திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.
அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.
இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.
உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால் உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?
காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.
தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான் பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.
அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,
ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.
பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.
இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.
இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?
பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை. ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?
மாண்டு போன , தொண்ணுறு வயது கிழவன், வக்கற்ற போன தமிழனை வகையாய் மாற்றிக் கொடுத்தானே ,வகையாய் மாறியவுடன் ,நாங்கள் தான் என்கிறான் ,வகையற்றவனின் வாதம் ,ஆனால் நாம் மீண்டும் வக்கற்று போவது தெரியாமல் ,ஆனால் கிழவனின் பாதையில் வந்தவன் இருக்கும் வரை , ஒரு ரோமம் கூட அசையாது என்று தெரியாமல் போனதே, புது தமிழனுக்கு ,பகுத்தறிவின் பாதை இருக்கும் வரை ,விளகியவனின் பாதை எங்கே வரும் ,வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களின் வாதம் கேட்டேன் , பேச வேண்டும் ,பேச வேண்டும் , அன்றைக்கு தந்தை பெரியார் அவர்கள் ,பேசியதினால் தான் இன்று தமிழன் கால்மேல் கால் போட்டு இருக்கின்றான் என்ற வார்த்தையின் இன்ப வழிகள் இன்று அமுதாய் மாறியதே ,இன்று தமிழன் தரம் உயர்த்துகிறேன் என்று தரம் தாழ்த்தாமல் இருந்தால் சரியே . [ மலரட்டும் தமிழ் ஈழம் ].
திராவிட திருட்டு பிசாசுங்க இருக்கிற வரைக்கும் தமிழ் ஈழம் மலராது,நீ குப்புற அடிச்சி குட்டிகரணம் போட்டாலும் நடக்காது.அவனுங்க நாட்டை ஏப்பம் விடரதிற்கே நேரம் பத்தாது.ஒவ்வொருத்தனும் கொஞ்சமா திருட்டு சொத்து சேர்த்து வச்சுருக்கான்? வருணாசிரமம் தானாகவே காணாம போயிகிட்டு இருக்கு,அதை கொண்டு வந்த பிரமனணுங்க இப்போ வேற வேலையை பார்த்து கிட்டு போறானுங்க.முன்ன மாதிரி அதுலே ஆதாயம் பார்த்த காலம் மாறிப்போச்சு. ஆனா இந்த திராவிட பொறம்போக்குங்க இன்னமும் அதை பேரை சொல்லியே காலத்தை ஓட்டறான்…அண்ணா வந்தாரு,அவரு காலத்திலே திராவிடத்தை ஆயுதமா எடுத்தாரு உண்மைதான்,ஆனா அதுனாலே பொது மக்களும் நல்லது அடைஞ்சாங்க அன்னைக்கி.அதுக்கு அப்புறம் வந்த திருட்டு கருணாநிதி முதேவி திராவிடம் பேரே சொல்லியே ஆறு லச்சம் கோடி லஞ்சம் தமிழன் தலையிலே மொளகா அறைச்சிட்டான்.அது பத்தாதுன்னு அவன் குடும்பமே தமிழ் நாட்டை ஏப்பம் விட்டுகிட்டு இருக்கு இன்னைக்கு வரைக்கும்.நாளைக்கு நம்ம பிள்ளைங்க கிட்டே என்னாத்தை சொல்றது?திராவிடம் நம்மாலே காப்பத்திரும்னா? எப்படி நம்புவானுங்க? திராவிடம் குடும்ப அரசியல்லே நடத்துதுன்னு என் பய்யன் எனக்கு சொல்றான்.ஒரு வேலை தமிழ் நாட்டு தமிழனுங்க எல்லாம் ஒன்னு சேர்ந்தா நல்லது நடக்கலாம்.அது எப்போ? அதுனாலே இந்த வெட்டி தர்பாரே மூடிட்டு வேற வேலை போய் பாருங்கடா…
தம்பி மோகன் மோகன்… நீங்க எங்களைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் எழுதுங்க. மாற்றுக் கருத்தைச் சொல்லுங்க. அநாகரிகமா வேண்டாமே… நாமக்குள்ள கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழனாக இருப்போம். நாகரிகமா கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். என்னுடைய கடுமையான வார்த்தைகளுக்காக என்னையும் மன்னிச்சிடு தம்பி!
நன்றி தமிழன் ,,சில பேர்கள் என்னை புரிந்து கொண்டது அவ்வளவுதான் ,,நான் அநாகரீகமா எழுதியது உண்மை ,,சில தமிழர்களுக்கு ரோசம் வரும் என்ற ஒரு காரணத்தில் ,ஆனால் அது இப்படி முடியும் என்று நினைக்க வில்லை,,தமிழர் நந்தா அவர்களும் பாதிக்க பட்டு இருக்கிறார் ,எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்
தமிழன் அவர்களே ,,உங்களை மன்னிக்க எனக்கு அருகதை கிடையாது ,,உங்களை போல் நல்ல எழுத்தாளர்களை மன்னித்தால் ,எனக்கு அது பாவம் ,நீங்கள் தான் என்னை மன்னிக்க வேண்டும் ,,உங்கள் தமிழ் வளர வாழ்த்துகிறேன் ,நன்றி தமிழன்
தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்றால் அது திராவிட எதிர்ப்பா
அப்படியானால் தமிழன் தமிழ்நாட்டை ஆள கூடாது என்பதுதான் திராவிட கொள்கையா?
பார்ப்பனனின் கொள்கை
————————————
தமிழ்நாட்டை பார்ப்பனன் மட்டுமே ஆளவேண்டும் தமிழர்கள் அடிமையாக இருக்க வேண்டும்
தமிழ் மொழி தீட்டு
கிந்தி, சம்ற்கிருதமே உயர்ந்தது
தமிழர் இலக்கியம், பண்பாடு, அறம், ஈகை, போர், வாழ்வியல் முறை போன்றவற்றை கவர்ந்து ஆரியமாக திரிந்து பரப்புரை செய்வது
திராவிட கொள்கை
————————–
தமிழ் நாட்டை திராவிடன்தான்(மலையாளத்தான், தெலுங்கன், கன்னடன்) ஆள வேண்டும் தமிழர்கள் அடிமையாக இருக்க வேண்டும்.
தமிழ் மொழி எதற்க்கும் இலாயக்கு அற்ற மொழி
ஆங்கிலமொழியே உயர்ந்த மொழி.
தமிழர் இலக்கியம், பண்பாடு, அறம், ஈகை, போர், வாழ்வியல் முறை போன்ற அனைத்தும் ஆரியமே என்று பரப்புரை செய்வது
தமிழர்களே இந்த நேரடி காணொளியை பார்த்து மகிழுங்கள் ..
டியர் திராவிடன்ஸ் இந்தபழம் புளிக்கும்
http://www.livestream.com/naamtamilar?utm_source=lsplayer&utm_medium=ui-play&utm_campaign=click-bait&utm_content=naamtamilar
தமிழர்களாக நாம் ஒன்றிணைந்தால் எவனும் நம்மை அசைக்கமுடியாது .
ஆட்சி அதிகாரம் தமிழர் வசமானால் பார்பனியமும் சாதியமும் துரவிலகும் ,,, பார்பனன் நமக்கு எதிரியா ? பார்பனனை எதிர்பதாக சொல்லும் திராவிடர்கள் அனைவரும் தீவிர ஆரிய விசுவாசிகள் ..
இவர்கள் ஆட்சிசெய்தாலும் அது பார்பன ஆட்சியே ..
பகுத்தறிவு பக்தி வளர்ப்பதில் கருணாநிதிக்கும் அவரின் குடும்பத்திற்கும் நிகர் எவருமில்லை!!!
தன் கட்சி அமைச்சர் நெற்றியிலே பொட்டு வைத்து விட்டு அவைக்கு வந்தபோது
” நெத்தியில உனக்கு இரத்தம் வழியுது” என்று கேலி செய்து சிரித்தார்..
ஆனால் தினமும் ஸ்டாலின் வெளியே செல்லும் போது தன் தாயாரோ அல்லது மனைவியோ சாமி கும்பிட்டு பொட்டு வைத்துவிட்ட பிறகுதான் வெளியே வருகிறார்..
நல்லா இருக்குடா! உங்க நியாயம்,
தன் குடும்ப உறுப்பினர்களைக் கூட திருத்த வழியில்லாத மனிதர் பகுத்தறிவு இயக்கத்திற்கு எப்படி தலைவராக இருக்கமுடியும்??
அரசியல் தெரியா சிறுவர்கள் என்று ஏளனமாய் நமை நோக்கும் கண்களுக்கு விரைவில் புரியவைப்போம்!!
தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சி சொத்து சேர்த்து பொதுக்கூட்டம் போடுகிற இடத்திலெல்லாம் தனிக்கூட்டம் போட்டு பொண்டாட்டி சேர்த்து, வைப்பாட்டிக்கு துணைவி என்று அடைமொழி கொடுத்து, வாழ்கிற நாளிலெல்லாம் வஞ்சனையயோடே
வாழ்கிற கபடதாரி கருணாநிதியும்,
என்றும் பார்ப்பனத் திமிரோடு அதிகாரம் செய்து, வகை,தொகையில்லாமல் தொண்டர்களை காலில் விழவைத்து ஆனந்தம் கண்டு, பிடிக்காதவர் மீது பொய் வழக்கு போட்டு மகிழ்கிற செயலலிதாவும் செய்கிற அடாவடி தான் அரசியல் என்றால் அந்த அரசியல் எமக்கு தெரியவில்லை என்றே புரிந்து கொள்ளுங்கள்..
நாம் படைக்கவிருப்பது இம்மண்ணும் மக்களும் இதுவரை கண்டிராத வேற்று அரசியல். அதுவே நாம் தமிழரின் மாற்று அரசியல்..
தன்மானத் தமிழா தாங்கள் கூறும் தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்பதை தமிழ் நாட்டிர்க்குச் சென்று பகிங்கரமாக பேசுங்கள். வாய் கிழிய கத்துங்கள். நாமும் வரவேற்ப்போம். அங்குள்ள எம் உறவினர்களிடம் சொல்லி ஒரு சாதிய கூட்டத்தைச் சேர்க்க ஆள் பிடித்துக் கொடுப்போம் . இங்கே நின்று கொண்டு தமிழனையும், திராவிடனையும் பார்த்துக் கத்துவதால் என்ன பயன்?. சொல்லுங்கள்.
