அண பாக்கியநாதன் நமது தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் படும் அவதியை நன்றாகவே படம் பிடித்து காட்டியுள்ளார். ஆனால் டத்தோ என் எஸ் ராஜேந்திரன் மீது என்ன கோபமோ தெரியவில்லை அவரை வாட்டி வதக்கி எடுத்திருக்கின்றார். அவரையும் வேதமூர்த்தியும் ஒரே தராசில் வைத்து எடை வேறு போட்டிருக்கின்றார்.
பொதுவாக இரு பொருட்களின் வேற்றுமை ஒற்றுமைகளை வரிசைப்படுத்துபோது அந்த இரு பொருட்களும் சம நிலையைக் கொண்டுள்ளதா என்று முதலில் பார்க்க வேண்டும்.
பேராசாரியர் ஒரு அரசாங்க ஊழியர். அரசாங்கம் இடும் கட்டளையை நிறைவேற்றுவது அவரது கடமை. எந்த கட்சி ஆட்சியிலிருக்கிறதோ அந்த கட்சி அமைத்த அரசாங்கம் இட்ட பணியை செய்வது அரசாங்க ஊழியர்களின் கடமை.
வேதமூர்தி ஒரு தனிப்பட்ட நபர் , தன்னேச்சையாக யார் கீழும் இயங்காமல் தானே முடிவு செய்யும் சுதந்திரம் அவருக்கு உள்ளது. அவராகவே முன் வந்து இந்தியர் நலனுக்காக அராசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி , தேர்தல் இறுதி கட்டத்தில் விரக்தியடைந்து தான் எதிர்த்த அரசாங்கத்தின் காலிலேயே விழுந்து அதற்கு பரிசாக துணை அமைச்சர் பதவியும் பெற்றவர்.. இந்தியர்களுக்காக தான் போட்ட ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்ட பின்னர் , அது நிறைவேற்றப்படும் என்று முழுமையாக நம்பி , அதை செயலாக்க அப்பணி தன்னிடமே ஒப்படைக்கப் படும் என்று பெரிதும் எதிர்பார்த்து அந்த துணை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். பின்பு அவராகவே பாரிசான் அரசாங்கத்தின் சுய ரூபத்தை அறிந்து தன்னால் இந்திய சமுதாயத்திற்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று கூறி வெளியில் வந்தவர். அவர் நுழையும் முன்பே இது தெரிந்திருந்தும் அவர் உள்ளே சென்றது அவரின் அரசியல் அறிவு பூஜியம் என்பதனைக் காட்டுகிறது. அதை விட்டுவிடுவோம் அது வேறு விஷயம்.
ஆகவே ராஜேந்திரனை வேதமூர்தியை வைத்த அதே தட்டில் வைத்து எடை போடமுடியாது. அவருக்கு கொடுத்த வேலையை அவர் செவ்வனே செய்து முடித்தார் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அது அரசியலுக்காக , இந்தியர்களை வசப்படுத்த போட்ட நாடகமாகவே இருக்கட்டும். பிரதமர் கட்டளை என்பதால் அதனை ராஜேந்திரன் மேற்கொண்டார். அதற்காக நூற்றுக் கணக்கானவர்களை சந்தித்து நாட்டிலுள்ள எல்லா தமிழ்ப்ப் பள்ளிகளுக்கும் விஜயம் செய்து ஆயிரக்கனக்கான தரவுகளைத் திரட்டி அதன் பின்னர் ஒரு முழுமையான அறிகையை தயாரித்து கொடுப்பது என்பது சாதாரன காரியமல்ல.அதற்கு தனி ஆற்றல், திறமை அறிவு அனுபவம் அதற்கு மேலாக மொழி ,சமுதாயத்தி மீது பற்றும் மிகவும் அவசியம் அவர் ஆளும் கட்சி எதிர்கட்சி என்று இனம் பாராமல் எல்லா தரப்பினர்களிடையேயும் –அவர்கள் தமிழ்க் கல்வியின் மேல்அக்கறை கொண்ட பங்குதாரர்கள் என்ற காரணத்தால் –சந்திப்புகள் நடத்தி ஆலோசனை கேட்டவர். அதற்கு சான்றாக , எதிர்கட்சியைச் சார்ந்த , ஈப்போ பாராட் மாண்புமிகு குலசேகரனையும் அந்த திட்ட வரைவு சமர்ப்பிப்பு அன்று அழைதிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அதோடு பேராசிரியர் என் எஸ் ராஜேந்திரன் உப்சி பல்கலைகழகத்திலிருந்து இப்பணிக்காக இரவல்கொடுக்கப்பட்டவர் என்பது நினைவில் கொள்க . இந்த 2 வருட பணி முடிந்த அவர் பேராசிரியர் தொழிலுக்கு மீண்டும் உப்சி பல்கலைக்கழகத்திற்கே திரும்ப வேண்டும்.
வேதமூர்தியைப் போல் தமிழ்ப்பள்ளிகளுக்காக “நான் இப்படியெல்லாம் செய்ய திட்டமிட்டுள்ளேன் , எனக்கு குழு ஒன்றை அமைத்துக் கொடுங்கள்” என்று பிரதமரிடம் வேண்டி ஒப்பந்தம் போட்டு அங்கு போனவர் அல்ல. நஜீப் அரசியல் நோக்கோடு இதை செய்திருக்கலாம் , ஆனால் ராஜேந்திரனின் உழைப்பு உண்மையானது. அவரின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால் தமிழ்ப் பள்ளிகளுக்கும் தமிழ் மொழிக்கும் புதிய விமோசனம் கிடைக்கும் . இவரின் பரிந்துரைகள் சமுதாய நோக்கை முன்நிறுத்தி அரசியலுக்கு அப்பால் உருவாக்கப்பட்டது ஆனால் அவற்றின் அமலாக்கமோ முழுக்க முழுக்க அரசியல் சார்புடையது.
இதற்றையெல்லாம் பற்றி சிந்திக்காமல் “பிரதமர் பொதுத்தேர்தலுக்கு முன் பேராசிரியர் என்.எஸ்.ராஜந்திரனினை முன் நிறுத்தி அமைத்த மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுகான மேம்பாட்டு திட்டவரைவு குழு முழு அரசியல் கண்துடைப்பு. இப்படிப்பட்ட குழுவில் பங்கேற்பதே அவர் இச்சமுதாயத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்” என்று பாக்கியநாதன் கூறுவது டூ மச்ச் என்றே கருதுகிறேன்.
