வாக்காளர் பட்டியல் துப்புரவுபடுத்தப்பட மக்கள் சக்தியே காரணம்

வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ள பாஸ் இளைஞர் பகுதி, தேர்தல் ஆணையம்(இசி) 70,361 பெயர்களை அப்பட்டியலிலிருந்து நீக்கியது “மக்களுக்குக் கிடைத்த வெற்றி” என்று வருணித்துள்ளது. இசி, ஜூலைக்கும் செப்டம்பர் 15-க்குமிடையில் தேசிய பதிவுத்துறையின்(என்ஆர்டி) ஒத்துழைப்புடன் இறந்துபோன 69,293 வாக்காளர்களின் பெயர்களையும் குடியுரிமை பறிக்கப்பட்ட 1068 பேரின்…

தடையை எதிர்த்து வழக்காடுவதற்கு பெர்சே-க்கு அனுமதி கிடைத்தது

பெர்சே 2.0 என அழைக்கப்படும் தேர்தல் சீர்திருத்த இயக்கத்துக்கு உள்துறை அமைச்சு விதித்த தடையை எதிர்த்து அந்த அமைப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க முடியும். பல அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியான பெர்சே 2.0, உள்துறை அமைச்சும் அரசாங்கமும் பிறப்பித்த அந்தத் தடை உத்தரவை எதிர்த்து வழக்காடுவதற்கு கோலாலம்பூர்…

சுபாங் ஜெயா எம்பயர் கேலரி கடைத் தொகுதியில் வெடிப்புச் சம்பவம்

சுபாங் ஜெயாவில் உள்ள எம்பயர் கேலரி கடைத் தொகுதியில் இன்று காலை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தில் அந்தக் கட்டிடத்தின் மூன்று தளங்கள் சேதமடைந்தன. நால்வர் காயமடைந்தனர். யாரும் கொல்லப்பட்டதாக இது வரை தகவல் இல்லை. காயமடைந்தவர்களில் இருவர் பாதுகாவலர்கள். அவர்களுக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்தக்…

சில ஆண்டுகளில் எப்படி ஒர் இந்தோனிசியர், பூமி ஆனார்?

"தேசியப் பதிவுத் துறை, குடி நுழைவுத் துறை ஆகியவற்றில் அத்தகைய மக்களுடைய குடியுரிமையை அங்கீகரித்தது யாராக இருந்தாலும் நாட்டுக்குத் துரோகம் செய்துள்ளனர்."       மிஸ்மா-வுக்கான குடியுரிமை 'குடிநுழைவு விதிகளுக்கு முரணானது பீரங்கி: மிஸ்மாவைப் போன்று சபாவில் 700,000 பேருக்கு "சிறப்பு நிலை" அடிப்படையில் மலேசியக் குடியுரிமை…

தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கு கோவில்களின் நிதி பேருதவியாகும், சார்ல்ஸ் சந்தியாகோ

அண்மையில் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக பெருமாள் ஆலயம் ரிம5000 வழங்கியது மிகவும் பாராட்ட வேண்டிய செயல் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ என்று கூறினார். நாட்டில் மொத்தம்  523 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலான தமிழ்ப்பள்ளிகள் மிகச் சிறந்த மாணவர்களை உருவாக்கி…

அமைதிப்படை மலேசிய செய்தியாளரைக் கொன்றதை ஒப்புக்கொண்டது

சோமாலிய தலைநகர் மொகாடிஷுவில், கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட்டுவரும் ஆப்ரிக்க அமைதிப் படை, இம்மாதத் தொடக்கத்தில் மலேசிய செய்தியாளர் ஒருவரைத் தற்செயலாகச் சுட்டுக்கொன்றதை ஒப்புக்கொண்டிருக்கிறது. நான்காண்டுகளாக கிளர்ச்சி நடைபெற்றுவரும் அத்தலைநகரில் காவல் சுற்றில் ஈடுபட்டிருந்த புருண்டியைச் சேர்ந்த அமைதிகாப்புப் படையினர், செய்தியாளர் நோராம்பைசூல் முகம்மட் நோர் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம்மீது…

ஸாக்கி: நல்ல நீதிபதிகள் கிடைப்பது எளிதல்ல

ஸாக்கி அஸ்மி, தலைமை நீதிபதியாக இருந்த மூன்றாண்டுக்காலத்தில், வழக்குரைஞர்களில் அறுவரைத் தேர்ந்தெடுத்து நீதிபதிகளாக்கினார். இது ஒரு பெரிய எண்ணிக்கைதான் என்றும் கூறுகிறார் ஸாக்கி. சாதாரணமாக, வழக்குரைஞர்கள் நீதிபதிகளாக விரும்புவதில்லை, ஏனென்றால் இங்கு வருமானம் குறைவு. “இன்னும் பலரைச் சேர்க்க விருப்பம்தான். மேலும் இருவரையாவது சேர்க்க நினைத்தேன். கடைசி நேரத்தில்…

