.00 க்கு மரணமுற்ற லாரன்ஸ் செல்வநாதன், 33, என்பவரின் உடல் சிறம்பானிலுள்ள தேவாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சடங்குகள் முடிவுற்ற பின்னர் அடக்கம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், போலீசாரும் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகார இலாகா அதிகாரிகளும் அவரது குடும்பத்தினரை அவ்வாறு…
உங்கள் செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டாம், மகாதீர்
ஆளும் கூட்டணி ஊழல் நிறைந்தது என்னும் எண்ணத்தை மாற்றுவதற்கு உங்கள் தோற்றத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வளப்பத்தை செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காண்பிக்காதீர்கள் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பிஎன் தலைவர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட கோலா சிலாங்கூரில் கூடியுள்ள 400 பிஎன்…
கிளந்தானில் ஹூடுட் சட்டத்துக்கு அன்வார் ஆதரவு
கிளந்தானில் ஹூடுட் சட்டம் செயல்படுத்துவதைத் தனிப்பட்ட முறையில் தாம் ஆதரிப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். அது முஸ்லிம்-அல்லாதாரின் உரிமைகளை மீறாது என்றும் அதில் நீதி நிர்வாகத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் சொன்னார். “கொள்கை அளவில் அதை அங்கு செயல்படுத்தலாம் என்றே நம்புகிறேன்.நீதி நிர்வாகம்…