ஹூ முவ் மை சீஸ்? (யார் எனது சீஸை நகர்த்தியது?)

ஆங்கிலத்தில் டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன்

தமிழாக்கம் – போகராஜா குமாரசாமி

முன்னுரை

நான் இதுவரை படித்தவற்றில் ஒரு மிக சிறந்த படைப்பு, ஒவ்வொரு மனிதரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். DR ஸ்பென்சர் ஜோன்சன் ஆங்கிலத்தில் எழுதியதை செம்பருந்தி.கோம் வாசகர்களுக்கு தமிழில் சமர்ப்பிக்கிறேன். இக்கதை உலக மானிடர் அனவருக்கும் ஏற்புடையதே. ஆனால் இந்த நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஒரு படிப்பினையாக இக்கதை அமைய வேண்டும். கதையில் வரும் ஹெமும், ஹவும் இந்த நாட்டில் இந்தியர்களின் நிலைமைக்கு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த நாட்டில் அதிகமான இந்தியர்கள் தனி மனித மாற்றதை ஏற்பதாக தெரியவில்லை. ஆனால் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தனி மனித மாற்றம் ஏற்படாமல் ஒரு இனத்தின் மாற்றம் ஒரு நாளில் ஏற்படாது. இக்கதையில் வரும் சில சொற்றோடருக்கான எனது விளக்கத்தை பச்சை வர்ணத்தில் தந்துள்ளேன்.

mk1அன்புடன் தொடர்ந்து வாசிக்கவும்!

இந்த ஊக்கமளிக்கும் கட்டுரை டாக்டர் ஸ்பென்சர் ஜான்சன் எழுதிய ஹூ முவ் மை சீஸ்? (என் சீஸை நகர்த்தியது யார்?) என்ற புத்தகத்திலிருந்து தமிழாக்கம் செய்யபட்டுள்ளது. இந்த கதையில் இரண்டு எலிகள் மற்றும் இரண்டு சிறிய மனிதர்கள் பற்றியது. இந்த கதை உண்மையில் நம்மை பிரதிபலிப்பதுடன் மாற்றம்  ஏற்படுமாயின் நமது நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதையும் விவரிக்கிறது. எல்லாவற்றையும் போல் மாற்றம் தவிர்க்க முடியாதது. பல மக்கள் மாற்றத்தை எதிர்க்கின்றனர் மற்றும் மாற்றம் ஏற்படும் என்ற அச்சத்துடன் தங்கள் வாழ்வு நாளை கடக்கின்றனர். சிலர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்கிறார்கள், ஆனால் பலர் அப்படி மாற முடியாது வாழ்கிறார்கள். சிலர் மாற்றத்தை ஒரு வாய்ப்பாக எற்றுக் கொள்ளகிறார்கள், அதேப் போல் சிலர் அதனை ஒரு அச்சுறுத்தல் என்றே அதை பார்க்கிறார்கள். நீங்கள் எந்த ரகம்?

ஹூ முவ் மை சீஸ்?

என் சீஸை நகர்த்தியது யார்?

உங்கள் வேலையில் அல்லது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு அற்புதமான வழி, – DR ஸ்பென்சர் ஜோன்சன்

“சீஸ்” – நாம் வாழ்க்கையில் வேண்டும் என்று நினைப்பவைகளின் ஒரு உருவகம், அது ஒரு வேலை, ஒரு உறவு, பணம், பெரிய வீடு, சுதந்திரம், சுகாதார, அங்கீகாரம், ஆன்மீக அமைதி, அல்லது ஜாகிங் அல்லது கோல்ஃப்  விளையாட்டு போன்ற ஒரு நடவடிக்கை யாகவும் இருக்கலாம்.

நாம் ஒவ்வொருவரும் எத்தகைய ‘சீஸ்’ வேண்டும் என்பது நமது சொந்த யோசனையாக உள்ளது, மற்றும் நமக்கு மகிழ்ச்சி தரும் என்ற நினைப்பில் நாம் அதை தொடர்வோம். நமக்கு அது கிடைத்தால், நாம் அதனுடன் நேருக்கமாக இருப்போம், ஆக நாம் அதனை இழக்கவோ, அல்லது அதை வேறு யாரும் எடுத்து இருந்தால், நமக்கு அதிர்ச்சியாக அமையும்.

