சிலாங்கூரில் பல பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீத்தற்போது கட்டுக்குள் உள்ளது என்று மந்திரி பெசார் அமிருதின் ஷாரி கூறினார். இருப்பினும், தீ விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாகவும், கட்டுப்படுத்த கடினமாகவும் இருப்பதால், கரி நிலம் பகுதிகளில் கண்காணிப்பதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமிருடின் கூறினார். "குவாலா குபு பாரு,…
பேரணியை ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல, “மாட் ரெம்பிட்டுகள்”
நேற்று பினாங்கு சட்டமன்ற வளாகம் வந்த நால்வர், திங்கள்கிழமை முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல என்று அறிவித்தனர். தங்களை பாஸ் மற்றும் டிஏபி உறுப்பினர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அந்நால்வரையும் அம்னோவின் தெலுக் பாஹாங் சட்டமன்ற உறுப்பினர்…
நஜிப்: ஒற்றுமை இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன்
முஸ்லிம்கள் ஒற்றுமையை தற்காக்க வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒற்றுமையே இஸ்லாத்தின் வலிமைக்கு நிலைக்களன் என அவர் குறிப்பிட்டார். ஒற்றுமையாக இருப்பதின் மூலம் முஸ்லிம்கள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிறையச் சாதிக்க முடியும் என்றார் அவர். "வெவ்வேறு நாடுகளில் வாழ்கின்ற வெவ்வேறு நிறத்தையும் பண்பாடுகளையும் …
செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்கள்: எங்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டுவதை நிறுத்திக்…
செக்சுவாலட்டி மெர்தேகா நிகழ்வுகளின் போது மனித உரிமைகள் மீது கருத்துக்களையும் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் பாதுகாப்பான இடத்தை கண்டு பிடித்துள்ளவர்கள் மீது வெறுப்பைத் தூண்டுவதோடு பாகுபாடும் காட்டுகின்ற தேர்ந்தெடுக்கப்பட்ட பேராளர்கள் உட்பட பல மலேசியர்களின் போக்கு குறித்து நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். எங்கள் அடையாளத்துக்கும் சுய நிர்ணயத்துக்குமான உரிமைகள்…
பாஸ் இளைஞர் பிரிவு: திருநங்கைகள் வாழ்க்கை முறை மனித உரிமைகளுக்கு…
தடை செய்யப்பட்டுள்ள செக்சுவாலட்டி மெர்தேகா விழா ஆதரவாளர்கள் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூக்குரலிடும் வேளையில் அவர்கள் சொல்வது தவறு என்பதற்கு ஆதாரமாக பாஸ் இளைஞர் பிரிவு 1948ம் ஆண்டுக்கான அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்தப் பிரகடனத்தின் 16வது பிரிவில் அதனைக் காணலாம் என அந்த…
பினாங்கு தகவல் சுதந்திர மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், தகவல் சுதந்திர மசோதாவை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிர்ப்பாக 2 வாக்குகளும் செலுத்தப்பட்டன. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றக் கூட்டத்தில் நேற்று 14 பேர் கலந்து கொள்ளவில்லை. நேற்று பிற்பகல் அந்த மசோதா சமர்பிக்கப்பட்டு…
மலேசியப் பெற்றோர்களுக்குக் கிடைத்த சிறுவெற்றி
"நமது இளைஞர்கள் மேல் நிலையை அடைவதற்கு வாய்ப்பளிக்கும் கல்வி முறையே நமக்குத் தேவை. கீழ் நிலைக்குச் செல்வதற்கான போட்டியில் அல்ல." ஆங்கிலத்தில் கணித, அறிவியல் பாடங்களை கற்கும் மாணவர்களுக்கு அதில் தொடர வாய்ப்பு பார்வையாளன்: இப்போது முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு கணித அறிவியல் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கும்…
பிபிஎஸ்எம்ஐ அரசமைப்புக்கு முரணானது, சட்ட வல்லுனர்
அரசமைப்பு வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி, கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதை ஒரு விருப்பத்தேர்வாக தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று டிஏபி வாதிடுவது தப்பு என்கிறார். அது அரசமைப்புக்கு முரணானது என்பது அவருடைய வாதம். “(அரசமைப்பின்) 152வது பகுதி அதிகாரப்பூர்வ விவகாரங்கள் எல்லாமே தேசிய மொழியான…
பிபிஎஸ்எம்ஐ:மசீச, மஇகா,கெராக்கான் ஆகியவற்றின் நிலைப்பாட்டை புவாட் சாடினார்
அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்கும் கொள்கையை மசீச, மஇகா, கெராக்கான் ஆகியவை ஆதரிப்பது மலாய்மொழிக்குக் குழிபறிப்பதாகும் எனக் கல்வி துணை அமைச்சர் முகம்மட் புவாட் ஜர்காஷி சாடியுள்ளார். “அவர்களின் நிலைப்பாடு மலாய்மொழியைப் பலவீனப்படுத்தி விடும். எம்பிஎம்எம்பிஐ(மலாய்மொழியின் மேன்மையை நிலைநிறுத்தி ஆங்கிலமொழிப் புலமையை வலுப்படுத்தும் கொள்கை) வழியாக…
லிம்முக்கு எதிராகப் போராட்டமா?
