சிலாங்கூர் இடைத்தேர்தலை சந்திக்க மலேசியா அரசியல் கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை ! என்ன காரணம்?
கடந்த ஒரு மாதமாக கயிறு இழுக்கும் சிலாங்கூர் மாநில அரசியல் விளையாட்டில் முற்றுப்புள்ளி வைக்க இடைதேர்தல் அல்லது snap திடீர் தேர்தல் அல்லது படார் தேர்தலை வைத்துக்கொள்ள நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு துணிச்சல் இல்லை.
பிரதம துறை அமச்சர் புதிதாய் போன மாஹ சொல்கிறார் 50 மில்லியன் பிடிக்கும் தேவை இல்லாத செலவு என்று. நமது நாட்டு ஜனநாயகம் செழிக்க மக்கள் குரல் ஒலிக்க 50 மில்லியன் ஒரு தடை என்றால் இந்நாட்டுக்கு அரசியல் ஜனநாயக உரிமை ஜப்சிக்கு சமம்.
காரணம் சிலாங்கூர் மாநில சட்ட மன்ற பங்கீடு கட்சி ரீதியில் எந்த தனி கட்சியும் பெரும்பான்மையில் இல்லை. BN 12 PKR 13 பாஸ் 14 DAP 15
2 இரண்டு சுயேட்சைகள். இவைகளை தனித்தனியே பார்த்தால் மாநில அதிக பட்ச ஆளுமை எதுக்கும் இல்லை எனலாம்.
பாகாதானில் பதிவில்லா வசதி அரசியல் திருமணம் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் எபதுபோல இன்று மீண்டும் ஒரு மறுதிருமணம் நடந்துள்ளது.
நடப்பில் உள்ள மாப்பிள்ளை புதிய கட்சி, புதிய மணமகளை பார்க்கலாம் என்ற பம்பர சுற்றல் துவங்கி உள்ளது? ஆக PKR உடையும் சூழலில் காலீத் எல்லா 56 தொகுதிகளிலும் ஆளை இறக்கினால் பாக்காதானின் இன்றைய புகழ்ச்சிக்கு புகைமூட்டம் மக்களை திணற செய்து சும்மா இருந்த சங்கு அல்லது ஊதாங்குழலை ஊதி கெடுத்த நிலையில் மரண ஊர்வலம் வரலாம்.
சிலாங்கூர் பாமர மக்கள் பல வேளைகளில் அரசியல் வாதிகளின் திருகுதாளங்களை தெரியாமல் வட்டார வாத்துகளின் அரசியல் கூச்சலுக்கு கொடாப்பு ஏறி கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று “எபபடியாச்சும்”போங்கடா என்று வாகுகளை வீசிவிடுவது வழக்கம்.
கால் தவறினால் கரணம் என்பது போல சிலாங்கூரில் இடைதேர்தல் வரலாம் என்பது பல அறிவாளிகளின் நிசப்தம். அதில் BN தலைவர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் ஒன்றும் கூட. பால் ருசிகண்ட பூனை சொம்மா இருக்காது அதுக்கு 50 மில்லியன் மக்கள் வரிப்பணம் ஒரு பொருட்டே இல்லை ! எத்தனையோ கடன்களில் இதுவும் ஒரு turnaround capitalization தொழில் தான்.
BN தலைவியர் சொன்னால…………….கேற்பார் /கள்…என்ற நம்பிக்கையில் இடைதேர்தல் வந்தால் BN ரெடி! TS அவர்களும் அதே 50 மில்லியன் ஒரு தடை அல்ல!
இதில் பிச்சை எடுக்க யோசிப்பது மற்ற இரு வெங்காய வேங்கைகள் தான ! முந்தியாசும் TS இருந்தார் ,இப்போது அதுவும் இல்லடா நொள்ளைக்கண்ணா கதைதான்.
இது ஒரு கற்பனை கதையாக கூட நீங்கள் படிக்கலாம். இதன் சுவாரீசியம் என்ன என்றால். மலேசியா அரசியல் குடும்ப கதையால்
அஸ்ட்ரோ சீரியல் இப்போ சீரியஸா போவது வேடிக்கைதான்.
