தமிழர் திருமண 10 நாள் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தமிழக தமிழர் திருமண அறிஞர்கள் வழி நடத்துவர்.

tamilmarriage2தமிழர் திருமண 10 நாள் பயிற்சி வகுப்பு ஆரம்பம்.
தமிழக தமிழர் திருமண அறிஞர்கள் வழி நடத்துவர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++

பணம் படைத்தவர்கள் அதிகம் செலவு செய்து திருமணம் செய்துகொள்ளும் இக்காலத்தில் ஏழைத்தமிழர்கள் என்ன செய்வார்கள்?

காதல் திருமணம் ,பொருத்தம் பார்த்த திருமணம் , ஏழைகள் திருமணம்,வீட்டு திருமணம், ,கோயில் திருமணம் ,திராவிட, ஆதித் தமிழர் திருமணம் இப்படியாக இன்னும் பல திருமணங்கள் உண்டு.

இதில் காதல் செய்து, காசு இல்லாமல் திருமணத தள்ளி போடல்களால் பல ! இதனால் காதலர்களின் கல்யாணம் தடம்புரண்டு வாழ்க்கை சோகமான்தை இன்று அளவும் பார்திருப்போம்.

இதில் பெண்களுக்குத்தான் அதிக சுமை.இதனால் பெற்றோர்கள் சோக கனவில் தோய்ந்துப போய், உடைந்துப போனவர்கள் இன்னும் பல காரணங்களை . இன்றும் பலர் பட்டியல்களை கையில் ஏந்தி வழி தெரியாமல் இதய பாரத்துடன் இருப்பதை காணலாம்.

மலேசியத் தமிழர்களின் வாழ்வில இன்று சுமாராக இருந்தாலும்.ஏழைகளின் பண சுமையால் “திருமண்ம் தள்ளிபோடல்” கடந்த பல ஆண்டுகளாக தடைப்பட்டு கிடப்பது கண்கூடு. இதனால் குடும்ப விரிசல் ,சமூக கோணல் பார்வை, சமூக சீர்கேடு ,பகமை ,வறுமை ,வாட்டம் என அடுக்கி வைக்கலாம்.

இன்று பணம் படைத்தோர் திருமணங்கள் ,நாகரீக ,,,,நவநாகரீக திருமண வைபவங்கள் , பண பட்டுவாடல், தடல் புடல்கள் என்று 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தாண்டி மண்டபங்கள் மாளிகையாகி, ஓமங்கள் புகை மங்கள சாஸ்திர சமஸ்கிருத சம்பராதயங்கள் ஆடல் பாடல் மேடை மெத்தலங்கள் புடை சூட வானும் மண்ணும் கெஞ்சும் அளவுக்கு திருமணங்கள் பண மனைகளாக நடக்கின்றன. வாழ்த்துவோம் ! இதுவும் இன பெருமைதான் .
ஆனால்:

செல்வம் என்ற பணம் இருக்கும் வரை தேவைகள் ஆடம்பர அழகுகள்
மனித மனங்களை ஆட்டிவிக்கும் ….பிறகு அதுவே திருமணங்களை மாய்க்கும் நிலையும் உண்டு. பணம் உள்ளவனிடம் மனம் இல்லை மனம் (மணம்) உள்ளவனிடம் பணமில்லை ஆக கல்யாணம் காலாவதி ஆகும் போது மெத்த மகிழ்ச்சியும் மண்ணாய்ப போகும்.

“நல்ல மனைகள் நானிலத்தில் நாளும் பெருகுவதற்கு நன் மனங்கள் வேண்டும்” அதுவே மணக்கும். இதுவே மனம் போல மாங்கல்யம. ஆனால் இப்போது பணம் போல கல்யாணம் என்பது கஷ்டமாகத்தான்
உள்ளது.

இதில் என்ன வேடிக்கை என்றால் பணத்தை மூன்றாம் தர தரதர்களுக்கு அள்ளி கொடுத்து கடன் கல்யாண கோலங்களையும் நாம் கண்டதுண்டு.

