மனிதன் தான் சார்ந்துள்ள மத போதனை நூல்களுக்கு அப்பால் மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள். இந்த நூல் தமிழ் மொழியில் படைக்கப் பெற்றதற்கு உலக தமிழர்கள் அனவரும் திருக்குறள் படைப்பாளர் திருவள்ளுவருக்கு நன்றி கூறுவோம்.
திருக்குறள் சுமார் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழ் அறிந்தவர்கள் அனைவரும் திருக்குறளை வாசித்து பயன் பெற வேண்டும் என்று திருக்குறள் தொடர்பான தகவலை தொகுத்துள்ளேன்.
1330 குறளையும் ஒரு நாளுக்கு ஒரு குறள் என்று வாசித்தால், முழுமையாக வாசித்து முடிய 3.6 ஆண்டுகளாகும் (3 ஆண்டுகள் 235 நாட்கள்)
1330 குறளையும் ஒரு நாளுக்கு இரண்டு குறள்கள் என்று வாசித்தால், முழுமையாக வாசித்து முடிய 1.8 ஆண்டுகளாகும் (1 ஆண்டு 300 நாட்கள்)
1330 குறளையும் ஒரு நாளுக்கு பத்து குறள்கள் என்று வாசித்தால், முழுமையாக வாசித்து முடிய 133 நாட்களாகும்.
1330 குறளையும் வாசிக்க தொடங்காவிட்டால், முழுமையாக வாசிக்கும் முன் ஆயுள் முடிந்து விடும்.
பகுதி 1
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள்.
பகுதி 2
திருக்குறள் வாசிப்போம் – திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம். தமிழில் மு.வரததாசனார் / சாலமன் பாப்பையா அவர்களின் எளிய விளக்கத்துடன்.
பகுதி 3
திருக்குறள் வாசிப்போம் – திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம்.
பகுதி 1
2004 ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகமும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்திய பன்னாட்டு திருக்குறள் மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை. 38 கட்டுரைகள் அவற்றில் 18 கட்டுரைகளின் தலைப்பையும் அதன் குறுகிய இணையதள இணைப்பையும் பதிந்துள்ளேன்.
திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று அது ஒரு வாழ்வியல் நூல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதனுக்காக மட்டுமல்ல, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய தலைமுறையினர்க்கும் வழிகாட்டும் புரட்சி நூல். வள்ளுவத்தின் பொருண்மை காலந்தோறும் புதிய புதிய கருத்தாக்கங்களைத் தந்து, இனம், மொழி, நாடு என்னும் எல்லைகளைக் கடந்து மனித வாழ்க்கையை வளப்படுத்துகிறது. பொருண்மைச் சிறப்பு சங்க காலத்தைத் தொடர்ந்து தமிழுக்கும், தமிழர்க்கும் கிடைத்த அரிய களஞ்சியமான வள்ளுவத்தில் உலகளாவிய சிந்தனைகளும் மனிதனை உயர்த்தும் உயரிய நோக்கும் காணப்படுகிறது. – நா.தனராசன்
1.இன்றைய தேவை: அறவியல் நோக்கிலான வள்ளுவம் – அ.அறிவுநம்பி – http://goo.gl/jvK1tp
2.இக்கால உலகின் மத நல்லிணக்கத்திற்குத் திருக்குறள் தேவை – இ.எம்.இராமச்சந்திரன் – http://goo.gl/aoFscy
3.வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி – நா.தனராசன் – http://goo.gl/IsNJhM
4.வளமான இல்லறத்திற்கு வள்ளுவர் தரும் காமத்துப்பால் – ஜெ.கெ.வாசுகி – http://goo.gl/g9YjI6
