10/7/2014 நேற்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்பு மிகு கணபதி ராவ் மாநில செயலகத்தில் நடந்த ஒரு விளக்க கூட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்துகளுக்கு இந்து அறப்பணி வாரியம் அமைக்க வேண்டியதின் அவசியத்தையும் அது மாநில அரசு அங்கிகாரத்துடன் மாநில enactment வழி அதிகாரம் பெற்று Lembaga Wakaf Hindu Selangor (SHEB ) என்ற குறிகிய பெயரில் அமையும் என்றும் கூறினார்.
இப்போதைக்கு சில தடைகள் இருந்தாலும், இங்கு வந்தவர்களின் மற்றும் இதர மாநில மற்றும் நாடு முழுக்க நமது உங்கள் ஆதவில் இது அமைக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும் ஆணித்தரமாக கூறினார். இதன் அதிகாரிகள் மாநில பதவிகளில் நமது இந்து மத மேம்பாட்டிற்கும் ,நிலம் ,சொத்து ஆகிய அணைத்து வளப்பத்துக்கும் துணையாக இருக்கும் பொருட்டு அமையும் என்றார்.
சமய நிர்வாகம், கல்வி,சமூக கலை கலாசார பண்பாடு ,ஆராச்சி,பொருளாதார மேம்பாடு போன்ற திட்டங்கள் மாநில ஓர் இந்து ஆட்சிக்குழு உறுப்பினர் ஆளுமையில் மற்ற சமய Pesuruhjaya – pesuruhjaya போல இந்து அறப்பணி வாரியம் மாநில முதல்வரின் நியமனத்தில் அமைக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறினார்.
சுமார் 50 கும் மேற்பட்ட ஆலைய பொறுப்பாளர்களும் 200 கு மேற்ப்பட இயக்க மற்றும் பொதுமக்களும் கலந்துக கொண்டு இந்து அறப்பணி வாரியம் அமைவதர்க்கு பெருத்த ஆதரவு தெரிவித்தனர்.
இதில் மாநில ஆட்சிக்குழு அல்லது சட்டமன்ற உறுபினர்களின் ஆதரவு வேண்டும் என்பதால் ஆங்காங்கே உள்ள அரசியல் கட்சிகள், இந்து ,தமிழர், இந்தியர், இயக்கங்கள் உங்கள் நாடாளுமன்ற சட்ட மன்ற உருபினர்களிடம் இது தொட்டு பேசி ஆதரவு தேடினால் நமது இத்திட்டம் வெற்றி பெரும் என்றார்.
இது தொடர்பில் தேசிய அளவிலான மாநாடு ஒன்றும் எதிவரும் 13/9/2014 மாண்பு மிகு பினாங்கு மாநில துணை முதல்வர் முனைவர் ராமசாமி தலைமையில் நடக்கும் தருவாயில் இந்த அமைப்பின் அடுத்தக்கட்ட வேலைகள் தொடரும் என்றார். நாடு முழுக்க இருக்கும் இந்துக்கள் இந்த முக்கிய கால கட்டததில் தமது ஒத்துழைப்பை தந்து நமது
வெற்றிக்கு பாடு பட வேண்டும்.
உங்கள் ஆதரவு மடல்களை https : // www .facebook .com /endowmentboard என்ற அகப்பக்கம் வழி தொடர்பு கொண்டும் மற்றவர்களுக்கு தெரிவித்தும் ஆதரவு பெற வேண்டுகிறோம் முடிந்தர்வர்கள் நமது மலாய் ஆங்கில ஊடகங்கள் வழியும் நமது ஆதரவு தேவைகளை எழுத வேண்டுகிறோம்.