அவருக்கு அந்த வரைவுத் திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டு அதற்கான பண பலம் , ஆள்பலம் , அதிகாரம் எல்லாம் கொடுத்து அதனை செய்யத் தவறினால் பாக்கியநாதனுக்கு ராஜேந்திரனை திட்ட முழு உரிமை உள்ளது. இவை யாவும் இல்லத பட்சத்தில் அல்லது அப்பணி அவரிடம் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் அவரை குறை கூற தார்மீக அடிப்படையில் பாக்கியநாதனுக்கு உரிமையில்ல. இந்த திட்ட வரைவை கல்வி அமைச்சிடன் சமர்ப்பிக்கப்பட்டு தேசிய கல்வித்திட்டத்துடன் ஒருங்கிணைகப்படும் என்று அன்றே பிரதமர் கூறிவிட்டார்.
அப்படியே அவர் வகுத்த அந்த திட்டங்கள் கல்வி அமைச்சினால் நிறைவேற்றப்படாமல் போனாலும் அதற்கு ராஜேந்திரனைக் குறை கூற முடியது. அதை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் கடமை. அது பாரிசானாக இருந்தாலும் சரி , மக்கள் கூட்டணி யாக இருந்தாலும் சரி, நடப்பு அரசை எக்கட்சி எடுத்து நடத்துகிறதோ அவ்வரசின் கடன். அப்படியே பாரிசான் தொடர்ந்து இந்த நாட்டை ஆளுமேயானால் இந்திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை பாரிசானின் பங்காளிக் கட்சியா ம.இ.கா தான் கண்காணிக்கவேண்டும் , அது ராஜேந்திரனுக்கு பணிக்கப்பட்ட பணிகளின் பட்டியலில் இல்லை. முன்பு டத்தோ பத்மநாபன் காலத்தில் இந்தியர்களுக்க்காக அவர் முன்வரைந்த பச்சை புத்தகத்திற்கு ஏற்பட்ட கதி இதற்கும் ஏற்படக்கூடிய சாத்தியமுண்டு. அதற்கு பத்மாநபனை யாரும் கரித்துக்கொட்டவில்லை. அரசு அதனை நிறவேற்றவில்லை அவ்வளவுதான்.
இங்கு எதிர்கட்சிகளும் தங்கள் கடமையை நிச்சயாமாக செய்யவேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களை நிறைவேற்றத் தவறினாலோ அல்லது சாக்கு போக்குச் சொல்லி காலாந் தாழ்த்தினாலோ அரசாங்கத்தை தட்டிக் கேட்க அவற்றிற்கு தார்மீக உரிமையுண்டு.
ராஜேந்திரனுக்கு, காஜாங் இடைதேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்ப் பள்ளிகளுக்கான திட்டவரை சமர்ப்பிப்பு என்ற நாடக அரங்கேற்றத்தை பிரதமைரை வைத்து நடத்தியுள்ளார் என்று கூறுவது அவர் செய்த 2 வருட சேவைக்கு அரசியல் சாயம் பூசி கொச்சைப் படுத்துவது போலாகும். காஜாங் இடைதேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ராஜேந்திரனுக்கு தனிப்பட்ட விதத்தில் எந்த லாபமும் இல்லை அதோடு தேர்தல் அறிவிப்பு தேதிக்கும் திட்ட வரைவு சமர்ப்பிப்பு தேதிக்கும் எந்த வித சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. பாக்கியநாதன் கற்பனை எல்லை மீறுகிறது.
தமிழ்ப் பள்ளிகளின் மீதான ஆய்வு ஒரு காலங்கடந்த செயல் என்று கூறுவதும் ஏற்புடயதல்ல. கட்டுரையாளரே ஓரிடத்தில் சொல்லுகிறார் காலங்காலமாக சுப்பனும் குப்பனும் கோரி வந்தததைத்தான் இவர் பட்டியலிட்டிருகின்றார் என்று. அவற்றைத்தான் இவர் முறையாக அராசாங்கதின் ஆசியோடும் முழுமையாக செய்திருகின்றார் என்று சொல்ல வருகிறேன்
நஜிப் தன்னுனைடய தன்னுடைய அரசியல் செல்வாக்கை தக்கவைக்க படித்தவர்களையும் டத்தோக்களையும் முனைவர்களையும் பயன்படுத்துகிறார் என்ற கூற்றில் அரசியல் ரீதியாக உண்மை இருந்தாலும் ராஜேந்திரன் மேற்கொண்ட திட்ட வரைவு பரிந்துரைகளில் என்ன அரசியல் இருக்க முடியும் என்பதனை பாக்கியநாதன் தெளிவு படுத்தவில்லை. எல்லோரும் ஏறுக்கொள்ளும் வண்ணம் அமைந்த ஒரு விரிவான முழுமையான பரிந்துரைகளைத்தானே முனைவர் செய்திருகின்றார்.
ஆக மொத்தத்தில் அண பாக்கியனாதனின் கட்டுரை தமிழ்ப் பள்ளிகளின் அழியாத அவலங்களை எடுத்து கூறும் அருமையான கட்டுரை – ராஜேந்திரனின் மேல் இட்ட குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருத்திருக்குமேயானால்.
– அ.கோவிந்தசாமி
தஞ்சோங் மாலிம்
திரு. அ. கோவிந்தசாமி அவர்களுக்கு, வணக்கம். நல்ல கட்டுரை. ஆனால் ஒரு திருத்தம்: பிப்ரவரி 14 ஆம் திகதி பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது வரைவுப் பரிந்துரைகளே; முழு அறிக்கை இன்னும் தயாரிப்பிலுள்ளது. அடுத்த மாத இறுதிக்குள் அறிக்கை முழுமைபடுத்தப்படும். அதே வேளையில், ஒரு வருத்தம்: செம்பருத்தி வாசகர்கள் பேரா. இராஜேந்திரனைத் தாக்குவதற்குப் பதில், அவர் முன்வைத்துள்ள பரித்துரைகளைக் குறிப்பிட்டுத் தாக்கினார்களேயானால், பரிந்துரைகளைச் செம்மைபடுத்த அக்கருத்துகள் உதவியாக இருக்கலாம்…
தமிழ் பள்ளி , தமிழ் கல்வி வளர்ச்சி அரசாங்கத்தின் கடமை.
இன்று நிலை மோசமாக இருப்பதற்கு அரசே காரணம்.
அரசு கண்ணா மூச்சி ஆட வேண்டாம் .!
