பிகேஆர்: நஜிப்-அன்வார் விவாதத்துக்கு ஏற்பாடு செய்க

பொது விவாதங்களை ஆதரிப்பதாக பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் விடுத்துள்ள அறிக்கை, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மாற்றரசுக்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் ஒரு பொது விவாதத்தில் கலந்துகொள்ள வழிவகுக்க வேண்டும் என்று பிகேஆர் விருப்பம் தெரிவித்துள்ளது. அப்படியொரு விவாதத்துக்கு தெங்கு அட்னானே ஏற்பாடு…

“பிறர் எழுதியதை திருடியதாக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது…

மூத்த நீதிபதி ஒருவர் ஜனவரி 5ம் தேதி வழங்கிய தீர்ப்பில் 'பிறர் எழுதியதைத் திருடி சேர்த்திருப்பதின்' அடிப்படையில் கூட்டரசு நீதிமன்றத்தில் செய்து கொள்ளப்பட்ட முறையீடு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என நிறுவனம் ஒன்று விண்ணப்பித்துக் கொண்டுள்ளது. அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காரணங்கள் பெரும்பாலும் முதலாவது பிரதிவாதியான ஊய் வூன்…

பொதுவிவாதங்கள்மீது மஇகாவின் நிலைப்பாடு காலத்துக்கு ஏற்றதல்ல

டிஏபி உதவித் தலைவரும் ஈப்போ பாராட் எம்பியுமான எம்.குலசேகரன், மாற்றரசுக்கட்சிகளுடன் பொதுவிவகாரங்கள் குறித்து வாதம் செய்ய மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை என்று அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கூறியுள்ளது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய அளவிலும் இன அளவிலும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களைத் தலைவர்களும் கட்சிகளும் பொதுமேடைகளில் விவாதிப்பது…

சிலாங்கூரின் இரண்டு ஜிஎல்சிகள்மீது விசாரணை

நிதி முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் சிலாங்கூரில்  உள்ள அரசுதொடர்புடைய இரண்டு நிறுவனங்கள்(ஜிஎல்சி)மீது அடுத்த மாதம் விசாரணை மேற்கொள்ளப்படும். சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின்கீழ் உள்ள அந்நிறுவனங்கள் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சு வழங்கிய மான்யத்தைத் தவறான முறைகளில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. “அவ்விவகாரம் பற்றி தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில்…

லிம் குவான் எங்-கைத் தவறாக மேற்கோள் காட்டியதை தி ஸ்டார்…

கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த "மலேசிய சீனர்கள் அரசியல் திருப்புமுனையில்" என்னும் தலைப்பிலான மாநாட்டில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொன்னதாக அவரை மேற்கோள் காட்டி வெளியிட்ட தகவல் தவறு என ஒப்புக் கொண்டு அந்தச் செய்தியை அந்த ஏடு இன்று வெளியிட்டுள்ளது. "இரண்டு கட்சி முறை…

பெரிய விவாதம்: காரியமே முக்கியம்

"இரண்டாவது சுற்று பினாங்கில் நடைபெற்றால் நியாயமாக இருக்கும். இரண்டு கட்சிகளுக்கு சமமான வாய்ப்பும் கொடுக்கப்பட வேண்டும்" சுவா விவாதத்தில் வென்றதாக கெரக்கான் துணைத் தலைவர் சொல்கிறார் ஜேபி சுவாரா: பிஎன் உறுப்புக் கட்சி உறுப்பினர் ஒருவர் சொல்லும் தீர்ப்புக்கு மதிப்பே இல்லை. கெரக்கான் துணைத் தலைவர் சாங் கோ…

அன்வாருடைய கார் மீது அம்னோ ஆதரவாளர்கள் கற்களை எறிந்தனர்

ஜோகூரில் உள்ள செம்பெரோங் நாடாளுமன்றத் தொகுதிக்கு நேற்று எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வருகை அளித்தார். அங்கு அவருக்கு அம்னோ ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்ப்புக் காட்டினர். அந்த எதிர்த்தரப்புத் தலைவருடைய மெர்சிடிஸ் கார் மீது அவர்கள் கற்களை வீசினர். அதனால் அந்த காரின் முன் கண்ணாடி நொறுங்கியது. கார்…

மலாயா பல்கலைக்கழகத்தில் அனைத்துலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது

உலக மக்களின் தாய்மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து அவற்றை மாணவர்களின் முதல் போதனை மொழியாக பயன்படுத்தப்படுவதற்கும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்கு தாய்மொழி அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் ஐக்கிய நாட்டு மன்றம் பெப்ரவரி 21 ஆம் தேதியை அனைத்துலக தாய்மொழி தினம் என்று அறிவித்தது. உலக மக்கள் பயன்படுத்தும் அனைத்து…

