திராவிடன் சரியாகச் சொன்னார். சகோதரி சொன்னாள்… சாமியார் சொன்னான் என்றெல்லாம் படித்துவிட்டு உண்மை அறியாமல் புலம்பும் உன்னை என்னவென்பது? உமது இனத்தை எவரும் ஆதாரமில்லாமல் தாக்கவில்லை. உமது இனம் எவ்வளவு துன்பத்தை எம்மினத்தவனுக்குக் கொடுத்திருக்கிறது என்பதைப் பெரியார் சொல்லித்தான் நாங்கள் அறிந்துகொள்ளும் காலத்தில் நாங்கள் இல்லை. பெரியார் பேசி எழுதிய காலம் தமிழர்கள் பெரும்பாலோர் படிக்காத காலம்.
அடுத்து நான் இந்தப் பகுதியில் உம்மைப்போன்று பெரியார்மீது காழ்ப்புணர்வு கொண்ட ஒரு நபரைப் பார்த்ததில்லை. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் பெரியாரை அதில் அறிவே இல்லாமல் இணைத்து , அதன்மூலமாகப் பெரியாரைச் சாடும் உமது சைகோ குணத்தைக் காண்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் உமது ஆழ்மனதை சொறிந்துகொண்டு அமைதியடைகிறீர். இப்படி ஒரு மனநோயாளியாக இருக்கும் நீங்கள் உங்களுடையப் பழையப் பதிவுகளை ஒருதரம் திரும்பிப் பாருங்கள். அப்போது நான் சொல்லும் உன்மையின் ஆழம் புரியும்.
தமிழர்கள் அறிந்துகொள்ள முடியாதவகையில் தமிழர்களை அந்நிய கலாச்சாரத்திற்கு ஆட்படுத்தி, அவர்களின் சிந்தையைக் கெடுத்து , தமிழர்களை ஜாதிவாரியாகப் பிரித்து பிறப்புப் பத்திரத்தில் ஜாதியைப் பதிவுபெற வைத்த கயவனைப் (பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்) பற்றி எழுதினால் சிலருக்குக் கோபம் வருவது அநியாயம் என்று அங்கலாய்க்கிறீர். அத்தோடு , உலகில் எங்கு போனாலும் தமிழர்களின் ஜாதி முகவரியால் அவதிப்படுகிறார்களாம். இது காயீயின் மன உழைச்சலுக்கு காரணமாம். இந்தச் சமூகக் காவலனுக்குத் (காயீ) தமிழன் மீது அவ்வளவு பாசம்; அவ்வளவு அக்கறை.
இவ்வளவு மன எரிச்சலை, குரோதத்தைப் பெரியார்மீது காட்டும் தமிழர்களின் காவலனே.. காயீ… உன்னைக் கேட்கிறேன்…உமது ஆரிய வேதங்களிலும், இதிகாசங்களிலும், மனுநீதியிலும் , ஜாதியை வர்ணம் எனும் சாயலில் தமிழன் உட்பட எல்லா திராவிட இனத்தவனின் வாழ்க்கையில் மதக் கொள்கை எனும் பெயரில் , கடவுளின் நீதி எனும் பெயரில் புகுத்தி , சமூக நீதியைக் கெடுத்து திராவிட இனத்தையே கூறுபோட்டு சீரழித்தவனிடம் கோபமே வரவில்லையே அது ஏன்? உம்மினத்தவன் எங்களினத்தவனை சீரழித்தச் செயலென்றால் அதைப்பற்றி வாய்கிழியப் பேச வார்த்தை வராதோ!!!? ஆரியனினின் இந்த அயோக்கியத் தனத்தைப் படிக்காத தமிழனிடம் படம்பிடித்துக் காட்டினால் பெரியாரை உனக்குப் பிடிக்காது.
உன் இனத்தானுக்குப் பெரியாரைப் புகழ்ந்தாலே எரிச்சலாக வரும். ஏன்? உம்மினத்தவனின் எல்லா தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் வெட்டவெளிச்சமாக்காமல் பெரியாரும் ஓர் ஆரிய அடிவருடியாக இருந்திருந்தால் உங்கள் ஏடுகள், தொலைக்காட்சி,வானொலி எல்லாம் அவரைத் தூக்கோதூக்கென்று தூக்கும். நீயும் பெரியார் புகழ்பாடி இருப்பாய் அப்படித்தானே காயீ?
காயீக்காக நான் இதைப் பதிவிடாவிட்டாலும் என் தமிழினத்தான் புரிந்துகொள்ள பதிவிடுகிறேன். தமிழ் நாட்டில் சாதி எனும் சதிச்செயலால் தமிழனினம் பிரிவுகளுக்கு உட்பட்டு சின்னாப்பின்னமாகிக் கிடந்த சூழலில் , சேரித்தமிழன், பிற்படுத்தப்பட்டத் தமிழன், ஒதுக்கப்பட்டத் தமிழன், தாழ்த்தப்பட்டத் தமிழன் எல்லோரும் சமூக நீதி கிடைக்காமல் கல்வி இல்லாமலும், பொருளாதார அறிவின்றி ஏழையாகவும் இருந்தனர்.
தமிழரிடையே கல்வி,பொருளாதார சமத்துவமின்மை கணப்பட்டது. உயர்சாதியினர் என்று சொல்லிக்கொண்டு எல்லா கல்வி, பொருளாதார வாய்ப்புகளை , தமிழ்நாட்டின்- இந்தியாவின் ஆட்சி அதிகாரங்கள் யாவும் பார்பணர்களே தங்களின் கைகளில் வைத்துக்கோண்டு மற்றவர்களை அடக்கி ஆண்டனர். இப்படிப்பட் சூழலில் தான் பெரியார் பச்சைத் தமிழன் காமராசருக்கு ஆதரவுதந்து தமிழ் நாட்டின் முதலமைச்சராக்கி தமிழினத்திற்குக் கல்விக் கண்ணைத் திறக்க உதவினார். தமிழினத்திற்கு நல்ல காலம் உதயமானது.
அதன்பிறகு வந்த அறிஞர் அண்ணாவின் ஆட்சி தமிழினத்தில் சமத்துவம் மலர கீழ் நிலையில் இருந்த தமிழர்களைக் கல்வியிலும் பொருளாதாரத்திலும் வேலைவாய்ப்பிலும் பயனடைய சாதிய அடிப்படையில் சிறப்புச்சலுகை அடிப்படையில் உதவ முற்பட்டனர். இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்,
ஒதுக்கப்பட்டவர்,பிற்படுத்தப்பட்வர் எனும் பெயரில்தாம் உதவினர். சாதியை வைத்துத்தான் அவர்களின் நிலையை உறுதி செய்யும் துர்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்பட அண்ணாதுரையின் ஆட்சியாளர்களோ அல்லது தந்தை பெரியாரோ காரணமல்ல என்பதை ஆரியனின் மத சூழ்ச்சியே காரணம் என்பதை புரிந்துகொள்ளும் தமிழர்களால் உணரமுடியும்.
பெரியாரோ அல்லது பேரறிஞரின் வாரிசுகளோ சாதியைக் கண்டுபிடிக்கவுமில்லை; சாதியை உண்டாக்கவுமில்லை. மாறாக பார்ப்பணியம் விதைத்த கொடுமைக்கு சாவுமணியடிக்கவே வந்தனர். தமிழ் சமூகத்தின்மேல் பூசப்பட்ட அழுக்கை சுத்தம் செய்ய முற்பட்ட தமிழினத் தலைவன் பேரறிஞர் அண்ணாவின் பொடிபோடும் பழக்கத்தை கேவலமாகச் சித்தரிக்க இந்தப் இப்பகுதியில் பல தடவை போதைப்பிரியன் எனும் அடைமொழியில் அண்ணாதுரையைக் கேவலமாகப் பதிவிட்டுள்ளான் ஒருவன்.
இதே பகுதியில் செம்பருத்தியில் தொடர்ந்து பெரியார் தமிழினத்திற்குச் செய்த நல்லதை மறைத்து வெங்கட் ராமசாமி நாயக்கன் கயவன் என வாய்கூசாமல் ஒரு பச்சைத்தமிழனின் ஊடகத்திலேயே பெரியாரைத் தாக்கி எழுதும் கொடுமையைத் தமிழர்களாகிய நாம் பார்க்கும் துர்பாக்கியம் ஏற்படுகிறதென்றால் இதைவிடக் கொடுமை என்ன உள்ளது.
இங்கே நாம் பதிவு செய்யும் பெரியாரின் நியாயத்தை ஒரு பார்பணனின் ஊடகத்தில் பதிவிட்டுவிட இயலாது. விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தமிழறிவும் இன்றி, பொது அறிவும் இன்றி எழுத்துப் பிழையுடன் கருத்திட வருவது நியாயமா என கேட்கிறேன்?
பாருங்கள் காயீன் எழுத்தறிவை….நாழிதலில் ,உபயோகில்லை, சிலறுக்கு, கோபம் தொத்துண்டு வருது, நீறும் நாய் கண்ணோ, அரியாது, பிறப்புப்பத்திரம் வறை. ஆறே வரிகளில் உள்ள காயீயின் பதிவில் காணப்படும் எழுத்துப் பிழைகள். தமிழே ஒழுங்காக எழுதத் தெரியாத காயீ கருத்திட வெட்கப்பட வேண்டும். கருத்துப் பிழை, எழுத்துப் பிழை இரண்டும்தான் காயீன் அடையாளமோ?
இந்து தர்மத்தின் தோலை உரித்துக் காட்டியமைக்கு நன்றி தமிழா. எம்மிடமும் பார்ப்பனியத்தின் சில தகவல்கள் உண்டு தேவை வரும்பொழுது தெரிவிப்போம்.
அன்பர் தேனீ அவர்களே…தமிழினம் தலை நிமிர வேண்டுமானால் நாம் இந்த சமூகத்திற்கு நாம் வீழ்ந்ததற்கான காரணிகளைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். தங்களின் பதிவையும் எதிர்பார்க்கிறேன். நமக்கு அப்பாவி பார்ப்பனர்கள் மீது கோபம் இல்லை. பழிவாங்க வேண்டும் எனும் எண்ணமும் இல்லை. ஆனால் பார்ப்பனியத்தை இன்னும் பரிசுத்தமானதாக நம்மவர்களைக் காட்டி நம்மை மதிக்காமல், சமத்துவமாக நடத்தாமல் , நம்மை சீரழிக்க நினைப்பவர்களைத்தான் எதிர்கிறோம் என்பதைச் சுட்டுகிறோம்.
இந்தியாவில் உள்ள எல்லா பல்கைகலகங்களிலும் இந்த கேடு உண்டு தனியே பிராமணிகள் மாத்திரம் அல்ல …கண்மூடித்தனமாக உழைப்புக்கு பிராமணன் சொன்ன சடங்குகளை பின்பற்றும் படி எந்த சட்டமும் சொல்லவில்லை …இது எங்களவர் தவறு …இந்த நவீன உலகில் ஒருவர் வெளிநாடில் சில குறிப்பிட காலம் வசித்தால் அந்த நாடு பிரஜவுரிமைக்கு விண்ணப்பித்து அந்நாடு பிரஜை ஆகலாம் ..சில நாடுகளில் இதற்கு எழுத்து பரீட்சைகள் உண்டு ..சிலவேளை நேர்முக தேர்வு உண்டு அவ்வளவே ….மலேசியாவில் லட்ச்சகனகான தமிழர்களுக்கு பரம்பரை பரம்பரையாக இருந்தும் பிரஜாவுரிமை கிடையாது …தோட்டங்களில் வாழ்ந்தவர்கள் திருமண ,பிறப்பு பதிவுகளை அறியாமையினால் செய்து கொள்ளவில்லை என்றாலும் ..இவர்கள் வசிதத்தட்கு எதோ ,எங்கோ ஒரு பதிவு இருக்கவேண்டும் (சம்பள பட்டியல் )சில நாடுகளில் இப்படி பிரச்சினைகளுக்கு ஒரு affidavit போதும் …ஆக இவர்களும் இப்படியே இருக்க இவர்கl பிள்ளைகள் படிப்பே இல்லாமல் சந்ததியாக வாழa வேண்டுமா ?இது இந்தa நூற்றாண்டின் மிக பெரிய மனித உரிமை மீறல் ..பல ஜனநாயக நாடுகளில் பெற்றோர் சட்டபூர்வம் அற்ற முறையல் தங்கி இருந்தாலும் அவர்கள் பிள்ளைகl 6 வகுப்புவரை பாடசாலையில் படிக்க முடியும் ….சும்மா பகுத்தறிவு ,சுயமரியாதை பற்றி புலம்புவதை விட்டு இந்தa பிரச்சினையை சிந்தியுங்கள்
பள்ளியிலே ஆசிரியர் பாடத்தை நடத்துவதும், கேள்விகள் கேட்டு கேள்வித்தாளைத் திருத்துவதும் மாணவரகள் விழிப்படைய வேண்டும், செய்த தவறை மீண்டும் செய்யாமல் திறம்பட அடுத்த சோதனையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகவே அன்றி புலம்ப அல்ல.
திராவிடத்தைப, பெரியாரை, அவரின் முன்னெடுப்புகளைப் புரியாமல் தொடர்ந்தாற்போல் எல்லா பதிவுகளிலும் பெரியாரைக் காரணமே இல்லாமல் சாடிய ஒருவருக்கும் ,அவரின் சாடலுக்கான பதிலாகவும் இந்தப் பதிவுகள் இடப்படுகின்றன. புலம்புவதற்காகவோ… அல்லது ஒப்பாரி வைப்பதற்காகவோ நாங்கள் இங்கே பதிவுகளை இடவில்லை. இங்கே தேவை உள்ளவர்களுக்கு… வீழ்ந்துபோக காரணமாமாக இருந்த காரணிகளைக் காட்டி தன்மான வாழ்க்கைக்கான பாதைகளைச் செப்னிடுகிறோம். எல்லாம் எங்களுக்குத் தெரியும் என்பவர்களுக்கு நாங்கள் இங்கே சரித்திரத்தை முன்வைக்கவில்லை.
சோழா, தாங்கள் மேல் நிலையில் நின்றுக் கொண்டு கருத்து எழுதுவதாக தெரிகின்றது. பிள்ளைப் பெற்றவர்களுக்கு பிறப்பு பத்திரம் எடுக்கத் தெரியாதா?. பிரச்சனைகளுக்கு பெற்றோரே காரணம். பிறப்பு பத்திரம் இல்லாமல் வரும் ஒரு சில பெற்றோர்கள் சொல்லும் காரணத்தைக் கேட்டால் தாங்களே அவர்களைத் தூற்றுவீர்கள். பிரஜா உரிமை இல்லாமல் இருப்பது, இந்நாட்டில் புதிய பதிவு என்று அவ்வப்பொழுது அரசியல் கட்சிகளால் நாடகம் நடத்தப் படுகின்றது. உண்மை நிலவரம், தாங்கள் சட்டப் படி இந்நாட்டு பிரஜைக்கு தகுதியுடைவர் என்பதை நிரூபிக்க தவறியவர்கள். இதற்கு அரசாங்க இலாக்களில் பல தடைகள் காரணமாக இருக்கின்றன. இப்பிரச்சனைக்கு சட்ட வழியில் தீர்வு காண இயலாது. அரசியல் தீர்வே முடிவானதாக இருக்கும்.
சோழரே! வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் 1000 மடங்கு முன்னேறி விட்டதாக நீங்கள் தான் மேலே சொல்லியிருக்கிறீர்கள். இப்போது உள்நாட்டுத் தமிழன் இப்படி இருக்கிறானே என்று புலம்புகிறீர்கள். இந்தப் பிரச்சனைகளைச் சிந்தித்ததால் தான் ஏதோ ஒன்று இரண்டு பிரச்சனைகள் தீர்வைக் காண முடிந்தது, இங்குள்ள பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டவை. முடிந்தவரை தமிழர்களை முடக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனாலும் இந்த இனம் முன்னேறும். அதைத் தடை செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது!
ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது ..அது மாதிரி தான் இந்த சுயமரியாதை …பகுத்தறிவு எல்லாம் இந்தியாவுக்கு வெளியே தமிழர்கள் எங்கோ போய்விட்டார்கள் இந்த 21 ம் நூற்றாண்டில் ..பாவம் 50 வருடங்களுக்கு முன்னர் இந்த இவர்கள் பின்னால் போன குப்பன் ,சுப்பன் பரம்பரை இன்றும் படிப்பில்லா ,பட்டினி வாழ்கை …மேடையில் முழங்கும் கோமாளிகள் எல்லாம் இன்று உலக கோடீஸ்வரர் வரிசையில் …இப்பொது தேவை தமிழனுக்கு கல்வி ,உழைப்பு,விழிப்பு
சில ஆசிய நாடுகளில் 200 வருடங்களுக்கு முந்திய பிறப்பு அத்தாட்சி பத்திரம் எடுக்கும் வசதி கம்ப்யூட்டர் வர முதலே வந்துவிட்டது …அங்கிலேயர் ஆட்சியில் எல்லாம் எழுத்தில் இருந்தன ..சில ஆசிய நாடுகளில் இன்றும் பலருக்கு இரண்டு பிறப்பு தேதிகள் ….பங்களாதேஷ் நாட்டில் பள்ளி விலகல் செர்டிபிகாடே பிறப்பு சான்று பத்திரமாக ஏற்றுகொள்ள படுகின்றது சில ஆண்டுகளை சேர்த்து
இந்துமதத்தின் பாராட்டுதல்களுக்கும்,போற்றுதலுக்கும் உரியவராக சத்திரபதி சிவாஜியை பார்ப்பனர்களும், பார்பனீயத்தின் வழித் தோன்றல்களும் உயர்த்திப் பிடிப்பதை ஓரளவு அரசியலை கவனிப்பவர்களும் கூட அறிந்திருக்க முடியும்.! ஆதாயம் இல்லாத எந்த காரியத்தையும் பார்ப்பனர்கள் செய்வதில்லை.! அதுபோலவே தங்களது மேன்மைக்கு,இன நலத்துக்கு ஆதயமற்ற,,பயனற்ற பிறமக்களை,பிற சாதியில் பிறந்தவர்களை ,அவர்கள் எத்துணை உயர்ந்த மனிதராக இருந்தாலும், உயர்பொருப்புகளை வகித்தாலும் பாராட்டும் வழக்கம்,அவர்களுக்கு இருந்ததில்லை!
இத்தகைய பிறவி குணமுள்ள பார்பனர்கள், பிற சாதியில் பிறந்த, அதுவும் மலைபகுதியில் பிறந்து வளர்ந்த சிவாஜியை மட்டவர்களைக் காட்டிலும் அதிகமாக போற்றுகிறார்கள்,புகழ்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமலில்லை! சத்திரபதி சிவாஜியின் ஆட்சியானது சூத்திரரான, முஸ்லிம்களின் ஆட்சிக்கு எதிராக, புதிதாக உருவான ஆட்சி என்பதும் இல்லை! முஸ்லிம் சக்கரவர்த்தி ஹவுரங்கஜெபை எதிர்த்தும், அவரது ஆட்சிக்கு உள்ளிருந்த நிலபகுதிகளில் சில பகுதிகளை பிடித்தும் சுதந்திரமாக ஆட்சி செய்தார் என்பதும் இல்லை! அவரது சுதந்திர உணர்வு, வீரம், ஆகியவைகளுக்காகவும் பார்ப்பனர்கள் போற்றிவரவில்லை!
சத்திரபதி சிவாஜி சத்திரிய குலத்தில், அரசாலும் தகுதியுள்ள சாதியில் பிறந்தவர் இல்லை என்பதால், போராடிப் பிடித்த அவரது நிலபகுதிகளை சுதந்திரமாக ஆளவிரும்பி, அரசனாக முடிசூடிக் கொள்வதையே அப்போது எதிர்த்தவர்கள் தான் இந்த பார்ப்பனர்கள்! அதையும் தங்களது ஆட்சி அதிகார வழிமுறை நூலான மனுதரும சாஸ்திர நூலைக்காட்டி சிவாஜி அரியணை ஏறுவதை தடுத்துவந்தார்கள்!
“நசூத்திர ராஜேயே நிவஷேந
நதார்மிக ஜனாவ்ருதே;
நபாஷண்டி ஜனாக்ராந்தே
நாபஸ்ருஷ தேந்த்ய ஜென்த்ருபே ” – என்று மனுதருமம் கூறுகிறது.
அதாவது “சூத்திரன் ஆட்சி செய்யும் நாட்டில் குடியிருக்கக் கூடாதாம்.” இது மட்டும் இல்லை. எந்த நாட்டில் சூத்திரன் மந்திரியாக இருக்கிறானோ அந்த நாடு சேற்றில் மூழ்கிய பசுவைப்போல பார்த்துக்கொண்டு இருக்கும்போதே அழிந்துபோகும் என்றும் பார்ப்பனர்கள் விதிவகுத்து இருந்தார்கள்!
எனவே சிவாஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால், அரசனானால், அவரது நாட்டை விட்டே போய்விடுவதாக, பிறகு அந்த நாடு சுடுகாடாகிவிடும் என்றெல்லாம் கூறி கலகம் செய்தார்கள் மக்களிடம் .குழப்பம் விளைவித்தார்கள்.!
அப்படிப்பட்ட பிராமணர்கள் இன்று, சத்திரபதி சிவாஜியை போற்றும் பிராமணர்கள், அதன்பிறகு” காசி காகபட்டரை” அழைத்துவந்து, சிவாஜியை “யாகவேள்விமுன்” உட்காரவைத்து, சத்திரியனாக… அதாவது அரசாலும் தகுதி உடையவனாக, மாற்றினார்கள்! “யாகவேள்வி” மூலம் சிவாஜியின் சாதியை மாற்றியதால் அவரது பிறந்த சாதி, “அக்கினிகுல சத்திரியர்” சாதியாக மாறியது!
