அம்பாங் தமிழர்களின் (இந்தியர்களின்) அரசியல் விவேகத்துக்கு ஆளே இல்லையா?

pkr logoஅம்பாங் நடப்பு நாடாளுமன்றம் இந்தியர்களை ஏமாற்றி விட்டது.
PKR பழைய அரசியலை மாற்றுவோம்.

நாங்கள் செய்யப்போவது
*அம்பாங் தமிழ்ப பள்ளியை அரசியல் வழி காப்பாற்றுவது.
*அம்பாங் தமிழ்ப  பள்ளிக்கு அதிக படி  நிலம் பெறுவது !
* தமிழ் ப பள்ளி திடல் மீது சாலையை எதிர்ப்பது  !
*MPAJ  கவுன்சலில் இந்தியர்களை அமர்த்துவது !
*மந்தெரி புசாருடுன் நல உறவு கொள்வது !
*PKR கட்சிக்கும் பாகதானுக்கும்  உண்மையாய் உழைப்பது.!
* எல்லா மக்கள் சுமைகளை  தீர்ப்பது ! இல்லையேல் விலகுவது!

உங்களால் நாங்கள் ஏமாந்தது ?
* அம்பாங் தமிழ்ப பள்ளி மீது சாலை சோரம் போனது ?
*PKR சாபாங் 3மில்லயன் நிதி !தமிழர்களுக்கு என்ன நீதி?
*தமிழ்ப பள்ளி அருகே சாலை வரி டோல் மக்களுக்கு அநியாயம் ?
*தசெக் பெர்மாய் 40 ஆண்டுகால தண்ணீர் கலன் மோசம் ?
*MPAJ குப்பைகள் குத்தகை  நிலை என்ன?
*தசெக் பெர்மாய் ரோடு /கால்வாய் /குப்பைகள் யார் பார்ப்பது?
*அன்னியர் நாட்டு நெருக்கடி  யார் சிபாரிசில் ஓடுகிறது?
*அம்பாங் இந்தியர்கள்  வீட்டுமனை துரோகங்கள்?
*இந்தியர்கள் வயிற்றில் அடித்த வணிக குத்தகை ?
* 130,000 அம்பாங் இந்தியர்களின் வாழ்க்கைத  தரம் என்ன?
* வட்டார ADUN களுடன் உங்கள் போராட்டம் ?
* அம்பாங்கில் இதுவரை சாதித்த மேம்பாடுகள் ஒரு பூஜ்யம்?
* உங்கள் அரசியல் கொள்கைதான் என்ன?

இதுவே நமது லட்சியம் ..நமது உரிமை வாக்கை நமது இன மேம்பாட்டுக்கு செலுத்தவும்.துரோகிகளை துடைத்து எறிவோம்.
பட்டது போதும் !அம்பாங்கில் புதிய அரசு , அரசியல் வழி PKR ஆட்சி அமைப்போம்! அம்பாங்கில் 130,000 இந்தியர்கள் வாழும் இந்தியர்களின் அரசு ,அரசியல் தேவைகளை நாமே நமக்குப பெறும்  காலம் வந்து விட்டது.

PKR தேசிய அரசியல் நீரோட்டத்தில் நமது உரிமை மேலோங்க
முதலில் வட்டார அரசியலில் உங்கள் உரிமையை பதிவு செயுங்கள்.நமது கரமே நம்மை த தூக்கி நிறுத்தும் ! விழாமல் எழ நம்மாலும் முடியும் இதற்கு இன உணர்வும் சுய குருதி வேகமும் நம்முடன் வரவேண்டும் தோழர்களே!

தலைவர்கள் பிறப்பதில்லை !உங்களால் உருவாக்கப்படுகிறார்கள் !!நல்ல விவேகத தலைவர்கள் நமக்கு வேண்டும் இது நமது சத்தியம்!அம்பாங் தமிழ்பபள்ளி /சமயத தளங்கள் / வணிக வெற்றிகள் நமக்கு இருந்தால் நமது அரசியல் பாதை தெளிவாக இருக்கும் . உங்கள் பணிவான கனிவான பொறுப்புமிக்க உரிமை வாக்குகள் வழி இதை சாதிக்க முடியும்.