5.திருக்குறள் உலகப்பொதுமறையா? சில சொல்லாடல்கள் – ந.முருகேச பாண்டியன் – http://goo.gl/eHREep
6.இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள் – தா.டைட்டஸ் ஸ்மித் – http://goo.gl/LmJWXD
7.வள்ளுவரின் பெண்மையும் இக்காலப் பெண்ணியப் பார்வையும் – சி.அழகர் – http://goo.gl/NbYTTz
8.இக்கால உலகிற்குத் திருக்குறளின் தேவை சமுதாய நோக்கு – சி.கே.இரவிசங்கர் – http://goo.gl/98aAmQ
9.வள்ளுவம் காண விரும்பிய சமுதாயம் – நாராயண துரைக்கண்ணு – http://goo.gl/2lMT06
10.சமுதாயத்தில் வள்ளுவர் சுட்டும் அன்பு – பி.டி.கிங்ஸ்டன் –
http://goo.gl/DmeJJl
11.திருவள்ளுவர் கண்ட இல்லறச் சமூகம் – கா.காந்தி – http://goo.gl/ga5Hpm
12.வள்ளுவ இல்லறம் – இரா.முருகன் – http://goo.gl/OEQNjt
13.நல்லாண்மை என்பது இல்லாண்மையே – ஆ.இலலிதா சுந்தரம் –
http://goo.gl/tCAsv1
14.வள்ளுவத்தில் இல்லறம் – கே.எஸ்.இராமநாதன் – http://goo.gl/azjhXA
15.வள்ளுவரின் பொருள் ஆதாரக் கோட்பாடுகள் – ப.யசோதா –
http://goo.gl/u8zQYr
16.திருக்குறள் கூறும் வருவாய் முறைகள் – இரா.செல்வராஜ் – http://goo.gl/rltfpH
17.திருவள்ளுவரின் பொருளாதாரச் சிந்தனைகள் – நா.ஜானகிராமன் -http://goo.gl/BpmgMY
18.திருவள்ளுவர் கூறும் பொருளாதாரம் – செ.ஹேமலதா – http://goo.gl/Zy7yCc
மேலும் வாசிக்க
திருக்குறள் (38) – http://goo.gl/hy5wx2
இணையதளம் – http://thoguppukal.wordpress.com/
பகுதி 2
திருக்குறள் வாசிப்போம் – கீழ் உள்ள இணையத்தளத்தின் திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம். தமிழில் மு.வரததாசனார் / சாலமன் பாப்பையா அவர்களின் எளிய விளக்கத்துடன்.
http://www.tamillexicon.com/thirukkural/araththuppaal/
திருக்குறள் / Thirukkural
திருக்குறள் என்பது மானிட வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகும். இது வள்ளுவர் எனும் புலவரால் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் இயற்றப்பட்டதாகும். திருக்குறளுக்கு உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களும் உண்டு.
கடவுள் வாழ்த்து / The Praise of God / Katavul Vaazhththu
குறள் #1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
பொருள்
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
Couplet 1
A, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains.
Explanation
As the letter A is the first of all letters, so the eternal God is first in the world.
Transliteration
Akara Mudhala Ezhuththellaam Aadhi
Pakavan Mudhatre Ulaku.
மு.வரததாசனார் உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
பகுதி 3
திருக்குறள் வாசிப்போம் – கீழ் உள்ள இணையத்தளத்தின் திருக்குறளை தமிழ் / ஆங்கிலத்தில் விளக்கத்துடன் வாசிக்கலாம்.