இந்த சடங்குக்கு.. சிவாஜி, எல்லா பார்ப்பன புரோகிதர்களுக்கும் லட்சகணக்கில் பொன்னும் பொருளும் கொடுத்து,அவர்களை மகிழ்ச்சி படுத்த வேண்டியதாயிற்று.!
அதன் பிறகு சிவாஜியின் ஆட்சி முற்றாக, முழுதாக பார்பனர்களின் ஆட்சியாகவே பரிணமித்தது! பார்ப்பனர்களின் பாசிச ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டு, அவர்களின் வழிகாட்டுதல்களின் பேரிலேயே சத்திரபதி சிவாஜியின் ஆட்சி நடந்ததால்தான் இன்றும் பார்ப்பனர்களும் மனுதரும வாதிகளும் அவரைப் போற்றி வருகிறார்கள்!
சூத்திரர்கள் வேதங்களைப் படிக்கக்கூடாது என்று மனுதர்மம் விதித்திருக்கிறது என்று முன்பே குறிப்பிட்டு இருக்கிறேன் அல்லவே? அப்படி மனுதருமதிற்கு எதிராக வேதம் அறிந்த, ஞானம் உள்ள பார்ப்பனர்கள் அல்லாதவர்களை சத்திரபதி சிவாஜியின் ஆட்சி கொடூரமாக தண்டித்து!
ஹவுரங்க ஜெப் ஆட்சியில், இந்து மக்களான அனைத்து மக்களுக்கும் கல்விபயில எந்தவித நிபந்தனையும் விதிக்கப் பட்டு இருக்கவில்லை! யாருக்கு எதைப் பற்றி படிக்கவேண்டுமோ, அறிந்துகொள்ள விருப்பமோ, அவர்கள் படித்து அறிந்துகொள்ள முடிந்ததால், பிராமணர்கள் அல்லாத, வேறு சாதியைச் சேர்ந்த, நாற்பது பண்டிதர்கள் வேத சாஸ்திரங்களைக் கற்று அறிந்திருந்தனர்!
சத்திரபதி சிவாஜி ஆட்சி வந்ததும், ( சிவாஜிதான் பார்ப்பனர்களின் பாசிசத்துக்குள் அடைகலம் ஆகிவிட்டாரே!) மனுவின் சட்டத்தை சிவாஜிக்கு எடுத்துக் காட்டி அந்த நாற்பது பேர்களையும் கொல்லச் செய்தனர்! இன்று அஹிம்சா மூர்த்திகளின் மதமாகவும், அன்பே கடவுள் என்று இந்து மதம் போதிப்பதாகவும் சொல்லுகிற பார்ப்பனர்கள்!
அதோடு முடியவில்லை… அன்பை போதிக்கும், ஜீவகாருண்யம் பேசும் பார்ப்பனர்களின் பாசிசக் கொடுமைகள்… அநியாயமாக பார்ப்பனர்களின் மோசடி நூலாலும், சதியாலும் கொல்லப்பட்ட அந்த நாற்பது பேரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், எழுநூறு பேர்களும் அரசனான சிவாஜியிடம் பொய் தங்களது உள்ளக் குமுறலை, துன்பத்தை தங்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அநீதியை சொல்லி முறையிட்டார்கள்!
அரசன் சிவாஜிதான் பார்ப்பனர்களின் மனுதருமச் சட்டத்தை அடிபிறலாமல் அப்படியே நடைமுறைப் படுத்தும் “இந்துமத காவலர்” ஆயிற்றே!? அவர் மட்டும் எப்படி அவர்களது துன்பத்தை உணருவார்? அதனால், நீதி கேட்டு போன.. அந்த எழுநூறு பேர்களும் பிராமணர்களின் வேண்டுகோளை ஏற்று வெட்டி எறியச் சொன்னபடி,, அவர்களை வெட்டியெறிய சொன்னார்! எழுநூறு பேர்களும் வெட்டிஎறியப்பட்டனர்.!
இது மகாராஷ்டிரத்தில் நடந்தது! நமது தமிழ் நாட்டில் திருமலை நாயக்கர் களத்தில் பார்ப்பன குருவே அரசனாகி கொடுத்த தண்டனையையும் மற்றவைகளையும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்!
சத்திரபதி சிவாஜியை பார்ப்பனர்கள் அரசாளக் கூடாது என்று தடுத்ததையும் பிறகு அவரது சாதியை மாற்றி பார்ப்பனர்கள் அரசாளச் செய்ததையும் முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள்.!{ படிக்காதவர்கள் படித்துவிடுங்கள்} பார்ப்பனர்கள் இப்படி பிறந்த சாதியை மாற்றும் செயலுக்கு, நடத்தும் யாகத்துக்கு, “ஹிரணிய கர்ப்பம்” என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்த சாதி மாற்றும் சடங்கு, யாகத்தை எல்லோராலும் செய்துவிட முடியாது! பார்ப்பனர்கள் அனுமதித்தால் மட்டும் செய்துவிட முடியாது! இந்த சாதிமாற்றதை செய்வதற்கு, ஏராளமான பொன்னும், பசுக்கள், அதிக வசதி ஆகியவைகள் இருந்தால்தான் செய்ய முடியும்! அதிக வசதியுள்ள சமஸ்தானாதிபதிகள்,ராஜாக்கள் போன்றவர்களால் மட்டுமே செய்துகொள்ள முடியும்!
ஏனெனில், அவர்களுக்குதான் மற்றவர்களை விட தான் உயர்ந்தவன் என்ற பெருமிதமும்,ஆணவ செருக்கும், தேவைப்படுகிறது. தவிர எல்லோரையும் விட உயர்ந்தவர்களாக இந்து மதத்தில் காட்டப்படுகிற, நிலைநிறுத்தப் பட்டு உள்ள பிராமணர்களின் ஆதரவும், ஆசியும், துணையும் தேவைப்படுகிறது என்பதால், சாதி மாற்றத்தை செய்யும் சடங்கு, வேள்வியைச் செய்யவேண்டிய அவசியம் ஏற்படுகிறது!
தவிர அரசனோ, அரசனைப் போல செல்வமும் அந்தஸ்தும் உள்ளவர்களால் மட்டுமே, மிகுந்த பொன்னையும் பொருளையும் பிராமணர்களுக்கு கொடுக்க முடியும் என்ற உண்மையும் ஒரு காரணமாகும்.!
இந்த காலத்திலே அரசியல் கட்சிகள் மாநாடு என்று நடத்துவார்களே, கோடிகணக்கில் செலவு செய்து, ஏக்கராக் கணக்கில் பிரமாண்டமான பந்தல் போட்டு, வாயில்கள், தோரணங்கள் கட்டி, பக்கம் பக்கமாக பத்திரிகைகள், தொலைகாட்சிகளில் விளம்பரப் படுத்தி நடத்தப் படும் மாநாடுகளுக்கு ஆகும் செலவை தனது சாதியை மாற்றிக் கொள்ள விரும்பும், சாதியை மாற்றிக் கொள்ள அனுமதித்து, சாதி மாற்றத்தைச் செய்யும் பிராமணர்களுக்கு தரவேண்டியிருக்கும்!
சாதி மாற்றம் என்ற ஹிரணிய கர்ப்பம் என்கிற யாகத்தை, சடங்கை செய்வதற்கு முதல் தேவை என்ன தெரியுமா?
முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட பசுவின் உருவம் ஒன்று தேவைப்படுகிறது!
தங்கத்தால் செய்யப்படும் இந்தபசுவின் உருவத்தை நமது எண்ணப்படி சிறிதாக செய்துவிட முடியாது. ‘காரை பார்த்துவிட்டு,அது வேண்டும் என்று அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானப் படுத்த,பெற்றோர்கள் பொம்மைக் காரை வாங்கி கொடுத்து சமாளிப்பதைப் போல’, ‘பொன்னை வைக்கும் இடத்தில பூவை வைப்பதைப் போல’ சமாளிக்கும் விதமாக,சாதியை மாற்றிக்கொள்ளும் ஒருவர், பேருக்கு பசுவின் உருவத்தில் சிறிதாக ,தங்கத்தால் செய்து பூஜையில் வைத்து, சாதி மாற்ற சடங்கைச் செய்துவிட முடியாது!
காரணம் பிராமணர்கள் வகுத்துள்ள சாதிமாற்ற விதிப்படி, ” சாதியை மாற்றிக்கொள்ளும் சடங்கைச் செய்பவர் தங்கத்தால் செய்யப்பட்ட அந்த பசுவின் வயிற்றுகுள் புகுந்து, வெளியே வந்தால் தான் சாதியே மாறும்” என்பதால் ஒரு ஆள் உள்ளே சுலபமாக போய்வரும் அளவுக்கு இடைவெளி விட்டு பெரிதாக பசுவின் உருவத்தை தங்கத்தால் செய்யவேண்டும்! அப்படி செய்யப்பட்ட தங்கத்தால் ஆன அந்த பசுவின் உருவத்தை பிராமணர்களுக்கு தானமாக கொடுத்துவிட வேண்டும்!
இந்த தங்கப் பசு மட்டுமில்லை பிராமணர்களுக்கு அதாவது சாதி மாற்ற வேள்வியில் கலந்து கொள்ளும் அணைத்து பிராமணர்களுக்கும் உயிருடன் உள்ள பசுக்களையும், பரிமள வாசனாதிகள், வஸ்திரங்களையும், பிராமணர்கள் விரும்பும்,நிலம் உள்ளிட்ட இன்னபிறவற்றையும் தானமாக கொடுக்க வேண்டும்!
அதாவது பிராமணர்கள் அனைவருக்கும் ஒருவனின் சாதிமாற்றதால் நன்மைகள் கிடைத்து வந்தது! பயன் அடைந்தனர். பிராமணர்களால் சாதி மாற்றப் பட்டதால் அவனது அந்தஸ்து உயர்வடைந்து விட்டதல்லவா? அதனால் சாதி மாற்றப் பட்ட பிராமணர் அல்லாதவன் தொடர்ந்து பிராமணர்களின் நன்மை, மேன்மையை உத்தேசித்து நடந்து கொண்டு வர வேண்டியது கடமையாகவும்,அவசியமாகவும் ஆகிவிடும்! பிராமணர்கள் தொடர்ந்து அவரின் நலத்தை விரும்பி யாகங்கள் பூஜைகள் செய்தும் , அதற்கும் பிரதி பலன் அடைந்து கொண்டு, எப்போதும் சுகபோகங்களுடன் வாழ்ந்து வருவார்கள்!
கூடவே, இதர சாதிகளை, குறிப்பாக உழைக்கும் மக்களாகிய சூத்திரர்களை சுரண்டி வருவார்கள்! இதுதான் ஹிரணிய கர்ப்பம் என்ற சாதி மாற்றத்தில் பார்ப்பனர்கள் கையாண்டுவரும் சதிகள்!
நமது பக்கத்துக்கு மாநிலமும், இப்போது நம்மோடு பகைகொண்டு பழி வாங்கி வரும் மாநிலமும் ஆன… கேரளா மாநிலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தில் கடந்த நூற்றாண்டுவரை இதுபோல சாதி மாற்றம் செய்யும் நிகழ்ச்சி, அரசு உரிமைக்கு வருபவர்களுக்கு பார்ப்பன நம்பூதிரிகள் செய்து வந்தனர்!
வழிவழியாக ராஜபரம்பரையில் வந்தவரான, சோழ சாம்ராச்சியத்தை நிறுவிய, திருமுறைகண்ட சோழன், உலகளந்தான், அருள்மொழி வர்மன் என்கிற ராஜராஜனுக்கும், அவனது மனைவி உலோகமாதேவிக்கும் பார்ப்பனர்கள் “சாதிமாற்ற சடங்கை ” ராஜராஜனின் அந்திமக் காலத்தில் நடத்தினார்கள்!
நன்றி: ராஜன்
பிராமணர்கள் தங்களது இனநலனுக்காக,பொருளாதார, அரசியல் மேன்மைக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக, எந்தவித அடாத செயலையும், சிறிதும் குற்ற உணர்ச்சி இன்றி செய்பவர்கள், இயற்கையாகவே செய்து வருபவர்கள் எனபது குறித்து அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, மேலும் சில நிகழ்சிகளை பார்க்கலாம்!
இப்படிப்பட்ட சம்பவங்கள், கடந்த காலங்களில் நடந்திருக்கலாம், மனிதர்கள் நாகரீகம், கல்வி அறிவு பெறுவதற்கு முன்பு நடந்த செயல்களை, ஒரு இனத்தை அவமதிக்கும் செயலை வெளிச்சமிடலாமா? நியாயமா? என்றும் தேவையற்ற ஒன்று,வீண் வேலை என்றும் கூட சிலர் நினைக்கக் கூடும்!
“பார்ப்பனீயம்” என்பது பாசிசவெறிகொண்ட சித்தாந்தம், பாசிசத்தை தவிர வேறு எந்த சித்தாந்தங்களையும்,தத்துவங்களையும் அது எப்போதும் ஏற்றுக் கொள்ளுவதில்லை! என்பதை அப்படி நினைப்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்! இப்போதும், நவீன காலத்திலும் “பிராமணீயம்” என்ற பாசிசம் இத்தகைய அணுகுமுறையைக் கைக்கொண்டு இயங்கிவருகிறது! இனிவரும் காலத்திலும் அது அவ்வாறே இயங்கி வரும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் !
நவீன காலத்திலும் பிராமணீயம் என்ற பாசிசம் நடத்திவரும் கொடுமைகள் குறித்து பல்வேறு ஆதாரங்களுடன் பிறகு விளக்க எண்ணியுள்ளேன்!எனவே, வரலாற்று ரீதியாக அதன் செயலாக்கங்களை, அது அடைந்து வந்துள்ள பரிணாமங்களை, உழைக்கும் வெகுஜன மக்களுக்கு, அது இழைத்து வந்த, கொடுமைகளை அறிந்து கொள்ளுவது மிக அவசியமானதாகும்!
“பிராமணீயம்” என்ற பாசிசத்தை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியே இத்தகைய பதிவுகளை சரித்திர ஆதாரங்களுடன் முடித்தவரை தொடர்ச்சியாக விளக்கி வருகிறேன்!
பவுத்த மன்னன், அசோகர் வம்சத்தை சேர்ந்த,அவரது வழியில் பவுத்த ஆட்சியை நடத்தி வந்தவன், “பிரஹத்தி ரத மவுரியர்” என்ற அரசனின் ஆட்சியை அகற்றிவிட்டு, பாசிச ஆட்சியை ஏற்படுத்த முயன்ற பிராமணர்கள், அரசனின் தளபதிகளில் ஒருவனான,புஷ்ய மித்திர சுங்கன் என்பவனுக்கு அரசு பதவியாசை ஏற்படுத்தி,காமினி என்ற பிராமணப் பெண்ணுடன் பழகவிட்டு வந்தனர்! மறுபுறம் உள்நாட்டு கலவரங்களை அந்நாட்டில் மறைமுகமாக ஏற்படுத்தி வந்தனர்!
பிரஹத்தி ரத மவுரியர், தனது படைவீரர்கள் அணிவகுப்பைப் பார்வையிட்டு வரும்போது,துரோகத் தளபதி புஷ்ய மித்திர சுங்கன் அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தான்!
{இலங்கையில் இந்தியப் பிரதமர்,ராஜீவ் காந்திக்கு இத்தகைய நிலை ஏற்பட இருந்தது!}
பிராமண குருக்கள் அகம் மகிழ்ந்து அவனையே மன்னனாக்கி, தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினர்!
{உத்தம சோழனை சோழ அரியணையில் அமர வைத்ததற்கு காரணமும் இதுவேதான்}
புஷ்ய மித்திர சுங்கன்,அரசனாதும் பிராமணர்களைத் திருப்தி படுத்த, சமணர்கள்,பவுத்தர்களைக் கைது செய்து, உயிரோடு அஸ்வமேக யாகத்தீயில் இட்டுக் கொன்று, அழித்தான்!
கொடிய அரசனான இவனது சுங்க வம்சத்தின் பத்தாவது அரசன் தேவபூதி என்பவன்! அவன் சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதால், அரசனின் ராஜகுருவாக இருந்த பதஞ்சலி என்ற பிராமணரும்,மந்திரியாக இருந்த வாசுதேவன் என்ற பிராமணரும் அவன்மீது, வெறுப்பு கொண்டனர்! அவர்களை திருப்பதிப் படுத்த அவன் பங்குக்கு ஏராளமான பவுத்த துறவிகளைச் சிறையிட்டு,சித்திரவதை செய்தான்! தனது படைவீரர்களை அனுப்பி, பவுத்த சங்கங்களையும்,பவுத்த தத்துவ நூல்களையும் தீயிட்டு அழித்தான்!
பிராமணர்களுக்கு ஏராளமான தானங்களை கொடுத்து தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள முயன்றான்! ஆயினும் அவன்மீது வெறுப்புற்ற பிராமண அமைச்சர் வாசுதேவன், தனது மகளை அவனது அந்தப்புரத்துக்கு அனுப்பி,விஷம் கொடுத்ததும் கத்தியால் குதியும்கொளைசெய்ய வைத்து, பிறகு அந்த நாட்டுக்கு, “தன்னையேஅரசன்” என்று பிரகடனப் படுத்திக் கொண்டான்!
பிராமணர்கள்,தங்களது மதமாக சொல்லும் இந்துமதத்தின் மேன்மைக்காக, தங்களது மதத்தில் உள்ளதாக கூறும் பிராமணர் அல்லாதவர்களின் வாழ்க்கையைப்பற்றியோ,அவர்களது உயர்வுகள் குறித்தோ,அவர்களை நல்வழிப் படுத்துவது குறித்தோ எப்போதும் அக்கறையோ,கவலையோ கொண்டவர்கள் இல்லை!
மாறாக, பிற மததினைப் போலவே, தங்களை ஏற்றுக் கொண்டு ஆதரித்து வந்தவர்களையும் கூட, அவர்களது உயர்வுக்காக, சுக, போகத்துக்காகவே, மக்களையும், மதத்தையும் “கருவியாக” எப்போதும் பயன்படுத்தி வந்துள்ளனர்! பயன்படுத்தி வருகின்றனர்!
பிராமணர்களுக்கு ஆதரவாக ஆட்சி நடத்தி வந்த சாதவாகனர் வழிவந்த வாகாடர்களும், சாதவாகனர்களைப் போலவே பிராமணர்களுக்கு ஆதரவு அளித்து ஆட்சி செய்து வந்தார்கள்! இவர்கள் பிராமணர்களுக்கு பிரமதேயம் வழங்கும்போது நிபந்தனைகள் விதித்து, பிரம்மதேய நிலங்களை அளித்துள்ளதை வாகாட மன்னன் வெளியிட்ட செப்பேடு கூறுகிறது!
அதில் பிராமணர்களுக்கு வயதுள்ள நிபந்தனைகள் இதுதான் :
பிராமணர்கள்,”அரசனுக்கும் நாட்டிற்க்கும் எதிராய் சதிசெய்தல், திருடுதல், பிறன்மனை விழைதல் ,கொலைசெய்தல்,அரசனுக்கு நஞ்சுட்டுதல் போன்ற செயல்களிலும்,போரிடுதல், பிற கிராமங்களுக்கு துன்பம் விளைவித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபடக் கூடாது!”{ஆதாரம் டாக்டர்.ராம் கரண் சர்மா எழுதிய இந்திய நிலமானிய முறை நூல்,பக்கம்-10 )
பிராமணர்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்துவந்த அரசர்களுக்கே, பிராமணர்கள் மீது எவ்வளவு நம்பிக்கை பாருங்கள்! பிராமணர்கள் மீது அரசருக்கு இருந்து வந்த அவநம்பிக்கைகளை.. மேற்கூறிய செப்பெடுமூலம் நாம் தெரிந்து கொள்ளவதுடன், பிராமணர்கள்மீது அரசர்களுக்கு இருந்த அச்சமும் தெரிகிறதல்லவா? தவிர, பிராமணர்களுக்கு ஆதரவான அரசர்களே, இதுபோன்ற நிபந்தனைகள் விதித்து உள்ளதைப் பார்க்கும்போது, மேற்கண்ட செயல்களை பிராமணர்கள்,அரசர்களும் அச்சப்படும் வகையில் செய்து வந்துள்ளார்கள் என்பதும் விளங்குகிறது அல்லவா?
எனவே தான், எமனைப் போல உயிரை வதைப்பவர்கள் என்று பொருள்தரும், “பிராஹ்மனா யமகாதக “என்ற பழமொழி விளங்கிவந்தது!
பிராமணர்களுக்கு ஆதரவாக ஆட்சி செய்யாமல் வேறு மதத்தை சேர்ந்த, பிராமணர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்தி வந்த, அரசர்களுக்கு என்னென்ன, கொடுமைகள், தீமைகளை செய்து இருப்பார்கள் ?! இந்த பிராமணர்கள் என்ற பாசிசவாதிகள் என்பதை எண்ணிப் பார்க்கவே, இதயம் கனக்கிறது!
உத்தம சோழனின்ஆட்சியை பிராமணீய ஆட்சி என்றே உறுதியாக கூறலாம்! பிராமணர்கள் தங்கள் சார்பாக உத்தம சோழனை பேருக்கு மன்னனாக்கி விட்டு சோழ நாட்டை தங்களது ஆதிக்க,அதிகார பூமியாக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை அறுதியிட ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உள்ளன!
உத்தம சோழனது ஆட்சியைப் பற்றி, “மதராஸ் மீயுசியத்தின் சாசனம் ” விளக்குகிறது!