முதலில் கடமையை செய்வோம் உரிமையை கேப்போம். தமிழர்களின் அறமும் வீரமும் வெல்ல நல்ல PKR தமிழ் இந்தியர் தலைவர்களை தேர்வு செய்ய உங்கள் ஆற்றலை மனசாட்சியுடன் அணுகவும். வெற்றி நமகே!

கடந்த (6 )ஆறு ஆண்டுகளாக மலாய், சீனர்களையும் ஒட்டு மொத்த மக்களுக்கும் ஒன்றுமே செய்யாமல் வெறும் அரசியல் சூட்டீல் கட்சி அரசியலில் குழப்பமும் சூழ்ச்சியும் இவரின் வேலையாகிவிட்டது.
இது நமக்கு நாமத்தை போட்டது.

இரண்டு ஆண்டுகளாக MPAJ வில் இந்தியர்கள் பிரதிநிதித்துவம் கிடைக்க விட வில்லை. இவர் வந்தபபிறகு மக்களுக்கு தேவையான ஒரு உருப்படியான மேம்பாட்டு திட்டமும் அம்பாங்கில் வரவில்லை அல்லது வழிவிடவில்லை.

முக்கியமாக அம்பாங் தசெக் பெர்மாய் தசெக் சம்புறான் கிராம மேம்பாடு படு மோசமாகி மியன்மார், பங்களா ,இந்தோனீசியா அன்னியர் மக்கள் ஆதிக்கமும் அதிகமாகி கிராமத்தில் இந்தியர்கள் நிலை படு மோசமாகி விட்டது.சாலை,குப்பை,தண்ணீர் ,வணிகம் , சுற்று சூழ்நிலை யாவும் நாற்றம் அடிக்கும் அளவுக்கு இன மோசடி நடக்கிறது.

அரசியல் வாழ்வுக்கு ஒரு சிறு இந்தியன் கூட்டத்தை கையில் வைத்துக்கொண்டு சுய சுகம் காணு கூட்டத்துக்கு பிச்சை போட்டு இந்தியர்களை தமிழர்களை ஏமாற்றி கிடைக்கும் மான்யங்களை அரிசிக்கும் பருப்புக்கும் மட்டும் கொடுக்கும் பரிதாப அரசியல் நடத்தி நம்மை அரசியல் அடகுக்கு ஆளாக்கி தானும் தன் கூட்டமும் சொகுசான வாழ்வு நடத்தி வருகிறார்கள்.கேத்துவா  கொமுநிட்டி பி கே ஆறிலும் அவர் மனைவி பாசிலும் அரசியல் பேரம் பேசும் பெரு  வாழ்வு நம்மை இளைச்சன் வாய்கள் போல இம்ம்சை படுத்தும் கேவலம்.

அம்பாங்கில் அரசியல் மாற்றம் வேண்டும் PKR கட்சியில்
தலைமைத்துவ மாற்றம் செய்ய களமும் காலமும் வந்து விட்டது.எங்கிருந்தோ வந்து அரசியல் வேட்டை ஆடுவது போதும்.அரசியல் நையாண்டியும் ,முதல்வர் மீது பொல்லாப்பும் செய்து கட்சியில் குழப்பம் ,கட்சிக்குள் அணி வைத்து குடும்ப குழு அமைப்பு அவலங்கள் அரசியல் நடத்தி மேலும் நம்மை ஏமாற்ற இனியும்  விட வேண்டாம்.

சாபாங் அம்பாங்கில் மொத்தம் 9821 உறுபினர்கள் உள்ளனர். இவர்களில் 3500 இந்தியர்கள்/ தமிழகர்கள் இருக்கிறோம். நமது உரிமை சாபாங்கில் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு இந்தியன் கலந்த ஆட்சி அமைக்க நமக்கு நல்ல வாய்ப்பும் எதிர்காலமும்  உண்டு.

