தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
“தாக்குதல் நிகழ்ந்தது” என்கிறார் துணை அமைச்சர் வீ
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று காஜாங்கில் நடைபெற்ற பேரணி ஒன்றின் போது கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கிட்டத்தட்ட குத்தப்பட்டதாக கூறப்படுவதை மறுக்கும் செய்திகள் வெளி வந்த போதிலும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என அவர் பிடிவாதமாகக் கூறுகிறார். "நீங்கள் எப்படித் தாக்குதலை வரையறுப்பீர்கள் ? சிராய்ப்பு…
போலீசாரும் ஏற்பாட்டாளர்களும் வீ தாக்கப்படவில்லை என்கின்றனர்
சீன மொழிக் கல்வி மீது காஜாங்கில் நிகழ்ந்த பேரணியில் தாம் கிட்டத்தட்ட "குத்தப்பட்டதாக" கல்வித் துணை அமைச்சர் வீ கா சியோங் கூறிய போதிலும் யாரும் தாக்கப்படவில்லை என சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிஸான் துன் ஹம்சாவும் பேரணி ஏற்பாட்டாளர்களும் கூறுகின்றனர். அந்தப் பேரணியின் போது…
தெங்கு ரசாலி அம்னோவிலிருந்து விலக மாட்டார்
அம்னோ மூத்த தலைவர்களில் ஒருவரான தெங்கு ரசாலி, அம்னோ தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் தம் சகா காடிர் ஷேக் ஃபாதிரைப் பின்பற்றிக் கட்சியிலிருந்து விலக மாட்டார். சீனமொழி நாளேடான ஓரியெண்டல் டெய்லி நியுசுக்கு வழங்கிய நேர்காணலில் தெங்கு ரசாலி, தம் விசுவாசம் என்றும் அம்னோவுக்குத்தான் என்பதை வலியுறுத்தினார்.…
கடைசி பட்சமாகத்தான் மும்முனைப் போட்டி,கெடா டிஏபி விளக்கம்
பக்காத்தான் ரக்யாட்டில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுகள் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே கெடா டிஏபி மும்முனைப் போட்டியில் இறங்கும். இவ்வாறு, நேற்று தாம் விடுத்த அறிக்கை குறித்து விளக்கமளித்துள்ளார் டிஏபி டாருல் அமான் சட்டமன்ற உறுப்பினர் லீ குவான் ஏய்க்.ஆனால், நிலைமை அந்த அளவுக்குச் சென்றுவிடவில்லை என்று குறிப்பிட்ட…
போலீஸ், பாஸ் அமால் பிரிவை எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்
"அமால் பிரிவு தொண்டர்களுக்கு, நீங்கள் செய்தது பாராட்டப்பட வேண்டிய பணியாகும். ஏளனம் செய்தவர்களை நாம் அடித்துத் துன்புறுத்த வேண்டியதில்லை. காரணம் நாம் அவர்கள் அளவுக்குத் தாழ்ந்து போகக் கூடாது." பக்காத்தான் செராமாவில் ஏளனம் செய்தவர் பிடிக்கப்பட்டார். நியாயமான சுதந்திரமான தேர்தல்: அது அமால் பிரிவு செய்துள்ள நற்பணியாகும். நல்ல…
அதிகச் செலவில் அலுவலகத்தைப் புதுப்பித்ததாகக் கூறப்படுவதை சேவியரும் ஹலிமாவும் மறுத்தனர்
சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர்களான டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் டாக்டர் ஹலிமா அலியும் தங்களது அலுவலகங்களை அதிகச் செலவில் புதுப்பித்துக் கொண்டதாக தங்களது முன்னாள் சகா ஹசான் அலி தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். 2008ம் ஆண்டு கல்வி, உயர் கல்வி, மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பொறுப்பேற்ற பின்னர்…
ஹசான்: இரண்டு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் என்னை விட அதிகமாக…
சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி, தமது இரண்டு முன்னாள் சகாக்களான- டாக்டர் சேவியர் ஜெயகுமாரும் ஹலிமா அலியும்- தம்முடன் ஒப்பிடுகையில் தங்களது அலுவலகங்களை புதுப்பிப்பதற்குக் கணிசமான அளவு கூடுதலாகச் செலவு செய்துள்ளதாக கூறிக் கொண்டுள்ளார். "சிலாங்கூர் அரசாங்கம் என் செலவுகளையும் அதே நேரத்தில்…


