இனத்தின் அடையாளம் மொழி, அந்த மொழியை இந்த நாட்டில் வாழ வைத்துக்கொண்டிருப்பது தமிழ் பள்ளி!

MALAYSIA-VOTE-INDIANSதற்போதுள்ள இளம் பெற்றோர்கள் படித்தவர்கள் , நல்லது கேட்டதை ஆய்ந்து பார்த்து முடிவேடுக்கம் திறம் படைத்தவர்கள். இனத்தின் அடையாளம் மொழி. அந்த மொழியை இந்த நாட்டில் வாழ வைத்துக்கொண்டிருப்பது தமிழ் பள்ளி.

தமிழ் மொழியின்பால் காதலும் அக்கறையும் உள்ள இளம் பெற்றோர்களே தற்போது தங்களது பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பிகொண்டிருக்கிரார்கள் என்றால் அதை  மறுப்பதற்கும் ஒன்றுமில்லை.

குறிப்பிட்ட தரம் வாய்ந்த தமிழ் பள்ளிகளின் பரிட்சை முடிவுகளின் காரணாமாகவும் சிலர் குறிப்பிட்ட அந்த பள்ளிகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்புவதில் ஆர்வம் காட்டுகிறார்கள்…அதில் ஒன்றுதான் கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ் பள்ளி.

அவர்கள் அடுத்தடுத்து வரும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து தமிழ் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்ற ஆர்வத்தை உணர்ச்சியை  மட்டும் கிளறிவிட்டால் மட்டும் பத்தாது.

இனிவரும் காலங்களில் நகர் புறங்களிலும் , அதன் அருகாமையிலும் அமைந்துள்ள தமிழ் பள்ளிக்கே மேற்கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்  என்பது காலத்தின் கட்டாயம்.

இதன் அடிப்படையில் , பள்ளிகளின்  வெளித்தொற்றம் , அதன் உள்ளே , வெளியே  இருக்கின்ற வசதிகள் இவற்றை முதலில் சரிசெய்து ஈர்ப்பை ஏற்படுத்தினாலே இளம் பெட்றோர்கள் மத்தியிலே, மாணவர்கள் மத்தியிலே ஒரு  நம்பிக்கையை ஏற்படும்.

பெட்றோர்கள் இருக்கின்ற இடம், வேலை செய்கின்ற இடம் இதனை வைத்தே இன்று பல பெட்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியிலே சேர்கிறார்கள்.

வசதி உள்ளவர்கள் தரமான பள்ளிகளுக்கு , தூரமாக இருந்தாலும் தேடிச்சென்று பிள்ளைகளை சேர்கிறார்கள்…இந்த சிந்தனையை மாற்றுவது  என்பது குதிரைகொம்பு !

காலத்தின் கட்டாயமாக….இருகின்ற பள்ளிகளின் வெளித்தரத்தினை மாற்ற வேண்டும். பிள்ளைகளே அடிமட்டக் குறைவாக உள்ள பள்ளிகளை அருகிலுள்ள வசதியுள்ள , வசதி மேம்பாடு செய்யப்பட்ட மற்ற தமிழ் பள்ளிகளோடு  இணைவதே அறிவார்ந்த முடிவு…பிள்ளைகளின் எண்ணிக்கையை மேம்படுத்த இதுவே சிறந்தது!

உதாரணத்திற்கு …523 பள்ளிகளில் 10,000 மாணவர்கள் படிப்பதைகாடிலும்   500 தமிழ் பள்ளிகளிலே 15,000 மாணவர்கள் படிப்பது தானே சாலச்சிறந்த இலக்கு!?  தமிழ் பள்ளியிலே படிகின்ற மாணர்கள் எண்ணிக்கை கூடவேண்டும் ; நமது இலக்கு அதுதானே?

வாய்ப்பும் வசதியும் உள்ள அநேக தமிழ் பள்ளிகள் சிறப்பான தேர்சி விகிதத்தையும் , புறப்பாட நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிவருவதையும் மறுக்க இயலாது.

நகர் புறங்களில் மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள தமிழ் பள்ளிகளை மீம்படுதுவத்தின் வழி தோட்டப்புறங்களில் ஊசலாடும் பள்ளிகள் மூடப்படும் என்பது உண்மைதான், சில தலைமை ஆசிரியர்களின் பதவி காணாமல் போகும்தான்… ஆனால் வேலை போகாது.

20 பிள்ளைகள் உள்ள தமிழ் பள்ளியில் தலைமை ஆசிரியராக  இருப்பதைக்காட்டிலும் 200 அல்லது 1500 பிள்ளைகள் படிக்கின்ற பள்ளியிலே துணை தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும்….சம்பளம் குறையப்போவதில்லை!!

ஒரு இனத்தின் அடையாளத்தை  நிலை நிறுத்த இந்த ஆசிரியார் சமுதாயம் முன் வருமா? மொழிக்காக…இனத்திற்காக இதனை செய்வார்களா?

-அண்ணா