சாக்கு போக்கு வேண்டாம். பாக்கத்தான் தமிழ்த் தலைவர்களுக்கு அரசியல் விவேகம் வேண்டும்.

pakatanDAP இல் லிம்மும் டோனியும் மட்டும் கூறுவது தெய்வ வாக்கு என்று வாயடைத்து DAP STRATEGY என்று நமக்கு பூ சுத்த வேண்டாம். அரசியல் அறிவாளிகள் போல சிந்திக்க வேண்டும்.DAP இல் பல்லின ஜனநாயகம் சிறக்க வேண்டுமானால் வயசான பழைய சாணக்கியர்கள் ஒதுங்கி பாக்கத்தனின் தேசிய அரசியல் மக்கள் தேவைகளுக்கு செவி சாய்க்க வேண்டுகிறோம்.

பி கே ஆறில் நிர்வாக  குழப்பத்தில் அரசியல் தலைகீழாக போகிறது. DAP இல் தலைகள் முடிவு மண்ணை கௌவ செய்துள்ளது. ஆனால் இன ரீதியில் பழிபோட்டு மலாய் ,தமிழன், சீனன் ஆதரவு பற்றி பேசுவது எழுதுவது கேவலமாக உள்ளது. இப்போது புதுசா  ”வெளியூர்” ஒட்டு என புது கண்டுபிடிப்பு வேற மயக்கம் வருகிறது.

ஏன் ? இருக்கிற உள்ளூர் ஓட்டுக்கும் வெளி ஆள் வேட்பாளருக்கும் ஒப்பீடு கணக்கு பண்ணி சரியான உள்ளூர் வேட்பாளரை வைக்க வில்லை? நான் முன்பே சொன்னேன் DAP தலைகள் செய்யும் வேட்பாளர் தேர்வு கோளாறுக்கு தமிழர்கள் மீது பலி போட்டு வியாக்கினம் பாட வேண்டாம் என்று.

பழனிவேலு சொல்வது சரி தமிழர்களின் 71% வாக்கு BN பக்கம் திரும்பி உள்ளது . ராமசாமி சாக்கு போக்கு கூறககூடாது.தமிழின DAP தலைவர்கள் ஒழுங்கா இருந்தால் இந்த சிதறல் நாடகம் நடந்திருக்காது.முன்பு இருந்த மனோகரனுக்கு வசதி தராமல் குறிப்பா பினாங்கு DAP சிலாங்கூர் PKR  மாநில முதலாளிகள் கண்டுக்கொள்ளாமல் தெலுக் இந்தான்  மக்கள் தேவைகள் மன்றாடி போனதுதான் மிச்சம்.

அவன் சரி இல்லை இவன் சரி இல்லை என்று அரசியல் ஆசையில் வருஷம் முழுதும் குறை குற்றம் குடைச்சல் பேசி விட்டு தேர்தலுக்கு மட்டும் மேடை ஏறி மெச்சிக்க வசனம் பேசும் போக்கு தவிர்க்கபட்டு கட்சியில்  தலைகளுக்குள்  முதலில் நாகரிகமும் பண்பட்ட ஒழுங்கும் வேண்டும்.

தெலுக் இந்தான் வரலாற்றில் எதிர்க்கட்சி ஆளுமை DAP தமிழின தலைவர்களால்  உருவானது.தமிழர்களின் ஒட்டு இறுதி முடிவை தரும் என்பது முடிவான கருத்துக்கணிப்பு என்பதை எந்த கொம்பனும் மறுக்க முடியாது.

DAP  மீது சீனர்கள்  50 / 50 % என்றாலும் ….மலாய்காரன் 10/90 % என்றாக தமிழர்களின் ஒட்டு 90/10 % என்பதுதான் கடந்த 15 ஆண்டுகளின் கணிப்பு.என்றலும் DAP யின் சாதனை பூஜ்யம்தான். என்னினும் தமிழ் மக்கள் அரசியல் மாற்றம் வேண்டி தங்களை சுக போகங்களை அர்ப்பணித்து DAP ஆதரவு தந்தும் இந்த முறை வேட்பாளர் தேர்வில் DAP அறிவாளிகள் தப்பு செய்தபடியால் தமிழர்களின் ஒட்டு BN னுக்கு திரும்பியது DAP   தலைவர்களை விட DAP  தெலுக் இந்தான் தமிழர்கள் அரசியல் திறமைமிக்கவர்கள் என்பதை காட்டி உள்ளனர்.

