குறைந்தபட்ச சம்பளம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறார் சுப்ரா

தனியார் துறையில் குறைந்த பட்ச சம்பள முறை அமலாக்கப்பட்டால் பொது மக்கள் மீது சிறிதளவு மட்டுமே எதிர்மறையான தாக்கத்தையே அது கொண்டிருக்கும் என அரசாங்கம் உறுதியாக நம்புவதாக மனித வள அமைச்சர் டாக்டர்  எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். சிறிதளவு மறைமுகமான தாக்கம் இருந்தாலும் இன்றியமையாப் பொருட்களின் விலை ஏற்றம்…

பிகேஆர்: ஷாரிஸாட் குடும்பத்தின் கொள்முதல்களையும் ஆய்வு செய்யுங்கள்

என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை புலனாய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்று நியமிக்கப்படவிருப்பதை பிகேஆர் வரவேற்றுள்ளது. என்றாலும் அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் கொள்முதல் செய்த அனைத்து அம்சங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என அது கேட்டுக் கொண்டது. அந்த ஆய்வில் குத்தகை வழங்கப்பட்ட…

முன்னாள் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத் தலைவர் டிஏபி-யில் இணைகிறார்

என்யூஜே என அழைக்கப்படும் தேசியப் பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் முகமட் ஹட்டா வாஹாரி, டிஏபி-யில் சேர்ந்துள்ளார். அண்மைய காலமாக பல மலாய்க்காரர்கள் அந்தக் கட்சியில் இணைந்து வருகின்றனர். ஹட்டாவை வரவேற்றுப் பேசிய டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அந்த முன்னாள் என்யூஜே தலைவர் பத்திரிக்கை…

ஷாரிஸாட் அவதூறு வழக்குத் தொடுக்கிறார்

ஷாரிஸாட் அப்துல் ஜலிலில் என்எப்சி ஊழல் தொடர்பில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்ற நெருக்குதல் அதிகரித்து வருகிறது. அதற்கிடையில் அவர் தம்மைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்ற இருவர் மீது வழக்குத்  தொடுத்துள்ளார். அந்த மகளிர், சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சர், பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவி…

நஸ்ரி: பெர்சே 3.0 தெருப் பேரணி நடத்தினால், விளைவை அனுபவிக்க…

தேர்தல் சீரமைப்புக்காக போராடும் பெர்சே அமைப்பு, மீண்டும் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம்  செய்தால் அதன் விளைவை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று நடப்பில் சட்ட அமைச்சர் நஸ்ரி அசீஸ் எச்சரித்துள்ளார். “தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தால், சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.” புத்ரா ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் நஸ்ரி இவ்வாறு தெரிவித்தார். …

சாலைக்கட்டண ரத்துமீது வாதிடத் தயாரா? நோர் முகம்மட்டுக்கு லிம் சவால்

சாலைக்கட்டணத்தை ரத்து செய்ய முடியாது என்று கூறும் பிரதமர்துறை அமைச்சர் நோர் முகம்மட் யாக்கூப் அதன்மீது தம்முடன் வாதமிடத் தயாரா என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் சவால் விடுத்துள்ளார். சில இடங்களில் சாலைக்கட்டணத்தை ரத்துச் செய்ய முடியும் என்று கூறிய லிம், அது பற்றி எந்த…

அமைச்சர்களின் சொத்துக்களை வெளிப்படுத்தல் ஆபத்தாக முடியலாம்

அமைச்சர்களும் அவர்களின் குடும்பத்தாரும் அறிவிக்கும் சொத்துவிவரத்தைப் பொதுவில் வெளிப்படுத்துவது “அவர்களுக்கு ஆபத்தாக முடியலாம்”. “இந்த விவரங்களைப் பகிரங்கப்படுத்தினால், அது சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடலாம்”, என்று பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் இன்று தெரிவித்தார். புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி இதனைத் தெரிவித்தார். எப்படிப்பட்ட “ஆபத்துகள்”…

ஷாரிசாட் பதவியிலிருந்து தூக்கப்படுவாரா?