http://www.gokulnath.com/thirukurals/1
ஆக்கம்
போகராஜா குமாரசாமி
நன்றி திரு. போகராஜா குமாரசாமிக்கு. அற்புதமான தொகுப்பு. கருத்து முரண்பாடுள்ள சில படைப்புகள் இத்தொகுப்பில் காணப்பட்டாலும் படைப்பாளிகளையும் அவர்களின் ஆர்வத்தையும் அவர்களின் உழைப்பையும் மதிப்பது நமது கடமை. படைப்பாளிகளுக்கும் தொகுப்பாளருக்கும் நன்றிகள் உரித்தாகுக! செம்பருத்தி வாசகர்கள் இந்தத் தொகுப்பிலுள்ள கட்டுரைகளை வாசித்து மேன்மேலும் வள்ளுவனின்பால் ஈர்க்கப்படவேண்டும் என்பதே என் விருப்பம். வெறுமனே வாசிப்போடு நிறுத்திக்கொள்ளாமல் கற்பவை கற்றபின் நிற்க எனும் வள்ளுவனின் அறிவுரைக்கேற்ப வாழ்க்கையில் குறள்படி வாழ்ந்து சோதித்துப் பார்த்து மற்றவர்களும் உங்களைப்பார்த்து வாழும்படி , திருக்குறளை நாடி வரும்படிச் செய்யுங்கள்.
போகராஜா அவர்களே! பாராட்டுக்கள்! நல்ல முறையில் தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் உங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகள்!
மானிடராய் பிறந்த மனிதா, இயன்றவரையில் நல்ல மனிதனாய் வாழ்ந்து பிறவிப்பயனை அடைய பொதுமறையாம் திருக்குறளை வழிகாட்டியாகக்கொள்வோம். வாழ்த்துகள்! போகராஜா அவர்களே! தொடரட்டும் உங்கள் சேவை!!!!
தலைப்பை திருத்துங்கள்.
_________________________
திருக்குறள் 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழில்தான் எழுதப்பட்டது. இதில் திருக்குறள் தமிழனுக்கு தேவையா என்று நையாண்டித்தனமாக போக ராஜ் கேட்டு விட்டு…. ஏன் திருக்குறள் இதர விளக்க பட்டியலை தந்தார் என்று விளங்க வில்லை. திருக்குறளுக்கு தமிழ் துணை நூற்பட்டியல் 500 மேல் உள்ளது. அவர் குறிப்பிட்டது வலையில் வந்தது மட்டும்.
தமிழனுக்கு திருக்குறள் தேவையா என்று திரு போக ராஜ அவர்கள் ஏன் கேட்டார்?
இதுவரை இதர மொழிகளில் வந்துள்ள திருக்குறள் மொழி மாற்றும் சரி விளக்கமும் சரி தமிழ் மொழியில் படைக்கப்பட்டது போல் முழுமை பெறவில்லை என்பது ஆய்வாளர்கள் கருத்து ..இது முடியாத ஒன்று என்பதும் உலக விவாதம்.
திருக்குறள் ” தமிழ் மரபுரை ” என்று தூயத தமிழன், உலகத்துக்கு தமிழ் மொழியை உலக மொழியாக்கிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் படைத்ததில் திருக்குறளை தமிழை தவிர எந்த மொழியிலும் சரியாக எழுதமுடியாது என்றுள்ளார். தமிழனுக்கு கிடைத்த அரும் பெரும் சொத்தை நீங்கள் எப்படி திருக்குறள் தமிழனுக்கு தேவையா என்று பைத்தியம் போல உளறி உள்ளீர் ..தரம் இருந்தால் பதில் தரவும் இல்லையேல் தலைப்பை திருத்தவும் !உங்கள் வரியும், வெறியும் உலக த தமிழர்களுக்கு அவமதிப்பை தந்துள்ளது?
திருக்குறள் எனும் தமிழர் இரும்பு வேலியை தமிழால் காத்து வருகிறோம். எட்ட நின்று எப்படி வேண்டுமானாலும் தமிழனையும், தமிழையும் ,திருக்குறளையும் கேள்வி கேக்க யாருக்கும் அருகதை கிடையாது.