சமயமும், இனமும், மொழியும் இந்த நாட்டில் உரிமையுடன் நிலைப்பெற நாட்டில் எல்லா மாநிலங்களிலும் அரசு வழி இந்து அறப்பணி வாரியம் அமைவது அவசியம் என்றும் அனைவரும் ஒத்துக்கொண்டனர் என்பது மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
நமது வேலை எதிர்வரும் 13/9/2014 மாநாட்டிற்கு நவம்பர் 28 2009 போல நாடு முழுக்க உள்ள இந்துக்கள் மாநாட்டில் திரள்வோம். இச்செய்தியை
உங்கள் உறவுகளிடம் சொல்லவும். உங்கள் முக நூல் பதிவு இறக்கம் செய்து சமய சிந்தனை நல்லதை விதைப்போம். நமது இந்து உரிமையை பதிவு செயுங்கள்.
தொடர்புக்கு Lembaga Wakaf Hindu Selangor
Lot 2178, Jalan Kebun Batu 6 Kg Jawa 42450 Klang Selangor
+ 6019 2654572 / 6012 3028143
அன்புடன் ஆதரிக்கும்
உலகத தமிழர் பாதுகாப்பு மையம்/
தமிழர் பணிப்படை
நாம் தமிழர் மலேசியா
தமிழர் களம் மலேசியா
அம்பாங் தமிழர் சங்கம்.
அன்பிற்குரிய மாண்புமிகு கணபதிராவ் அவர்களுக்கு , சிலாங்கூரில் இந்து அறப்பணி வாரியம் அமைத்ததற்காக எனது முதற்கண் வாழ்த்துக்கள் . உங்கள் மூலமாக அமைக்கப் பெற்ற இந்த வாரியம் நிச்சயமாக எதிர்காலத்தில் நம் இந்திய சமூகத்தின் மேம்பாட்டிற்கு ஒரு மைல் கல்லாக அமையும் என்பது உறுதி . அதே வேளையில் மாண்புமிகு அவர்கள் , சிலாங்கூரில் உள்ள அனைத்து தேசிய வகை தமிழ் பள்ளிகளின் (மிட்லண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியை தவிர )மேம்பாட்டிற்கும் மேலும் சிரத்தை எடுத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன் சமீபத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் எத்தனை தமிழ் பள்ளிகளுக்கு எவ்வளவு மானியம் கொடுக்கப்பட்டது என புள்ளி விவரமாக கொடுத்து அனைவரின் வாயையும் மூட வைத்த உங்களுக்கு ஒரு சபாஷ் . இன்றைய கால கட்டத்தில் தீபகற்ப மலேசியா முழுவதும் தமிழ் பள்ளிகளின் நிலை படு மோசமாக உள்ளது ,அதில் கட்டட மோசமான நிலை , மாணவர் பற்றா குறை , தமிழ் பள்ளி ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் தோட்டம் துண்டாடல் காரணமாக தமிழ் பள்ளி மூடப்படும் நிலை .அதை நீங்களும் அறிவீர் . அதற்க்கு விதிவிலக்காக .தாங்கள் ஆட்சி குழு உறுபினராக உள்ள சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள எல்லா தமிழ் பள்ளகளும் , பிற மாநிலத்தின் தமிழ் பள்ளிகளுக்கு எடுதுத்துக் காட்டாக அமைய வேண்டும் என எதிர்பார்கிறேன் .இதை செயல் வடிவத்தில் காட்டுவீர்கள் என உறுதியுடன் நம்புகிறோம் , காரணம் நீங்களும் முன்னாள் தமிழ் பள்ளி மாணவர் , உங்களது பிள்ளைகளையும் தமிழ் பள்ளியில் பயில்கிறார்கள் என நாங்கள் அறிவோம் .தொடர்ந்து உங்களது முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் . ” தமிழ் மொழியின் அடித்தளம் தமிழ் பள்ளிக்களே “
அப்பு ஹிந்து சங்கத்துக்கு ….கணேஷ் பாபு ராவ் செலங்கோர் மாநில தலைவர் அவர்கள் சற்று அமைதியை இர்ருந்து இருந்தால் வந்திருக்காது …..இந்த பங்கம் ……முழு பொறுப்பு அவர்தான்
எதையும் மனோதொடு செய்தல் அவசியம்.எது செய்தலும் நேர்மை இருக்க வேண்டும் .அதுதான் என் கறுத்து…