சீன ஆட்சிக்கு எதிராக மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து இறந்தார்

திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேலும் ஒரு திபெத்தியர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளார். திபெத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும், புத்த கலாச்சாரத்தை ஒடுக்கும் சீன அரசை கண்டித்தும், தலாய் லாமா நாடு திரும்ப கோரியும் திபெத்தியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சீனாவின் அடக்குமுறையை எதிர்த்து…

கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் குவைத்

குவைத்சிட்டி: குவைத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடாநாடான குவைத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குவைத் நகர் வெள்ளக்கடானாது. முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் அங்கிருந்த கார்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.…

கேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிப்பு

ஆப்ரிக்காவின் கேமரூன் நாட்டில் பள்ளிக்கூடத்திலிருந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 78 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில், தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள…

சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகள் இனி அமெரிக்காவில் புகலிடம் கோர முடியாது

குடியேறிகள் தொடர்பான ஒரு புதிய விதியின்படி, நாட்டின் தெற்கு எல்லை வழியாக சட்டவிரோதமாக நுழையும் குடியேறிகளுக்கு இனி அமெரிக்காவில் தஞ்சம் கோர உரிமை இல்லை என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நீதி மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைகள் வெளியிட்ட புதிய உத்தரவின்படி குடியேறிகள் தொடர்பான அதிபரின் தடையை…

தௌசன்ட் ஓக்ஸ்: கலிஃபோர்னியா பாரில் சரமாரி துப்பாக்கிச் சூடு –…

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் உள்ள தௌசண்ட் ஓக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாரில் ஒரு மர்ம நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தாக்குதலில் ஈடுபட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இது தவிர குறைந்தது 10 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடந்தபோது பாரில் கல்லூரி இசை விழா ஒன்று நடைபெற்றுவந்தது.…

வங்காளதேசத்தில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை போலீசார் சுட்டுக் கொன்றனர்..

டாக்கா: வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஓட்டலில் பணயக் கைதிகளாக பிடிபட்டிருந்த இந்தியாவை சேர்ந்த கல்லூரி மாணவியான தாரிஷி ஜெயின் உள்பட 20 வெளிநாட்டினர் கழுத்தை அறுத்தும், துப்பாக்கிகளால் சுட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். மீட்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில்…

வடகொரிய தலைவருடனான அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை ரத்து

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இரு தரப்பிலும்…

அமெரிக்க தேர்தல்: கீழவையில் தோல்வி, செனட்டில் வெற்றி, கொண்டாடும் டிரம்ப்

அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் அவை (கீழவை)யில் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், செனட் அவையில் குடியரசுக் கட்சி அதிகம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இது பெரிய வெற்றி என்று கொண்டாடுகிறார் டிரம்ப். பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை பெற்றுள்ள…

அமெரிக்க இடைக்கால தேர்தல்: ஜனநாயக கட்சி வெற்றி – டிரம்புக்கு…

அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்காக நடைபெற்ற இடைக்கால தேர்தலில் வென்றதன் மூலம் ஜனநாயக கட்சி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் முதல்முறையாக அந்நாட்டின் கீழவையை கைப்பற்றியுள்ள ஜனநாயக கட்சிக்கு இந்த வெற்றி அதிபர்…

இராக்கில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு

200க்கும் அதிகமான மனித புதைக்குழிகள், ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுப்பு இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துகொள்ளும் குழுவினர் கட்டுப்பாட்டில் முன்பு இருந்த இராக் பகுதிகளில் 200க்கும் அதிகமான மனித புதைக்குழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் உள்ளதை ஐநாவின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் போன்ற…

ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை ஒன்றில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் திடீர்…

காபூல், ஆப்கானிஸ்தானில் வடக்கே பன்ஷீர் பகுதியில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது.  இங்கு புதிதாக பிறந்த 12 குழந்தைகளுக்கு திடீரென பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இதனை தொடர்ந்து அவை தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்பின் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் குழந்தைகள் அனைத்தும் உயிரிழந்து விட்டன.  இதனை அடுத்து…

“நிகழவே முடியாத அதிசயம்” – 18 மாத குழந்தையை கடலிலிருந்து…

நிகழவே நிகழ முடியாத அதிசயம் என வர்ணிக்கப்படும் நிகழ்வொன்றில் பெருங்கடல் ஒன்றிலிருந்து 18 மாத குழந்தையை மீட்டு இருக்கிறார் மீனவர் ஒருவர். இந்த சம்பவமானது நியூஸிலாந்தில் நிகழ்ந்துள்ளது. நியூஸிலாந்து வடக்கு தீவு ஒன்றில் உள்ள மடாடா கடற்கரையில் கஸ் ஹட் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது கடலில் மீன்…

