சீனாவில் கடும் வெள்ளம்: சுமார் 20 லட்சம் பேர் பாதிப்பு

சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 17.6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் இந்த மாகாணத்தில் 70 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் வீடுகள் இடிந்தம் மண்சரிந்தும் கடுமையான சேதம் ஏற்பட்டது. கனமழையால் மீட்பு பணிகளில்…

அமெரிக்க அணுசக்தி ரகசியத்தை சாண்ட்விச், சூயிங் கம்மில் அணுசக்தி ரகசியத்தை…

சாண்ட்விச், சூயிங் கம் போன்றவற்றில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலின் ரகசியத்தை மறைத்து வைத்து விற்க முயன்றதாக அமெரிக்க கடற்படை அணுசக்திப் பொறியாளர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ஜோனாதன் டேபே மற்றும் அவரது மனைவி டயானா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்காவின்…

சீனாவுடன் மோதும் சின்னஞ்சிறு தீவு: தைவானின் வரலாறு தெரியுமா?

"நாம் அதிகம் சாதிக்க, சாதிக்க சீனாவிடம் இருந்து வரும் அழுத்தம் அதிகமாகும்," என்று ஞாயிறன்று நடந்த தைவானின் தேசிய தின உரையில் அவர் பேசியுள்ளார். கடந்த சில மாதங்களாக தைவானில் சீ னாவின் ராணுவ நடவடிக்கை அதிகரித்திருப்பது உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற…

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் கண்களில் இருந்து தப்பி வந்த கால்பந்து சிறுமிகளுக்கு…

13 முதல் 19 வயதுடைய 35 பெண்களைக் கொண்ட குழு கடந்த மாதம் காபூலை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தனர். அவர்களது தற்காலிக விசா திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. "நாங்கள் ஆப்கானிஸ்தான் மகளிர் மேம்பாட்டுக் குழுவுடன் பேசி விசாக்களை இறுதி செய்து,…

அமேசான் மழைக்காடுகள் சட்ட விரோத விற்பனை: பிபிசி புலனாய்வும் ஃபேஸ்புக்…

இது போன்ற சட்டவிரோத வணிகம் பற்றி பிபிசி நடத்திய புலனாய்வினை அடுத்து ஃபேஸ்புக் இது தொடர்பான தமது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது. ஃபேஸ்புக்கின் இந்த நடவடிக்கை, பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். அரசுக்கு சொந்தமான எல்லா காடுகளுக்கும் பொருந்தாது. அதைப் போல இது அமேசான் மழைக்காடுகளுக்கு மட்டுமே பொருந்தும்,…

மலேரியாவுக்கு தடுப்பூசி செலுத்தும் வரலாற்றுத் திட்டத்துக்கு அனுமதி – விரிவான…

ஒரு நூற்றாண்டு ஆய்வுகள், போராட்டங்களுக்குப் பிறகு முதல் முறையாக ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு மலேரியாவுக்கான தடுப்பூசி போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தைகளையும் சிசுக்களையும் கொல்லும், மனித குலத்தை அச்சுறுத்தும் நோயாக மலேரியா இருந்து வருகிறது. நூறு ஆண்டுகால ஆராய்ச்சிகளுக்குப் பிறகு மலேரியாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்திருப்பது மருத்துவ…

ஹிட்லரின் 101 வயது நாஜி படை காவலர் மீது விசாரணை…

இரண்டாம் உலகப்போர் முடிந்த 76 ஆண்டுகளுக்குப் பிறகு நாஜி வதை முகாம் ஒன்றின் காவலராக இருந்த ஒருவர் 3,518 பேரை கொலை செய்ய உதவியதற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஜெர்மனி தலைநகர் பெர்லின் அருகே உள்ள இரண்டாம் உலகப் போரின்போது சாக்சென்ஹாசன் வதை முகாமில் 2 லட்சத்துக்கும் மேலானவர்களை அடைத்து…

விமான பணிப்பெண்கள் அழகாக காட்டிக் கொள்ள அழுத்தம் தரப்படுகிறதா?

