அம்பாங் தமிழ்ப்பள்ளி RM5 லட்சம் குத்தகை எதற்கு ?

13 ம் தேர்தல் நிதியாக 5 லச்சம் நிதியை அம்பாங் தமிழ்ப்பள்ளி கணக்கில் பாரிசன் நேசனல் கட்சி வழங்கியது.தலைமை ஆசிரியர் பொறுப்பில் சீரமைப்பு  திட்டங்கள் வரையப்பட்டு குத்தகை விடப்பட்டுள்ளது என்று தினக்குரல் செய்தி எழுதியது சரி.

இதில் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அனுமதியோடுதான் குத்தகை விடப்பட வேண்டும் என்ற சரத்து ஏதும் இல்லை.பாரிசான் வழகிய நிதியை இவர்கள் பெற்று தரவும் இல்லை.அந்த நிதி வழங்கும் நிகழ்வை புறக்கணித்து வேடிக்கை பார்த்த இவர்கள் இப்போது தலைமை ஆசிரியர் காதில் பூ சுத்த வேண்டாம் என்று ஏன் காதையும் கண்ணையும் வாயையும் திறந்து ஓலமிடுகின்றனர்? என்று முன்னாள் பெ .ஆ .சங்க தலைவர் பொன் ரங்கன் கேக்கிறார்.

பரிசான் நேசனல் நிதியை யாருக்கு குத்தகை விட வேண்டும் என்ற முடிவை பள்ளி தலமை ஆசிரியர் மற்றும் கல்வி இலாக்க முடிவு செய்து பயன் படுத்துவர்.பூமிபுத்ரா நிறுவனம் என்பது 51% விழுக்காடு பங்கு மட்டுமே மலாய்க்காரர்களுக்கு மீதமுள்ள 49% பங்கு இந்தியர்களோ /தமிழர்களோ வைத்து இருக்கலாம் என்பதுதான் , பூமிபுத்ரா அதிக படி உரிமம் என்பது இவர்களுக்கு விளங்காது போனது பெ ஆ சங்க அறியாமையை நினைத்து வெக்கபடுகிறோம்.

குழப்பிகள் மூளை சரியா படிக்காது என்பது உண்மை .இவர்கள் எல்லாம் பெ ஆ சங்க பொறுப்பில் இருப்பதால்தான் நாட்டின் பல பள்ளிகள் பாழாய்பபோகிறது. இது போன்ற மாக்களை ஆசிரியர்கள் வைக்க வேண்டிய கொட்டகையில்  வைப்பதே பள்ளிக்கு சிறப்பு.

இந்த குத்தகை பாரம் பூமிபுத்ரா மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற சரத்து மிக சாதாரண விசியம். இந்தியர்களுக்கு இந்த குத்தகை தரப்பட்ட தலைமை ஆசிரியர் தடையாக உள்ளார் என்ற பெ. ஆ சனத்தின் குற்றச்சாட்டு பூனை கண்ணை மூடிக்கொண்ட கதையாய பெ ஆ சங்கம் குமுறுவதாக செய்தி வெளியிட்ட தினக்குரல் கொஞ்சம் அறிவை பயன் படுத்தி ஆராய்ந்து எழுதி இறுக்க வேண்டும். முதலில் குத்தகை எடுக்க யாருவேண்டுமாலும் முறையாக மனு செய்யலாம்.

இந்த தமிழ்பபள்ளியின் ஆசிரியர ஒருவர் முக நூலில் கூட குத்தகை பாரம் வெளியிடும் அளவிற்கு மிகத தெளிவாக பள்ளி ஆசிரியர் தன் கயமை கடமையை செய்துள்ளார்.

இந்த பணத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் கல்வி இலாக்கவுக்கும் சம்மதம் இல்லை என்ற தினக்குரளின் பூதிங் சாலிதனதை எங்கு பதிவு செய்வது?

தலைமை ஆசிரியர் பழைய கட்டட CF  எடுப்பது அவருக்கு உள்ள வசதி இலாக்வின் உரிமையை  பொறுத்தது. ஓடி எடுத்கார் பதுக்கி எடுத்தார் என்பது இவர்கள் வேலையா? இதுவும் இவர்கள் பார்வையில் தப்பென்றால் இவர்களா பெ ஆ சக்கைகள்?

கடந்த சில ஆண்டுகளாகவே பெ ஆ சங்கம் பள்ளி நிர்வாகத்துக்கு பல தொந்தருவுகளை தந்து நிர்வாக உறவில் விரிசலால் ஆசிரியர்கள் சரியாக வேலை செய்ய முடியாத கோளாறுகளை செய்வதிலேயே இருப்பது வெக்கக்கேடு.

இந்தியர்களுக்கு குத்தகை வழங்கப்பட வேண்டும் என்ற ஆசையில் உள்ள இவர்கள் ஒரு இந்தியர் குத்தகையாளரை பிடித்து வந்து பேரம் பேசாலமே?ஆசிரியைகள் தலையில் புண்ணாக்கை போடுவது , நரி வேலை செய்வது, பொய் அறிக்கை விடுவது ,மக்களை குழப்புவது அரசியல் வேஷம் போடுவது,போலிஸ் பதவி வைத்து பக்கு பண்ணுவது,
முட்டாள் கூட்டங்களை வைத்து பிரசார பிச்சை எடுப்பது மட்டுமே இப்புதிய பெ ஆ சங்கம் செய்யும் சேட்டைகள்.

பள்ளிக்கு கணினி வாங்க சிலாங்கூர் மாநிலம் வழகிய 85,000.00 ரிக்கிட்டை பாழாக்கி கடந்த 5 ஆண்டுகளாக கணினி வகுப்பே இல்லாமல் ஆக்கிய துரோகிகளுக்கு பள்ளி மேம்பாடு பற்றி பேச தகுதியற்றவர்கள்.

பொது மக்கள் /பெற்றோர்கள் பார்வையில் இப்போதுதான் பள்ளி நிர்வாகம் சரியாக செயல் படுகிறது.என்பது பெருமககளின் கருத்து.தலைமை ஆசிரியர் முயற்சியில் 5 லச்சம் கிடைத்துள்ளது மேலும் 10 லச்சம் நடுவண் அரசு வழி கிடைத்துள்ளது இப்படி பட்ட திறமையான தலைமை ஆசிரியரை நோட்டம் பார்ப்பது இன மொழி துரோகம். LPS  எனும் பள்ளி வாரியமும் இந்த தலைமை ஆசிரியர் தலைமையில் தான் பதிவாகி உள்ளது.

இதை யாவும் ஆய்வில் பார்த்தால் பெ ஆ சங்க கோணல் புத்தி காரர்கள் பதவி விலகி விடுவது சமத்து என்று ஆலோசனை கூற விரும்புகிறேன்.பெ ஆ சங்கதின் கடந்த நான்கு ஆண்டுகளாக ஓநாய் நனைகிறதே என்று ஓலமிட்ட நிலை போதும். அம்பாங் தமிழ்ப்பளியை காப்பாற்றுவோம்.ஆசிரியர்களை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள்.

– பொன் ரங்கன்