தெங்கு அட்னான்: பிஎன்-னில் எந்தக் கட்சியும் மிரட்டப்படுவது இல்லை

பிஎன் இணக்க அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது. உறுப்புக்கட்சிகள் ஒன்றையொன்று மிரட்டுவது இல்லை என பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறுகிறார். மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-கிற்கும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கிற்கும் இடையில் நிகழ்ந்த விவாதம் பற்றிக் கருத்துரைத்த…

எதிர்க்கட்சிகளுடன் சொற்போர் நடத்த மஇகா ஆர்வம் கொண்டிருக்கவில்லை

அண்மையில் மசீச-வுக்கும் டிஏபி-க்கும் இடையில் நிகழ்ந்த விவாதத்தைப் போன்று எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதத்தையும் நடத்த மஇகா எண்ணவில்லை என அதன் துணைத் தலைவர் டாக்டர் எஸ் சுப்ரமணியம் கூறியிருக்கிறார். என்றாலும் எழுப்பப்பட்ட பல்வேறு விஷயங்கள் மீது இரண்டு கட்சிகளின் நிலைகளையும் கொள்கைகளையும் மக்கள் அறிந்து கொள்வதற்கு அந்த விவாதம்…

நஜிப் அன்வாருடைய இஸ்லாமியத் தகுதிகளை சாடுகிறார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமின் இஸ்லாமியத் தகுதிகளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அன்வாரைப் பெயர் குறிப்பிடாமல் பேசிய நஜிப், அந்த எதிர்க்கட்சித் தலைவருடைய அறிக்கைகள் முஸ்லிம் சமூகத்தில் சில பிரிவினருக்கு சினத்தை மூட்டியுள்ளது என்றார். "குறிப்பிட்ட தலைவர் ஒருவர் விடுக்கும் இயற்கைக்கு புறம்பான…

தம்மைத் தவறாக மேற்கோள் காட்டியதற்காக தி ஸ்டார் நாளேடு மன்னிப்புக்…

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்-உடன் நடத்திய விவாதத்த்தின் போது தாம் கூறியதாக தவறாக வெளியிட்டுள்ள தகவலுக்கு தி ஸ்டார் நாலேடு மன்னிப்புக் கேட்பதுடன் அதனை மீட்டுக் கொள்ளவும் வேண்டும் என பினாங்கு முதலமச்சர் லிம் குவான் எங் கோரியுள்ளார். 'அவர்கள் சொன்னது என்ன" என்ற தலைப்பில்…

பினாங்கு முதலமைச்சர்: நான் சொல்வது தவறு என மெய்பிக்கப்பட்டால் விலகத்…

பினாங்கில் பாயான் முத்தியாரா நிலம் திறந்த டெண்டர் வழியாக அல்லாமல் பேச்சுகள் மூலம் விற்கப்பட்டது என்பதற்கு ஆதாரம் இருந்தால் அரசியலிலிருந்து விலகிக் கொள்வதற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் முன் வந்துள்ளார். ஜார்ஜ் டவுனுக்கு அருகில் பாயான் முத்தியாராவில் உள்ள 41.5 ஹெக்டர் நிலம் பினாங்கு அரசாங்கம்…

இண்ட்ராப்: தேவை “உரிமை, நம்பிக்கை அல்ல”

இந்தியர்களிடம் நம்பிக்கை வையுங்கள் என்று கை ஏந்தும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்குமுன் அவர்களிடம் அவர்களின் உரிமையை எடுத்து நீட்டியிருக்க வேண்டும். இவ்வாறு பிரதமருக்கு எழுதிய கண்டனக் கடிதம் ஒன்றில் இண்ட்ராப்  குறிப்பிட்டுள்ளது. அக்கடிதம் இன்றுகாலை புத்ரா ஜெயாவில் பிரதமர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 50 பேர்…

டாக்டர் பட்டத்துக்குப் பணமா? மறுக்கிறார் ரோஸ்மா

பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர், பிப்ரவரி 12-இல் கர்டின் பல்கலைக்கழகம் வழங்கிய கெளரவ டாக்டர் பட்டத்தைப் பணம் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுவதை மறுக்கிறார். “கர்டின் விருதைப் பணம் கொடுத்து வாங்கியதாக சிலர் கூறுகிறார்கள்.அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. “ஒருவேளை  அவர்களுக்கு (பட்டங்களை)ப் பணம் கொடுத்து வாங்கும் பழக்கம் இருக்கலாம். அதனால்தான்…