நான் பாகத்தான் அதருவு ஆலன் என்தரலும்
கடந்த 6 அண்டுகள பார்கிறேன் , பாகத்தான் அட்ட்சியிலும் தமிழ் பள்ளிகளுக்கு என்று ஒரு தெளிவான வரைவு திட்டங்கள் இல்லை.YB குலா,Sivanesan, Sivakumar மற்றும் பேரா.ராமசாமி இவர்களை தவிர மற்ற பாகத்தான் ஆட்சி ஆள்ளர்கள் தமிழ் பள்ளிகளை பற்றி பேசுவதாக தெரியவில்லை.YB சேவியர் ஆட்சி குழு உறுபினராக இருந்த பொழுது தமிழ் பள்ளிகளுகு நிறைய மானியங்களை கொடுதார். அஹ்னால் அந்த மானியங்கள் ஒரு தமிழனிடம் இருக்க கூடாது என்று சண்டை போட்டு ,அதை ஒரு PAS ஆட்சி குழு உறுபினரிடம் DR ஹமிடா விடம் கொடுக்க வைத்தே பாகத்தான் இந்தியர்களே. பேரா. இராஜேந்திரனைத் தாக்குவதால் எந்த பிரச்சனையும் தீரபோவது இல்லை.மா.இ.கா . காரர்கள் எல்லாம் மோசமானவர்கள் ,தமிழ் பற்று இல்லாதவர்கள் ,பித்தலாட்ட காரர்கள் அஹ்னால் பாகத்தான் கரர்கலஎல்லாம் நேர்மையானவர்கள், தமிழ் பற்று உள்ளவர்கள் என்று கதை சொல்ல வேண்டாம். மா.இ.கா விழும் நல்லவர்கள் மொழி பற்று உள்ளவர்கள் இர்ருகிரர்கள் பாகடணி லும் மோசமானவர்கள் அய்யோகியர்களும் இருகிறார்கள்.பேரா. இராஜேந்திரனைத் தாக்குவதை விட்டு விட்டு அவரது அறிக்கையில் குறைகள் ,தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள் .அவரது பணி தமிழ் பள்ளிகளின் பிரட்சினைகள் ,நிண்ட கால திட்டங்கள் ,குறைந்த மாணவர்கள் கொண்ட பள்ளிகள் இட மாற்றம் செய்வது போன்றவைகளுக்கும். அமுல்படதுவது அரசாங்கத்தின் செயல் அதை எல்லா அரசியல் கட்சிகளும் கண்காணித்து அரசாங்கத்துக்கு அழுத்தும் கொடகவேண்டும்.
திரு இளஞ்செழியன் அவர்களே! இது எங்கள் சமுதாயத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்க கூடியதால் ஆய்வு கட்டுரை மக்கள் பார்வைக்கு எங்கே உள்ளது?
அண பாக்கியநாதன் கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைத்தால் அவரும் மற்ற தமிழ் மொழி ஆர்வலர்களும் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும்!
இளம் செழியன் மற்றும் கோவிந்தசாமிக்கு எனது அன்பு வேண்டுகோள் .இந்த அப்பாவி தமிழினம் 50 ஆண்டுகளாக அரசியல் வாதிகளால் சுரண்டப்பட்டு விட்டனர்.தற்போது பேராசிரியர் டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்களின் போலித்தன்மையில் சிக்கி சிரடிக்கப்படவிருகின்றனர் என்பதை இங்கு பதிவு செய்ய முன் வருகிறேன்.
பேராசிரியர் ஒரு அரசு ஊழியர் என்று சப்பை கட்டு கட்டியுள்ளிர் .நாட்டில் 1200 மேல் பட்ட சீன மொழி பள்ளிகள் உள்ளன.இந்த பள்ளிகளிலும் பணியாற்றுபவர்கள் அரசு ஊழியர்கள் தான்.சீனர்கள் அரசு ஊழியர் என்பதால் என்று தங்களது சமுதாய உரிமைகளை, உண்மைகளை அரசிடம் கிச் சீற்றும் விட்டுக்கொடுத்தது கிடையாது.சீன சமுதாயத்தின் உரிமைக்க போராடி அரசு வேலையை இழந்தவர்களின் பட்டியல் டாங் சொங்கிடம் நிறையவே உள்ளன.ஆகவே பேராசிரியர் அரசு ஊழியர் என்று வக்காலத்து வங்க கூடாது என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
பேராசிரியர் தமிழ் மொழி பற்று உடையவர் என்று வாதிட்டு உள்ளீர்.மிக்க நன்றி.அதை தங்கள் ஆதாரத்துடன் எனக்கு நிருபிக்க வேண்டுகிறேன்.அவருக்கு எத்தனை குழந்தைகள்.அந்த குழந்தைகள் அனைத்தும் எந்த தமிழ் பள்ளியில் படித்தார்கள் என்பதை இங்கு பதிவு செய்யும் படி அய்யா கோவிந்தசாமியை கேட்டுக் கொள்கிறேன்.அவரது தமிழ் மொழி பற்று உண்மை என்றால் கண்டிப்பாக அவரது குழந்தைகள் அனைவரும் தமிழ்ப் பள்ளியில் ஆரம்ப கல்வியை கற்று இருக்கவேண்டும் என்பது அதன் அளவு கொள்.
பேரரசிரியர் மிகுந்த இனப்பற்று உடையவர் என்று வேறு வாதிட்டுள்ளிர் .இந்த ஆய்வை தவிர வேறு எந்தவிதத்தில் அவர் மிகுந்த இனம் பற்று உடையவர் என்பதை உங்களது கட்டுரையில் குறிப்பிடவில்லை.அதையும் முறையாக குறிப்பிடும் படி வேண்டுகிறேன்.
பேராசிரியரின் சமுதாயப் பணி ( உழைப்பு ) உண்மையானது என்று வதிட்டுல்லிர்கள்.அவரது பணி உண்மையானது என்றல் அந்த பணியை எட்ட்ருகொண்ட அரசு முறையாக அமுலாக்கம் செய்ய வில்லை என்றல் தமிளினத்திக்கு அதனை அறிவிப்பது அவரது முதல் பணியாக இருக்க வேண்டும்.அதை அவர் செய்ய தவருவறேயானால் , அவர் அரசுக்கு கூலிக்கு மரடித்தாரா ? அல்லது அரசு வழங்கிய பணத்திக்கும், பதவிக்கும், பட்டத்திகும் பல் இழித்தாரா ? என்ற கேள்வியை சமுதாயம் அவரிடம் எதிர்காலதி கேட்க நேரிடும்.ஆகவே அவருக்காக வக்காலத்து வாங்கும் நண்பர் இளம் செழியன் மற்றும் கோவிந்தசாமியும் எனது வேண்டு கோளுக்கு செவி சாய்த்து பதில் அளிக்க வேண்டும் என்று அப்பாவி தமிழர்களின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.நன்றி .வணக்கம்.மீண்டும் சந்திப்போம்.