சித்தன் வாசல் தமிழ் ஓவியத்தை ,திறந்த நிலையில் வைத்தபோது கண்டவர் ,மங்கியர் கண்டபடி கிறுக்கி கிறுக்கர்கள் சிதைத்தபோது தமிழர் தொல்பொருள் ஆய்வாளகள் அதற்கு இருப்பு வேலி போட்டு காத்துள்ளனர். அறிவுக்கு எட்டாதவர்கள் எட்ட நின்று பார்த்துவிட்டு போகட்டும் ” அறிதோறும் அறியாமை கண்டற்றால் ” எனும் அறிவியலின் படி திருந்துங்கள்.
திருக்குறள் எந்த சமயத்துக்கும் உரியது அல்ல ! அது மக்களுக்கு உரியது ” தெய்வத்தான் ஆகாது எனினும் மனிதனின் முயற்சியை முன்
வைத்துள்ள திருக்குறளை மனிதனுக்கு தேவையா என்றும் வேற கேட்டுள்ளீர்.
வள்ளுவன் செய் திருக்குறளை
மறுவ்றநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி
என்று மனோன் மணியம் சுந்தரனார் மனித மத சார்பற்ற
அடித்தள உண்மையை திருக்குறளுக்கு உவமை சொல்ல
நீங்கள் அறிவிலித்தனமாக, எதிர்மாறான உங்கள் அலட்சிய
படைப்பை வெறுக்கிறேன் ! ஆனால்; உங்கள்துணை நூற்ப்பட்டியல்
போற்றுகிறேன். வணக்கம் .
மனிதனுக்கு (தமிழனுக்கு) திருக்குறள் தேவையா ? போகராஜா ! தமிழனின் கடுப்பை கிளப்பாதே ! தலைப்பை மாற்றிவிடு இல்லை ஓடிவிடு ! நீ நடிகர் விஜையகாந்த் சாயலில் கொண்டு வந்த நீண்ட விளக்கம் என்னை போன்ற தமிழ் மக்களுக்கு தேவை இல்லை ! திருக்குறளுக்கு மற்றொரு பெயர் பொய்யா மொழி ! அது இனம், மொழி, மதம் கடந்து எழுதப்பட்டது , யார் வேண்டும் என்றாலும் படித்து பயன் பெறலாம் ! நீ தமிழன் பெயரில் வந்த திராவிடனா அல்லது ஆரியனா ? தமிழில் சிறந்து விளங்கி விட்டால் தமிழுக்கு துரோகம் செய்ய துணிந்து விடுகிறார்கள் ! தமிழ் துரோக பட்டியலில் கடைசி ஆள் சாலமன் பாப்பையா என்ற ஆப்பையா !
தோழர் போக ராஜ் அவர்களுக்கு வணக்கம் , உண்மை உணர்த்து தலைப்பை மாற்றி அமைத்தமைக்கு நன்றி பாராட்டுகள். ஊடக விதையில் தலைப்பு ரொம்ப முக்கியம்.அது சரியாக நடப்பட வேண்டும்.அப்போதுதான் பக்கத்து காட்டு செடிகளுக்கும் நிழல் கிடக்கும்.நன்றி வாழ்த்துகள்.
கடைசி வரியில் ” கிடைக்கும் ”
திருக்குறள் தெளிவுபெற சிரமம் பாராமல் நமக்குத் தேவையான வலைப் பக்கங்களை பதிவு செய்தமைக்கு கட்டுரையாளருக்கு நன்றி. திருக்குறளை அறிந்து நாம் அறவழியில் வாழ வழிவகுத்த வள்ளுவனுக்குத் தலை வணங்குகின்றோம்.
திருக்குறள் என்றால் என்ன என்று கேட்பார்,யாராவது முயற்சி செய்தால் உடனே கிளம்பிவிடுவர் இது தவறு, அது தவறு யென்று.முடியுமா இங்கே கருத்து எழுதும் அனைவரும் கருத்து கூறுமுன் குறளை சொல்லி எழுத முடியுமா,கேள்விக்கு குறள் இப்படி சொல்கிறது,அப்படி சொல்கிறது என்று.(உங்கள் கருத்து திருத்தப்பட்டுள்ளது. ஆ.ர்.)