இரான் பொருளாதாரத் தடைகள்: அமெரிக்காவுக்கு சவால் விடும் ரூஹானி

இரானின் எண்ணெய் வணிகத்தை கடுமையாக தாக்கும் நோக்கத்தோடு அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகின்றன. இரான் பொருளாதாரத்தை இலக்கு வைத்து நாட்டின் முக்கிய துறைகள் மீது அமெரிக்க மீண்டும் விதித்துள்ள தடைகளை "தகர்ப்பதாக" இரான் அதிபர் ஹசன் ரூஹானி சவால் விடுத்துள்ளார். இரானுக்கு…

கேமரூன் நாட்டில் 78 பள்ளி மாணவர்கள் கடத்தல்

ஆப்பிரிக்க நாடான கேமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து பெருமளவு மாணவர்கள் கூண்டோடு கடத்தப்பட்டதாக அஞ்சப்படுகிறது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் நடந்த இச்சம்பவத்தில் குறைந்தது 78 மாணவர்கள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட வேறு மூவர் கடத்தப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் பிபிசியிடம்…

சுய நிர்ணய உரிமைக்கு எதிராக வாக்களித்த நியூ கலெடோனியா மக்கள்

பிரஞ்ச் பசிபிக் பகுதியில் உள்ள நியூ கலெடோனியா மக்கள் சுதந்திரத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். பிரான்ஸிலிருந்து விடுதலை பெற்று தனி நாடாக அரசமைக்கலாமா அல்லது பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாமா என்பதற்காக நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் 56.4 சதவீதம் பேர் பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாம் என்று வாக்களித்துள்ளனர். பிரிந்து சென்று தனி…

பஹ்ரைன் நாட்டில் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆயுள் சிறை

துபாய், வளைகுடா நாடான பஹ்ரைனில் சன்னி பிரிவினரின் ஆட்சி நடக்கிறது. அங்கு மன்னராட்சியை ஒழித்து விட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதமரை கொண்ட ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஷியா பிரிவினர் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை ராணுவம் ஒடுக்கியது. அதைத் தொடர்ந்து அங்கு குழப்பமான நிலை நீடித்து வருகிறது.…

ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால்…

ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்தார். அந்தக் குழுவுக்கு…

இரத்த தானம் ஆயுளை கூட்டும்..

இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம்.   ‘இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்து வந்தால் புற்றுநோய்…

அமெரிக்காவில் யோகா அரங்கத்தில் துப்பாக்கிச்சூடு 3 பேர் சாவு

மியாமி, யோகா அரங்கில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5.45 மணிக்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்து, அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதனால் பெரும் பதற்றம் உருவானது. உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் வருவதற்குள் பலரை அந்த மர்ம நபர் துப்பாக்கியால்…

தடையை நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதை – அமெரிக்காவுக்கு…

பியாங்யாங்: எங்கள் நாட்டின்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுதப் பாதைக்கு செல்வோம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவுடன் அவர் ஒரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாவிட்டாலும், வடகொரியா அணுகுண்டு சோதனையோ, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை…

சிரியா – ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள 50,000 மக்கள் –…

சிரியா - ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள சுமார் 50,000 மக்களுக்கு முதலுதவிகள் செய்ய அதற்கு தேவையான பொருட்களுடன் ஐ.நா உதவிக்குழு வந்தடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து முதன்முறையாக அவர்களுக்கு உதவி கிடைக்கப் பெற்றுள்ளது. அக்டோபர் 27ஆம் தேதி ருக்பன் முகாமிற்கு வரவிருந்த உதவிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டது.…

மெக்சிகோ எல்லையில் 15 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு- அமெரிக்க…

வாஷிங்டன்: அமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் ஊடுருவி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்க அதிபர் டிரம்ப் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பெரும்பாலான வெளிநாட்டினர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவுகின்றனர். அதை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக எல்லை நெடுகிலும் ராணுவத்தை நிறுத்தி தீவிர…

ஜமால் கஷோக்ஜி கொலை: செளதி அரசாங்கத்தை முதன்முறையாக நேரடியாக குற்றம்…

செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் முதன்முறையாக செளதி அரசாங்கம் மீது நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார். "வாஷிங்டன் போஸ்டில் அவர் எழுதிய செய்தியில் செளதி அரசாங்கத்தில் உயர்மட்ட நிலையில் இருப்பவர்களிடமிருந்து கஷோக்ஜியை கொல்ல ஆணை வந்ததாக எங்களுக்கு தெரியும்"…