“உத்தம சோழன் நாட்டை ஆளத் திறமை அற்றவனாகவும்,தகுதி அற்றவனாகவும் விளங்கினான்” என்று தமிழக வரலாறு என்னும் நூலில் அ.தேவ நேசன் என்பவர் குறிப்பிட்டு உள்ளார்!
திருவாலங்காடு செப்பேடு, “கலி”என்பதாக ஆதித்ய கரிகாலனின் படுகொலைக்கு உரியவர்களைக் குறிப்பது உடன்,உத்தம சோழனை, ராஜராஜனின் சிற்றப்பன்,அருண்மொழி வர்மனுக்குரிய ஆட்சியினை ஆவலோடு முயன்று அடைந்தவன்,எனவும் அந்தணர்களுக்கு செல்வதை வாரி வழங்கி,உலகத்தைப் {நாட்டைப் பெற்றவன}பெற்றவன் எனவும் குறிபிடுகிறது!
“ஆதித்தன் என்ற சூரியன் மறைந்தான், பாவம் என்ற இருள் சூழ்ந்தது” என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தனது சோழர்கள் நூலில் உத்தமசோழன் ஆட்சிக்கு வந்ததைப் பற்றி சுருக்கமாக கூறுகிறார்!
தவிர பல்வேறு கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உத்தம சோழனைப் பற்றி “நிலைத்த குருட்டு இருட்டினைப் படைத்தவன்,” “பேரு வலியுடையவன் “, “முயன்று ஆட்சிக்கு வந்தவன்”, “இவன் நல்ல தந்தைக்குப் பிறந்த கேட்ட மகன்”, என்று குறிப்பிடுகின்றன. வரலாற்று ஆய்வாளர்களும் தங்களது ஆய்வு நூல்களில் அவ்வாறே குறிப்பிட்டு வருகின்றனர்!
சோழப் பேரரசை தங்களது பாசிச ஆட்சிக்கு ஆதரவாக கொண்டுவரவும், பாசிசத்துக்கு எதிரான,வெகுஜன மக்களுக்கு ஆதரவாக இயங்கிவந்த பிற சமயங்களை அழிக்கவும், வேரறுக்கவும் திறமையும் தகுதியும் அற்றவனும் பேராசைக் கொண்டவனுமான உத்தம சோழன் போன்ற ஒருவனை பிராமணர்கள்,மன்னனாக்கி உள்ளனர் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்!
மேலும் கிடைக்கும் ஆவணங்களை ஆராயும் பொது, உத்தம சோழனுக்கு பல மனைவிமார்கள் இருந்துள்ளதாக தெரிய வருகிறது! அவனது மனைவியரில் ஐந்து பேரைப் பற்றி ஒரே கல்வெட்டில் குறிப்புகள் உள்ளது. ஓரட்டணம் , சொரப்பையார்,{கன்னடப் பெயர்} அக்கரமாதேவியார்,மூத்த நம்பிராட்டியார்,திரிபுவன மாதேவியார் ஆகியோர்கள் உத்தம சோழனின் பல மனைவியரில் சிலராக அக்கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளனர் ! இவர்களும் உத்தம சோழன் வழியில் தஞ்சைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு பல தானங்களை வழங்கியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது!
அதாவது உத்தம சோழன் ஆட்சியை, பிராமணர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு,மது, மாது மயக்கத்துடன், காமக் களியாட்டங்கள், கேளிக்கைகள் என்று நாட்டை பற்றி கவலையின்றி, உல்லாச வாழ்வு வாழ்ந்துள்ளான் என்று இதன் மூலம் விளங்குகிறது!
தனது நாட்டில் உள்ள எல்லாதரப்பு மக்களுக்கும் நன்மைகளைச் செய்து வரும் அரசனை அந்த நாட்டு மக்கள் போற்றிப் புகழ்ந்து வருவதும், அப்படி இல்லாமல் துன்பத்தை தரும், மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் மன்னனை வெறுத்து துற்றுவதும் மக்களின் இயல்பாக இருப்பதை அறிவோம்!
உத்தம சோழனை, அவனது ஆட்சியை, மக்கள் பலரும் வெறுத்து, தூற்றி வந்துள்ளனர்! மேலும் தலைமறைவாக வாழ்ந்துவந்த ராஜராஜனை எப்படியாவது மன்னனாக்கவும் சோழ நாட்டு மக்கள் விரும்பி உள்ளார்கள்! உத்தம சோழனை எதிர்த்து கிளர்ச்சிகள்,போராட்டங்கள் செய்தும் வந்துள்ளனர்! ஆனாலும் ராஜராஜ சோழன் அவசரப்பட்டு , உத்தம சோழனை அகற்றிவிட்டு, மக்கள் விரும்பியும் கூட, தான் அரசனாகாமல், காலந்தாழ்த்தி வந்துள்ளான் எனபது விளங்குகிறது!
இதனை “நிலைத்த குருட்டு இருட்டினைப் படைத்த பெருவலியுடைய கலியினை அழித்து, அரசாட்சி ஏற்க வேண்டப்பட்ட போதும்,அரசியல் நடவைக்கைகளை நன்குணர்ந்தவன் ஆதலால், அருண்மொழி வர்மன் அரசேர்ப்பதனை மனதாலும் சிந்தியாதிருந்த பொது,” என்று குறிக்கும் திருவாலன்காடுச் செப்பேடு மூலம் அறிகிறோம்!
ராஜ ராஜனை அரசனனாக்க வேண்டி மக்கள் நடத்திய போராட்டங்களில் சோழகுடிகள், பாசிச ஆட்சியாளர்களால், பிராமண ஆதரவு, உத்தம சோழனது படையினரால் கொடூரமாக தண்டிக்கப் பட்டனர், கொல்லப் பட்டனர்!
சோழப் பெரசில் இருந்த சோழக் குடிமக்களும், பாசிச பிராமணர்களின் அடாத செயல்களைப் பொறுக்க இயலாத.. பிற இன,மதத்தைச் சேர்ந்தவர்களும் , ராஜராஜனுக்கு ஆதரவாகவும், உத்தம சோழனுக்கு எதிராக செயல் பட்டு வந்து உள்ளது குறித்து, தமிழக வரலாற்று ஆய்வாளகள் யாரும் சரியான ஆய்வை மேற்கொள்ளாமல் இருந்து வந்துள்ளது வியப்பளிகிறது!
ஆனால், பிராமண பாசிச, ஆதிக்கத்தை எதிர்த்த, மக்களின் உரிமைப்போராக, வரலாறு நெடுகிலும் இப்போர் வலங்கை, இடங்கைப் போர் என்ற பெயரில் தொடர்ந்து நடந்து வந்தது!இப்போரினால் தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது! பாசிச பிராமணீயத்தின் பக்கமே ராஜராஜனுக்கு பின்வந்த சோழ அரசர்களும் அடுத்துவந்த ஆட்சியாளர்களும் இருந்ததால் பிராமணீயம் என்ற பாசிசத்தின் கீழ் தமிழகம் சுமார் 900 -ஆண்டுகள் கட்டுண்டு கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது!
” வலங்கை இடங்கை போராட்டம் “என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் போராட்டம் எனபது ஆதித்த கரிகாலனின் படுகொலைக்கு பிறகே தொடங்கியுள்ளது! ஆனால் பலரும் இந்த போராட்டம் எப்போது தொடங்கியது எனபது தெரியவில்லை… என்று ,மேலோட்டமாக குறிக்கிறார்கள்! கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தனது சோழர்கள் என்ற நூலில், ஆதித்யன் காலத்தில் தொடங்கியதாக ஒரு புராணம் உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்!
வலங்கை இடங்கை போராட்டத்தை பற்றி விரிவாக பார்க்க வேண்டி உள்ளது! அதற்கு முன் உத்தம சோழன் காலத்து, “அறபலி ஈஸ்வரர்” கோயிலையும்,அது கட்டப் பட்டதன் நோக்கத்தையும் பார்த்து விடுவோம், இந்த கோயில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் உள்ளது!
இன்றைய நாமக்கல் மாவட்டதில் உள்ள கொல்லிமலை குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவதை அறிந்து இருப்பீர்கள்! வள்ளல் பாரி மன்னன் இம்மலையை ஆண்டான் என்றும் அவரது மகள்கள் ‘அங்கவை,சங்கவை ‘ ஆகியோருக்கு. தமிழ் மூதாட்டி அவ்வை என்பவர் அடைக்கலம் தந்தார் என்றும் கதைகள் உள்ளன! சோழ பேரரசில் இப்பகுதி, “மலையனூர் “என்று அழைக்கப்பட்டு வந்தது!
உத்தம சோழனின் தாயாரான,செம்பியன் மாதேவியார் இப்பகுதியை ஆண்டுவந்த, வேளிர் குறுநில மண்ணின் மகள் என்றும் இவரையே உத்தம சோழனின் தந்தையான கண்டராதித்தர் என்பவர் மனம் செய்திருந்தார் எனபது எல்லாம் சோழ வரலாற்றில் குறிப்புகளாக கிடைகின்றன!
ஆதித்ய கரிகாலனை படுகொலை செய்த பிராமணர்களில் ஒருவன் இப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவன் என்பதாலேயே அவனை மலையனூரான ரேவதாச கிரமவித்தன் என்று, “காட்டுமன்னார் கோயில் கருவறையில் உள்ள,ஆதித்ய கரிகாலனைக் கொன்று துரோகிகளானவர்கள்” என்று குறிக்கும் கல்வெட்டு குறித்து வருகிறது!
இந்த மலையனூரில், கொல்லிமலையில் உத்தம சோழன் தனது ஆட்சிக் காலத்தில் கட்டிய கோயில்தான், “அறபலி ஈஸ்வரர் கோயில்” ஆகும்!
இக்கோவிலை ..எதற்கு கட்டினான் என்றால், பிராமணர்கள் தனது ஆட்சியின் பொருட்டு, இளவரசனான ஆதித்ய கரிகாலனை கொன்றார்கள் அல்லவா? ஆதித்ய கரிகாலனைக் கொன்று விட்ட பிராமணர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு இருக்கும் அல்லவா? அந்த பிரம்மஹத்தி தொசதிப் போக்கிக் கொள்ளவும், ஆதித்ய கரிகாலனை கொன்றதால் ஏற்பட்ட கொலை பாவத்திற்கு பரிகாரமாகவும் இக்கோயிலை பிராமணர்களது ஆலோசனை,அல்லது உத்திரவின் பேரில் கட்டிஉள்ளான் என்று விளங்குகிறது!
அதாவது பிராமணர்களின் தருமமான,மனுதருமத்தை, பாசிச ஆட்சியை ஏற்படுத்த வேண்டி, செய்யப்பட்ட படுகொலை என்பதை குறிக்கும் வகையில் இக்கோவிலின் இறைவனுக்கு “அறபலி ஈஸ்வரன்” என்று வைத்துள்ளார்கள்! “அறம்” எனபது தருமம் என்ற பொருளைத்தரும்! பிராமண தருமத்தைக் காக்க செய்யப்பட்ட பலியாம், ஆதித்ய கரிகாலனின் படுகொலை!
இந்த அறபலி ஈஸ்வரனின் பெண்தெய்வத்தின், இறைவியின் பெயர் என்ன தெரியுமா? “அறம் வளர்த்த நாயகி” என்பதாகும்!
கோயில் இறைவன், இறைவி பெயர்களிலேயே, பிராமண பாசிசம் கொண்டுள்ள வக்கிர, கொடூர குணம் வெளிப்படுகிறது தானே?
அந்தணருக்கு வாரி வழங்கி உலகைப் பெற்ற, உத்தம சோழனை பெற்ற செம்பியன் மாதேவியை சும்மா விடமுடியுமா? அவரை, பிராமண பாசிச ஆட்சியாளர்கள் உத்தம சோழனை பெற்றதால், “திருவயிறு வாய்த்த பிராட்டியார்” போற்றிப் புகழ்ந்துள்ளனர்! அவரும் தனது பங்குக்கு தனது மகன் உத்தம சோழனின் பதினோராவது ஆட்சியாண்டில் செங்கல்லால் கட்டப்பட்டு இருந்த கோயிலைக் கற்றளியாக்கி (கருங்கல்லில்}புண்ணியம் தேடிகொண்டுள்ளார்!
உத்தம சோழனின் தாயார் செம்பியன் மாதேவியார் தஞ்சை மாவட்டம் திருகொடிகாவல் என்ற ஊரில் இருந்த கோயிலைத்தான் இவ்வாறு கட்டினார் என்று கல்வெட்டுகள் தெரிவிகின்றன!
போகட்டும்! செம்பியன் மாதேவியோ, உத்தம சோழனோ, அல்லது சோழ மன்னர்கள், அரச குலத்தவர்கள் என்று பலருமே தங்களது வாழ்நாளில் பல்வேறு கோயில்களைக் கட்டி வந்துள்ளார்கள்!
ஆனால், பாசிச பிராமணர்கள் முன்னின்று, தங்களது பொன்,பொருளைச் செலவிட்டு, கோயில் கட்டியதாக இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை!
மக்களோ, மன்னரோ, கோயில்களை கட்டியது, பாசிச பிராமணர்களது இன நலதுக்காகவோ, அவர்களது சுகபோகதுக்காகவோ, ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்கு கொடுப்பதற்காகவோ இல்லை! அந்த நோக்கத்தில் எந்த மன்னரும் அப்போது கோயில்களைக் கட்டவில்லை!
பின் எதற்காக, கோயில்கள் பலவும் கட்டப்பட்டன? கோயில்களின் பயன்பாடு சோழர்கள் காலத்தில் எப்படி இருந்தது? என்பதை அடுத்துப் பார்ப்போம்!
ஆதித்த கரிகால சோழன்,ராஜராஜ சோழனின் அண்ணனும்,சுந்தர சோழனின் மகனும் ஆவார்!இவர்களது தாயார் வானவன் மாதேவி என்பவர்.
ஆதித்த கரிகால சோழனுக்கு கி.பி.966 -லில் இளவரசு பட்டம் கட்டப்பட்டது என்றும் அவன் கி.பி.969 -லில் படுகொலை செய்யப் பட்டான் எனவும், இவன் தனது தந்தை சுந்தர சோழனுக்கு துணையாக, தொண்டை மண்டலப் பகுதியை கல்வெட்டு பொறித்துக் கொள்ளும் தனி உரிமையுடன் காஞ்சியில் தங்கி, ஆட்சி செய்தவன் என்றும் தென்னாட்டு போர்களங்கள் என்ற நூலின் ஆசிரியர் கா.அப்பாதுரையார் குறிபிடுகிறார்! இவரைப் போலவே சோழ வரலாறு எழுதிய பல்வேறு வரலாற்று ஆசிரியர்களும் இதனையே குறிபிடுகின்றனர் !
ஆதித்த கரிகால சோழனுக்கு, “இரண்டாம் ஆதித்த சோழன் என்றும் “ராஜகேசரி” என்றும் பட்ட,விருது பெயர்கள் உண்டு. தவிர, பாண்டியர்களை சேவூர் போரில் வென்றதால்,” பாண்டியர் தலை கொண்ட ஆதித்த சோழன்” என்று பட்டயங்கள் கல்வெட்டுகள் மிகவும் சிறப்பாக குறிக்கின்றன!
இத்துணை சிறப்பு வாய்ந்த ஆதித்தனை, அவனது ஆட்சியில் அதிகாரிகளாக இருந்த பார்ப்பனர்கள் படுகொலை செய்தனர்!
ஆதித்தனைப் படுகொலை செய்துவிட்டு, தங்களது கைப்பாவையாக இருந்த, ஆட்சி அதிகாரத்திற்கு தகுதி அற்றவனான மதுராந்தகச் சோழன் என்ற உத்தமசோழன் என்பவனை அரசனாக்கினர்! இந்த உத்தமசோழன் சுந்தர சோழனுக்கு தம்பிமுறையும் ஆதித்த சோழனுக்கு சித்தப்பா முறையும் ஆகவேண்டும்!
விரிந்து பரந்து, பேரரசாகிவரும் சோழஅரசின் இளவரசன், அடுத்து சோழ அரசனாகப் போகும், நாட்டை ஆளும் தகுதியும் திறமையும் உள்ள ஆதித்தனை படுகொலை செய்து உள்ளார்களே! அவனை யார் படுகொலை செய்தது? யார் அந்த ராஜ துரோகக் குற்றத்தைச் செய்தவர்கள்? எனபது சோழ நாட்டில் பரபரப்பாகபேசப்பட வேண்டிய விஷயம். அதுமட்டுமல்ல அரச கொலதவர்கள் அதனை பேருமே அதிச்சி அடியவேண்டிய ஒன்று! தவிர எதிர் காலத்தில் இதுபோல அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கவும் கூட, இளவரசனைக் கொன்றவர்களை தேடி கண்டுபிடித்து தண்டிப்பது அவசியம் என்று உணர்ந்து செயல்பட்டுவதே வழக்கமாகும்!
எனவே, அடுத்து வந்த அரசன் என்ன செய்து இருக்க வேண்டும்? ஆதித்தனைக் கொலைசெய்தவர்களை கண்டுபிடித்து, நாட்டுக்கு அறிவித்து இருக்க வேண்டும் .! குற்றவாளிகளைத் தண்டித்து இருக்க வேண்டும்.!!
ஆனால் அப்படியெல்லாம் அடுத்து ஆட்சிக்கு வந்த,சோழ நாட்டின் அரசனான , உத்தம சோழன் செய்ய வில்லை.! கொலையாளிகளை கண்டுபிடிப்பது குறித்து எந்த நடவடிக்கையும் சோழ அரசால் எடுக்கப் படவில்லை! உத்தம சோழன் அரசனாக சோழ நாட்டை ஆட்சி செய்த கி.பி.-970 – 985 வரையில் )பதினைந்து வருடங்களில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை!
பிறகு, கொலையாளிகளை யார் கண்டுபிடித்து தெரியுமா? கி பி . 985-லில் ஆட்சிக்கு வந்த ராஜராஜன், தனது அண்ணன் ஆதித்ய கரிகால சோழனைப் படுகொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்கிறான்! அவர்கள், வீராணம் என்று இன்று அழைக்கப் படும் ஊருக்கு… சோழர்காலத்தில் “வீரநாராயண சதுர்வேதி மங்களம்” என்று பெயர் இருந்தது! அங்கு வாழ்ந்த பிராமணர்களும், பிரம்மராயர்கள் என்ற அரசுப் பொறுப்பிலும் இருந்த பார்ப்பன அதிகாரிகள் என்பதைக் கண்டுபிடிக்கிறான் !! கண்டுபிடித்து, அவர்களது உடமைகள், சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்து, நாட்டை விட்டு வெளியேற்றுகிறான்!
ஆதித்த கரிகால சோழனைக் கொன்றவர்கள், சோமன் பண்டிதன்,, ரவிதாசனான பஞ்சவன் பிரஹ்மாதிராஜன், பரமேஸ்வரனான இருமுடிச் சோழ பிரஹ்மாதிராஜன், மலையனூரானான ரேவதாச கிராமவித்தன் ஆகிய நான்கு பிராமணர்கள் என்று சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த உடையார்குடி கல்வெட்டு கூறுகிறது!{ காட்டு மன்னார் கோயில்கருவறையில் பொறிக்கப் பட்டுள்ள கல்வெட்டு)
சரி ஆதித்த கரிகாலனை எதற்கு பார்ப்பனர்கள் படுகொலை செய்கிறார்கள்?
“மனுதர்மம முறைப்படி[வருணாசிரம தருமப்படி ராஜிய பரிபாலனம் செய்யாமல் இருக்கிற அரசனை அவனது செங்கோலை{தண்டத்தைக்] கொண்டே,மந்திரி முதலானவர்கள் கொன்றுவிடலாமாம்!” ( மனுதரும சாஸ்திரம்,அத்தியாயம் ஆறு, சுலோகம் இருபத்தியாறு.)
ஆகவே, ஆதிய கரிகால சோழன் பார்ப்பனீய பாசிசத்தின் படி நடந்து கொண்டு ஆட்சி செய்யமாட்டான். அவனால் பார்ப்பனர்களுக்கு பயனில்லை எனவே மந்தருமப்படி ஆட்சிசெயயாத ஆதித்தனைக் கொலை செய்துவிட்டு, மனுதர்மப்படி ஆட்சி செய்ய தயாராக இருந்த, உத்தமச் சோழனை பார்ப்பனர்கள் அரசனாக்கினார்கள்!
ஆதித்யன், மனுதருமப்படி அரசாளமாட்டான் என்று, எப்படி பார்பனர்கள் முடிவு செய்தார்கள்? அல்லது எல்லாமததையும் சமமாக பாவித்து ஆதித்ய சோழனும் அவனது அப்பனும், அரசனுமான சுந்தர சோழனும் ஆட்சி செய்தவர்களா? என்று கேள்விகள் எழுவது இயற்கையே!
ஒரு சிறிய குறிப்பு மட்டும்:
குந்தவை நாச்சியாரும் ஆதித்த கரிகாலனும் இரட்டை குழந்தைகளாக பிறந்தவர்கள் என்றும், நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாத சுந்தரசோழன் அப்போது இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்து, சோழநாட்டின் திருச்சி பகுதியில் சீடர்களுடன் தங்கி இருந்த இஸ்லாமிய ஞானி, தப்லே ஆலம் பாதுஷா, நத்தார் வலியார் என்பவரது அருளாசியால் பிறந்தவர்கள் என்றும் பெர்சிய, பாரசீக மொழிகளில் ஏராளமான குறிப்புகள் உள்ளன….