தமிழ்ப்பபள்ளி திடல் மேல் வரும் SUKE சாலையை மாற்ற இவள் நமக்கு உதவில்லை.பள்ளியை இடம்மாற்றம் செய்வதில் இவளுக்கு அரசு அரசியல் லாப பங்ககுண்டு . 2009 நடந்த தமிழ்பள்ளி நிலம், திடல், சாலை விசியத்தில் நமக்கு கொடுத்த இவளின் வாக்குறுதி வெறும் கோச டப்பாவாகிவிட்டது !

நமக்குப  பின்னே நமது தமிழ் பள்ளிக்கு ஆப்பு அடிக்கும் இவர்களை நாம் மன்னிக்கவே முடியாது. நமது ஓட்டில் நமது மொழிக்கும் இனத்துக்கும் சமய தளங்களுக்கும் தடையாக இன பாகுபாடு அரசியல் நடத்தும் இவள் நமக்குததேவை இல்லை.

நம் கண்களை வைத்தே நம்மை குத்தும் இவளின் அரசியல் தனம் நம் வட்டார இனப்பெருமையை அழித்துவிடும். இவளுக்கு ஒட்டு போட்டு நம் பெருமைகளை இழக்கும் தமிழர்களாக /இந்தியர்களாக இருக்க வேண்டாம் உடன் பிறப்புகளே!

நம்மை பார்த்து ஊளை கும்பிடு போடும் இவர்களை நம்பி கெட வேண்டாம்.இது வரை அம்பாங் இந்தியர்களுக்கு என்ன செய்தார் என்று கேளுங்கள்? தன் அரசியல் இந்தியன் கூட்டத்துக்கு மட்டும் பிச்சை போடும் இவள் நாடகம் போதும். இவளுடன் சுத்தும் கேடு கெட்ட தமிழர்கள் மனசாட்சியுடன் இருக்க வேண்டுகிறோம்.தமிழர்களுக்கு நல்லதை செய்யா விட்டலும் அரசியல் துரோகம் செய்ய வேண்டாம்.

அநேகமாக அம்பாங்கில் மூன்று அணி போட்டி வரலாம் இதில் இந்தியர்கள் தமிழர்கள் சாபாங் அணியில் அம்பாங் பொன் ரங்கன் ஒரு தமிழன் KETUA CABANG பதவிக்கு போட்டியிட  உள்ளார் அவருக்கு உங்கள் வாக்கை அளித்து வெற்றி பெற செயுங்கள் போதும் மற்றது
தானா நடுக்கும் நம்புங்கள்.

அம்பாங் வட்டாரத்தில் கடந்த 40 ஆடுகளாக இந்தியர்களுக்கும் தமிழர்களுக்கும் நன்கு அறிமுகமான பொதுச சேவை தொண்டர்.அம்பாங் தமிழ்ப பள்ளிக்கு  இரண்டாவது கட்டட நிலத்தை பெற்று தந்த பெருமை இவருக்கு உண்டு.

உலக தமிழ் ஆராச்சி மையம் /உலகத தமிழர் பாதுகாப்பு இயக்கம் /முன்னாள் அம்பாங் தமிழ்பபள்ளி PIBG தலைவர் / மலேசியா தமிழர் பணிப்படை / தமிழ் அறவாரிய உதவித் தலைவர்./மலேசியத தமிழ்ப பள்ளிகள் பேரவை கழகம் / அம்பாங் தமிழ்ப்பள்ளி வாரிய துணை தலைவர் போன்ற இயக்கங்களில் பொறுப்பு வகிக்கிறார்.