நாம் தமிழரின் மாற்று அரசியல் ,இன்று அம்மா அவர்களின் ஜோதியில் ஐக்கியமாகி உள்ளது என்பது ,தெரியாமல் போனதே தன்மான தமிழனுக்கு ,பொய்க்குதிரையை ,மெய்க்குதிரை என்று கூறினால், பொய்க் குதிரை .மெய்க் குதிரையாய் மாறிவிடுமோ ,மாற்றினத்தை மதியா தமிழனாய் இருக்கும் வரை ,எங்கே தமிழ் தேசியம் ,மற்றவரை மதியா தமிழனுக்கு ,எங்கே கிடைக்கும் தலைமை பதவி ,திடீர் தமிழனுக்காக ,தியாக சுடரை காலில் தேய்க்க இயலுமா ,நன்றிகள் மறந்து நன்மைகள் பயக்குமா ,மற்றவரை மதியா நிலை உள்ளவரை ,நாம் தமிழரால் மாற்றங்கள் ஏது ,இணைவோம் தமிழர்களாக ,ஆனால் இங்கிதமற்ற தமிழனாக அல்ல ,இணைக்கும் தமிழர்களாக ,மற்றவர்கள் நினைக்கும் தமிழர்களாக, [ என்னடா , மூடிட்டுப் போங்கடா , அடப்போடா ,வந்தேறிகள், திருட்டு திராவிடன், ] இதுவெல்லாம் நாம் தமிழரின் கடவுச்சொல்லோ ,அல்லது தமிழ் தேசியத்தின் கடவுச் சொல்லோ ,அல்லது மற்றவர் மீது படைக்கும் ,கடைநிலை சொல்லோ ,இதில் எங்கே தமிழரின் இணைப்புப் பாதை ,மூதாதிகலை மறந்து முக்காடு இட்டுக் கொண்டால் , முப்பரிமானங்கள் மறைந்துவிடுமா , உண்மைகளை சுமப்போம் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
அண்ணா ,எங்கள் அண்ணா ,அறிஞர் அண்ணா , அடுத்த அகவையில் அடியெடுத்து வைக்கும் அண்ணா ,எங்கள் அண்ணா ,அறிஞர் அண்ணா ,உனக்கு நிகர் நீயே அண்ணா ,அறிஞர் அண்ணா ,ஆயிரம் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அண்ணா ,எமக்கு இதயம் இருக்கும் அண்ணா ,எம் இதயம் இயங்கும் அண்ணா ,எம் இதயம் இயங்கும் வரை அண்ணா ,எம் இதயம் சுமக்கும் அண்ணா ,என்றும் நின் புகழ் சங்காய் முழங்குவோமே அண்ணா ,எங்கள் அண்ணா ,அறிஞர் அண்ணா ,பேரறிஞர் அண்ணா ,வற்றா ஜீவநதியாய் என்றும் நீயே அண்ணா .
Narayanna narayanna.
நமது நான்கடி இமயத்தின் பிறந்த நாள் நினைவாக…
அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
இலக்கிய வரலாற்றில் இடம்பெறும் அண்ணாவின் சொற்பொழிவு –
(இரண்டாவது எழுத்தாளர் மாநாட்டு உரை – கண்ணதாசன் புதுக்கோட்டை க .நாராயணனின் “தாய்நாடு” இதழில் எழுதியது – 14,15 – 12 – 1946)
தமிழ் எழுத்தாளர் இரண்டாவது மாநாடு, எழுத்தாளர் நலனையும், தமிழ்ச் சீர்த்திருத்தத்தையும் நோக்கமாகக் கொண்டு எழுத்தாளர் பெ.தூரன் தலைமையில் ஒற்றைவாடைத் தியேட்டரில் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14,15 தேதிகளில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் திருவாளர்கள் பெ.தூரன், வ.ரா. நாரணதுரைக்கண்ணன், மா.பொ.சிவஞானம், ப.ஜீவானந்தம், சி.என்.அண்ணாதுரை, நாமக்கல் கவிஞர், கம்பதாசன், எ.ஜி.வெங்கடாச்சாரி, டி.எஸ்.சொக்கலிங்கம், கல்வி மந்திரி அவினாசிலிங்கம் செட்டியார், குயிலன், தமிழ் ஒளி. சுப.நாராயணன், ரா.நாராயணன், சுதேசமித்திரன், சி.ஆர்.சீனிவாசன், பாசா, முத்துசாமி, சாவி, நாரதர் சீனிவாசன், கவி.கா.மு.ஷெரிப், இராவ் பகதூர், சம்பந்த முதலியார், கனம் பக்தவத்சலம் ஆகியோர் கலந்துகொண்டனர். சில பிரபல எழுத்தாளர்கள் இம்மாநாட்டைப் புறக்கணித்தனர். எனினும் சுமார் 200 எழுத்தாளர்கள் இம்மாநாட்டில் பங்குபெற்றனர்.
மாநாட்டு விமர்சனத்தை கண்ணதாசன் புதுக்கோட்டை இ.க.நாராயணன் ஆசிரியராக இருந்து நடத்திவந்த தாய்நாடு இதழில் எழுதியுள்ளார். தாய்நாடு இதழில் சென்னையில் வீரர்கள்! என்னும் இக்கட்ரையில் அண்ணாவின் எழுத்தாளர் மாநாட்டுப்பேச்சு இரண்டு பக்க அளவில் வெளிவந்துள்ளது. இப்பேச்சு இன்றைக்குப் படித்தாலும் சுவையாகவே இருக்கிறது.
18, 19 வயதே நிரம்பிய கண்ணதாசன் இப்பேச்சில் மயங்கி சொக்கி விட்டார் என்றே கூறவேண்டும். மாநாட்டுத் தலைவர் தோழர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் பேசுவார்கள் என்றதும் ரேடியோவில் ஒலிபரப்புவோர் ஸ்ரீமதி. எம்.எஸ்.சுப்புலஷ்மி அவர்கள் பாடுவார்கள் என்பது போலிருந்தது என்று எழுதுகிறார் கண்ணதாசன்.
கண்ணதாசன் அண்ணாவின் ரசிகராக இருக்கிறார். அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தவர்கள் கண்ணதாசனின் இக்கட்டுரையை நினைவில் பதிய வைத்துக்கொண்டிருந்தனர். காந்தியடிகள் மறைந்த அன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் காஞ்சிபுரம் சென்று கண்ணதாசன் அண்ணாவைச் சந்தித்தபோது, முதலில் தாய்நாடு இதழில் இக்கட்டுரையை எழுதியது தாங்கள்தானா? என்று கேட்டாராம்.
அண்ணாவின் இப்பேச்சு அக்காலத்தில் அனைத்து வட்டாரங்களிலும் சிறப்பாகப் பாராட்டிய பேச்சாகும்.
கல்கி வெளியூரிலிருந்ததால் உரிய நேரத்தில் மாநாட்டுக்கு வந்து சேர முடியவில்லை. இச்சொற்பொழிவைப் பிறர் செல்லக்கேட்டு மகிழ்ந்து அண்ணாத்துரை எமனையும் எருமைக்கடாவையும் வைத்துக்கொண்டு மாநாட்டில் பேசி வெளுத்துக் கட்டிவிட்டாராம் என்று கூறி மகிழ்ந்தாராம். மாநாட்டுத் தலைவர் பெ.தூரன் கருத்து மிகுந்த தன்னுடைய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
பிறகு கல்வி மந்திரி கனம். டி.எஸ்.அவினாசிலிங்கம் தன்னால் இயன்றதைச் செய்வதாய் வாக்குறுதி கொடுத்து ஆண்டவன் அருளாலே பேசினார். மாநாட்டுத் தலைவர் பெ.தூரன் பின்னர் தலைவர், தோழர். சி.என்.அண்ணாதுரை அவர்கள் பேசுவார்கள் என்றதும் அண்ணாதுரை மைக் அருகில் வந்தார்.
இதோ அவரது பேச்சு :
அருமைத் தோழர்களே! தலைவர் அமைச்சரைக் கூப்பிட்டுவிட்டு அமர்ந்தார். அமைச்சர் அண்டவனை அழைத்துவிட்டு அமர்ந்துவிட்டார். (கரகோஷம்)
புது உலகம் அமைக்கவிருக்கும் வீரர்கள் ஆண்டவன் அருளை வேண்டி நிற்கச் சொல்கிறார்அமைச்சர். ஆண்டவன் அருள் எப்பொழுதும் இருக்கும் அமைச்சர் சொல்லிவர வேண்டியதில்லை.
மேலும் நாமக்கல் கவிஞர் போன்ற பக்தர்கள் இருக்கும் இடத்தில் ஆண்டவன் அருளக்குக் குறைவா என்ன? (கரகோஷம்)
அமைச்சர், விரும்பும் ஆண்டவன் அருள் கிடைக்காவிட்டாலும் அமைச்சர் போன்ற ஆள்பவர் அருள் இருந்தால் எதைத்தான் சாதிக்கமுடியாது?
அணுகுண்டும் ஆளில்லா விமானமும் அங்கே, அன்னிய நாட்டிலே பிறக்கும் போது, கம்பராமாயணமும், கந்தபுராணமும் இங்கே ஏட்டிலே சிறக்கிறது.
அங்கே நாடுகள் வளர்க்கின்றன நாகரிகத்தை, இங்கே ஏடுகள் வளர்க்கின்றன மூடத்தனத்தை (கரகோஷம்)
ஆக்கவும் அளிக்கவும் சக்தி படைத்தவர்கள் எழுத்தாளர்கள். நாட்டுப் புறத்து இருக்கும் ஏழை மக்களுக்கு ராமாயணமும், மகாபாரதமும் சொல்லித் தெரியவேண்டிய விஷயங்களல்ல.
இவை இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது பிரச்னையல்ல. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
இன்று நாட்டுபுறத்தான் ஒருவனை கூப்பிட்டு கேளுங்கள். ஆகாய விமானம் கண்டுபிடித்தது யார் என்று?…. தெரியாது என்பான்.
அணுகுண்டு கண்டுபிடித்தது யார்? …. தெரியாது.
நமது பிரதம மந்திரி யார்? … தெரியாது.
இரண்டாவது மகாயுத்தம் எப்பொழுது ஆரம்பித்தது?… தெரியாது.
முதன் முதல் இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயன் யார்?… தெரியாது.