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினார் இலங்கை வேந்தன் என்ற புத்திமதியும் தாண்டி இன்னும் நாம் அதில் அடிப்பட்டுதான் வாழ்கிறோம்.

நம் நாட்டு மலாய் சகோதரர்களின் திருமண வைபவ விருந்தோம்பலை நாம் பாடமாக கொண்டு சிக்கன திருமண வாழ்வியல் வளர்ச்சிக்கு முக்கியம் தந்து அன்புடனும் பண்புடனும் வாழ வழிவகுப்பதே தமிழத் திருமண திட்டமிடல் பயிற்சியாகும்.

நமது தோட்டப்புரங்களில் இத்தகு எளிமையான திருமணங்களை கண்டுள்ளோம் அழகான வாழ்க்கை இன்பம் சூழ்த்த உறவுகள். இதையே இன்றும் தமிழர் நாட்டில் காண்கிறோம். மாசிலா மனங்களை மக்கள் பேரு அன்பும் அறனும் உடைத்தாயின் பண்பும் பயனும் ….இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தமிழ்த திருமணம் என்பது நாத்தீரர்கள் அல்லது திராவிட திருமணம் என்ற தவரான கருத்து நம்மிடையே உண்டு. தமிழர் திருமணம் என்பது தமிழ் மந்திரங்கள் ,தமிழர் பாரம்பரியம் , தமிழர் தெய்வ நம்பிக்கை,தமிழர் வாழ்வியல் நெறிகள், அறம் ,பொருள் .இன்பம் , திருக்குறள் அடங்கிய தமிழறம் காக்கும் வலியறிதல் ,காலமறிதல்,இடனறிதல், தேடல் ,மருந்து, மனையடி சாத்திரம்,ஆடை ,அழகு போன்ற வாழ்வியல் நல்லகூறுகளை தமிழர் திருமணம் கொண்டிருக்கும்.

இதனை பாட பயிற்சி வழி தமிழா திருமண நடத்துனர்களை தயார் செய்வது. அன்று திருமணம் புரிய உள்ளவர்களுக்கு தமிழர் திருமண் வழிகாட்டல் முறைகளை “திட்டமிடல் பயிற்சிகளை” வழங்கி
பல ஏழை காதலர்களுக்கு முறையாக “சிக்கன” திருமணம் நடத்தி தருவது போன்ற நிகழ்வுகளை இந்த பயிற்சி மையம் நடத்தும். இதனுடன் கூட்டுத திருமண ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

பயிற்சி பெற ஆர்வமுள்ளோர் காட்டாயம் தமிழ் எழுதப படிக்க தெரிந்து, காட்டாயம் தமிழராக இருக்க வேண்டும் மேலும் ஆர்வமுள்ளோர் தாய் வழி தமிழர் தமிழ் வழி தமிழராக இருந்தால் பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவிதுக்கொள்ளுகிறோம். விண்ணப்பங்கள் முழு CV உடன்
30/8/2014 குள் கீழ் காணும் முகவரிக்கு அனுப்பி விட வேண்டும். மனுதாரர் 25 வயதுக்கு மேல் 45 வயது குள் இருக்க வேண்டும்.

தொடர்புக்கு தமிழர் தேசியம் அசொசியட்ஸ் 
Tamilar Thesiam Associates 016 -6944223
Director 
பொன் ரங்கன் ,PJK 
27 Jalan 11 Taman Putra Ampang 
68000 Selangor email : ammpon@gmail .com 

வாரியக் குழு இயக்கங்கள் :
c /o உலகத தமிழர் பாதுகாப்பு மையம் 
தமிழர் பிறப்புரிமை வாரியம் 
நாம் தமிழர் மலேசியா 
தமிழர் களம். தமிழர் பணிப்படை.
அம்பாங் தமிழர் சமூக நல இயக்கம்.

நன்றி வணக்கம்.
குறிப்பு : 
இத்தகவலை நமது தமிழர் உறவுகளுக்கு பரப்பவும்
இதன் முக நூல் பக்கம் விரைவில் வளரும்..
TAMILAR THIRUMANAM 
தமிழராய் எழுவோம்.