தொலைக்காட்சியில் தமிழ் நிகழ்சிகள்………. ( ஒருவனின் பார்வையில் )

Astro_vaanavilஒரு காலத்தில் நமக்கு என்று தமிழ் நிகழ்சிகள் அரசு தொலைக்காட்சியில் காணக்கிடைத்தது வெறும் செய்தியில் தொடங்கி …, பின்னர் நாடகம் அரை மணி நேரம் …வார இறுதியில் சனி பிற்பகல் ஒரு படம் …அதுவும் சில சமயங்களில் ஹிந்தி …,தெலுங்கு…,மலையாளம் என பங்கு போட்டுக்கொள்ளும் நிலை ,தமிழ் பேசும் மக்களுக்கு இவை எவ்வளவோ வேதனையை
கொடுத்துக்கொண்டிருந்த சமயம் தொ .காட்சி 3 வந்தது …, அதுவும் தமிழர்களுக்கு எவ்வித தீர்வும் கொடுக்கவில்லை, என் .டி வி  7 வந்தது …, அதுவும் எந்த பரிகாரமும் கொடுக்க முன் வரவில்லை .

அஸ்ட்ரோ வந்ததும் நம் பிரச்னைகள் தீரும் என பெரிதும் நம்பினோம். ஆரம்பம் சுகமாக இருந்தது ! போகப்போக சுகம் சுமையாக மாறியது ! இந்தபெக்கேஜ் இன்ன விலை…, இந்தபெக்கேஜ் இன்ன விலை…, என புதிது புதிதாக விலை ஏற்றம் …, ஏற்றமே தவிர … இறங்கும் நிலை வரவே இல்லை !
பெக்கேஜ்…பெக்கேஜ்… ஆக கூட்டி என்ன பயன் ? ஒரே சமயத்தில் அத்தனை சேனல் களில் திரை காண்பது இயலுமா ? அவரவர் விருப்பத்திற்கு வேண்டிய சேனலை தேர்வு செய்து பணம் கட்டி பார்க்கும் சலுகை உண்டு பண்ணினால் என்ன ?

Mani-In-Vasanthamஇன்றைக்கு தமிழுக்கு எத்தனை சேனல் வரிசைகள் ? தொட்டதெல்லாம் பணம் …,பணம் ! முன்பெல்லாம் அரசு சேனல்களில் சில கால்பந்து maxresdefaultவிளையாட்டுகளை நேரலையாக இலவசமாக காண முடிந்தது . இன்று அப்படி எதையுமே காணமுடியாது ! கரி வேப்பிலை போன்று அபூர்வமாக ஏதோ ஒன்று ! இப்படி எல்லாமே பணமயமானால் சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும் ?

சமீபத்தில் லண்டனில் விஜய் நிறுவனத்தினர் மாபெரும் கலை விழா எடுத்து அவர்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளை அங்கே ஒளிபரப்ப பதிவு செய்தார்கள்அதன் விலை ஆண்டுக்கு பவுன் 59 மட்டுமே .

தயவு செய்து இதை நம் நாட்டு பணமாக மாற்றி பார்க்க வேண்டாம் .அவர்கள் சம்பாதிப்பது அவர்கள் நாட்டு பணம் (நமக்கு 59 ரிங்கிட் என்றால் அவர்களுக்கு 59 பவுன் ) சன் டி.வி . ஆண்டுக்கு 72 பவுன் .
மற்றபடி அவர்களின் மற்ற ஆங்கில ஒளிபரப்புகள் இலவசம் , இன்னும் அங்கே லட்சக்கணக் காண புலம்பெயர் தமிழர்கள் பிரஜையாக வாழ்கிறார்கள் . அவர்களுக்கென்று தீபம் …, யாழ் ஒளி… என்றும் முழுக்க முழுக்க தமிழில் அவர்கள் நடத்தும் சேனல்களும் உண்டு .

நாம் மட்டும் ஏன் இப்படி சுரண்டப்பட …சம்மந்தப்பட்ட நம் தலைவர்கள் கண்டும் காணாமல் இருக்கவேண்டும் ! இவை பற்றி யாராவது பொறுப்போடு பதில் கொடுப்பார்களா ?

– ஒருவனின் பார்வையில்.