திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.
அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.
இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.
உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால் உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?
காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.
தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான் பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.
அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,
ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.
பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.
இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.
இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?
பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை. ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?
தமிழ் மக்கள் சிறிலங்காவில் வீணாய் மடிந்தபோது அன்றைய முதல்வர் கருணாநிதிக்கு சாமரம் வீசிய பக்கிதானே சீமான் ? குருவை போலதான் சிஷ்யன்..
காய் இப்படி மருண்டு உளருதே? எம் பிள்ளைகள் அனைவரும் படித்தது தமிழ் பள்ளியிலே. படித்ததை முழுமையாக நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் உளறுவது ஏனோ?. ஏன் காய் திராவிடம் என்றால் இப்படி பயப்டுகின்றார்?. ஒரு பக்கம் தன் மானத் தமிழனின் கூட்டம் திராவிடத்தில் தமிழர் அல்லாதவரை சேர்க்காதீர்கள் என்று கூக்குரல் இடுகின்றது. இன்னொரு பக்கம், கையின் கூட்டம் ஏன் “தமிழரை ஏன் திராவிடர் என்று மாற்றவேண்டும்” என்று கூக்குரல் இடுகின்றது. இப்படி ‘திராவிடம்’ யாருக்குச் சொந்தம் என்று தெரியாமலேயே இரண்டு கூட்டமும் கூக்குரலிட்டு என்ன பயன்?. ஏதாவது ஒரு தீர்க்கமான முடிவுக்கு வாருங்கள்.
தேனீ “அரம்” – மாகி விட்டேன் என்று வாழ்த்துரை கூறியதற்கு நன்றி. அரம் என்றால் சிவம் என்று ஒரு பொருளும் உண்டு என்பதை காய் அறியாமல் சொல்லி விட்டார் போலும்!
காய் தாங்கள் எல்லா பிள்ளைகளையும் தமிழில் படிக்க வைத்ததற்கு தங்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி நவில்கின்றோம்.
தமிழனுக்கு தமிழன் என்ற அடையாளம் இருக்கும் போது ஏன் திராவிடர் என்ற அடையாளம் ? விளக்கி சொல்வாரா நமது தேனீ ? விளக்கம் சொன்னால் அவர் திருட்டு திராவிடரே !
“திராவிடர்” என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று பொன் ரங்கன் எழுதிய கடித/கட்டுரை பகுதியில் குறிப்பிட்டிருந்தேன். அதன் மூலம் வேதத்தில் தென் இந்தியர்களை பொதுவாக “திராவிட்” என்றே குறித்து இழிக்கப்படிருந்தது. படித்துப் பாருங்கள். திராவிடர் கொள்கை எழுந்த காலத்தில் இன்றுபோல் தெலுங்கர், மலையாளி, கன்னடர், தமிழர் என்று வெளிப்படையாக தென் இந்தியர்கள் வெட்டிக் கொண்டு வீராகதியாகவில்லை. மேலும் அந்நாளில் மெட்ராசில் ஆந்திர மக்கள் தமிழர்களை விட அதிகமாகவே வாழ்ந்து வந்தனர். திராவிட கொள்கை தென் இந்தியாவில் பொதுவாகவும், தமிழ் நாட்டில் குறிப்பாகவும்/சிறப்பாகவும் பரவலாக ஏற்றுக் கொள்ளப் படவேண்டும் என்றால் அக்கொள்கை தென் இந்தியர்கள் அனைவரையும் அரவணைத்துப் போக வேண்டும். இல்லையேல், எந்தக் கொள்கையானாலும் அது சப்பானியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும். திராவிடம் தமிழர்களுக்கு மட்டும் என்று எடுத்திருந்தால் இக்கொள்கையை கையில் எடுத்த பெரியாரே இதனுள் இருந்திருக்க முடியாதே. இதற்க்கு உதாரணமாக மலேசியாவில் உருவாகிய ‘ஹின்றாப்ட் இயக்கம்’ தமிழர்களை மட்டுமே முன்னிறுத்திப் பேசியது. அதனாலேயே, மலேசிய தெலுங்கு வம்சாவளி மக்களும் இதில் ஈடுபாட்டைக் காட்டவில்லை, கணபதிராவைத் தவிர. எந்த தமிழன் செத்தால் நமக்கென்ன என்று ஒதுங்கி இருந்தார்கள். இந்த ஹின்றப்ட் முறிந்து போவதர்க்குக் காரணம், கமுண்டிங் தடுப்பு முகாமிலேயே இதன் தலைவர்கள் ஒருவரை ஒருவர் நம்பத் தயாராக இல்லை. எவ்வளவு சுலபமாக தேசிய முன்னணியின் உளவுப் படை இவர்களைப் பிரித்து சின்னாப் பின்னமாக்கியது தெரிந்ததுதானே. ஹின்றாப்ட் போன்ற ‘ஓர் இன’ வாதத்தை முன் வைக்காமல் அனைத்து தென் இந்தியர்களையும் “திராவிடன்” என்ற பெயர் பட்டியலில் சேர்த்து கையாண்ட அரசியல் இராஜதந்திரம்/சாணக்கியம் படிக்காத மேதை பெரியாருக்கே உரியது. இன்று திராவிட இயக்கங்கள் தமிழ் நாட்டில் பார்ப்பனியத்தை ஒடுக்குவதில் வெற்றிக் கண்டன. ஆனால் ஆந்திராவிலும், கர்நாடாக்காவிலும், கேரளத்திலும் அம்மாநிலத்தில் வாழும் தாழ்த்தபட்ட மக்கள் பார்ப்பனியத்தின் கிடிக்கி பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல், எழுந்து எதிர்க்க திராணி இல்லாமல் வீழ்ந்தே உள்ளனர். கொஞ்சம் அந்த மாநிலங்களின் நிலையைக் கண்டறிந்து விட்டு வந்துப் பேசுங்கள். திராவிட கழகத்தாரால் தமிழர் தலை தப்பியது. ஆனால், இன்றைய தமிழகத்து நிலையோ, ‘முதலை வாயில் இருந்து தப்பித்து சிங்கத்தின் வாயில் மாட்டிக் கொண்ட’ கதையாகி விட்டது. திராவிடத்தைப் பயன்படுத்தி எவனெவனோ அரசியல் இலாபமும், பணபலமும் தேட ஆரம்பித்து விட்டான். தற்கால நிலையில் தமிழன் முன்னெடுத்து அடி வைக்க மற்றுமொரு மாற்றுச் சிந்தனை தேவைப் படுகின்றது. முடிந்தால் இக்கருத்துக் களத்தில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் அனைவரும் இந்த மாற்றுச் சிந்தனையைப் பற்றிப் பேசலாம். ஒருகால் நம் கருத்துக் களமே உலகத் தமிழருக்கு விடி வெள்ளியாகக் கூட அமையலாம். அந்த பெருமை செம்பருத்திக்கே உரியதாகவும் ஆகலாம்.
அறிவு எப்படிப்பட்டது? அது அற்றங் காக்கும் கருவி என்று சொன்ன வள்ளுவர் , அந்த அறிவைக் குறித்துச் சொல்லும்போது , “நன்றின்பால் உய்ப்பது அறிவு” என்றும், “மெய்ப் பொருள் காண்பதறிவு ” என்றும், “நுண் பொருள் காண்பதறிவு ” என்றும், “உலகத்தோடு அவ்வ துறைவது அறிவு ” என்றும், “அஞ்சுவதற்கு அஞ்சல் அறிவார் தொழில் ” என்றும், “அறிவுடையார் எல்லாம் உடையார் “என்றும் சொன்னார் . கடைசியாக உயர்ந்தோரிடம் நட்பு கொண்டு அந்த நட்பு என்றும் ஒரே சீராக மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு என்று தன் இனத்தானுக்கும் உலகத்தானுக்கும் வழி காட்டுகிறார் வள்ளுவர். எதுவெல்லாம் அறிவாகும், எதுவெல்லாம் அறிவில்லை என்று ஒதுக்கப்பட வேண்டும் என்று சொன்ன பகுத்தறிவாளருக்கும், மெய்யறிவைப் புகட்டிய வள்ளுவனுக்கும் நன்றி! வாழ்க எம்மவர் தாய்த்தமிழ்! வளர்க தமிழர் தம் வாழ்வு!
தேனீ அவர்களே… ஆரஞ்சு எனும் திராவிடத்தில் சுளைகளாக தமிழும் மற்ற ஒரு தாய் மொழிகளும் இருக்கின்றன. சுளைகள் பிரிக்கப்பட்டு தனித் தனியாக வைக்கப்பட்டுள்ளன. சுளைகள் “நாங்கள் ஆரஞ்சு ” அல்ல என்றால் அறிவு ஏற்றுக்கொள்ளுமா? ஆரஞ்சில் தமிழும் ஓர் அங்கமல்லவா? மற்ற சக மொழிக்கார மனிதர்களுக்கு திராவிடர் எனும் அடிப்படை அறிவு , உணர்வு இல்லை என்றால் அது அவர்களின் அறியாமையே ஆகும். அதை தமிழர்களாகிய நாமும் செய்வது அறிவுடமையாகுமா?
அவர்கள் ஏன் திராவிடர் என்று சொல்லத் தயங்குகிறார்கள்? ஆரிய அகராதியில் திராவிடன் என்றால் சூத்திரன். சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளை,குரங்குகள். இதை எதிர்க்கும் ஆண்மையற்றதுகள் தங்களை திராவிடன் என்று காட்டிக்கொள்ள வெட்கப்பட்டுத் தங்களை பிரித்து உணர்வற்று விளித்துக்கொள்கின்றனர். தமிழர்களோ ஆரியத்தின் ஆணவத்தை அடக்க , நாங்கள் திராவிட நாட்டை ஆண்டவர்கள். திராவிட நாடு எங்களின் பூர்வீகம். நாங்கள் திராவிடத் தமிழர்கள் என்று போராடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப் போராடும் நம்மை சக திராவிட இனத்தவனே ஆரியனைப்போலவே நம்மைத் தாழ்வாகப் பார்க்கிறான். ஆனால் திராவிடத்தின் மாண்பினை இன்னும் உயிருள்ள காலம்வரைக்கும் போராடி காக்கவேண்டிய முக்கிய கடப்பாட்டில் தமிழினம் உள்ளது. இந்து என்று மற்றவர்கள் விளித்து எப்படி அப் பெயர் ஏற்பட்டதோ அவ்வாறே நாம் கட்டியாண்ட திருவிடத்தை ஆரியன் திராவிட நாடு என்று விழித்தான். அது சுமார் 6000 ஆண்டளவில் பதிவாகியது ஆரிய நூல்களிலே!
திராவிடன் கருத்து தமிழர் நந்தாவுக்கு தக்க பதிலை கொடுத்துள்ளது. இதற்கு மேலும் விளக்கம் தேவை இல்லை.
தேனீ அவர்களே நாங்கள் தமிழர்கள் ! எங்கள் சமயம் சைவ சமயம் ! இதில் தமிழன் திராவிடன் என்று சொல்லிக்கொண்டால் என்ன பயன் ? தமிழர்கள் இந்து மதம் சார்ந்து ஆரியனுக்கு அடிமையாக இருப்பது உண்மையே ! வெறும் 5000 ஆண்டு ஆரியனின் வரலாறு ! எங்களுக்கு 20,000,00 ஆண்டு வரலாறு இருக்கிறது ! 60 ஆண்டு திருட்டு திராவிட வரலாறுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீரே தேனீ ! இதில் திருட்டு திராவிடனுக்கு வக்காலத்து ! ஆமாம் நீங்களும் திருட்டு திராவிடர்தானே !
ஒழுக்கம் தான் புகழ் பெற வழி.அந்த ஒழுக்கத்தை கண்டு வுனர கல்வியே மூலம்.கல்வி பெறாதவனுக்கு ஒழுக்கம் வராது,ஒழுக்கம் வராதவனுக்கு புகழ் வாய்க்காது.எல்லா ஒழுக்கத்தையும் மீறிய ஒருவனை எப்படி மக்கள் வழிகாட்டியாக கொள்கின்றனர் தெரியவில்லை.ஒழுக்கமற்ற திராவிடர் சூத்திரனே.தைபூசத்தன்று நடந்த ஒழுங்கின்மை திராவிடமா,ஆண்மீகமா.ஐ.எஸ்.ஏ,மற்றும் ஹசூத்தான் சட்டமின்றி பி.ஆர்,ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை வழிநடத்த முடியாது.ஆகயால் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் கல்வியே அவசியம்.வாழ்க நாராயண நாமம்.
எவறுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ அவர் ஆலயம் வரட்டும்,இறை நம்பிக்கை அற்றவரை எவரையும் கட்டாயபடுத்தவில்லை.ஆண்மீகம் ஒழுக்கத்தையே முதலாக கொண்டது.எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதற்கு எதிரானது ஆண்மீகம் இப்படித்தான் வாழவேண்டும் யென்று போதிக்கிறது.வாழ்க நாராயண நாமம்.
நன் தமிழன் என்பதில் தெளிவாக இருகின்றேன். திராவிடம் என்பது ஒரு கொள்கை. அதைனை பின் பற்றுபவர்கள் தங்களை அறிமுகபடுத்த ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த அமைப்புக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த அமைப்பினரின் கொள்கை தமிழ் நாட்டில் தோன்றி தமிழர்களை பார்ப்பனியத்தில் இருந்து மீட்டது. அதுவரையில் அவர்களின் கொள்கை எமக்கு ஏற்புடையதே. பகுத்தறிவைக் கொண்டு தமிழர்கள் வாழுங்கள் என்பதும் எமக்கு ஏற்புடையதே. நல்லதை ஏற்ப்போம். தேவை அற்றதை நீக்குவோம். இது அவரவர் தனி நபர் உரிமை.
ஒழுக்கம் முக்கியமா அல்லது பகுத்தரிவு முக்கியமா.ஒருவன் சிறு கிராமத்துக்கு பசும் பால் வினியோகித்து வருகிறான்.பின் அவன் மகனும் தந்தைக்கு பின் பிதுர் தொழிலை செய்கிறான்,காரணம் நேர்மை.பின் மூண்றாம் தலைமுறை கல்வி கற்றுவிடில் அதற்கேற்ற வேலை நிச்சயம் கொடுப்பர் காரணம் நேர்மை,ஒழுக்கம்.இங்கே பலர் தொழிலதிபராக இருக்கலாம்,நேர்மை,ஒழுக்கம்,அடக்கம் கொண்ட தொழிலாள்களையே விரும்புவர்.பகுத்தரிவாலனுக்கு வேலை கிடைக்குமா,நிஜ வாழ்கைக்கு வந்து பகிரவும்,பயன் பெறும் மக்கள்,வாழ்க நாராயண நாமம்.
அண்ணாச்சி, ஒழுக்கத்தைப்பற்றி நீங்கள் கேள்வி எழுப்புவது மனத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. நாராயண நாமம் என்று உச்சரிக்கின்ற உங்கள் வாயால் சாராயண நாமத்தையும் உச்சரிக்கிறீர்கள். இப்போது ஒழுக்கமா, பகுத்தறிவா என்கிறீர்கள். மேலே படித்தவரை பகுத்தறிவாதிகள் தான் ஒழுக்கத்தோடு எழுதுகிறார்கள். என் ஓட்டு ஒழுக்கத்துக்குத்தான்!
பகுத்தறிவில்லாமல் ஒழுக்கம் வருமா?. சிந்திக்காமல் கருத்து எழுதி எங்கள் பிராணனை வாங்க வேண்டாம்.
ஒரு மலையாள கிறித்துவர், ஒரு மலையாள இஸ்லாமியர், மலையாள இந்து போன்ற மதவாதிகளும்,ஒரு மலையாள மார்க்ஸிஸ்ட்,காங்கிரஸ்,பி ஜே பி. போன்ற அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்,தங்களை முதலில் மலையாளிகள் என்ற மொழி,இன அடயாளமாகவே கொள்கிறார்கள்.அது மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட ஈழவரோ,அல்லது நாயர்,மேனன்,நம்பியார் என அனைவரும் மலயாளிகளாகதான் உணர்கிறார்கள். மேலும் கேரளாவச் சேர்ந்த உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மலையாள மொழியினராகவும், மலையாள இனமாகவும் காட்டிக் கொள்கின்றனர் இதனை முல்லைபெரியாறு பிரச்சினயில் கண்கூடாக கண்டோம்.
இது போன்றே ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலும் காண்கிறோம்.சாதிகளற்ற தமிழ்ச் சமூகமாக தமிழால் ஒன்றிணைக்க தமிழர்களால் தான் முடியும் .ஒரு காலத்தில் சாதிகளற்ற சமூகமாகவே தமிழ்ச்சமூகம் இருந்தது. வடுக வந்தேறிகளின் அரசுகளால் தான் சாதி இறுக்கம் அடைந்த்தது. கிருட்டிண தேவராயர் தான் இஸ்லாமியர்களிடம் இருந்து இந்து சனாதனத்தை காப்பதாகக் கூறி தமிழ்நாட்டை அடிமைப்படுத்தினார்.அவரின் வாரிசுகள் தான் திராவிடம் என்றபோர்வையில் சனாதன தர்மத்தின் பிடியில் இருந்து தமிழர்களைக் காக்க போராடுவதாக நடித்து மீண்டும் கிருட்டிண தேவராயரின் ஆட்சியை , விசால ஆந்திராவை (அவர்கள் சொல்லும் விசால ஆந்திரம் என்பது பாஞ்சாலங்குறிச்சி வரை)ஆண்டுகொண்டிருக்கிறார்கள்.நாம் தமிழால் ஒன்று பட்டால் அவர்களின் ஆட்சி தகர்ந்துவிடும். ஆகவேதான் திராவிடர்கள் ஓலமிடுகின்றனர்.ஓப்பாரி வைக்கின்றனர்,அரற்றுகின்றனர். அதைப்பற்றி நாம் கவலைகொள்ளாமல் நம் தமிழால் ஒன்றுபடுவோம்
ஆப்ரஹம் விமர்சனத்தை ஏற்போம்.ஆதலால் தெய்வத்தின் வழியில் செல்பவர் கோழை என்று முடிவு செய்துவிடாதீர்.அடிக்கு அடி பதிலுக்கு பதில் கொடுத்தால் தான் நீண்ட பயணம் செய்யமுடியும்.பத்துப்பேறோடு ஜால்ரா போடுவதுவேறு துணிந்து உண்மைக்கு பேசுவது வேறு.யாம் சமுக தொண்டன் அல்ல,தீர்க தரிசியும் அல்ல.திராவிடன் ஈ.வெ.ர.நாய்கண் தமிழ் துரோகி,தமிழ் மொழியை காட்டுமிறாண்டி மொழியென்று அறிமுகம் செய்தவன்,அதைவிட கேவலம் தமிழரை வைத்துக்கொண்டு செய்தது,தெழுங்கு மொழியை சொல்லியிறுப்பின்,உயிரோடு எரித்திருப்பர்.ஆப்ரஹம் சிந்தித்ததுண்டா.இனத்தின் மீது கர்வம் வேண்டும்,உரிமை வேண்டும்,பாசம் வேண்டும்,அன்பு வேண்டும் அப்போது தான் அது தழைக்கும்.இல்லையேல் காலத்தில் மறைந்துவிடும்.மெய்ட்டிடம் சிறு குழந்தையை விட்டு செல்கின்றீர் அதுபோல பணத்தையும் தங்க நகைகளையும் விட்டு செல்வாயா கேட்டால்,மாட்டேன் என்கின்றனர்.இவள் தான் பரிவுள்ள தாய்,அதுபோலவே தமிழ் மொழியின் நிலை,நாராயண நாராயண.
அப்படியென்றால் ஸ்ரீலங்காவில் புத்த பிக்குகள் செய்தது நியாயம் என்று சொல்ல வருகிறீர்களா? அவர்கள் தானே தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விட்டவர்கள். நண்பா! ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் போல தேவர், கவுண்டர். முதலியார் போன்றவர்கள் எல்லாம் கடவுள் பெயரால் ஒரு பகுதி தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மாடமாளிகளில் இருந்து கொண்டு ஆந்தைக்கண் கொண்டு வேடிக்கைப் பார்த்ததினால் தானே இவ்வளவு பிரச்சனைகளும். இந்தப் பிரச்சனை நீங்கள் கையில் எடுத்திருந்தால் பெரியாருக்கு வேலையே இருந்திருக்காதே! அப்போது நீங்கள் ஒளிந்து கொண்டதினால் தானே அண்டை அயலார்களின் வேதனைகளைத் தெருவை சுற்றிகொண்டிருந்த அவரின் நாய் கண்களுக்கு அகப்பட்டது.அங்கு அவர் தன்னை ஒரு மனிதானாகத் தானே பார்த்தார். அவரிடம் மனிதம் இருந்தது. உங்களின் ஆந்தைக் கண்களுக்கோ பூனைக்கண்களுக்கொ மனிதம் இருந்ததாகத் தெரியவில்லையே! மனிதம் இல்லையென்றால் அங்கு தெய்வம் இல்லையே!
ஒரு கூட்டம் கடலில் மீன் பிடித்து சமைத்து சாப்பிட்டு கொண்டிறுந்ததை சிறுவன் ஒருவன் வெகுநேரம் ஒழிந்து பார்த்திருந்ததை கவணித்த கூட்டத்தில் ஒருவர் அச்சிறுவனை அழைத்து சமைத்த மீன் கொடுத்தார் ஆனால் சிறுவனோ வேண்டாம் சொல்லி மீன் பிடிக்க கற்றுத்தர முடியுமா கேட்டு கற்றுக் கொண்டான்.மகாதீர் போப் ஐஸ் விற்றவர்,கே.ப்.சி,கதை தெரியுமா.ஈ.வெ.ர.நாய்கண் நீங்கள் பரிவுக்கொண்ட மக்களை கீழ் சாதியாக தானே அடையாலம் காட்டிணான்.இது எப்படி பெறுமையாகும்.ப்ராமணர் கல்வியை மாத்திரம் தானே தகுதியாக வைத்தனர்.நீங்கள் உங்கள் பெண் பிள்ளையை சேமித்த பணத்தை செலவழித்து மருத்துவபடிப்பு படிக்கவைத்து ஒரு படிப்பே இல்லாத முட்டாலுக்கு வீடே இல்லாத பரதேசிக்கு,போதை பித்தர் போன்றோறுக்கு கல்யாணம் செய்துவைப்பீரா மகள் காதலித்துவிட்டால் என்பதற்கு.சார் எல்லோறும் கை நிறை சம்பாரிக்கின்றனர் ஆனால் மதுவுக்கு செலவு செய்கின்றனர் ஆண்,பெண்.தென் நாட்டுக்கு போய் பாருங்கள் அதாவது கிராமம் கிராமமாய் செல்லும் பேறுந்தில் போய் வாருங்கள்.அந்த மக்களின் மன அமைப்பு வேறு நம் மன அமைப்பு வேறு.மலேசிய திருடன் கட்டிப்போட்டு திருடுவான் ஆனால் சபா காரண் கொண்றுவிட்டு திருடுவான்.வாழ்க நாராயண நாமம்.
ஒரு பளூ படத்தில் எதை எதைக் காட்டுவார்களோ அதையெல்லாம் சிலை வடித்து கடவுள் பெயரைச் சொல்லி வணங்கும் கோவிலில் வைத்திருக்கும் கேடு கெட்ட ஆபாச மதத்திற்குச் சொந்தக்காரப் பாவிகள் பெரியாரைச் சாடுவதற்கு என்ன தகுதி உள்ளது? கோவிலில் ஒரே ஆபாசமயமான சிலைகளப் பாத்தேன். சிறு பிள்ளைகளயும் அங்கே கூட்டிக்கொண்டு சாமி கும்பிடப்போகும் அசிங்கத்தைப் பார்த்தேன். வள்ளுவனை மதிக்கிற தமிழனுக்கு ஆரியனின் இந்த ஆபாசங்களைக் கலை எனும் பெயரில் காட்டும் ஆரிய மதம் தேவையா? ” தி ஆர்ட் ஆப் இந்தியன் டெம்பள்ஸ் ” எனும் ஆங்கில புத்தகம் நூலகத்தில் பார்க்கலாம். வலைத் தளத்திலும் இந்த ஆபாசங்களைக் காணலாம். இதைப்பற்றியெல்லாம் இந்த வருத்தப்படாத ஆரிய சங்கம் வாய் திறக்காது. ஆரியனுக்குப் பெரியார் ஆப்படித்துத் தமிழனுக்கு பார்பனியத்தின் ஆபாசத்தைப் படம்பிடித்து காட்டிவிட்டார் எனும் வயிற்றெரிச்சலில் ஒன்று பைத்தியம் பிடித்து வெகு நாட்களாய் கத்திக்கொண்டும் , தமிழனின் கவனத்தைத் திசைத்திருப்பவும் திரும்பத் திரும்ப ஒரே பொய்யைச் இந்தச் செம்பருத்தியில் சொல்லி ஓப்பாரி வைக்கிறது. இந்த பொய்யனுக்கும் சிலதுகள் தமிழன் எனும் போர்வையில் வெண்சாமரம் வீசுகின்றன.
தமிழரைக் குழப்பும் சக்திகள் எவை எவை என்பதில் நாம் கண்ணும் கருத்துமாய் இருக்கவேண்டும்.தமிழ் இனமாகத் திரள்வதை அணைபோட்டுத்தடுப்பதில் திராவிட சக்திகள் இந்த நொடிவரை வெற்றிபெற்றேவருகிறது.
தமிழரே,யாம் எதையோ அம்பலப்படுத்த நினைப்பதும் முயல்வதும் நீங்கள் அதை மழுப்பும் விதமாக ஏதோ நடக்கிறது என்பது பலறுக்கு தெரியும்.அவன் அயோக்கியன்,80 வயதில் கல்யாணம் தேவையா,19 வயதில் முதல் திருமணம்,இரண்டாம் திருமணம் 80 வயதில்,பேத்திக்கு சமம்,ஆதி துவங்கி அந்தம் வறை ஒழுக்கமற்ற வாழ்கை வேண்டாம் வக்காலத்து,நாராயண நாராயண.
தன்மான தமிழன் ஏன் அரட்டுகிர்றார் , மக்கள் தெளிவடைந்து வருவதைகண்டா ,இல்லை வேசங்கள் களைவது கண்டா ,உண்மைகள் இருக்கும் வரை என்றும் திராவிடத்திற்கு வெற்றிகள் நிலை கொண்டிருக்கும் , தந்தை பெரியாரின் பாதையில் என்றும்
காய் தனது ஆச்சாரம் தெரியாமல், சாக்கடையில் மிதந்து கொண்டு தர்பணம் செய்வது ஏனோ ,தாங்கள் சாக்கடையில் மிதந்தாலும் தெளிந்த திராவிட நீரோடையில் தங்கள் சாக்கடையை அகற்றுவோமே ,காய் மனத்தில் என்றும் பெரியார் ,கனவிலும் பெரியார் ,வாழ்க்கை முழுவதும் பெரியார் ,தூங்கும் பெரியார் உண்ணும் போதும் பெரியார் ,வாழ்க்கையே பெரியார் ,பெரியார் , பெரியார் ,இதுதான் பெரியார் .
காய் தனது ஆச்சாரம் தெரியாமல் ,சாக்கடையில் மிதந்து கொண்டு தர்பணம் செய்வது ஏனோ ,தாங்கள் சாக்கடையில் மிதந்தாலும் ,தெளிந்த திராவிட நீரோடையில் தாங்கள் சாக்கடையை அகற்றுவோமே ,காய் மனதில் என்றும் பெரியார் ,கனவிலும் பெரியார் ,நினைவிலும் பெரியார் ,வாழ்க்கை முழுவதும் பெரியார் ,தூங்கும் போதும் பெரியார் ,உண்ணும் போதும் பெரியார் , வாழ்க்கையே பெரியார் ,பெரியார் , பெரியார் , இதுதான் பெரியார் ,
பெரியார் தமிழரைத்தானே திட்டினார். அது ஒரு தந்தையின் அறிவுரை என்று நாங்கள் எடுத்துக் கொள்கின்றோம். பெரியார் தமிழைத்தானே காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார். அதை நாங்கள் செம்மொழியாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் சொன்னதாக எடுத்துக் கொள்கின்றோம். இவையால் தமிழரல்லாத தெலுங்கு வம்சாவளியான கைய்க்கு எவ்வித பாதிப்பும் இல்லையே?. அப்புறம் ஏன் இங்கு வந்து பெரியாரைப் பற்றிய புலம்பல்?. தமிழ் நாட்டில் பார்பநீசம் ஒடுங்க பெரியார் பாடுபட்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக அவரை வைவதில் இருந்து கையீ இங்கு தமிழருக்காக பேசவில்லை பார்பநீசத்திர்க்காகவே வக்காலத்து வாங்குகின்றார் என்பது வெள்ளிடைமலை. மென்மேலும் தாகத வார்த்தைகளால் தமிழனிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது உமது தலைவிதியோ?. ஒரு மாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். உண்மையிலேயே உமக்கு சூடு சொரனை என்று ஏதாவது உண்டு என்றால் தயவு செய்து வகைத் தெரியாமல் இப்பகுதியில் மேலும் கருத்து எழுதி உம் மூஞ்சியில் கரியைப் பூசிக் கொள்ள வேண்டாம். இருக்கின்ற கொஞ்ச நஞ்ச மரியாதையாவது காப்பாறிக் கொள்ள கற்றுக் கொள்ளவும்.
காயீ உமக்கு இன்னும் 80 வயது ஆகவில்லை. அதனால் உனக்குப் பெரியாரின் நிலை புரியாது. நான்கூட ஆரம்பத்தில் பெரியாரின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள மனமின்றியே இருந்தேன் பேரறிஞர் அண்ணாவைப்போல. முதுமை நிலை அடைந்து நோய்கள் படையெடுக்கும்போது அண்ணா பெரியாரின் சூழ்நிலையை உணர்ந்து தன்னுடைய தவறான எண்ணத்திற்காக பெரியாரிடமும் மணியம்மையிடமும் மன்னிப்பு கேட்டுக்கொண்டதாகச் செய்தி. அவ்வாறே நானும் இப்போது உணர்கிறேன். எண்பது வயதில் காமமாவது கண்றாவியாவது எதுவும் இல்லை. இந்த முதிர்வயதில் தான் காமத்திற்காக திருமணம் செய்யவில்லை என்றார். மூத்திரப்பையைச் சுமந்துகொண்டு தமிழகமெங்கும் பயனித்து பகுத்தறிவு பிரச்சாரம் செய்த பெரியாரை இவ்வளவு குறைத்து மதிப்பிட காயீக்கு எப்படித்தான் மனசாட்சி இயங்கியதோ தெரியவில்லை. தமிழினத்திற்குத் துரோகமிளைத்தவர்களை, அயோக்கியர்களைச் சாடிய பெரியாரையே ” அயோக்கியன்” என்கிறாய். உன்னை வாயாட விட்டு விட்டு நன்றிகெட்ட தமிழினம் வேடிக்கை பார்ப்பது இருக்கிறதே இதைவிட பெரிய அயோக்கியத்தனம் எதுவாக இருக்கமுடியும்? அன்பர் தேனீ,உதயகுமார், தம்பி திராவிடன் ,ஆபிரஹாம், இன்னும் சில நன்றியுணர்வு உள்ளவர்களைத் தவிர. யாருமே இல்லையா? ஏ… தாழ்ந்த தமிழகமே.. தூங்கு! நன்கு தூங்கு! முக்காடிட்டு தூங்கு! இன்னும் ஒரு பெரியார் வரும் வரை தூங்கு!