நல்ல விவாதங்கள் அதை தனிப்பட்ட மனிதனுக்கு அப்பால் நிலையில் இருந்து பார்க்க முயல வேண்டும். என் எஸ் ஆர் – அவர்கள் தான் டத்தோ என்றும் நஜிப்பின் அருகில் உள்ளவர் என்றும் தலை கணம் கொள்ளமல் – செயல் திட்டம் நடைமுறையாக செயல் பட வேண்டும். எனது கணிப்பு அவ்வளவாக எதுவும் நடக்காது. அப்படி நடந்தால் அது ஒரு புதிய திடுப்பு முனையாக இருக்கும். ஆனால் ம இ கா வை விட இவர் 10 மடங்கு தேவலாம்.
எனக்குத் தெரிந்த வரை பேராசிரியரின் பிள்ளைகள் அனைத்தும் மலாய் ஆரம்ப பள்ளியில்தான் படித்தார்கள். இனப் பற்று அவரிடம் இருக்கவே செய்கின்றது. ஆனால் அரசாங்கப் பதவியில் ஓர் உயரிய இடத்தில் உள்ளவர் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள இயலாது. அவரும் நம்மில் பலரைப் போல் சாதாரண குடும்பத்தில் பிறந்து பல இன்னல்களில் வளர்ந்தவர்தான். கலந்துரையாடல் ஒரு நபரின் தனிப்பட்ட பிரச்னைக்கு இட்டுச் செல்லாமல் பொது நல நோக்கில் பார்ப்போமே.
தெனாலி அவர்கள் உணர்ச்சி (உணர்வு அல்ல) பூர்வமாக சில விவதங்களை முன் வைத்துள்ளார்கள்.
• பேரா.ராஜேந்திரன் அரசு ஊழியர் என்பதற்காக அவருக்கு வக்காலத்து வாங்கக் கூடாது
• தமிழ்ப் பற்று உள்ளவரென்றால் தமிழ்ப் பள்ளிக்கு அவர் பிள்ளைகளை அனுப்பியிருக்கவேண்டும்
• இனப்பற்றுக்கு ஆதாரம் கேட்கின்றார்.
• அரசாங்கம் அவரின் பரிந்துரைகளை செயல் படுத்தவில்லை யென்றால் அதனை அவர் தமிழனத்திற்கு அறிவிக்க வேண்டும் .
உங்கள் கேள்விகளில் ஆதங்கம்தான் வெளிப்படுகிறதே தவிர , ஆக்கபூர்வமான சமுதாயதிற்கு தேவையான ஆலோசனைகள் இல்லை. பேரா.ராஜேந்திரனுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.
தமிழ்ப் பள்ளிக்கு தன் பிள்ளைகளை அனுப்பவில்லை என்பதற்காக , அவர் இந்த ஆய்வை செய்ய தகுதியற்றவர் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. அவர் தமிழ் பள்ளிகளுக்கு தன்னுடைய பிள்ளைகளை அனுப்பாததற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம் ,அதற்கான விவாத மேடை இது வல்ல. அப்படி அவர் அனுப்பியிருந்தால் அவர் மேல் நீங்கள் கூறும் குறைகலில் ஒன்று குறைந்திருக்கும் அவ்வளவுதான்.
இனப்பற்றுக்கு ஆதாரங்களை எண்ணிக்கைப்படுத்த முடியாது. அது தேவையற்ற ஒன்று அவருக்கு இடப்பட்ட வேலையை செய்ய அவருக்கு சரியானா கல்வித்தகுதியும் அனுபவமும் இருக்கின்றதா என்பதே முக்கியம் அது அவரிடம் இருப்பதாக எனக்கு தெரிகிறது.
அராசாங்கம் அவரின் பரிந்துரைகளை ஏற்காவிடில் அதனை மக்களுக்கு அறிவிக்கும் முதல் மனிதராக அவர் இருக்கவேண்டும் என்று தெனாலி விரும்புவது மிகவும் வக்ரமானது. பேராசிரியரின், வேலை அது அன்று என்று முன்னமேயே தெளிவுபடுதப்பட்டுள்ளது. அப்படி அவர் செய்யத்துணிவாரேனால் அது அவர் வேலைக்கு வைக்கும் ஆப்பாகும். அவரை ஏன் ஓர் தமிழ்க் குடிமகனாக, நம்முள் ஒருவராக, ஒரு சராசரி மனிதராகா பார்க்காமல் எல்லா குணங்களும் ஒருங்கே அமையப் பெற்ற பரமபிதா போல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். நீங்கள் சொல்வது போல தமிழ்ப் பள்ளிக்கு தனது பிள்ளகளை அனுப்பியவருமான, இனபற்றை அதிகமாக மக்கள் தெரியும் வண்ணம் வெளிப்படுதியவருமான , அராசங்கத்தை எதிர்க்கும் வல்லமை பொறுந்தியவருமான ஒருவரை இன்றைய காலக் கட்டத்தில் அடையாளம் கண்டு அவரிடம் இந்த திட்ட வரைவு பணியை ஒப்படைக்கச் செய்வது என்பது கற்பனையிலும் நிறைவேற்ற முடியாத ஒன்று. அப்படி பட்ட சீரிய (ideal) மனிதர் ஒருவர் இல்லை என்ற எதார்த்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இளஞ்செழியன் சொன்னது போல தனி மனிதரிடம் உள்ள குறைகளை காண்பதைவிட அவர் செய்த பரிந்துரிரைகள் மீது கருத்துக் கூறுவதும் விவாதம் நடத்துவதும் விவேகமாகும்
கோவிந்தாவின் கருதுக்களை நான் முழுமையாக வரவேட்கிறேன்.ஒருவர் தன் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றல் அவர் மொழி பற்று இல்லாதவர் என்றும் தமிழ் பள்ளிக்கு அனுபிவிட்டல் அவர் மொழி பற்று உள்ளவர் என்ற கருத்தை நான் யெற்று கொள்ள மாட்டேன். பல தமிழ் மொழி பட்ற்றளர்கள் தங்கள் பிள்ளைகளை தமிழ் பள்ளிக்கு அனுபதடற்கு பல காரணங்கல் இருக்கலாம். அவர்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் தமிழ் பள்ளி இல்லாமல் இருக்கலாம். மேலும் ஒரு 20 வருடத்திற்கு முன்பு தமிழ் பள்ளிகள் இருந்த நிலை வேறு,இபொழுது நிலைமை வேறு .பேரா.ராஜேந்திரன்நை விமர்சிப்டற்கு பதில் அவர் அலுவலகம் சென்று சந்திது,இதுவரை அவர் என்ன செய்ததார் ,என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்று கேட்டு தெரிந்து ,அவர் வரைவு திட்டத்திற்கு உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளும் தெரியுங்கள்.இதை ஏன் சொல்கிறேன் என்றல் அவர் த்திட்டத்தின் மேல் நம்பிக்கை இல்லமால் இருந்த YB குலா அவரகள் பேரா.ராஜேந்திரன் அவரின் அலுவலகம் சென்று நேரடியாக சந்திடு இந்த் திட்டத்தை பற்றி நேரிடையாக அறிந்து தெரிந்து தன்னுடைய சந்தேகங்களை திர்துகொண்டர்.மேலும் இந்த திட்டம் வலு பெற தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டு கொண்டார்.அரசியல் ரீதியில் மாற்று கருது இருந்தாலும் முதன் முறையாக தமிழ் பள்ளிகளுக்க ஒரு திட்டம் வரைய படும்பொழுது நாம் ஒன்றாக இணைத்து செயல்படுவோம் என்று தெரிவித்தார் .