1பராமரிப்புக்கு சம்பளத்தில் 10% பிடித்தம் “சாத்தியமற்றது”, சுகாதார அமைச்சர்

பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் 10விழுக்காட்டை சுகாதாரக் காப்புறுதித் திட்டமான 1பராமரிப்புத் திட்டத்துக்குச் செலுத்த வேண்டியிருக்காது என்று சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய் நேற்று அறிவித்தார். “அது அரசின் எண்ணமாக இருப்பதற்குச் சாத்தியமில்லை.சம்பளத்தில் 10விழுக்காட்டைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னால் நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்”, என்றாரவர். மாற்றரசுக் கட்சியினர்…

உங்கள் கருத்து: அம்னோ ஏன் அடையாள அட்டை திட்டம் மீதான…

"சபாவில் தங்களது உண்மையான எஜமானர்கள் அம்னோக்காரர்கள் என்பது ஒங்கிலி-க்கும் டொம்போக்-கிற்கும் தெரிந்திருக்க வேண்டும். காரணம் அந்த அடையாளக் கார்டு மோசடியில் முக்கியமாக நன்மை அடைந்தது அம்னோக்காரர்கள்." அடையாள அட்டை  திட்டம் மீது ஆர்சிஐ பற்றி ஏதும் தெரிவிக்காமல் நஜிப் சபாவிலிருந்து புறப்பட்டார் ஹலோ: சபா பிஎன் -னில் உள்ள…

சுவா-லிம் சொற்போர்: தோற்றவர்…?

மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் மற்றும் டிஎபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சொற்போர் காட்டமாக இருந்த போதிலும், இருவரும் அடிக்கடி தாங்கள் பேச வேண்டிய தலைப்பிலிருந்து விலகிச் சென்று வேறு விசயங்களை நுழைத்தனர். "திருப்புமுனையில் சீனர்கள் - இரு கட்சி முறை இரு…

தேர்தலில் பாஸ் கட்சி புதுமுகங்களையும் முஸ்லிம் அல்லாதாரையும் நிறுத்தும்

அடுத்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி பல புதுமுகங்களை நிறுத்தும். அவர்களில் பல முஸ்லிம் அல்லாதவர்களும் தொழில் நிபுணர்களும் முன்னாள் அரசாங்க ஊழியர்களும் இருப்பதாக பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு கூறினார். அவர் 'புத்ராஜெயாவுக்கு பாஸ் செல்லும் வழிமுறை' என்னும் தலைப்பில் நிகழ்ந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட…

புந்தோங், ஈப்போவில் இண்ட்ராப் ஏற்பாட்டில் அபு பொதுக்கூட்டம்

54 ஆண்டுகள் மலேசியர்கள் நம்பிக்கையோடு வாக்களித்தும் நியாயமான சமூக பொருளாதார உரிமைகளைப் பாகுபாடின்றி நிலை நிறுத்த அம்னோ தலைமையிலான பாரிசன் நேசனல் கூட்டணி தவறிவிட்டதால் அடுத்த 13  ஆம் பொதுத் தேர்தலில் அதற்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரைகளை நாடெங்கும் நடத்தி வரும் "எதுவாயினும் அம்னோ…

கேஎப்சி, தனது ஐ சிட்டி கடையில் தாக்கப்பட்டவரிடம் மன்னிப்புக் கேட்டது

ஷா அலாம் ஐ சிட்டி கேஎப்சி கடையில் ஊழியர் ஒருவரால் தாக்கப்பட்ட டேனி இங்-கை கேஎப்சி மலேசியா நிர்வாகம் இன்று சந்தித்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. அந்த விரைவு உணவு கடை கட்டமைப்பு "அன்றைய தினம் எங்கள் ஊழியர்கள் வழங்கிய திருப்தி இல்லாத சேவைக்கும் ஏற்படுத்திய அசௌகரியத்துக்கும் அங்கு…

நஜிப்: பிஎன் கொள்கைகள் கோடீஸ்வரர்களை உருவாக்கின

நாட்டில் இன்று இத்தனை கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு பிஎன் அரசின் சலுகைகள்தான் காரணம் என்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். “கோடீஸ்வரர்களின் பட்டியலைப் பார்த்தேன். ஒவ்வொருவரையும் உன்னிப்பாகக் கவனித்தேன்.அவர்களில் சிலர் இங்கும் இருக்கிறார்கள். “அவர்கள் செல்வந்தர்கள் ஆனார்கள் என்றால் அதற்கு எங்கள் கொள்கைகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக…