காயின் கருத்துகள் அர்த்தமற்றவை – தமிழன்

Periyaarதிராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.

அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது  ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.

இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.

உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால்  உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?

காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு  சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.

தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான்  பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.

அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி  தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,

ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.

பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட  தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.

இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.

இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?

பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை.   ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?