கோயில்கள் இறைவழிபாடு செய்ய மட்டுமே என்று நினைத்து,நம்மை ஆண்ட அரசர்கள் கட்டியவை அல்ல ! அவர்களது ஆட்சியை சிறப்போடு நடத்திவரத் தேவையான பலதுறை அரச அலுவல்களை நடத்திவர உதவிடும் ஒருங்கிணைப்பு இடங்களாகவே எண்ணி கோயில்களைக் கட்டயுள்ளனர்! இந்நாளில் கட்டப் பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை போல, அரசின் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் தேவைகளுக்கு, பொதுபயன்பாட்டு நோக்கத்திற்காகவே அரசர்கள் கோயிலைக் கட்டி உள்ளதுடன்,அவ்வாறான பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்!
பண்டை கால தமிழகத்தின் சமயம்,சமுதாயம், வரலாறு,வாழ்க்கைத் திறன்,, அறச்செயல்கள்,ஆட்சிமுறை, பழக்கவழக்கங்கள் முதலியவற்றை நாமறிய உதவிடும் வண்ணம். கோயில்கள் திகழ்கின்றன என்று தனது தமிழ் நாட்டு சிவாலயங்கள் என்ற நூலில் குறிப்பிடும் மா.சந்திர மூர்த்தி,அவர்கள்,
“பண்டைக் காலங்களில் கோயில்கள் பல்வேறு கலை நூல்களும் ஓலை ஏட்டில் எழுதிவைத்து, பாதுகாக்கும் நூலகங்களாகவும் ,விற்றல்,கொடுக்கல் வாங்கல் முதலிய பத்திரப்பதிவு நடத்தும் இடங்களாகவும், ஆவணக் காப்பகங்களாகவும், விளங்கி வந்துள்ளன” என்றும்
அரசின் முக்கிய வருவாயான நிலத்தின் மூலம் வரும் வருவாயை கோயில் வழியே பெற்று , அதிலிருந்து பல்வேறு பயன்களுக்கு செலவிடப்படும் நிதி வைப்பு நிலையங்களாகவும், போர்கள் நிகழும் காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் புகழிமாகவும் ,பஞ்சம்,இயற்கை சீற்றங்கள் நிகழும் காலத்தில் உணவளித்து,பொருளாதார உதவி செய்யும் பணிமனைகளாகவும், பரம்பரையாக பணிபுரிவோருக்கு,வேலை வாய்ப்பு அளிக்கும், மானியம்{ஊதியம்}நிறுவனமாகவும், விளங்கிவந்தன!”என்று தனது முன்னுரையில் குறிப்பிட்டு உள்ளார்!
இவைகள் தவிர, கோவில்கள் அன்றைய நாளில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு விசாரித்து, தீர்ப்பு வழங்கும் நீதி மன்றங்களாகவும்,பணியாற்றி வந்தன! கோவில்களில் நூல்களின் அரங்கேற்றம், நூல்களின் விளக்கங்கள், நாடகம், நடனம், இதர கலைகள் என்று அனைத்துக்கும் தேவையான பணிகளை அரசு சார்பில் செயல்படுத்தும் இடங்களாகவும், கோயில்கள் அமைக்கப் பட்டன!
பல்லாயிரகணக்கான பணியாளர்களுக்கு வேலை வழங்கி, அரசின் பணிகள்,மக்களின் பணிகளுக்கு அரசால் ஏற்படுத்தப்படும் ஊர் சபைகளை நடத்தி, அரசு பணியாளர்கள்,இதர வகை ஊழியம் செய்வோர் ஆகியோருக்கு ஊதியம் தந்து,தங்களது ஆட்சியை நடத்திட கோயில்களைக் கட்டியிருந்தனர்!
பிற்கால சோழர்களில் கோச்செங்கணான் என்ற சோழன் காவிரியின் இரு கரைகளிலும் எழுபது கோயில்களைக் கட்டினான் என்று கோயில் கல்வெட்டுகள் தெரிவிகின்றன! இவன் கட்டிய கோயில்கள் மட்டுமில்லை, விஜயாலய சோழன்,சுந்தர சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள் கட்டிய அனைத்துக் கோயில்களும் அரசின் பணிகளை செவ்வனே செய்ய உதவிடும் பணிமனைகளாகவும், பல்வேறு அலுவல்களை செய்திடும் பொது இடங்களாகவும் அக்காலத்தில் கோயில்கள் திகழ்ந்துள்ளன!
செங்கற்களால் கட்டப்பட்ட கோயில்கள் காலத்தில் சேத முற்றபோது, அவைகள் முன்னிலும் வலிவுடனும் வசதிகள் அதிகரித்தும், கற்றளிகளாக, கருங்கல்லால் ஆன கோயில்களாக சோழர்கள் மாறுதல் செய்து வந்தனர்!
இவைகள் தவிர தங்களது செல்வதை பாதுகாத்து வரும் கருவூலங்களாகவும், போரில் எதிரி நாட்டில் இருந்து கைபட்டபடும் ஏராளமான செல்வங்களையும் கோயிலில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்கள்! மிகுந்த செல்வம் வைக்கப் பட்டுள்ள கோயில்களுக்கு படைவீரர்களை வைத்து காவல் காத்துவரும் பணியும் சோழர் ஆட்சியில் செய்யப்பட்டு இருந்தது!
ராஜராஜன் தஞ்சை பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பே,நெல்லை மாவட்டம் திருவாலீச்வரர் கோயிலைக் கட்டியிருந்தான்! இக்கோயில் கருவூலத்தை காக்க,”மூன்று கை மாசேனை”என்னும் படையை காவல் காக்கும்படி செய்திருந்தான், பல்வேறு இடங்களைச் சார்ந்த கிராம சபையினரை கோயிலுக்கு காவலாளிகளை நியமிக்குமாறு பணித்திருந்தான், சபையினரும் அவ்வாறே கோயிலுக்கு காவலாளிகளை அமர்த்தியுள்ளனர்! என்று தென்னிந்திய கல்வெட்டு தொகுதி,வால்யூம் இரண்டு, கல்வெட்டு-70, தெரிவிக்கிறது!
கோயில்களில் வழக்குகள் விசாரிக்கப் பட்டு, தீர்ப்புகள் சொல்லும் நிதிமன்றமாக செயல் பட்டதை, நீலி என்பவளுக்கும், வணிகன் ஒருவனுக்கும் நேர்ந்த வழக்கு , பழையனூர் திருவாலங்காட்டுக் கோயிலிலும் வணிகப் பெண் ஒருத்திக்கு நடந்த திருமணம் பற்றிய வழக்கு,திருப்பனந்தாள் மற்றும் மதுரைக் கோயிலிலும், வரிஏய்ப்பு,ஊழல் வழக்கு திருமாற்பேறு கோயிலிலும் நடைபெற்றதை திருவெறும்பூர், கூகுர் போன்ற கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிய வருகிறது!
“அக்காலக் கோயில்கள் மேற்கொண்டிருந்த பணிகளில் கல்விப்பணியும் ஒஎன்றாகும். கோவில்களில் சரஸ்வதிப் பண்டாரம் என்ற பெயரில் நூல்நிலையங்கள் இருந்துள்ளன.கோயில்களின் சில பாகங்கள் கல்லூரிகளாகவும் பொது மண்டபங்களாகவும் இருந்துள்ளன!” என்று தமிழர் சமுதாயம் கி.பி.9 ,10 -ஆம் நூற்றாண்டுகள் என்ற நூலில், {பக்கம் -73 ), அதன் ஆசிரியர் க.முத்தையா விவரிக்கிறார்!
தஞ்சை,பெரிய கோவிலில், இரண்டு வங்கிகள் நடந்து வந்தன, அவைகள் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் கடன் கொடுத்து, வட்டியுடன் வசூலித்து வந்தன என்று ‘ராஜராஜேஸ்வரம் ” என்னும் தனது நூலில் குடவாயில் பாலசுப்பிரமணியன் தெரிவிக்கிறார். இவர் தஞ்சை சரஸ்வதி மகாலின் பொறுப்பாளராக இருந்தவர்!
கோயில்கள் சோழமன்னர்கள் கட்டிய நோக்கம் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்! கோயில்களில் இயங்கிவந்த பணிகளில், ஆதுலச் சாலைகள், என்ற மருத்துவ மனைகளும் அடங்கும்!
அரசின் அன்றாட பணிகளை செயல்படுத்தும் நிர்வாக அலுவலகமாக கோயில்கள் விளங்கிவந்துள்ளதுடன்,மன்னனுக்கும் மக்களுக்கும் இடையில் தொடர்புகளை கோயில்கள் மூலம் பலவேறு பணிகளில் ஈடுபட்ட பணியாளர்கள் ஏற்படுத்தி, ஆட்சிக்கு உதவிவந்துள்ளனர் என்பதை அறியலாம்!
கோயில்களுக்கு பொன்,பொருள் அளித்தார்கள், ஏராளமான நிலத்தை அரசர்கள் எழுதிவைத்தார்கள் என்று பல்வேறு கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. அவற்றை கோவில்கள் இன்றுள்ள சூழ்நிலையை வைத்து தவறாகப் புரிந்துகொள்கிறோம்! பரந்துபட்ட நிலத்தின் நேரடியாட்சிக்கு, நிர்வாக அலுவலகங்களாக கோயில்களே அப்போது செயல்பட்டு வந்ததால்தான் கோயில்களுக்கு அரசர்கள் நிதியுதவியாக செய்துள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்! தவிர நிலத்தின் வருவாயே அரசின் முக்கிய வருவாயாக இருந்ததால் அரசுக்கு சொந்தமான நிலங்கள் அனைத்தும் அந்தந்த பகுதியில் இயங்கி வந்த கோயில்கள்களின் மேற்பார்வையில் இருந்துவருமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!
ஆட்சியின் முக்கிய கேந்திரங்களாக கோயில்கள் இயங்கிவந்ததால் குறிப்பிட்ட சாதியினர்தான் கோயிலுக்குள் போகவர முடியும், குறிப்பிட்ட சாதியினர் போகவர முடியாது! என்ற நிலையில் அரசர்கள் காலத்தில் கோயில்கள் இருந்துவரவில்லை! என்பதையும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு உரிமையான,அதிகாரத்தை வழங்கும் இடமாக கோயில்கள் இருந்துவரவில்லை என்பதும் இன்றைய தீண்டாமையை அரசர்கள் காலத்தில் யாரும் கடைபிடிக்கவில்லை என்பதையும் அறிந்துகொள்ளலாம்!
கோயில்கள் ஆட்சியதிகாரம் மிக்க இடங்கள், ஏராளமான பொக்கிஷம் இருந்த இடங்கள் என்பதாலேயே பிராமணீயம் என்ற பாசிசம் கோயில்களைக் கைப்பற்றும், கோயில்களை தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவரும் செயல்களில் முனைந்து ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றது! இன்றுவரை கோயில்களை தங்களது ஏகபோக உரிமை பிரதேசமாகவும், தங்களது ஆதிக்க இடங்களாகவும், தங்களது எல்லாவித செயல்களுக்கும் பயன்படுத்திவருகிறது!
நாள்தோறும் கடினமாக உழைக்கும் மக்களால் மாதத்தில் ஒருநாள் நெய்சோறு சாப்பிடமுடியுமா? ஆனால் பிராமணீயம் உழைக்காமல், மாதம் முழுவதும் நெய்வேத்தியம் சாப்பிட வழிவகை ஏற்படுத்துவது, வாழ்வாதாரமாக இருப்பது கோயில்கள்தான்! அதனால்தான் கோயில்களை பிராமணீயம் அதிகமாக கட்டவும், அவைகளை தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தில் வைத்து கொண்டுவரவும் செய்கிறது!
பிராமணீயம் என்ற பாசிசத்தின் சுரண்டல், ஊழல், ஏகபோகத்தின் முக்கிய மையப் புள்ளி எனபது கோயில்களே!
இந்துமதம் என்று சொல்லும் எவரும் பிராமணர்களைத் தவிர,கோயில்களில், பிராமணர்களின் இடத்தில இன்றுவரை நுழையமுடியாதபடி உள்ளதற்கு காரணத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்! அனைத்து சாதியினரும் முயன்றால் அம்பத்கர் வடிவமைத்த சட்டப் படி, கலைக்டர் ஆகலாம், டாக்டர்,ஆகலாம், ஏன் கவர்னர் ஆகலாம்! இந்தியாவையே கூட ஆளலாம்! திருப்தி போன்ற கோயிலில் மணியாட்ட முடியாது! தினமும் நெய்சோறு, நிவேதனம் என்று வசதிகளை உழைக்காமல் சாப்பிடமுடியாது! உழைத்தாலும் சாப்பிட முடியாது! காரணம் பிராமணீயம் என்ற பாசிசத்தின் கட்டமைப்பு அப்படிப்பட்டது!
அனைவரும் கோயில் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டமும் நடைமுறையும் பிராமணீயம் என்ற பாசிசத்தின் எதிரி என்பதாலேயே அவை இன்றுவரை நிறைவேறாமல் இருந்துவருகிறது!
இப்போதும் கிராமபுறங்களில் உள்ள கோயில்களை பிராமணர் அல்லாதவர்களும் பூசாரிகளாக இருக்கின்றனரே? என்று நினைக்கலாம்! முக்கிய வருமானம் உள்ள, அனைத்து கோயில்களும் பிராமணர்களுக்கு ஆதாயம் அளிக்கும் கோயில்களாக உள்ளது. அவைகளில் இந்த பூசாரிகளை பணியில் அமர்த்துவார்களா? அல்லது கிராம, வருமானம் இல்லாத கோயில்களுக்கு பிராமணர்கள் பணிமாறுதல் செய்யபடுவார்களா? என்று யோசியுங்கள்! பிராமணீயம் எனபது இந்துமதத்தில்எத்தகைய தனி உரிமையும் முக்கியத்துவமும் பெற்றுள்ளது எனபது விளங்கும்!
நன்றி: ஓசூர் ராஜன்
எந்த உலக வரலாற்று நூலிலும் தமிழர் பற்றிய விபரங்கள் குறைவு …சோழ அரசு பற்றி சில வரிகள் மாத்திரம் உள்ளது …இதே நேரம் கற்பனையில் எழுதபட்ட குப்த அரசு பற்றி பக்கம் பக்கம் விளக்கங்கள் உண்டு ….யார் தவறு …??? இந்த மேதை களும் ,அறிஞ்சர்களும் இதையாவது திருதினர்களா ???சும்மா மேடையில் நின்று புலம்புவது வேறு …நடை முறை வேறு …நம் சங்ககால புலவர்கள் பரிசு பெற பாடிய பாடல்களில் மயக்கம் வேண்டாம் .இன்று நமது தேவை கல்வி ,உழைப்பு ,கவனம் ….
தமிழினமும் தமிழ் மன்னர்களும் எப்படி ஆரிய மாயையில் வீழ்ந்து சீரழிந்து தமிழினத்தின் எல்லா மாண்புகளையும் மறத்தையும் அறத்தையும் இழந்தார்கள் என்பதையும் நினைக்க நெஞ்சம் வேகிறது.
நம்மவர்கள் குடியுரிமைப் பெற இந்த நாட்டில் இருக்கும் சட்ட சிக்கல்களைப் புரிந்துக் கொள்ளாமல், வேறு நாட்டினரின் கதைகளுடன் கலந்து பேசினால் பிரச்சனை தீர்ந்து விடுமா. கொஞ்சம் இந்நாட்டு பதிவு இலாக்காவில் போய் குடியுரிமைப் பெற அவர்கள் கேட்கும் சான்றிதழ்களையும், அத்தாட்சிகளையும் கேட்டால் நாம் மயங்கிப் போய் போதுமடா சாமி என்று கூறி விட்டு வீட்டிற்கு வந்து விடுவோம். ஆனால், சாபவில் இந்த கெடு பிடி எல்லாம் இல்லாமல் பல வெளி நாட்டினர் இந்நாட்டு குடியுரிமை பெற்ற மக்களாக இருக்கின்றனர். அங்கே முடியும் பொழுது இங்கே ஏன் முடிவதில்லை?. எல்லாம் அரசியல் மயம்தான். மக்கள் சட்டத்தை முறையாக பின்பற்றினால், சட்டம் அதன் வேலையைத் தானே செய்யும்.
இந்தியாவிற்கு வெளியே நாமும் முன்னேறி விட்டோம் என்று சொல்லுவோமே. ஏன் முடியாதா?. நீங்களும் நானும் இணையத்தின் வழி கலந்துரையாட வசதி பெற்று இருப்பதில் இருந்து நாம் முன்னேறி விட்டோம் என்று தெரியவில்லையா?.
100 வருடமானாலும் ” பிராமணர்கள் கெட்டவர்கள் ; இதிகாசங்கள் புளுகுகள் ; கோயில்கள் வசூல் மையங்கள் ” என எதிர்மறையாகவே பேசி பேசி பலர் மனதை புண்பட்டுத்துவதை ஒழித்து காயம்படாமல் நேர்மறையாக எடுத்து சொல்ல பழகுங்கள்.பழைய பண்டாரங்கள் கூறிய குப்பைகளை அள்ளி வீட்டுக்கு வந்து அசிங்க படாதிர்கள்.
இந்துதர்மனே… உம்முடைய எழுத்தில் சிறு திருத்தம். அதாவது , இன்னும் 100 வருடமானாலும் ” பிராமனர்கள் கெட்டவர்கள், புராணம் புளுகுகள், கொயில்கள் வசூல் மையங்கள்” என நாங்கள் எப்படித்தான் உண்மையை எழுதினாலும் எங்களின் தமிழினம் பார்ப்பனர்களைத்தான் தன்மானமில்லாமல் சார்ந்து வாழும் என்பது மாத்திரம் உறுதி. அதுதான் நடக்கும் என்று நீர் சொல்வீரானால் நான் 99.9% உண்மை என்று ஒப்புவேன். ஆனால் அந்த 00.1% விகித மாற்றத்திற்காக பெரியாரின் தொண்டன் இந்த பூமியில் நம்பிக்கையோடு போராடிக்கொண்டிருப்பான் என்பது மாத்திரம் உண்மை…உண்மை…உண்மை!
இவ்வளவு கருத்தையும் படிக்கும் போதுதான் தெரியுது எல்லாருமே வேலை வெட்டி இல்லாத பசங்க என்று ,,WHAT A கருவாட் WHAT A கருவாட் ,போயி வேலையபாருங்க்கடா அதான் சோறு போடும் ,ம்ம்ம்ம்ம்ம்
முனேற்றம் என்றால் இன்டர்நெட் இல் கருத்து சொல்வது மட்டுமா ?அப்படியானால் இந்தியாவில் எத்தனை குப்பன் ,சுப்பன் வீட்டில் கம்ப்யூட்டர் உள்ளது ???மலேசியா தமிழர்களையும் அங்குள்ள தமிழர்களையும் ஒப்பிடவேண்டாம் …சிந்தனையில் முன்னேற்றம்
,வாழ்கையில் முன்னேற்றம் ,வசதிகளில் முன்னேற்றம் …பொருளாதார முன்னேற்றம் என்று ஒரு மனிதனுக்கு காண வேண்டிய பல முன்னேற்றங்கள் உண்டு …
ஒருமனிதன் ஒன்று நாட்டில் பிறந்தால் இன்றைய நாகரிக உலகில் இந்த மனிதன் அந்த நாட்டு பிரஜை ஆகின்றான் ..அதிகாரிகள் வேண்டும் என்றே தேவை இல்லாத கேள்விகளை கேட்டு குழப்புமாறு பணிகபட்டு பட்டு உள்ளார்கள் ….சாபா,சரவாக் …penninsularமலேசியா எங்கும் பிரஜாவுரிமை சட்டம் ஒன்றுதான் …ஆக வருடாந்தம் 1000 கணக்கில் தமிழ் குழைந்தைகள் பாடசாலை போகமுடியாமல் எதிர்காலத்தை பாழாக்குகின்றன ..தட்டி கேட்ட்கும் தலைவர்கள் இருந்து இருந்தால் இந்த அப்பாவி மக்கள் சீரழிய மாட்டார்கள் ..மலேசியாவில் பிறந்து பிரஜாவுரிமை இல்லாத தமிழ் தம்பதிகள் எதோ வழியில் அமெரிக்க போய் அங்கு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் ..உடனடியாக அந்த குழந்தை அமெரிக்க பிரஜாவுரிமை பெறுகின்றது ..இது நாகரீகம்
உண்மைதான் இங்கு கிலோ மீட்டர் கணக்கில் எழுதுபவர்களை பார்த்தால் இவர்களுக்கு வேறு வேலை இல்லையோ என்று நினைக்க தோன்றுகின்றது …பாவம் இதை ஒருவரும் வாசிப்பதில்லை ….இதற்கு செலவிடும் நேரத்தை ஒரு ஏழை குழத்தைக்கு பாடம் சொல்லி கொடுக்கலாம் அல்லது தமிழ் படிக்கச் தெரியாத தமிழர்களுக்கு தமிழ் சொல்லி கொடுக்கலாம்
சோழரே! நீங்கள் தானே தமிழ் நாட்டுத் தமிழனையும் மலேசியத் தமிழனையும் ஒப்பிட்டுப் பேசினீர்கள்.இப்போது அப்படியே மற்றவர்கள் மீது பழி போடுகிறீர்களே! இங்குள்ள குப்பன்களுக்கு கணினி இயக்க மட்டும் தான் தெரியும். அங்குள்ள குப்பன்களுக்கு மென்பொருள்களைக் கண்டுபிடித்து குபேரானாகத் தெரியும்.
