கருத்துக்கணிப்பு: இளைஞர் ஆதரவு பிஎன் பக்கமே

இளைஞர்களின் ஆதரவு பக்காத்தான் ரக்யாட்டைவிட பிஎன்னுக்கே மூன்று விழுக்காடு சாதகமாகவுள்ளது. சுயேச்சை ஆராய்ச்சி அமைப்பான ஸெண்ட்ரம் முன்னோக்கிய ஆய்வியல் மையத்தின் நிறுவனர் அபு ஹசான் ஹஸ்புல்லா இவ்வாறு கூறுகிறார். நேற்றிரவு கோத்தா பாருவில் “13-வது பொதுத் தேர்தல்:பிஎன்-னா, பக்காத்தானா” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய அபு ஹசான்,…

ஐஜிபி, போலீஸ் மீது கிளந்தான் இளவரசர் 150 மில்லியன் ரிங்கிட்…

கிளந்தான் இளவரசர் தெங்கு முகமட் பாக்ரி பெத்ரா சுல்தான் இஸ்மாயில்,  தம்மை தவறாகத் தடுத்து வைத்திருந்தற்காக ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் மற்றும் மூவர் மீது 150 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரி வழக்குத் தொடர்ந்திருக்கிறார். ஐஜிபி இஸ்மாயில் ஒமார், ஏஎஸ்பி நோராஸ்மான் இஸ்மாயில், முன்னாள்…

“ஹசான் அலி வேட்பாளராக நிறுத்தப்பட மாட்டார்?”

முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி தமது கோம்பாக் செத்தியா சட்ட மன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போட்டியிட உள்ளூர் கிளைகளிடமிருந்து போதுமான நியமனங்களைப் பெறவில்லை என்பதை சிலாங்கூர் பாஸ் உறுதி செய்துள்ளது. ஒவ்வொரு தொகுதியும் மூன்று நியமனங்களைச் சமர்பிக்கும். பின்னர் அதனைக் கட்சி மத்தியத்…

லிம் குவான் எங்-கும் துணை முதலமைச்சர்களும் இன்று ஸ்கோர்ப்பியோன் நீர்…

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது துணை முதலமைச்சர்களான மான்சோர் ஒஸ்மான், பி ராமசாமி ஆகிய மூவர் மட்டுமே  இன்று ஸ்கோர்ப்பியோன் நீர் மூழ்கிக் கப்பலில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவர். கேடி துன் ரசாக் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கி, முக்குளிக்க முடியும் என்பதை நேரடியாகக் காண்பதற்கு…

“நஜிப் மலாய் தீவிரவாதியாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் பெரிதும்…

"நஜிப் ஒரு நாள் ஒரே மலேசியா சிந்தனையில் இருக்கிறார். அடுத்த வாரமே மலாய் மேலாண்மை சிந்தனையைத் தொடுகிறார்." "நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது" டாக்ஸ்: நஜிப், மலாய் தீவிரவாதியாக இருக்கலாம், ஆனால் நிச்சயம் அவர் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறார். நஜிப் ஒரு நாள்…

ராமசாமி அவர்களே, நீங்கள் எல்லா இனங்களுக்கும் துணை முதலமைச்சராக விளங்க…

"நம் நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது இது தான்.... எல்லாவற்றையும் சமூகக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை நாம் நிறுத்திக் கொள்ள வேண்டும்." வருவது வரட்டும் என்கிறார் ராமசாமி நியாயமானவன்: இணக்கமில்லை என அனைவரும் ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அது ஆக்கப்பூர்வமான, நாகரீகமான, சுமூகமான முறையில் ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தாமல் செய்ய…

நமது கல்விமான்கள் பேசுவதற்கு மிகவும் பயப்படுகிறார்கள்

மலேசியாவின் உயர்நிலை கல்விக் கழகங்களில் ஒன்று கூட பல்கலைக்கழகம் என்றழைப்பதற்கான தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று வெளிப்படையாகப் பேசும் கல்விமான் அபு ஹஸ்ஸான் ஹஸ்புல்லா கூறினார். பல்கலைக்கழகங்களில் அறிவுக்கூட சுதந்திரம் இன்மை மற்றும் பொதுநல விவகாரங்களில் மௌனம் காத்தல் ஆகியவை குறித்து வருத்தம் தெரிவித்த மலாயா பல்கலைக்கழக இணைப் பேராசிரியர்,…

பாஸ்: என்எப்சி ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளையும் காரையும் நிலத்தையும்…

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தின் தொழில் சாராத சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு கூட்டரசு அரசாங்கம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்தச் சொத்துக்களில் ஆடம்பர அடுக்கு மாடி வீடுகள், விலை உயர்ந்த ஒரு கார், புத்ராஜெயாவில் நல்ல மதிப்புள்ள நிலம் ஆகியவை அடங்கும் என பாஸ் உதவித் தலைவர்…

