மலேசியத் தமிழர்களின் 2020ம் ஆண்டு அரசியல் ஏமாற்றம்!

Kugenஇன்னும் 6 ஆண்டுகளில் மலேசியா 2020 எனும் வளர்ச்சி அடைந்த நாடாக ஆகிவிடும் என்கிறார்கள்.தமிழர்களின்  பொருளாதார  வறுமை நிலை இன்னும் 6 ஆண்டுகளில் சரி செய்ய முடியாமல் போனால், நாம் வளர்ச்சி அடைந்த இனமாக பதிவில் இடம் பெற முடியாது. அப்படி முடியாத கட்டத்தில் மலேசியாவில்  வளர்ச்சி அடைந்த இனமாக  யார் நம்மை பிரகடனம் செய்வர்?

2020 ல் நாம்மவர்களில் 80% இன்னும் வறுமையில் தான் இருப்போம். இது இந்தான் ஜெய சொரியவுக்கும் ரேமன் நவரட்னம் இருவருக்கும் தெரியும்.

ஒரு நாட்டின் ஒரு இனம் குறிப்பாக 3 வது நிலை இனமான தமிழ் இனம் 2020 ல் எங்கு நிற்கும் என்று இதுவரை நமக்கு எல்லை தெரியவில்லை.ஆனால் நமது இந்தியர் அரசியல் வாதிகள் வாழ்க்கை தரம் உயரும் அளவுக்கு பாமர மலேசியத தமிழர்களின் வாழ்க்கை உயரவில்லை.   இன்னும்  6 ஆண்டுகளில் உயாராது என்பது எனது ஆணித்தர ஆய்வு.

2020 ல் மலேசியா ஒரு தொழில்மய நாடாக மாற்றுவது. பொதுவான
இலக்கு ? இதில் மனித ஆற்றல் மேம்பாட்டுக்காக பல திட்டங்கள் உண்டு. எதுவானாலும் கல்வியில் தொடங்கி மனித சக்தி ,நிதி, இயந்திரம் , செய் பொருட்கள் ,செய் முறைகள், விநியோகம் ,வணிகம் என்று  படர்கிறது. இதில் வெறும் தொழிலாளி பட்டம் மட்டும் தொடர் கூலி நிலைதான்.

இதில் தமிழர்களின் பங்கெடுப்பு எந்த அளவு உள்ளது ? என்பதே நமது கேள்வி.யார் இதற்கு உதவுகிறார்கள்.நமது ஊடக அறிவிப்புகள் ,கல்வி மைய ,பயிற்சி மையங்கள் செய்யும் சேவைகள் போதுமா?

தன் முனைப்பு  என்று பல இருந்தும் மனிதவியல் மாண்புகள் பல சொல்லும் வானொலி தொலைக்காட்சி ஊடக உரைகள் கடைசியில் ஜோதிட, அதிஸ்ட, ஜாதக வித்வான்கள் விளம்பர சேட்டையில் அதிஸ்டத்தை நம்பி தோற்றுபோகிறோம்.சொல்லி தரும் இந்தியன் நமக்கு பண ஆப்பு அடித்து சிரிக்கிறான்.

மூன்றாம் நிலையில் உள்ள தமிழர்கள் அடுத்து மற்ற இனத்தவர்கள் என்றாகும் போது இந்த 2020 வளர்ந்த நாடு பட்டியல் இனத்தில் சேர்வோமா? என்ற கேள்வி ஒன்று தொக்கி நிற்கும் ஆபத்தில் உள்ளோம்.

2020குல் இந்தோனேசியா மக்கள் 3 மிலியனை தொடும் வந்தேறி இனம் நம்மை தாண்டி மூன்றாம் நிலைக்கு வந்து விடும் .ஓரளவுக்கு மலாய் இன , ஒரே மதம் என்ற உறவில் சாதக சூழல் அவர்களை கட்டி அணைத்துக்கொள்ளும் என்று எழுதி வைக்கிறேன்.

தற்போதய வளரும் தமிழ் சமுதாயம் எதிர்கால நாட்டு அரசியல் நிலையை யோசிப்பதில்லை. கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று திருமண செலவுக்கு ஒரு லட்சம் செலவு செய்வதில் காட்டும் அறிப்பு தனம் இன இலட்சிய உணர்வில் தமிழ் மொழி உணர்வில் காட்டுவதில்லை.

இதைதான் டி எ பி கட்சி காமாச்சி சொன்னார் .பினாங்கு துணை முதல்வர் ராமசாமி தமது ஆய்வில் சொன்னார் .ஆனால் கூட்டத்து கோவிந்தா கோசம் கோபுரம் ஏறவில்லை. எல்லோரும் புத்தி சொல்வதில் வல்லவர்கள் செய்கையில் தமிழ் இனத்தை காப்பாற்ற யாரும் முன் வருவதில்லை.

அரசாலும்  அரசியல் எஜமான்கள் தேர்தல் காலத்தில்  கத்தல்கள், கடத்தல்கள் எல்லாம்  அடுத்த தேர்தல் வரை குடியும் குடுதனமுடன் ஓய்ந்து மறு மாற்றம் பேச வரும் அரசியல் வாதிகள் தாம் அதிகம்.

ஒரு வேலை மலேசியத்  தமிழர்களுக்கு அரசியல் வேண்டாம் ,அரசியல் கட்சிகள் வேண்டாம் என்ற நிலை  வந்து , அவரரவர் யாரையாவது கெஞ்சி கேட்டு வாழ வழி வகுத்து சுய வாழ்க்கை வளம் பெற்றால் போதும் போல தெரிகிறது.

ஒரு இனத்தில் 10 தட்டு மக்கள் இருப்பார்கள்.இது மலேசியத் தமிழர்களுக்கு 10வது கடசி தட்டில் 95% பேர் பிச்சை தட்டில் போராட்ட நிலையை அரசியல் தலைவர்கள் தந்தார்கள் என்றால் கோபப்பட யாருக்கும் வக்கில்லை.

இந்த செய்தியில் இந்தியர்களை நான் எங்கும் குறிக்க வில்லை காரணம் இந்தியர்கள் என்று  ( தமிழன் அல்லாதவர்கள்) தமிழர்கள் கோட்டாவில் அபகரித்து இந்தியர்கள் நன்றாகவே வாழ்கிறார்கள்.

– பொன் ரங்கன்