100 வருடங்கள் ஆகியும் இன்னும் நம் தமிழர்கள் மாறவில்லையே!. இன்றும் அந்தப் பரிகாரம் இந்தப் பரிகாரம் என்று மூளை சலவை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அர்ச்சகர்கள். தமிழர்களும் ஏமாளிகளாக மாட்டு மந்தைகளாக சமயத்தின் அரிச்சுவடி அறியாத அர்ச்சகர்கள் சொல்லும் வார்த்தைகளெல்லாம் உண்மை என்று நம்பி சொல்வதை எல்லாம் கேட்டு பூஜை புனஷ்கரங்கள் என்று பணத்தை படோபமாக செலவு செய்கின்றார்களே. இப்படியே சமயத்தின் உண்மைத் தத்துவங்களை அறியாமல் வெறும் வீம்பு பக்தியில் மட்டுமே இறைவனைக் கண்டு விட முடியுமா?. ஏய்ப்பவர்கள் ஏராளாமாக முளைத்து விட்டதால் கொஞ்சம் பகுத்தறிவுடன் இறைவனைக் காணுங்கள் என்றுதானே சொல்கின்றோம். அதை விட்டு இருக்கும் நிலையில் இருந்துக் கொண்டே இருந்தால் சமய “அறிவாளிகள்” நம் கோவணத்தை கழற்றிக் கொண்டுதான் விடுவார்கள் போலும்.
வாழ்கையில் முன்னேற்றம், வசதிகளில் முன்னேற்றம், பொருளாதார முன்னேற்றம் சோழனிடமும் இருக்கின்றது, தேனியிடமும் இருக்கின்றது. இவை இல்லாதவர்களைப் பற்றிய கவலை நம் இருவருக்கும் உண்டு. அதன் காரணமாகவே நம் மக்கள் திருந்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு கருத்துப் பகிர்வு செய்து கொண்டு வருகின்றோம். பிறர் இதனைப் படிப்பதால் ஏற்படும் விழிப்புணர்ச்சி ஓர் சமுதாய தொண்டுதானே?.
யாருக்கு எது தேவையோ அவர்கள் அதைத்தான் வாசிப்பார்கள். அறிவுப் பசி உள்ளவர்களுக்கு கருத்துக் களம் இடம். அது இல்லாதவர்களுக்கு வெட்டிப் பேச்சு திண்ணையே இடம். எது திண்ணை, எது களம் என்று தெரிந்துக் கொள்ளக் கூடவா முடியவில்லை.
திராவிடன் பாய்ஸ் மர தமிழன் மரகட்டையாக இருக்கும்வரை நீங்கள் குதிரையோட்டலாம் ..
ஓணம் பண்டிகைக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை விட்டது .அதற்குப் பதிலடியாக கேரள அரசு பொங்கல் பண்டிகைக்கு விடப்பட்ட விடுமுறையை நீக்கி உத்தரவிட்டது.கருணாநிதி மலையாளிகளுக்கு விடுமுறை அளித்தார். அச்சுதானந்தன் தமிழ்ர்களின் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறையை நீக்கி உத்தரவு அளித்தார்.ஏண்டா தமிழா நீ ஏமறுவதற்கு ஒரு அளவே இல்லையா?
கருணாநிதி வீட்டில் நடக்கும் பூசை புனஸ்காரங்கள்.. ராசாத்தி அம்மாள் வீட்டில் தான் பகுத்தறிவு தளைத்தோங்குது…. இவிங்க ஊருக்கு மட்டும் தான் பகுத்தறிவு என்கிற பேரில் அனைவரின் தாலியையும் அருப்பானுங்க, ஆனா தாலி பாக்கியம் வேண்டி அவன் அவன் வீட்டில் மாங்கல்ய பூசை பண்ணுவாங்க.. சரி ஆரியத்தை ஒழிக்கும் திராவிடர் தலைவர் வீட்டில் பாப்பானுக்கு என்ன வேலை . அந்த பூசையில் கூட தமிழர்களின் வழிபாட்டு முறை இல்லை.. திராவிடமும் ஆரியமும் ஒன்றுதான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது
வேறுமொழிபேசுபவருக்கு தமிழ்மொழியைப் பற்றிப் பேச அருகதை இல்லை அய்யா. நான் இந்துவாக இருப்பதால் தான் இந்து மத இழிவைப் போக்கப் போராடுகிறேன் என்று பெரியார் சொன்னது போல் அவர் தமிழராக இல்லாதபோது தமிழை மட்டும் இழிவுபடுத்தி பேசியது எந்தவகையில் சரி.
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவன் சிறுபான்மை மொழியினர். ஆளப்படுபவர்கள் 85 விழுக்காடு தமிழர்கள்.ஆனால் அந்த வந்தேறி ஆதிக்க வெறியினர் தமிழர்களைப்பர்த்து பாசிஸ்ட் என்று நா கூசாமல் சொல்கிறான். உண்மையில் தமிழன் பாசிஸ்ட் என்றால் பேசியவனின் நாவைஅறுத்திருப்பான்
ஆரிய, திராவிட,மேல்சாதி, கீழ்சாதி, தலித்திய, தாழ்த்தப்பட்டோர் கருத்தாக்கதிற்கே நாம் எதிரானவர்கள்………,
நாம் எந்த மனிதர்களுக்கோ, அல்லது குறிப்பிட்ட இன , சாதிய குழுமங்களுக்கோ எதிரானவர்கள் அல்லர்…………….,
அப்படி எதிரானவர்கள் என்றால் வாழ வழியற்று வாழ்வு தேடி வந்த மற்றைய இனத்தவர் வாழ வழிசெய்து, எம்மை ஆளும் அதிகாரத்தையும் நாம் ஒருபோதும் வழங்கி இருக்க மாட்டோம்,
அப்படி அதிகாரத்தை வழங்கியதன் பலனாக ஆரிய, திராவிட,மேல்சாதி, கீழ்சாதி, தலித்திய, தாழ்த்தப்பட்டோர் என்னும் கருத்தாக்கத்தின் ஊடாக எம் மொழி, இனம் அழிக்கப்பட்டதை , அழிக்கப்பட்டு கொண்டிருப்பதை இனி நாம் அனுமதியோம், அவற்றுக்கு நாம் அன்று மாட்டுமல்ல, என்றும் எதிரானவர்கள்,
எம் மீதி திணிக்கப்பட்ட அந்த வந்தேறிகள் கருத்தாக்கத்தை துடைதழிப்பதே நாம் தமிழராகிய ஒவ்வொருவரதும் இன்றைய காலத்தின் கட்டாய கடமை.
தமிழன் நீங்க பக்கம் பக்கமா தமிழர் புராணத்தை எழுதுவதால் மூளை சலவை செய்வதால யாரும் கோவிலுக்கு போகாம இருக்க போவதில்லை . சமய பொருட்கள் யாரும் விற்காமல் போவதில்லை .அர்ச்சனைகள் ஓமம் களும் nirka போவதில்லை . குரு வழிபாடு மதம் என்பது கடவுள் சம்மந்த பட்ட விசயம் . சரி தவறு என்று கூர உமக்கு உரிமை கிடையாது . வேண்டுமானால் நீங்களும் உங்கள் குழுக்களும் கோவிலுக்கு போகதிர்கள் . அடுத்த இனத்தை கேவலபடுதாதிர்கள் . நாம் இந்த பூமிக்கு மத ரீதியாக வரவில்லை இன ரீதியாகவே வந்தோம் , அதற்க்கு நாம் முநோர்களே வழிகாட்டிகள் . சரியான வழிகாட்டிகள் இல்லாததால் நீங்கள் இப்படி இருகின்றிர்கள் . இதே நீங்கள் ஒரு இஸ்லாமியனாக இருந்தால் இப்படி பேசுவீர்கள ? முதலில் நீங்கள் ஒரு ஹிந்துவாக இருக்க குட தகுதி இல்லாதவர் . பிறகு எப்படி வேதம் படிப்பது . வேதம் படித்தவர் யாராக இருந்தாலும் அவர் பிராமணரே . வேதம் படிக்காமல் உடல் வருந்தாமல் தெய்வ தரிசனம் வேண்டும் என்றால் எப்படி ? மசூதிகளில் இஸ்லாம் அல்லாத ஒருவர் போக முடியுமா ?? கோவில்கள் என்றால் மட்டமா உமக்கு ??
தோடா வந்தட்டால் தேனீ ,என் புலமை பித்தி,,ஊருக்கு உபதேசமாம் ,போடி உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரடி ,நாங்க ஆயிரம் கருத்து எழுதுவோம் ,உன்னை யாரு படிக்க சொன்னா ?எங்க புத்திதான் தின்ன போகுது ,உன் புதியுமா ,போயி வேலைய பாருடி அதான் சோறு போடும்
சிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும்! இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது! சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது! புலியானது சோழர்களின் “இலச்சினை” என்பதை அறிந்திருப்பீர்கள்!
274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர்! காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால்! இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை! அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகிறார்கள் !
உதாரணத்துக்கு இந்த கோயில் தல வரலாற்றில் ஒன்று கூறுவதைப் பாருங்கள்:”வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவர் பெரும் பற்று கொண்டு பூசித்து பேரு பெற்றாராம் அதனால்,பெரும்பற்றப் புலியூர் வியாக்ரபுரம் என்று பெயர் ஏற்பட்டதாம்!” இந்த முனிவர் எப்போது வாழ்ந்தார்?, எந்த பதிகங்கள் பாடினார்? எந்த நூற்றாண்டு? எங்கே அடக்கமானார் ? என்று யாரும் கேட்டுவிடாதீர்கள்! அப்புறம்,தெய்வ குற்றம் ஆகிவிடும்! இந்துக்களின் நம்பிக்கையை கேவலப் படுத்திவிட்டதாக கூறி வழக்கு போட்டாலும் போடுவார்கள்!
இங்கே,சிவபெருமான் அரூபமாக,இருக்கிறார்,ஆகாய வடிவமாக இருக்கிறார் அதுதான், “சிதம்பர ரகசியம்” என்று சொல்லுகிறார்கள்!
பிராமணீயத்தின் தந்திரங்களில் ஒன்று .” ஒரு பொய்யை திரும்பத்திரும்ப சொல்லிவந்தால் நாளடைவில் அந்த பொய்யே உண்மையாகிவிடும்” என்பதுதான்! இதன்மூலம் உண்மையை மறக்கவும்,மரிக்கவும் வைக்க முடியும் எனபது பிராமணீயத்தின் நம்பிக்கையாக இருந்துவருகிறது!
பிராமணீயம், வெகுஜன மக்களை ஏமாற்றவும் தொடர்ந்து அவர்களை தங்களது இன நலனுக்கு பயன்படுத்திக் கொள்ளவும், செய்துவரும் பல்வேறு தந்திரங்களில் மற்றொன்று சடங்குகள், சம்பிரதாயம்,ஐதீகம், ஆசாரம், நம்பிக்கை என்ற பொதுவான பெயர்களைப் பயன்படுத்தி, அவைகளை செய்யவேண்டியதற்கான காரணங்களை மக்களுக்கு சொல்லாமலே, எப்போதும் மக்களை குழப்பத்தில்( முட்டாள்களாக ) வைத்திருப்பதுதான்!
அரூபமாக,ஆகாய ரூபத்தில் (கடவுள் காட்சி தருகிறார் ?) இருக்கிறார் என்றால், அதற்கு கோயில் எதற்கு? அதுவும் சிதம்பரத்தில்? என்று யாரும் கேட்க மாட்டார்கள், என்ற நம்பிக்கை பிராமணீயத்துக்கு இருக்கிறது!
தவிர முஸ்லிம்கள், “படைத்தவனை வணங்குவோம்,படைப்புக்களை வணங்க மாட்டோம், இறைவனுக்கு உருவம் இல்லை! ” என்று கூறும் முஸ்லிம்களின் தத்துவத்தோடு ஒப்பிட்டு பார்க்கமாட்டார்கள், பார்த்தாலும் அதனை சரி என்று உணர மாட்டார்கள் உணர்ந்தாலும் ,ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அவ்வளவு ஏன்? அவ்வாறு சொல்வதை குறைந்த பட்சம் சந்தேகப்படவும், சிந்திக்கவும் மாட்டார்கள்என்ற அதீத நம்பிக்கை பிராமணீயத்தின் நம்பிக்கையாக உள்ளது!
அதற்ககு காரணம் நமது இந்துமத மக்களின் “அதீத கடவுள் பக்தி” என்பதை பிராமணீயம் அறிந்து வைத்துள்ளதுதான்!
போகட்டும் உண்மையில் சிதம்பரம் கோயில் தானா? அல்லது வேறா? என்று ஆய்ந்தால் அது கோயில்இல்லை என்றும் அது அரசர்களின் பண்டாரம் (கருவூலம்,}என்றும் அரசின் செல்வதைப் பாதுகாப்பாக வைக்க, வைத்துப் பராமரிக்கக் கட்டப்பட்டது என்ற உண்மை விளங்கும்! சிதம்பரம் கோயிலின் அமைப்பையும், மற்ற கோயிலில்களில் இருந்து அது வேறுபடும் விதத்தையும் பார்த்தே, நம்மால் இதனை தெரிந்துகொள்ள முடியும்!
மற்ற கோயில்களில் உள்ளதைப்போல கோபுரங்கள் இக்கோயிலுக்கு ஆரம்பத்தில் இல்லை! கோயில் என்றால் நிச்சயம் கோபுரம் அமைத்து, அதற்கு குடமுழுக்கு செய்து, அதன்பின்பே வழபாட்டு தளமாக அதனை பயன்படுத்துவது வாடிக்கையாகும்!
இந்த இடத்தின், கோயிலின் மொத்த நிலப்பரப்பு 52 – ஏக்கர். இப்போது கம்பீரமாக நான்கு திசைகளிலும் காட்சி தரும் ராஜ கொபுரரங்கள் பின்னால் வந்த ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவைகள்! கிழக்கு கோபுரத்தை கி.பி.1050 -ஆட்சிக்கு வந்த குலோத்துங்க சோழன் கட்டினான்! மேற்கு கோபுரம் விக்கிரம சோழனாலும், தெற்கு கோபுரம் கடவராயன் கொப்பெருஞ்சிங்கனாலும், வடக்கு கோபுரம் கிருஷ்ண தேவராயர் ஆட்சியிலும் கட்டப்பட்டது!
சிதம்பரம் கோயில் இல்லையா? அது சோழர்களின் கருவூலம்தனா ? என்று புரிந்துகொள்ள பக்தி,ஆன்மிகம், என்ற கண்ணாடிகளைப் போட்டுக் கொள்ளாமல், “அறிவு என்ற கண்ணையும் வைத்துப் பார்க்கவேண்டும்!அவ்வளவுதான்!
இந்த கோயிலில் உள்ளே நுழைந்து, சாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்றால் இன்றுவரை மேலாடையை,சட்டையை கழற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்று ஒரு வழக்கம் இருந்து வருகிறதே? ஏன்தெரியுமா? மற்ற தமிழ் நாட்டு கோயில்களில் அந்த வழக்கம் இல்லையே ஏன்?
ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை, இப்போது உள்ள பாதுகாப்பு முறைகளோ, ஷ்கேனர்களோ, அப்போது இல்லாததால், உள்ளே சென்று வருபவர்கள் யாரும் விலையுயர்ந்த தங்கம்,ரத்தினங்கள், பொருள்களை எடுத்து சென்றுவிடக் கூடாது தடுக்க செய்த ஏற்பாடுதான் அது! இன்றும் முட்டாள் தனமாக,ஜனாதிபதி வெங்கட்ராமன் ஆனாலும் சட்டையை கழட்டிவிட்டு தான் கோயிலுக்கு போக வேண்டும் என்ற அளவில் சாத்திரமாகவும் சடங்காகவும் கடைபிடிக்கப் பட்டு வருகிறது!
தமிழர்களுக்குப் பெரியார் ஏன் தேவைப்பட்டார்? ஏன் பார்ப்பனியத்தை எதிர்த்தார்? பார்ப்பனியத்தின் உண்மையான சொரூபம் என்ன? என்பதற்கான பதிவுகளே தவிர இந்து மதத்தைச் சீண்டும் பதிவுகள் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பார்பனதாசரான காயீயும் அவரையொத்தவரும் ஏன் பெரியாரைத் தொடர்ந்து தேவையில்லாமல் பதிவுக்குப் பதிவு பெரியாருக்குச் சாதிபட்டம் கட்டி ஒருமையில் திட்டினார்கள் என்பதற்கான பதிவுகளே இவை. தொடரும்….
இதுதான் நீங்கள் சொல்ல வந்த, சிதம்பர ரகசியமா? என்று கேட்காதீர்கள்! நான் சொல்ல வந்த, சிதம்பர ரகசியங்களில் இதுவும் ஒன்று அவ்வளவே! “சிதம்பரம் என்றாலே எண்ணற்ற ரகசியங்கள்” என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்! மற்ற ரகசியங்களை தொடர்ந்து பார்ப்போம்!
.
உயிகளிடத்து அன்பு வேண்டும், மனிதர்கள் எல்லோரும் நல்லொழுக்கத்துடன் வாழவேண்டும், என்ற நோக்கமே, மக்களின் மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்துவதாகவே திருக்குறளை எழுதியுள்ளார் வள்ளுவர்.
தமிழரான, நமது முன்னோரில் ஒருவரான திருவள்ளுவரிடம் இருந்த பொதுப்பார்வை, பிராமணீயம் என்ற பாசிசத்திடம் , பாசிசத்தை விரும்புகிற,ஆதிக்க மனப்பான்மையுடன் மனிதர்களை பேதப்படுத்தி வைத்திருக்கிற, தொடர்ந்து நீடித்துவருகிற, அனுமதிக்கிற இந்துமத நூல்களில் ஏதாவது ஒன்றில் இதுபோன்ற பொதுவான, உலக மக்களுக்கு தேவையான, விமசனம் செய்ய முடியாத நூலை காட்டுவது கடினம்.நூலாசிரியரை சுட்டுவது அதனினும் கடினம்!
அந்தகைய பெருமையுடைய, திருவள்ளுவரின் திருக்குறள்,
” எப்பொருள் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு!” என்கிறது!
மெய்ப்பொருள் காண்பவர்களை விட,அதாவது யார் என்ன சொல்கிறார்கள்? ,எதைப்பற்றி சொல்கிறாகள்? அவர்கள் சொல்லுவதில் உண்மை இருக்கிறதா? என்று பார்ப்பதைவிட,விருப்பு,வெறுப்பு இன்றி சிந்திப்பதை விடுத்தது, அவர் இப்படி சொல்கிறார் என்றால் அவர் இன்னார்! அவர் இப்படிப் பட்டவர்! அவர்கள் அப்படிதான் சொல்லுவார்கள்! என்று அர்த்தம் கற்ப்பித்தும்,சாயம் பூசுவதும், சரியான அணுகுமுறை அல்ல! நாகரிகமும் அல்ல!!
மேலும் அப்படிப் பட்டவர்கள் தங்களது வெறுப்பை,இவ்வாறு வெளிப்படுத்துவது, இதுபோன்ற விசயங்களை அலசுவதையும், ஆய்வு செய்வதையும் விரும்பவில்லை! என்பதை , அலசுவதும்,ஆய்வு செய்வதும் தங்களுக்கு எதிரானது என்ற மனநிலையையும் மறைமுகமாக உணர்த்துகிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது! இதுபோன்ற ஆய்வுகளின் மீது தாங்கள் கொண்டுள்ள அதிருப்தியை , நேரடியாக வெளிப்படுத்த,சொல்ல முன்வராமல், சுற்றிவளைத்தும், மறைமுகமாக வெளிப்படுத்தும் செயலாக கருத வேண்டி இருக்கிறது!
ஒரு நாகரீக சமுதாயம் என்பது அனைவருக்குமான, சம உரிமையை எல்லா நிலைகளிலும் தருவதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்!
பிராமணீயம் எனபது பாசிசம் என்பதால், ஆதிக்க, அடக்குமுறை கொண்டுள்ளதால், அவ்வாறு நாகரீக சமுதாயமாக இல்லை! என்று உறுதியாக சொல்லலாம்!
உலக நாகரீகங்களின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து, நூல் எழுதிய , வில் டுராண்ட் ( Will Durant}என்பவர் “ஒரு சமுதாயம், நாகரீக சமுதாயம் என்று அழைக்கப் படவேண்டும் என்றால், அதற்கு நான்கு தகுதிகள் இன்றியமையாதவை” என்கிறார்! அவைகள் என்னவென்றால், “பொருளாதார வளம், நல்ல அரசியல் அமைப்பு, சமுதாயக் கட்டுக்கோப்பு, சமய நிறுவனங்கள் என்பவைகள் அவை” என்கிறார்!
இந்த நான்குநிலைகளிலும் உன்னதமாக இருந்தது தமிழ் சமுதாயம்! அந்த உன்னத, நாகரீக, சமுதாயத்தின் இடையிலே ஊடுருவிய சமணமோ, பவுத்தமோ, அல்லது தமிழர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரித்த வேறு எந்த மதமோ,தமிழ் சமுதயத்தின் நாகரீகத்தை அழிக்க வில்லை,சிதைக்கவில்லை மாறாக ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தன! ஆனால், “இந்துமதம்” என்ற போர்வையில் தமிழர்களின் உன்னதத்தை,நாகரீகத்தை அழித்து,சிதைத்தது “பிராமணீயம்” தான் என்று அறுதியிட முடியும்!
நாகரீக, தமிழ் சமுதாயத்தின் உன்னதப் பெருமைகளை அழித்தது மட்டுமின்றி, அநாகரீக கலாச்சாரங்களை,பழக்க வழக்கங்களை ஆராதித்து, ஏற்றுகொள்ள நிர்பந்தித்தும், தொடர்ந்து வற்புறுத்தியும் வந்தது, “பிராமணியம்” தான்!