தமிழக அறிமாவளவன் தமிழர் களம். சீமானின் மலேசிய “நாம் தமிழர் கட்சி”ஒருங்குகினைப்பாளரும் இவர் பணி செய்கிறார். உலகத தமிழர் ,மலேசிய இந்தியர் எனும் பொறுப்பில் பல உலக நாடுகளில் தமிழ் ஈழம் தமிழ் உறவுகளுடன் தமிழர் நாடு போன்ற இயக்க போராட்டத்திலும் பங்கு கொண்டுள்ள இவரின் செயல் சேவை தொடர்கிறது.

அம்பாங் இந்தியர்களின் அரசியல் விவேகத்துக்கு ஆளே இல்லையா? என்ற கேள்விக்கும் இவரே பதில் சொல்கிறார். பல கூட்டங்களுக்கு பிறகு அம்பாங் பாண்டான் பாகாதான் இந்தியர் பொதுக்குழு இவரை தலைமை ஏற்க பணித்துள்ளது.

களைப்பாறும் பறவைகளுக்கு இளைப்பாற மரங்கள் வேண்டும். நமக்கு கிளைகள் கூட கிடைக்க அரசியல் தவம் கிடக்கிறோம். காய்ந்து விழும் இலைகளாக திசை தெரியாமல் நம்மை காற்றில் பறக்க விடும் மலேசிய அரசியல் இன அறுவடையில் மீண்டும் விழாமல் நம்மை காத்துக்கொள்வோம் தோழர்களே !

இன்னும் என்ன தோழா ,நம்மை நாமே
ஏன் தொலைதுக்கொள்வோம்.?
யாரும் இல்லை தடைபோட
உன்னை மெல்ல இடை போடாதே
நம்பிக்கை நடை போட சமதம் சொல்
என்ன இல்லை உன்னோடு
ஏக்கம் என்ன கண்ணோடு
வெற்றி என்றும் வலியோடுதான்
வந்தால் அலையாய் வருவோம்
இனமான வேகத்தில் வெல்வோம்.

வீழ்தால் விதையை வீழ்வோம்
மீண்டும் மீண்டும் எழுவோம்
இளமை படையே வருக என்ற எழாம் அறிவு பாடலை
மீண்டும் மீண்டும் கேட்டுப பாருங்கள் தோழர்களே …

தமிழர்களுக்கு எதிராக அம்பாங்கில் நடக்கும் அரசியல் அநியாங்களை தட்டி கேக்கவும் தமிழ்பள்ளி பாதுக்காப்புக்கு போராடவும் அரசு அரசியல் ரீதியில் நமக்கு நல்ல சரியான அரசியல் தலைவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இப்போது அம்பாங் பி கே ஆர் / பாகாதான் கட்சிகள் வழி நல்ல மேல் மட்ட உறவுகளை வைத்துள்ள இவர் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் நல்ல அரசியல் விமோசனத்தை வழங்குவார் என்று நம்பலாம்.

டத்தோ ஸ்ரீ அன்வர் / டத்தோ மந்தெரி புசாருடன் அரசியல் அரசு உறவு வைத்துள்ள இவரால் நமது அம்பாங் தமிழர்களுக்கு /இந்தியர்களுக்கு புதிய பாதை புதிய விமோசனம் கிடைக்கும் என்றும் உறுதியாக நம்பலாம்.

தோழர்களே அமபாங் PKR உறுபினர்களை சென்று பாருங்கள்.இந்த மடலை கொடுங்கள்.3500 இந்தியர்களும் ஒன்று திரள்வோம். மாற்றங்களை நாம்தான் நமக்குச செய்துகொள்ள வேண்டும்.பிற இனம் நம்மை மாற்றாது. அதற்கு அந்த மனித இன அறம் காக்கும் உணர்வு போதாது. மீண்டும் நேரில் சந்திக்கும் வரை வணக்கம்.

PKR சாபாங் அம்பாங் வேட்ட்பாளர் 
வேட்பு மனு நாள் 11/4/2014
தேர்தல் 13/5/2014

– பொன் ரங்கன்