“மக்கள் கருத்து பக்கம்” மனித ஆதங்கம் மட்டும் நடமாடுகிறது!

writingசமூகம்…அரசியல்…பணம்…கல்வி…மொழி…இனம், உரிமை ஒன்னதையும் காணோம். மனித ஆதங்கம் மட்டும் நரிபோல நடமாடுகிறது.

சிலர் ஒரு வரி வீச்சில் குழம்பிய குட்டையில் நெத்திலி பொடி மீன் பிடித்து சுண்டக்காய் பொறிகின்றனர். மக்கள் கருத்து பக்கம் மக்கள் எழுத திறந்து விடப்பட வேண்டும். புது விசியங்கள் /பிரச்சனைகள் பதிவு செய்ய முடியவில்லை.

மக்கள் கருத்துக்கு பக்க கட்டுப்பாடு வேண்டாம். செய்திகு செய்திக்கு சொல்லாடல் குழப்பிகள் நிலை மாறி தனி சிந்தனைகள் அரங்கேற வேண்டும்! கவனியுங்கள்.

நாட்டின் மிக சிறப்பான எழுத்தர்கள் இங்கு வரவேண்டும். எடுத்தாளர்கள் /கிண்டல் சுரைக்காய்கள் /வீம்புக்கு எழுத்தை “சுய தாக்கு விபச்சாரம்” செய்யும் பேர்வழிகள் சமுதாய இன  மான ஒற்றுமை உடைப்புகள் தவிர்த்து ஒவ்வொரு படைப்புகளும் படிப்பினை தரும் முதிர் நிலை பக்குவத்தை அடைய வேண்டும்.

படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதியவன் ஏட்டை கிழித்தான் என்று தமிழ்   Print media newspapergal  செய்யும்  அதே ஊடக நண்டு  ஊடுருவல் செய்யாமல் காப்பது நமது கடமை.

இந்த செய்திக்கும் சில வீம்பர்கள்  வியாக்கியானம் எழுதும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். நல்லதை நாலு பேர் படிக்க எழுதுங்கள். அழகு தமிழுக்கு ஆயிரம் வாசல்கள் உண்டு. வண்ணங்கள் சரியாக இருந்தால் பார்க்கவும் படிக்கவும் சமுதாயம் உருப்படும்.

மலேசியத் தமிழுக்கு வரவாக கிடைத்த செம்பருத்தி எழுத்தும், இதயமும், குரலும், தளமும், தலமும், நிலமும், நலமும் நமது மேம்பாட்டுக்கு தோள் கொடுக்க நல்ல சமயோஜா சிந்தனை படைப்புகளை தாருங்கள்.

விடியலுக்கு ஒரு வழிதான் கிழக்கு … நாம் நான்கு திசைகளில் விடியலை விடிய செய்தால் செத்தேபோவோம்.! ஒரு சிறு துளி பேனாவின் கெட்ட மை மில்லியன் பேரை கெடுக்கும். அதே சிறு மின்னியல் வாசகம் கோடிபேரை வளர்க்கும். வளர்த்து விட்டு உவமை கொள்வோம்.

மணக்க வரும் தென்றலில் குளிரும் உண்டு … தோப்பிலே நிழலும் உண்டு தமிழர் தம் இதயத்தில் நல்ல தமிழ்தான் (மனமும் மணமும்) இல்லை என்ற நிலை மாற வேண்டும்.

தமிழர்களுக்கு மட்டும்  நம்மில் புல் மனிதர், புழு மனிதர், நெல் மனிதர் , உழமனிதர் , வேர் மனிதர் , பேர் மனிதர், முகவரி மனிதர் என்று பல அடையாளங்கள் உண்டு.

இந்த மனிதரில் நல்ல  மனிதராய் விளங்குவது நல்ல மனிதப் படை ப்புக்கு விவேகத்தை எழுதுவோம்.

வாழை மரத்து பட்டைகள் ஒழுங்காகத்தான் இருக்கும் அதை பிச்சி விட்டு வேடிக்கை பார்ப்பதுபோல் நாம் எழுதல் கூடாது.. அதுபோல காய்ந்து கிடக்கும் வாழை நார்கள் போன்ற அகராதி அரசியல் சிந்தனை துரோகிகளை விட்டு வைக்கவும் கூடாது.

என் இந்த எண்ணப்படிகள் ஒரு குறியோடு தொடங்கியது. நமது நாளைக்காக உங்கள் எழுத்து விழிகளை ஒரு குறிக்கோளுடன் திறக்கவும்.

– பொன் ரங்கன்