முன்னாள் சட்ட அமைச்சர் ஜைத் இப்ராஹிம், நியமன ஊழலில் சிக்கியதாகக் கூறப்படும் மூத்த நீதிபதியை நீக்குவது நீதித்துறை அமைப்பிற்குள் உள்ள பரந்த பிரச்சினைகளைத் தீர்க்குமா என்று ரஃபிஸி ரம்லி மற்றும் நூருல் இஸ்ஸா அன்வார் பதிலளிக்குமாறு சவால் விடுத்துள்ளார். இரு தலைவர்களும் வி.கே. லிங்கம் ஊழலுடன் ஒப்பிட்டுப் பார்த்ததால்,…
நிக்கோல் தலைசிறந்த, வெற்றி பெற்ற விளையாட்டுச் சின்னம் எனப் பிரதமர்…
தேசிய ஸ்குவாஷ் விளையாட்டாளரான நிக்கோல் ஆன் டேவிட், நாட்டின் தலைசிறந்த வெற்றி பெற்ற விளையாட்டு வீராங்கனை என பிரதமர் புகழாரம் சூட்டியிருக்கிறார். தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக அவர், உலக ஸ்குவாஷ் விருதைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது ஈடு இணையில்லாதது என்றும் அவர் வருணித்தார். புத்ராஜெயாவில் உள்ள தமது அலுவலகத்தில்…
துணைப் பிரதமர்: “வெற்றி அடைந்த பல இன நாடுகளில் மலேசியாவும்…
பல்வேறு துறைகளில் பல இன ஒத்துழைப்பை வலுப்படுத்துவதின் மூலம் நாட்டின் அமைதியையும் ஒத்துழைப்பையும் நிலை நிறுத்தும் போக்கைத் தொடர பாரிசான் நேசனல் அரசாங்கம் (பிஎன்) உறுதி பூண்டுள்ளது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறுகிறார். அரசியல் அதிகாரப் பகிர்வு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவையும் அந்த ஒத்துழைப்பில் அடங்கும்.…
நஜிப்பின் பேருரை, மூன்றாம் உலக மனப்போக்கின் உருவகம்
“அம்னோவின் நடத்தை பற்றி உயர்வான எண்ணம் என்றும் இருந்ததில்லை, என்றாலும் ஒரு பிரதமர் அவ்வளவு தரக்குறைவாக பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போனேன்.” "மடத்தனம் மிக்க" பாஸ் பக்காத்தானிலிருந்து வெளியேறத் தயரா- சவால் விடுகிறார் நஜிப் பெயரிலி_4041: அடக் கடவுளே! என்ன, பிரதமர் ஐயா, நஜிப் அப்துல் ரசாக்?…
“அம்னோவுக்கு பக்காத்தான் பதிலடி”
பக்காத்தான் கட்டுக்குள் உள்ள மாநிலங்களை மீண்டும் கைப்பற்றப் போவதாக சூளுரைக்கப்பட்டு போர் முரசு கொட்டப்பட்ட அம்னோ பொதுப் பேரவை முடிந்த மறு நாள், எதிர்க்கட்சிகளும் பதில் தாக்குதலை தொடங்கியுள்ளன. சிலாங்கூரைப் பக்காத்தான் தக்க வைத்துக் கொள்வதோடு அந்த மாநிலத்தில் தேர்தலில் கூடுதல் இடங்களையும் பெறும் என ஷா அலாமில்…
இந்தியர்களின் நலனைக் காக்கும் அரசாங்கம் வேண்டும் – சார்ல்ஸ்
பக்காத்தான் ராக்யாட் அளித்திருக்கும் உறுதிமொழிகள் அரசியல் தந்திரமானால் 53 ஆண்டு காலமாக தே.மு அரசாங்கம் அளித்து வரும் உறுதி மொழியை என்னவென்று சொல்வது என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்தியர்களின் நலம் பாராமல் இருந்த ஒரே காரணத்தால்தான்…
மலாய் வாக்குகளைக் கவரும் பொருட்டு மலேசியப் பிரச்னைகள் ஒதுக்கப்பட்டு விட்டன
"கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவுகள் கூடியிருப்பது, உலக அளவில் போட்டி அதிகரித்துள்ள வேளையில் நாட்டின் எதிர்காலம் ஆகியவற்றை அம்னோ பேராளர்கள் விவாதிப்பர் என நாகரீகமான ஒவ்வொரு மலாய்க்காரரும் சரியான சிந்தனை கொண்ட ஒவ்வொரு மலேசியரும் எதிர்பார்த்தனர்." அம்னோ: அளவற்ற மகிழ்ச்சியிலிருந்து கசப்பான உண்மை நிலைக்கு ஹெர்மன்கெய்ன்: அம்னோ தலைவர்கள்…