புவா: 29,000 அரசு ஊழியர்களை நீக்கப் போவது பிஎன் அரசாங்கமே

அடுத்த ஆண்டு அரசாங்க ஊழியர் எண்ணிக்கையை 29,000 குறைப்பதற்கு திட்டமிட்டுள்ளது பாரிசான் நேசனல் அரசாங்கமே தவிர எதிர்க்கட்சிகள் அல்ல என பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் "அரசாங்கச் சேவையை பாதியாகக் குறைக்க" எதிர்க்கட்சிகள் விரும்புவதாக அண்மையில் பெக்கிடா எனப்படும் மலேசிய…

சுவாராம் மனித உரிமைகள் மீது நஜிப்புக்கு 10க்கு 4 மதிப்பெண்களை…

இவ்வாண்டு பல சிவில் சமூக இயக்கங்களை ஒடுக்குவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளில் மனித உரிமைகளை அத்துமீறியதற்காக அரசாங்கம் கடுமையாக குறை கூறப்பட்டுள்ளது. மக்களுடைய உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கீழ் இயங்கும் அரசாங்கம் தவறி விட்டதாக சுவாராம் என அழைக்கப்படும் மனித உரிமை போராட்ட அமைப்பான சுவாரா…

“போலீஸ் மீது அவதூறு கூறியதற்காக அஸ்மின் விசாரிக்கப்படுகிறார்”

போலீஸ் மீது அவதூறு கூறியதாக சொல்லப்படுவது தொடர்பில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி விசாரிக்கப்படுகிறார். அந்தத் தகவலை பெரித்தா ஹரியான் நாளேட்டிடம் ஜோகூர் போலீஸ் தலைவர் முகமட் மொக்தார் முகமட் ஷரிப் உறுதி செய்தார்.  செய்தி இணையத் தளம் ஒன்றில் அஸ்மினுடைய கருத்துக்கள் வெளியானதைத் தொடர்ந்து அந்த…

“சாமிவேலு புதல்வர் சுங்கை சிப்புட்டில் போட்டியிடுவார்”

மஇகா-வின் எஸ் வேள்பாரி, சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடக் கூடும். 2008ம் ஆண்டு அந்த தொகுதியில் அவரது தந்தை எஸ் சாமிவேலு தோல்வி கண்டார். அரசியலுக்குப் புதுமுகம் எனக் கருதப்படும் வேள்பாரியுடன் முதன் முறையாக மஇகா மத்தியச்  செயற்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 41 வயது ஏ சக்திவேல்,…

வருவது வரட்டும் என்கிறார் ராமசாமி

சர்ச்சையில் சிக்கிக்கொண்டிருக்கும் பி.ராமசாமி, துணை முதல்வர் பதவியைத் தாம் “கெஞ்சிக் கூத்தாடி” பெற்றதாகக் கூறியுள்ள கட்சியின் சக தோழர் ஒருவரைச் சாடியுள்ளார். துணை முதல்வர் பதவியைக் கெஞ்சிக் கூத்தாடிப் பெற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றார் ராமசாமி. ஏனென்றால், மாநில அரசில் இந்தியர்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கொடுக்க…

ஆய்வு: நஜிப்பையும் பிஎன்-னையும் சிறுபான்மையினர் சாதகமாக பார்க்கின்றனர்

மலேசியாவில் வாழ்கின்ற ஆறு சிறுபான்மை இனங்களான- இந்திய முஸ்லிம்கள், போர்த்துக்கீசியர்கள், பாபா நோன்யா. ஒராங் அஸ்லி, சயாமியர்கள், சிட்டி ஆகியவற்றைச் சேர்ந்த இளைஞர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரது அணுகுமுறையையும் சாதகமாக பார்க்கின்றனர். மலேசியா புத்ரா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மனுக்குல ஆய்வியல் வல்லுநர் டாக்டர் சார்ஜித் சிங்…

“நஜிப்பின் பெக்கிடா உறவுகள் அவர் மலாய் தீவிரவாதி என்பதை நிரூபிக்கிறது”

பெக்கிடா எனப்படும் மலேசியப் பிரச்சார நலன் சங்கத்துக்கு அம்னோ தலைவர் நஜிப் ரசாக் அளித்துள்ள வெளிப்படையான அங்கீகாரம்,  தமது மிதவாதக் கோட்பாட்டையும் ஒரே மலேசியா வாதத்தையும் கை கழுவி விட்ட மலாய்த் தீவிரவாதி அவர் என்பதற்குத் தக்க சான்று என சிலாங்கூர் பாஸ் கட்சி சாடியுள்ளது. "பெக்கிடா நிகழ்வில்…