மிஸ்மாவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டதில் விதிகள் மீறப்பட்டுள்ளன

சர்ச்சைக்கு இலக்கான வாக்காளர் மிஸ்மா, சட்டப்பூர்வமாகவே மலேசியக் குடியுரிமை பெற்றதாகக் கூறிக்கொண்டாலும் அவருக்கு முதலில் நிரந்தர வசிப்பிடத் தகுதியும்(பிஆர்) பின்னர் குடியுரிமையும் வழங்கப்பட்டதில் குடிநுழைவுக் கொள்கை மீறப்பட்டுள்ளது என்று பாஸ் இளைஞர் பகுதி கூறுகிறது. இந்தோனேசியாவின் பாவீன் தீவைச் சேர்ந்த மிஸ்மா என்றழைக்கப்படும் நிஸ்மா நயிம், குடிநுழைவு விதிகளின்கீழ்…

நஜிப்பும் அவரது மனைவியும் சதித் திட்டம் எனக் கூறப்படுவதற்கு எதிராக…

குதப்புணர்ச்சி வழக்கு ll விசாரணையில் தாங்கள் சாட்சியமளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சியை முறியடிக்கும் வகையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோரும் அன்வாருக்கு எதிராக குற்றம் சாட்டப்படுவதற்கு தாங்கள் சதி செய்ததாக கூறப்படுவதை மறுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்குமாறு கோரும் சபினாவை தள்ளுபடி…

‘டாக்டர் மகாதீருக்கும் லினாஸுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை

பாகாங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தில் தமது மூத்த புதல்வர் மொஹ்ஸானிக்கு ஈடுபாடு இருப்பதால் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அதனை ஆதரிக்கிறார் எனக் கூறப்படுவதை லினாஸ் நிறுவனம் நிராகரித்துள்ளது. மொஹ்ஸானி தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் கெஞ்சானா பெட்ரோலியம் குழுமத்தின் மொத்த வரவு செலவில் மிகச்…

சிவபாலன் முனைவர் பட்டத்திற்கான தேர்வில் வெற்றி பெற்றதை நீதிமன்றம் உறுதிசெய்தது

மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் தற்போது மூத்த விரிவுரையாளராக பணியாற்றி வரும் ஜி. சிவபாலன் தமது முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வில்  தாம் வெற்றி பெற்றதாக மலாயா பல்கலைக்கழக (யுஎம்) தேர்வுக்குழு செப்டெம்பர் 28, 2006இல் அறிவித்த வாய்மொழி முடிவு செல்லக்கூடியது மற்றும் அமலாக்கக்கூடியது என்பதை உறுதிப்படுத்துமாறு…

டிவி3: “லிம் பழித்துக் கூறியது ஆஸ்திரேலியாவில் அல்ல. சிங்கப்பூரில்”

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலி நிலையம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோகூரைத் தாம்  பழித்துக் கூறியதாக சொல்லப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மறுத்துள்ள வேளையில் அந்த டிஏபி தலைமைச் செயலாளர் சிங்கப்பூரில் ஜோகூரைப் பற்றி "தப்பாகச் சொன்னதாக" டிவி3 தொலைக்காட்சி நிலையம் நேற்றிரவு தெரிவித்துள்ளது. அண்மையில்…

நிக் அஜிஸ்: டிஏபி பேய்களுக்கு அஞ்சும் குழந்தையைப் போல நடந்து…

கிளந்தானில் அமலாக்கப்படுவதற்கு யோசனை கூறப்பட்டுள்ள ஹுடுட் சட்டத்திற்கும் முஸ்லிம் அல்லாதாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆகவே டிஏபி அதனை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் கூறுகிறார். டிஏபி-யை அவர் "பேய்களுக்கு அஞ்சும் குழந்தையைப் போல நடந்து…

கேமிரா ஒளிப்பதிவு நீக்கப்பட்டது, இருந்தும் சூது இல்லையா

"நம்ப முடியாத குரோனர் தீர்ப்பையும் வெளிப்படுத்தப்படும் ஆத்திரத்தையும் பார்க்கும் போது மலேசியாவில் சட்ட ஆட்சி உண்மையில் சீரழிந்து கொண்டிருக்கிறது" சார்பைனி மரணத்தில் சூது ஏதுமில்லை என நீதிமன்றம் தீர்ப்பு பல இனம்: மூத்த சுங்க அதிகாரியான அகமட் சார்பைனி முகமட் தவறுதலாக கட்டிடத்தின் ஜன்னல் வழியாக நடந்து சென்று…

