பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
சிறுவர்களை கொண்டு பயங்கரவாதிகள் படை அமைக்க முயற்சி..
இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்தவர், உமர் அகமது ஹக் (வயது 25). இவர் முறையாகப் பயிற்சி பெறாமலேயே, மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோ படம் காட்டி அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார்.…
மிக சக்திவாய்ந்த ராணுவம் ரஷ்யாவா, அமெரிக்காவா?
உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய…
பழங்குடியின மக்கள் பட்ட துயரங்களுக்கு, மன்னிப்பு கோரிய கனடா பிரதமர்…
பிரிட்டிஷ் கொலம்பிய காலணித்துவ அரசினால் 150 ஆண்டுகளுக்கு முன்னர் பழங்குடியின தலைவர்கள் 6 பேர் தூக்கிலடப்பட்ட சம்பவத்திற்கு கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தற்போது மன்னிப்புக் கோரியுள்ளார். பழங்குடியின மக்களுக்கு இழைக்கப்பட்ட துயரங்களுக்கு தீர்வுகளை வழங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை செயற்படுத்தி வருகின்ற பிரதமர் இச்சம்பவம் குறித்து…
சிரியா: கிளர்ச்சியாளர்களின் நகருக்குள் நுழைந்தது அரசுப்படை
கிளர்ச்சியாளர்கள் வெளியேறுவதற்கு காலக்கெடு வழங்கப்பட்ட பின்னர், கிழக்கு கூட்டாவிற்குள் வெகுதூரம் சிரியா அரசுப்படை நுழைந்துள்ளது. ஜெஷ் அல்-இஸ்லாம் என்ற கிளர்ச்சிப்படையின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற டௌமா நகரில் மிக பெரியதொரு போர் நடவடிக்கை மேற்கொள்ள சிரியா அரசுப்படை தன்னை தயார் செய்து வருவதாக செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. பிற கிளர்ச்சிப்படை பிரிவுகளை…
லண்டனில் 12 நாட்களில் 10 பேர் கொலை: வீதிகளில் பெரும்…
லண்டனில் கடந்த 12 நாட்களில் சுமார் 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று மெற்றோ பொலிடன் பொலிசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்கள். இவற்றில் 90 சதவிகிதமானவை கத்திக் குத்து சம்பங்களே ஆகும். லண்டன் வீதிகளில் பல குண்டர்கள் உலவி வருகிறார்கள். அவர்கள் கைகளில் இருக்கும் ஒரே ஆயுதம் கத்தி…
20 நாடுகளில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்..
முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்க்ரியாலும், அவரது மகளும் இங்கிலாந்தில் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாயினர். இந்த நடவடிக்கையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது புகார் கூறப்பட்டது. அதற்கு ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது. இருந்தும் இங்கிலாந்து தன் நாட்டில் இருந்து ரஷிய தூதரக அதிகாரிகள் 23 பேரை வெளியேற்றியது.…
சீனாவுக்கு ரகசிய ரயிலில் சென்றாரா வட கொரிய அதிபர் கிம்?
மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பெயர் வெளியிடப்படாத நபர்கள் தந்த தகவல்படி அது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா, வட கொரியாவின்…
சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனிலிருந்து சௌதி அரேபியாவின் எல்லைக்குள் ஏவிய ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சௌதியின் படைகள் தெரிவித்துள்ளன. அதில் மூன்று ஏவுகணைகள் சௌதியின் தலைநகரான ரியாத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், அதன் பாகங்கள் புறநகர்ப்பகுதியின் தரையை வந்தடைந்தபோது, அதில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏமனின் உள்நாட்டுப்…
உளவாளி மீதான தாக்குதல் சர்ச்சை: 60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றுகிறது…
பிரிட்டனில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷ்ய நாட்டின் 60 ராஜிய அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஜெர்மனியும் பிரான்சும் தலா நான்கு ரஷ்ய ராஜிய அதிகாரிகளை…
பாகிஸ்தானில் கிறிஸ்தவ தம்பதியரை செங்கல் சூளையில் போட்டு எரித்துக் கொன்ற…
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கசூர் மாவட்டம், சக் என்ற கிராமத்தில் இருக்கும் செங்கல் சூளையில் சஹ்ஜாத் மசி(35) மற்றும் அவரது மனைவி ஷமா(31) ஆகியோர் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர். அந்த சூளை அமைந்துள்ள இடத்தில் கூலித் தொழிலாளிகளுக்கு…
முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு
ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இருந்து பெல்ஜியத்திற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜயுமே அலன்சோ-குயவில்லா கூறியுள்ளார். கேட்டலோனியா பிரிந்து தனிநாடு…
துப்பாக்கி கட்டுப்பாட்டை வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் பிரமாண்ட பேரணி
அமெரிக்காவில் துப்பாக்கிகள் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்கும் கோரிக்கைக்கு ஆதரவாக அந்நாடு முழுவதும் நடைபெறும் பேரணிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். "மார்ச் பார் அவர் லைவ்ஸ்" என்று பெயரிட்டுள்ள மாணவர் வழிநடத்தும் இந்தப் பேரணியானது, கடந்த மாதம் ஃபுளோரிடாவிலுள்ள பள்ளியொன்றில் துப்பாக்கிதாரியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகு…
சிரியா: அரசு கட்டுப்பாட்டில் 70 சதவீத கிழக்கு கூட்டா
டமாஸ்கஸின் புறநகர் பகுதிகளில் சிரிய அரசு தனது கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி வரும் நிலையில், கிழக்கு கூட்டாவின் பல்வேறு நகரங்களில் உள்ள சிரிய கிளர்ச்சியாளர் குழுக்கள் வெளியேறி வருகின்றனர். கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கடைசி நகரமான டூமாவில் இருந்து போராளிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் பலரும் பேருந்துகள் மூலம் சனிக்கிழமையன்று…
சிரியாவில் ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 37 பேர் பலி..
சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்யாவும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சிரியாவின் அர்பின்…
பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தப்பட்ட ரோஹிஞ்சா அகதி சிறுமிகள் – பிபிசி…
வங்கதேசத்தில் ரோஹிஞ்சா அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் பதின்ம வயது சிறுமிகளும் பெண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக பிபிசி ஆய்வு கண்டறிந்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து தப்பித்து, தங்கள் குடும்பத்தினருடன் வங்கதேசத்தை சரணடைந்த பரிதாபத்திற்குரிய இந்த சிறுமிகள் அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கின்றனர். இந்த முகாம்களில் தங்கியிருக்கும் பெண்களை வெளிநாட்டினருக்கு…
பிரான்ஸ்: பிணைக்கைதிகளை பிடித்து வைத்திருந்தவர் சுட்டுக்கொலை
பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பொதுமக்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மூன்று பொதுமக்களை கொன்றதாக சந்தேகிக்கப்படும் இந்த துப்பாக்கிதாரி போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொரோக்கோவை சேர்ந்தவராக கருதப்படும் அந்த துப்பாக்கிதாரி, தான் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று கூறியதாக…
அறிவுசார் சொத்துரிமை விவகாரம் – சீனா மீது கடுமையான நடவடிக்கை…
“மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (மீண்டும் அமெரிக்காவை பெருமைமிக்கதாக மாற்றுவோம்) என்ற வாக்குறுதியுடன் அதிபரான டிரம்ப், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை சமீபத்தில் உயர்த்தினார். இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீது 25 சதவிகிதமும், அலுமினியம் மீது 10 சதவிகிதமும் வரி…
அச்சத்தில் வாழும் ரோஹிங்கியா குழந்தைகள் கடத்தி விபசாரத்திற்கு விற்கும் கொடுமை
மியான்மரில் நடைபெற்ற இனக்கலவரத்தில், சுமார் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகின. இருக்க இடமில்லாமல் லட்சக்கணக்கானோர் வங்கதேசத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தனர். அப்படித் தஞ்சம் அடைந்து முகாம்களில் வசித்துவரும் பெண்களைக் கடத்தல்காரர்கள் நெட்வொர்க் அமைத்து, பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. அன்வாரா…
நைஜீரியா: கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் விடுதலை
டாப்சி நகர பள்ளியில் இருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய பள்ளி மாணவியர் பலர் திரும்பி வந்துள்ளதாக பிபிசியிடம் பேசிய உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்திருக்கிறார். கடந்தப்பட்ட 110 பள்ளி மாணவியரில் 76 மாணவிகள் காலையில் வாகன அணியொன்றால் அழைத்து வரப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அவர்கள் அழைத்து வந்த சூழ்நிலைகள் பற்றி…
ஆஃப்கன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குண்டுவெடிப்பு: 29 பேர் பலி
ஆஃப்கன் தலைநகர் காபூலில் நடந்த சந்தேகத்திற்குரிய தற்கொலை குண்டுதாரி நடத்திய வெடிப்பு தாக்குதலில் குறைந்தது 29 பேர் மரணமடைந்தனர், 18 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரி கூறினார். ஆஃப்கன் புத்தாண்டான நவ்ரஷ் - ஐ கொண்டாட நூற்றுகணக்கானோர் திரண்டிருந்தனர். அந்த கூட்டத்ததில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது என்று முதற்கட்ட…
விபத்தில் ஒருவர் பலி: ஊபரின் ஓட்டுநரில்லா கார்களின் பரிசோதனை நிறுத்தம்
ஊபர் நிறுவனத்தின் ஓட்டுநரில்லா வாகனத்தால் ஏற்பட்ட பலியை தொடர்ந்து அனைத்து வட அமெரிக்க நகரங்களிலும் தனது ஓட்டுநரில்லா கார்களை பரிசோதிப்பதை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டெம்பே பகுதியில் பரிசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊபரின் ஓட்டுநரில்லா கார் ஒன்று, சாலையை கடக்க முயன்ற 49 வயதான பெண் மீது…
போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை: டிரம்ப்
அமெரிக்காவில் வலி நிவாரணி மாத்திரைகளுக்கு மக்கள் அடிமையாவதை தடுக்கும் தனது திட்டத்தின் ஒரு பங்காக போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரியுள்ளார். வலி நிவாரணியில் பயன்படுத்தப்படும் ’ஓபியாட்’ எனப்படும் மருந்துக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியூ ஹாம்ஷர் மாநிலத்தில் பேசிய அவர் இதனை…
“ரகசிய மெட்ரோ, கடுங்குளிர், அணுகதிர்” – ரஷ்யா குறித்த 6…
அண்மைக்காலமாக செய்தி ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இருக்கிறது ரஷ்யா. சிரியா போரில் அதன் பங்கு முதல் உளவாளி கொலை வரை செய்திகள் ரஷ்யாவை சுற்றியே சுழல்கின்றன. இதற்கு மத்தியில் அங்கு நேற்று தேர்தலும் நடந்துள்ளது. சரி. நமக்கு ரஷ்யாவை பற்றி வேறு என்னவெல்லாம் தெரியும்? செஞ்சதுக்கம் முதல் அந்நாட்டின்…