அம்பாங் தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்து! சட்ட நடவடிக்கை எடுக்க தலைவர்கள் முன் வர வேண்டும் !

SUKE எனப்படும் சுங்கை பிசி முதல் அம்பாங் வழி உலு கிளாங் மற்றும் AKLEH வரை செல்லும் புதிய நெடுஞ்சாலை திட்டதில் 60 ஆண்டுகால அம்பாங் தமிழ்ப் பள்ளி மூடும் நிலைக்கு நெருக்குதலை அனுபவிக்க போகிறது.

சிலாங்கூர் மாநிலத்துக்கு சொந்தமான ( 60 ஆண்டுகளாக பள்ளி மாணவர்கள் பாவித்து வரும் திடலுக்கு மேல் 6 வழி மேற்சசாலை அமைப்பதால் அதன் தூண்கள் பள்ளி திடலில் கட்டப்படும் நிலையில் சாலை இரைச்சலில் அம்பாங் தமிழ்பபள்ளியில் மாணவர்கள் படிக்க முடியாத சூழலில் மாணவர்கள் எண்ணிக்கை இயற்கை அழிவை தொடும் நிலை வந்து அப்பள்ளி மூடும் நிலைக்கு நம் தமிழ் தலை விதி அமைத்துள்ளது.

2009 தில் இதை ஆரம்பித்த காலத்தில் என் தலைமையில் சுமார் 800 பெற்றோர்கள் MPAJ எனும் நகராச்சி மன்றத்துக்கு எதிர்ப்பு மனுகொடுத்தோம். பிறகு PKR அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுரைடா அவர்களை அழைத்து சுமார் 2000 பொது மக்கள் கூட்டத்தில் எதிர்ப்பு மனு கொடுத்ததும் பள்ளி திடல் மீதான சாலைத்திடம் அமுலுக்கு வந்துள்ளது.

கடந்த ஜனுவரி மாதம் நடந்த MPAJ நகராச்சி மன்ற மாதாந்திர கூட்டத்தில் நகராச்சி உறுபினர்கள் ஒட்டு மொத்த எதிர்ப்பை தெரிவித்தார்கள் என்ற தகவலை DAP நகராச்சி மன்ற உறுப்பினர் திரு சுப்ரமணியம் என்னிடம் தெரிவித்தார் என்பது இங்கே குறிப்பிட தக்கது.

இதற்கிடையில் SUKE நிறுவனமும் /LEMBAGA LEBUHRAYA மலேசியா/KEMENTERIAN KERJA RAYA போன்ற அமைப்புகளின் சாலை நிர்மாணிப்பு அறிமுக அறிக்கை வீடு வீடாக விநியோகித்து வருகிறார்கள்.

ஜாலான் புக்கிட் பிலச்சான் முதல் சாலைக்கு மேல் வரும் புதிய சாலை அம்பாங் தமிழ்ப பள்ளிக்கு வந்துடன் ஏன் தமிழ்பள்ளி திடலுக்கு பாய்ந்து மீண்டும் அம்பாங் சாலைக்கு போக வேண்டும் என்று யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

CHERAS TAMAN BUKIT PRMAIYIL ஒரு TOLL அதிலிருந்து 6 கிலோ மீட்டரில் அம்பாங் தமிழ்பள்ளியில் இன்னொரு TOLL ஒரு புறமிருக்க AHKLH சாலையில் இன்னொரு TOLL கட்டி கோலலம்பூர் போக வேண்டும் நிலை ஏற்பட்டு உள்ளது

விசாரித்ததின் படி இத்திட்டம் சிலங்கூரின் BARISAN காலமான 2007குமுன்பே தயாராகி விட்டதாக தகவல்.நமக்கு எது எப்படி போனாலும் அம்பாங் தமிழ்பள்ளிக்கு ஆபத்தும் அழிவும் ஏற்படுத்தியுள்ள இந்த மேற்சாளை ஏன் இப்போதுள்ள சாலை வழியே போகாமல் தமிழ்ப்பள்ளிககு வந்துடன் வளைவு எடுத்து திடலை அடித்து சுமார் முக்கால் ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ள 3 தமிழ்பள்ளி கட்டிடங்களை மறைத்து திடலை அழித்து செல்லவேண்டும் ?இதை கேக்க எந்த தலைவர்க்கும் உரிமை இல்லையா?

அம்பாங் தமிழ்ப பள்ளி மேம்பாட்டுக்கு அருகில் உள்ள 5 ஏக்கர் நிலம் கோரி 2002 மனு செய்தும் JPS நடுவண் அரசுக்கு மனு செய்தும் பதில் இல்லாத பட்சத்தில் இந்த சாலை திட்டத்துக்கு அன்றைய BN அரசு வழி வகுத்து நம்மை ஏமாற்றி உள்ளதை நாம் பதிவு செய்தாக வேண்டும்.

நாட்டின் பல தமிழ்ப பள்ளிகளை போலவே அம்பாங் தமிழ்ப்பள்ளியும் அழிவுக்கு அடிவாங்க உள்ளது. இதை இப்போதய நிலையில் சட்ட தடை வழி மட்டுமே போராட முடியும்.

பாக்கதான் சட்ட நிபுணர்கள் யார் முன்னுக்கு வர போகிறார்கள் என்பது நமக்கு இன்றைய அவசர கேள்வியாக உள்ளது????

அம்பாங் தமிழ்பபள்ளி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் சட்ட மன்றத்தில் எழுப்பாத PKR சுரைடா /அஸ்மின் அலி /காசிம் போன்ற பாகத்தான் பிரதநிதிகள் தூங்கியது ஏன் ? எங்களிடம் பொய் சொல்லியே அரசியல் புழைப்ப நடத்தும் இவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகுட்ட வேண்டும். தமிழ் பள்ளியையும் தமிழ் மொழியையும் அழித்து அஞ்சுக்கும் பத்துக்கும் அலையும் கூட்டம் நமக்குத தேவை இல்லை.

இது தொடர்பாக நாங்கள் மாண்பு மிகு குலசேகரனிடம் முறையிட்டுள்ளோம். அம்பாங் மக்கள் துணை நிற்க PIBG மற்றும் LPS இதர வட்டார தமிழர் இந்தியர் இயக்க பொறுப்பாளர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

ம.அ .பொன் ரங்கன் ,PJK
முன்னாள் PIBG தலைவர்/துணை தலைவர்
LPS பள்ளி வாரியக்குழு- அம்பாங் தமிழ்ப பள்ளி