இன்னொரு மூடன் சொல்வதை மீண்டும் கேட்டு தலையாட்டும் செம்மறி கூட்டம் மறுபடியுமா ? பெரியார் சொன்னார் ; அண்ணா சொன்னார் ; தலைவர் சொன்னார் என ஒரு குறுகிய வட்டத்தில் மாட்டி கொண்டு..மேலேயும் போக முடியாமல் – கீழேயும் இறங்க இயலாமல் அரைகுறையாக வாழ்வது ஒரு வாழ்வா ?
இந்து தர்மனே…. இங்கே வந்து பெரியாரின் வழியில் வாழ்க்கையைப் பாரும். பெரிய புதிய காரும் வசதியான வீடும், சொந்த வியாபாரமும் வைத்துக்கொண்டு பகுத்தறவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். வீட்டிலே ஒரு பெரிய நூல்நிலையம்.அங்கே தமிழ்,மலாய்மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன. நீர் நினைப்பதைப்போல் மேலேயும் போக முடியாமலும் கீழேயும் இறங்கமுடியாமலும் அரைகுறை வாழ்க்கையைப் பெரியாரின் பகுத்தறிவாளன் வாழவில்லை,வாழவும் மாட்டான். நீர் என்ன எங்களை அம்புலிமாமா கதை படித்து பத்திரிகைகளுக்கு துண்டு காகிதத்தில் கேள்வி பதில் பகுதியில் கேள்வி எழுதிவிட்டு பதில் வருமோ வராதோ என காத்திருக்கும் கத்துக்குட்டிகள் என்று நினைத்துவிட்டீரோ? நாங்கள் ஒன்றும் ஆரியக் கூத்தாடிக்கொண்டு ஐயனே கதியென்றும் பஞ்சாங்கமே வாழ்க்கை என்று கதியாய் கிடக்கும் ஈனப்பேர்வழிகள் அல்லர் என்பதை உணரும்.
யாம் கூறுவது ஒழுக்ககேட்டை,ஆணவம் அடுப்படையில் அரங்கேறிய செயல்கள்.மூத்திரபையை தாங்க ஒரு பெண்ணின் வாழ்கை பழியா தோழரே.நீங்கள் உங்களின் மகளை தியாகம் செய்வீரா.இது தான் பெண் விடுதலையா,பெண் சுதந்திரமா.ஈ.வெ.ர.நாய்கண் தேடித்தந்த கீழ் வர்கம் அடையாளத்தை பெறுமையாக சூட்டசொன்னால் தவிர்ப்பது,ஏழை மக்களை கீழ் சாதியாகவே முத்திரை குத்தியதை பெறுமை கொள்வது.எல்லாம் அவனைபோலவே முறன்பாடாக உள்ளது.திராவிடம் தேவையற்றது.யாமும் பகுத்தரிந்து தான் வினவுகின்றேன்,புரிந்துக்கொள்ளும்.2ம் கல்யாணம் பலர் எதிர்ப்பை மீறியே நிகழ்ந்ததாக கேள்வி.நாராயண நாராயண.
முறையான… இருவருமே சம்மதித்து நடந்த பதிவுத் திருமணம். பலரின் எதிர்ப்பு என்பது தேவையற்றது. அவரவரின் திருமணத்தை அவரவர்தான் தீர்மானிக்க வேண்டுமேயன்றி நீங்களோ நானோ அல்லது வெளியாரோ முடிவு செய்ய இயலாது சட்டப்பூர்வமானது இல்லை என்றால் அரசு அதை அனுமதித்திருக்காதே? இதில் என்ன ஒழுக்கக் கேடு உள்ளதென்று எனக்குப் புரியவில்லை. வயது பொருத்தமில்லா மணம் என்பது உண்மைதான். ஆனால் இது அந்தப் பெண்ணின் முழு சம்மதத்துடன் நடந்ததோடு மட்டுமல்ல காமத்தையோ அல்லது மகப்பேற்றிற்காகவோ நடக்காமல் ஒரு தலைவனுக்கு உடல்ரீதியிலான பலவீனத்தில் உதவுவதற்காக அந்தப் பெண்ணால் ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை தியாகம் செய்தவரால் நடந்த மணம். மற்றப்படி தங்களால் திராவிடத்தையோ அல்லது பெரியாரையோ ஏற்றுக்கொள்ளும்படி நானோ ,என் கருத்திற்கு ஒத்தக் கருத்துள்ளவர்களோ அல்லது பெரியாரோ கட்டாயப்படுத்துபவர்களல்லர். அப்படி கட்டாயப்படுத்தி எங்களின் கருத்தை திணிப்பதை வெறுப்பவர்கள் நாங்கள்.உங்கள் கருத்தை நீங்கள் நாகரிகமாக வெளிப்படுத்தினால் … அதில் எது தவறாக உணரப்பட்டுள்ளது என்று நாங்கள் கருதுவதற்கு மட்டுமே மாற்றுக் கருத்தைப் பதிவிடுவோமேயன்றி பொழுதுபோக்கிற்காகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ பதிவிடுவதில்லை. நன்றி!
வயோதிகம் வந்துவிட்டால் இழம் பெண் அவசியமோ.உங்கள் கருத்து ஏற்புடயதைக இல்லை,அறிவுக்கு எட்டாதவை,பொருந்தாதவை.நெர்சிங் தொண்டை சேவையை அனுகியிறுப்பதுதானே.த்யாகமா,கல்யாணமா இரண்டிற்கும் நிறைய வித்தியாசம்.தொன்டரை எவறும் தனதாக்கிக் கொள்ளமாட்டார்.அப்படி நடந்திருப்பின் அதற்குபெயர் அத்துமீரல் என்று பொருள்.வாழ்க நாராயண நாமம்.
மணியம்மையார்
http://ta.wikipedia.org/s/23qq
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈ.வெ. இரா. மணியம்மையார்
Maniammai.jpg
வேறு பெயர்(கள்): காந்திமதி
அரசியல்மணி
பிறப்பு: மார்ச் 10, 1920
பிறந்த இடம்: வேலூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: மார்ச் 16, 1978 (அகவை 58)
இறந்த இடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இயக்கம்: சுயமரியாதை இயக்கம்
முக்கிய அமைப்புகள்: திராவிடர் கழகம்
மதம்: இறை மறுப்பாளர்
Influences பெரியார் ஈ. வெ. இரா
மணியம்மையார் என அறியப்பட்ட அரசியல்மணி, திராவிடர் கழகத்தின் தலைவர் பெரியார் ஈ. வெ. இரா.வின் இரண்டாவது மனைவி ஆவார். பெரியாரின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவராக இருந்தவர். சொற்பொழிவாளர்; எழுத்தாளர்.
பொருளடக்கம் [மறை]
1 இளமைக் காலம்
2 பெரியார் தொண்டர்
3 பெரியாரோடு திருமணம்
4 சொற்பொழிவாளர்
5 எழுத்தாளர்
6 களப்பணியும் சிறைவாழ்வும்
7 நிர்வாகி
8 மறைவு
9 சான்றடைவு
10 வெளி இணைப்புகள்
இளமைக் காலம்[தொகு]
மணியம்மை, வேலூரில் வாழ்ந்த சுயமரியாதை இயக்கத் தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் 1920ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 10ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காந்திமதி என்பதாகும்.[1] அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான அண்ணல்தங்கோ, இவருக்கு அரசியல்மணி எனப் பெயர்சூட்டினார்.[2] அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.
பெரியார் தொண்டர்[தொகு]
பெரியார்
பெரியார், “எல்லோரும் தூர இருந்தபடி உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள். ஆனால் கூட இருந்து உதவிசெய்ய யாரும் இல்லை. என்னமோ என் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன்” என வேலூர் கனகசபைக்கு 1943ஆம் ஆண்டில் கடிதம் எழுதினார். அக்கடிதத்தைப் படித்த கனகசபை தனக்கு மகளான அரசியல்மணியை அழைத்துவந்து, “இந்தப் பெண் உங்கள்கூட இருந்து, உங்களைப் பார்த்துக்கொள்வார்” எனக் கூறி விட்டுச்சென்றார்.[3] அதன் பின்னர், பெரியார்தம் அணுக்கத் தொண்டராக இருந்து அவருக்குத் தேவையான உதவிகளை அரசியல்மணி செய்து வந்தார். அப்பொழுதிலிருந்து திராவிடர் கழகத்தினர் அவரை மணியம்மை என அழைக்கத் தொடங்கினார்.
பெரியாரோடு திருமணம்[தொகு]
பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது. ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்; ஈரோடு வீட்டைவிட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்; பெரியாரோடு கருத்துவேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக்கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார். எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி – மணியம்மை திருமணம் நடந்தது. [4] இதனால் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திராவிடர் கழக முன்னணித் தலைவர்களில் சிலரும் தொண்டர்கள் பலரும் பிரிந்து சென்று 1949 – செப்டம்பர் 17ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். இத்திருமணத்தால் மணியம்மை பல்வேறு வசவுகளுக்கு ஆளானார்.
சொற்பொழிவாளர்[தொகு]
மணியம்மையார் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு
1944ஆம் ஆண்டில் சேலத்தில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் தன்னுடைய முதற் சொற்பொழிவை நிகழ்த்தினார்.[5] அதன் பின்னர் தன்னுடைய இறுதிக்காலம் வரை சுயமரியாதை மாநாடு, திராவிடர் கழக மாநாடு, திராவிட மகளிர் மாநாடு உள்ளிட்ட பல கூட்டங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அவருடைய சொற்பொழிவுகளில் சில, அம்மா பேசுகிறார் என்னும் தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.
எழுத்தாளர்[தொகு]
மணியம்மையார் எழுதிய நூல்
தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்ற மணியம்மையார் எழுத்தாற்றல் பெற்றவராகவும் விளங்கினார். 1944ஆம் ஆண்டில் குடியரசு இதழில் இரண்டும் ஒன்றே என்னும் தலைப்பில் கந்தபுராணத்தையும்இராமாயணத்தையும் ஒப்பாய்வு செய்து கட்டுரை எழுதினார்.[5] இது தவிர திராவிடர் கழகத்தின் அறிக்கைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதினார். அவை குடியரசு, விடுதலை, உண்மை ஆகிய இதழ்களில் வெளிவந்தன.
