தமிழ்ப்பள்ளி மாணவர் சேர்க்கை திட்டத்திற்கு கலை நிகழ்ச்சி.

tamilschool_in_malaysiaகல்வி ஆண்டு 2014 & 2015 ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிக்கு மாணவர்களை சேர்க்கும் திட்டமாக அம்பாங் தமிழர் ஒற்றுமை கழகம் மகிழம்பூ எனும் கலை நிகழ்ச்சியை படைக்க உள்ளது.

எதிர்வரும் 11/12/2013 இரவு 7.30 மணி அளவில் அம்பாங் டத்தோ அமாட் ராஜாலி மண்டபத்தில் இக்கலை நிகழ்ச்சியும் மாணவர்களை தமிழ்ப்பள்ளிக்கு அனுப்புவோம் அறிமுக திட்டமும் துவக்கி வைக்கப்படும்.
இந்நிகழ்வுக்கு அம்பாங் எம் பி எ ஜே உதவி தலைவர் துவான் ஹாஜி ஹமிட் தலைமை தாங்குவார்.இவர்களுடன் வட்டார அரசு சாரா இயக்க பொறுப்பாளர்களும் அம்பாங் வட்டார பொது மக்களுமாக சுமார் 1500 இந்த சிறப்பு கலை நிகழ்வில் கலந்து மகிழ்வர்.

அம்பாங் எம் பி எ ஜே வின் அதிகாரத்துவ மலரான பூங்க தஞ்சுங் அல்லது தமிழின் மகிழம்பூ மறு அறிமுக நிகழ்வும் இக்கலை நிகழ்வின் போது நடைபெறும்.

200 ஆண்டுகளுக்கு முன் அம்பாங் மக்கள் மத்தியில் நாட்டு வைத்திய பூவான மகிழம்பூவை  நம் மக்கள் மத்தியில் மீண்டும் அடையாளபடுத்தும் நோக்கமும் நம் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிக்கு
அனுப்பும் திட்டமும் மிக அர்த்தமுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

முன்பு 800 மாணவர்களை கொண்டிருந் அம்பாங் தமிழ்ப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருவது கண்டு இக்குறை தீர பெற்றொர்களின் குறை அறிந்து வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கை திட்டத்தையும் பொருளாதார ரீதியில் உதவும் உன்னத பொறுப்பும் தமிழர் ஒற்றுமை கழகத்துக்கு உண்டு என்பதால் இந்த மிக்கப்பெரிய சவாலை சேவையை கழகத்தின் தலைவர் திரு காளிமுத்து அவர்கள் முன்னெடுத்து உள்ளார்.

ஆக வட்டார பொது மக்கள்  நிகழ்ச்சியில் கலந்து ஆதரவு தந்து மகிழ வேண்டுகிறோம். 2014 கல்வி ஆண்டு அம்பாங் தமிழ்ப்பள்ளியில் பதிந்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.

பெற்றோர்கள் மாணவர்களை உடன் அழைத்து வரும் பாடி அன்புடன் விழைகிறோம்.என்று .கலை நிகழ்ச்சி செயலாளர் திரு பொன் ரங்கன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.