எமனுக்கு வாகனம் என்ன?…. எருமைக்கடா! (பலத்த கரகோஷம்)
இப்படி வேரூன்றிப் போயிருக்கும் அஞ்ஞானத்தை வேரோடு கிள்ளி எறிய முடியும் உங்களால்.
கானகத்திலே ராமன் பட்ட கஷ்டத்தை எழுதவேண்டாம் கர்னாடி மில்லிலே ரத்த வேர்வை சிந்தும் தொழிலாளியின் நரக வேதனையைப் பற்றி எழுதுங்கள்.
அயோத்தியில் தசரதன், மாளிகையைப் பற்றி அல்ல. ஆலைத் தொழிலாளியின் ஓலைக் குடிசையைப் பற்றி எழுதுங்கள்.
அசோக வனத்தில் சீதையின் கண்ணீரைப் பற்றி எழுதவேண்டாம். அந்த அசோகவனமும் கிடைக்காமல், ஆலமரமும் கிடைக்காமல் வேப்ப மரத்தடியில் கதிரிலே காய்ந்து, மழையிலே நனைந்து மிருகமாய் வாழும் கறுப்பாயியைப் பற்றி எழுதுங்கள். (கரகோஷம்)
நான் எத்தனையோ கதையைப் படித்திருக்கிறேன். அவற்றிலே எழுத்துக்கெழுத்து சீர்திருத்தத்தைப் புகுத்தியது வ.ரா.வின் நூல்கள்தான். வ.ரா.வைப்பற்றி எழுதப் பலர் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவரும் என்னைப் போல் சந்தேகிக்கப்பட்டவர். (கரகோஷம்)
இதில் ஒரு விஷயம் தாங்கள் ஒரு சாராரால் சந்தேகிக்கப்படுகிறோம். வ.ரா.இரு சாராராலும் சந்தேகிக்கப்படுகிறார். (கரகோஷம்)
எழுத்தாளத் தோழர்கள் ஒவ்வொருவரும் காண்டேகராகவும், வால்ட்டேராகவும், வால்ட்விட்கனாகவும் மாற வேண்டும் ஏன்? வ.ரா.வாக மாறவேண்டும்.
உவமை கொடுக்கும்பொழுதும் கற்பனைக்கு எட்டாத விஷயங்களைச் சந்திக்கிழுக்கக் கூடாது. காளமேகத்தைப் போலக் கவி பாடினான் என்ற எழுதாதீர்கள். காளமேகத்தைப் போல ஆகவேண்டுமானால் ஒரு காளி வேண்டும். அந்த கோவிலுக்கு அவன் போகவேண்டும். பிரசன்னமானதும் வாயைத் திறக்கச் சொல்லவேண்டும். திறந்த வாயிலே ஈட்டியால் எழுதவேண்டும் இவ்வளவு சிரமத்தை. அவனுக்குக் கொடுக்காதீர்கள். ஏன் நாமக்கல் கவிஞரைப்போல அற்புதமாகப் பாடினான் என்ற எழுதுங்கள்.
ஆண்மையிலே பீமனைப் போல் எழுதவேண்டாம். அவினாசிலிங்கத்தைப்போல் ஆண்மை வேண்டும் என்று எழுதுங்கள். வியாசரைப் போல் எழுதினான் என்று எழுதாதீர்கள் – தோழர் டி.எஸ்.சொக்கலிங்கத்தைப்போல் எழுதினான் என்று எழுதுங்கள். சம்பந்தப்பட்டவன் உடனே புரிந்து கொள்ள இதுதான் சரியானவழி. (கரகோஷம்)
உங்கள் ஏட்டை அழுக்குத் துடைக்கும் துடைப்பம் ஆக்குங்கள் நாற்றம் எடுக்கும் குப்பைத் தொட்டியாக்கிவிடாதீர்கள்.
நான் சில பத்திரிக்கைகளைப் பார்க்கிறேன். பத்துப் பக்கம் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் சோதிடத்தை நம்பாதீர்கள். அது சுத்தப்புரட்டு. மக்களை அஞ்ஞானக் காரிருளில் ஆழ்த்தி வைக்கும் அறியாமை. அதில் ஆழ்ந்து விடாதீர்கள் என்று வாசார கோசரமாய் எழுதிவிட்டு பதினோராவது பக்கத்திலே, திருத்தணி ஜோசியர் உங்கள் ஜாதகத்தை அனுப்புங்கள். அற்புதமாகக் கணித்து அனுப்புவார் என்றிருக்கும். இது வயிற்றுப் பிழைப்புக்காக என்றால், அவர்கள் வாழ்வதிலும் சாவதுமேல்.
வ.ரா.சொன்னார். காதல் இல்லாவிட்டால் கதையே இல்லை என்று. அவரது கருத்து காதல் அதிகம் வரக் கூடாது என்பது. அதுவல்ல உண்மை; பழைய புராணிகர்களிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் வரை காதலைப் பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசம்.
அன்றிருந்தவர் ஆரத்தழுவாயோ என்று ஆரம்பித்தார். தழுவல் காதலிலே பிறக்கிறது. ஆரத் தழுவாயோ என்று ஆரம்பித்தால் உலகை மாயையாக்கும் வைதீகக் கூட்டங்கள் அடிக்க வந்துவிடுமே என்ற பயந்தார். அரங்கனே என்று முடித்தார். (கரகோஷம்)
இன்று பகுத்தறிவு ஆக்கம் பெற்றுவிட்டது. எழுத்தாளர்கள் பகிரங்கமாகக் காதலைப்பற்றி எழுதுகிறார்கள். ஆனால் அதில் பழமை வாடை வீசுகிறது.
கமலா விதவை; பிராமணப் பெண். நாராயணன் அழகன்; முதலியார் பையன் – இருவரும் காதலித்தார்கள் கல்யாணம் செய்துகொண்டார்கள். சாதிக் கட்டுப்பாடுகள் உறுமின; தகர்த்தெறிந்தார்கள், என்று முடியுங்கள் கதையை (கரகோஷம்) பெயருக்குப் பின்னால் வரும் சாதி வால்களை அறுத்தெரியுங்கள்.
உலகம் மாயை என்பவர்கள் உங்கள் பார்வையிலே விழட்டும். உலகம் மாயையல்ல. மாய உலகத்தில் மந்திரிகள் இருக்கமாட்டார்கள். (கரகோஷம்) மாய உலத்திலே நாமக்கல் கவிழர்கள் இருக்கமாட்டார்கள். மாய உலகத்திலே காதல் இருக்காது. மாய உலகத்திலே நீங்களும் நானும் இருக்கமாட்டோம்!
இறுதியாக ஒன்று கூறுகின்றேன் வீழ்ந்திருக்கும் சமுதாயம் வீறு கொண்டெழ, சுரண்டுவோர் ஒழி சமத்துவம் நிலவ, உங்கள் பேனாமுனை, வாள் முனையாகட்டும். (கரகோஷம்)
அண்ணாத்துரை அமர்ந்தார். கனம் அவினாசிலிங்கம் ஓடிவந்து கைகொடுத்துக் கட்டிக்கொண்டார். அதோட காலை நிகழ்ச்சிகள் முடிவுற்றன.
இச்சொற்பொழிவு, கவிஞர் கண்ணதாசனும் தாய்நாடு ஆசிரியர் க.நாராயணனும் இல்லாவிட்டால் தமிழருக்குக் கிடைத்திருக்காது.
காற்றோடு காற்றாகப் போயிருக்கும்.
கண்ணதாசன் இக்கட்டுரையை வணங்கா முடி என்னும் பெயரில் தாய்நாடு ஜனவரி, பிப்ரவரி 1947 இதழ்களில் எழுதினார். கவிஞர் கண்ணதாசனையும் தாய்நாடு ஆசிரியர் க.நாராயணனையும் பாராட்டுகிறோம். (தி.வ.மெய்கண்டார்)
திராவிட செம்புகள் கட்டுரை கவிதை எழுதுவதில் வல்லவர்கள் ..
வருத்தமான விஷயம் என்னவென்றால் இந்த கட்டுரைகளை வேலை வெட்டில்லாமல் கொஞ்சிமகிழ பேரபிள்ளைகள் முதியவர்கள்தான் படிப்பார்கள் .. அந்தோ பாவம்
நாங்கள் உண்மையிலேயே பேரப்பிள்ளைகள் படிக்கத்தான் படைக்கிறோம். பிடிவாதக்கார கருத்துப் பிழைகளுக்கல்ல!
திராவிட செம்புகள் அல்ல ,திராவிட செம்மைகள் ,தன்மான தமிழன் இவ்வளவு தூரம் படித்து எழுதியது வேலை வெட்டி இல்லாமலா ,முதியோர் படிக்க அல்ல , இளையோர் படித்து, பகுத்தறிவு பாதையில் முதியவர்கள் ஆக ,பண்பில் முதியவர்கள் ஆக ,மாற்றாரையும் மதியும் நிலையில் முதியவர்கள் ஆக ,மாற்றோருக்கு இணையாக இணையும் முதியவர்கள் ஆக ,இளையோர் அனைத்து வகையிலும் முன்னேறிய முதியவர்கள் ஆக ,பகுத்தறிந்து பாதையில் பயணிப்போம் பண்பாளர்களாக .
இதைப்பற்றி மேலும் மேலும் வளர்த்துக் கொண்டு போவதில் புண்ணியமில்லை. தமிழ் நாட்டுக் கிராமத்தில் கொட்டாங்கச்சியில் வெங்காயம் கூட இல்லாமல் கஞ்சிவாங்கி குடிப்பதை பார்த்திருந்தாலாவது பெரியார் யார் என்று தெரியும். மூன்று வேளை முக்கி முக்கி சாப்பிடும் இருண்ட கண்களுக்கு எல்லாம் நாயுடுவாகத்தான் தெரியும். உயர்ந்த நிலையில் உள்ளவன் தாழ்ந்த நிலையில் உள்ளவனுக்குக் கை கொடுப்பான் என்பதை நாம் எதிர்பார்க்க முடியாது. இன்று இங்கும் கூட நாம் அதனை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறோம். வாழ்க!
தேனீ அவர்களே… நீங்கள் தமிழையும் தமிழரின் பண்பு நலன்களையும் அறிந்துகொள்ளக் கூடியவர் என்பதால் உங்கள் வாயிலாகவே இந்தக் கேள்வியைக் கற்றிந்த , அவை நாகரிகமறிந்தவர்களுக்கு முன் வைக்கிறேன்.