மேலும் பெரியாரின் மேடைப்பேச்சுகளைக் குறிப்பெடுத்து கட்டுரைகளாக ஆக்கித் திராவிடர் கழக இதழ்களில் வெளியிட்டார். நூல்களாக அச்சிட்டுப் பரப்பினார்.[4]
களப்பணியும் சிறைவாழ்வும்[தொகு]
பெரியார்தம் அணுக்கத் தொண்டராகவும் மனைவியாகவும் அவர் சென்ற இடங்களுக்கு எல்லாம் உடன் சென்ற மணியம்மையார், பெரியாரைக் கவனித்துக் கொள்வதோடு களப்பணியிலும் ஈடுபட்டார்.
1948ஆம் ஆண்டில் குடந்தையில் அரசின் தடைச் சட்டத்தை மீறிச் செயற்பட்டு மூன்று திங்கள் சிறையில் இருந்தார்.[5]
1949ஆம் ஆண்டில் நடந்த இராண்டாவது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது, சென்னையில் இந்தி எதிர்ப்பு மறியலை முன்னின்று நடத்தினார்.[5]
“இளந்தமிழா புறப்படு போருக்கு” என்னும் கட்டுரை 1958- சனவரி 19ஆம் நாள் விடுதலை இதழில் வெளிவந்தது. அக்கட்டுரையை வெளியிட்டதற்காக, அவ்விதழின் பதிப்பாளரான மணியம்மையார் கைது செய்யப்பட்டு ஒரு திங்கள் காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.[6]
1974 – ஏப்ரல் 4ஆம் நாள் இழிவு ஒழிப்புக் கிளர்ச்சி, தமிழகம் முழுவதும் இருந்த அஞ்சலகங்களின் முன்னர் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. சென்னையில் நடந்த கிளர்ச்சிக்கு மணியம்மையார் தலைமை தாங்கினார்.[7]
தில்லியில் இராமலீலை நடத்தி இராவணன் உருவத்தைக் கொளுத்தும் நிகழ்ச்சியில் இந்தியாவின் அன்றைய குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமதுவும் இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தியும் கலந்துகொள்ளக் கூடாதென 1974 – அக்டோபர் 26ஆம் நாள் மணியம்மையார் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டனர். அதனைக் கண்டிக்கும் வகையில் 1974 – திசம்பர் – 25ஆம் நாள் சென்னையில் இராவணன் லீலை திராவிடர் கழகத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. மணியம்மையார் அக்கொண்டாட்டத்திற்குத் தலைமை வகித்தார். இராமன், சீதை, இலக்குவன் உருவங்களை அவர் தீயிட்டுக் கொளுத்தினார்.[8]
1976 – சனவரி – 31ஆம் நாள் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையின் பொழுது மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[9]
1977 – அக்டோபர் 30ஆம் நாள் சென்னைக்கு வருகைதந்த அன்றைய இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மணியம்மையார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[10]
பெரியாரும் மணியம்மையாரும் காப்பகக் குழந்தைகளுடன்
நிர்வாகி[தொகு]
பெரியார் வாழ்ந்த காலத்தில் அவர் திருச்சி நகரில் உருவாக்கிய கல்வி நிறுவனங்களையும் குழந்தைகள் காப்பகத்தையும் மணியம்மையார் திறம்பட நிர்வகித்தார்.[11]
பெரியாரின் மறைவிற்குப் பின்னர் திராவிடர் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்று பல்வேறு போராட்டங்களை நடத்தினார். கட்டுக்கோப்பு சிதைந்துவிடாமல் அதனைக் காத்தார். மேலும் அவ்வியக்கத்தின் துணை அமைப்புகளையும் திறம்பட நிர்வகித்தார்.
மறைவு[தொகு]
1974ஆம் ஆண்டிலிருந்த உடல்நலம் குன்றியிருந்த மணியம்மையார், 1978 – மார்ச் 3ஆம் நாள் மரணமடைந்தார்.[10]
பெரியாரை சல்லாப கண்களில் பார்த்து சகடையாய்ப் போன காய் ,புரோகிதம் கொண்டு மாற்றார் மனைவியை முதலில் இந்திரனுக்குப் படைக்கும் புரோகிதம் அல்லவே ,நயங்கள் கொண்டு நயவஞ்சகம் சுமக்கும் காய் ,பொட்டுக்கட்டி தேவதாசிகளை பார்த்தவர்களுக்கு ,தேவதாசி ஒழிப்பை கொண்டவரை எங்கே தெரியப்போகின்றது , மேலேப்படியும் , மணியம்மை என்ற பகுத்தறிவின் சிந்தையாளின் போராட்டத்தின் பாதையை பார் ,சல்லாப கண்கள் கொண்டு அல்ல பகுத்தறியும் அகம் கொண்டுபார் , நிர்வாணத்தை மட்டுமே நினைப்பவர்களுக்கு ,மற்றவர்கள் வெகுமானம் எங்கே தெரியப்போகின்றது ,பண்பாடில்லா படிப்பு இருந்தென்ன பயன் ,மிருக மாமிசம் திங்காமல் இருந்தால் மட்டும் போதுமா , தர்பப்புல்லை கைகளில் எடுத்து சல்லாப மனம் ஏனோ ,மனங்கள் ,மனங்களாக இருக்கட்டும் மாசாய் மாறவேண்டாமே. பகுத்தறிவு பகலவனின் பாதையில் என்றும் .
என்னே ஜாலம்,ஒரு தகப்பன் தன் 29 வயது மகளை,ஒரு ஆணுக்கு துணையாக விட்டு செல்கிறான் அதையும் சாதகமாக பயன்படுத்தி தன்னுடன் வைத்துக்கொள்பவன் மணிதனா.ஓரு ஆண் தொண்டன் கிடைக்கவில்லையோ.அந்த பெண்ணின் வாழ்கை பயனற்றுபோனதே.1943-1949,ஆறுவருடம் திருமணம் நடத்தாது ஒரு பெண்ணுடன் சேர்ந்து வாழ்வது சரியா,ஒழுக்கமா,ஏற்புடயதா,இதுதான் பகுத்தரிவா..தொன்டுக்கு வந்த பெண்ணை சொந்தமாக்கிக் கொள்பவன் தலைவனா,நம்ம பிரேமணந்தா சாமியார்போல்.பேத்தி வயது பெண்ணையா.ஒரு ஒழுக்கமாணவனாய் இருந்தால் புத்திமதி சொல்லி அனுப்பி இருக்க வேண்டும்.அப்பனே கூட்டி கொடுக்கையில் வேறு யாறை கேட்க வேண்டும்.நல்ல இயக்கம்டா உங்கள் இயக்கம்…உங்க பகுத்தரிவு எனக்கு ரொம்ப புடிச்சிறுக்குடா உதயா,,,.நாராயண நாராயண.
தொண்டர் விட்டுப் பிறியும் அலவுக்கு பெண் மோகம்.கட்சியா,காதலியா கேட்டால்,கட்சியே என்பர் சிறந்த தலைவர்.அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும்.அதாவது,அறவழியில் உறுதியானவனாகவும்,பொருள் வகையில் நாணயமானவனாகவும்,இன்பம் தேடி மயங்காதவனாகவும்,தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஓரு பணிக்கு அமர்த்த வேண்டும் என்கிறது ஸ்ரீ வல்லுவம்.தெரிந்து தெளிதலில் குறிப்பின்படி பார்க்கயில் எந்த ஒழுக்கமும் அற்றவன் ஈ.வெ.ர.நாய்கண்,.வாழ்க நாராயண நாமம்.
அப்படி போடு கையீ ! ஆரம்பத்திலேயே உங்களைபோல ஒருவர் நாத்திக நல்லவர்களுக்கு பதிலடி கொடுத்து இருந்தால் கூஜா தூக்கிகள் ஓடிஇருப்பார்கள்…நாராயண நாராயண …
அறத்தின் பால் கண்ணுக்கு தெரியவில்லை ,பொருள் பால் கண்ணுக்கு தெரியவில்லை ,இன்பத்தின் பால் கண்ணுக்கு தெரியவில்லை, ஆனால் காமத்தின் பால் மட்டும் கண்களுக்கு தெரியும் காய் ,ஓ அவர்தான் நாராயணக் காயோ,ராமனை கண்ணுக்கு தெரியா காய் , நாராயணன் கண்ணுக்கு தெரியா காய் ஆனால் ஆயர்பாடிக் கண்ணனை மட்டும் கண்களில் வைத்திருக்கும் காய் , ஓ அவர்தான் தங்கள் கண்களுக்கு ஆயர்பாடிக் கண்ணனாக தெரியும் பெரியார் என்ற அவதாரியோ , பெற்றவளைக் கூட பிணாமாய்ப் போனால் வீதியில் வைக்கும் கூட்டமடா ,பிரேமானந்தாவின் லீலைகள் கண்களுக்கு தெரிவது நியாயமடா ,ஆனால் திராவிடமா இல்லை இந்துத்துவா வா என்று தெரியாமல் போனதடா இதற்கு இந்து தர்மம் வேறு சாட்சியடா , அந்த ஆயர்பாடிக் கண்ணனின் அவதாரியாக தந்தை பெரியாரை பார்த்துக் கொண்டிருக்கும் காய், அவர்தான் காய் ,பார்க்க வைத்த திராவிடம் ,பேசவைத்த திராவிடம் அதுதாணடா திராவிடம் . அந்த ஆயர்பாடிக் கண்ணனாக[ தந்தை பெரியாரை ]இனி நாமும் பார்ப்போமே .
அறத்தின் பால் கண்ணுக்கு தெரியவில்லை ,பொருள் பால் கண்ணுக்கு தெரியவில்லை ,இன்பத்தின் பால் கண்ணுக்கு தெரியவில்லை, ஆனால் காமத்தின் பால் மட்டும் கண்களுக்கு தெரியும் காய் ,ஓ அவர்தான் நாராயணக் காயோ,ராமனை கண்ணுக்கு தெரியா காய் , நாராயணன் கண்ணுக்கு தெரியா காய் ஆனால் ஆயர்பாடிக் கண்ணனை மட்டும் கண்களில் வைத்திருக்கும் காய் , ஓ அவர்தான் தங்கள் கண்களுக்கு ஆயர்பாடிக் கண்ணனாக தெரியும் பெரியார் என்ற அவதாரியோ , பெற்றவளைக் கூட பிணாமாய்ப் போனால் வீதியில் வைக்கும் கூட்டமடா ,பிரேமானந்தாவின் லீலைகள் கண்களுக்கு தெரிவது நியாயமடா ,ஆனால் திராவிடமா இல்லை இந்துத்துவா வா என்று தெரியாமல் போனதடா இதற்கு இந்து தர்மம் வேறு சாட்சியடா , அந்த ஆயர்பாடிக் கண்ணனின் அவதாரியாக தந்தை பெரியாரை பார்த்துக் கொண்டிருக்கும் காய்டா , அவர்தான் காய்டா ,பார்க்க வைத்த திராவிடமடா ,பேசவைத்த திராவிடமடா ,அதுதாணடா திராவிடம் . அந்த ஆயர்பாடிக் கண்ணனாக[ தந்தை பெரியாரை ]இனி நாமும் பார்ப்போமே .
