ஐஸ் கோபுரங்கள்: இமய மலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு விஞ்ஞானிகள்…

இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து மேம்படுத்தி வருகின்றனர். அந்தப் பனிமலையை 'ஐஸ் ஸ்தூபம்' (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கின்றனர். இது 2013ஆம் ஆண்டு சோனம் வாங்சுக் என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யோசனை இப்போது…

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை தேடும் கொலையாளிகள் –…

ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி…

ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது…

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக…

வடகொரியா ஏவுகணை சோதனை

குறைந்த தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை ஒன்றை அதன் கிழக்கு கடலோரப் பகுதியில் வட கொரியா செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏவியுள்ளது என்று தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான மற்றும் ஆயுதங்களை சோதனை செய்வதற்கான வடகொரியாவின் உரிமையை யாராலும் தடுக்க முடியாது என்று வடகொரியாவின் தூதர் ஐக்கிய…

மாற்று எரிசக்தி: பசுமை ஆற்றல் மூலம் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் ஆப்பிரிக்கா

COP26 பருவநிலை உச்சிமாநாட்டுக்கு முன்னதாக, உலகின் அதிக பசுமை ஆற்றலை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் C02 உமிழ்வைக் குறைப்பது என உலகின் பிற பகுதிகள் சிந்திக்கும் வேளையில், ​​ஆப்பிரிக்கா இந்த சவால் மாறுபட்ட வகையில் அணுகப்படுகிறது. பூமியில் உள்ள பலருக்கும், எந்தவொரு ஆற்றல் விநியோகத்தையும் அணுகுவதே சவால் என்றால்,…

ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு: முகச் சவரம் செய்யத் தடை

சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத…

23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால மனித காலடித் தடம்…

அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதர்களின் காலடித் தடங்கள் 23 ஆயிரம் ஆண்டுகள் முதல் 21 ஆயிரம் ஆண்டுகள் முன்பு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் முன்பு கருதப்பட்டதைவிட 7 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே மனிதர்கள் அமெரிக்க கண்டத்தில் கால்பதித்திருக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆசியாவில்…

ஜெர்மன் தேர்தல்: ஏங்கலா மெர்க்கலுக்கு பிறகு புதிய ஆட்சித்துறைத் தலைவர்…

ஜெர்மனியில் பொதுத்தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கிறு. 16 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நாட்டின் வாக்காளர்கள், தங்களுடைய ஆட்சித்துறைத் தலைவரை தேர்வு செய்ய இன்று வாக்குச்சாவடிகளுக்குச் செல்கின்றனர். யார் அடுத்த ஆட்சித்துறைத் தலைவர், யாருக்கு வெற்றி வாய்ப்பு, யாருடைய கூட்டணி ஆட்சியமைக்கும் என எதுவும் தெளிவில்லாத நிலையில் இன்றைய வாக்குப்பதிவு…

நரேந்திர மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது…

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் நியூயார்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியபோதும், மோதியின் அமெரிக்க பயணம், அந்நாட்டு ஊடகங்களில் பிரதான செய்திகளாக…

ஸ்பெயினின் லா பால்மா எரிமலை வெடிப்பு; தொடர்ந்து வெளியாகும் நெருப்புக்…

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரையையொட்டி அமைந்துள்ள கானெரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட இந்த தீவில் கடந்த ஞாயிறன்று 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து லா பால்மா எரிமலை வெடித்துச் சிதறியது.…

நரேந்திர மோதி – கமலா ஹாரிஸ் முதல் முறையாகச் சந்திப்பு

அமெரிக்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை முதல் முறையாக நேரில் சந்தித்துப் பேசினார். அமெரிக்க வரலாற்றில் துணை அதிபரான முதல் பெண் என்ற பெருமையைப் பெற்ற கமலா ஹாரிஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். வாஷிங்டனின் நடந்த இந்தச் சந்திப்பின்போது துணை…

பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள்…

உலகத் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து உலகின் மொத்த மக்கள்தொகையில் 70% பேருக்குத் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளிக்குமாறு அதிபர் பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பல வளர்ந்த நாடுகளில் தேவைக்கதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், அவை வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இரானை நோக்கிச் செல்லும் விமானத்தில் ஏறினார் பஹார். நான்கு…

இம்ரான் கான்: தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு…

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை தடுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பிபிசி உடனான நேர்காணலில், ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் தாலிபன்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சில நிபந்தனைகளை இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார். தாலிபன்களின் தலைமை அனைத்து…

எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட்: உலகிலேயே மிக அதிக கடன் வாங்கிய…

