இன்னும் சராசரியாக இந்தியர்களும் மற்றும் மலாய்காரர்களும் ஆரோக்கியமான உணவு பற்றி குறைவாகவே புரிந்துள்ளனர் – டாக்டர் சுப்ரமணியம்……..(போகராஜா குமாரசாமி)

malaysian foodபுத்ரா ஜெயாவில், அக் 28 (பெர்னமா) – இந்த நாட்டில் இனவாரியாக  பெரும்பாலான இந்தியர்கள் மற்றும் மலாய்காரர்களும் சீன சமூகத்தைவிட ஆரோக்கியமான உணவு பழக்கம் பற்றி குறைவாக அறிந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் டாத்தோ  டாக்டர் எஸ் சுப்ரமணியம் இந்த கணிப்பு உடல் பருமன் மற்றும் நீரிழிவுகளினால் அவதியுறும் மக்கள் சதவீதம் அடிப்படையில் செய்யப்பட்டது என்று கூறினார்.

உடல் பருமன் வகையில், 35.7 சதவீதம் பதிவு இந்தியர்கள், 32 சதவீதம் மலாய்காரர்கள் மற்றும் சீனர்கள் 19.7 சதவீதம் இருக்கும் நிலலையில்,  நீரிழிவு நோயின் பதிவு, 24.9 சதவீதம்  இந்தியர்கள், 17 சதவீதம் மலாய்காரர்கள் மற்றும் சீனர்கள் 13.9 சதவீதமாகும என்று இங்கே திங்களன்று  நடைப்பெற்ற ‘ தீபாவளின் போது ஆரோக்கியமான உணவு ‘ என்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறினார்.

டாக்டர் சுப்ரமணியம், நோய்த்தாக்கம், நாட்டில் உடல் பருமன் 1996 ஆம் ஆண்டு 4.4 சதவீமாகவும்,   2006 ஆண்டு 14 சதவீதமாகவும்,  2011 ஆண்டில் 15.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது எனறு கண்டறியப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் நீரிழிவு நோய், 2006 ல் 14.9 சதவீதமாக இருந்தது,  2011 ல் 20.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

அவர் முன்னர் மலேசியாவில் 8.5 மில்லியன் மலேசியர்கள் உடன் எடை பிரச்சினைகள் பாதிக்கப்படுள்ளனர், இந்த எண்ணிக்கையில் 4.4 மில்லியன் மலேசியர்கள் அதிக உடல் பருமனால் பாதிக்கப்படுள்ளனர் என்று தெரிவித்தார்

தீபாவளியினை நவம்பர் 2 ம் தேதி இந்துக்கள் கொண்டாடுகின்றனர், அவர்களுக்கு  டாக்டர் சுப்ரமணியம் இந்த ஆலோசனையினை வழங்கினார்: ” ஆரோக்கியமாக சாப்பிடுவோம் அதுவே சுகாதார மற்றும் நல்வாழ்வுக்கு முக்கிய திறவு கோலாகும்.”

-பெர்னாமா

தமிழாக்கம் – போகராஜா குமாரசாமி

 

இன வாரியாக மக்கள் எண்ணிக்கையும் (உடல் பருமன்/நீரிழிவு) ஓர் ஆய்வு

2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 28.3 மில்லியன். இத்தொகையில் மலேசிய குடிமக்கள் 91.8 சதவீதம் மற்றும் மலேசிய குடிமக்கள் அல்லாதவர்கள் 8.2 சதவீதம். மலேசிய குடிமக்கள் இன வாரியாக புமிபுத்ரா (Bumiputera) (67.4%), சீனம் (24.6%), இந்தியர்கள் (7.3%) மற்றும் மற்றவை (0.7%) கொண்டுள்ளன.