யுக்ரெய்னின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனங்களில் ஒன்றான ஸ்கைஅப் ஏர்லைன்ஸின் பணிப்பெண்கள் வழக்கமான பணிப்பெண் ஆடைகளாக கருதப்படும் பென்சில் ஸ்கர்ட், பிளேஸர் மற்றும் ஹை ஹீல்ஸுக்கு பதிலாக சாதாரண ஆடைகள், பேன்ட்-சூட்டுகள் மற்றும் ஸ்னீக்கர்களில் தோற்றம் அளிக்கப்போகிறார்கள். இவர்களின் ஆடையின் நிறத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்றாலும், இந்த…

2025-க்குள் சீனா முழுமையாக படையெடுக்கும்: தைவான் அச்சம்

தைபே, 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் முடிவில் சீனாவும், தைவானும் பிரிந்தன. ஆனாலும் தைவானை தனது மாகாணங்களில் ஒன்றாக சீனா கூறி வருகிறது. ஆனால் தைவானோ தன்னை ஒரு தனி நாடாக கருதுகிறது. தைவானுக்கு என்று தனி அரசமைப்புச் சட்டமும், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், 3…

ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது – முன்னாள் ஊழியர்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் செயலிகள், குழந்தைகளை பாதிக்கிறது, பிரிவினையை உண்டாக்குகிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். 37 வயதான ஃப்ரான்செஸ் ஹாகென், முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடெக்ட் மேனேஜராக பணியாற்றியவர். கேப்பிட்டல் ஹில் கட்டடத்தில்…

சீன – தைவான் உறவில் 40 வருடங்களில் இல்லாத அளவு…

சீனா மற்றும் தைவான் இடையே 40 வருடங்களில் இல்லாத அளவு பதற்றம் நிலவுவதாக தைவானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இருநாடுகளுக்கும் இடையே ’தற்செயலமான தாக்குதல்’ நடைபெறும் ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்களாக தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தொடர்ந்து ராணுவ ஜெட்களை…

தலீபான்களால் கைது செய்யப்பட்ட இங்கிலாந்து முன்னாள் பாதுகாப்புபடை வீரர் விடுவிப்பு

காபூல், ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அந்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டினரும், ஆப்கன் மக்களும் வெளியேற முயற்சித்தனர். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தலீபான்கள் அனுமதி அளித்தனர். இதற்கிடையில், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பாதுகாப்பு படை வீரரான பென்…

சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்: தைவானுக்கு போர் விமானங்களை அனுப்பும்…

வாஷிங்டன், 1949-ல் நடந்த உள்நாட்டு போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தன. ஆனால், தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடா்ந்து கூறி வருகிறது. அதுமட்டுமின்றி, அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டி வருகிறது. மேலும் தைவானை…

பிரான்ஸ் திருச்சபை பாதிரியார்களால் 2,16,000 சிறாருக்கு பாலியல் கொடுமை: விசாரணை…

1950ஆம் ஆண்டு முதல் பிரான்சில் உள்ள கத்தோலிக்க பாதிரியார்களால் 2,16,000 சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று இது தொடர்பான விசாரணையில் தெரியவந்துள்ளது. 2,900 முதல் 3,200 பேர் வரை சிறாரை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய குற்றங்களில் ஈடுபட்டதாக திருச்சபை உறுப்பினர்களின் கொடுமைகள் தொடர்பாக விசாரிக்கும் குழுவின் தலைவர்…

புதிய வைரஸ்கள், வலிமையான பாக்டீரியாக்கள் ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகுவதால்…

புவி வேகமாக வேகமாக வெப்பமடைந்துஆர்க்டிக்ப் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு மதிக்காத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஓர் அறிக்கை கண்டறிந்துள்ளது. பனி உருகுவதால், பனிப்போர் காலத்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், அணு உலைகள், சுரங்கங்களிலிருந்து ஏற்படுட்ட சேதங்கள் போன்றவை வெளிப்படலாம் என அவ்வறிக்கை கூறுகிறது.…