அண்ணாச்சி கோவிந்தா, கோவிந்தா. பிறரை வக்காலாத்து வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டு நீங்களே வக்காலத்து வாங்கிப் பேசிக்கொண்டிருந்தால் விளங்கிடும். தகுதி என்பது கல்வி அறிவும், அனுபவமும் மட்டும் இல்லை. கற்றதை சமைக்கவும் தெரியனும். இல்லையேல் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. இப்பொழுது பேராசிரியர் ஏட்டுச் சுரைக்கையை மட்டுமே வரைந்துக் கொண்டிருகின்றார். அதற்குள் சமைத்து பரிமாறிவிட்டதைப் போல் பதை பதைப்பது ஏனோ? எத்தனை சுரைக்காய் வேண்டுமானாலும் வரைந்துக் கொள்ளுங்கள். எங்களுடைய ஆதங்கம் எல்லாம் அந்த ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவுமா என்பதுதான். இல்லையேல் அது சினை மாட்டுக்கு மயிரு புடுங்கின கதைதான். புரியவில்லையா? வெட்டி வேலைதான் என்று சொல்ல வரேன். தொடரும்.
அண்ணாச்சி கோவிந்தா, கோவிந்தா. “Malaysia Education Blueprint 2013 – 2125” வேறு நாட்டு கற்றறிந்த அறிவு மேதைகளைக் கொண்டு காசு கொடுத்து தயாரித்து வந்த வேகத்திலே இந்நாட்டு பல்லின மக்களின் கடுமையான குறைகூறலுக்கு ஆளாகியது. காரணம் பிற நாட்டு கற்றறிந்த மேதைகள் இந்நாட்டு மக்களின் உணர்ச்சியை அறியவில்லை. அவ்வாறே, காசுக்கு வேலை செய்யும் பேராசியருக்கு தமிழ் பற்று இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்பது தங்கள் வாதமானால், அத் தமிழ் பற்று இல்லாதவருக்கு அதன் செயலாக்கத்தில் பற்று என்ன இருக்க முடியும் என்பதே எங்களைப் போன்றோரின் ஆதங்கம். வீட்டிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் 1,300 மாணவர்கள் படிக்கும் மலாய் ஆரம்ப பள்ளி இருந்தும், 10 KM தூரத்தில் இருக்கும் தமிழ் பள்ளியில் (கையில் காசு இருந்தும் இல்லாமலும்) எமது பிள்ளைகளை படிக்க வைத்தோமே, அது தமிழ் உணர்வா அல்லது என் பிள்ளையை எங்கே படிக்க வைப்பது என்பது எனது உரிமை என்று வாதிடுவது தமிழ் உணர்வா? இந்த நாட்டிலே பேராசிரியர் இராஜேந்திரன் ஒருவர்தான் திறமை உள்ளவர் என்பது போல் மாயை ஏற்படுத்துகின்றீர்கள். இதே பேராசிரியர்தான் “Interlok” பாட புத்தகத்தை மறு ஆய்வு செய்ய நியமிக்கப் பட்டவர்களில் ஒருவர்.. கொடுக்கப்பட்ட 90-க்கும் மேலான திருத்தங்களில் கல்வி அமைச்சு ஏற்றுக் கொண்டது வெறும் 4 திருத்தங்கள் மட்டுமே! (என் கணிப்பு தவறில்லையானால்). இப்படி மூக்கு உடைபட்டு மேலும் அந்த மூதேவி முஹிதீன் காலிலே சரணம் ஐயப்பா என்று வீழ்ந்தால் இதை விட கேவலம் வேறு உண்டோ? காசேதான் கடவுளப்பா. அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!
மறைத்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன…இராஜேந்திரா!
எங்கள் நிலை அழகா……தந்த விலை அழகா என்று
மறைத்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன…
எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்…
உன்னை என்னையள்ளல் வேறு யார் அறிவார்.. இன்று
தேனீயின் வார்த்தைகள் தேன் கொட்டுவது போலவே இருக்கின்றது. இருந்தாலும் அது தமிழில் என்பதால் தேனாக இனிக்கின்றது. தனி மனித விமர்சனம் ஆரோக்கியமானதல்ல.பேராசிரியரின் பரிந்துரைகள் விமர்சிக்கப்படலாம் .அவை அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அமைந்தவை . யார் யாரையெல்லாம் கலந்தாலோசிக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் பேராசிரியர் ஆலோசனை கேட்டுத்தான் அப்பரிந்துரைகளை வடிவமைப்புச் செய்தார். அவர் நடத்திய கூட்டதிற்கு நீங்களும் சென்று உங்கள் கருதுக்களை பதிவு செய்திருந்தால் அது இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். இப்பொழுது கூட நீங்கள் விரும்பினால் உங்கள் கருதுக்களை அவரிடம் சென்று கூறலாம். நம் விவாதம் ராஜேந்திரனின் பரிந்துரைகளை பற்றி இருந்தால் அது ஆக்கப்பூர்வமானதாக இருக்கும் , அவரைப்பற்றி இருந்தால் எந்த பயனும் தராது. இந்த தெளிவு நமக்கு மிகவும் அவசியம்
எப்படி,கொட்டுகிறது,சொட்டுகிறது ஆகா பிரமாதம்,ஆலய நிா்வாகம்,தொழும் மக்கள் வேசிக்கு பிறந்த தமிழா் என்ற தேனீயின் தமிழும் பிரமாதம்.நாராயண நாராயண.
