தைவான் நிலநடுக்கம்: 600 மீட்டர் நீளமான பாலம் இடிந்து விழுந்து…

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 600 மீட்டர் அளவிலான அழகிய சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் உள்ள கவோலியாவ் பாலம் இடிந்து விழுந்துள்ளது. தைவான் நாட்டின் தென்கிழக்கு கடலோர பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.…

மியான்மரில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பள்ளியை குறிவைத்து தாக்குதல்- 7 குழந்தைகள்…

ராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல். துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்,…

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த புயல் – மக்களின் இயல்பு வாழ்க்கை…

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்தப் புயலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கியாஷூ தீவை நான்மடோல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த…

பிரியாவிடை கொடுத்த மக்கள்… இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்…

ராணி எலிசபெத் உடல் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி பிரார்த்தனை செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது வழிநெடுக்க பொதுமக்கள், ராணிக்கு இறுதி மரியாதை செலுத்தி பிரியாவிடை கொடுத்தனர். பிரிட்டனை நீண்ட காலம் ஆட்சி செய்த மகாராணி இரண்டாம் எலிசபெத் (வயது 97) உடல் நலக்குறைவு காரணமாகவும், வயது…

சீனப் படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் –…

சீனா உடனான விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சீன படையெடுப்பு ஏற்பட்டால் தைவானை அமெரிக்கா பாதுகாக்கும் என்றார் அதிபர் ஜோ பைடன். தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. சமீபத்தில் அமெரிக்க சபாநாயகர்…

போலீஸ் தாக்குதலில் இளம்பெண் மரணம் – ஹிஜாப்பை எரித்து, தலைமுடியை…

ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக்கூறி கைதுசெய்யப்பட்ட இளம்பெண் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார். போலீஸ் தாக்குதலில் இளம்பெண் இறந்ததற்கு எதிர்த்து ஈரான் பெண்கள் தலைமுடியை வெட்டி போராட்டம் நடத்தினர். ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை…

உக்ரைனில் அணு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம்- ரஷிய அதிபர் புதினுக்கு…

உக்ரைனில் தீவிர தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா எச்சரித்து உள்ளதால் சிறிய அணு ஆயுதங்கள் அல்லது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று தகவல். ரஷ்யா என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்து என்ன பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தீர்மானிக்கப்படும். உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை…

‘வடகிழக்கு உக்ரேனில் 10க்கும் அதிகமான “கொடுமைப்படுத்தும் அறைகள்” கண்டுபிடிக்கப்பட்டன’

உக்ரேனின் வடகிழக்குப் பகுதியில் 10க்கும் அதிகமான "கொடுமைப்படுத்தும் அறைகள்" கண்டுபிடிக்கப்பட்டதாய் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருக்கிறார். அது குறித்து CNN செய்தி வெளியிட்டுள்ளது. அறைகளில் ரஷ்யத் துருப்புகள் உக்ரேனிய  வீரர்களைத் துன்புறுத்தப் பயன்படுத்திய கருவிகளும் தென்பட்டதாய் அவர்  சொன்னார். ஹர்கீவ் வட்டாரத்தில் உக்ரேனியப் படைகள் சில இடங்களை மீட்டுள்ளன.…

தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடுத்தது ஜப்பான்

தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. புஜியன், குவாங்டாங், ஜியாங்சு மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் நில அதிர்வுகள் தெளிவாக உணரப்பட்டது. தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த…

அடைக்கலம் நாடுங்கள் – ஜப்பானில் இரண்டு மில்லியன் மக்களிடம் வேண்டுகோள்

ஜப்பானில் கடும்புயல் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் அடைக்கலம் நாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஜப்பானிய வானிலை ஆய்வகம் மிகவும் அரிதாக வெளியிடும் புயல் குறித்த சிறப்பு எச்சரிக்கையை விடுத்திருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவை நோக்கி அபாயகரமான நன்மடோல்…

எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கு – லண்டனுக்குப் புறப்பட்டுள்ள உலகத் தலைவர்கள்

எலிசபெத் அரசியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள உலகத் தலைவர்கள் லண்டனுக்குப் புறப்பட்டுள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது துணைவியாரும் இன்று (18 செப்டம்பர்) அரசியாருக்கு மரியாதை செலுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 500 உலகத் தலைவர்களும் அரசதந்திரிகளும் 19 செப்டம்பர் நடைபெறும் அரசியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கவிருக்கின்றனர். அரச குடும்பத்தினர் உள்ளிட்ட…

அமெரிக்காவில் அறிமுகமாகிறது உலகின் முதல் பறக்கும் பைக்

உலகின் முதல் பறக்கும் பைக் என்ற வாகனம் அமெரிக்காவில் அறிமுகமாகியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த ஏர்வின்ஸ் நிறுவனம் இந்த பறக்கும் பைக்கை உருவாக்கி உள்ளது. எரிபொருள் தேவையை மிச்சப்படுத்தும் வகையில் சூரிய சக்தி, மின்சக்தியில் ஓடும் வாகனங்கள், விபத்துக்களை தடுக்கும் வகையில் அதிநவீன சென்சார்கள், கேரமாக்களை கொண்ட தானியங்கி வாகனங்கள்…

