அரசியல் ஆடுகளத்தில் PKR அக்கப்போர்

pakatanதமிழக அரசியலில் நண்டு கொளுத்த கதியாய் வடிவேலு
நண்டு பொந்தில் கைவிட்ட நரியாய் இன்றுவரை அடிப்பட்டு
உண்மையான கோமாளியாய் திரிவது போல நம் நாட்டிலும் சில அர்ப்பனர்கள் அடி அடங்கும் காலம் வந்துவிட்டது.

அப்போது மகாதீர் செய்தது அரசியல் துரோகம் !
இப்போது அரசியல் அவமானம் !!..முன்ன்னது மகனுக்காக
பின்னது மனைவிக்காக!! நஜிப்பும் தன தம்பி ஹிஷமுக்காக.
முஹிடீன் படலம் ஆராமபம் …அரசியல் என்றால் முதலில் உறவுகள், பிறகு இனங்கள், ஜாதிகள் அதன் பின் மதம் அப்புறம் போராட்டம். கடைசியில் திண்டாட்டம்.

எல்லா மதமும் சம்மதம், எல்லா நீதியும் மனித நீதி ,சமூக நீதி ,மனித உரிமை என்பதெலாம் கட்சி கொள்கையில் ஓட்டாண்டி ஒட்டு மத்திரங்கள். கம்முக்கு அடியில் விசமிகள்.

மக்கள் கூட்டணி ..தேசிய  முன்னணி ..தோழமை கட்சிகள்… ஆதரவு கட்சிகள் எல்லாம் காசுக்கு அலையும் கபடங்கள். நிர்வாக திறமை அரசியல் மதி நுட்பம் ,நாடு மக்கள் எல்லாம் பொய்மை கூற்றவு ஏலங்கள்.  ஒரு தரம், இரண்டு தரம், முன்று தரம் டிங் டிங் டிங்! ஓகே அபேஸ்!

ஒரு MB தவறு செய்து இருந்தால் சட்டத்துக்குள் நிறுத்தி தண்டனை தருவது ஒரு அரசின் வேலை. அல்லது தலைவனின் கடமை. சொம்மா பூச்சாண்டி, பேச்சாண்டி எல்லாம் கடந்து விட்ட காலம் இது.

மரியாதைக்கு மௌனம் கொள்வது அது நாகரீகம் வேறு …அந்த மௌனத்தை அரசியல் சுய விளைச்சலுக்கு அறுவடை செய்த காலம் போச்சி அண்ணே? இப்போ ஆமாம் சாமிகள் இல்லை எல்லோரும் Pakatan vowsசுவாமிகள். சுண்ணாம்பு தடவி விடுவார்கள் என்பது சிலாங்கூர் அரசியலில் உண்மையாகிவிட்டது .

மேடை போட்டு மாபெரும் சபையில் நீ நடந்தாய் உனக்கு மாலைகள் விழுந்தது மாசு குறைந்து ,குறைத்து நீ நடக்கையில் உன் மவுசு மதிகெட்டு விட்டதோ?

சிலாங்கூர் மாநிலமும் மக்களும்  நல்லாத்தானே இருக்காங்க ..இடையில் ஏன் நண்டு வருது, பாம்பு வருது, செய்யான் வருது, வான் வருது என்று சொம்மா கிடந்த இரும்பா தூக்கி குத்திக்கிட்டு நோவுது  என்றால் உன்னை எந்த பட்டியல் போடலாம்?

உன் மெண்டல் சரி இல்லை என்று மகாதீர் செய்தது சரிதான் என்ற எல்லைக்கு வந்து விட்டாய்.மிஞ்சி நிற்பது தாவி பிடிக்க ஒரு கயிறு, பிடித்து விட்டால் அடுத்த சுவர். தவறிவிட்டால் மண்.

நீ செய்வதுக்கு எல்லாம் ஒரு பெர்சே இருந்தது அதையும் கழற்றினாய்?
ரேபோர்மசி இருந்தது அதுவும் டிபோம்  ஜுரைடாவும்  சேவியரும் மூன்றாம் தர ப்ரெஸ் மீட் அட்டகாசம் அபுகாசம் தெருவில் நிக்குது. இது என்ன அரசியால்.??

அரசியல் ஆடுகளம் சதுரங்கத்தில் வீசிய பந்தை தானே பொறுக்கும் நிலை என்பது பைத்தியம் செய்யும் வேலை. மாநிலம் தேர்தலுக்கு ரெடியாகி  விட்டதாம் ..PKR ஜெயித்தால் பாகாதனுக்கு வேலை இல்லையேல் கீழே ! இந்த அடி ரபிசி சொல்வது போல PR கொள்கையில் ஒரு தற்கொலை எனலாம். PR   மக்களின் உழைப்பு தப்பான த்ண்டலால் மம்முட்டிய எடுத்து காலை கொத்திக்கொண்டது போல உள்ளது.இனி நடப்பதும் நடக்காததும் தொண்டர்கள் தொல்லை.

நீதியின் விளையாட்டில் நீதி தேவதையின் நெற்றிக்கண் களங்கப்பட்டு உள்ளது அது கண்ணீர் வடிக்குமா தண்ணீர் சிந்துமா என்பதை மக்கள் மனசாட்சிகளிடம் விட்டு விடுவோம்.

Pon Rangan