அண்ணாச்சி கோவிந்தா, கோவிந்தா, தங்கள் ஆலோசனைக்கு அடிபணிகின்றேன்.
“காய்” உம்முடைய சிறிய புத்தி ஏனோ உன்ன எங்கே போனாலும் காட்டி விடுகின்றது. “தொழும் மக்கள் வேசிக்கு பிறந்த தமிழர்” என்று எழுதினேனா என்று மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு வந்து இங்கே பொய் சொல்லவும்.
எதிர்த்தார் முடியவில்லை! பணிந்து தேனியின் அடையாளத்தை அறிய விரும்புகிறார் அண்ணாச்சி! செம்பருத்தியிடம் நம் விபரங்களை பெற முடியாது ஆகவே இந்த ஆப்பு sorry! அழைப்பு!
பன்பில்லாதோறிடம் பனியேன் இந்த கையீ விட்டாளும் விடுவோம் வுயிரை வேதம் ஆகமத்தை காக்க, பனியேன் மதியற்றோறிடம் வக்கிரமதத்தன் போல்,வீ.வன்டியன்போல்,ஹிந்துவே இல்லாத ஒரு இனத்தான் ஏதோ ஒரு தெரியாத மொழியில் ஹிந்து ஆலயத்தில் வந்து அவன் மொழியில்அர்சனை செய்ய சொல்லுகிறான்,அப்படி அந்த மொழியில் அர்ச்சனை செய்யாவிட்டால் அதை நடத்தும் நிர்வாகம் அதை ஏற்கும் தம் இனத்தாா் தவறி வேசிக்கு பிரந்தவர் யென்று முத்திறை குத்துகிறார் அறிஞர் தேனீ அவர்கள்.நாராயண நாராயண.
தேனீ அவர்களே… நீங்கள் “வேசி” என்று தமிழர்களைச் சொன்னதாக காயி பொய்யாக ஒப்பாரி வைத்து மன அரிப்பை தீர்த்துக்கொள்ள நினைக்கிறது. தமிழனை ” சூத்திரன்” என்றும் “தாசன்” என்றும் தங்களின் வடமொழி மதபுத்தகத்தில் “வப்பாட்டி பிள்ளைகள்” “வேசி பிள்ளைகள்” எழுதி வைத்திருக்கிறானே வைதிகன் அது என்ன தமிழனை புகழ்வதாமோ? தமிழனே… உன்னை வேசிப்பிள்ளை என்று எழுதிவைத்திருக்கிறானே.. உன்னைக் கேவலமா திட்டுகிறவனின் காலை நக்கிக்கொண்டு இருக்கிறீயே உனக்குத் தன்மானமே இல்லையா ? என்று பெரியார் கேட்டாரே . அதனால்தான் காயி போன்றவர்களுக்கு “திராவிடம்” என்றால் எரிகிறது எனும் இரகசியம் புரிகிறதா?
காய் உம்மிடம் தேவை இல்லாத விவாதம் வேண்டாம் என்றே அப்பகுதியில் மேலும் கருத்துக்கள் எழுதுவதை நிறுத்தி விட்டேன். எம் வாயை, சொன்னது போல், அடக்கிக் கொண்டேன். இருப்பினும் உமக்கு புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இந்தப் பகுதி சமயப் பகுதி அல்ல. அதலால், வீணே செம்பருத்தி வாசகர்களின் வெறுப்புக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளவோம். உமக்கு வீண் சண்டை வேண்டுமானால் முனைவர் எழுதிய சமயம் குறித்த சரியான பார்வை என்ற பகுதில் இதையே மறுபடியும் எழுதவும். உம்மை பிச்சி, பிரித்து நார், நாராக உரிக்க காத்துக் கொண்டிருக்கின்றேன்.
தமிழனை “சூத்திரன்”, “தாசன்” என்றும் , சங்கம் கண்ட தேனிலும் இனிய மொழியாம் தமிழ் மொழியை நீசபாசை என்று கேவலப்படுத்தும் வேதத்தையும் ஆகமத்தையும் உயிரைக் கொடுத்தாகிலும் காப்பேன் என்று முழங்கும் மதவெறி காயீ சொல்கிறது நானும் தமிழரசும் மதியற்றோராம். வக்கிரமதத்தோனாம் எங்கள் தாய்மொழி தமிழ்மொழி ” ஏதோ… ஒரு தெரியாத மொழியாம் .” அந்தத் தமிழ்மொழியில் அர்ச்சனை செய்யாவிட்டால் , அதைநடத்தும் நிர்வாகத்தையும் அதை ஏற்றுக்கொள்பவர்களையும் தவறிப்போய் (அறியாமல்) வேசிக்குப் பிறந்தவர்கள் என்று தேனீ … முத்திரைக் குத்துகிறாராம். இதில் நக்களாக வஞ்சகப் புகழ்சியணியைப் பயன்படுத்தி ” அறிஞர் தேனீ…” என்கிறது தமிழ்க் கொலைஞன் காயீ ! இதைப் படிக்கும் மானமுள்ள பச்சை தமிழனுக்கு சுயமரியாதை கொஞ்சமாவது இருந்தால் விழிப்புணர்வு பெற்று இனி வரும் காலங்களிலாவது , ” தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று சொன்னானே தமிழ்க்கவிஞன் பாரதிதாசன் அந்த உயிரினும் இனிய தாய்த் தமிழ்மொழியில் ஆலயங்களில் இறைவழிபாடு நடத்துவீர் தமிழர்களே! காயீ போன்ற வடமத தாசர்களும், மதவெறி பிடித்ததுகளும் பைத்தியம் பிடித்து கத்தட்டும். தமிழர் வழிபாட்டுத் தளங்கள் எங்கும் தமிழ் மணக்கட்டும்! வாழ்க தமிழ் ! வளர்க தமிழர்தம் வழிபாட்டுத் தொண்டு!