தமிழ்மொழி உண்மையிலேயே இந்நாட்டில் தமிழர்களின் வாழ்வியல் மொழியாக இருக்கிறதா? அப்படி இருந்தால் … தமிழர்களின் வாழ்வில் ஒர் அங்கமாக நீக்கமற நிறைந்திருக்கும் இறைவழிபாட்டில் தமிழ்மொழி ஒரு தீண்டத்தகாதவனைப்போல் ஒதுக்கப்பட்டு , அவமானப்படுத்தும் நோக்கத்துடன் புறக்கணிக்படும் அவலம் ஏன் ஏற்பட்டுள்ளது? இதற்கும் திராவிடப் பெரியாரியம்தான் காரணமாகுமா?
தந்தை பெரியார் காங்கிரஸிலிருந்தும் நீதிக்கட்சியிலுமிருந்து வெளியேறிய பின் திராவிடர் கழகத்தை அறிஞர் அண்ணாவின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கிய பின்பு அது ஓர் அரசியல் கட்சியாகச் செயல்படாமல் சமூக விடுதலைக்கான பேரியக்கமாகப் பெரியார் திராவிடர் கழகத்தை வழிநடத்திய காலக்கட்டங்களில் தமிழர்களின் கோயில் வழிபாடுகளில் தமிழரின் வாழ்வியல் மொழியாகியத் தமிழ் புறக்கணிக்கப்பட்ட போதும் போராட்டம் நடத்திய போதும் தமிழர்களில் எவ்வளவு பேர் எந்துனை மேல்சாதியென்று சொல்லிக்கொள்பவர்கள் உண்மையாக ஒத்துழைப்பு நல்கினர்? இறைமறுப்பாளர் என்று முத்திரை குத்தப்பட்ட பெரியார், மற்ற எந்தத் தமிழனாவது இது போன்ற போராட்டங்களை முன்னெடுக்க விடாமல் தடுத்தாரா? கோவிலுக்குள் ஒடுக்கப்பட்ட , தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் பிரவேசத்தைத் தடுத்தக் காலக்கட்டத்தில் மற்ற எந்தத் தமிழினத் தலைவனாவது இந்த மக்களுக்காகப் போராட்டம் நடத்தினார்களா? அல்லது பெரியார் அதைத் தடுத்தாரா?
இந்தித் திணிப்பைத் திராவிடர் கழகம் அன்று தடுத்துப் போரிடாமல் போயிருந்தால் இன்றைக்கு தமிழகத்தில் பயன்பாட்டில் இருக்கும் அளவிற்காவது தமிழ்த் தமிழரின் வாழ்வியல் மொழியாக வழக்கத்தில் இருந்திருக்குமா? மறைமலையடிகள் போன்றோர் உருவாக்கியத் தனித்தமிழ் இயக்கம் ஏன் தமிழர்களால் ஓரங்கட்டப்பட்டிருக்கிறது? அன்று காலன்கள் போல் பூத்த திராவிடக் கவிஞர்களும் அழகுத் தமிழை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தி, தமிழில் இப்படியெல்லாம்கூட பேசவும் எழுதவும் முடியுமா என வியக்க வைத்த பேரறிஞர் அண்ணாவின் தம்பிகளும் அன்று இல்லாமல் போயிருந்தால் இன்றைக்கும் இனிமையாக ஒலித்துக்கொண்டிருக்கும் இனிய பாடல்களும் தமிழும் நமக்குக் கிடைத்திருக்குமா? இவ்வளவும் இதற்கு மேலுமாய் தமிழர் சமுதாய விடுதலைக்காய் உழைத்த இயக்கத்தையும் அதன் தலைவர் தந்தை பெரியாரையும் சாடி தரக்குறைவாய் தமிழர்களில் சிலர் செய்யும் பிரச்சாரத்திற்கு இந்தத் தமிழினம் பெறப்போகும் பலன்தான் என்ன? பொறுப்புள்ளவர்கள் பதில் சொல்லட்டும். மறுப்பாளர்கள் நாகரிகம் கடைபிடிக்கட்டும்!
காலான்கள் என்றும் கற்றறிந்த என்றும் திருத்தவும்.அல்லது திருத்தி வாசிக்கவும்
பெரியாச்சாமி அவர்களே சூபரா சொன்னேங்க ,நன்றி
நான் ரொம்ப நாட்கலாக கேட்கிறேன் இந்த தமிழன்,திராவிடன் எந்த வகுப்பை சேர்ந்தவா யென்று,அதாவது ஈ.வெ.ர.நாய்கண் கொடுத்த கௌரவ அடையாலம் சொல்லமுடியுமா.எது கேவலம் எது கௌரவம் வித்யாசம் தெரியாத ஜந்துக்கள்.நாராயண நாராயண.
மோகன் சொன்னா தப்பு நீங்கள் சொன்னா பொழுதுபோக்கு.மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருப்பதை நம்புபவர்களை நம்பிக்கையை கொச்சைப் படுத்தும் உம்மைபோன்றோர்க்கு அனாகரீகமாக தெரியவில்லையோ,நாராயண நாராயண.
தமிழன்,திராவிடன் மற்றும் திராவிட ஆதரவாலர்கள் உங்கள் பெயர்பக்கத்தில் எந்த வகுப்பு ஜாதி சேர்துக்கொண்டால் நம்ம ஈ.வெ.ர.நாய்கண் பாடுபட்டு தேடிக்கொடுத்த சின்னம் ரெக்கக்கட்டி பரக்குமில்ல,ப்லீஸ ப்லீஸ் ப்லீஸ்,நாராயண நாராயண.
காயீ தாங்கள் முதலில் தமிழ் நன்றாக எழுத படிக்க பழகுங்கள் ,மேலே உள்ள தமிழன் அமுத வரிகள் எங்கே , நரச மொழி எங்கே ,காயீ தமிழ் படிப்பார் என்று நம்புவோமே , நாராயணா நீங்க முதலில் நாராயணா உங்கள் முழுப்பெயரையும் உங்கள் ஊரின் பெயரையும் ,உங்கள் குலங் கோத்திரத்தையும் முழுமையாக இடுங்கள் நாராயணா பிறகு பார்ப்போமே நாராயணா மற்றவரின் கோத்திரம் நாராயணா உங்களுக்கு இணையாக கொண்டு நிறுத்தினோமே நாராயணா சூத்திரனை, சூத்திரன் என்ற அகராதியை மாற்றிணோமே நாராயணா , இன்னுமா நாராயணா,மீண்டும் பெரியார் வேண்டுமா நாராயணா , தந்தை பெரியாருக்கு சமர்ப்பணம்,.கேளுங்கள் நாராயணா எனது தகப்பனார் எனது அண்ணாருக்கு இட்டபெயர் [ வளையாபதி ] நாராயணா எனது பெயர் [ உதயக்குமார் ] நாராயணா என் தங்கைக்கு இட்டப் பெயர் [ மணி மேகலை ] நாராயணா ,இது எல்லாம் தமிழ் பெயர்கள் தானே நாராயணா ஆரியத்தின் மாயை நமக்கு வேண்டாமே நாராயணா , நாராயண, நாராயண ,.
அரை குறைகளுக்கே நான் பதில் எழுதப்போவதில்லை முழு போக்கனாவாகிய உனக்கு பதில் எழுதினால் அதே மோகன் மோகன் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. அது என்ன தெரியுமா? உனக்குத்தான் அறிவிருக்காதே. மோகன் மோகன் சொன்னது எப்படி ஞாபக்துக்கு வரும்? நானே சொல்கிறேன். ” என்னைப் போன்றவர்களுக் எல்லாம் பதில் எழுதலாமா பொன் ரங்கன்?” மோகன் முன்கோபியாக இருந்தாலும் உள்ளம் வெள்ளை. மோகனுக்குப் பதில் எழுதினா தப்பு இல்லை. ஆனால் உனக்கு பதில் எழுதுவது தப்போ தப்பு. அதனால அண்ணன் தமிழன் சொல்வது போல … நீ எப்படித்தான் கத்தினாலும் உனக்கு மட்டும் பதில் எழுதப்போவதே இல்லை . கத்து. நீ எழுதுவது உனக்கே புரியாம கத்து. அந்த நாராயணன் வேலைவெட்டி இல்லாவிட்டால் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!!?
KAYEE < மரியாதைக்குரிய ,மதிப்பிர்க்கூரியா ,பகுத்தறிவுமிக்க KAYEE அவர்களே நான் முன்புதான் தப்பாக எழுதினேன் ,ஆனால் இப்ப நான் ஒரு சிலர் எழுதுவதை படிய்ஹு ஆதரவு தெரிவிக்கிறேன் .கூட்டல் இருந்தால் கழித்தலும் இருக்கா வேண்டும் அப்பத்தான் கணக்கு சமமாக வரும் ,பெரும் மரியாதைக்குரிய KAYEE அவர்களே ,,
தமிழன்,,, நன்றி
“தமிழ்மொழி உண்மையிலேயே இந்நாட்டில் தமிழர்களின் வாழ்வியல் மொழியாக இருக்கிறதா? அப்படி இருந்தால் … தமிழர்களின் வாழ்வில் ஒர் அங்கமாக நீக்கமற நிறைந்திருக்கும் இறைவழிபாட்டில் தமிழ்மொழி ஒரு தீண்டத்தகாதவனைப்போல் ஒதுக்கப்பட்டு , அவமானப்படுத்தும் நோக்கத்துடன் புறக்கணிக்படும் அவலம் ஏன் ஏற்பட்டுள்ளது? இதற்கும் திராவிடப் பெரியாரியம்தான் காரணமாகுமா?”
நல்ல கேள்வி தமிழா. ஒவ்வொன்றாக பதில் காண்போம். இந்நாட்டில் “தமிழ்”, தமிழ் உணர்வு உள்ளோரிடம் மட்டுமே வாழ்வியல் மொழியாக வாழுகின்றது. தன் பிள்ளை மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் பேசினால் போதும். அம்மொழிகளில் உள்ள நூல்களை படித்தால் மட்டும் போதும். அறிவுக் கண் திறந்து விடும் என்று பல தமிழர்கள் மயங்கி தமிழை மறந்து விட்டனர். இவ்வாறு இருப்போரிடம் தமிழ் வாழ்வியல் மொழியாக விளங்கவில்லை என்பதே உண்மை. இத்தகையோர்களே இந்நாட்டில் இன்று பெரும்பான்மைத் தமிழர்களாக வாழ்கின்றனர். எம்மைச் சுற்றி வாழும் உறவினர் நண்பர் கூட்டங்களைப் பார்க்கும்பொழுதே இது கண்கூடாகத் தெரிகின்றது. பட்டணங்களில் வாழும் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் மேம்பட்ட தமிழர்கள் தத்தம் குடும்பத்தில் ஆங்கிலத்தையே தொடர்பு மொழியாக பெருவாரியாக பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே. ஏழைத் தமிழனும், தன்மானத் தமிழர்களுமே தமிழை வழக்கு மொழியாக வீட்டில் பயன்படுத்துவதைக் காணமுடிகின்றது. தமிழை அறியாத தமிழனுக்கு எப்படி தமிழர் சமயம் ஒன்று உள்ளதை அறியமுடியும்? தொடரும்.