பாஸ்: ஏஜியை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும்

நாட்டின் சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்லுக்கு எதிராக கூறப்படும் ஊழல் மற்றும் நீதி சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று பாஸ் கோருகிறது. "அரசமைப்புச் சட்டத்தின் கீழ்  உருவாக்கப்பட்ட ஏஜியின் அலுவலகத்திற்கு இது ஒரு கரும்புள்ளியாகும்", என்று…

‘அகமட் சார்பைனியின் மரணத்தில் சூது ஏதுமில்லை’என நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கத் துறையின் மூத்த அதிகாரியான அகமட் சார்பைனி,  எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோலாலம்பூர் அலுவலகக் கட்டிடத்தின் ஓரத்தில் நின்ற பின்னர் விழுந்ததாக கோலாலம்பூர் குரோனர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அவரது மரணத்தில் எம்ஏசிசி சம்பந்தப்பட்டுள்ளதாக கூறும் வாதம் ஏற்கத்தக்கதல்ல என குரோனர் அய்ஸாத்துல் அக்மால்…

கீர்: மாளிகையை விற்குமாறு சம்சுடினை கட்டாயப்படுத்தியதில்லை

ஒரு மாளிகையை வாங்கிப் பின்னர் அதைத் தம்மிடம் விற்குமாறு ஒரு மேம்பாட்டாளரைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுவதை சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார், முகம்மட் கீர் தோயோ மறுத்தார். இன்று ஷா ஆலம் உயர்நீதி மன்றத்தில் தமக்கு எதிரான ஊழல் வழக்கில் சாட்சியமளித்த கீர், 2004-இல் ஒரு சந்திப்பின்போது டிடாமாஸ் இயக்குனர்…

‘கைரி அவர்களே, ஹுடுட் சட்டத்துக்காக திருத்தங்கள் கொண்டு வர கடைசி…

கிளந்தான் ஹுடுட் சட்டத்தை அமலாக்குவதற்கு உதவியாக கூட்டரசு அரசாங்கம் அரசியலமைப்பைத் திருத்த வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின் தெரிவித்துள்ள யோசனையை பாஸ் இளைஞர் பிரிவு வரவேற்றுள்ளது. "ஹுடுட் தொடர்பாக அம்னோவில் அதன் தலைவர் உட்பட முக்கிய நிலைகளில் உள்ள உறுப்பினர்கள் பின்பற்றுகிற நிலைக்கு மாறாக…

ஹுடுட் பிரச்னையால் பக்காத்தான் ‘நிலை குலையாது’.

கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமலாக்கும் யோசனை காரணமாக பக்காத்தான் ராக்யாட் கூட்டணி நிலை குலையாது. இவ்வாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைமைச் செயலாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர். ஹுடுட் விவகாரத்தை வரும் புதன் கிழமை அந்தக் கூட்டணியின் மூத்த தலைவர்கள் விவாதிக்கவிருக்கும் வேளையில் மூன்று கட்சிகளின் தலைமைச்…

அந்தப் பேட்டியின் எழுத்துப் படிவம், லிம் ஜோகூரை பழிக்கவில்லை என்பதை…

ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழக வானொலிக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வழங்கிய பேட்டியின் எழுத்துப் படிவம், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் கூறிக் கொள்வது போல அவர் ஜோகூர் பாதுகாப்பு குறித்து எதுவும் கூறவில்லை என்பதை மெய்பிக்கிறது. முஹைடின் சொன்னது தவறு என்பதை காட்டுவதற்காக, ஆசிய நடப்பு …

“கிளந்தானியர் பலரும் ஹூடுட் சட்டத்தை விரும்புகிறார்கள்”

கிளந்தானுக்கு மேற்கொண்ட வருகை ஹூடுட் சட்டம் பற்றி அம்மாநில மக்கள் கொண்டுள்ள கருத்தை அறிந்துகொள்ள உதவியதாகக் கூறுகிறார் அரசமைப்பு வல்லுனர் ஒருவர். “ஹூடூட் பற்றி தோக் குருவிடம் (கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசீஸ் நிக் மாட்) எடுத்துரைக்க கிளந்தான் சென்றேன். அங்கு சாதாரண மக்களிடம் பேசிப்…