இன்று பிற்பகல் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்கிற்கு எதிராக "அதிருப்தி அடைந்துள்ள" சில கூட்டத்தினர் பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் இருக்கும் கொம்டாரில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர் - ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அப்பெரிய ஆர்ப்பாட்டத்தை தோல் பை வியாபாரியும் சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவருமான…
பொருள் வாங்கிய செய்திக்குத் திருத்தம் வெளியிட்டது ஆசி நாளேடு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள் பொருள் வாங்கிக் குவித்தார் என்று செய்தி வெளியிட்டு ஒரு சலசலப்பை உண்டுபண்ணிய ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று அச்செய்தி தப்பு என்று நேற்றுத் தெரிவித்தது. வெஸ்ட் ஆஸ்திரேலியன் என்னும் அந்நாளேடு குறிப்பிட்ட அந்நேரத்தில் பிரதமரின் புதல்வி பெர்த் நகருக்குச் செல்லவே இல்லை என்பது…
செக்சுவலிடி மெர்டேகா கருத்தரங்கை போலீஸார் தடுத்தனர்
நேற்றிரவு கோலாலம்பூரில், சுமார் 30 போலீசார், தடை செய்யப்பட்ட செக்சுவலிடி மெர்டேகா விழா தொடர்பான ஒரு கருத்தரங்கைத் தடுத்து நிறுத்தினர். இரவு மணி 7.30 அளவில் பசார் சினியின் அன்னெக்ஸ் கேலரிக்கு வந்ததாக செக்சுவலிடி மெர்டேகா ஒருங்கிணைப்பாளர் பாங் கீ தெய்க் கூறினார். “இரவு 8 மணிக்கு அதன் கதவுகளை…
சிறுபான்மையினருக்கும் உரிமைகள் உண்டு என்கிறார் அம்பிகா
வழக்குரைஞர் மன்றத்தின் முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், செக்சுவாலட்டி மெர்தேகா ஏற்பாட்டாளர்களை தற்காத்துப் பேசியுள்ளார். சிறுபான்மை மக்களுடைய உரிமைகளையும் மதிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக அவர் சொன்னார். தாம் அந்த விழாவுக்கான ஏற்பாட்டாளர் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய அவர், நவம்பர் 9ம் தேதி அந்த நிகழ்வைத் தொடக்கி வைக்குமாறு…
PPSMI மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் தொடர வாய்ப்பு வழங்கப்படும்
அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்கத் தொடங்கி விட்ட மாணவர்களுக்கு அவர்கள் அந்த மொழியில் அந்தப் பாடங்களை தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது. பல பெற்றோர் அமைப்புக்கள் ஆட்சேபம் தெரிவித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அவ்வாறு அறிவித்துள்ளது. என்றாலும் அந்தத் தீர்வு, ஆங்கில மொழிக் கொள்கையைக் கைவிடுவது என…
அம்பிகா இசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும், பெர்க்காசா
செக்சுவாலட்டி மெர்தேகாவுக்கு எதிராக தேசியப் பள்ளிவாசலில் பெர்க்காசா ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் அம்பிகா ஸ்ரீனிவாசன் எதிர்ப்பு ஊர்வலமாக மாறியது. அம்பிகா உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்ப்பாட்டக்காரர்கள் கோரினர். பெர்சே 2.0 தலைவருமான அம்பிகா, நவம்பர் 9ம் தேதி அதிகாரப்பூர்வமாகத் செக்சுவாலட்டி மெர்தேகாவில்…
சான் கொங் சாய் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஏப்ரல்…
போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதித் திட்டம் தொடர்பில் ஏமாற்றியதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் சான் கொங் சாய் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு மீதான விசாரணை கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ம் தேதி தொடங்கும். அந்த விசாரணையில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட்…
இலங்கையின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடாது: கோகிலன்