நேசனல் ஃபீட்லாட் கார்ப்பரேசன் (என்எப்சி)மீது விசாரணை நடப்பதால் மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சர்  ஷாரிசாட் அப்துல் ஜலில், மூன்று வார விடுப்பில் சென்றுள்ளார். அவர் விடுப்பில் சென்றாலும் சென்றார் அதைப்பற்றித்தான் எங்கும் பேச்சாக உள்ளது. விடுப்பில் செல்வதாக அவர் அறிவித்த மூன்றாம் நாள் அது பற்றிக் கருத்துரைத்த மாற்றரசுக்…

50 ஆண்டுகள் போதும்; மேலும் காத்திருக்க முடியாது

உங்கள் கருத்து: “ஹிஷாம் அவர்களே, இன்னும் எவ்வளவு காலம் உங்களுக்கு வேண்டும்? மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பொறுமையாக இருப்பது?மேலும் 50 ஆண்டுகளுக்கு?" ஹிஷாமுடின்: மக்கள் சீரமைப்புகளுக்காகக் காத்திருக்கத் தயார் ஒய்எப்: மலேசியர்கள் சீரமைப்புக்காகக் காத்திருக்கிறார்களா? உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் அவர்களே, ‘பெரும்பாலோர்’ என்று தாங்கள் குறிப்பிட்டது…

சிங்கப்பூர் அளவு நிலம் தாயிப் தொடர்புடைய நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது

சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-உடன் தொடர்புடைய 31 நிறுவனங்களுக்கு செம்பனை பயிரிடுவதற்காக சிங்கப்பூர் அளவு பரப்புள்ள நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை சரவாக் நில அளவாய்வுத் துறையிலிருந்து கசிந்த பதிவேடுகள் காட்டுவதாக புருனோ மான்செர் நிதி நிறுவனம் கூறுகிறது. அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 198,882  ஹெக்டர் ஆகும்.…

மக்களைப் பிணையாக பிடித்து வைத்திருப்பது அரசாங்கமே, பெர்சே அல்ல

தேர்தல் சீர்திருத்தம் கோரி தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அமைப்பான பெர்சே 2.0 சமர்பித்த எட்டுக் கோரிக்கைகளும் "நியாயமற்றவை" அல்ல என அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார். பெர்சே 2.0 பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் மூன்றாவது சுற்றுப் எதிர்ப்புப் பேரணி நடத்தப்படலாம் என்றும் அவர் ஏற்கனவே கோடி…

குதப்புணர்ச்சி முறையீடு: அறிகுறிகள் இல்லாதது குறித்து சைபுல் தந்தை கவலை

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் குதப்புணர்ச்சி வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொள்வதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ளன. ஆனால் அந்த அலுவலகம் அதனைச் செய்வதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாதது குறித்து அஸ்லான் முகமட் லாஸிம் கவலை தெரிவித்துள்ளார். முறையீடு…

துணைப் பிரதமர்: என்எப்சி திட்டம் கணக்காய்வு செய்யப்படும்

அரசாங்கம் சர்ச்சைக்குரிய என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனத்தை கணக்காய்வு செய்வதற்கு கணக்காயர் நிறுவனம் ஒன்றை நியமிக்கும். அந்தத் தகவலை துணைப் பிரதமர் முஹைடின் யாசின் இன்று வெளியிட்டார். அந்த நிறுவனம் கடன் நீதிகளை பயன்படுத்தியது, நிர்வாகம்,  நடப்பு நிதி நிலை ஆகியவை அந்த  கணக்காய்வில் உட்பட்டிருக்கும்…

டிஏபி: சொய் லெக் எங்கு நின்றாலும் வீழ்த்திக்காட்டுவோம்

அடுத்த தேர்தலில் நீங்கள் எங்கு போட்டியிடப் போகிறீர்கள். சொல்லுங்கள். உங்களை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியுறச் செய்வோம். இப்படி மசீச  தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கை நோக்கி ஒரு  சவாலை விடுத்துள்ளார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். அப்படி அவர் அறிவித்தால் “லியோ தெங் லாய்…

ஹிண்ட்ராப், அம்னோவை வீழ்த்த ABU-உடன் இணைகிறது

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அம்னோவை புத்ராஜெயாவிலிருந்து அகற்றும் ஒரே நோக்கத்தைப் பகிர்ந்து கொண்டுள்ள "அம்னோவைத் தவிர வேறு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை" என்ற    ‘Asalkan Bukan Umno’ (Anything But Umno)  ABU-உடன் இணைந்து கொண்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பு இயக்கங்கள் அடுத்த பொதுத் தேர்தலில் ஒன்றிணைய வேண்டும் என்றும் அது கேட்டுக்…