உண்மையான தமிழ் மொழி பற்றுக்கு அளவு கோள் எது என்று என்னை கேட்டால் தமிழ் மொழி பள்ளிக்கு தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பும் தமிழர்கள் தான் என்பது அதன் முலமாக அமையும்.இந்த நாட்டில் தமிழ் படித்து வாழ்கையில் உயர்ந்தவர்கள் பலர் உள்ளனர்.ஆனால் இப்படி உயர்ந்தவர்கள் வாழ்கையில் உண்மையானவர்களாக இல்லை என்பது மன வேதனையாக உள்ளன.பேராசிரியர் தனது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றால் அவருக்கு எந்த தகுதியும் அருகதையும் இல்லை.
இப்படி பட்டதை நாம் நியாயபடுத்த கூடாது.கோவிந்தசாமி மற்றும் ராஜன் அய்யோகியதனத்திக்கு துணை போகாதிர்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.இந்த பேராசிரியரை நாம் மன்னித்தலோ அல்லது அவரின் நொண்டி சாக்குகளை எற்றுகொண்டலொ, நாம் அப்பாவி தமிழர்க்கு செய்யும் மா பெரும் துரோகமாகும்.
இந்த நாட்டில் உள்ள தமிழர்களில் 52% பேர் தான் தமிழ் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர்.இந்த 52% தினர் யார் என்றால் 90% தினர் சாமன்னியர்கள் அல்லது கில் தட்டு தமிழர்கள்.அனுப்பாதவர்கள் யார் ? அரசியல் வாதிகள் , இந்த பேராசிரியரை போன்ற படித்த துரோகிகள் தான்.இந்த ம இ கா அரசியல் கட்சி தலைவர்கள் அன்று முதல் இன்று வரை தமிழ் பள்ளியை வைத்து அரசியல் நடத்துகின்றனர்.வயிறு வளர்க்கின்றனர்.இவர்களை போன்று தான் இந்த படித்தவர்களும்.
1.பேராசிரியர் டத்தோ என் எஸ் ராஜேந்திரன்,
2.பேராசிரியர் தன் ஸ்ரீ டாக்டர் மாரிமுத்து, 3.ஸ்ரீ முருகன் நிலையத்தின் தலைவர் தன் ஸ்ரீ தம்பிராஜா ,
4.பேரரசிரியர் கந்தசாமி,
5.பேராசிரியர், சபாபதி,
6.பேராசிரியர் குமரன்,
7.பேராசிரியர் கிருஷ்ணன் மணியம்,
8.பேராசிரியர்
ரே கார்திகேசு,
9.பேராசிரியர் ராமசாமி,
10.பேராசிரியர் சிவா முருகன பாண்டியன் …………………………………………………. .
நம் நாட்டில் மொத்த 20 அரசு சர்த்த பல்கலைகழகங்கள் உள்ளன.இதில் ஒரு பல்கலைகழகத்தில் 5 தமிழர்கள் பேராசிரியர்களாக இருக்கிறார்கள் என்றல் குறைத்தது 100 பேர்கள் நாட்டில் உள்ளனர்.இவர்களில் எத்தனை பேர் தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்பினார்கள்,அனுப்புகிறார்கள், அனுப்புவார்கள் என்பதை இந்த அப்பாவி தமிழ் சமுதாயம் அறி மிக ஆவலுடன் காத்திருக்கிறது கோவிந்தசாமி அவர்களே.
தமிழ் பள்ளிக்கு தனது குழந்தையை பேராசிரியர் அனுப்பவில்லை என்றல் அவரது எந்த நொண்டி காரணங்களை இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.அதே சமயம் இந்த துரோகிக்காக வக்காலத்து வாங்குபவர்களை மன்னிக்காது.
இந்த பேராசிரியரை விட மலைக்கு கூட தமிழ் பள்ளி பக்கம் ஒதுங்கியது இல்லை என்று அடிக்கடி மன வேதனையோடு குறி வந்த என் தந்தையர் 100 மடங்கு நல்லவர், தமிழ் பற்று உடையவர்.அவர் தனது 10 குழந்தைகளையும் ஆரம்ப கல்விக்கு தமிழ் பள்ளியில் தான் சேர்த்தார்.மேலே கூரிய காரணங்களை எல்லாம் கடந்து தமிழ் பள்ளிக்கு அனுப்பினார்.நன் படித்த தமிழ் பள்ளிக்கு முன்பே ஒரு தேசிய மொழி பள்ளியும் இருந்தது.இருபினும் அவர் கொண்டிருந்த பற்று மற்றும் உண்மையின் காரணத்தால் தனது 10 பிள்ளைகளையும் தமிழ் பள்ளியில் தான் சேர்த்தார். அவரை போன்றே எனது 3 பிள்ளைகளையும் என் தந்தையாரை போன்றே தமிழ் பள்ளியில் தான் சேர்த்தேன் என்பதை மிக திமிராக பத்தி செய்கிறேன்.தமிழ் பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்காத தமிழன் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நான் வழங்கும் பட்டம் “தமிழின துரோகிகள்”.மானம் சூடு சொரணை உள்ள எந்த தமிழனும் மன்னிக்கவே கூடாது.
பேராசிரியரோடு சேர்ந்து இந்த கோவிந்தசாமியும், ராஜனும் இன்னும் யார் யார் வக்காலத்து வங்க வந்தாலும், அவர்களுக்கும் இதே பதில் தான்.தமிழ் பள்ளிக்கு தங்களது குழந்தைகளை அனுப்பாத அரசியல்வாதிகள், பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள்,நாளிதழ் ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், நிருபர்கள், RTM தமிழ் செய்திப்பிரிவு, மின்னல் FM பணியாளர்கள், THR ராக பணியாளர்கள், நீதி மன்றங்களில் தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள், BERNAMA தமிழ் செய்திப்பிரிவு பணியாளர்கள், காவல் துறையில் பணியாற்றுபவர்கள், தகவல் அமைச்சில் பனி புரியும் தமிழ் மொழி அதிகாரிகள் மேலும் தமிழ் மொல்ய்யல் வயிறு வளர்க்கும் அனைவரும் தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் அனைவரும் தமிழின துரோகிகள் தான்.ஒவ்வொரு தமிழனும் என்றைக்கு தங்களது குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்புகிறார்களோ அன்றைக்கு தான் இந்த நாட்டில் தமிழன் தன் மானத்தோடு தலை நிமிர்ந்து வாழ வழி பிறக்கும் என்பதை மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் உறுதி கொள்ளவேண்டும்.வாருங்கள் தமிழர்களே நாம் இந்த நாட்டில் சூடு சொரணை,மானம் உள்ளவர்களாக வாழ்வோம் வாரீர்.