மனித உரிமை மீறல் உள்ளிட்ட பிரச்னைகளை இலங்கையின் உள்விவகாரங்களாக மலேசியா கருதுவதால் அந்த விவகாரங்களில் மலேசிய அரசாங்கம் தலையிடாது. அப்பிரச்னையை இலங்கையே தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் கோகிலன் பிள்ளை தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கோகிலன் இவ்வாறு குறிப்பிட்டார். அதேவேளை, பொருளாதாரம்,…
யூயூசிஏ தீர்ப்பு மீது அமைச்சு முறையீடு செய்ய அமைச்சரவை அனுமதி
யூயூசிஏ என்ற பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவு அரசியலமைப்புக்கு முரணானது என அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர் கல்வி அமைச்சு முறையீடு செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது. முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தத் தீர்ப்பு "அதிகாரங்கள் பிரிக்கப்பட்ட உணர்வுகளுக்கு எதிராக இருப்பதால்" அமைச்சரவை அந்த முடிவைச்…
இன்று பிற்பகல் லிம்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
"அதிருப்தி கொண்ட" பல்வேறு தரப்பினர், இன்று பிற்பகல் 2.30க்கு பினாங்கு அரசாங்க அலுவலகங்கள் அமைந்துள்ள கொம்டாரில் முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்த உத்தேச ஆர்ப்பாட்டம் லிம்மைக் கடுமையாக எதிர்ப்பவரான சுவாரா அனாக்-அனாக் மலேசியாவின் தலைவர் முகம்மட் கனி அப்துல் ஜிமான்…
எம்டியுசி மறியல் போராட்டம்: பினாங்கில் 1,000 தொழிலாளர்கள் கூடினர்
வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தொழிலாளர்களின் மறியல் போராட்டம் நேற்று பினாங்கு, பட்டர்வொர்த்தில் நடைபெற்றது. கனத்த மழையையும் இடியையும் பொருட்படுத்தாமல் 1,000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அப்போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போராட்ட மறியலை மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் (எம்டியுசி) பினாங்கு கிளை முன்னின்று நடத்தியது.…
பிகேஆர் ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை எதிர்க்கிறது
ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை பிகேஆர் எதிர்க்கிறது. அத்துடன் அது பக்காத்தான் ராக்யாட் கொள்கையில் ஒரு பகுதி அல்ல என்றும் அது கூறுகிறது. ஆங்கிலத்தில் அறிவியல் கணித பாடங்களைப் போதிப்பதை தேர்வு செய்யும் வாய்ப்பு பெற்றோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அந்தக் கொள்கைக்கு ஆதரவாக பிகேஆர்…
‘கும்பல்களைக் குறி வையுங்கள், செக்சுவாலட்டி மெர்தேகாவை அல்ல
செக்சுவாலட்டி மெர்தேகா விழா நிகழ்வுகளைத் தடை செய்துள்ள போலீசை வழக்குரைஞர் மன்றம் சாடியுள்ளது. போலீஸ் படை தவறான தரப்புக்கள் மீது குறி வைப்பதாகவும் அது குற்றம் சாட்டியது. அந்த விழாவைத் தடை செய்வதற்கு போலீஸ் கொடுத்துள்ள காரணம் பொது ஒழுங்கு என்பதாகும். அந்த விழா நிகழ்வுகளைச் சீர்குலைக்க மக்கள்…
மலேசியா ‘பழி தீர்க்கும்’ பாதையில் செல்கிறது
"விழிப்புக் குழுக்கள் அமைக்கப்படும். நீதிக்கு புறம்பாக தண்டனைகள் வழங்கப்படும். மக்கள் அதனை உணருவதற்கு முன்னர் சர்வாதிகாரம் அவர்கள் வீட்டுக் கதவு அருகில் வந்து விடும்" போலீஸ் மெர்தேகா செக்சுவாலட்டி விழாவைத் தடை செய்கிறது. பெர்ட் தான் : எல்லாமே தெரிந்த விஷயம் தான். போலீஸ் மூலம் அரசாங்கம் அச்சத்தை உருவாக்குகிறது.…
வேலைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மறியல் போராட்டம்
கடந்த அக்டோபர் மாதத்தில் வேலைச் சட்டம் 1955 க்கு செய்யப்பட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதிலும் மறியல் போராட்டம் நடத்தினர். நாட்டில் இருபது இடங்களில் நடந்த தொழிலாளர்களின் மறியல் போராட்டத்தை மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (எம்டியுசி) முன்னின்று நடத்தியது. சட்டத் திருத்தத்தின் பல்வேறு பகுதிகளுக்கு,…