இங்கு அனாவசியமாக வாக்குவாதம் பண்ணும் சிலர் — உண்மையிலேயே சந்தித்து சிந்தனை பரிமாற்றம் செய்வது நலம். யாரும் ஏது வேண்டுமானாலும் கூறலாம்– ஆனால் சிலர் சொல்வது பகுத்தறிவுக்கு ஒவ்வாது. அதனால் சந்தித்து விவாதிக்கலாமே?
எழுதுவதில் உள்ள ஆர்வமும் அவசரமும் கருத்தை உள்வாங்கிக்கொள்வதில் இல்லை என்பதும், பதிவிடுவதில் தமிழர்தம் நாகரிகம் காக்கப்பட வேண்டும் என்பதில் காணப்படும் அலட்சியப் போக்கும் , இன்று தமிழ்நாட்டில் ஆளும் கட்சியினர் நடத்தும் காட்டு தர்பாரைப் பார்க்கும் போது அந்த குணம் தமிழினம் இந்த உலகத்தில் எங்கிருந்தாலும் இந்த தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பிறவி குணமாக இருக்குமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
ஒரு இனம் தன்னுடைய செயல்பாட்டின் வாயிலாகவே அது பண்பாட்டில் உயந்த இனமா அல்லது வீழ்ச்சியுற்ற இனமா என்று முடிவு செய்யப்படும். ஒரு காலத்தில் பண்பாட்டின் உச்சியில் இருந்த தமிழினத்தைப் பற்றிய சான்றுகள் இலக்கியத்திலே காணக் கிடக்கின்றன. ஆனால் இன்றுள்ள தமிழர்களின் வாழ்க்கை அந்தப் பண்பாட்டை நாகரிகத்தைப் பிரதிபளிப்பதாக இல்லை. இந்த இனத்தவர்களா அன்று வாழ்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்கள் என்று நம்ப முடியாமல் முகம் சுளிக்கின்றனர். பேச்சில்,எழுத்தில், நடத்தையில் அன்று வாழ்ந்த தமிழினத்தின் பண்பாட்டுக்கூறுகளின் பிரதிபளிப்பைக் கொஞ்சம்கூடக் காணமுடியவில்லையே என பண்பாட்டு ஆய்வாளர்களைக் திகைப்பிலாழ்த்தும் ஒரு இழிநிலையைக் காணமுடிகிறது.
மற்ற இனத்தவர்களிடம் அடங்கிப்போவதிலும் அவர்களிடம் பவிசாகப் பல்லலைக் காட்டுவதிலும் இதமாக நடந்துகொண்டு நடிப்பதிலும் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டும் தமிழினம் சொந்த இனத்தானைக் கண்டால் சீறிப் பாய்வதும் சகோதரத்துவத்தை மறந்து எதிரியாக நடத்துவதும், ஏமாற்றுவதும், ஏய்ப்பதும், நம்பிக்கை துரோகம் புரிவதும், சாதி சொல்லி கேவலமாக நடத்துவதும், அரசியலில் கொள்ளையடிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதும், இனநலனா அல்லது சுயநலனா என்று வரும்போது சுயநலவாதியாக மாறி தீவிரமாக செயல்படுவதும்,கொச்சை வார்த்தைகளையும் பச்சையாக பொதுவிடங்களிலும் குடும்பத்திலும் பேசுவதும் இன்று தமிழர்களிடையே சர்வசாதாரனமாகப் பார்க்கக்கூடிய வகையிலே இருப்பதைக் காணலாம்.
தன் சாதிக்கார ஆட்களைச் சேர்த்துக்கொண்டு அரசியல் கட்சியின் கிளைகளை உருவாக்கி அவர்களுக்குள்ளேயே ஒரு சாதி சங்கமாக அரசியல் கட்சியை வழிநடத்துவதும், தன் சாதிக்காரனையும் அடிஆட்களையும் பணத்தைக் கொடுத்து பக்கபலமாக வைத்துக்கொண்டு கேவலமான அரசியல் பண்ணுவதும் அநாகரிகத்தின் உச்சம் எனலாம்.
தன் இனத்தவனை அழிப்பதற்கும், அவனை வேரோடு களையெடுப்பதற்கும் தமிழினத்தவனைத் தூக்கி நிறுத்தப்போகும் காவலனைப்போல் மேடைதோறும் முழக்கமிடுவதும், அதற்காக வேலைவெட்டியில்லா பழுக்காத காய்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பம்பரம் விளையாடுவதும்தான் இன்றைய இனக் காவலர்களின் வேலையாக இருப்பதைப் பார்க்கிறம்.
இன்று இடைநிலைப் பள்ளிகளில் தமிழர்களின் ஆண்- பெண் பிள்ளைகள் கூட்டம் கூட்டமாகடிக்கும் கூத்துகளைச் சொல்லி முடியாதே. வீட்டிற்கும் அடங்காமல் நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் அடங்கி வாழாத ஒரு அநாகரிகத்தைத் தவிர எதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும் ?
வியாபாரம் நம் கைகளைவிட்டு போய்க்கொண்டிருக்கிறது. கல்வி நம்மோடு ஐக்கியப்பட பயப்படுகிறது. நம்மவனை நம்பி ஒரு தொழிலையும் செய்யவே முடிவதில்லை. ஆரியக்கூத்தடிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பங்கேனும் படிப்பதற்கும், புத்தகங்கள் வாங்குவதற்கும் விரும்பாத நிலையில் நாம். எங்கே வரும் நாகரிகம்? எப்படி வளரும் இன ஒற்றுமை? எங்கிருந்து வரும் சமத்துவம் ? எங்கிருந்து வரும் பொரளாதார முன்னேற்றம் ? தமிழினமே… யார் மதிப்பார் நம்மை? எப்போது பெறப்போகிறோம் இழந்த பண்பாட்டை ? ; இழந்த பெருமையை ? ; இழந்த கலையை?; இழந்த மண்ணையும் மாண்பையும் ?
தமிழர்களுக்கு சரியான வழிகாட்டித் தலைவர்கள் வந்து போய் பல்லாண்டுகளாகி விட்டது. அதுதான் இன்றைய தமிழனின் இழிநிலைக்குக் காரணம். அரசியலிலும் சரி பொருளாதாரத்திலும் சரி, சமயத்திலும் சரி எல்லா நிலைகளிலும் நம்மை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல விவேகமிக்க தலைவர்கள் இல்லை. அப்படி நல்வழிகாட்டிகளாக இருப்பவர்களையும் வாழ விடுவதில்லை. இதோ இன்று தமிழ் நாட்டில் நடப்தென்ன? அம்மாவுக்காக உயிர் இழகின்றார்கலாம். இதுதான் நமக்கு வழிகாட்டி என்றால் இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகள் கழிந்தாலும் தமிழரின் இந்நிலையே தொடரும், வாழத் தெரிந்த பகுத்தறிவாளர்களை விடுத்து.
தமிழ்நாட்டில் தமிழ்செல்வம் முதலமைச்சராக பதவியேற்பு.வாழ்துக்கள் ஷபாஸ் தமிழர்,வாழ்க நாராயண நாமம்.
திருத்தம்,பன்னீர்செல்வம் வாழ்த்துக்கள்,வாழ்க நாராயண நாமம்.
சபாஸ் … ஒரு தஞ்சாவூர் பொம்மை தமிழன் எனும் பெயரில் பதவியை ஏற்ற உடனே கன்னடம் புறப்பட்டுள்ளது, தம்மை ஆட்டுவிக்கும் கயிறை சிறையிலிருக்கும் அம்மா ஜெயாவிடம் ஒப்பந்தப்படி ஒப்படைக்க …
அண்ணா மட்டும் கொஞ்ச காலத்துக்கு உயிரோடு இருந்திருந்தால்?
( நடுநிலையான பார்வையாளரின் படைப்பு. உண்மையின் பக்கங்கள்)
திராவிட அரசியல் இயக்கங்களான தி.மு.க, அ.தி.முக. இடையிலான தேர்தல் களப் போட்டிகளே தமிழகத்தில் முதன்மையாக இருப்பதால், ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே இயக்கத்தின் வெற்றி என்ற எண்ணம் இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த வெற்றிக்காக எதையும் செய்வது என்பதே அரசியல் கொள்கையாக மாறிவிட்டதால் லஞ்ச-ஊழல் புகார்களும், ஆடம்பர செயல்பாடுகளும், தேர்தல் நேர பண விநியோகமும் முதன்மையாகி சமுதாய நலன் சார்ந்த செயல்பாடுகள் பின்தள்ளப் பட்டுள்ளன என்பதே இன்றைய நிலையாகும்.
இரண்டு கட்சிகளில் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.கவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூக நீதி, பெண்ணுரிமை, கோவில்களில் அர்ச்சகராகும் உரிமை, கலப்பு மணம், சுயமரியாதை திருமணம் போன்றவற்றை தனது ஆட்சிக் காலத்தில் அதிகளவில் நடைமுறைப்படுத்திய இயக்க மாகும்.
முக்கியமாக அண்மையக் காலமாக ஜெயலலிதா தமிழ் மொழிக்கு ஆதரவாகவும், இந்தி திணிப்பு எதிராகவும் பேசியது வரவேற்க தக்கது. கடந்த திமுக ஆட்சியில் கட்டாயத் தமிழ் கற்றல் சட்டத்தைக் கொண்டு வந்ததும், தமிழுக்கு செம்மொழி தகுதி தந்ததும் போற்றத்தக்கது. அத்தோடு முதலீட்டையும் பொருளாதாரத்தையும் வளார்த்தும் விட்டது திராவிட அரசியல். ஆனால் இவை இன்று பறிபோய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தமிழகத்தின் அடையாளம் காக்கப்பட வேண்டும்.