நீண்ட காலத்திற்கு முன்பு, நான்கு சிறிய ஊயிரினம் வாழ்ந்தது. அந்த நான்கு ஊயிரினத்தில் இரண்டு சினிவ் மற்றும் ஸ்காரி என்ற எலிகள் மற்றவை இரண்டும் ஹெம், ஹவு என்ற சிறிய மனிதர்களாகும்.

அவர்களுக்கு  தங்களின் வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு சூழல் வழியில் சீஸ் தேடி பயணித்தனர்.

தினமும் காலை, எலிகள் மற்றும் சிறிய மனிதர்கள் தங்கள் பிடித்தமான கியர் உடையில்  அவர்கள் சீஸ் நிலையம் சியை நோக்கி பயணித்தனர், அங்கு தங்களுக்கு ஏற்ற வகையான சீஸ் சீஸ் நிலையம் சியில் கிடைத்தது. சீஸ் நிலையம் சி மிக பெரியது.

ஹெமும், ஹிவும் தங்களின் வீட்டை சீஸ் நிலையத்திற்கு அருகில் அமைத்து கொண்டதோடு ஒரு சமூக வாழ்க்கையை தோற்றுவித்தனர்.

தங்களை வீட்டின் சூழலுக்கு ஏற்ப, ஹெமும், ஹவும் தங்கள் வீட்டின் சுவரில் பின் வரும் சொற்றோடர்களின் மூலம் அலங்கரித்தனர்.

‘சீஸ் கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.’                               

(நீங்கள் விரும்புவது கிடைத்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்)

ஒரு காலை, சினிவ்  மற்றும் ஸ்காரி சீஸ் நிலையம் சி வந்தனர், அங்கு சீஸ் இல்லை என்பதை கண்டனர்.

அவர்களுக்கு இது ஆச்சரியமாக இல்லை, காரணம் அவர்கள் சீஸ் ஒவ்வொரு நாளும் சிறிய அளவில் குறைந்து வருவதை அறிந்திருந்தனர். அவர்கள் தவிர்க்க முடியாத இத்தருணத்திற்கு தயாராக இருந்ததோடு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை உள்ளுணர்வால் அறிந்திருந்தனர். அவர்கள் அவ்விடத்தைவிட்டு புதிய சீஸ் தேடி வேறு இடத்திற்கு சூழல் வழி விரைந்தனர்.

பின்னர், அதே நாளில், ஹெமும், ஹவும் சீஸ் நிலையம் சிக்கு வந்தனர், “என்ன! சீஸ் இல்லையா? யார் என் சீஸை எடுத்து சென்றார்?  இது நியாயமில்லை! “, என்று ஹெம் திட்டினான். அவர்கள் அந்த இரவில் பசியோடும், ஊக்கம் இன்றியும் வீட்டிற்கு சென்றார். அவர்களின் வீட்டு முன் சுவரில் ஹவு எழுதினார்:

‘உங்களுக்கு சீஸ் முக்கியம் (வேலை அல்லது தொழில்) ஆகவே நீங்கள் அதனை சார்ந்தே வாழ வேண்டியுள்ளது.’                                                          

(உங்களுக்கு நீங்கள் செய்யும் வேலை அல்லது தொழில் முக்கியம், ஆகவே நீங்கள் அதனை சார்ந்தே வாழ வேண்டியுள்ளது)

அடுத்த நாள் ஹெமும், ஹவும் தங்கள் வீடுகளை விட்டு,  சீஸ் நிலையம் சி திரும்பினார் ஆனால் அங்கு நிலைமை மாறவில்லை.

ஹவும்,  சினிவ்  மற்றும் ஸ்காரி எங்கே என்று கேட்டார்? நீங்கள், நாமக்கு தெரியாதவை ஏதாவது அவர்களுக்கு தெரியுமா என்று நினைக்கிறீர்களா? என்று ஹெமிடம் கேட்டார்.

அவர்களுக்கு என்ன தெரியும், அவை  சிறிய எலிகள் என்று “ஹெம், ஏளனமாக கூறினார்”? அவர்கள் சூழ் நிலைமைக்கு ஏற்ப நடந்துள்ளனர். நாம் சிறிய மனிதர்கள்,  நாம் தான் சிறந்தவர்கள்”

ஹவும், ‘நாம் இங்கு உள்ள நிலைமையை ஆராய்வதை நிறுத்திவிட்டு, புதிய சீஸ் கிடைக்கு இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று”, ஆலோசனை தெரிவித்தார்.