சீன நிறுவனமான எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் கடந்த சில காலமாக மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் இந்த வாரம் ஒரு முக்கிய சோதனையை எதிர்கொள்வதால் உலக பங்குச் சந்தைகள் எல்லாமே மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. உலகின் மிகவும் கடன்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான 'எவர்கிராண்ட்'…

சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக…

சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசோதனைக்கு உட்படுத்தியது. அதில், ஸியோமி ரக…

உணவின்றி, மருந்தின்றி குழந்தை பிரசவிக்கும் ஆப்கன் பெண்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய மருத்துவமனையில், பிரசவித்த சில நாட்களுக்குப் பிறகு, ராபியா தனது பிறந்த குழந்தையைத் தொட்டிலாட்டுகிறார். "இது எனது மூன்றாவது குழந்தை, ஆனால் இந்த அனுபவம் முற்றிலும் வித்தியாசமானது. அது கொடூரமானது," என்று அவர் கூறுகிறார். ராபியா குழந்தையைப்…

வைபர் ரோவர்: நிலவில் பனிக்கட்டிகளா? மனித இனம் காணாத இடத்துக்குச்…

நிலவின் தென் துருவத்தில் தண்ணீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா என சோதனைகளை மேற்கொள்ள நாசா ஒரு இயந்திர ரோவரை அனுப்பவிருக்கிறது. 2023ஆம் ஆண்டு நோபில் க்ரேட்டர் என்கிற பகுதிக்கு அருகில் மேற்கு முனையில் அந்த ரோவர் தரையிறங்கவிருக்கிறது. இந்த நோபில் க்ரேட்டர் சுமார் 73 கிலோமீட்டர் அகன்ற, தாழ்வு…

ஐ.நா சபையில் பைடன்: இரான், வடகொரியா பற்றி பேசியது என்ன?…

உலகம் மிகவும் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தசாப்தத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக அவர் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் 76ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக்…

5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு பலனளிக்கும் ‘பைசர்’ தடுப்பூசி…

வாஷிங்டன், 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ‘பைசர்’ தடுப்பூசி பலனளிப்பதாகவும், இம்மாதம் அமெரிக்க அரசின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கப்படும் என்றும் ‘பைசர்’ நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவில் 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு ‘பைசர்’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பெரும்பாலான மேலை நாடுகளில்…

தென்னப்பிரிக்காவில் தேனீக்கள் கொட்டி இறந்த 63 பென்குவின்கள் – அரிதினும்…

கேப் டவுன் அருகே, அரிதிலும் அரிதாக நடக்கும் நிகழ்வு ஒன்றில் அழியும் நிலையில் உள்ள இனமான ஆப்பிரிக்க பென்குவின்கள் தேனீக் கூட்டம் ஒன்றால் கொல்லப்பட்டுள்ளன. மொத்தம் 63 ஆப்பிரிக்கப் பென்குவின்கள் இவ்வாறு இறந்துள்ளன என்று தென்னாப்பிரிக்காவில் உள்ள பறவை இன பாதுகாவலர்கள் கூறுகிறார்கள். சிம்சன்ஸ்டவுன் எனும் ஊரில் உள்ள…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களுக்கு சவால்கள் ஆரம்பம்

ஆப்கானிஸ்தானில் தீவிரமாக மேற்கொண்ட வன்முறை செயல்பாடுகளின் விளைவாக, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்த நாட்டை தாலிபன் கைப்பற்றியது. அந்த நாட்டில் ஆட்சி அதிகாரம், அதிகார பகிர்வுக்காக நடக்கும் உள்மோதல் மற்றும் தீவிரம் அடையும் பொருளாதார நெருக்கடியைப் பாரக்கும்போது, தாலிபனின் வசதியான காலம் முடிந்து விட்டதாகவே தோன்றுகிறது. தற்போது…

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் மீண்டும் திறப்பு: மாணவிகள், ஆசிரியைகளுக்கு தடை

வழக்கமாக உயர்நிலைப் பள்ளிகள் 13 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கானது. இரு பால் மாணவர்களும் தனித்தனியாகவே கல்வி கற்பார்கள். ஆப்கானிஸ்தானில் உயர்நிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், மாணவிகளும், ஆசிரியைகளும் பள்ளிக்கு வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண் ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்று தாலிபன்கள்…

ஆக்கஸ்: பிரான்சின் ‘முதுகில் குத்திய’ அமெரிக்கா; ‘தீவிர நெருக்கடி’ தொடங்கியது

ஆக்கஸ் பாதுகாப்பு உடன்பாடு தொடர்பாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் பொய் கூறி வருவதாக பிரான்ஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே தங்களது தூதர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பிரான்ஸ், "தீவிரமான நெருக்கடி" உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் செயல் "இரட்டை நிலைப்பாடு, நம்பிக்கைத் துரோகம்" என பிரான்ஸ்சின் வெளியுறவு அமைச்சர்…