திராவிட அரசியலில் மூன்றாம் கட்சியாக உருவான மதிமுக ஈழத்தமிழர் பிரச்சினையில் உறுதியான நிலைப்பாடு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தொடர்ச்சியான ஆதரவு, தமிழீழம் ஒன்றே ஈழத் தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பனவற்றில் ம.தி.மு.க உறுதியாக இருந்து வருகிறது. முல்லைப்பெரியாறு, கூடன்குளம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் போன்றவற்றிற்காக தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வருகிறார். அவர் மீது லஞ்ச-ஊழல் புகார்கள் கிடையாது. அவருடைய பேச்சாற்றல் இளைய தலைமுறையினரை பெருமளவு ஈர்த்துள்ளது. இத்தகைய நிறைவான அம்சங்கள் இருந்தாலும், தேர்தல் அரசியல் களத்தில் ம.தி.மு.க எடுத்த கூட்டணி முடிவுகளால் அக்கட்சிக்கு பெரியளவில் மக்கள் செல்வாக்கு கிடைக்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க என இருகட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைப்பதும், குறைவான அளவிலேயே வாக்குவங்கியை வைத்திருப்பதும் தமிழக அரசியல் களத்தில் ம.தி.மு.கவின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன. வைகோவுடன் சென்ற முன்னணித் தலைவர்களும் காலப்போக்கில் பிரிந்துவிட்டனர். குறிப்பாக தற்சமயம் இந்துத்வா அரசியல் கொட்டாரத்தில் வெறும் கைப்பாவையாக வைகோ வைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தமிழகத்தில் தங்கள் வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொண்டே இருப்பதால் மாநிலத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் அக்கட்சிகள் முக்கிய இடத்தை வகித்து வருகின்றன. 1989, 1996, 1999, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் மத்தியில் அமைந்த அரசில் தி.மு.கவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 1991, 1998 ஆகிய ஆண்டுகளில் அமைந்த மத்திய அரசில் அ.தி.மு.கவின் ஆதரவு முக்கியமானதாக இருந்தது. இரண்டு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். குறிப்பாக, தி.மு.க கடந்த 1999 முதல் தொடர்ச்சியாக 13 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து வருகின்ற கட்சியாகும்.
1989-இல் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு (ஞஇஈ) 27% இடஒதுக்கீடு அளிக்கும் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப் படுத்துவதற்கு தூண்டு கோலாகவும் உறுதுணையாகவும் இருந்த அரசியல் இயக்கம் தி.மு.கவே. இதன்காரணமாக, தமிழகத்தில் திராவிட இயக்கத்தால் வலுப்பெற்ற சமூக நீதிக் கொள்கை இந்திய அரசியலின் கொள்கையாக பேருருவம் எடுத்தது. இன்று, சமூக நீதியைப் பற்றிப் பேசாமல் இந்தியாவில் எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அதுபோலவே, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முடிவு மேற்கொள்ளப்பட்ட பிறகு மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் வளர்ச்சியும் அதிகமாயின. தேசிய முன்னணி, தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி என தி.மு.க பங்கேற்ற மத்திய அரசின் கூட்டணி ஆட்சிகளும் இதற்குக் காரணமாயின. மத்தியில், ஒரு கட்சி ஆட்சி என்கிற ஏகபோகம் முடிவுக்கு வந்து, மாநில நலன்களை வலியுறுத்தும் கட்சிகளும் முக்கிய இடம் பெறும் காலம் உருவாகியுள்ளது. இதன் மூலமாக அந்தந்த மாநிலங்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசின் திட்டங்கள் மூலம் விரைந்து நிறைவேற்றும் சூழல் வாய்த்துள்ளது.
தமிழுக்குச் செம்மொழித் தகுதி, சேது சமுத்திரத் திட்டத் தொடக்கம், காவிரி பிரச்சினைக்குத் தீர்வுகாண நடுவர் மன்றம்-காவிரி ஆணையம், நான்குவழி நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவேற்றம், தமிழகத்தில் அதிக முதலீட்டிலான தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி உள்ளிட்டவை மத்திய அரசில் மாநிலக் கட்சியான தி.மு.க பங்கேற்றதன் விளைவுகளாகும். தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் தனிப்பட்ட ஆளுமையினால் இந்திய அரசியலில் பல பிரதமர்களும் ஜனாதிபதி களும் தேர்வு பெற்றுள்ளனர். வி.பி.சிங், தேவகவுடா, ஐ.கே.குஜ்ரால், மன்மோகன்சிங் உள்ளிட்ட பிரதமர்களின் தேர்வில் கலைஞரின் பங்கு முக்கியமானது. வாஜ்பாய் தலைமையிலான ஐந்தாண்டுகால ஆட்சியிலும் தி.மு.க.வின் பங்கு முக்கியமானது. வி.வி.கிரி, நீலம் சஞ்சீவரெட்டி, ஜெயில்சிங், இந்தியாவின் முதல் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன், முதல் பெண் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் உள்ளிட்ட ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்விலும் கலைஞரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும், தமிழகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பலவற்றில் தி.மு.க பெரியளவில் எதையும் சாதிக்க முடியவில்லை.காவிரி நதி நீர் விவகாரம், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை, தமிழகத்திற்கான ரயில்வே திட்டங்கள், கச்சத்தீவில் தமிழகத்திற்கான உரிமை, தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தும் தாக்குதல், ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு இவற்றில் தேவையான மாற்றங்களும் நிரந்தரத் தீர்வு களும் ஏற்பட தி.மு.கவால் பெரியளவில் ஏதும் செய்ய முடியவில்லை.
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழகத்தில் நிலவிய சாதி ஏற்றத்தாழ்வு, உயர்சாதி ஆதிக்கம், ஒடுக்கப் பட்டோருக்கான உரிமை மறுப்பு, கல்வி மறுப்பு, வேலை வாய்ப்புகளில் பாரபட்சம், பெண்ணடிமைத்தனம் போன்ற பலவும் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பிறகு பெருமளவில் மாறியுள்ளன. சமூக நீதிப் பயணத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்தியாவின் பிறமாநிலங் களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சமூக சமத்துவம், மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், அரசியல் உரிமை, பெண்களுக்கான வாய்ப்புகள்-உரிமைகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, தனிநபர் வருமான உயர்வு ஆகியவை வளர்ச்சிப்பாதையிலேயே உள்ளன. இதில் திராவிட இயக்கத்தின் பங்கும் பணியும் அதிகம். அத்துடன் அரசியல் காழ்ப்புணர்வு, அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைகள், லஞ்ச-ஊழல் குற்றச் சாட்டுகள், சுயநல அரசியல் ஆகியவையும் திராவிட அரசியல் இயக்கத்தினால் வளர்க்கப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.
பெரியார் போட்ட சமூக நீதிக்கான அடித்தளம், அண்ணா அமைத்துக் கொடுத்த அரசியல் பாதை இவற்றின் மீதான பயணம் எந்தளவில் இருக்கிறது என்பதே திராவிட இயக்கங்களை மதிப்பீடு செய்வதற்கான அளவு கோலாகும். அதிலிருந்து அடிக்கடி விலகுவதும், வெகுதூரம் செல்வதும் தொடர்கதையாகிறது. இந்த நிலை மாறி, திராவிட இயக்கக் கொள்கைகளின் அடிப்படையிலான செயல்பாடுகளை திராவிட அரசியல் இயக்கங்கள் மேற்கொள்ளவேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவையெல்லாம் பெயருக்கு திராவிட என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு திராவிடக் கொள்கைக்கு நேரெதிராக செயல்பட்டு வருகின்றன. எனவே திராவிட அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில் தி.மு.கவே திராவிடக் கொள்கைகளைப் பலப்படுத்தும் செயல்பாடுகளை வேகமாகவும் ஆழமாகவும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கொள்கை அடிப்படையில் ம.தி.மு.கவும் இதனைச் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ளது.
உலகளாவிலான அரசியல் பார்வை, புதிய தொழில் நுட்பங்கள் மூலமாகக் கொள்கைப் பிரச்சாரம், நவீன ஊடகங்களை இயக்க வளர்ச்சிக்குப் பயன்படுத்துதல், சுயநலமில்லாத-சொந்த லாபம் தவிர்த்த அரசியல் செயல்பாடு, தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்ட சமுதாய சீர்திருத்தப் பணி, கட்சியின் செயல்பாடுகள் குறித்த மறு ஆய்வுகள்-சுயபரிசோதனைகள், தவறுகளிலிருந்து பாடம் பெற்று சரியான பாதையில் பயணித்தல், பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒருங்கிணைந்த செயல்பாடு இவை திராவிட இயக்கங்களின் எதிர்காலத் திட்டங்களாக அமையுமானால், நூறாண்டு கால திராவிட இயக்கத்தின் அருமையும் பெருமையும் அடுத்த நூற்றாண்டிலும் தொடரும்.
அண்ணாவின் நாமத்தினால் அவரதுக் கொள்கைக்கே
நாமம் போட்ட நாமதாரிகள்.
அறிஞர் அண்ணாவின் பேச்சை, எழுத்தை சுவைத்த கட்சிக்காரர்கள் – அதிகம் படிக்காதவர்கள் – மூன்றாவது, நான்காவது வகுப்புப் படித்த திமுக துணை மன்ற நிர்வாகிகூட அல்ல; அதன் உறுப்பினர் மேடையில் தெளிவாகப் பேசினார்; அரசியல் பேசினார்; அலசினார். சொற்பயிற்சியைப் பெற்றார்; இரவுப் பள்ளிக்குச் சென்று அறிவை வளர்த்துக்கொண்டார். ஆதி மநுவிலிருந்து பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை வரை தி.மு.க. துணை மன்ற உறுப்பினர் படித்தார்; மார்க்சை, லாஸ்கியை தெரிந்துகொண்டார். எழுத்தின் அத்தனை வடிவங்களையும் அவர் புரிந்துகொண்டு பேசினார். கட்சி உறுப்பினர் எந்தச் சமூக விவாதத்திற்கும் எதனையும் எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருந்தார். இதற்கெல்லாம் காரணம் அறிஞர் அண்ணாவின் பேச்சு, எழுத்து, அவரது எளிமை காரணமாக இருந்தது.
அறிஞர் அண்ணா ஏதுமில்லாதவர்களின் பிரதிநிதியாக இருந்தார். அவர்களை அண்ணா ‘தெருவோரத்து மக்கள்’ என்று அடையாளங் காட்டினார். தம்மையும், கட்சிக்காரர்களையும் ‘சாமான்யர்கள்’ என்று மக்களிடையே அறிமுகப்படுத்திக்கொண்டார். உண்மையில் ‘அவர்கள்’ சாமான்யர்களே! தொண்டை மண்டலப் பகுதிகளில் (சென்னை, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி) வாழும் பாமரனின் பாதிப்பு அவரது உடை, உணவு, பழக்க வழக்கங்கள் மற்றும் பேச்சுகளில் இருந்தன. இது சாதாரண மக்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனால் அறிஞர் அண்ணாவின் மீது ஒரு நம்பிக்கை தமிழக மக்களுக்குப் பிறந்தது.