திருக்குறள் ஒளியுரை வடிவில் இங்கே கல்வித் தொடராக வெளியிடுகின்றோம். இங்கேக் காண : http://omtamil.tv/
நன்றி, நன்றி ஓம்தமிழ், வளர்க, வாழ்க உங்கள் தொண்டு.
மனிதனுக்கு (தமிழனுக்கு) திருக்குறள் தேவையா ? இந்த தலைப்பு தமிழன்னாகிய என்னை சிந்திக்க வைத்தது. விமர்சனபகுதியில், இருவரின் விமர்சனம் (Pon Rangan – தலைப்பை திருத்துங்கள், தமிழர் நந்தா – தலைப்பை மாற்றிவிடு இல்லை ஓடிவிடு), ஓம்தமிழ் ஒலி வழி திருக்குறள், என்னை எனது கருத்தை எழுத தூண்டியது. எனது விமர்சனம் சற்று நீளமாக இருக்கிறது. தயவுச்செய்து முழுமையாக படைக்கவும்.
இதற்கு முன் திருக்குறளை பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன் ஆனால் முழுமையாக வாசித்தது இல்லை. நமது ஆர்டிஎம்மில் தமிழ்ச் செய்திக்கு பின் திருக்குறளை சொல்லி விளக்குவதையும் கேட்டு இருக்கிறேன். சன் தொலைக் காட்சியில் திருக்குறளுக்கு விளக்கம் அளிப்பதையும் கேட்டு இருக்கிறேன்.
நம்மில் எத்தனை பேருக்கு (என்னையும் சேர்த்து) திருக்குறள் தெரியும் என்று தெரியவில்லை. இந்த கட்டுரையினை வாசித்தப்பின் மனிதன் மனிதனாக வாழ வழி காட்டும் வழி காட்டி நூல் திருக்குறள் என்பது உண்மை என்று அறிந்தேன்.
நமது தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்மறையான வாழ்வியல் பழக்கங்களை திருக்குறள் கூறும் வழி பின்பற்றினால் மற்றத்தை ஏற்படுத்தலாம் என்பது திண்ணம்.
என்னைப் போன்ற தமிழர்கள் அனைவரும் திருக்குறளை வாசித்தும் / கேட்டும் வாழ்க்கையில் வளம்ப் பெற வழி வகுத்த திரு. திரு. போகராஜா, அவர் குறிப்பிட்டுள்ள படைப்பாளர், வலைப்பதிப்பாளர், மற்றும் ஓம்தமிழ் ஒலி வழி திருக்குறள் நிருவனருக்கும் அனைத்து தமிழர்களும் நன்றி கூறுவோம்.
தமிழர்கள் அனைவரும் திருக்குறள் குறித்த தகவலை உங்களுக்கு அறிமுகமான தமிழர்களிடையே பகிரவும். உங்களின் ஆதரவை திரு. போகராஜா அவர்களின் முயற்சிக்கு விமர்சன பகுதியில் பதிவு செய்யவும். உங்களின் ஆதரவால் நமது தமிழரின் திருக்குறள் நம்மிடையே வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.
திரு. போகராஜா மனிதனுக்கு (தமிழனுக்கு) திருக்குறள் தேவையா ? என்று ஏன் தலைப்பு வைத்தார் என்று அவர்தான் விளக்கம் தர வேண்டும்.
ஒரு படைப்பாளர் தனது படைப்பிற்கு தலைப்பை வைப்பது அவரது உரிமை. அதனை மாற்ற சொல்லுவதும், மிரட்டுவது தமிழரின் பண்பு அல்லவே.