ஷாஹீன் புயலில் இரான், ஓமன் நாடுகளுக்கு மோசமான பாதிப்பு: 32…

இதில் குறைந்தது 13 பேர் இறந்தனர். ஞாயிற்றுக்கிழமை இந்த புயல் கரையைக் கடந்த நிலையில், ஓமனின் வடக்குக் கடற் கரையோரம் நெடுகிலும் 150 கி.மீ. வேகம் வரையில் காற்று வீசியது, கடும் மழை பொழிந்தது. இதனால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வடக்கில் உள்ள அல் படினா மாகாணத்தில் 7…

கருக் கலைப்பு உரிமை: அமெரிக்க நகரங்களில் பேரணி நடத்தும் பெண்கள்

அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களிலும் கருக்கலைப்பு உரிமைகளுக்கு ஆதரவாக ஆயிரக் கணக்கான பெண்கள் பேரணி செல்கின்றனர்.சமீபத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கொண்டு வரப்பட்ட கருக்கலைப்பு தொடர்பான சட்டம், பெண்களை எதிர்வினையாற்றத் தூண்டியது. வரும் மாதங்களில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு தொடர்பாக ஒரு முக்கிய வழக்கை விசாரிக்க உள்ளது.…

மரபணு திருத்தப்பட்ட பயிர்களுக்கு பிரிட்டனில் கட்டுப்பாடு தளர்த்த திட்டம்: ஏன்?…

இங்கிலாந்தில் மரபணு திருத்தப்பட்ட (Gene Edited) பயிர்களை வணிகரீதியாக உற்பத்தி செய்ய வழிவகுக்கும் வகையில் பிரிட்டன் அரசு இதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த உள்ளது. மரபான முறையில், புதிய பயிர் வகைகளை உருவாக்கும்போது எப்படி சோதிக்கப்பட்டு, மதிப்பிடப்படுமோ அந்த அளவுக்கே இனி மரபணு திருத்தப்பட்ட பயிர்களும் சோதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில்…

இத்தாலியில் கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்: 8…

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் தனியாருக்கு சொந்தமான சிறிய ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொருங்கியதில் அதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.இந்த விமானம் ஆளில்லாத கட்டடம் ஒன்றின் மீது விழுந்து நொறுங்கியது. மிலனின் உள்ள விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் சர்தீனியா தீவை நோக்கி பயணித்தைத்…

தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை மீண்டும் தொடங்க விரும்பும் வடகொரிய…

வட கொரிய நாட்டின் 14 உச்ச மக்களவையின் 5-வது அமர்வில் பேசுகிறார் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன். தென் கொரியாவுடன் துண்டிக்கப்பட்ட ஹாட்லைன் தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் சமாதானமாகப் போகும் தனது…

டைனோசர் இனங்களின் 50 எலும்புகள் – புதிய பார்வை தந்த…

125 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் தென் பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு புதிய டைனோசர் இனங்களின் கண்டுபிடிப்பு, அவை பற்றிய புதிய பார்வையை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த மாமிச ஊர்வனங்களில் ஒன்றை "நரக ஹெரான்" என்று விவரிக்கும் பறவையியலாளர்கள், அதன் வேட்டை பாணியை பறவையின் அச்சுறுத்தும் வடிவத்துடன்…

சீனா மின் தடை: உலகின் உற்பத்தி மையமான சீனாவிலேயே மின்சார…

சீனாவில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அங்கு பல லட்சம் வீடுகளும், வர்த்தகங்களும் மின்சாரம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன. சீனாவில் மின்சார தட்டுப்பாடு அரிதான விஷயமல்ல, ஆனால் இந்த ஆண்டு பல காரணிகளால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவின் வட கிழக்கு பகுதியில்…

ஆதி குடிகளிடம் ஒப்படைக்கப்பட்ட மழைக் காடுகள்

உலகிலேயே மிகவும் பழமையான வெப்பமண்டல மழைக்காடுகளான டெய்ன்ட்ரீ மழைக்காடுகள் ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதி குடிகளிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசுக்கும் ஆதிக்குடி சமூகத்துக்கும் ஏற்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தின் கீழ் இந்த காடுகள் ஒப்படைக்கப்படுகின்றன. ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த மழைக் காடுகள் சுமார்…