இத்தாலியை ஒரே நாளில் மூழ்கடித்த கனமழை! 9 பேர் பலி

இத்தாலியின் மத்திய பகுதியில் ஒரே நாளில் பெய்த கனமழையில் ஒன்பது பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் மார்ச்சே பகுதியில் ஒரு வருடத்தின் மூன்றில் ஒரு பங்கு மழை, ஒரே நாள் இரவில் முழுவதுமாக கொட்டி தீர்த்ததை தொடர்ந்து, ஏற்பட்ட வெள்ளத்தில் ஒன்பது பேர்…

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 சிரியா வீரர்கள் உயிரிழப்பு

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவின் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த போரால் பெண்கள், குழந்தைகள் உள்பட அந்நாட்டின்…

உக்ரைனின் இசியம் நகரில் தோண்டும்போது கிடைத்த 400க்கும் அதிகமான உடல்கள்…

ரஷியாவின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட இசியம் நகரில் 400க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு புதைக்கப்பட்டோரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ரஷியா போர் தொடுத்தது. இன்று வரை நீடிக்கும் இந்தப் போரில் ஏராளமான உக்ரைன் வீரர்கள்,…

கூகள், மெட்டா நிறுவனங்களுக்கு 71 மில்லியன் டாலர் அதிரடி அபராதம்…

அமெரிக்காவின் இரு பெரிய தொழில்நுட்ப  நிறுவனங்களான கூகள்  (Google), மெட்டா (Meta) இரண்டுக்கும் தென் கொரியா 71 மில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை அபராதமாக விதித்துள்ளது. விளம்பர நோக்கத்திற்காக பயனீட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகளை அனுமதியின்றி பயன்படுத்திய  குற்றத்திற்காக அந்தத் தொகை விதிக்கப்பட்டது. தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அத்துமீறியதற்காக  தென்…

மனிதகுலம் தவறான பாதையில் போகிறது: ஐக்கிய நாட்டு நிறுவனம்

பருவநிலை மாற்ற விவகாரத்தில் மனிதகுலம் தவறான பாதையில் போய்க்கொண்டிருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியிருக்கிறது. நிலக்கரி, எண்ணெய் போன்ற படிம எரிபொருள்களை உலக நாடுகள் இன்னமும் நம்பியிருப்பதே அதற்குக் காரணம் என்று உலக நிறுவனத்தின் அறிக்கை கூறியது. பல்வேறு அமைப்புகள் முன்வைத்த அறிக்கைகளை உலக வானிலை அமைப்பு தொகுத்து…

பயங்கரவாதி மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் பதுங்கல்? கைது செய்து ஒப்படைக்கும்படி…

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக 2019-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது. பயங்கரவாதி நஞ்கர்ஹர் மாகாணத்திலோ அல்லது குனார் மாகாணத்திலோ பதுங்கி இருக்கலாம். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போலி ஆவணங்கள் மூலம் காஷ்மீரின் ஸ்ரீநகருக்குள் நுழைந்தபோது…

பாகிஸ்தானில் முதலில் வெள்ளம்…இப்போது புழுதிப் புயல்

பாகிஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிந்து மாநிலத்தில் புழுதிப்புயல் வீசியதில் தற்காலிகக் கூடாரங்கள் தரைமட்டமாகிவிட்டன. கடும் வெள்ளத்தால் வீடுகளை இழந்தோர் தற்காலிகக் கூடாரங்களை அங்கு அமைத்திருந்தனர். இந்நிலையில் அடுத்த சில நாள்களில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. கூடாரங்களை மீண்டும் தூக்கிநிறுத்துவதற்கு மக்கள் போராடி வருகின்றனர். இல்லையென்றால் புதிய…

கென்யா அதிபராக பதவியேற்றார் வில்லியம் ரூடோ

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் தேர்தல் கடந்த மாதம் 9-ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் வில்லியம் ரூடோ வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வானார். ஆப்பிரிக்காவில் உள்ள குடியரசு நாடான கென்யாவில் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் எதிர்க்கட்சி…

ரஷியாவிடம் இருந்து 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு

ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள். கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை எங்களது படைகள் மீட்டெடுத்து உள்ளன. உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. தற்போது கிழக்கு உக்ரைனில் தீவிர தாக்குதலை நடத்தி…

புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது புதிய கனவு: அமெரிக்க அதிபர்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புற்றுநோயால் ஏற்படக் கூடிய மரணங்களைக் குறைக்கும் புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறார். உயிர்த்தொழில்நுட்ப உற்பத்தி, ஆய்வு ஆகியவற்றுக்கு மேலும் ஆதரவு நல்குவது புதிய திட்டம். முன்னைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி (John F Kennedy) ஆற்றிய நிலவு உரையின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி அதிபர் பைடன் பேசினார்.நிலவுக்குச் செல்வதைக் கனவாகக் கொண்ட உரை அது. அதை ஒட்டிப் பேசிய அதிபர் பைடன், புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது புதிய கனவு என்றார்.அடுத்த இருபத்தைந்து ஆண்டில் புற்றுநோய்த் தொடர்பான மரணங்களைப் பாதியாகக் குறைப்பது நோக்கம் என்றார் அவர்.…

ஜப்பான்: நாட்டின் தென்மேற்கிலுள்ள பல தீவுகளில் கடுமையான புயல்

ஜப்பானின் தென்மேற்கில் உள்ள பல தீவுகளைக் கடுமையாகப் புயல் தாக்கி வருகிறது. முயிஃபா (Muifa) புயல் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது. பலத்த காற்றும் கனமழையும் அடுத்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மேலும் கடுமையாகும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். 10 மீட்டர் உயரம் வரை அலை உயரலாம்…