நண்பர்களே இந்த kayee என்னும் பேயை பொருப்படுத்த வேண்டாம் என்று நாராயண என் கனவில் வந்து கூறிவிட்டார்! இனி தமிழில் அர்ச்சனை செய்ய விரும்பாத கோவில்களை தவிர்க்கவும்!
உலகிற்கே வாழ கற்று கொடுத்த இனம் தமிழினம்! தொடருங்கள் உங்கள் போராட்டத்தை!
அறிவுரைகளெல்லாம் எங்களுக்கு இல்லை, அதை கேட்பவர்களுக்கு மட்டுந்தான் என்ற அரசியல்வாதிகளின் அதிமேதாவித்தனம் ஒரு முடிவுக்கு வர தெனாலியின் வழிமுறையே சிறந்தது. பிறருக்கு அறிவுரை சொல்ல வருமுன் சொல்பவனுக்கு அந்த அருகதை இருக்க வேண்டும் அல்லவா? இல்லை என்றால் பிறருக்கு அறிவுரை சொல்ல உமக்கு என்ன அருகதை உள்ளது?. அறிவுள்ள தமிழ் மகன் எவனும் கேட்க வேண்டிய கேள்வி இது. .”கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தார், இரு காதில்லாத மனிதர் முன்னே பாடல் இசைத்தார்” என்பது இந்த வகை ஏமாற்று வேலைதானோ?
“kayee” – க்கு பதில் கொடுக்க வேண்டாம் என்று என் உள் மனம் சொல்ல, ஒரு புத்தி கெட்ட மாட்டுக்கு ஒரு நல்ல சூடு கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கருத்தை இங்கே வரைகின்றேன். “காய்” ஒரு தமிழர் இல்லை என்பது திண்ணம். அவரின் “நாராயண சமர்ப்பணமும்”, “வருணாசிரம கோட்பாட்டுக்கு வாங்கும் வக்காலத்தும்” அதற்க்கு நற்சான்று. ஒரு தமிழர் அல்லாதவர் மலேசியாவில் பெரும்பாலும் தமிழர்கள் வழிநடத்தும் ஆலையங்களில் முடிந்தால் “தமிழில் அருச்சனை செய்து காட்டுங்கள்” என்று தமிழர்களுக்கு சவால் விடுவது எதைக் காட்டுகின்றது? தமிழர்கள் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும் இந்நாட்டு ஆலையங்களில் தமிழர்களால் இறைவனுக்கோ, தத்தம் தெய்வத்துக்கோ தமிழர்களுக்கு விளங்கும் தமிழ் மொழியில் அருச்சனை செய்ய விட மாட்டோம். என்று பிற வம்சாவளியில் வந்தவர் தமிழர்களுக்கு விடும் சவால் அன்றோ இது? இந்நாட்டு ஆலையங்களை நிர்வகிக்கும் தமிழர்களுக்கும் விடும் சவால் அன்றோ இது?. இவனுக்கு என்ன திமிர் இருந்தால் இத்தகைய சவால் விடுவான்!. இத்தகைய பிற இனத்தவர் வேண்டுமென்றே தமிழர்களுக்கு சவால் விடுவதன் நோக்கம் என்ன?. “அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்” என்பதுதான்? இதற்கு தமிழர் ஏன் வழி விட வேண்டும்?. ஒருதாய் வயிற்றில் பிறந்த அத்துணை தமிழர்களுக்கும் கொஞ்சமாவது மான ஈன ரோசமிருந்தால் வெகுண்டு எழுவான். அந்த ஆதங்கத்திலும், ஆவேசத்திலும் வந்ததே எமது வார்த்தைகளும் (ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து விட்டே எழுதினேன்) . எம் உடன்பிறப்புக்களை “வேசியின் மகன்” என்று சொல்ல எந்நாளும் எம்மனம் ஒவ்வாது. இப்பொழுது காயின் நோக்கம், அவ்வார்த்தையைக் கொண்டு எப்படியாவது எம்மின மக்களைக் கொண்டே எம்மைத் தூற்ற வேண்டும் என்பது. யாம் அதற்கு வழி விடுவோம் அல்லோம். தக்க வேளையில் கைகொடுத்த ஜெகவீரபாண்டியனுக்கும் இதர வாசகர்களுக்கும் இவ்வேளையில் நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.
kayee என்னும் பேயி உண்மையான தலைப்பிலிருந்து திசை திருப்பவே ஆடும் நாடகம் இது! இனி தலைப்புக்கு சம்பந்தமில்லாத கூற்றை கண்டால் மற்று கருத்து எழுத வேண்டாம்.
கோவிந்தசாமி ராஜேந்திரனிடம் எதையோ எதிர்ப்பார்கின்றார் . சீக்கிரம் கிடைக்கிட்டும் .
தெனாலி சார் உங்களை உளப்பூர்வமாக பாராட்டுகிறேன் . இந்த கேடு கெட்டவன்கள் தமிழ் மூலமாக உயர்ந்து விட்டு இன்று தன் குழந்தைகளை தமிழ் பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள் . இதில வக்காலத்து வேற !
பேராசிரியர் டத்தோ என் எஸ் ராஜேந்திரன், கந்தசாமி, இளம் செழியன் போன்றவர்கள் நாட்டில் உள்ள 523 தமிழ் பள்ளிகளின் UPSR தேர்ச்சி விகிதத்தில் புள்ளி விவரத்தை தயவு செய்து வெளி இட வேண்டுகிறேன்.கல்வி அமைச்சில் தகமை அமைப்பாளராக பதவி வகிக்கும் பாஸ்கரன் மற்றும் மாநிலம் தோறும் உள்ள மாநில அளவிலான அமைப்பாளர்கள் தமிழ் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை வெளி இட முன் வர வேண்டுகிறேன்.
நாட்டில் 523 தமிழ் பள்ளிகளில் பணியாற்றும் 9000 ஆசிரியர்கள் 523 தலைமை ஆசிரியர்களின் கொட்டம் இந்த புள்ளி விவரத்திக்கு பிறகு நாம் அடக்க முடியும்.அப்பாவி தமிளினத்திக்கு விடிவு காலம் pirakkum என்பதை வழியுறுத்த விரும்புகிறேன்.மேற்கண்டவர்கள் தங்களது கடமையை முறையாக நிறைவேற்ற வேண்டுகிறேன்.