யாமும் வாழ்த்துகிறோம் மோகன் விழிப்புணர்வு மனத்தெழிவு பெற்றமைக்கு.ஆனால் யாம் வருந்துவது வேதங்கள் கொழுத்திமைக்கு,தெய்வ சிலைகளை வீதியில் போட்டு உடைத்தது,தெய்வீகம் பொருந்தியவைகளை கேவலப்படுத்தப்பட்டது.ப்ராமணர் மீது பழி சுமத்தியது,துணிவிருந்தால் மேல்சாதி மக்களை பகைக்க வேண்டியதுதானே இந்த ஈ.வெ.ர.நாய்கண்.அதாவது சத்திரியனை.ப்ராமணரை கூண்டோடு விஷம் வைத்து கொன்று பொசுக்கி இருப்பின் வருந்தோம் ஆனால் வேத,ஆகம,புராண,இதிகாசத்தை கொழுத்தியதை மண்ணிக்கவே முடியாது.இன்று நடப்பது பாரதீய ஜனதா ஆட்சி,எல்லா கேள்விக்கும் பதில் கிடைக்கும்.சுப்பிரமண்யம் சுவாமி கோபம் தனியாது.நாங்கள் உலகம் எங்கும் பெறும் அதிகாரத்தில் வியாபித்து வுள்ளோம்.ஆயினும் சிறுபுத்திகொண்டு அதிகாரம் கொண்டு,பணபலம் கொண்டு திராவிடர் கொட்டத்தை அடக்கவில்லை கிருஷ்ணன் வருகையை எதிர் கொண்டு காத்திருக்கின்றோம்.பொறுத்திறும்,விடியலுக்கில்லை தூரம்.வாழ்க நாராயண நாமம்.
ஹின்ராப் காலத்தில் ஒன்றான நம் ஹிந்து மக்கள் பல கட்சியில் மாட்டி சிக்கி சிதைந்துபோய் வுள்ளலோம்.இதில் ஆமையும் அமீனாவும் நுழைந்தால் என்னவாகும்.தெழங்கர்க்கு,மலேசிய சயாமியர்க்கு மொழியை வளர்க்க அரசு தேவையான மாணியம் வழங்கிவிட்டது இனி வரும் காலத்தில் எல்லேறும் தம் மொழி வளர்க்க சுதந்திரம் கொடுக்கும் என்று நம்புவோம்.ப்ராமணர்களுக்கு அரசு இடம் மாத்திரம் கொடுத்தால் போதும்,பெரிய பட்டனத்தையே உருவாக்குவோம்.வாழ்க நாராயண நாமம்.
தன்மானத் தமிழனே, தமிழரில் நந்தனாராகத் தம்மைக் குறித்துக் கொண்டவரும், இந்து தர்மம் பேசிய இந்து தர்மரும் இன்னும் இவர்களைப் போன்றோருக்கும், திராவிடனும், தமிழனும், உதயகுமாரும் சொல்லாத தகவல் ஒன்றை எல்லோரும் அறிய வேண்டும். திராவிட இயக்கத்தினர், தமிழ் நாட்டில் இந்து தர்மத்தில் இருக்கும் வருணாசிரம கோட்பாட்டை எதிர்த்த பொழுது, அதன் உக்கரத்தை உணர்ந்த பிராமணர்கள் அதனை எதிர்க்க முடியாமல் தடுமாறினார்கள். பிராமணர்கள் கற்றறிந்த அறிஞர்கள். எவ்வொரு ஆயுதத்தையும் கையில் ஏந்தாது, அவர்கள் எதனையும் அறிவைக் கொண்டு எதிர்க்கும், சமாளிக்கும், முறியடிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். எப்படி சைவத்தைக் கொண்டு சமண, புத்த மதத்தினரை விரட்டி பின்னர் சைவத்தையும் சமரசம் என்ற பெயரில் சாகடித்தனரோ அதைப் போலவே, அவர்கள் தமிழ் நாட்டில் கையாண்ட கலை ஒன்றும் உள்ளது.யார் ஒருவர் ஒரு பிராமணரிடம் தீட்ச்சை பெற்றுக் கொள்கின்றாரோ அவரே ஆலயங்களில் குருக்களாக பணிபுரிய முடியும் என்ற கட்டளையை இட்டனர். தீட்சை என்பது சுருக்கமாக குரு மாணவனுக்கு உபதேசம் செய்வதாகும். இந்த குருவின் உபதேசத்தை நிந்தனை செய்யும் எவ்வொரு மாணவனுக்கும் மோட்சம் இல்லை. மேலும் அடுத்தப் பிறவி ஈனப் பிறவியே என்றும் போதிக்கப் பட்டது. இவ்வாறான பிராமண குருக்களால் மாணவர்களாக பயிற்சி பெற்ற இதர தமிழர்களுக்குப் போதிக்கப் பட்டது சமஸ்கிருதத்தில் இருக்கும் வேத மந்திரங்கலேயாகும். இதைத் தவிர்த்து திருமேனி வழிபாட்டிலும் சரி வேள்வி வழிபாட்டிலும் சரி வேறு எம்மொழியிலும் மந்திரங்கள் ஓதினாலும், பிராத்தனைகள் செய்தாலும் மேற்கூறிய ஈனக் கதியே என்றும் போதிக்க்கப் பட்டது. தமிழருக்கு குரு நிந்தனை செய்யக் கூடாது என்பது அவர் வாழ்வியல் நெறி. பிராமணன் சொன்னதை மீறுவான தமிழன்?. குரு நிந்தனையாகி விடுமே!. இவ்வாறு தீட்சை கொடுத்து பிராமண வசமாகிக் கொண்ட தமிழர்கள் வெள்ளாளர்கள், சைவ முதலியார்கள், பிள்ளைமார்கள் என்று தங்களை அடையாளமிட்டுக் கொண்டவர்களே. இத்தகைய தமிழர்களே தமிழ் நாட்டில் தொன்று தொட்டு பெருநிலக்கிலார்களாகவும், கற்றறிந்த புலவர்களாகவும், பெருஞ்செல்வம் படைத்தவர்களாகவும் வாழ்ந்து வந்தனர்.இவர்களின் பணபலத்தையும், படைபலத்தையும் கொண்டே பிராமணன் திராவிட கழகத்தாரை எதிர்த்தனர். தமிழனையே கொண்டு தமிழனை அடிக்கும் தந்திரம் அறிந்தவன் பிராமணன். அதைத்தான் செய்தனர் பிராமணர். இவ்வாறு பல நூறு ஆண்டுகளாக மாறிப் போனவர்கள்தான் இன்றைய வைதீகச் சைவர்களாகி விட்ட பெரும்பான்மையான தமிழ் நாட்டு சைவ ஆதினங்கள். இத்தகைய சைவ ஆதினங்களே வல்லார் போன்றோரை சமயத் தொண்டு செய்யவிடாமல் அல்லாட வைத்தனர். அதுவே நொந்து நூலாகிப்போன வள்ளலாரை ஜோதி வழிபாட்டிற்கு இட்டுச் சென்றது என்பது வேறொரு கதை. இந்த வைதீக சைவ ஆதினங்களாவதர்க்கு முதல் கட்டுப்பாடு மேற்கூறிய மூன்று வகுப்பினரில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது. அப்புறம் எப்படி தமிழர் வழிபாட்டில் தமிழ் ஓங்கும்?. அப்புறம் ஏன் நால்வர் பெருமக்கள் வழங்கிய திருமுறைகளைக் கொண்டு திருமேனி வழிபாடு செய்வது தவறு என்று சொல்லமாட்டார் தருமபுரி ஆதினகர்த்தர்?. அப்புறம் எப்படி தமிழன் தமிழர் சமயத்தை அறிவான்?. தொடரும். .
தமிழர் இறைவழிபாட்டில் தமிழ்மொழி ஒரு தீண்டத்தகாதவனைப்போல் ஒதுக்கப்பட்டு , அவமானப்படுத்தும் நோக்கத்துடன் புறக்கணிக்படும் அவலம் ஏன் ஏற்பட்டுள்ளது என்பதற்குப் பதில், தமிழனை இந்நாள் வரை அவன் கண்ட சமயமான சைவ சமயத்தை உணராதவாறு தமிழனைக் கொண்டே மறைத்து வைத்திருக்கும் பிராமனின் சாமர்த்தியமே. வேதமே தமிழரின் சமயம், வேதாந்தமே தமிழரின் சமய தத்துவம் என்ற மாயையில் நம்மை பிராமணனும், அவரைச் சார்ந்த தமிழர்களும் கட்டி வைத்திருப்பதே காரணம். இன்றும் இந்நாட்டில் சைவத்தை அதற்குரிய உயர் நிலைக்கு உயர்த்த பாடுபடும் மலேசிய சைவ சமய பேரவையின் முயற்சியில் முட்டுக் கட்டை போடுவது மலேசிய தமிழர்களே. திராவிட கழகத்தார் அல்ல. சிவ நிந்தனை குல நாசம் என்பதை அறியாமல், பரம்பொருள் கோட்பாட்டை தமிழன் அறிந்தால் அவன் ஆன்மீகத்தில் உயர்ந்தவனாகி விடுவான் என்ற எண்ணத்தில் அதனை தடுக்க பிறர் விரிக்கும் சூழ்ச்சி வலையில் நாம் சிக்க மாட்டோம். சீராகச் சிந்தனை செய்தே தமிழருக்கு பரம்பொருள் வழிபாடே சிறந்தது, நாயன்மார்கள் அருளிய தமிழ் பாமாலைகளே துதி பாடி தமிழர்கள் வழிபாடும் சைவ கிரியைகள் என்று தமிழர்களுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றோம். திராவிட கழகத்தார் தமிழருக்குச் செய்த மாபெரும் சமயத் தொண்டு ஒன்று உள்ளது. இந்து மதம் தமிழரின் சமயம் அல்ல. சைவமே தமிழரின் சமயம் என்று உணர வழி ஏற்படுத்திக் கொடுத்தது திராவிட கழகத்தார். தம்மை அறியாமலே தமிழர்களுக்குச் செய்த நற்தொண்டு என்றே கூறுவோம். சைவ சித்தாந்தமே தமிழரின் சமய தத்துவம் என்பதை அறிய வழி வகுத்ததே திராவிடன் பகுத்தறிவால் பார்பனியத்தை எதிர்த்ததாகும். அவ்வாறு இல்லையேல், இன்றும் தமிழர்கள் தமிழரின் சமயம் 63 நாயன்மார்கள் காட்டிய சைவ சமயம் என்பதை உணராமல் பிராமணன் வகுத்த மாயையில் இந்து தர்மம் என்ற “மதத்தில்” கட்டுண்டு வாழ்ந்திருப்போம். இதற்கு தமிழர்கள் பெரியாருக்கு வாழ்நாள் பூராவும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கின்றோம். “தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமால் போனாலே வேதாந்தம்” என்று பாட்டுக்கொரு புலவன் பாடி வைத்ததை அறிவார்ந்த தமிழர்கள் அறிந்துதான் வைத்திருக்கின்றார்கள் தமிழா.