சமயங்களில் தமிழ் நாட்டு அரசியல் தனம் பூந்துவிட்டதோ என்று
சிரிப்பா வருது….ஆனாலும் அதையும் மிஞ்சி அத்தானும் மனைவியும் பூச்சாண்டி அரசியல் அதற்கு ஓட்டசு வீசும் DAPPA கட்சியும் PASANGU பவித்திரமும் ” உடுட்டை ” மறந்து “சரியாவை” துறந்து ஒத்தாசிதனம் விசித்திரம்தான்.
சரி இப்போது அந்த துணிச்சல் சங்கதிக்கு வரேன்!
காலீத் TS புதிய கட்சியோடு கோதாவில் இறங்கினால் இரண்டு முனை மூன்றாக PKR DAP PAS வோட்டுகள் தலா 30 % சிதறும் வாய்ப்பு உண்டு.
இதில் பொதுத்தேர்தல் வர 3 ஆண்டுகள்தாம் உள்ளது BN னிடம் வசமாகி பழைய ரிபேர்களை சரி செய்ய தெலுக் இந்தான் போல நேரம் பார்த்து பட்டம் திசை மாறி கோட்டைக்கு போனாலும் நியாயங்கள் நிறுவிக்கு ஆதாரமாக போகலாம்.
சிலாங்கூர் மக்கள் சல்லாப காதல் காரணமாக TS கு தொடர வாய்ப்பு தந்தாலும் மிகை இல்லை. காரணம் அவருக்கு இளைத்த காஜாங் காற்று இப்போதைக்கு ஓட்டை பலூனாய் புஷ் என்று தோய்ந்து விட்டது.
திருவிழா வழுக்கு மர போட்டி ஞாபகத்துக்கு வருது…பண முடிச்சி உச்சியில் இருக்கும். வழுக்கு மரம் ஏற தாங்கி பிடிக்க இரண்டு தடியங்களாவது கிழே நிற்பாணுங்க ! அதுபோல வழுக்கி வழுக்கி ஏறும் நிலையில் சிலாங்கூர் மாநில நிர்வாகம் பல ஓட்டைகளால் எலிகள் புகுந்து சுரண்டலுக்கு ஆளகும்போல தெரியுது.
அரசு ,அரசியல் ,சுல்தான் முடிவு என்னமோ நமக்கு தெரியாது.
ஆனால் களைப்புதான் சரியான ஜனநாயக விமோர்சனம் .
காரணம் அரசியல் அடவாடிகள் சுய நல கொட்டம் அடங்க
வேண்டும். உண்மைகள் ஊமையாக ஊசல் ஆடுவது இந்த நாகரீக காலத்தில் அநியாயம்தான்.
இதெல்லாம் அரசியலில் சகஜமென்றால் அரசியல் பண்பு மலர இன்னும் 100 ஆண்டுகள் தேவை 2020 வது ஒரு பூஜ்யமே !
– பொன் ரங்கன்
இந்த அரசியல் சண்டையினால் சிலாங்கூர் இந்தியர்களுக்கு என்ன லாபம் என்று கொஞ்சம் விலாவாரியாகச் சொல்லுங்களேன். நமக்கு லாபம் இல்லையென்றால் நாம் ஏன் கடித்துக் கொள்ள வேண்டும்?
அதிகம் சொல்ல வேண்டாம். பாரிசான், குறிப்பாக அம்னோ ஏன் செலாங்கொர் விவகாரத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டிக்கொண்டிருக்கிறது என்று ஒருகணம் சிந்திப்பீர். மக்களின் முடிவுதானே என்று இன்னும் மூன்றாண்டுகள்
பொருத்திருக்கலாமல்லவா?? செட்டி, காரணமில்லாமல் ஆற்றை இறக்கமாட்டான் என்று என் தத்தா சொன்னது ஞாபகம் வருது….