நஜிப் எனக்கு எதிரான மருட்டல்களுக்கு “அங்கீகாரம்” அளித்தார் என அம்பிகா…

தேர்தல் சீர்திருத்தம் கோரி கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நடத்தப்பட்ட பொதுப் பேரணிக்கு முன்னதாக தமக்கு எதிராக விடுக்கப்பட்ட மருட்டல்களுக்கு பிரதமர் "அங்கீகாரம்" அளித்தார் என பெர்சே 2.0ன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமது "பயங்கரமான" கனவுகளை நினைவு கூர்ந்த அவர், "அரசாங்கத்தில்…

அமைச்சர்களின் துணைவியர்/துணைவர்கள் சொத்துக்களை எம்ஏசிசி-யிடம் அறிவிக்க வேண்டும்

அரசாங்க நிர்வாகத்தின் நேர்மையை உறுதி செய்யும் பொருட்டு அமைச்சர்களுடைய துணைவியர்/துணைவர்கள் தங்கள் சொத்து விவரங்களை எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விரைவில் அறிவிக்க வேண்டியிருக்கும். தி ஸ்டார் நாளேடு இன்று அந்தத் தகவலை வெளியிட்டது. அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளதாக  எம்ஏசிசி…

உத்துசான், அன்வாரின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கை பொருட்படுத்தவில்லை

திருநங்கைகள் தொடர்பாக அன்வார் இப்ராஹிமைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா இன்று மீண்டும் பெரிதுபடுத்தியுள்ளது. அந்த எதிர்த்தரப்புத் தலைவர் ஒரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க விரும்புகிறார் எனக் குற்றம் சாட்டி அந்த ஏடு ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தாம் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக காட்டும் முதல்…

சிஜாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் ஆட்சி மன்ற உறுப்பினராக பதவி…

சிஜாங்காங் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் அகமட் யூனுஸ் ஹைரி இன்று சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி-க்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற்றுக்…

கீழறுப்பு வேலை வேண்டாம், அம்னோவுக்கு அறிவுரை

பினாங்கு அம்னோ தலைவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்க முற்படும்போது உள்ளுக்குள் அடித்துக்கொள்வதையும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும். பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற விரும்பினால் இப்படிப்பட்ட செயல்களில் அறவே ஈடுபடக் கூடாது என்று உள்ளூர் மலாய் என்ஜிஓ (அரசுசாரா அமைப்பு) ஒன்று அறிவுறுத்தியுள்ளது.…

கெடாவில் பெருங்கூட்டம் பக்காத்தானுக்கு ஒரு நல்ல சகுனம்

உங்கள் கருத்து: “என்னதான் ரொக்கப் பணத்தைக் கொடுத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாலும்கூட பக்காத்தான் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தைப் போன்று அம்னோவால் திரட்ட முடிவதில்லை.” அலோர் ஸ்டாரில் பக்காத்தான் கூட்டத்தில் 10,000பேர் டாக்ஸ்: கெடாவில் பக்காத்தான் ரக்யாட் நிகழ்வுக்கு 10,000பேர் திரண்டனர். அதுவும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின்…

ஆயுதக் கொள்முதல் குறித்து ஸாகிட் துளைக்கப்படவிருக்கிறார்

நாளை தற்காப்பு அமைச்சர் ஸாகிட் ஹமிடியை சந்திக்க விருக்கும் மூன்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்ச்சைக்குள்ளான பல பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஆயுதக் கொள்முதல் குறித்து அவரை குடையவிருக்கின்றனர். டிஎபி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா, பிகேஆர் மாச்சாங் எம்பி சைபுடின் நசுடியன் மற்றும் பாஸ்…

ஹசன் அலியின் இடத்துக்கு சிஜங்காங் பிரதிநிதி நியமனம்

பாஸ் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ஹசன் அலிக்குப் பதிலாக, சிஜங்காங் சட்டமன்ற உறுப்பினர் அஹமட் யூனுஸ் சிலாங்கூர் ஆட்சிக்குழுவுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். யாரும் எதிர்பாராத ஒரு நியமனம் இது. சிலாங்கூர் பாஸ் ஆணையர் டாக்டர் ரனி ஒஸ்மானே அப்பதவிக்கு நியமனம் செய்யப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. புதிய ஆட்சிக்குழு உறுப்பினரான…