அமைதிப்பேரணி மசோதாவை ஐநா கண்டித்தது

அமைதிப் பேரணி மசோதா, தெரு ஆர்ப்பாட்டங்கள் உள்பட பொதுமக்கள் அமைதியாக ஒன்றுகூடுவதை மட்டும் கட்டுப்படுத்தவில்லை, பேரணி பற்றி ஊடகங்கள் செய்தி சேகரிப்பதையும் நிபந்தனைகளுடன்தான் அனுமதிக்கிறது என்று ஐநா மனித உரிமை அமைப்பு, கண்டித்துள்ளது. அம்மசோதவாவை வரைவதில் மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாமுடன் ஆலோசனை கலக்கப்படாதது குறித்து ஐநா…

உத்துசான் “பத்து அப்பி” (பற்ற வைக்கும்) வேலையைச் செய்கிறது

"உத்துசான் மலேசியா ஹசானை அவரது தோழர்களுக்கு எதிராகத் தூண்டி விடுகிறது. அதனால் சிலாங்கூரில் உள்ள மலாய் முஸ்லிம்கள் அதற்கு பலியாகி விடுவர் என அது நம்புகிறது."  ஹசான் அலி சிலாங்கூரைக் காப்பாற்றுவார் என உத்துசான் கூறுகிறது இரண்டு காசு மதிப்பு: ஹசான் அலி நல்லதையும் கெட்டதையும் ஒன்றாக கொண்டு…

மலேசியாகினியும் மலாய் மெயிலும் கைகோர்த்தன

மலேசியாகினியும் மலாய் மெயிலும் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும். இதற்கான உடன்பாடு இன்று காணப்பட்டது. இதன்வழி நாட்டின் மிகப் பழைய ஆங்கில நாளேடும் 12-அண்டுகள் நிரம்பிய அரசியல் செய்தித்தளமும் ஒன்று சேர்கின்றன. இதன்படி அடுத்த மாதத்திலிருந்து காசுக்கு விற்கப்படும் காலை நாளேடாக மறுவெளியீடு காணவுள்ள மலாய் மெயில், மலேசியாகினியில் வெளிவரும் செய்திகளையும்…

“சிறை உடைப்போம்” என்ற அஸ்மினிடம் போலீஸ் விசாரணை?

கடந்த மாதம் பிகேஆர் காங்கிரஸின்போது ஆற்றிய உரை தொடர்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை ஜோகூர் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். “எந்தப் பேச்சு பற்றி, எந்தச் சட்டத்தின்கீழ் விசாரணை, வாக்குமூலம் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை”, என்று அஸ்மினின் சிறப்பு அதிகாரி ஹில்மான் இதாம் மலேசியாகினியிடம் கூறினார். இன்று…

“அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ-யை அமைப்பது பற்றி அரசாங்கம்…

சபா அடையாளக் கார்டு திட்டம் மீது அரச விசாரணை ஆணையத்தை அமைப்பதா இல்லையா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என பிரதமர் துறை துணை அமைச்சர் லியூ வூய் கியோங் கூறுகிறார். என்றாலும் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அடுத்த ஆண்டு தனது முழு…

பிகேஆராலும் டிஏபி-யாலும் ஹூடுட்டைத் தடுக்க முடியாது, மசீச

கிளந்தானில் ஹூடுட் சட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதற்கு எதிராக பாஸின் தோழமைக் கட்சிகளான பிகேஆரும் டிஏபியும் எதுவும் சொல்ல முடியுமா என்பது சந்தேகமே என்கிறார் கிளந்தான் மசீச செயலாளர் டான் கென் டென். இன்று ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்த டான், கிளந்தானில் ஒரு காப்பிக்கடை பணிப்பெண் கைகள் தெரிய உடை…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை ஜனவரி 9 முதல்…

பினாங்கு கொடி மலை ரயில் சேவை பராமரிப்பு, சோதனை நடவடிக்கைகளுக்காக அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதிலியிலிருந்து 15ம் தேதி வரை- அதாவது ஏழு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும். வழக்கமாக நடத்தப்படும் அந்த ஆண்டு பராமரிப்பு வேலைகளுக்குப் பின்னர் அந்த ரயில் சேவை வழக்கம் போல் நடத்தப்படும்…

அழியா மையை சோதனை செய்ய இரசாயனத் துறை தயார்

வரும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவிருக்கும் அழியா மையில், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ள பொருட்கள் ஏதும் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிய சோதனை நடத்துவதற்கு இரசாயனத் துறை தயாராக இருக்கிறது. இவ்வாறு அதன் தலைமை  இயக்குநர் அகமட் ரிட்சுவான் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார். என்றாலும் அந்தச் சோதனையை நடத்துவதற்கான உத்தரவு எதனையும்…