‘கொழுப்புக்கு வரி’- டென்மார்க்கில் புதிய சட்டம்

உலகிலேயே முதல் முறையாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளுக்கான வரியை டென்மார்க் அறிமுகப்படுத்தியுள்ளது. எந்தெந்த உணவுப் பொருட்களில் உடல் நலத்துக்கு கெடுதல் ஏற்படுத்தும் கொழுப்புகள் அதிக அளவில் உள்ளதோ, அப்படியான பொருட்களின் மீது கூடுதல் வரியை டென்கார்க் அறிவித்துள்ளது. ‘சாச்சுரேட்டட் ஃபேட்’ என்றழைக்கப்படும், உடலில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருட்களை அதிக…

நியூயார்க்கில் ஆர்ப்பாட்டம்; 700 பேர் கைது

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து பேரணி நடத்த முயன்ற ஆயிரக்கணக்கானோரில், 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட பிற நகரங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அமெரிக்க அரசியலில், தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும், அமெரிக்க சமூகத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வு…

சவுதியில் கார் ஓட்டிய பெண்ணுக்கு கசையடி

சவுதி அரேபியாவில், பெண்களுக்குப் புதிய உரிமைகள் அறிவிக்கப்பட்ட இரு நாட்களில், கார் (மகிழூந்து) ஓட்டியதற்காக முதன் முறையாக ஒரு பெண்ணுக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் மன்னர் அப்துல்லா, 2015 நகராட்சித் தேர்தல்களில் பெண்கள்…

இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை விசாரிக்க கோரிக்கை

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை உரிமக் கட்டணங்களை முன்னாள் இந்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவும் தற்போதைய உள்துறை அமைச்சரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரமும் இணைந்து முடிவெடுத்ததாகவும் அதுதொடர்பாக அவர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி…

நோபல் பரிசு வென்ற வங்காரி மத்தாய் மரணம்

சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணியான வங்காரி மத்தாய் புற்று நோய் காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 71. கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள மருத்துவமனையில் புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார். சூழல் மற்றும் மனித…

நேபாள விமான விபத்தில் 19 பேர் பலி; 8 பேர்…

நேபாளத்தில் நடந்துள்ள  விமான விபத்தில் 19 பேர் பலியாகியுள்ளனர். அவர்களில் 8 பேர் திருச்சியை சேர்ந்த தமிழர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்களை திருச்சி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இமய மலைத்தொடரில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு வட்டமடித்து காண்பித்துவிட்டு நேபாளத் தலைநகர் காத்மாண்டு திரும்பிக்கொண்டிருந்த…

முகத்திரை அணிந்த முஸ்லிம் பெண்களுக்கு பிரான்ஸில் அபராதம்

பிரான்ஸில் முழுமையான முகத்திரை அணியக்கூடாது என்ற புதிய சட்டம் வந்த பின்னரும் அதனை தொடர்ந்து அணிந்த இரு பெண்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்று அபராதம் விதித்துள்ளது. முழுமையான முகத்திரைகளை அணியக்கூடாது என்ற தடை கடந்த ஏப்ரல் மாதத்தில் வந்த பின்னர் அதன் அடிப்படையில் அபராதம் விதிக்கப்படுவது இதுதான்…

கடாபி ஆதரவாளர்கள் கடும் தாக்குதல்; எதிர்ப்பாளர்கள் பின்னடைவு

லிபியாவின் இரு நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதால் கடாபி எதிர்ப்பாளர்களின் தாக்குதல் பின்னடைந்துள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் லிபியாவின் இடைக்கால அரசு முனைந்துள்ளது. லிபியாவின் பானி வாலித் மற்றும் சிர்ட் நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நகரங்களை கைப்பற்ற கடாபி எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தை…

லிபியா இடைக்கால அரசுக்கு இந்தியா ஆதரவு

லிபியாவில் அமைய உள்ள இடைக்கால அரசிற்கு இந்தியா ஆதரவு தர உள்ளது. இதற்காக ஐ.நா.வில் நடக்கவுள்ள பொதுச்சபைக்கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கவுள்ளது. ஐ.நா.வின் 66-வது பொதுச்‌சபைக் கூட்டம் செப்டம்பர் 20-ம் தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் அந்நாட்டு தலைமையமைச்சர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். கடந்த 1-ம்…

வறுமையில் நான்கு கோடியே 60 இலட்சம் அமெரிக்கர்கள்!

