உணவகங்களுக்கு கட்டாய ஹலால் சான்றிதழை வழங்குவது வணிகங்களுக்கு சுமை மற்றும் மலேசியாவை உலகளாவிய கேலிக்கூத்தாக மாற்றும் என்ற தெரசாவின் கருத்துக்கள் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கிய பின்னர், முன்னாள் சட்டத்துறை மந்திரி ஜயிட் இப்ராஹிம் செபுதே எம்பி தெரசா கோக்-கை ஆதரித்தார். "தெரேசா கோக்அவர்களுக்கு எனது ஆதரவு அவர்…
இந்தியாவிலிருந்து தூதரக அதிகாரிகளை சிங்கப்பூர், மலேசியாவிற்கு மாற்றும் கனடா
பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தனது தூதரக ஊழியர்களைக் குறைக்க ஒட்டாவாவுக்கு அக்டோபர் 10 காலக்கெடு வழங்கியதைத் தொடர்ந்து, கனடா தனது பெரும்பாலான தூதரக அதிகாரிகளை புதுதில்லிக்கு வெளியே கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூருக்கு மாற்றியுள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து வெடித்துள்ள இராஜதந்திர ரீதியில்…
சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 100 -க்கும் மேற்பட்டோர் மாயம்
சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு…
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க நியூஸ்கிளிக் நிறுவனர் சதி – டெல்லி…
காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசமும் சர்ச்சைக்குரிய பகுதிகள் என்பதாக செய்தி பரப்ப நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா முயன்றதாக டெல்லி காவல் துறை குற்றம்சாட்டியுள்ளது. சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை பரப்புவதற்காக பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட…
ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது
இந்தியாவுக்குள், தமிழகம் எப்போதுமே, ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.5) சென்னை,…
அமெரிக்காவில் திறக்கப்படும் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை – ‘Statue of…
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 19 அடி உயர அம்பேத்கர் சிலை வரும் அக்.14 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தின் அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய சர்தார் வல்லபாய்…
ஆசிய டி20 கிரிக்கெட் நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டில் நேபாள அணிக்கு எதிராக 202 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் இந்தியாவின் இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் பதிவு செய்தார். இறுதி ஓவர்களில் வழக்கம்போல அதிரடியில் மிரட்டினார் ரிங்கு சிங். 19-வது ஆசிய விளையாட்டு போட்டி…
மகாராஷ்டிராவின் நான்டெட் அரசு மருத்துவமனையில் 48 மணி நேரத்தில் 31…
மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 16 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிராவின் நான்டெட் நகரில் உள்ளது ஷங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் நேற்று 24 மணி…
கொல்கத்தாவின் புதிய நகரத்தில் மருந்துகள் மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கும்…
கொல்கத்தா மக்கள், குறிப்பாக நியூ டவுன் பகுதியில் வசிப்பவர்கள், டெல்லியை தளமாகக் கொண்ட தளவாட தீர்வு வழங்குநர் அத்தகைய திட்டத்தைத் திட்டமிட்டுள்ளதால், மருந்துகள், மளிகைப் பொருட்கள் மற்றும் உணவு போன்ற பல்வேறு பொருட்களை ட்ரோன்களின் உதவியுடன் தங்கள் வீட்டு வாசலில் விரைவில் டெலிவரி செய்ய வாய்ப்புள்ளது. உள்ளூர் அதிகாரிகளின்…
பசுக்களை அடிமாடுகளாக விற்கும் இஸ்கான்: மேனகா காந்தி குற்றச்சாட்டுக்கு கோயில்…
நாட்டிலேயே மிக மோசடியான அமைப்பு இஸ்கான். இந்த அமைப்பு கோசாலையில் உள்ள பசுக்களை அடிமாடுகளாக விற்கிறது’’ என பாஜக எம்.பி. மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதை இஸ்கான் அமைப்பு மறுத்துள்ளது. பகவான் கிருஷ்ணரை வழிபடும் சர்வதேச அமைப்பாக இஸ்கான் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினர் கிருஷ்ணர்கோயில்களில் வழிபாடு…
கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில்…
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதை கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தமிழகஅரசு பேருந்துகளும், வாகனங்களும் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படும் என தெரிகிறது. டெல்லியில் கடந்த 26-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழுவின் 87-வது கூட்டத்தில், “தமிழகத்தின் குறுவை சாகுபடிக்காக கர்நாடக அரசு…
மணிப்பூரில் மீண்டும் இணைய சேவைகளுக்கு தடை
வன்முறை செயல்கள் தொடர்பான குறுஞ்செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருவதால் மணிப்பூரில் அடுத்த 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெடித்த புதிய போராட்டங்களைத் தொடர்ந்து மீண்டும் இணைய சேவைகளை ஐந்து நாட்களுக்கு மணிப்பூர் அரசாங்கம் நிறுத்தி…
ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது –…
நான் எஃப்பிஐ அமைப்பைச் சார்ந்தவரும் இல்லை. அதனால் நீங்கள் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை செய்யப்பட்டது பற்றிய கேள்வியை என்னிடம் கேட்பது பொருத்தமற்றது" என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த வெளியுறவு கூட்டமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம் கனடாவில்…
ஸ்பான்சர் விசா மூலம் இந்திய இளைஞர்களை அழைத்துச் சென்று கனடாவில்…
இந்திய அரசால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (45) கனடாவில் கடந்த ஜூன் 18-ம்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இதனால் இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காலிஸ்தான் தீவிரவாதிகள் ஸ்பான்சர்…
மணிப்பூர் வன்முறை, சமூக வலைதளங்களில் பரவிய மாணவர்கள் புகைப்படம்
மணிப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இணைய சேவை முடக்கம் தளர்த்தப்பட்ட நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான இரண்டு மாணவர்கள் சடலங்களின் புகைப்படத்தால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் காணாமல் போன அந்த இரு மாணவர்களின் சடலம் அடங்கிய புகைப்படங்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக…
சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சட்டம் - ஒழுங்கு பிரச்சினை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மத ரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சட்டம்…
இந்தியா உடனான தூதரக மோதலால் இரு நாட்டு ராணுவ உறவு…
இந்தியா - கனடா இடையேயான தூதரக மோதல், இரு நாட்டு ராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று இந்தியா வந்துள்ள கனடா ராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தோ - பசிபிக் ராணுவத் தலைவர்களின் 3 நாள் மாநாட்டில்…
இந்தியாவின் தலைமையில் ஜி-20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது…
ஐ.நா.வின் உலகளாவிய இலக்குகளை ஏற்றுக்கொள்வதில் இந்தியா முன்னோடியாக செயல்படுவதாக டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் ஐ.நா. சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பேசியதாவது;- இந்தியாவின் தலைமையில் ஜி-20 கூட்டமைப்பு ஒரு வரலாற்று…
கொரோனா பரவலின்போது பேருதவி – இந்திய அரசுக்கும், மக்களுக்கும் டொமினிக்கா…
கொரோனா பரவலின்போது சரியான தருணத்தில் பேருதவி செய்த இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நன்றி என டொமினிக்காவின் வெளிவிவகார மந்திரி அமெரிக்காவில் கூறியுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், டொமினிக்காவின் வெளிவிவகார துறை, சர்வதேச வணிகம், வர்த்தகம் மற்றும் ஆற்றல் துறைக்கான மந்திரியான டாக்டர் வின்ஸ் ஹெண்டர்சன்…
உயர் கல்வி, வேலைவாய்ப்புக்காக கனடா செல்வதை தவிர்க்கும் இந்திய மாணவர்கள்
உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றுக்காக இந்திய மாணவர்கள், இளைஞர்கள் கனடா நாட்டை தவிர்க்க தொடங்கியுள்ளனர். காலிஸ்தான் தீவிரவாதி நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா மீது, கனடா நேரடியாக குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது. இது உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த…
வெள்ளத்தில் மிதக்கும் நாக்பூர், மீட்புப் பணியில் மத்தியப் படைகள்
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த திடீர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்களை அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் சூழல் உருவானது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, நாக்பூர் விமான நிலையப் பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் 106 மில்லி மீட்டர்…
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு – கர்நாடகா முழுவதும்…
தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கடந்த 18-ம்தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடக அரசுக்கு உத்தரவிரப்பட்டது. இதை…
உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர்…
இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத்…
இணைந்து பணியாற்ற வாருங்கள் – இந்திய அரசுக்கு கனடா பிரதமர்…
கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்திய அரசு இடைக்கால தடை விதித்துள்ளது. எங்களுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என இந்தியாவுக்கு கனடா பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவால் தேடப்படும் பல சீக்கிய பயங்கரவாதிகள் சிலர் கொல்லப்பட்டனர். கனடாவில் நிகழ்ந்த இந்தக் கொலைகளுக்கு இந்தியாதான் காரணம் என்று கனடா…