DAP தேர்தல் திட்டமிடல் அறிவாளிகள் MBA ,PHD ,BA என்று பேசலாம் ஆனால் தோட்டத தொழிலாளிகள் உங்களையும் மிஞ்சி ஆக்கபூர்வ சாதனை செய்துள்ளனர். BN அதை கொடுத்தது ,இதைக கொடுத்தது என்று அங்கலாய்ககாமல், நீங்கள் ஏன் சரியான பந்தய குதிரையை கொடுக்காமல் அழகு மயிலைததந்து மக்களை ஏமாற்ற நினைத்தீர்கள் என்பதும்  கேள்விதான்?

இதற்கு DAP தமிழ்த  தலைவர்கள் தெலுக் இந்தான் தமிழர்களின் சக்தியை ஏன் உங்கள் கட்சி தலைகளுக்கு  உரைக்க சொல்லவில்லை? உங்கள் பதவிக்கும் பகட்டுக்கும் ஆசைப்பட்டதால்  சமுதாயம் மோசம்போக இதுதான் மக்கள் தீர்ப்பாம்.

பாகாதானில் தமிழ்ததலைவர்கள் இந்தியத தலைவர்கள் எல்லாமே கோச முட்டைகள் போல வெட்ட வெட்ட விரியும் “சைவர்”  போல தலைமைத்துவத்துக்கு பயந்து பேசா ஊமைகளாக சோரம் போவது ஏன் ?

இந்தியர்கள் ஆதரவு தே முன்னணிக்கு போகவில்லை என்பவர்கள் மக்கள் கூட்டனி தலைவர்கள் சரியா என்பதயும் ஆய்வு செய்யும் காலம் வந்துவிட்டது. கடந்த பொது தேர்தலில் கூட மக்கள் கூட்டணி சரியான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்பதால் பல தோல்விகளை கண்டது. மக்கள் மீதே ஆய்வு நடத்தும் போக்கு மாறி வேட்பாளர்கள் தலைவர்களுக்கு மட்டும் வேண்டியவர்கள் என்ற நிலை பாகாதானில் மாற வேண்டும்.

BN இல் இந்த குறை இல்லை என்றே சொல்ல வேண்டும். BN நிதி வழங்குவது அரசு மக்களுக்கு செய்யும் சேவை DAP யும் பி கே ஆரும் நிதி வழங்குவதை யாரும் கேள்வி கேட்கவில்லையே?

பொது தேர்தலில்  ஒரு கட்சி தோற்று விட்டது என்பது வேறு. இடைத் தேர்தலில் வெற்றிப்பெற்ற கட்சி தோல்வி என்பது பல அம்சங்களை அடங்கியது. அதில் 99% முக்கியமானது வேட்பாளர் தேர்வாகும் .ஒரு அழகிய மலாய் பெண்ணை வைத்து மலாயர் ஓட்டை மடக்குவது என்ற மனப்பால் விசமாகியதுதான் தெலுக் இந்தனில் நடந்த உண்மை !! மலாய்ககாரர்கள் இளமை மயங்கிகள் அல்ல என்பதும் உண்மையாக்கி விட்டது.

ம இ காவுக்கு சாமிவேலு இழைத்த துரோகத்தை போல பாகாதானில் நீங்கள் சமுதாயத்துக்கு துரோகம் செய்தால் அடுத்த தேர்தலில் களை எடுக்கப்படிவீர்கள் என்பதும்  திண்ணம்.

தமிழிலே ஒரு பழமொழி உண்டு :தலைவர்கள் என்பவர்கள் கட்சிக்குள் அணைத்து தடைகளையும் தாண்டி அடுத்தக்கட்ட உயர்வுக்கு வளர வேண்டும். வெந்ததை தின்னு வந்ததை மென்னு மண்ணுக்குள் போவது அரசியல் தர்மமாகாது.

இப்போது அன்வார் சொல்கிறார் பாகாதான் கிராமங்களை சென்று அடைய வேண்டும் என்று?  தொண்டர்கள் செல்வோம் தலைவர்கள் பின்னால் வியூகம் என்று வேட்பாளர் பட்டியலில் வேட்டு வைப்பார்கள்.

2016 ..இல் அல்லது 14 வது போதுத்தேர்தலில் பாகாதானில் புதிய தேசித தலைவர்கள் இடம் பெறுவார் என்று நம்பி. பாகாதான் மீண்டும் பழைய குருடி தப்பை செய்யாமல்.புதிய கண்ணாடிகள் அணிந்து இப்போதே வேட்பாளர்களை அடையளாம் கண்டு நிழல் பிரதிகளை சரி செய்தால் நடப்பதும் நடக்கபோவதும் நியாயமாக  இருக்கும். நாம்பிகையில் மக்கள் முன்னணி தமிழ்த தலைவர்கள் கடமையை செய்து உரிமை கேட்க வேண்டுகிறோம்.

மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்

இன நலம் எல்லா புகழும் தரும் – குறள் 457

– பொன் ரெங்கன்.