தேனீ அவர்களே ! நீங்கள் திராவிடனுக்கு பகைமையும் இல்ல நட்பும் இல்லை என்று சொல்லி குழப்பியது போதும் ! தமிழர் வாழ்வியல் பற்றி பேச அருகதை இருக்க இல்லையா என்று நீங்களே அறிய வேண்டும் ! நீங்கள் வயது முதிர்ந்தவர் என்று இன்னொரு முகப்பில் கூறி உள்ளீர்கள், தமிழனின் சைவ நெறி திராவிடனால் மறுக்க படுகிறது என்பது எதார்த்தமான உண்மை ! தமிழ் ஊடகங்கள் திராவிடன் கைகளில் இருப்பதால் வந்த வினை !
தேனியின் பதிவு இது // மலேசிய சைவ சமய பேரவையின் முயற்சியில் முட்டுக் கட்டை போடுவது மலேசிய தமிழர்களே. திராவிட கழகத்தார் அல்ல, அட பாவி உனக்கு இதை சொல்ல எப்படி மனம் வந்தது ? திராவிட கழகத்தார் தமிழருக்குச் செய்த மாபெரும் சமயத் தொண்டு ஒன்று உள்ளது. . தம்மை அறியாமலே தமிழர்களுக்குச் செய்த நற்தொண்டு என்றே கூறுவோம்.எந்த மலேசிய 63 நாயன்மார்களை குறித்து பேசி இருக்கிறான் ? திராவிடன் சைவ சித்தாந்தமே தமிழரின் சமய தத்துவம் என்பதை அறிய வழி வகுத்ததே திராவிடன் பகுத்தறிவால் பார்பனியத்தை எதிர்த்ததாகும். அட பாவி மீண்டும் சொல்கிறேன் அட பாவி ! எத்தனை திராவிட கொள்கை கொண்டவர்கள் சைவமோ அல்ல சைவ வழிபாட்டி இருக்கிறார்கள் ? அது அவர்களின் கொள்கைக்கு எதிர்பாச்சே வயசான தேனீ அவர்களே ? இறை வழிபாடே இல்லை என்று சொல்லும் திராவிடருக்கு நீங்கள் ஏன் திராவிடருக்கு சாதகமாக குரல் கொடுக்கிறீர் ? தேனீ அவர்களே நீங்களும் புற முதுகை காட்டி ஓடிவிடுங்கள் மானம் இருந்தால் ! நீங்களும் பக்கா திருட்டு திருடரே !
அன்பு செம்பருத்தி ஆசிரியர்களே ! தணிக்கை என்ற பெயரால் எனது கருத்தை குறை பிரவசமாக வெளியீடு செய்யவேண்டாம் ! தமிழர் நந்தா என்ற பெயரில் வரும் கருத்துக்கு நானே பொறுப்பு ! உங்களுக்கு எனது ஈமெயில் id மூலம் தெரியும் என்று நம்புகிறேன் !
நல்ல வேலை அண்ணன் தமிழன் அவர்களும் , அண்ணன் திராவிடன் அவர்களும் ,அண்ணன் தேனீ அவர்களும் ,உதயக்குமார் நானும் ,தமிழ் நந்தா அருகில் இல்லை , இருந்தால் நம்மை நாராயண வதம் செய்து விடுவார் ,செம்பருத்தி ஆசிரியர் அவர்களை மிரட்டாமல் விட்டால் சரியே ,நமக்கு பின்பாட்டு பாடத்தெரியாதே என்ன செய்வது சுயமரியாதை நம்மை தடுக்கின்றதே , செம்பருத்திக் களம் , இதுபோல் களம் இதுவரை கண்டதுண்டோ , தமிழன் அவர்கள் அமைத்து விட்டார்கள் களம் இன்று கிறங்கி போய் நிக்கின்றது நாம் தமிழர் மனம் ,அனைத்தும் படித்து விடை சொல்லுமா தமிழர் இனம் , [ மலரட்டும் தமிழ் ஈழம் ] .
நன்றி தேனி… தங்களின் அறிவின் ஆழத்தைச் சுவைக்கும் அதேவ வேளையில் அறியாதோருக்குத் தமிழனின் நாகரிகமான ஓர் கடவுள் கோட்பாடும் , தாய்த்தமிழ்ப் பற்றும் உணர்த்தப்பட்டுத் தமிழர் வாழ்வில் எங்கும் தமிழ் , எதிலும் தமிழ் என்னும் நிலை உருவாகிட வேண்டும் எனும் நல் நோக்கத்தில் எழுதிய பதிவிற்குத் தாங்கள் விடைதரும் வகையில் தரும் விளக்கம் அருமை. முடித்து விடாமல் தொடருங்கள். பெரியாரின், பேரறிஞர் அண்ணாவின் அவர்களின் முதன்மையான உள்ளக் கிடக்கை என்னவென்றால் தமிழன் ஆரியப் பிடியிலிருந்து விடுபட்டு, பகைவன் விதைத்த எல்லா மூடநம்பிக்கை கட்டுகளிலிருந்தும் விடுபட்டவனாய் உலக மனித குலத்தின் மத்தியில் மதிக்கப்படும் நிலைக்கு உயர வேண்டும் என்பதேயாகும். அதற்காக அவர்கள் இருவரும் கையாண்ட முறைகள் வேறுபட்டாலும் நோக்கம் என்பது ஒன்றாகத்தான் இருந்தது. அண்ணா இதமான, அழகியத் தமிழைப் பயன்படுத்தி பகுத்தறிவை ஊட்டினார்.தந்தை பெரியாரோ அதிரடி அறுவை சிகிச்சை வகையைப் பயன் படுத்தினார். தமிழர்களில் பலர் பெரியார் ஏற்படுத்தியக் காயங்களைப் பார்க்கிறார்களேயன்றி அந்தக் காயங்களின் மூலமாக அவர் அகற்றிய தமிழினத்தின் வேர்களை அரித்துக்கொண்டிருந்த உயிர்கொல்லிகளை காணத் தவறினர் ; இன்னும் தவறுகின்றனர் என்பது வெளிச்சம். எவனுக்கும் இல்லாத அக்கறை இவனுக்கு ஏன் வந்தது? இவனை ஒழித்தால் எல்லாம் சரியாகிடும் என்று நினைத்த போது ஒரு படித்த இளைஞர் படை அறிஞர் அண்ணாவின் எழுச்சி மிகு எழுத்துகளால் திராவிடர் கழகத்தின்பால் ஈர்க்கப்பட்டு இயக்கம் வேகமாகச் செயல்பட்டுவ வந்தது. தமிழ்த்தாய் தன்னைப் பிணைத்திருந்த வடமொழி எனும் சங்கிலியிலஇருந்து விடுபட்டு அண்ணாவின் தமிழால் அழகு கோலம் பூண்டாள். பன்மொழி அறிஞர் மறைமலையடிகளோ தூயத் தமிழியக்கத்தை ஏற்படுத்தி தமிழன்னையைப் பிணைத்திருந்த தளையினை அகற்றிட அரும்பாடு பட்டார். அதை, அந்த போராட்டங்களின் கடுமையை இப்போது வறட்டுக் கூச்சல் போடுபவர்களால் புரிந்து கொள்ளவே முடியாமல் போய்விடுமோ எனும் கவலை எனக்கு சாகும் நாள்வரை இருக்கும் போலிருக்கிறது.
ஆனால் …தமிழகத்திலோ நம்பிக்கை ஒளி ஏற்பட்டுள்ளது. பெரியாரால் விழிப்புணர்வெய்திய ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகளில் பலர் தமிழ்ப்பற்றுள்ள மற்றவர்களின் துணையுடன் அரிய பெரிய ஆய்வுகளை மேற்கொண்டு மறைக்கப்பட் தமிழினத்தின் மாண்புகளை வெளிக்கொணர்கின்றனர் எனும் மனங்குளிர் செய்தியாகும். அவர்கள் பெரியாருக்கு இன்னும் நன்றியுணர்வுடன் இருக்கின்றனர் என்பது நற்செய்தியாகும்.