தங்களை தமிழர்கள் என்றும், திருக்குறளை காப்பவர் என்றும் காட்டிக்கொள்ளும் Pon Rangan, தமிழர் நந்தா திருக்குறளில் அதிகாரம் 10 – இனியவை கூறல், அதிகாரம் 20 – பயனில சொல்லாமை , அதிகாரம் 21 – தீவிணையச்சம் படித்திருந்தால் திரு. போகராஜா அவர்களின் படைப்பைவிட அவரையும், தமிழறிஞர் முனைவர் திரு. சாலமன் பாப்பையாவையும் பற்றி தரகுறைவாக எழுதி இருக்க மாட்டார்கள்.
இந்த விமர்சனம் பிரசுரித்தால் Pon Rangan, தமிழர் நந்தா மற்றும் சிலர் கண்டிப்பாக எதிர்மறையான விமர்சனம் எழுதுவார்கள், அதில் எதும் நல்ல கருத்துகள் இருக்காது என்பது திண்ணம். நல்ல பந்தியில் வாந்தி எடுத்துப்போல் தான் இருக்கும். தானும் சாப்பிட முடியாது மற்றவர்களும் சாப்பிட தயங்குவர்கள். செம்பருத்தி.கோம் ஆசிரியருக்கு நீங்கள் எதிர்மறையான விமர்சனங்களை தவிர்த்தால் தமிழ் மொழிக்கும், திருக்குறளுக்கும், தமிழருக்கும் செய்த சேவையாகும்.
வள்ளுவன் எழுதியது பழைய பல்லவி ! “தமிழனுக்கு திருக்குறள் தேவையா ?” என்பதற்கு நீங்கள் பதில் சொல்லி உள்ளீர்கள்.நன்றி. தோழர் போக ராஜா அவர்களும் மிக பொறுப்புடன் தலைப்பை நன்றாகவே மாற்றி உள்ளார். என் நன்றியையும் பதிவு செய்தேன்.
இப்போது வள்ளுவன் “ஒருவருக்கு தன் கட்டுரைக்கு தலைப்பு எழுத உரிமை உண்டு அதை மாற்ற மற்றவருக்கு உரிமை இல்லை என்றுள்ளார்.” உண்மைதான். ஆனால் போக ராஜா அவர்கள் நல்ல தொகுப்புகள் பல தந்து “தமிழனுக்கு தேவையா ? என்று கேட்டு விட்டார்…
உங்கள் புத்தி மதிககே வரேன் “நல்ல பந்தியில் வாந்தி எடுத்துப்போல் தான் இருக்கும். தானும் சாப்பிட முடியாது மற்றவர்களும் சாப்பிட தயங்குவார்கள் ” என்பது போல் இருந்தது அவர் முதல் தலைப்பு .
நல்ல சாப்பாட்டை எல்லாம் தந்து விட்டு ,”தமிழனுக்கு தேவையா?” என்பது கொஞ்சம்…..அதிக பிரசங்கி தனமாக இருந்தது .
இதற்கும் நீங்களே பதிலை தமிழில் தந்துள்ளீர். “திருக்குறளில் அதிகாரம் 10 – இனியவை கூறல், அதிகாரம் 20 – பயனில சொல்லாமை , அதிகாரம் 21 – தீவிணையச்சம் படித்திருந்தால் திரு. போகராஜா அவர்களின் படைப்பைவிட அவரையும், தமிழறிஞர் முனைவர் திரு. சாலமன் பாப்பையாவையும் பற்றி தரகுறைவாக எழுதி இருக்க மாட்டார்கள். உங்கள் குறைபடி “பண்புக்காக” தமிழரின் உரிமையை விட்டுக கொடுக்க நான் தயாராக இல்லை … மன்னிக்கவும் !
சாலமன் பாப்பையா “வாங்க வந்து பழகுங்க பழகிட்டு போங்க” என்று ஒரு படத்தில் தன் மகளை சொன்னதை எந்த பண்பு என்ன பண்பாடு என்கிறீர்கள் வள்ளுவா?