28.3 மில்லியன் மக்கள் தொகையில் 25.9 மில்லியன் மலேசியர்கள் இவர்களில் இனவாரியாக

புமிபுத்ரா/மலாய்காரர் 67.4 % -17.5 மில்லியன்,

சீனர்              24.6%  -6.4 மில்லியன்,

இந்தியர்            7.3%   -1.9 மில்லியன்

உடல் பருமன் வகையில், 35.7 சதவீதம் பதிவு இந்தியர்கள், 32 சதவீதம் மலாய்காரர் மற்றும் சீனர் 19.7 சதவீதம் இருக்கும் நிலையில்,

புமிபுத்ரா/மலாய்காரர்32.0% – 5.8 மில்லியன் (17,500,000 பேரில் 5,800,000 உடல் பருமன்)  

சீனர்              19.7% – 1.3 மில்லியன் (6,400,000 பேரில் 1,300,000 உடல் பருமன்)  

இந்தியர்           35.7% – 0.7 மில்லியன் (1,900,000 பேரில் 700,000 உடல் பருமன்)

நீரிழிவு நோயின் பதிவு, 24.9 சதவீதம்  இந்தியர்கள், 17 சதவீதம் மலாய்காரர் மற்றும் சீனர் 13.9 சதவீதமாகும என்று இங்கே திங்களன்று  நடைப்பெற்ற ‘ தீபாவளின் போது ஆரோக்கியமான உணவு ‘ பத்திரிகையாளர் மாநாட்டில்  கூறினார்.

புமிபுத்ரா/மலாய்காரர் 17.0% – 3.0 மில்லியன் (17,500,000 பேரில் 3,000,000 நீரிழிவு நோயாளி)  

சீனர்               13.9% – 0.9 மில்லியன் (6,400,000 பேரில் 900,000 நீரிழிவு நோயாளி)  

இந்தியர்            24.9% – 0.5 மில்லியன் (1,900,000 பேரில் 500,000 நீரிழிவு நோயாளி)

1.9 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இந்தியர்களில் சுமார் 500,000 (0.5 மில்லியன்) பேர் என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

இந்தியர்களிடையே மற்ற தொற்றாத நோய்கள் – உயர் இரத்தழுத்தம், இரத்தில் அதிக கொழுப்பு, இருதய பாதிப்பு, சீறு நீரக பாதிப்பு, மன அழுத்தம், மன நிலை பாதிப்பு, பக்கவாதம், புற்று நோய் போன்றவையாகும். இந்த தொற்றாத நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கலாம்.

கவனத்தில் கொள்ளவும் மலாய்காரர்களில் 17,500,000 பேரில் 3,000,000 நீரிழிவு நோயாளி, சீனர்களில் 6,400,000 பேரில் 900,000 நீரிழிவு நோயாளி, இந்தியர்களில் 1,900,000 பேரில் 500,000 நீரிழிவு நோயாளிகள்.

இப்போது கூறுங்கள் 1,900,000 பேரில் 500,000 நீரிழிவு நோயாளிகள் இருந்தால் எப்படி இந்தியர்கள் ஆரோக்கியமாக வாழ்கிறார்கள் என்று கூறுவது.

இந்தியர்களிடையே கூறிப்பாக தமிழர்களிடையே ஆரோக்கிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்தி கொடுப்பதும் எமது சமூக தொழில் முனைவோர் திட்டத்தில் ஒரு அங்கமாகும்.

சமூக தொழில் முனைவோர் திட்டம் கூறித்து மேல் விபரங்கள் வேண்டுமா? அழையுங்கள் – 017-6728689 அல்லது மின் அஞ்சல் – [email protected] வழி தொடர்புக்கொள்ளவும். ஆரோக்கியமே ஆனந்தம்.

ஆக்கம் – போகராஜா குமாரசாமி –

சான்றிதழ்ளிக்கப்பட்ட ஆரோக்கிய ஆலோசகர் (OUM)

(Certified Wellness Consultant – OUM)

நன்றி

இக்கண்

போகராஜா குமாரசாமி,

நிறுவனர், அல்ட்டிமேட் வின்னிங் கன்டல்ன்சி, காஜாங்

 கைப்பேசி: 0176728689