ஹவு, சீஸ் நிலையம் சியை விட்டு வெளியேற முடிவு செய்தார், அதே நேரத்தில் ஹெம் சீஸ் இல்லாத நிலையம் சியில் சீஸ் கிடைக்கும் என்ற எண்ணதில் அங்கு தங்குவதையே வசதியாக எண்ணினார்.

ஹவும் ‘இது குழப்பமான நேரம்’, என்று கூறியதுடன், வீட்டின் முன் சுவரில் இப்படி எழுதினார்

‘நீங்கள் மாறா விடில், நீங்கள் அழிந்து போவீர்கள்.’                                  

(நீங்கள் உங்கள் வாழ்க்கையை காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் அப்படி மாறவில்லையானல் பின் தங்கி போகலாம்)

இதற்கிடையில் சினிவ்  மற்றும் ஸ்காரி புதிய சீஸ் நிலையத்தை தேடி சூழல் வழியில் பயணித்தனர், அவர்களின் தேடல் மூலம் சீஸ் நிலையம் என்னை(N) கண்டன.

சீஸ் நிலையம் என்னில் அதிமான புதிய சீஸ் இருந்தது. சினிவ்  மற்றும் ஸ்காரி கண்டதிலேயே ஒரு பெரிய சீஸ் நிலையம் அதுதான்.

ஹவும் மிகவும் கவலையுடன நான் சூழல் வழியில் வெளியே போக வேண்டுமா என்று சிந்தித்தார். ஹவும் முன் சுவரில் இப்படி எழுதியதுடன் & சில நேரங்களில் அதை பார்த்துக் கொண்டியிருப்பார்:

‘நீங்கள் பயம் இல்லாதவராக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?’                  

(உங்களுக்கு அச்சமில்லை என்றால், எப்படி செயல்படுவீர்கள்)

ஹவு இப்போது உணர்ந்தார், நாம் நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று கவனிப்பதுடன் மாற்றத்தை எதிர்பார்திருந்தால். இந்த மாற்றம் நமக்கு திடுதிப்பென ஏற்படாமல் தவிர்த் திருக்கலாம். ஹவு சிறிய ஓய்வுக்கு பின் சூழல் சுவரில் இப்படி எழுதினார்

சீஸ் வாசனையை அடிக்கடி நூகருங்கள், அது பழமையாவதை தெரிந்துக் கொள்ள முடியும்.

(உங்களின் நடவடிக்கைகளை அடிக்கடி திரும்பி பாருங்கள், அவை காலம் கடந்த முறையாக இருப்பதை அறியலாம்)

ஹவு வியப்புடன் சிந்தித்தார் ஹெம்  தொடர்ந்து சென்று இருக்குமா? அல்லது அவர் இன்னமும் தனது சொந்த அச்சத்துடன் முடங்கி இருக்குமா? ஹவு சூழலில் தனது சிறந்த  காலத்தை நினைத்துக் கொண்டது. அவர் தனித்தே பயணித்தார். அவர் சூழல் சுவரில் எழுதினார்:

ஒரு புதிய திசையில் பயணிப்பதால், புதிய சீஸை கண்டறிய உதவுகிறது.                 

(புதிய முறையில் சிந்தித்து செயல்படுவதால் புதிய வெற்றிகளைப் பெறலாம்)

ஹவு ஒளி குன்றிய  தாழ்வாரத்தில் புன்னகையுடன் பயணிக்க தொடங்கினார். ஹவு இன்னும் தான் தேடும் சீஸ்ஸை அடையவில்லை, ஆனால் அவர் அவரது ஆன்மாவுக்கு எற்ற ஊக்க சக்தியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு சரியா? என்று தெரியாது என்றாலும், அதனைவிடுத்து அவருக்கு என்ன நடக்கும் என்று அனுமானிக்க இயலாவிட்டாலும், நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர் கொண்டார்.

ஹவுக்ககே ஆச்சரியம்,  தன்னை அறிந்துக் கொண்டு, மேலும் வாழ்க்கையினை அனுபவிக்க தொடங்கினார். அவர் சுவரில் மீண்டும் எழுதினார்:

நீங்கள் உங்கள் அச்சத்தை தாண்டி பயணித்தால் போதும், நீங்கள் உங்களின் சுதந்திரத்தை உணரலாம்.                                                                   

(உங்களுக்குள் இருக்கும் அச்சத்தை கடந்து புதிய வாய்ப்புகளில் முயற்சித்தீர்கள் என்றால் ஒரு வெற்றிகரமான வாழ்வைப் பெறலாம்)

mk2மேலும் சிறப்பாக இருக்க, ஹவு தனது மனதில் ஒரு படத்தை வரையத் தொடங்கினார். ஹவு மனதில் நினைத்த காட்சி, தனக்கு பிடித்த ஒரு செயிடர் வகை சீஸ் குவியலுக்கு மத்தியில் உட்கார்ந்து இருப்பதாகும். அவர் விரும்பிய பல சீஸ்களை உண்பதாக பார்த்து மற்றும் அதனை கண்டும் மகிழ்ந்தார்.