திருக்குறளை ஒப்புவிப்பவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள் இல்லை என்பது என் வாதம். அதை மதியளவு போற்றி வாழ்கையில் கடை பிடித்து மக்களுக்கும் தன் இனதுக்கும் பயன் தர வேண்டும். உங்களுக்காக இந்த இரண்டு குறள்களை தருகிறேன் படிக்கவும் வள்ளுவரே !
மன நலம் மண் உயிர்க்கு ஆக்கம்
இன நலம் எல்லாப்புகழும் தரும்…. அடுத்து
மன நலம் நன்குடைராயுனும்
இன நலம் ஏமாப்பு உடைத்து
என்று பொருட்பாலில் “சிற்றினம் சேராமை ” அதாவது அறிவாலும், பண்பாலும், சொல்லாலும், செயலாலும் ,இழிந்தவராக கானப்படுவோரோடு சேராது இருத்தலே சிற்றினம் சேராமை ஆகும். என்று வள்ளுவர் சொல்லியுள்ளார். புரிந்தால் சரி இனி விளக்க விவாதம் வேண்டாம் ,வாழ்த்துகள் வள்ளுவர் ! தெளிவு பெறுவோம்.
அறம் செய்ய விரும்பு,அறத்துடன் தான் பேசுகிரோமா,இதற்கு தான் தரமானவர் கையில் சேர்கவேண்டும் என்பர்.குரங்கு கையில் கிடைத்த எந்த பொருளையும் பிய்து எறிந்து விடுமாம்.யாரோ முயற்சிக்கின்றனர் விடுங்கள்,ஆரம்பத்தே கிள்ளி விட்டால் எப்படி.வளர விடுங்கள்,காலத்திற்கு ஏற்ற சேவை.வாழ்க வலருக தொன்டு.ஒரு முறை ஓடிவிட்டீர்கள் ஆதலால் துரத்துகின்றனர்.நாம் எடுத்த முடிவை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு கொடுக்க கூடாது.தலயே போனாலும் தலைப்பை மாத்தியுறுக்க கூடாது.நாட்டாம தீர்ப்ப மாத்தாதே,வாழ்க நாராயண நாமம்.
காயீ நீங்கள் சொல்லுவது சரிதான். திருக்குறளில் இங்கு யாரும் பாண்டித்தியம் பெற்றிருக்கவில்லை. அப்படியே பாண்டித்தியம் பெற்றிருந்தால் நிச்சயமாக இந்தப் பகுதிக்கு அவர்கள் எழுத மாட்டார்கள். அவர்கள் இருக்கும் இடமே வேறு. யோகா, நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நல்லதைச் சொல்ல நினைக்கிறீர்கள். நல்லதைச் செய்வதற்கு நாலு பேரிடம் கேட்க வேண்டியதில்லை. நல்ல மனது தான் வேண்டும்.
மோகன்,பொன் ரங்கன்,தேனீ இன்னும் மற்றும் பலர் சிறந்த கவிஞர்கள்,போகராஜ் இதுவெல்லாம் ரேகிங் அதை காதில் வாங்காது எழுதும்.வேண்டியவர் பயன் பெறட்டும்,வாழ்க நாராயண நாமம்.
அதிகாரம் 2 – வான் சிறப்பு Athigaram 2 – Van Sirappu Thirukkural Chapter 2 – Eminance of Rain (Van Sirappu) திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு Category: திருக்குறள் திருக்குறள்
http://omtamil.tv/athigaram-2-van-sirappu/
திருக்குறள் ஒளியுரை வடிவில்
நன்றி, நன்றி ஓம்தமிழ், வளர்க, வாழ்க உங்கள் தொண்டு.
அதிகாரம் 2 – வான் சிறப்பு
Athigaram 2 – Van Sirappu Thirukkural
Chapter 2 – Eminance of Rain (Van Sirappu)
திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு
Category: திருக்குறள் திருக்குறள்
http://omtamil.tv/athigaram-2-van-sirappu/