நமது இதிகாச,புராணங்களில் உள்ள ஆபாசங்கள்! அவைகளில் இறைவனின் அவதாரமாகவும், திருவிளையாடல்களாகவும், இறைவன் பெயரில் ஏற்றி, திரும்பத்திரும்ப சொல்லி, பொழிப்புரைகள், வியாக்கியானங்கள், விரிவுரைகள் என்று பல்வேறு விதமாக பரப்பி, தமிழர்களின் தொன்மை,வீரம், உன்னதம்,நாகரீகம் அனைத்தையும் அழித்து சிதைத்து, வந்தது,பிராமணீயம்!
“இறைவன் முன் அனைவரும் சமம்” என்று இன்றைய சைவ,வைணவ பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பலரும் கூறிவருகிறார்கள்! இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை நான் ஏற்றுகொள்கிறேன்! நான் எற்றுகொள்வதில் என்ன பெருமை ,சிறப்பு இருக்கிறது? அனைவரும் சமம் என்பதை இறைவனின் இடைத்தரகர்களாக இன்றும் இருந்து வருகிற, இயங்கி வருகிற பிராமணர்கள் எற்றுகொள்கிறார்களா? எனபது குறித்து சிந்திக்க வேண்டும்!
அவ்வாறு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், ஏன் என்றும் சிந்திக்க வேண்டும்! அனைவரும் இறைவன் முன்பு என்றில்லை, பிராமணர்கள் என்கிற மனிதருக்கு முன் சமமில்லை என்பதை நடைமுறையில் இன்றுவரை செயல்படுத்தி வருகிறது பிராமணீயம்!
இந்த லட்சணத்தில் ஒவ்வொரு கோயிலுக்குள்ளும் ஒரு சக்தி இருக்கிறது, அதனால் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவித வழக்கம் இருக்கிறது என்றும் சட்டை அணியாமல் போவதற்கு காரணம் அந்த கோயிலில் உள்ள சக்தி நமது உடம்பில் படுவதற்கு தான் என்றும், இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்று நாம் எண்ணிக் கொண்டு, அல்லது பார்பனீயம் நமக்கோ,நமது முன்னோர்களுக்கோ,சொல்லிவந்ததை, அல்லது நாமாக ஏற்றுக்கொண்ட சமாதானத்தை உண்மையென்று நம்பி வருகிறோம்!
இன்றுவரை இறைவன் இருக்கிறானோ, இல்லையோ,அது வேறுவிசயம்! ஆனால் இறைவன் உறைவதாக சொல்லப்படும் கோயில்கள் ஏராளமாக உள்ளன. அப்படி உள்ள அந்த கோயில்களில்,இறைவனால் படைக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து மனிதர்களும் சென்றுவர முடிகிறதா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்! அவ்வாறு மனிதர்கள் அனைவரும் இறைவன் உள்ளதாக நம்பும் ஆலயங்களுக்குள் சென்றுவர முடியாத நிலைக்கு என்ன காரணம்? தடி செய்ய யார் காரணம்? அல்லது எந்த சக்தி காரணம் என்று ஆராய்ந்தால் அந்த சக்தி பிராமணீயம் என்ற பாசிசம்தான் என்பதை நம்மால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்!
பிராமணீயம் என்ற பாசிசம் கோயில்களை ஆக்கிரமிக்கும் வரை, கோயில்களை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவரும்வரை கோயில்களில் அனைவரும் சென்றுவர தடிஎதும் இருந்ததில்லை! காரணம் கோயில்கள் எனபது பல்துறைகான,பொது இடங்களாக விளங்கிவந்ததும், அந்த நோக்கத்துக்காகவே கோயில்கள் கட்டப் பட்டு இருந்தன என்பதும்தான்!
பிராமணீயம் என்கிற பாசிசம் கோயில்களை தங்களது ஆதிக்க இடன்காலக ஆகிய பிறகே,ஆண்டவன் கூட தீண்டாமை பார்க்கும் நிலை ஏற்பட்டு உள்ளது! பிராமணீயம் ஏற்படுத்தி உள்ளது!
இதனை நமக்கு உணர்த்துவதே, நந்தனாரின் கதை! அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இன்று காட்டப்படும் திருநாளைப் போவார் என்ற நாயன்மாரின் ( இயற்பெயர்}உண்மைப் பெயர் நந்தனார் என்பதாகும்!
இவரை பிராமணீயம் தனது ஆதிக்கத்தில் கோயில்களைக் கொண்டுவந்ததை ஜீரணிக்க முடியாமலும் எதிர்கவும் இயலாத நிலையில் அல்லாடியவர்! பிராமணீயம் இவரைத் தாழ்த்தப்பட்டவராக அறிவித்து, கோயிலுக்குள் நுழையத் தடை விதித்திருந்தது! இது கோயிலில் உள்ள சிவனுக்கும் தெரியும் என்கிறார்கள்!
ஆதனூரில் புலையர் குலத்தில்,பிறந்த இவருக்கு சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம்! தனது வாழ்நாளில் ஒரு நாளாவது,தில்லைக்குப் போய், (சிதம்பரம்) நடராஜரை தரிசித்துவிட வேண்டும் என்ற ஆசைகொண்டவர்! இந்த (வேண்டாத? )ஆசை எழும்போதெல்லாம் அவராகவே நாளைக்குப் போகலாம் என்று தனது மனதுக்குள் எண்ணிக் கொண்டு நாளைக் கடத்திவந்தார்!
அடக்க. அடக்க… ஆசைஎன்பது, அடங்காமல் அதிகரிக்கும் குணமுள்ளது என்பார்களே? அப்படி நந்தனாரின் ஆசை அடங்காத ஆசையாக ஒருநாள் அதிகமானதால் என்ன நடந்தாலும் சரி, தில்லை நடராஜரைப் போய் தரிசித்துவிடுவது என்று தீர்மானித்து, தெற்கு வாயில் வழியே, சிதம்பரம் கோயிலுக்குள் செல்லும் இவரை, தீயில் மூழ்கி எழுந்துவந்தால்,உனது தீட்டு அகன்றுவிடும், தீண்டாமை போய்விடும்! அதன்பிறகு நீ தாராளமாக தில்லை நடராஜரை தரிசிக்கலாம் என்று பிராமணர்கள் கூறி, நந்தனார்மீது நெய்யை ஊற்றி, எரித்து விடுகின்றனர்! இறந்தபின் சிவதரிசனம் அவருக்கு கிடைகிறது!
இதனை, பெரிய புராணம் எப்படி சொல்கிறது தெரியுமா? சிவனே,நந்தனாரின் கனவில் வந்து தில்லைக்கு வருமாறும் தீயில் மூழ்கி எழுமாறும் வந்து சொன்னாராம்! அதேபோல, தில்லைவாழ் அந்தணர்கள் (அந்தகன் என்றால் எமன்,குருடன் என்றும் பொருளுண்டு!) கனவில் வந்தும் சிவன்,நந்தனாரை தீயில் மூழ்கிஎழுவதற்கு, ஏற்பாடுகள் பண்ணுமாறு சொன்னாராம்!
அப்படி சிவன் கனவில் சொன்னார் என்றால்,” இறைவன் முன் அனைவரும் சமமில்லை” என்று இறைவனே சொன்னதாகத் தானே? பொருளாகிறது! கனவில் வந்து அந்தணர்களுக்கும் சொன்ன இறைவன், “அந்தணர்களே! என் அடியவர்களில் ஒருவனான நந்தனார் நாளை என்னை ர்தரிசிக்க வருகிறார்! நீங்கள் அவரை பணித்து, சேவித்து எனது தரிசனத்துக்கு அழைத்துவாருங்கள் என்று சொல்லி இருக்கலாமே? “ஏன் சொல்லவில்லை?
சிவன் கனவில் வந்து அந்தணர்களிடம் நந்தனாரை எரித்து விடுங்கள் என்றும் சொல்லவில்லை! நந்தனாரிடமும் சொல்லவில்லை! இறைவனைக் காணும் அதீத பக்தியால், கோயிலுக்குச் சென்ற நந்தனாரை,அந்தணர்கள் எரித்துக் கொன்றுவிட்டு, கடவுளைக் குற்றவாளியாக்கி, இருகிறார்கள் என்கிறேன்! நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்!
அல்லது, அந்தணர்கள் செய்த ஏதோ ஒரு தகாத செயலைக் கண்டதால்தான், நந்தனாரை எரித்து கொன்றுவிட்டு, இப்படி கதைகட்டி உள்ளார்கள் என்றும் சந்தேகம் வருகிறது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
எனக்கு ஏன் அப்படியெல்லாம் சந்தேகம் ஏற்படுகிறது? என்றால், இதே தில்லை கோயிலில்,(சிதம்பரத்தில்) நம்ம விஷ்ணு பெரியவாள், “ராமானுஜர்,” குலோத்துங்க சோழன் காலத்தில் செய்தாரே ஒரு புரட்சி?! அதைக்கூட நம்ம கமல ஹாசனார், அவரோட ‘தசாவதாரத்துல’ முதல்ல காட்டினாரே?! அந்த கதை பற்றி அடுத்து பார்க்கலாம்!
ராஜராஜன் மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய விசயாதித்தனுக்கும் பிறந்தவன் நரேந்திரன் என்பவன். இவனுக்கு ராஜேந்திர சோழன் தனது இரண்டு மகள்களில் இளையவரான,அம்மங்கை தேவியை மணம் செய்து கொடுத்திருந்தான்! ராஜேந்திரனின் மகள் அம்மங்கை தேவியின் மகன் குலோத்துங்க சோழன் என்ற பெயரில் ராஜேந்திர சோழனின் மகன் இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு சோழநாட்டின் அரசனான். இவனது ஆட்சிக்காலம் கி.பி.1070 – 1120 – என்று வரலாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு உள்ளனர்!
குலோத்துங்க சோழன் என்ற விருதுபெயருடன் சோழ அரியணை ஏறிய இவனுக்கு,” கிருமிகண்ட சோழன்” என்று பெயர் இருந்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன! எந்த காரணத்துக்காக கல்வெட்டுகள் இவனை கிருமி கண்ட சோழன் என்று விளக்கவில்லை!
ஆயினும் இவனது ஆட்ட்சிகாலத்தில் தான் வைணவத்தை தூக்கி நிறுத்த பெரும் முயற்சிகள் செய்துவந்த ராமானுஜர் சிதம்பரம் கோயிலில், திருமாலின் சிலையை நிறுவ முயற்சித்த செயலும், அதனை சைவ பிரிவைச் சேர்ந்த பிராமணர்கள் தடுத்தும்,எதிர்த்தும் வந்த செயலும் நடைபெற்றது!
நம்ம கமல் ஹாசனார்,தசாவதாரம் என்ற தனது திரைபடத்தின் தொடக்கத்தில் திருமாலின் சிலையை கோவிலில் இருந்து அகற்றபடுவதை தடுப்பார்! நெப்போலிய அரசன்,அந்த சிலையோடு அவரையும் சேர்த்து கடலில் தள்ளுவது போல காட்சியை அமைத்திருப்பார்! உண்மையில் அப்படியெல்லாம் எதுவும் நடைபெறவில்லை! யார் கேட்பார்கள்! யாருக்கு தெரியும் இந்த கதை என்பதுபோல கமல் ஹாசனார், வைணவத்தின் மீது மக்களை ஈர்க்கவும்,சைவத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும் விதமாக தனது நடிப்பை காட்டியிருப்பார்!
நடந்தது என்னவென்றால், சமணர்களை ஒதுக்கிவிட்டு, ராஜேந்திர சோழன் காலத்திலேயே சிதம்பரம் கோயில் சைவ பிராமணர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிட்டிருந்தது! சைவ பிரிவினரின் கட்டுபாட்டில் சிதம்பரம் கோயிலும் அதில் இருந்த ஏராளமான பொன்னும் பொருளையும் அவர்கள் மட்டுமே அனுபவிப்பதை போறாத, வைணவதாசரான ராமானுஜர், வம்படியாக சிதம்பரம் கோயிலுக்குள் திருமால்(அரங்கநாதர்) சிலையை வைத்து, அதனை வைணவர்களின் கட்டுப்பாடிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்தார்! இதனால் கோபமுற்ற சைவ பிரிவினர்கள் ராமானுஜரின் அடாத செயலை அரசன் குலோத்துங்கனது கவனத்துக்கு எடுத்துச் சென்றார்கள்!
கோயிலுக்குள் குழப்பத்தை விளைவித்து,நாட்டில் கலகத்தை மூட்டும் நாசகாரர்களைக் கண்டறிந்து,தண்டிக்கும்படி குலோத்துங்க சோழன் கட்டளை இட்டான்! அவனது உத்தரவுப் படி, சிதம்பரம் கோயிலில் வைக்கப் பட்ட அரங்கநாதர் சிலை அப்புறப் படுத்தப்பட்டது!
அரசனின் கோபத்தை அறிந்த வைணவ தாசர் ராமானுஜர், மாட்டினால் அதோகதிதான் என்று பயந்து, மேலகோட்டைக்கு(மைசூர் பக்கம்) ஓடிவிட்டார்! மன்னன் குலோத்துங்கன் இறக்கும்வரை அவர் சோழநாட்டுப் பக்கமே திரும்பவில்லை! குலோத்துங்கன் இறந்தபிறகுதான் சோழநாட்டில் காலடி எடுத்துவைத்தார்!
மக்களுக்குள் இப்படி தங்களது சுயநலம்,ஆதிக்க ஆசை,ஆகியவற்றின் காரணமாக குழப்பங்களை ஏற்படுத்தியதை தடுத்தால் தானோ,என்னவோ, குலோத்துங்க சோழனுக்கு கிருமி கண்ட சோழன் என்று பெயரிட்டு அழைத்தார்கள் போல தெரிகிறது!
சோழர்கள் நூல் எழுதிய கே.ஏ. நீல கண்ட சாஸ்திரி குலோத்துங்க சோழனைப் பற்றிக் கூறும்போது என்ன சொல்கிறார் தெரியுமா? இவனை கிருமிகண்ட சோழன் என்று மக்கள் வெறுத்து ஒதுக்கினார்கள் என்கிறார்! கிருமி யார் என்று பார்த்தால்,ராமானுஜர் என்று தெரிகிறது!
இந்த நிகழ்ச்சியைத்தான் , நம்ம கமல் ஹாசனார், தனது “தசாவாதாரம்” திரைபடத்தில் தனது சாதிய பற்றுதலால், கற்பனைகள் கலந்து… காட்டி இருக்கிறார்!
இந்த காட்சிகள் வரும்போது, பின்னணியில் அவர் பேசும் வசனமும்கூட தவறானதாகும்! இசுலாமும் கிருத்துவமும் இந்த மண்ணிற்கு வருவதற்கு முன்பு, சைவமும் வைணவமும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன, தாக்கிக் கொண்டன! என்பதுபோல அவர் பேசும் வசனத்தில் உண்மை இல்லை! சைவமும் வைணவமும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்பட்டு, மோதிக்கொள்ளும் முன்பே, இசுலாம் தமிழகத்துக்கு வந்துவிட்டிருந்தது!
ராஜ ராஜனின் ஆட்சியில் இசுலாமியர்கள் சோனகர்கள் என்ற பெயரில் அழைக்கப் பட்டு வந்தனர்! அதுமட்டுமின்றி,அவனது ஆட்சியில் அதிகாரிகளாக பணிபுரிந்தும் வந்தனர்! சோனகன் சாவூர் பரஞ்சோதி என்பவன், ராஜராஜன் காலத்தில் ஓலை நாயகமாக அதாவது, செப்பேடுகள்,அரசின் உத்தரவுகளை, அவை சரியாக எழுதப்பட்டு உள்ளனவா என்று கண்காணிக்கும் உயர்ந்த பொறுப்பில் இருந்தான் என்று எசாலம் செப்பேடு கூறுகிறது! இவன் தஞ்சை கோயிலிக்கு தனது சார்பில் சில கொடைகளையும் கொடுத்துள்ளான்!
கமல் ஹாசனார் சொல்லும் கதை,ராஜராஜனுக்குப் பிறகு,ராஜேந்திர சோழனுக்குப் பிறகு, இரண்டாம் ராஜராஜனுக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த குலோத்துங்க சோழன்காலத்தில் நடந்த கதையாகும்!நமது வரலாற்றை திரிப்பதில், அவாள்களுக்கு உள்ள அக்கறை அளவுகூட, நம்மவாளுக்கு.. நம்ம வரலாற்றை அறிந்துகொள்ள அக்கறை இல்லை!
குலோத்துங்க சோழனுக்கு பயந்து, மைசூருக்கு ஓடிய ராமானுஜர் தான், திருப்பதி மலைமீது இருந்த, பழங்குடியினரின் வழிபாட்டுக்கு உரிய.. வன தேவதை, (காளி)சிலையைத் திருத்தம் செய்து, திருமாலாக ஆகியவர்! அந்த கதையைத்தான், இந்துமதம் எங்கே போகிறது என்ற நூலில் தத்தேதரார். எழுதியிருக்கிறார்!
பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின், தமிழர்களின் போராட்டமாக இடங்கை-வலங்கைப் போராட்டத்தை சொல்லலாம்!
இந்த போராட்டம்,ஒன்றிரண்டு வருடங்களில் நடந்து முடிந்த போராட்டம் இல்லை.900 -ஆண்டுகளுக்கும் மேலாக,வாழையடி வாழையாக, உழைக்கும் மக்களின் வாரிசுகளுக்கும், ஆதிக்கத்தை நிலைநாட்டி,அடக்கி ஒடுக்கும்” பிராமணீயம்” என்ற பாசிசத்துக்கும் இடையில் தொடர்ந்து நடந்த போராகும்!
இடங்கை-வலங்கை போராட்டம் கி.பி.11 -ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.19 -ஆம் நூற்றாண்டு வரையில் நடந்ததாக தமிழகத்தில் காணக்கிடைக்கும் பல கல்வெட்டுகளும்,செப்பேடுகளும் குறிப்பிடுகின்றன. எனவே, இந்த போராட்டத்தின் தொடக்க காலம் எனபது கி.பி.பத்தாம் நூற்றாண்டு என்பதை அறிய முடிகிறது!
‘இடங்கை-வலங்கை சாதி வரலாறு ‘ எனும் தலைப்பிட்ட கையெழுத்துச் சுவடி ஒன்று சென்னை பல்கலைக்கழக நூலகத்தின் பலன்சுவடிகள் பிரிவில் காணப்படுகிறது! இச்சுவடியானது,இடங்கை-வலங்கை பிரிவுகளைச் சேர்ந்த, 98 சாதிகள் கரிகால சோழன் காலத்தில் ஏற்பட்டன என்றும் வெள்ளாளரும் அவர்களது ஆதரவாளர்களும் இடங்கை சாதியினர் என்று கருதப்பட்டார்கள் என்று கூறுகிறது.(ஆதாரம்: தமிழ்நாட்டு வரலாறு,சோழப் பெருவேந்தர் காலம்)
தென்னிந்திய வரலாறு என்ற நூலில், ஆசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள், “இடங்கை-வலங்கைப் பாகுபாடு எவ்வாறு தொடங்கியது எனபது மர்மமாக இருக்கிறது என்றும் பழைய காலத்தில் இருந்தே இப் போராட்டம் இருந்தது” எனவும் குறிபிடுகிறார்!
அவரே,தனது சோழர்கள் என்ற வரலாற்று ஆய்வு நூலில்,இவ்விரு வகுப்பினருக்கும் நடந்த பூசல்களால் தெருக்களில் அடிக்கடி ரத்தவெள்ளம் ஓடியது.கரிகாலன் காலத்தில் தோன்றியதாக ஒரு புராணம் கூறுகிறது என்றும் குறிப்பிடுகிறார்!
நடக்காத,நம்ப இயலாத கதைகளை,புராணங்களை, உண்மையாக நடந்த வரலாறுகள் போலவும்,நடந்த உண்மையான வரலாற்றை,உண்மைகளை புராணங்கள்,என்றும் திரித்து கூறுவதும் பிராமணீயத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது !
ஆகவே, கரிகாலன் காலத்தில்தோன்றியதாக ஒரு புராணம் கூறுகிறது என்று கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார் சொல்வதில் இருந்து, இடங்கை-வலங்கைப் போராட்டம் கி.பி.பத்தாம் நூற்றாண்டில், ஆதித்ய கரிகாலன் காலத்தில், ஆதித்ய கரிகாலன் பிராமண அதிகாரிகளால் கொல்லப்பட்டு, இயற்கை நீதிக்கு எதிராக, உத்தம சோழன் அரசனாகப்பட்ட சூழ்நிலையில் தொடங்கியது என்பது விளங்குகிறது!
உத்தம சோழன் அரசன் ஆக்கப்பட்ட முறையை எதிர்த்த, அதனை ஏற்க இயலாத, உழைக்கும் மக்கள், ஆதித்ய கரிகாலன்ஆதரவுப் படைகளுக்கும், உத்தம சோழனின் ஆட்சியை ஏற்றுகொண்ட பிராமணர்கள், அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்கள்,போராட்டங்களே.. இடங்கை-வலங்கைப் போராட்டத்தின் தொடக்கம் எனபது இதனால் எளிதாக விளங்குகிறது!
ஆதித்ய கரிகாலன் படுகொலைக்கு பின்பு,எதிர் வினையாக தொடங்கிய போராட்டம் கி.பி.10 -ஆம் நூற்றாண்டில் ராஜராஜன் ஆட்சிக்கு வந்தபோது, அவனது ஆட்சித் திறத்தால், அவனது மற்றும் ராஜேந்திர சோழன் காலத்தில் பிற நாடுகளுடன் நடந்த போர்களால், சிலகாலம் அமைதியடைந்து இருந்துள்ளது!