அமெரிக்காவின் பொருளாதாரம் மிகக் குறைந்த வேகத்தில் வளர்வதால் அங்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் அண்மைய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பிரிவின் இயக்குனர், நேற்று முன்தினம் அமெரிக்காவில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டார். அதன்படி,…

பாகிஸ்தானில் கடும் வெள்ளம்; 218 பேர் பலி!

பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள 23 மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 218 பேர் உயிரிழந்துள்ளனர்.  400 பேர் காயம் அடைந்துள்ளனர். 55 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 45இ லட்சம் ஏக்கர்…

பரமக்குடியில் கலவரம்; துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 4 பேர் பலி

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஐந்து முனைச் சாலையில் தலித் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இருவரின் உடல்கள் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கும் மற்ற இருவரது உடல்களும் இராமநாதபுரம் மற்றும் மதுரை அரச மருத்துவமனைகளுக்கு…

டில்லி தாக்குதல் உள்நாட்டுப் பயங்கரவாதிகளின் செயல்: சிதம்பரம்

இந்தியத் தலைநகர் டில்லியின் உயர்நீதிமன்ற வளாகத்தில் இந்த வாரம் நடத்தப்பட்டிருந்த குண்டுத் தாக்குதலை இந்தியாவிலிருந்து இயங்கும் தீவிரவாதக் குழுக்கள் செய்திருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இத்தாக்குதலின் பின்னர் முதல்தடவையாக பேட்டியளித்துள்ள சிதம்பரம், இந்தியாவில் நடக்கின்ற தாக்குதல்களில் எல்லை தாண்டிய தீவிரவாதமே…

லிபியாவை விட்டு தப்பி ஓடவில்லை; கர்ணல் கடாபி

லிபிய குடியரசுத் தலைவர் கர்ணல் கடாபிக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினர் தலைநகரம் திலிபோலியை அண்மையில் கைப்பற்றினார்கள். இதையடுத்து கடாபி திரிபோலி நகரில் இருந்து தப்பி ஓடினார். அவர் இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. கடாபியின் சொந்த ஊர் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. அங்குதான்…

டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு; 9 பேர் பலி

இந்தியாவின் டில்லி உயர் நீதிமன்ற வாளாகத்தினுள் இன்று காலை 10: 17 மணிக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 9 பேர் பலியானதாகவும் 45-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கம்போல் இன்று காலை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரும் பணிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்றத்தின் 5-வது நுழைவாயில் அருகே…

தமிழர்களை கொச்சைப்படுத்திய தினமலர் தமிழகத்தில் எரிக்கப்பட்டது

ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட  மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக்கோரி உயிர்த்தியாகம் செய்துக்கொண்ட தோழர். செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தி கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை எரித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அண்மையில் தீக்குளித்து உயிர் தியாகம் செய்த தோழர். செங்கொடி…

இந்தியாவின் புதிய தகவல்: விக்கிலீக்ஸ் அம்பலம்

மும்பைத் தாக்குதல் சம்பவத்தின்போது முக்கிய நபராக செயற்பட்டவரை நாடு கடத்தி கொண்டு வருவதற்கு இந்தியா ஆர்வம் காட்டவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறியதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் திகதி பயங்கரவாதத்…

இந்திய கடற்படை கப்பலை வழிமறித்த சீனப் போர்க் கப்பல்

வியட்னாம் கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலை சீனப் போர்க் கப்பல் வழிமறித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை இந்தியா மறுத்துள்ளது. தென் சீனக் கடல் முழுமையும் தனக்குத் தான் சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், இக்கடற்பகுதியில் அமைந்துள்ள வியட்னாம், மலேசியா, புருனே…

தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி இளம்பெண் தீக்குளிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி (வயது 19) என்ற இளம் பெண் காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.   இதுபற்றிய காவல்துறை விசாரணையில், ராஜீவ்…

அமெரிக்காவை மிரட்டும் ‘ஐரீன்’ சூறாவளி

'ஐரீன்' சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட அட்லாண்டிக் பெருங்கடல்…