என்எப்சி திட்டத்தை ஆய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வழங்க சிலாங்கூர்…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் குறித்து புலனாய்வு செய்ய அந்நிய நிபுணர்களை வரவழைக்க நிதி ஒதுக்குவதற்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. நிர்வாக அல்லது நிறுவனக் குற்றங்களை புலனாய்வு செய்வதற்கு அத்தகைய அணுகுமுறையை பல வளர்ச்சி அடைந்த நாடுகள் பின்பற்றியுள்ளதாக சிலாங்கூர் மந்திரி…
இங் யென் யென்: தோல்வி கண்ட “கார் பார்க்” திட்டத்துக்கு…
பினாங்கு கொடி மலையின் அடிவாரத்தில் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு கார் நிறுத்துமிடத் திட்டம் தோல்வி கண்டதற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பொறுப்பேற்க வேண்டும் என சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கூறுகிறார். தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த இங்,…
புவா: KR1M பாலில் இ-கோலி கலந்துள்ளது குறித்து லியாவ் பேச…
KR1M என்ற கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளிலிருந்து சோதனைக்காகப் பெறப்பட்ட பால் மாதிரிகளில் இ-கோலி கலந்துள்ளதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை பற்றி பேச சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் மறுப்பதாக பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா குற்றம் சாட்டியுள்ளார். KR1M கடைகளிலிருந்து…
அம்னோ திருந்துவதற்கு இடமில்லாத காலத்திற்குப் பொருந்தாத கட்சி
"அதன் தலைவர்களைப் பொறுத்த வரையில் அனைத்து தேசியப் பிரச்னைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் ஆகியோரைச் சார்ந்துள்ளது." அம்னோ ஏன் டிஏபி-யைக் கண்டு அஞ்சுகிறது டிங்கி: நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அம்னோபுத்ராக்கள் தங்களை மட்டுமே வளப்படுத்திக் கொண்டு வருவதை கிராமப்புற மலாய்க்காரர்கள் உணர…
அடையாளக் கார்டு திட்டம் மீது ஆர்சிஐ அமைக்கப்படுவதை சபா எம்பி…
சபா அடையாளக் கார்டு திட்ட ஊழல் மீது ஆர்சிஐ என்ற அரச விசாரணை ஆணையம் நியமிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள போதிலும் அந்த மாநிலத்தில் அந்நியர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பிரச்னைக்கு அது தீர்வு காணும் வழி அல்ல என்று சபா…
“அம்னோ விரைவில் பல்கலைக்கழக வளாகங்களில் நுழைய முடியும்”
பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு அகற்றப்படுவதற்குத் தெரிவிக்கப்பட்டுள்ள யோசனையால் உள்நாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் அம்னோ நுழைவதற்கு வழி ஏற்படுத்தப்படும் என அம்னோ பொதுப் பேரவையில் பேராக் பேராளர் ஒருவர் கூறியிருக்கிறார். பாஸ் கட்சியைப் போல் அல்லாது அம்னோ சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ளும் க்ட்சியாகும் என…
“ஜிஎல்சி உயர் பதவிகளுக்கு அம்னோ அரசியல்வாதிகளை நியமிக்கக் கூடாது”
மலாய்க்காரர்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக ஜிஎல்சி என்ற அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அம்னோ தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் என பல அம்னோ பேராளர்கள் விடுத்துள்ள வேண்டுகோளை மலாய் பொருளாதார கூட்டமைப்பு ஒன்று இன்று நிராகரித்துள்ளது. "அத்தகைய நடைமுறை அவசியம் இல்லை," என மலாய் பொருளாதார ஆலோசனை மன்றத்…
சட்ட விரிவுரையாளர் யுஐஏ-இலிருந்து அடுத்த ஆண்டு விலகுவார்?