போர்கள் முடிவுக்கு வந்து, போர்களற்ற காலங்களில், பிராமணர்களின் ஆதிக்கத்தை ஏற்க முடியாத உழைக்கும் மக்களும்,பிராமணர்களது ஆதிக்கத்தால் உரிமை இழந்த மக்களும் மீண்டும் கிளர்ந்து எழுந்து போராடத் தொடங்கியுள்ளார்கள் என்பதும் பிராமணர்களின் அதிகாரத்தை தடுக்க முனைந்து, உள்ளார்கள் என்பதும் விளங்குகிறது!
“அந்தணரும் வேளாளரும் வாரவரி வசூளிப்பதிநின்றும் நிறுத்திக்கொள்ள வேண்டும் .பொய்கணக்கு எழுதியும் தரவுகள ஊழியர்களின் பயனைப் பெற்றும் அரசினர் மற்றும் ஜீவிதகாரர்கள் பயனைப் பெற்றும் அரசு அலுவலர்களுக்கு அச்சமுதாயத்தினரைப் பற்றிப் பொல்லாங்கு கூறி ,எவரும் நாட்டுக்குத் தீங்கு செய்யக்கூடாது ” என்று முடிவு எடுக்கப் பட்டது .
(கல்வெட்டில் வாழ்வியல் நூலில் அ. கிருட்டிணன் பக்கம்-163 )
“தன வகுப்பைச் சேராதவர்கள் கொடைகள் மற்றும் வாழ்வியல் அடிப்படை உரிமை நலன்களை எவரேனும் விலைக்கு விற்றாலோ,விலைக்கு பெற்றாலோ அரசு வரியான ராஜசாகரம் என்னும் வரியைத் தவிர பிறவரிகளை மக்களிடையே வசூலிப்போர் நாட்டுத் துரோகிகளாக கருதப்பெற்றனர்.” (கல்வெட்டில் வாழ்வியல் நூலில் அ. கிருட்டிணன் பக்கம்-162 )
கோயில்கள் அந்தணர்கள் என்னும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில், ஆதிக்கத்தில் வந்துவிட்டப் பிறகு, பிராமணர்கள் தங்களது ஆதிக்கம்,மற்றும் தங்கள் இன நலத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள எண்ணி, பிற சமுதாயத்து மக்களை, குறிப்பாக உழைக்கும் கீழ்தட்டு மக்களை அடக்கி ஆளாவும், அடிமைப் படுத்தவும் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள் !
அதாவது, பரம்பரையாக அரசர்களால் பிற இனமக்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வியல் உரிமைகளையும் அவர்களுக்கு கொடுத்த நிலம் ,பொன் ,பொருள் முதலியவைகளை விலைகொடுத்து வாங்கியும், அம்மக்களை விற்பனை செய்யும்படி நிர்பந்தித்தும் அம்மக்களின் வாழ்வுரிமையைப் பறித்து உள்ளார்கள் . மேலும் அரசு பணியாளர்கள், பிற சமய மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்களை கிடைக்க விடாதபடி செய்தும் முன்பே கொடுத்திருந்த அவர்களது உரிமைகளும்,அதன் வழியே கிடைத்து வந்த பயன்களையும் முறையாக கொடுக்காமல், கொடுத்து வருவதாக பொய்க் கணக்கு எழுதியும், முறைகேடுகள் செய்து வந்துள்ளார்கள்!
பிராமணர்கள் அவ்வாறு ஏமாற்றி வருவதை தெரிந்து கொண்டு, அது பற்றி நியாயம் கேட்ட மக்களைப் பற்றி,அரசனிடமும் பிற அலுவலர்களிடமும் பொல்லாங்கு சொல்லி,அவர்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்து பழிவாங்கி வந்துள்ளார்கள்.!
பிராமணர்கள் இவ்வாறு பொதுமக்களை ஏமாற்றுவது, முறைகேடுகள் செய்வது,பொல்லாங்கு கூறுவதைத் தடுக்க வேண்டி, பிராமணர்களால் பாதிக்கப்பட்ட மக்கள், ஊர் சபைகளில் ஒன்றுகூடி, மேற்கொண்ட முடிவுகளை கூறும் கல்வெட்டு வரிகளே மேற்சொன்னவைகள் ஆகும்!
பிராமணர்களின் கொடுமைகளை தடுக்க உழைக்கும் மக்கள் மேற்கொண்ட மேலே சொன்னது போன்ற செயல்களாலும் பிராமணர்களை கட்டுப் படுத்த முடியாத நிலை ஏற்பட்டபொழுது, பொதுமக்கள் வெகுண்டு, போராட்டம் நடத்தி உள்ளார்கள்! உழைக்கும் மக்களின் இந்த எதிர்ப்புணர்வால் பிராமணர்கள் தங்களது நிலையை கைவிடவில்லை. பொதுமக்களை ஒடுக்கும் செயல்கள், பிராமணர்களின் அடக்குமுறையும் பிற இனமக்களை பாதிக்கும் செயல்களும் நின்றுவிடாமல் தொடர்ந்து வந்துள்ளது என்பதையே, இடங்கை-வலங்கை போராட்டம் கி.பி.11 -ஆம் நூற்றாண்டு தொடங்கி, 19 -ஆம் நூற்றாண்டுவரைஇடங்கை-வலங்கை போராட்டாம் நீடித்து வந்துள்ள வரலாறு நமக்கு உணர்த்துகிறது!
இவ்வாறு நீடித்து வருவதற்கு காரணம், அரசனும்,ஆட்சியாளர்களும் உழைக்கும் மக்களின் உரிமைப்போராட்டத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமலும் அவர்களது கோரிக்கைகளை எற்றுகொல்லாமலும் இருந்து வந்ததும், அவ்வாறு இருக்கும்படி “ஆரியமாயை”மூலம் பிராமணர்கள், அரசர்களையும் ஆட்சியாளர்களையும் ஆக்கியிருந்த நிலையும் எனலாம்!
” கிராமங்களில் அன்றாடச் செயல்பாட்டில் தலையீடு செய்தும், அதன் செயல்முறைகளை தங்களுக்குச் சாதகமாக ஒழுங்கு படுத்தினர். கோயில்களிலும்,கோயில்களில் இருந்த கருவூலங்களையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த நிலையை பிராமணர்கள் அடைந்ததும், தங்களை நிலச்சுவான்தார்கள் போல எண்ணிக்கொண்டு,அரசின் பெயராலும் ஆலயத்தின் பெயராலும் கிராம மக்களிடம் இருந்து, நிலவரி,வீட்டுவரி ஆகியவற்றைப் பிரித்தனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட குடிமக்களை அரசின் பெயராலும்,சமயத்தின் பெயராலும் ஒடுக்க முற்பட்டனர். இவ்வாறு, ஒடுக்கப்பட்ட மக்களை இடங்கையினர் என முத்திரைக் குத்தினர். நிலமைக் கட்டுக்கடங்காமல் போகவே, புறக்கணிக்கப்பட்ட இடங்கைப் படையினர் சமயத்தின் பெயராலும்,அரசின் பெயராலும் ஏகபோக வாழ்க்கை வாழ்ந்த பிராமணர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.பிராமணர்களுக்குப் பாதுகாப்பு அளித்த ஆலயங்களை இடித்து தள்ளியதோடு,பண்டாரங்களையும் (கருவூலங்களையும்) சூறையாடினர். நில உடமையை எதிர்த்த இவர்கள் வரி கட்ட மறுத்தனர். பிராமணர்கள் தங்கிய இடங்களும் நிர்மூலமாக்கப் பட்டன.” என்று வலங்கை-இடங்கைப் போராட்டம் குறித்து டாக்டர்.அ.தேவநேசன் தனது ‘தமிழக வரலாறு’ நூலில்( பக்கம்-266 ,267 )கூறுகிறார்!
“முதலாம் குலோத்துங்கன்(கி.பி.1070 -1120 ) சோழ அரசனாக இருந்தபோது, கி.பி.1071 -யில் இடங்கை-வலங்கைப் போராட்டம் மிகக்கொடூரமாக நடந்தது.பிராமணர்கள் தங்கிய சதுர்வேதி மங்கலத்தை மக்கள் தீகிரையாக்கியதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. பிராமணர்கள் ஆலயங்களைத் தவறான முறையில் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியதால் சமூகத்தில் விரிசல்கள் ஏற்பட்டன” (ஆதாரம்:தமிழக வரலாறு,டாக்டர்.அ தேவநேசன்)
இடங்கை வலங்கைப் போராட்டம் குறித்த பொதுவான தகவல்கள்:
போராட்டம் குறித்த செய்திகள் பொதுவாக ஏதாவது ஒரு கோயிலை மையமாக கொண்டே குறிக்கப்பட்டு இருக்கும்.
அரசனுடைய அதிகாரிகள்,படைவீரர்கள் பற்றிய குறிப்புகளாக இருக்கும்.
பெரும்பாலும் உழைக்கும்,உரிமைகோரும் மக்களின் பிரிவான இடங்கைப் பிரிவினர் பாதிக்கப்பட்டதாக செய்திகள் இருக்கும்.
இவர்களைத் துன்புறுத்துபவர்களாக பிராமணர்கள்,வெள்ளாளர் போன்றவர்களைப் பற்றி மிகுதியாகவும்,மற்ற உயர்சாதி நில உடமையாளர்களைப் பற்றி ஓரளவும் குறிப்புகள் இருக்கும்.
சில கல்வெட்டுகளில் இடங்கை,வலங்கை இரு பிரிவினரும் இணைந்து, பிராமண,வெள்ளாள நில உடமையாளர்களை எதிர்த்ததாக இருக்கும்.
பிராமணர்களின் ஆதிக்க மனப்பான்மை, அவர்களது இன நலனும் ,சமய வெறியும்,காரணமாக நடந்த இடங்கை-வழங்கிப் போராட்டத்தில் தமிழக அரசர் பலரும் பிராமண ஆதரவாளர்களாகவே செயல்பட்டு, உரிமை கோரிப் போராடிய, இழந்த உரிமையை கேட்ட உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கு எதிராக நடந்துகொண்டும், பிராமணர்கள், நில உடமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டும்வந்துள்ளார்கள். !
உழைக்கும் மக்களை அடக்கி, ஒடுக்கி,அடிமைப்படுத்தும் பிராமணிய, பாசிசசெயல்களுக்கு ஆதரவாக இருந்துள்ளதை இடங்கை-வலங்கைப் போராட்டம் உணர்த்துகிறது!
ஐயா தமிழன் மற்றவர் எழுதியதை எடுத்து பதிப்பதில் தவறில்லை. ஆனால் அதன் படைப்பாளருக்கு நன்றி கூற வேண்டும் அதுதான் உண்மையான தமிழனுக்கு அடையாளம், இல்லை என்றால் தமிழன் மற்றவர் எழுத்தை திருடிதான் எழுதுவன் என்று பொருள் கொள்ளப் படலாம். உங்களின் (தமிழன் wrote on 9 September, 2014, 22:33) படைப்புக்கு ஆதாரம்.
http://generationneeds.blogspot.com/2012/04/blog-post_30.ஹ்த்ம்ல்
எல்லைகள்
வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்….! )Monday, 30 April 2012 )
மன்னன் wrote on 10 September, 2014, 0:25 சரியான அகபக்கம்
http://generationneeds.blogspot.com/2012/04/blog-post_30.html
பிராமணர்கள் இன்று மட்டும் அல்ல அன்றும் 1000 வருடங்களுக்கு முன்னரும் ஓங்கி இருந்தார்கள் காரணம் ..இவர்கள் கல்வி அறிவு …மேற்கத்திய நாடுகளில் 1000 வருடங்களுக்கு முன்னர் மத குருமார் தான் மன்னர்களுக்கு ஆலோசனை சென்னார்கள் …..இன்றும் கூட ITதொழில்களில் பிராமணர்களே முன்னணியில் ..இவர்கள் வேறு ஜாதி ஊழியர்களுடன் சேர்ந்து சாப்பிட மாட்டார்கள் (ஐரோப்பாவில் வேறு விஷயம் )…இதையெல்லாம் பேசுவதில் பிரயோசனம் இல்லை ..இன்றைய தலைமுறை தமிழர்கள் கல்வி பெறட்டும் ,சொந்த காலில் நின்று உழைக்கட்டும்..இன்று ஐரோப்பாவில் உள்ள இரண்டு மிக பெரிய SIM CARD நிறுவனங்கள் தமிழர்களுடையது .வெள்ளைகரர்களின் இதே வியாபாரம் இவர்களுடன் போட்டி போடமுடியாமல் உள்ளது .இவர்கள் பிராமணர்களும் அல்ல பெரிய படித்தவர்களும் அல்ல சந்தர்பம் ..உழைப்பு இதனால் முன்னேறியவர்கள்
மன்னன் அவர்களே… சில பதிப்புகளில் பெயர் குறிப்பு இல்லை. எனக்குத் தெரிந்து ஓசூர் ராஜன் என்று அறிவேன். அவர் பெயருக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளேன். சில வற்றில் இல்லாத்தால் உறுதியாக குறிப்பிட இயலவில்லை. ந ன்றி.
பிராமணர்கள் கோயில்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளையும் இந்த கொடுமையை எதிர்த்து பிராமணர்களோடும்,அவர்களுக்கு ஆதரவாக இருந்துவந்த படைகளுடனும் ஆட்சியாளர்களுடனும் தமிழர்கள் தொடர்ந்து போராடி வந்ததை வரலாற்றில் இடங்கை-வலங்கை போராட்டம் என்று குறித்து வந்ததையும் பார்த்தோம்.
துரதிஷ்டவசமாகஇந்தபோராட்டத்தில் பிராமணர்களின் செயல்களுக்கு ஆதரவாக அரசர்களும் ஆட்சியாளர்களும் செயல் பட்டதால், தமிழகத்தில் கோயில்கள் எதற்காக கட்டபபட்டனவோ அந்த நோக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டது! அதாவது, எல்லோருக்கும் பொதுவான, ஆட்சியின் செயல்களுக்கு என்ற பொதுப் பயன்பாட்டுக்கு உருவான கோயில்கள், ஆட்சியின் பயன்பாட்டில் இருந்து விளக்கப்பட்டது!
கோயில்கள் ,குறிப்பிட்ட சிலரின் பயன்பாட்டுக்கும் வழிபாட்டுக்கும் என்றும் மாறுதல் அடைந்தன. கோயில்களில் இருந்துவந்த நடைமுறை வழிபாடும், பழக்கங்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வழிபாட்டில் இருந்து வந்த தேவாரமும் திருவாசகமும் தமிழ் பாசுரங்கள் பாடப்பட்டதும் ஆன நிலை மாறியது. ஓதுவார்கள், கோயில் பணியாளர்கள் ஆகியோரின் முக்கியத்துவம் குறைந்தது! அவர்கள் கோயில் பணிகளில் இருந்து விலக்கி வைக்கும் நிலையை பிராமணர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்!
தமிழர்களின் இசையான பறை,துந்துபி,செண்டை,நகரா ,துந்துபி, முரசு முதலான இசைக் கருவிகளை வாசித்து, இறைவனைத் துதிக்கும் வழக்கம் அகற்றப்பட்டு, பிராமணர்களின் வேதமந்திரங்களும், புரியாத பாசையினாலான கோஷங்கள் மூலம் இறைவனைத் துதிக்கும் நிலையை பிராமணர்கள் தமிழர்களின் கோயில்களில் ஏற்படுத்தினர்!
பிராமணர்களின் மொழியான சமஸ்கிருதமும்,அவர்களின் சடங்குகளும் இறைவனின் வழிபாட்டு முறையாக ஆக்கப்பட்டது!
இத்தகைய செயல்களின் மூலம் பிராமணர்கள் உழைக்கும் தமிழக பூர்வீக குடிகளை தங்களுக்கு கீழாகவும், அவர்களுக்குள்ளும் பாகுபாடுகளைப் புகுத்தி, சாதிய படிநிலைகளை ஏற்படுத்தினர். தாங்கள் ஏற்படுத்திய சாதிய கட்டமைக்குள் அனைவரையும் கொண்டு வந்தனர். தங்களது இத்தகைய ஏற்பாடுகளை எதிர்த்த, புறக்கணித்த, பூர்வகுடிகளை,தமிழ் மக்களை அடக்குமுறைகள் மூலம் ஒடுக்கி வந்தனர். அவர்களில் சிலரை “பஞ்சமர்கள்” என்று முத்திரையிட்டு, இந்துமத கட்டமைப்புக்கு எதிரிகளாக்கி அப்புறப்படுத்தினர்!
தங்களது சாதிய கட்டமைப்பு முறையின் மூலம் தங்களது ஆதிக்கத்தை கேள்விக்கு உள்ளாக்காத பாதுகாப்பும் பெற்றனர்! மற்ற அனைவரை விட தாங்களே உயர்வானவர்கள், தங்களது வழிபாடு, பூசை முறைகள், சடங்குகளே, உன்னதமானவை என்ற நிலையைத் தோற்றுவித்தனர்!
பிராமணர்கள் இத்தகைய நிலையை ஏற்படுத்தவும், முனைந்து தங்களால் ஏற்படுத்தப்பட்ட நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், தாங்கள் ஏற்படுத்திய நிலையைத் தொடர்ந்து தங்களது இனநல மேன்மைக்கு கடை பிடித்துவரவும் வேண்டி, தங்களுக்கு ஆதரவாக சிற்பங்களைத் திருத்தவும், புதிய சிற்பங்களை,புதிய கடவுள்களை உருவாக்கவும் செய்தனர். கூடவே, தங்களது நோக்கத்துக்கு எதிரான, தங்களது நோக்கத்திற்கு தடையாக கோயில்களில் ( முன்பே ) இடம் பெற்று இருந்த , இறை உருவங்கள், சிற்ப்பங்கள், ஆகியவைகளை அப்புறப்படுத்தவும்,சிதைக்கவும்,திருத்தவும் செய்தனர்!
பிராமணர்களின் இத்தகைய பணிகளுக்கு அக்காலத்தில் நடந்த, படையெடுப்புகளும், போர்களும் உதவி உள்ளன!
பழைய கோவில்களில்,பிராமணர்கள் இத்தகைய பணிகளைச் செய்ததன் மூலம்,தங்களது இனநல மேன்மைக்காக, தங்களால் புதிதாக சிருஷ்டித்த கடவுள்களின் பெருமையை,புகழைப் பரப்பும் தேவை ஏற்பட்டது! அதன் விளைவே, பல்வேறு கதைகள், புராணங்கள், பக்தி நூல்கள் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் இருந்து 17-ஆம் நூற்றாண்டுவரை, தமிழில் உருவாகுவதற்கு காரணமாக இருந்துள்ளது! இதனை, அக்காலக் கட்டத்தின் தமிழக வரலாறும், அக்காலத்தில் ஏற்பட்ட மிகுதியான இந்துமத பக்தி நூல்களும், பிற நூல்களும் நமக்கு விளக்குகின்றன.
நன்றி: ஓசூர் ராஜன்
எந்த மதத்தையும் விட அதிகமான,அவசியமற்ற ஏராளமான சடங்குகள் இந்து மதத்தில் இடம்பெற்று உள்ளதை யாவரும் அறியலாம்!தடுக்கி விழுந்தால் கூட அது கெட்ட சகுனம் என்றும்,பூனை குறுக்கே போனால்,ஒற்றை பிராமணன் எதிரில் வந்தால்,கணவனை இழந்தவள் எதிரில் வந்தால் அவைகள் கெட்ட சகுனங்கள் என்றும் பள்ளி விழுந்தால்,ஆந்தை அலறினால்,காகம் கரைந்தால் கூட சகுனம் பார்க்கும் நிலையில் இந்து மதத்தில் உள்ளவர்கள் இருப்பதை இன்றும் பார்க்கலாம்!
இந்துமத்தில் ஏராளமான கடவுள்கள் உருவாக்கப்பட்டு இருப்பதைப் போலவே,அவற்றுகு உற்சவங்கள், திருக்கல்யாணங்கள், தேரோட்டங்கள், பண்டிகைகைகள் என்று ஏராளமான விழாக்களும் விழாக்களின் வழியே ஏராளமான சடங்குகளும் நடத்தப்பட்டுவருவதை அறிவோம்!
இத்தகைய சடங்குகளிலும், கொண்டாட்டங்களிலும் யாருக்கு பயனுண்டோ, இல்லையோ, யார் பங்கு பெறுகிறார்களோ இல்லையோ, பிராமணர்கள் பங்கேற்பும்,அவர்களுக்கு பயனும்,லாபமும்,நிச்சயம் இருப்பதை பார்க்கலாம்!
அரசன் முதல் ஆண்டி வரையில்,சாதாரண ஏழை முதல், செல்வந்தர்கள், சமூகத்தில் எத்தனை செல்வாக்கு பெற்றவர்கள் ஆக இருந்தாலும், அத்தனை பேர்களும், பிராமணர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளவும்,அவர்களது உயர்வு நிலையை… “கேள்வியே இன்றி” ஏற்றுக் கொள்ளவும்,பிராமணர்களால் ஏராளமான பண்டிகைகளும்,திருவிழா போன்ற கொண்டாட்டங்களும் உருவாக்கப்பட்டு உள்ளன. அப்படி உருவாக்கப்பட்டு உள்ள இந்துமத பண்டிகைகள்,கொண்டாட்டங்கள் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது!
இதுபோன்ற இந்துமதக் கொண்டாட்டங்களும்,பண்டிகைகளும், பிராமணர்களுக்கு தொடர்ந்த வருவாயை கொடுக்கும் காரணியாக, ஒருபுறம் இருந்து வருவதையும், மற்றொரு விதத்தில் அவைகள், உழைக்கும் மக்களிடம் இருந்துவரும் மிகச் சிறிய அளவிலான செல்வத்தையும்,அவர்களின் முக்கியத் தேவைக்கும் உள்ள சேமிப்பையும் கூட இழக்கச் செய்யும் பிராமணர்களின் திட்டமிட்ட தந்திரமாகவும் இந்துமத பண்டிகைகளின் பின்னணியில் இருந்துவருகிறது!