அறிஞர் அண்ணாவின் தலைமையில் உள்ள கழகத்தை மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை அண்ணாவோ சாதுர்யமாக ‘நாங்கள் பிரிவினையை கைவிட்டுவிட்டோம். பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்றார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவரது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க அவர் தவறியதில்லை. பிரிவினைக் கொள்கையை அவர் கைவிட்டதற்குப் பிறகும் தமிழனின் தனித்தன்மையை அவர் நிலைநாட்டத் தவறியதே இல்லை.
“தமிழன் யாருக்கும் தாழாமல் – யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் – எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல் – உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாயக் கொள்கை.”
“தமிழ் என்ற தொன்மையானதொரு மொழிக்குச் சொந்தக்காரன் நான் என்பதை என்னால் மறக்க முடியாது. என்னுடைய முன்னோர்கள் எந்த மொழியில் பேசினார்களோ, என்னுடைய கவிஞர்கள் எந்த மொழியில் காவியங்களையும் தத்துவங்களையும் வழங்கினார்களோ; வற்றாத அறிவுச் சுரங்கங்களாக விளங்கிய இலக்கண, இலக்கியங்களை எந்த மொழியில் நாங்கள் பெற்றிருக்கிறோமோ, அந்தத் தமிழ் மொழி மைய அரசின் ஆட்சி மொழியாக ஆகும் நாள்வரையில் நான் ஓயமாட்டேன்.”
மேலே உள்ள அவரது பேச்சிலிருந்து நாம் எடுத்துக் காட்டியுள்ள இரண்டு மேற்கோள்கள் அவரது கொள்கை உரத்தைக் காட்டுகின்றன.
இன்று எத்தனை திமுக, அதிமுக கட்சிகாரர்கள் அண்ணாவை வாசித்துள்ளார்கள்.? திராவிட அரசியலை ஆதரிப்பவர்களும், அதனை கண்மூடித் தனமாக எதிர்ப்போரும் என இரு சாராருமே அண்ணாவை தொட்டுக் கூட பார்க்காதவர்களாகே இருக்கின்றனர்.
அறிஞர் அண்ணாவை இயற்கை 10, 15 ஆண்டுகள் உயிர் வாழ அனுமதித்து இருக்குமானால், தமிழ்நாட்டின் நிலை அவர் காலத்தில் மேலும் உயர்ந்திருக்கும். அண்ணாவின் மறைவிற்கு பின் வந்த மு. கருணாநிதி, எம். ஜி. ராமச்சந்திரம், ஜெ. ஜெயலலிதா ஆகியோர் அண்ணாவின் கொள்கைகளை கைவிட்டதனால் கடந்த 40 ஆண்டுகளாக தமிழகம் சாதித்து இருக்க வேண்டிய பலவற்றை இழந்திருக்கின்றது.
அவர் மட்டும் ஒரு 15 ஆண்டுகளுக்கு உயிரோடு இருந்திருந்தால் 1984 வரையில் என வைத்துக் கொள்வோம் திமுக உடைந்திருக்காது. கருணாநிதி, எம்.ஜி.ஆர் போன்றோர் முதலமைச்சர்கள் ஆகி இருக்க மாட்டார்கள். திராவிட அரசியலின் கொள்கைகள் நீர்த்துப் போயிருக்காது. தமிழ் இந்திய ஆட்சி மொழி ஆகி இருக்கும். தமிழகம் ஊழல், குடும்ப அரசியல், எதேச்சதிகார சக்திகளிடம் சிக்கி இருக்காது. தமிழும், தமிழகமும் இன்றிருப்பதை விட பல நூறு மடங்கு சமூக நீதியிலும், பொருளாதாரத்திலும் உயர்ந்திருக்கும்.
ஆனால் அவரது இழப்பின் உச்சமாக திராவிட அரசியல் ஒரு பக்கம் குடும்ப அரசியல், ஊழல் என்பதில் சிக்கித் தவிக்கின்றது. மறுபக்கம் எதேச்சதிகராம், ஊழல் என்பதாக சீரழிந்து வருகின்றது.
இந்த போக்கினால் தமிழகத்தின் தனித்தவ பலமிக்க அரசியலில் பெரும் வெற்றிடம் தோன்றியுள்ளது. இந்த வெற்றிடத்தைக் கைப்பற்ற கிழவன் எப்ப போவான் திண்ணை எப்ப காலியாகும் என மதவாதக் கூட்டம், ஜாதியவாத கூட்டம், பயங்கரவாத கூட்டம், ஊழல்வாதக் கூட்டம் என பல கூட்டங்கள் காத்துக் கிடக்கின்றன. அண்ணா விட்டுச் சென்ற வெற்றிடம் மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றது. அரசியல் தலைமை வெற்றிடமாக்கப்பட்டல் அந்த இனமே முற்றாக அழிந்துவிடும் என்பதே நிதர்சனமான உண்மை. தமிழ்நாடும் தமிழகமும் அழியும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
நன்றி: கோடங்கி, நக்கீரன்.
பேராசை,எல்லா தீவினைக்கும் தாய்,முதலில் தமிழ் மக்கள் தான் பெற்ற குழந்தையை பள்ளியில் சேர்த்துவிடுங்கல்,கல்வியை ஊட்டுங்கல்.இந்தி தேசிய மொழி ஆகயால் புரக்கணிக்காது படிக்க அனுமதியுங்கல்.இந்தியா முழுவதும் கொட்டிக்கிடக்கும் வாய்ப்பை பெற உதவும்.இந்த திராவிடனை ஒழித்துகட்டுங்கள்,பிள்ளையை படிக்க வைக்க தகுதி இல்லையேல் பெற்காதீர்.தன் பிள்ளையை டாக்டர் படிக்க வைக்க வேண்டும் அவசியம் இல்லை,சராசரி நல்ல குடிமகனாக கல்வி,ஒழுக்கம் போதித்து வளர்தாலே போதும்.100,வருடம் திட்டம் தீட்டி,தொடர்ந்து செயல்பட்டால்,நிச்சயம் ஒரு நல்ல நிலையை அடையமுடியும்.திராவிடன் போல் அடுத்தவன் பொருள் மீது போராமை பட்டு அபகரிக்க நினையாதீர்.கல்வி ஒன்றே லட்சியம்.ஒவ்வொறுவறின் தட்டிலும் தகுதிக்கேற்றவாறு உணவு கிடைக்கும்,ஆனால் அடுத்தவனின் தட்டில் உள்ள உணவு தனக்கு இல்லையே என்பது தான் பிரச்சனை,இதுவே உன்னை போராமை,பேராசை,கலவு போன்ற வற்றிட்கு இட்டுச்செல்லும்.கறையான் பாம்பு கதை வேண்டாம் அதுபோல் திராவிடமும் வேண்டாம்,வாழ்க நாராயண நாமம்.
திராவிடம் வேண்டாம் என்று சொல்லும் காயின் வாய் ,ஆரியம் வேண்டாம் என்று சொல்லவில்லையே ,ஏன் அனைத்து தமிழர்களையும் அக்ஹரகாரத்துடன் , இணைக்கப்பட்டார்களோ ,திராவிடம் இல்லை என்றால் இனி எல்லாம் அவாதானே ,எல்லாம் முதற்க்குடிதானே ஏற்றுக்கொள்ளுமா ஆரியம் ,இல்லை மீண்டும் ஆரிய ஆதிக்கம் வேண்டுமா , தமிழ் மக்காள் மீது காயின் ஆசை கொண்ட பாசம் பாரீரே ,தமிழ் மக்கள் கல்வியை பற்றி பேசுகிறான் கரைகண்டவன் ,தமிழ் நாட்டின் கல்வி நிலை தெரியாமல் ,நாசாவில் தமிழன் நிலை கொண்டிருப்பது தெரியாமல் ,அனுப்பிய விண்கலத்தில் தமிழனுக்கும் பங்குண்டு என்பதை அறியாமல் ,அடித்தட்டு மக்களின் சிறாரும் பல்கலைக்கழகங்கள் தொட்டுவிட்டான் என்பதை அறியாமல் போனது ஏனோ ,உங்கள் அருகில் உங்களுக்கு நிகராக அனைத்து மக்களையும் கொண்டு சென்று உச்சிமுகர்ந்ததே அதுதானே அய்யா திராவிடம் , அதனால் தானே அய்யா உமக்கு கசக்கின்றதே இன்றும் திராவிடம் ,கல்வி தராவிட்டால் பெற்றுக் கொள்ளாதீர்கள் , அரசாங்கம் எதற்கு என்று தெரியாமல் நவீன அறிவாளியாக காய் மாறினாரே ,இவரல்லவோ காய் ,அவரவர் தகுதிக்கேற்ற உணவு கிடைக்கும் என்று ஆரியம் சொல்கின்றது ,அனைவருக்கும் ,சமச்சீர் வேண்டும் என்கின்றது திராவிடம் ,அது தான் அய்யா திராவிடம் , ராஜாஜி வாயாய் போனக் காய் ,திராவிடம் இன்னும் மலருவோம் ,ஆரியத்தின் வாய், காய் திறக்கும் வரை , [ வாழ்க பெரியார் நாமம் ].
தெருவில் குடிசை போட்டு வாழம் மக்களை கன்டுமா இந்த வீராப்பு,மக்கள் தொகை பெருகி மக்கள் எப்படியெல்லாம்,எங்கெல்லாம் வாழ்கின்றனர் தெரியாதோ உமக்கு.அதை பார்த்து உமக்கு சௌகரியமாயிறுக்குதோ.கேட்டால் ஆரியன் ஆதிக்கமென்பீர்.ஆரியனுக்கும் தமிழறுக்கும் சம்பந்தமே கிடையாது,போராமை,பேராசை கடைசியில் உம் சுயரூபத்தை உலகரிய செய்துவிட்டது.ஆலயம் ப்ராமணர் கட்டுப்பாட்டில் இருப்பதை கண்டு பொறுக்கவில்லை.மக்கள் அங்கே தான் செல்கின்றனர் ஆகயால் ஆனான் துரோகி ஆரியன்.இவ்வளவு நடத்தியும் தோல்வியே அடைந்தீர்.இதில் இருந்து விளங்குவது என்னலென்றால் நீதியே வெள்ளும் என்பதே,இனி இத்தலைப்புக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது,வாழ்க நாராயண நாமம்.