அப்படிப் பெற்ற ஒரு புது கண்டுபிடிப்புதான் தமிழர் வரலாற்றின் இருண்டகாலம் என்பது வெளிச்ச காலமாகியது. கடைசி பாண்டியர்களின் ஆட்சிக்கும் பல்லவர்களின் ஆட்சிக்கும் இடையில் அறியப்படாத களப்பிரர்களின் ஆட்சி எனும் இருண்ட காலத்திற்கு விடை , அந்த களப்பிர ர்கள் ஆரிய அடிமைப் பாண்டியர்களை எதிர்த்துப் போரிட்டு வென்று இருண்ட காலங்கள் என்று சொல்லப்பட்ட காலத்தில் அரசோட்சிய முதல் தமிழ்ப் போராளிகளே என்பதாகும். அவர்கள் ஆரியத்தையும் அதன் கொடுக்குப் பிடியில் அறிவிழந்து சிக்கிக் கிடந்த பாண்டியர்களின் ஆட்சியை அகற்றிய தமிழ் வீரர்களே அந்தக் களப்பிரர்கள் எனும் செய்தி. அதன் பிறகு வந்த பல்லவர்கள் எனும் ஆரிய அடிவருடிகளின் ஆட்சி களப்பிர ர்களின் ஆட்சியை வெற்றி கண்டு ஏற்பட்ட ஆட்சியாகும். பல்லவர்களின் ஆட்சி காலத்தில் மீண்டும் பார்ப்பனியம் அரசர்களை ஆட்டிப்படைத்தது. தமிழ்ப் புலவர்களின் ஆலோசனையில் அரசியல் நடத்திய நமது மன்னர்கள் பார்பனியர்களை ராஜக்குருக்களாக வைத்துக்கொண்டு, பார்ப்பனிய ஆலோசனையில் ஆட்சி செலுத்தி தமிழ்ப் புலவர்களாகிய அறிஞர்களை ஒதுக்கியதால் தமிழர்கள் காலாகலத்திற்கும் பார்பனியத்திற்கு அடிமைப்பட நேர்ந்தது.
இது போன்ற உண்மைகள் ஆரியர்களால் நமக்குக் கிடைக்கும் என்று எதிர்பாரத்திட இயலாது. உணர்வுள்ள தமிழர்களை எழுப்பிய பெரியார் போன்றோரின் தொண்டின் பலன் இந்த ஆய்வின் முடிவு. இவ்வளவு காலம் சரித்திர ஆசிரியர்களால் வெளியில் இருந்து வந்த அன்னியர்களே அந்த களப்பிர ர் என்று நம்பி இருந்த வேளையில் , இந்த ஆய்வின் ஆதாரம் மூலம் அந்த இருண்ட கால ஆட்சி என்று சொல்லப்பட்ட காலத்தில் ஆட்சி செய்தவர்கள்தான் முதல் தமிழ்ப் போராளிகளின் ஆட்சியாகும் என்னும் உண்மை வெளிச்சமாகியது.
தேனீயின் எழுத்தை தொடர வேண்டுகிறேன். பல உண்மைகள் பலத் தமிழர்களுக்குத் தெரியட்டும்.
களப்பிரரின் ஆட்சிக் காலத்தில், தென்னாட்டில் பிராமினிசம் ஒடுங்கி பிற மதங்கள் தழைக்க வழி விட்டதை பினாங்குகாரர் முன்பொரு பகுதியில் தெளிவாக விளக்கினார். அவரே அதைப் பற்றி இங்கு கருத்து எழுதினால் அருமையாக இருக்கும். திருமுறை வகுப்பிர்க்குச் சென்று விட்டு வந்து கருத்து எழுதுவோம்.
திராவிடம் தான் தமிழனின் எதிரி.தமிழை அடையாலம் தெரியாது அழித்து புதைக்க புரப்பட்டவன் ஈ.வெ.ர.நாய்கண்.ஒருவர் திராவிடன் என்ற பெயரில் திராவிட பற்றி எழுதுகிறார் சரி ஆனால் தமிழன் என்ற பெயரில் திராவிடம் பரப்புவது தமிழை கொச்சை படுத்துவது சரியன்று.இந்த தேனீ ஒரு விஷம் ஜந்து,திராவிடம்,ஈ.வெ.ர.நாய்கண் போன்ற தமிழ் துரோகி பெயரை பயன்படுத்தாது சைவம் என்ற பெயரில் திராவிடத்தை எவறும் அறியாவண்ணம் புகுத்தும் நோக்கில் கிலம்விட்டனர்.திருக்குறளையே திருத்தவேண்டும் என்கின்றனர்.மலேசியாவில் அதிகம் தமிழர்கள் ஆலயங்களில் குருக்களாக தெய்வ தொன்டு செய்து வாழ்கின்றனர் என்பதை மரந்து பேசுகின்றனர்.நம்பிக்கை வேண்டும் என்றால் தன் மகனை ஏதாவது ஒரு ஆலயத்துக்கு அழைத்து சேர்க்க தகுதி விவரம் விசாரித்து பாருங்கள்.இதில் நிலைத்து நிற்பவர் சிலரே,இதை அனுசரித்தே தீட்சைகள் கொடுக்கப்படும் காரணம் கற்பித்த, கற்ற கலை தொடரபடவேண்டும்,தொடரபடுமா அறிந்து தீட்சை கொடுக்கப்படும்.ஆகையால் மலேசியாவில் இந்த பிரட்சனை கிடையாது மற்றும் ஒரு மூன்று வருடம் தொன்டு செய்த பின் இந்தியா சென்று முழுமை பெருகின்றனர்,இங்கே வகுப்பு,ஜாதி வித்தியாசம் கிடையாது.ப்ராமணர்க்கு கல்வியே தகுதி அடிப்படை.பின் ப்ராமண பெண்ணையே திருமணம் செய்து வாழ்கின்றனர்.தமிழனை தமிழனாக வாழவிடுங்கள்,தமிழ் மன்னில் தமிழனை ஆழவிடுங்கள்.நான் ஒன்று கேட்கவேண்டும் தமிழனை மேல் சாதி முத்திரையா,அதாவது முக்குலத்தோர் வரிசையா அல்லது தாழ்த்தபட்டவரா,ஒதுக்கப்பட்டவரா,பிற்படுத்தப்பட்டவராகவா என்று விளக்க முடியுமா,உங்கள் ஈ.வெ.ர.நாய்கண் கணக்கில் தமிழர் எந்த குருப்பில் சேர்த்து உள்ளீர்கள்.வாழ்க நாராயண நாமம்.
பாரத மக்கள் கட்சி, அட அது தான்யா இந்தியிலே பாரதிய ஜனதா பார்ற்றியைச் சேர்ந்த ஓராளுக்கு தங்கத் தமிழர்கள் குமரித் தமிழர்கள் வாக்குப் போட்டாங்களே. இவருக்கு வாக்குப் போட்டத்துக்கு பதிலாக தமிழர்களை வரிசையாக சுடுகாட்டில் படுக்க வைத்து வாய்க்கு அரிசிப் போட்டுருக்கலாம்.
ஏற்கனவே இந்தியக் கூட்டாட்சியில் தமிழன் படும் பாடு பெரும்பாடு. இதிலே இது மாதிரி கண்ட கஸ்மலம் ( அட ! சமஸ்கிருத வாரமாமே அதான் சமஸ்கிருதத்திலேய் திட்டினேனாக்கும் ).. எல்லாம் மிச்சம் சொச்சம் தமிழன் உசிரையும் வந்தவன் நின்றவன் பேண்டவன் என எல்லோருக்கும் விற்றுப்பிடும் போலிருக்கே.
இந்தியைத் திணிச்சாங்க, திராவிட விடுதலையை அழிச்சாங்க, தமிழ் மொழியை அழிக்க என்னென்னவோ செஞ்சு பார்த்தாங்க, தமிழ் நாட்டில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைச்சாங்க. இதுக்கு என ஒரு பட்டி பார்ப்பனர், மலையாளி, அதுகளுக்கு கழுவி விட கொஞ்சம் தமிழ் கூட்டம் வேலை பார்க்குது. வேவு பார்க்குது.
சுனா சானா மத்திய அமைச்சரானதும் ராஜபக்ஷே வீட்டு நாய்க்குட்டியாட்டம் குழவி குழவி கொழும்பு பக்கமா வாலாட்டிட்டு அலையுது. கச்சதீவு எல்லாம் தமிழ்நாட்டுக்கு சொந்தமில்ல, அது சிங்களவனுக்கு என ஆணித்தரமா மத்தியில் இந்திவாலாக்கள் சொல்லியாச்சு. என்னத்துக்கு மீன் பிடிச்சிட்டு, இருக்கிற கடற்கரை எல்லாம் வைகுண்ட பெருமாளிடம் அடமானம் வச்சிட்டு அப்படியே கப்பல் ஏறி மாலை தீவு தாண்டி போயிடுங்க என சொல்லாம சொல்றாங்க.
இந்திய விடுதலை பெற்றது தொட்டு மத்திய அரசு தமிழகத்துக்கு செஞ்சது எல்லாமே பச்சத்துரோகம் தான். தமிழர்கள் பெரும்பான்மையா வாழ்ந்த சித்தூர், திருப்பதி, நகரி, கோலார், கொள்ளேகால், திருவனந்தபுரம், கொல்லம், பீர்மேடு, தேவிகுளம், பாலக்காடு – சித்தூர் என எல்லாவற்றையும் தெலுங்கு, கன்னடம், மலையாள தேசத்துக்கு தாரை வார்த்தார்கள். நல்லவேளை இலங்கையோடு தமிழகத்துக்கு நில எல்லை கிடையாது, அப்படி ஏதும் இருந்திருந்தா, திருச்சி, தஞ்சாவூர், ராமேஷ்வரத்தைக் கூட சிங்களவருக்கு கொடுத்திருப்பார்கள். அதிலயும் ஏன் குறை வைப்பானே என கச்சத்தீவையும் கொடுத்தார்கள். தமிழோடு நெருங்கிய தொடர்புடைய குடகு மொழி பேசுற பகுதி தமிழகத்தோடு தானே சேர்த்திருக்க வேண்டும். அதையும் கன்னடக் காரணக்கு கொடுத்தான்.
பாருங்கள் பெரியாறு அணை இருக்கிற பகுதியான பீர்மேடு கேரளாவுக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை. காவிரியாறு உருவாகும் குடகு கருநாடகத்துக்குப் போச்சு தண்ணீர் வரவில்லை, பாலாறு உருவாகும் சித்தூர் ஆந்திராவுக்குப் போச்சு, இல்லாத கடவுள் புண்ணியத்திலே அங்கே மழையே பெய்யாமல் தண்ணீர் வருவதில்லை. கச்சதீவையும், கடல் எல்லையையும் இலங்கைக்கு விட்டுக் கொடுத்தார்கள் மீன் பிடிக்கிறவன் வாழ்க்கை நாஸ்தியாச்சு. தண்ணீர் இல்லாததால் காவிரி படுகையும், வைகைப் படுகையும் காஞ்சு வறண்டு போச்சு. விட்டுருந்தா சென்னையைக் கூட ஆந்திராவுக்கு கொடுக்க ரெடியானாங்க, ஏதோ நம்மாளுங்க கொஞ்சம் முழிச்சிட்டதாலே மிஞ்சிச்சு.
