அரசியலில் சுய ஆணவம் கூடாது! தலைவர்கள் சூழ் நிலை புரிந்து சுதாகரிக்க வேண்டும்.

அன்வார் PKR Ketua Umumaa அல்லது PK ketua Umumaa என்று யாரவது பதில் சொல்லுங்கள்? எது எப்படி இருந்தாலும் PKR தலைமை ஆலோசகர் PR உயர் மத்திய செயலவைக்கு தம் பிரேர்தனையயை கொண்டு செல்லாமல் PKR MB யை மாற்ற செய்த விதம் ,அறிவித்த விதம் சுய அரசியல் ஆணவ  போக்குதான்.

இதனால் PKR அன்வாரின் அரசியல் திறமைக்கும் PKR தலைவி அசிசாவுக்கும் “தகுதி இழுக்கு” உருவாகி உள்ளது மன்னிக்க முடியாது.

இப்போது பாஸ் ஆதரிக்க வில்லை. காரணம் MB எந்த தவறும் செய்ய வில்லை என்கிறது. இது சிலாங்கூர் அரசியல் அரசு நிலைத்தன்மையை பாதிக்கும் என்பதால் இன்னும் 3 ஆண்டுகளை PR கட்டுப்பாடுடன் நடைபோட வேண்டிய கட்டாயத்தில் மக்கள் நலன் கருதி பாஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

PKR ன் தேசிய உதவி தலைவருக்கு போட்டி இட்ட காலீட்/ அஸ்மின் /நுசுதின் ஆகியோரின் சிலாங்கூர் மாநில முடிவான ஒட்டு நிலைபாட்டை தெரிந்து காரணம் காட்டியிருந்தால் ஒரு வேலை ஓகே !

இதுவரை சிலாங்கூர் மாநிலத்தில் TSK முன்னிலையில் உள்ளார் என்பதும் கருத்தில் கணக்கில் வைக்க வேண்டும்.

PKR இன் முன்னாள் பொது செயலர் நுசுதின் சுமார் 7000 ஓட்டுகளை ஓட்டை போட்டு விட்டு குழப்பி  படிக்க லண்டன் போயி விட்டார். இல்லாவிட்டால் காலீட் வென்று இருப்பார்.  இந்த விபரீதம் யாரால் வந்த வினை என்பதும் PKR மக்களுக்கு தெரியும்.

இன்று சிலாங்கூர் மாநில அளவில் PKR இன் துணை தலைவருக்கு போட்டி இட்ட காலீடின் சிலாங்கூர் மாநில ரீதியில் கிடைத்த ஒட்டு என்ன என்று மக்கள் கேற்பதில் நியாயம் உண்டு. PKR தலைமையகம் சொல்லலாம் ஆனால் சொல்லாது. இதுவும் ஊமையன் கதைதான்.

சாபங்கில் விளக்கு அணைத்து எண்ணப்பட்ட கேஸ் நிறுவையில் உள்ளது இன்னும் மூன்று சாபங் முடிவுகள் தெரியவில்லை.அம்பாங் போட்டி நீதிமன்றம் ஏறி உள்ளது இதற்கிடையில் MB யை மாற்ற என்ன துடிப்பு ? அறிவு எங்கு போச்சி?

மிகவும் நீதி நழுவாதா வான் தலைவி இந்த அத்தான் விசியத்தில் MB விசியத்தில் இப்போதே கோளாறாய் போய் விட்டார். மாநிலம் என்ன ஆகும் . அரசியலில் ஆணவம் கூடாது அதே வேலை புருஷன் பொண்ட்டாட்டி மாநில அரசியல் அரசு கூடவே கூடாது என்பது அசிசவுக்கும் அன்வாருக்கும் விளங்க வில்லை என்று இல்லை ! இதுவும் செவிடன் கதைதான்.

மாநில மக்களும் ,நாட்டு மக்களும் அவ்வளவுக்கு ஊமைகளும், செவிடர்களும், PKR ,DAP YB இளிச்சான் வாய்களும் உள்ளனர்.

மலேசியா உலக வளையத்தில் வளரும் நாடு 2020 பாட்டியலை தொட இன்னும் 6 ஆண்டுகள் தாம் உள்ளது .1000 ஆண்டுகள் பின்னோக்கி பரமேஸ்வரன் காலம் பரமேஸ்வரி சாம்ராஜ குடும்ப அரசியலுக்கு PKR கொண்டு போவது மிக பலவீனமான “அரராஜாங்கம்”.என்பேன்.

பாசின் முடிவு நீதியானது, நியாமானது. அல்லாவுக்கு பயந்து மனிதம் அரசியலையும் அரசையும் காப்பாற்ற வேண்டும். தனி மனித வேட்டைக்கும் மக்களை குழப்பாமல் எடுத்து இருக்கும் முடிவு வரவேற்கதக்கது.

DAP இந்த முக்கிய விசியத்தில் ஆராயாமல் ஏனோ தானோ முடிவு கட்சியில் தரத்தை தாழ்த்தி உள்ளது. படிப்பாளிகள் ,பாட்டதாரிகள் இருக்கும் DAP கட்சியின் பதிவும் சட்ட சிக்கலும் தீரும் வரை அரசியல் வியூகங்கள் செய்வதை நிறுத்தி PR கு புத்துயிர் தர யோசிக்க வேண்டும்.

தெலுக் இந்தான் தேர்தல் முடிவுக்கு DAP யின் தோல்விக்கு எது காரணம் என்பதை விட்டு விட்டு யார் காரணம் என்று தீர்வை கண்டால் அடுத்த பொது தேர்தலும் அல்லது இடைத்தேர்தல்களும் சாதக விளைவைத்தரும் ! இதுவும் அரசியல் ஆணவ  சம்பந்தம் பட்டதுதான்.

PKR இல் இன்று மக்கள் நலம் பேணி நல்ல முடிவை செய்ய யாருமே இல்லை என்பதால் MB விசியத்தை விட்டு விட்டு கட்சியை பலப்படுத்த புதிய தலைவர்கள் தயாராவது காலத்தின் கட்டளையாகக்கொள்வோம்.
கைப்பற்ற காத்திருக்கும் BN கு வாய் திறக்காமல் மேலேயும் கீழையும் பொத்திக்கொண்டு நகர்ந்தால் நலமாக இருக்கும்.

குறிப்பா PKR கட்சி தேர்தலால் கஞ்சியாய் கருவாடாய் இருக்கும் நட்புகள் மீண்டும் உயிர் பெற வேண்டும் . பதவி வரும்போது பணிவு வர வேண்டும். பதவி இல்லாதவர்கள் கடமையை செய்து அரசியல்  இன உரிமை காக்க குரல் கொடுப்போம். –Pon Rangan