அரசமைப்பு சட்டநிபுணர் அப்துல் அசீஸ் பாரி, அடுத்த ஆண்டு யுனிவர்சிடி இஸ்லாம் அந்தாராபங்சா(யுஐஏ) விலிருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கல்விக்கழகத்திலிருந்து கொண்டு சுதந்திரமாகக் கருத்து சொல்வதற்கு இடமில்லை என்பதால் அவர் விலகிச் செல்வதாக நம்பத்தக்க வட்டாரமொன்று தெரிவித்தது. அவர் சுதந்திரமாகக் கருத்துரைக்க அவருக்குள்ள உரிமை பலமுறை மறுக்கப்பட்டுள்ளது.…
ஃபாட்வா மன்றம் 2007இலேயே அழியா மைக்கு அங்கீகாரம் வழங்கிவிட்டது
தேர்தல்களில் அழியா மையைப் பயன்படுத்த ஃபாட்வா மன்றத்தின் ஒப்புதல் தேவை என்று தேர்தல் ஆணையம் கூறியிருப்பது சரியல்ல என்கிறார் வலைப்பதிவர் ஒருவர். அதன்மீது மன்றம் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாம். மை பயன்படுத்தப்படுவதைத் தாமதப்படுத்தவே இசி அப்படிக் கூறுகிறது என்று குறிப்பிட்டுள்ள துலாங் பீசி என்னும் வலைப்பதிவர் அழியா மைக்கு…
அம்னோ பேராளர், பாஸ் கட்சி மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்
கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டில் அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி/ஏய்ட்ஸ் நோயாளிகளைக் கொண்டுள்ள மாநிலமாக கிளந்தான் விளங்குகிறது. அந்தப் புள்ளிவிவரம் பாஸ் தலைமையிலான கிளந்தான் மாநில அரசாங்கம் பின்பற்றுகிற சமூக நல நாடு என்னும் கோட்பாட்டைக் கீழறுப்புச் செய்வதாக அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில் கலந்து கொண்டுள்ள கிளந்தான் பேராளர்…
பாடகியை மணந்தேனா? மறுக்கிறார் முன்னாள் ஐஜிபி
முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி) மூசா ஹசன், தாம் பாடகி ஷீலா கமருடினை மணம் செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். தம்மை அவமானப்படுத்தவே அப்படியொரு கதை கட்டி விடப்பட்டிருக்கிறது என்று மூசா கூறியதாக உத்துசான் மலேசியா செய்தியொன்று கூறுகிறது. “அது நானல்ல. அந்தத் திருமணத்துக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.…
ஷாரிஸாட் பதவி துறக்க வேண்டும் என பாங் மொக்தார் மீண்டும்…
அம்னோ மகளிர் பிரிவினர் தங்கள் தலைவி ஷாரிஸாட் அப்துல் ஜலிலுக்கு மகத்தான ஆதரவு வழங்கிய போதிலும் என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் தொடர்பில் பதவி விலக வேண்டும் என அம்னோ உச்ச மன்ற உறுப்பினரான பாங் மொக்தார் ராடின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 2011ம் ஆண்டுக்கான…
அழியா மை “பாத்வா” என்பது வெறும் தந்திரமே
"எகிப்தியர்கள் நேற்று தேர்தலில் வாக்களித்தனர். எத்தகைய எதிர்ப்புமின்றி அங்கு அழியா மை பயன்படுத்தப்பட்டுள்ளது. 90 விழுக்காடு எகிப்தியர்கள் முஸ்லிம்கள் ஆவர்." அழியா மையைப் பயன்படுத்த இசி தயார் குவினி: அழியா மையைப் பயன்படுத்துவது "ஹராம்" என தேசிய பாத்வா மன்றம் பிரகடனப்படுத்தும் என என் உள்ளுணர்வு கூறுகிறது. அப்புறம்…
KR1M பொருட்களில் பிரச்னைகள் இருப்பதை சுகாதார அமைச்சு ஒப்புக்கொள்கிறது
கெடாய் ராக்யாட் சத்து மலேசியா கடைகளில் விற்கப்படும் பல பொருட்களில் பிரச்னைகள் இருப்பதை சுகாதார அமைச்சு அதிகாரிகள் இன்று ஒப்புக் கொண்டுள்ளனர். சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் அளித்த வாக்குறுதிக்கு மாறாக அது அமைந்துள்ளது. ஒரே மலேசியா கிளிஞ்சல் ( oyster ) சாற்றில் மட்டும் குறைவான…
உதவிப் பதிவதிகாரி மீது 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக்…
நில, சுரங்க அலுவலகத்தைச் சேர்ந்த உதவிப் பதிவதிகாரி ஒருவர் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 15 மில்லியன் ரிங்கிட் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 35 வயதான முகமட் இர்வான் அட்னான் என்ற அந்த உதவிப் பதிவதிகாரி குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூரில் உள்ள கூட்டரசு…
அம்னோ பேராளர்: ஜிஎல்சி நிறுவனங்கள் அம்னோ உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்
அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் (ஜிஎல்சி) உயர் பதவிகளுக்கு அம்னோ உறுப்பினர்களை நியமிப்பதற்குக் கூட்டரசு அரசாங்கம் ஊக்கமளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜிஎல்சி நிறுவனங்கள் மலாய் சமூகத்துக்கு உதவி செய்வதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என பொருளாதாரம் மீதான தீர்மானம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய பேராக் பேராளர் இட்ரிஸ்…
ஷாரிசாட் விளக்கமளிக்க வேண்டும்,பேராளர்கள் வலியுறுத்து
அம்னோ மகளிர் தலைவி ஷாரிசாட் அப்துல் ஜலில், சர்ச்சைக்குரிய நேசனல் ஃபீட்லோட் கார்ப்பரேசன் விவகாரத்தில் இரண்டு நாள்களுக்குமுன் பேராளர்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றார் என்ற போதிலும் பேராளர்கள் சிலர், அமைச்சரைத் தற்காத்துப் பேசுவது சிரமமாக உள்ளது என்றும் அவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரிடமிருந்து விரிவான விளக்கம் தேவை என்றும்…