அதுக்கப்புறம் இந்தியைத் திணிச்சாங்க, சாணியைக் கரைச்சு வாயில ஊற்றினாங்க, எல்லாவற்றையும் எதிர்த்து வெற்றி கண்டா, பார்ப்பனையும், பார்ப்பன அடிவருடிகளையும் திமுகவில் நுழைத்து ஒட்டு மொத்த திமுக-வின் சித்தாந்தமே நாறிப் போச்சு..
தமிழ் வளரக் கூடாது என தனியார் பள்ளிக்கு வழிவிட்டாங்க, இன்னைக்கு அது ஆங்கிலமா புளிச்ச ஏப்பமாய் நாற்றமடிக்குது. இருக்கிறது கூட பொறுக்கலை இந்த வக்கற்ற பயல்களுக்கு, குமரியையும் கேரளாவுக்கு கொடுப்பாராம் பொன்னர் ராதாகிருஷ்ணன் சொல்றாரு. கேட்டானா , மலையாளி குமரியை கேரளாவுக்குத் தா என கேட்டானா? இவராவே வேட்டியை அவுத்துக் கொடுப்பேன் என கோவணத்தோடு ஒத்தகைக் காலில் நிற்கிறாரு.
ஏன், குமரியை மட்டுமே ஒட்டு மொத்த தமிழகத்தையே கேரளாவுக்கு கொடுக்கலாமே. வேண்டாமா. அப்ப தமிழ்நாட்டை மூனாப் பிரிச்சு ஒன்னை சீமாந்திராவுக்கும், ஒன்னை கருநாடாகத்துக்கும், ஒன்னை கேரளாவுக்கு கொடுத்திடுங்களேன். ஓ ! ராமேஷ்வரம் தீவு மிஞ்சுதா, அதை ராஜபக்ஷேவாக்கு கொடுத்திடுங்கோ. சந்தோஷமா இப்போ. தமிழன் இருப்பானா? எல்லோருக்கும் செவ்வாய் கிரகத்துக்கு டிக்கேட் வாங்கி ஓரேயடியா அனுப்பிடுங்கோ, நாஷாமாப் போறோம்.. போதுமாயா.
என்னத்த சொல்ல !!! இது தான் ஆட்டம் ஆரம்பம் ! இனி போகப் போகத் தான் இருக்கு ! பார”தீய” ஜனதாக்களின் அட்டகாசங்கள், அப்பப்பா !!!
நன்றி:- கோடங்கி
சிறிய இடைவெளி கிடைத்தால் போதும்,உங்கள் சித்து விளையாட்டை அரங்கேற்றிடுவீர்.தாய் மொழி,தேசிய மொழி,உலக மொழி என பல மொழிகள் உள்ளது.கணினிக்கு தனி மொழியுன்டு அதுபோல் தாய் மொழியென்பது தான் ஆசல்.தேசிய மொழி பல இனங்களுக்கிடையே புரிந்துனர்வு மொழி ,உலக மொழி யென்பது அனைத்து மக்களும் தங்கள் கருத்தை தாய் மொழியின் விஷேசத்தை உலகுக்கு கொண்டு செல்லும் மொழி.பிற அனைத்து மொழியும் நம் தாய் மொழியை நாட்டுக்கும்,உலகுக்கும் கொண்டு சேர்கவே ஆனால் பிற கலாச்சாரத்தை நம் வீட்டுக்குல் கொண்டுவருவதற்கல்ல.வீட்டுக்குல் தாய்மொழியே சிறந்தது.தாய் மொழி என்றால் என்ன தெரியுமா ?,ப்லீஸ் வாழ்க நாராயண நாமம்.
எழுதுவதைப் படித்து புரிந்துக் கொள்ளாமல் வசைபாடும் கருத்தாளர்கள் எதையும் அறியாத மட்டிகள் என்று தங்களைத் தாங்களாகவே அறிமுகப்படுத்திக் கொள்வது வியப்பளிக்கின்றது. திராவிட கழகத்தார் இறைக்கோட்பாட்டை எதிர்த்தர்க்குக் காரணமே தென் இந்தியர்களும், பிராமண தொழில் செய்யாதவர்களும் தீண்டத்தகாதவர்களாக எண்ணி ஒதுக்கப் பட்டதே. ‘தன்மானத் தமிழன்’ கொஞ்ச நாட்களுக்கு முன்பு வேற்றோர் கட்டுரை பிரிவில் விஜய் டிவியின் “நீயா, நானா” நிகழ்ச்சியில் நடந்த கருத்தாடலின் வலைச் சுட்டியை பதிவு செய்திருந்தார். அதைப் பார்த்த பின்புமா இப்படி ஒரு அறியாமை நந்தனுக்கு?. தமிழர் சமயத்தை அறிந்த, பார்ப்பனியத்தை ஒதுக்கிய சண்முகவேல் முருகானாருடன் ஒத்தாசையாக இருந்து பார்ப்பனியத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்களே அந்த தமிழ் திராவிடர்களை அறியாத நீர் பிறரை “பாவி” என்பது தகுமா?.அத்தகைய தமிழர்களையா தங்கள் வார்த்தையில் “பாவி” என்பீர்கள்?. அட அப்பாவியே!. யார் நண்பன், யார் பகைவன் என்று கூட அறியாமல், உண்மை எது, பொய்மை எது என்று கூட புரியாமல் கருத்து எழுதுவதால் என்ன பயன்?. திராவிட கழகத்தார் “அறியாமல் தமிழருக்கு செய்த மிகப் பெரிய சமய தொண்டு” என்றுதானே சொன்னேன். இது சிவபெருமானின் திருவிளையாடலே. தமிழர்கள் சைவத்தை மீட்டெடுக்க அதனை மிதித்து நசுக்கி கொண்டிருக்கும் பிராமணர்களை ஒடுக்கி நாம் நமது சமயத்தை அறிய வழிவகை ஏற்படுத்தியது இந்த திராவிட கழகத்தாரே. இவர்கள் இல்லையேல் பிராமிநீசம் இன்றும் நம்மை அடிமைப்படுத்தியே வாழ்ந்திருக்கும். சமயத்தை ஞான நெறியால் அறியாமல், சமய மூட நம்பிக்கையில் நம்மவர்களை அழுத்தி அறியாமையில் வைத்திருப்பது இந்த பிராமண புராண இதிகாசங்களே. அவ்வாறே சமய மூட நம்பிக்கையில் தமிழன் எந்நாள் வரை வாழ்கின்றானோ அந்நாள் வரை பிராமணனுக்கு மகிழ்ச்சியே. இதை ஏன் நந்தனுக்கு சொல்ல வேண்டும் என்றால் அவர் சமயம் என்னவென்பதை அறியாமலேயே பிறருக்கு பாடம் புகட்ட கிளம்பியதுதான் காரணம். தொடரும்.
காய் என்பவர் தன்னை தெலுங்கு வம்சாவளி என்று அறிமுகப் படுத்திக் கொண்டு “திராவிடம் தான் தமிழனின் எதிரி. தமிழை அடையாலம் தெரியாது அழித்து புதைக்க புரப்பட்டவன்” என்று வசைபாடுவது ஏன் தெரியுமோ?. இந்த திராவிடத் தமிழன் அழிந்தால், அந்த திராவிட தெலுங்கு பிராமணன் குளிர் காயலாம் என்ற நப்பாசைதான் காரணம். இவ்வகை கருத்து பதிவிற்கே தமிழன் தனி ஒரு கட்டுரை வரைய நேர்ந்தது. தமிழர்களுக்கு வேண்டிய நிறைய அறிவுப்பூர்வமான செய்திகள் கிடைத்தது. நன்றி கையிக்கு. நீர் இல்லையேல் தன்மானத் தமிழர்களுக்கு இந்த விளம்பரம் கிடைத்திருக்காது. தமிழர்களை தலை நிமிர்த்தி நடக்க வைத்த தமிழனுக்கு நன்றி.
தேனீ நீர் சுதப்பாதீர்,தமிழரை ஏன் திராவிடர் என்று மாற்றவேண்டும்.பெயரில் மட்டுமே தமிழகம் ஆனால் எங்கிலும் எதிலும் திராவிடம்,அரசியல் கட்சி அனைத்தும் திராவிட கழகம்.எங்கே புதைத்தீர் தமிழனை,இந்த தேனீ தன் இரு பெண் பிள்ளைகளை சமஸ்கிரதத்தில் பட்டதாரி ஆக்கினேன் என்று பெருமை பேசியவராயிற்றே ஆனால் தமிழ் பற்றாலர்.யாம் எல்லா பிள்ளையையும் தமிழ் படிக்க செய்தோம்,தமிழ் பள்ளிக்கு ஆதரவு கொடுத்தோம்.தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழியென்று பகிரங்கமாக ப்ரஸ்ஸுக்கு பேட்டி கொடுத்தவன் தானே இந்த ஈ.வெ.ர.நாய்கண் அவனை தானே இந்த தேனீ போற்றுகிறார் ஆதலால் யாம் தேனீயை ஹராம் என்று அறிவிக்கிறோம்.மொழிகள் அனைத்தும் இறைவனால் அருளப்பட்டது,ஆதலால் யாம் எம்மொழியையும் எம் மொழியே போன்று வணங்குகிறேன்,வணங்குவோம் வாழ்க நாராயண நாமம்.
தராவிடத் தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோக்கள் மேலே உள்ளவை. இந்திய வரலாறு குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. நன்றி !
நாம பெரியார் சொன்னதுங்க !!!!
# முஸ்லிம்மை எடுத்துக்கொண்டால் பெண்களை உலகத்தை கூட பார்க்க விடமாட்டேன் என்கிறானே ,முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகின்றான் ..இதை விட கொடுமை இருக்கமுடியுமா ? #
– விடுதலை – 28.4.1973 –
தமிழ் நாட்டின் இன்றைய செய்தி , நாம் தமிழர் கட்சியின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்,கட்சியின் விளக்கக் கூட்டம் ஆகியவை பள்ளிபாளையம் நேரு திடலில் நடைபெற்றது ,இந்த கூட்டத்தில் ,நாம் தமிழர் கட்சியின் தலைவர் ,சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் ,அப்போது அவர் பெரியாரின் கொள்கைகள் ,ஜாதி ஒழிப்பு குறித்தும் ,அம்பேத்கரின் கொள்கைகள் குறித்தும் விளக்கி பேசினார் , [ இது தான் அய்யா தந்தை பெரியார் ] .