இன்னும் தெளிவாக அவரின் மனகாட்சியில் புதிய சீஸை அனுபவித்து உண்னு காட்சியை கண்டார், மேலும் உண்மையானதாகவும்,  நம்பக்கூடியதாகவும் அது மாறியது. அவர் சுவரில் மீண்டும் எழுதினார்

புதிய சீஸை சந்தோஷமாக உண்னும் கற்பனை காட்சியே என்னை புதிய சீஸ் இடத்தை கண்டுபிடிக்க வழி நடத்தும்.                                                    

(நீங்கள் நினைக்கும் வெற்றிக்காண திட்டத்தை கற்பனை செய்வதன் மூலம் அதனை விரைந்து பெற வழி வகுக்கும்)

ஹவு ஆச்சரியத்துடன், தாம் எப்போதும் ஒரு மாற்றம் மோசமாக நிலமைக்கு வழிவகுக்கும் என்று ஏன் நினைத்தேன் என்ற எண்ணினார்.

இப்போது ஹவு மாற்றம் நல்லதே, நல்ல நிலமைக்கு வழிவகுக்கும் என்று உணர்ந்தார்.
பின்னர் ஹவு அதிக ஊக்கத்துடன், சுறுசுறுப்புடன் சூழல் வழியில் புதிய சீஸ் நிலையத்தை தேடி சென்றார். ஹவு ஒரு சீஸ் நிலையத்தை கண்டு உள்ளே செனறார். அங்கு சிறிது, சிறிதாக புதிய சீஸ்ஸை கண்டார் ஆனால் அந்த நிலையம் காலியாகவே இருந்தது. யாரோ ஏற்கனவே அங்கு வந்துள்ளனர். ஹவு சுவரில் எழுதினார்:

எவ்வளவு விரைவாக நீங்கள் பழைய சீஸை தவிர்த்தால், நீங்கள் அவ்வளவு சீக்கிரமே புதிய சீஸை பெறலாம்.                                                        

(எவ்வளவு விரைவாக நீங்கள, உங்களின் பழைய செயலை மாற்றி, காலத்திற்கு ஏற்ற புதிய முறையில் செயல் பட்டால் சீக்கிரமே முன்னேற்றம் பெறலாம்)

ஹவு தானது புதிய சீஸ்ஸை ஹெமுக்கு வழங்க சீஸ் நிலையம் சி  சென்றார். ஆனால் ஹெம் அதனை நிராகரித்தார். ஹெம் மீண்டும் தனது சொந்த சீஸ்ஸைப் பெற விரும்பினார். ஹவு  ஏமாற்றத்துடன் தனது தலையை அசைத்தார் ஆனால் தனது புதிய சீஸ் தேடும் முயற்சியை நிறுத்தவில்லை. அவர் புன்முறுவலுடன் தன் நிலை உணர்ந்தார், சுவரில் எழுதினர்:

இந்த சூழ்ல் வழியில் சீஸ்ஸை தேடுவது, சீஸ் இல்லாத நிலையில் இருப்பதைவிட பாதுகாப்பானது.                                                               

(வெறுமனே ஒன்றும் செய்யாமல் இருப்பதைவிட, புதிய வாய்ப்புகளின் வழி வாழ்வுதர முன்னேற்றத்திற்கு முயற்சிப்பதே பாதுகாப்பானது)

ஹவு மீண்டும் உணர்ந்தார், நாம் கற்பனை செய்வது போல் நிலைமை பயப்படும் அளவுக்கு மோசமாக இல்லை. நாம் மனதில் வளர்க்கும் பய எண்ணத்திற்கு, உண்மையான நிலைமை மோசமாக இல்லை.

ஹவு உணர்ந்தார், இயற்கையில் நாம் எதிர் பார்த்தாலும், எதிர் பார்க்கவிட்டாலும் மாற்றம் தொடர்ந்து ஏற்படும். எப்போது நாம் மாற்றத்தை எதிர் பார்க்காத போதும், அதை தேடாத போதும் மாற்றம் ஏற்பட்டால், நாம் மாற்றத்தினால் பாதிப்புக்கு உள்ளாவோம்.