காஜாங் இடைதேர்தல் நடக்காமல் இருந்தால்,தண்ணீர் விவகாரத்தில் ஆலோசனை கொடுத்திருந்தால் லங்ஙாட்2,அங்கீகரிக்க போவதில்லை காலீட்,அன்வருக்கும் வழக்கு சுமுகமாக நடந்திருக்கும்,எல்லாவற்றிர்கும் காரணம் அன்வரே.விடுங்கள் மூன்று வருடம் தானே பொருத்திருக்க முடியாதோ.பிரச்சனை சுல்தான் வரை சென்று,எக்ஸ்கோவை வெளியேற்றம்,பிரச்சனை ஆர்.ஓ.எஸ்,வரை சென்று பின் கடையை இழுத்துமூடவா.வெளிநாடு சென்ற சுல்தான் வந்து காலீட்டே எம்.பி சொன்னால் காரணம் வான் அசீசாவை ஏற்கனவே நிராகரித்தும் மீண்டும் கொண்டு வந்து நிறுத்துவதால்.பி.ஆரில் எவறுக்கும் அன்வருக்கு அறிவுறை கூற தகுதி இல்லையோ,இது தான் அன்வரின் அரசியல் தந்திரமோ,முன்பு பி.என்,னை துரத்தினீர் இன்று அவன் உம்மை துரத்துகிறான்.அன்வர் சா சா ஆகிவிட்டான்,ராவணணும்,அன்வரும் பெண்ணால் அவதிக்குல்லானர்.அன்வர் பொய்காரன்,பேய் தான் பொய் சொல்லும்.நாராயண நாராயண.
‘நமது நாட்டு ஜனநாயகம் செழிக்க மக்கள் குரல் ஒலிக்க 50 மில்லியன் ஒரு தடை என்றால் இந்நாட்டுக்கு அரசியல் ஜனநாயக உரிமை ஜப்சிக்கு சமம்’.இதைப் படிக்க எனக்கு சிரிப்பு அடக்க முடியலே…எவனாது ‘-_சு’ விட்டா கூட இடைத் தேர்தலும் திடீர் தேர்தலும் கேட்பீர்களோ..? நடப்பதபென்ன..? பேராக்கில் நடந்தது போல சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியது அல்ல.அல்ல…இது ஒரு சின்னப் பிரச்சினை…கையாலாகாத சின்னபிள்ளை ஆட்சியை கவிழ்க்க செய்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதுக்கு ஏன் திடீர் சிலாங்கூரில் தேர்தல்? அந்த 50 மில்லியனை இந்த மாநிலத்தில் வாழும் ஏழைகளுக்கு உதவிசெய்யலாம்…சாலைகளை பராமரிக்கலாம்…குப்பைகளை சுத்தப் படுத்தலாம்…பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவலாம்..என்று கருத்து சொல்லாமல் ஏன் அதைக் கொண்டுபோய் ஆற்றில் கொட்டச் சொல்கிறீர்கள்?
பொன் ரங்கன் TS சார்பில் ஒரு கட்சியில் இணைந்து அம்பங்க் நிற்பர் என்று தெரிகிறது …..என்ன பொன் சரியா என் கணிப்பு….
TSKI புதிய கட்சி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் அவரே வெற்றி பெற முடியாது.இதில் நம்ப அண்ணன் பொன் ரெங்கன் வேற வேட்பலரா போட்டியிட்டால் வெற்றியா ?……………………….. தோல்வியா ?………………………………………. பொறுத்திருந்து பார்ப்போம்.அரசியலில் வெற்றி பெற போராட்டம் மட்டும் போதாது, விவேகமும், சாணக்கியமும் கண்டிப்பாக தேவை.மேற்கண்ட இரண்டும் தோழர் பொன் ரேங்கனிடம் இருக்கா என்று தெரிய வில்லை.TSKI அவர்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகிறார் என்று தெரிய வில்லை.தோழர் பொன் ரெங்கனை கண்டு நான் பரிதவப்படுகிறேன்.தோழர் சற்று அமைதியாக இருக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
காலீட்டுக்கு வாதாடினால் நஷ்டம் கிடையாது,ஆனால் ஓரின புனர்ச்சி வழக்கில் தன்டிக்கப்பட்ட ஒருவனை ஆதரிப்பதே வினோதமாக இருக்கிறது.இந்திய சமுதாயத்தின் ஒழுக்கத்தை கேள்வி குறியாக்கிவிட்டது.நாராயண நாராயண.