தாய்மொழித் துரோகிகளை அடையாளம் காண பயப்படுகிறோம் … நாம், ஏன்?

rajes-1மலேசியாவில் தமிழ் சமுதாயத்தை பொறுத்த மட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எல்லாமே இறங்கு முகம்தான்.
ஒன்று இறங்கும் போது ஒன்று ஏறுமுகம் பெறும். வறுமை, கொடுமை,ஏழ்மை ,விரக்தி இவைகள் தாம் நமது ஏறுமுகம்.

இதன் காரணமாக தமிழர்கள் மக்கள் தொகை ஒரு காலத்தில் 3 மிலியன் ஆக இருந்ததாக கணக்கு. இப்போது 1.8 மட்டுமே.எப்போது ஒரு நாட்டின் மக்கள் தொகை மற்ற இனத்தை காட்டிலும் குறையுதோ அப்போதே இனத்துக்கும் இனம் சார்ந்த மொழிக்கும் ஆபத்து என்பதை புரிதுக்கொள்ள வேண்டும்.

மலேசியாவை பொறுத்த வரை தமிழ் மொழியும் சீன மொழியும் இருக்க கூடாது என்பது மலாய்காரர்களின் எண்ணம்.கல்வி இலாகாவில் கூட இந்த அழிப்பு கொள்கை வகுத்து 2013-2025 புதிய கல்வி கொள்கை வரையப்பட்டுள்ளது தெளிவு.இதைச சொல்வது தேச துரோகமில்லை!

தமிழ் மொழி மீது போதனை கட்டுப்பாடு விதி வழி எல்லாத்தையும் சரி செய்து  இப்போது தமிழ்ப்பள்ளிகள் கட்டட கட்டுமானகள் திட்டங்கள் எல்லாம் மாணவர்கள் “கோசமான” பின் மலாய் மொழி, அரபு மொழி மாற்றங்களுக்கு உட்படும். நாமக்கு  தானாக” கை தூக்கம்மா கை தூக்கு” என்று சொன்ன  அரசியல் வாதிகள் கிளம்பிடுவானுங்க.

தாய் மொழி பற்று மிக்க கீழ் தட்டு தலைவர்களைவிட மேல் தட்டு அரசியல் தலைவர்கள் யாராவது வாய திறப்பதை நம்மால் பார்க்க முடியவில்லை.

இதுவரை புதிய கல்வி கொள்கைப்பற்றி எதிர்கட்சி தலைவர் அன்வார் வாயடைத்து மலாய்க்காரர்கள் கோபத்துக்கு ஆளாகாமல் அடக்கப்பூனை போல பால் குடித்துக்கொண்டுதான் இருக்கார்.நாம் போராடிய பெர்சேவுக்கும் இப்போ வேலை இல்லாமல் போய்விட்டது. எல்லாம் துரோக கணக்கில் துப்புர கிடக்கிறோம்.

நமது ம இ கா தலைவருக்கு” டேமில  பட்டி”  காதுல பூ போட்ட கதைதான். கட்டடத்துக்கு காசு கிடைத்த வெறுமாப்பில் நம்ப  PIBG  கள் ,LPS  எனும் வாரிய  குழுக்கள் கோழி தூக்கம்  போடுகிறார்கள்.

இன்னும் 10 பதினைத்து ஆண்டுகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாமல் போவதுதான் புதிய கல்வி கொள்கையின் கோளாறு.என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..

ஆசீரிய பெருமக்களுக்கும் தமிழ் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் தெரியும், ஆனால் பதவி ஓய்வோடு தமிழுக்கு ஒத்தடம் தந்துவித்து தோலில் தண்ணி துண்டை போட்டுக்கிட்டு திரியப  போய்விடுவார்கள்.

இப்போதும் முன்னாள் கல்வி அமைச்சின் தமிழ் துறை அதிகாரிகள் இதைத்தான்  செய்கின்றனர் என்பது ஊர் அறிந்த வெளிச்சம். புதிய கல்வி கொள்கை  மீது  எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் ‘சட்டியில் கிட்டுமோ அகப்பையில் எட்டுமோ’ என்ற ஆதங்க அளவுகோல் வைத்து இலக்கு இல்லாத வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

ஒரு வேளை உண்மை உழைப்பாக இருந்தாலும் இன்னும் நமக்கு தெளிவான திசை தெரியவில்லை.முடிவில்லை.நமக்கு மக்கு தனமா புத்தி சொல்லி என்ன நடக்கபோவுது என்பதுதான் கேள்வி?

UNESCO  அமைப்பின் தாய் மொழி திட்டத்திற்கு எதிர்ப்பான ஒரு நாட்டு மக்களின் “தாய்மொழி திட்டமிட்ட பறிப்புக்கு”  எத்தகைய சட்டம் உள்ளது என்பதை ஆராய வேண்டும்.மலேசியாவின் பழைய கல்வி கொள்கையை உதாரணம் காட்டி நம் கண்டுபிடிப்புகளை முன் வைப்பது காலங் கடந்த முயற்சியாகும்.

காரணம் நாடாளுமன்ற ஒப்புதல் ஒன்றின் அடிப்படை முடிவை “மாற்றத்துக்கு” உட்படுத்தி இந்த  முஹிட்டின் அரசியல் தன  கல்வி கொள்கையை  அமுலுக்கு கொண்டு வருவது மாபெரும் துரோகம் என்பதை நாம் சொல்லத  தயங்குகிறோம்,ஏன்?

பொதுவாழ்வில் தமிழுக்காக பல சுமைகளை தாங்கி போராடும் உங்களை பாராட்டுகிறேன். ஆனால் உங்கள்,நமது முயற்சிகள் வெல்லாவிட்டால் இந்த சமுதாயம் நம்மை ஏசும். இதுகள் ஏதும் செய்யாது, செய்பவனையும் சொம்மா விடாது இந்த சொறன கெட்ட   வீட்டில் தூங்கும் அதி அஹ்ரினை புத்திசாலிகள் .கூட்டம்.

அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு சாவு கோடியும், கொடியும்  தூக்கும் பாமர தமிழ்த் தோழர்கள். தமிழ் மொழி அழிப்புக்கு எதிராக தமிழ் பள்ளிகளுக்கு முழுக்கு போட்டால் மட்டுமே நமது தமிழ் புரட்சி வெடிக்கும். செய்வோம்.

-பொன் ரங்கன்