ஹவு இதனை உணர்ந்த போது தனது நம்பிக்கைகளை மாற்றி கொண்டார், அவர் சுவரில் எழுதினார் :

பழைய நம்பிக்கைகள், நீங்கள் புதிய சீஸை பெற வழி காட்டது.                  

(பழைய சிந்தனைகள், வழிமுறைகள் உங்களின் முன்னேற்றதுக்கு வழி காணது)

ஹவு இப்போது உணர்ந்தார், தனது புதிய நம்பிக்கை அவரை ஒரு புதிய வழியில் நடந்து செல்ல ஊக்குவிக்கிறது என்று உணர்ந்தார். அவர் அதே சீஸ் இல்லாத நிலையத்திற்கு சென்று திரும்பி வந்த போது இல்லாத வகையில் இந்த முறை வித்தியாசமாக நடந்து கொண்டார்.

உங்களுக்கு நடப்பவை அனைத்தும் உங்கள் நம்பிக்கையின் தேர்வை சார்ந்திருக்கிறது. அவர் சுவரில் எழுதினார்:

நீங்கள் புதிய சீஸை கண்டுபிடித்து அனுபவிக்க முடியும் என்று சிந்திக்கும் போதே, நீங்கள் உங்களின் வழிமுறையினை மாற்ற வேண்டும்.                                    

(நீங்கள் புதிய வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்று சிந்திக்கும் போதே, நீங்கள் அந்த வாழ்வைப் பெற உங்களின் செயல்பாட்டு வழிமுறையினை மாற்ற வேண்டும்)

ஹவு நம்பினார் அவர் சரியான திசையில் செல்கிறார் என்று. ஹவு சிந்தித்தார், ஹெமும் தாம் சுவரில் எழுதியதை வாசித்து அவரது வழி வரும் சாத்தியங்கள் இருக்கிறது என்று எண்ணினார். அவர் சில காலம் சிந்தித்தை பற்றி சுவரில் எழுதினார்:

ஆரம்பத்திலே சிறிய மாற்றங்களை கவனித்து செயல்பட்டால் பெரிதாக மாற்றங்கள் வருவதற்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள  உதவும்.                            

(நீங்கள் ஆரம்பத்திலே நீங்கள் எதிர் நோக்கும் சிறிய பிரச்சனைகளை கவனித்து செயல்பட்டால் பெரிதாக பிரச்சனைகளை ஏதிர் கொள்ளவதிலிருந்து உங்களை மாற்றிக் கொள்ள முடியும்)

ஹவு சூழல் வழியில் மிகவும் தெம்புடனும், வேகமாகவும் தனது பயணத்தை தொடர்ந்தார். அவர்,  புதிய தாழ்வாரம் வழியாக தொடந்தார். ஒரு வளவான மூலையில் புதிய சீஸையும் சீஸ் நிலையம் என்னை(N) கண்டார். அங்கு அதிக அளவில் சீஸ் இருந்தது. அங்கு சினிவ்  மற்றும் ஸ்காரியும் ஹவுவை வரவேற்றனர்.

 

“மாற்றத்திற்கு ஓ போடு!”

ஹவும் சீஸ் நிலையம் என் (N) மிகப்பெரிய சுவரில் தன் கற்றுக் கொண்டதின் சுருக்கத்தை எழுதினார், அவர் கற்றுக் கொண்டதை பார்த்து சிரித்துக் கொண்டார்:

 

  • மாற்றம் ஏற்படும்
  • மாற்றதை எதிர்பார்க்கவும்
  • மாற்றத்தை கண்காணிக்கவும்
  • விரைவாக மாற்றத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுங்கள்
  • மாறுங்கள்
  • மாற்றத்தை அனுபவியுங்கள்
  • விரைவாக மாற்றதை ஏற்று, அதனை அனுபவிக்க தயாராக இருங்கள்.

mk3சீஸ் உடன் முன்னேறுங்கள் & மகிழுங்கள்!

(உங்களின் செயல்பாட்டில் முன்னேறுங்கள், ஆனந்தமாக வாழுங்கள்)

 

இப்புத்தகம் தமிழிலும் வெளியீடப்பட்டுள்ளது, நான் இன்னும் இப்புத்தகத்தை வாசிக்கவில்லை.

எனது அடுத்த படைப்பு சமூக தொழில் முனைவோராக விருப்பமா?

தமிழாக்கம் – போகராஜா குமாரசாமி