இந்துமதத்தின் பூஜை,வழிபாடுகளை நாம் கவனித்தோமானால், அவைகளில் இறைவனுக்கு படைப்பது,அபிஷேகம் செய்வது என்ற பெயரில் உணவுப் பொருட்களும்,பால்,நெய்,வெண்ணை, போன்ற சத்துமிக்க, மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் அடிப்படையாகவும் தேவைப்படும் பல பொருட்கள் வீணடிக்கப் படுவதையும் பார்க்கமுடியும்!
ஒரு தீபாவளி,ஒரு ஆயுதபூஜையையோ உதாரணத்துக்கு எடுத்துக் கொண்டால் விரையமாகும் பொருட்கள் என்ன,அவைகள் எப்படி விரயமாகிறது, விரையமாகும் பொருட்களின் மதிப்பு எவ்வளவு, அதனால் கிடைக்கும் பலன் என்ன? எனபது எல்லோருக்கும் புரியும்!
ஒருநாளைக்கு ஒருவேளைகூட உணவின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்து வாடும் ஒருநாட்டில், அடிப்படைத் தேவைகள் நிறை வேற்றப்படாத இந்தியாபோன்ற நாட்டில் இத்தகைய சடங்குகளும், திருவிழாக்களும் தேவைதானா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இதுபோன்ற சடங்குகளைப் பற்றியோ, அவைகளினால் வீணாகும் கோடிக்கணக்கான் பொருட்கள், மற்றும் அதன் மதிப்பு பற்றியோ, அவைகளை உணவின்றி வாடும் ஏழை, உழைக்கும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றோ, இந்துமதத்தில் பற்றுள்ள, இந்துமத பெரியவர்களும், ஞானிகளும், மடாதிபதிகளும் கூட… வாயே திறப்பதில்லை! மக்களின் நம்பிக்கை, ஐதீகம்,மரபு,வழிவழி சடங்கு என்று அவர்கள் கூறுவதையும்,கண்டும் காணாமல் இருப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்கள்!
மக்களின் சேமத்திற்காக,நன்மைக்காக, வளத்துக்காக யாகங்களும், வேள்விகளும்,நடத்தும் போதும் அதுபோன்ற செயல்களின் போதும்கூட, ஏராளமான் பொருட்களை விரையம் செய்யும் சடங்குகள் நடத்தப்படுகிறது! அப்படி நடத்துபவர்கள் கூட, முன்மாதிரியாக இருந்து, ஏழைகள் மிகுந்த நாட்டில், உணவின்றி மக்கள் தவிக்கும் சூழலில் “பாலைக் கொட்டியும், உணவுப் பொருட்கள்,பழம் ,ஆடைகள், நெய், தேங்காய், போன்றவற்றை வீணாக்கி வருவதை பார்க்கலாம்!
இவைகளுக்கு காரணம் என்ன? பற்றாக்குறை உள்ள நாட்டில், மேலும் செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்துவது, உழைக்கும் மக்களிடம் பொருள் சேராமல் அவனை திருவிழா,சடங்கு என்ற மகிழ்ச்சியான போதையில் ஆழ்த்தி, தொடர்ந்து அவனை அடித்தட்டு மக்களாகவே நீடித்து வரச் செய்வது, அவர்கள் மூலம் பிராமணர்கள் தங்களது மேலாண்மையை, உயர்வு நிலையை தொடர்ந்து வலியுறுத்தி,நிலைநிறுத்திக் கொள்ளவதுடன், இதுபோன்ற சடங்குகள்,விழாக்கள் மூலம், தங்களின் வருவாயை அதிகரித்தும்,தொடர்ந்து பெற்றுவரவும் செய்வது போன்ற பிராமணர்களின் பொருளாதார நோக்கமே இத்தகைய இந்துமத சடங்குகள்,விழாக்களுக்கு காரணம் ஆகும்!
இவைகளை நான் ஏதோ, பிராமணர்கள் மீது வெறுப்பு கொண்டு எழுதுவதாக கூறி, இந்து மத சடங்குகளால் உழைக்கும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உணராமல், உணர்ந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் நியாயமான மனம் இல்லாமல், வழக்கம் போல என்னை தவறாக சித்தரிக்கவும், முனைந்து விபரீத அர்த்தங்களைக் கற்பிதம் செய்துகொள்பவர்களுக்காக … பிராமணர்களின் இன மேன்மைக்கு, இலக்கணம் வகுத்துக் கொடுத்த சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் உள்ள ஆதாரங்களையே பதிலாகவும் தரவேண்டியுள்ளது!
” எதிரிகளை ஏமாற்ற அரசன் தானே ஒரு யாகத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.பரிகாரங்கள் செய்யப்போவதாக அறிவிக்கலாம்.இவற்றிலே எதிரி கவனம் செலுத்தும்போது திடீரென்று அவன் நாட்டின் மீது படையெடுத்து விடலாம்” (அர்த்த சாஸ்திரம்-13:2)
“அரசாங்கத்தின் கருவூலத்தைப் பெருக்கிக் கொள்ள ஒரு கெட்ட சகுனத்தை சுட்டிக் காட்டலாம்.பிறகு பெருன்கேடுதலை தவிர்க்க கடவுளை வழிபட என்று சொல்லிப் பணம் வசூலிக்கலாம்” (அர்த்த சாஸ்திரம்-5:2)
மதச் சம்பிராயங்களில் மூட நம்பிக்கைகள் உள்ளன.அரசன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”(அர்த்த சாஸ்திரம்-9:4)
அர்த்த சாஸ்திரம் எழுதப்பட்டபோது, அரசர்களை முன்னிறுத்தி பிராமணர்கள் செய்துவந்த இனநலம்,ஆதிக்கம், சுரண்டல் முறையிலான சுகவாழ்வு இன்றைய காலத்திலும் திருவிழா,சடங்குகள்,பரிகாரங்கள் என்ற பெயரில் தொடர்ந்து வருகிறது! அன்று மன்னர்கள் மூலம் மறைமுகமாக,இன்று மக்களின் மூலம் நேரடியாக!
ஒருமனிதனின் பிறப்பில் இருந்து, அவன் இறப்பு வரையிலும் ஏன் இறந்த பிறகும்கூட கருமாதி, பெரிய காரியம்,புண்ணியார்ச்சனை,தீட்டு கழித்தல் என்று சுரண்டும் பிராமணர்களின் சுரண்டலையும், சடங்குகளையும் அடுத்தும் பார்க்கலாம்!
நன்றி: ஓசூர் ராஜன்
இந்துவாக பிறந்த,பிராமணர் அல்லாதவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,பிராமணர்களின் தொடர்ந்த வருமானத்துக்கும்சுரண்டலுக்கும், உதவிடும் வகையில் இந்துமதத்தில் உள்ளவர்களின் வாழ்க்கையானது பிராமணர்களால் நுணுக்கமாக கட்டமைக்கப்பட்டு உள்ளது!
இந்த கட்டமைப்பின் படியேதான் இந்துமதத்தில் பிறந்த பிராமணர் அல்லாத இந்துக்கள், இன்றளவும் வாழ்ந்து வர வேண்டிய நிலை இருந்து .வருகிறது!
இந்துவாக பிறக்கும் ஒருவனின் இன்பதுன்பங்கள் எதுவானாலும் பிராமணர்களுக்கு அவன் ஒரு விலையை, தட்சணையாக, கொடுத்தே தீர வேண்டும்!
ஒரு குழந்தை இந்துவாக பிறக்கிறது என்றால், அந்த குழந்தை பிறந்த நேரத்தைக் குறித்து, அந்த குழந்தை பிறந்தது நல்லதா,கேட்டதா என்று அறிய ஜாதகம் எழுதுவதில் தொடக்கி, சோதிடம் பார்ப்பது, குழந்தையை தொட்டிலில் போடுவது, பெயர் வைப்பது, அதனை பள்ளியில் சேர்ப்பது, இடையிடையே தோஷம் கழிப்பது, பரிகாரம் செய்வது போன்ற எல்லா சடங்குகளிலும் பிராமணர்களே முன்னிறுத்தப்பட்டு வருவதையும் இந்த முன்னிறுத்தும் நிகழ்வுகள் ஒவ்வொன்றுக்கும் கணிசமான வருவாயை பிராமணர்கள் பெறுவதையும் பார்க்கலாம்!
பிறந்தது பெண்குழந்தையாக இருந்து விட்டால், அது பருவத்துக்கு வந்தது குறித்து ருது ஜாதகம் என்று வேறு எழுத்வார்கள்! அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்றால்… பெண் வீட்டார் ஒரு ஜோதிடரிடம் சென்று நல்லநேரம், நாள் பார்த்து, மாப்பிள்ளை பார்க்க போவது, பிடித்து இருந்தால் மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் தனித்தனியே தங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் சென்று பொருத்தம் சரியாக உள்ளதா? என்று பார்ப்பது, அப்புறம் பொதுவான ஜோதிடரிடம் காட்டி சரி பார்ப்பது, முகூர்த்த தேதி குறிப்பது, நல்லநாள் பார்த்து, பத்திரிகை அடிப்பது, திருமணம் செய்வது, அவ்வளவு ஏன் ? சாந்தி முகூர்த்ததுக்கு கூட பிராமணப் ப்ரோகிதர்களின் அனுமதியும் வழிகாட்டலும் தேவை என்னும் படியாக எத்தனையோ சடங்குகள், சம்பிரதாயங்கள் இந்துமதத்தில் உள்ளதையும், அவைகளில் பிராமணர்கள் வருமானம் அடைந்து வருவதையும் பார்க்கலாம்!
குழந்தை பிறந்தால் அதற்கும் ஒரு சடங்கு, இறந்துவிட்டால் அதற்கு ஒரு சடங்கு, இறந்தவருக்கு ஈமச் சடங்கு, அப்புறம், வருஷாவருஷம் திதி செய்வது…,
இறந்தவர்கள் வீடு தீட்டு பட்டுவிட்டது ஆகவே, அந்த வீட்டை பிராமணர்கள் மந்திரம் ஓதி, தீட்டை நீக்கி, பிராமணர்கள் புனிதப் படுத்துவார்கள்! சும்மாவா புனிதப் பணி நடக்கும் ? அத்தனைக்கும் பிராமணர்களுக்கு வெகுமதிகள், தட்சணைகள், கிடைக்கும்!
“பொண்ணு செத்தால் என்ன? மாப்பிள்ளை செத்தால் என்ன? மாலைகாரனுக்கு பணம் கொடுத்தே ஆகவேண்டும்! ” என்று கிராமங்களில் சிலர் சொல்வது,, யாருக்கு பொருந்துமோ,இல்லையோ, பிராமணர்களுக்கு பொருந்துவதை நீங்களே உணரலாம்!
“வேகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம்” எனபது போல, ஒவ்வொரு இந்துவின் துன்பத்திலும் கூட… ஆதாயம் பெரும் வக்கிர,கொடூர மனமும்,செயலும் பிராமணர்களின் இனநல மேன்மைக்கான செயல்களாகவும் அவர்களது, சடங்குகளாகவும் இருப்பதை காணலாம்!
மற்றொரு புறம், உழைக்கும் மக்களின் உடமைகளும்,செல்வமும் பிராமணர்களின் இத்தகைய சடங்குகள் மூலம் பறிக்கப்படுகிறது என்பதையும் அறியலாம்!
இப்படி…, தனிமனித வாழ்வில் மட்டுமின்றி, எல்லோரையும் கூட்டி கொண்டாட்டம், திருவிழா என்ற பெயரில் பிராமணர்கள் அடையும் (அடிக்கும்) கூட்டு கொள்ளையும் அவர்களுக்கு கிடைக்கும் பலா பலன்களும் தனிரகமாகும்!
“பிராமணர்கள் மனித நேயமின்றி, கொஞ்சமும் வெட்கமின்றி, தங்களைவிட கீழாக… தாங்கள் நினைக்கும் சாதிகளிடம், தொடர்ந்து ஏய்த்தும், உழைப்பை உறுஞ்சியும் வருவது.. குறித்து , அது தவறு எனபது குறித்து,” யாரும் எடுத்துரைப்பது இல்லை!
அப்படியே யாரேனும் எடுத்துரைத்தால், அதனை பிராமணர்களும் அவர்களது இன நலத்தை மட்டுமே விரும்பும் ஆதவாளர்களும், மட சாமியார்களும், ஞான குருக்களும், லோக குருக்களும் ஆகிய பலரும் ஏற்றுக்கொள்வதும் இல்லை! அனால்,அப்படி எடுத்துரைக்கும் மக்களை பற்றி என்ன கூறுவார்கள்? எப்படி எதிர் வினையாற்றுகிறார்கள் தெரியுமா?
பிராமணர்களின் இந்த கட்டமைப்பை,சுரண்டலை, எதிர்க்கும் மக்களை,அவர்கள் இந்து மதத்தில் அவர்கள்இருந்தாலும், பிறப்பால் இந்து ஆகவே இருந்தாலும் கூட, இந்துமத எதிரிகளாகவும், நாத்திகர்களாகவும், தெய்வ நிந்தனை செய்பவர்களாகவும் முத்திரை குத்தி, அவர்களைத் தூற்றுவார்கள் !
இந்துமத வெறியால் அறியாமையில் மூழ்கியுள்ள பிற சாதியினரிடம் அவர்களைப் பற்றி பொல்லாங்கு கூறி, அவர்கள் மூலமும் அடக்கி,ஒடுக்க முற்படுவார்கள்!
ஏனெனில், “இந்துமதம் என்ற பிராமணர்களின் நலனுக்காக மட்டுமே உள்ள பாசிசமானது, தனது கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கும் எந்த நிகழ்வையும்,எந்த மனிதனையும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை” என்பதுதான்!
அவ்வாறு இந்துமதம் ஏற்றுகொண்டால், “பிராமணர்களின் தொடர்ந்த வருமானம்,அவர்களது முக்கியத்துவமும், அதிகாரமும் பறிபோய்விடும் என்ற பிராமணர்களின் அச்ச உணர்வும்” காரணமாகும்!
பிராமணர்களின் சுரண்டலுக்கு ஊடக அறிவு ஜீவிகள், நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்ட, ஜனநாயகத்தைக் காப்பாற்ற,சமூக கொடுமைகளை களைய, பாடுபடுவதாக கூறும் பத்திரிக்கைகள்,இதர ஊடகங்கள் எப்படியெல்லாம் இன உணர்வுக்கு ஆளாகி, உதவி வருகின்றன,மக்களைச் சுரண்டவும்,மக்களின் மூளையை மழுங்க அடிக்கவும் வேப்பிலை அடிக்கின்றன என்பதை அடுத்து பார்ப்போம்!
நன்றி :ஓசூர் ராஜன்
ஒரு ஜனநாயக நாட்டின் காவலாக,அரணாக இருப்பவை எவை என்பதற்கு, 1)ஆட்சியதிகாரம்,(ஆட்சியாளர்கள்) 2)அரசு நிர்வாகம்,(அரசு அலுவலர்கள்) 3)நீதிபரிபாலனம்,(நீதிபதிகள்) 4)பத்திரிக்கைகள் என்பார்கள்!
ஜனநாயகத்தை காக்கும் தூண்கள் ஆக கருதப்படும் இவைகளில் ஏதாவது ஒன்றில் தவறு நடந்தால்கூட அது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல,கேடானதாகும். அப்படி ஏதாவது தீங்கு நேரிடுமானால்,ஜனநாயக மாண்புகளைக் காக்கும், மற்ற உறுப்புகளைக் கொண்டு அவற்றை சீர்படுத்தி,ஜனநாயகத்தைக் காக்க வேண்டும் (காக்கலாம்) எனபது எதிர்பார்ப்பும் எதார்த்த உண்மையாகவும் இருந்து வருகிறது!
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில்(?) ஜனநாயகத்தைக் காக்கும் நான்கு தூண்களும், ஜனநாயகத்தைக் காக்கும் உயரிய,தார்மீக நெறியில் இருந்து எப்போதோ விலகிப் போய்விட்டன. ஜனநாயத்தை போர்வையாகக் கொண்டு, இந்தியாவில் இப்போது நடந்துவருவதும் இருப்பதும் “எதேச்சதிகாரம் என்ற பாசிசமே” ஆகும் !
இந்திய ஜனநாயகம் எனபது ,’ இந்து’ என்கிற முகமூடியணிந்த ” பிராமணப் பாசிசமே” எனபது எனது உறுதியான கருத்தாகும்!
நான் இப்படிகூறுவது, இன்னும் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் உள்ளதாக எண்ணி மாயையில் வாழ்ந்துவரும் அறிவு ஜீவிகளுக்கும், அரசியலாருக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தலாம் எனினும்,அது கசப்பான உண்மைதான்!
இந்தியாவில் ஜனநாயகத்தை காக்கும் நான்கு தூண்களும் சிதைவுக்கு ஆளாக்கப்பட்டு எப்படி இன்று காட்சியளிகின்றன என்பதை தொடர்ந்து பார்கலாம்:
ஆட்சி அதிகாரம் என்னும் ஆட்சியாளர்கள்:
ஆட்சி அதிகாரம் எனபது, மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகளால் மக்களின் நல்வாழ்வுக்கும்,முன்னேற்றத்திற்கும் மேற்கொள்ளப்படும், செயல்படுத்தப் படும் நலப் பணிகளாகும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மந்திரிகள், பிரதமர், போன்ற மத்திய அரசின் அதிகார வர்கத்தில் இருந்து,மாநில அரசுகளின் முதல்வர்கள்,மந்திரிகள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,தொடக்கி உள்ளூர் பஞ்சாயத்துதலைவர்,உறுப்பினர் வரையில் உள்ளவர்களும், ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிப்பவர்களுமான மக்கள் பிரதிநிதிகளின் யோக்கியதை என்ன? அவர்கள் மக்களுக்காக செய்யும் நலப்பணிகள் என்ன? ஜனநாயகத்தை காப்பாற்ற அவர்கள் மேற்கொள்ளும் பணிகள் என்ன? என்பதை குறித்து ஆராய்ந்தோமானால் நமக்கு ஏமாற்றமே கிடைக்கும்!
எவையெல்லாம் மக்கள் நலனுக்கும் ஜனநாய மேன்மைக்கும் எதிரான செயல்களோ,அவைகளையே மக்களின் பிரதிநிதிகள் பலரும் கூட்டாகவும்,தனியாவகவும் செய்துவருவதை காணலாம்!
ஆட்சி அதிகாரத்தை பயன் படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் கிரிமினல் குற்றசெயல்கள் செய்பவர்களாக ஊழல்,முறைகேடுகள், கருப்புப்பணம், போன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்களாக, இருப்பதை காணலாம்! இவைகள் குறித்து பல்வேறு உதாரணங்களை ஆதாரமாக முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லாதபடி எல்லோரும் அறியும் வகையில் இருப்பதை அறிவோம்! கொஞ்சமும் வெட்கமின்றி, வெளிச்சம் போட்டு,மிகக் கேவலமாக,ஆட்சியில் உள்ளவர்கள் நாட்டின் செல்வதை களவாடுகிறார்கள்! ஜனநாயகத்தை கெடுத்து வருகிறார்கள்!
இப்படி செய்பவர்களை,சமூக குற்றங்களை செய்பவர்களை எப்படி ஜனநாயகத்தை காப்பதாக சொல்லமுடியும்? சரி. இவர்களை தண்டிக்கும் அதிகாரம் உள்ள நீதித் துறை எப்படி உள்ளது? நியாகமாக நடந்துகொண்டு, தண்டிகிறதா? ஆட்சியாளர்களை நல்வழிப்படுத்தி,ஆலோசனை கூறி,நல்ல ஆட்சியை நடத்த வேண்டிய பொறுப்புள்ள அரசு நிர்வாகம் இன்று எப்படி உள்ளது? தனது கடமையை உணர்ந்து காரியம் ஆற்றுகிறதா? எல்லாவற்றுக்கும் பதிலாக இல்லையென்றுதான் சொல்லமுடியும்!
இவைகள் எல்லாமே, ஊழலுக்கும் முறைகேட்டுக்கும் துணைபோகும் நிலையில் உள்ளது! இவைகள் முறையே கூட்டாகவும், தனித்தனியாகவும் குற்றங்களில் ஈடுபட்டும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை பாதுகாக்கும் நிலையை அடைந்து உள்ளது! அதாவது பாசிசமாகப் பட்டுவிட்டது!
இவைகளுக்கு காரணம் என்ன? ஜனநாயகத்தின் பேரில், உழைக்கும் மக்களின் உடமைகளை, உரிமைகளைப் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் இத்தகைய செயல்களை எப்படி ஜனநாயகம் என்று ஏற்க முடியும்?
பாசிசம் என்றுதானே கூறமுடிகிறது! உடனே சரி,நீங்கள் கூறுவதுபோல இந்தியாவில் ஜனநாயகம் இல்லை, பாசிசம் தான் ஆட்சி செய்கிறது என்றே ஒப்புகொண்டாலும் அதனை எப்படி இந்துமத பாசிசம், பிராமணீயம் என்று சொல்லலாம் எனக் குதர்க்கமாக கேட்கும் அறிவு ஜீவிகளுக்கு…
தீண்டாமைக் குற்றம் எனபது ஆட்சியின் சட்டம் ஆனால் இந்தியாவில் நிகழும் தீண்டாமைக் கொடுமைகள் எத்தனை? அத்தகைய குற்ற செயல்களை யார் செய்கிறார்கள்? செய்பவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கிறது? குற்ற வாளிகளை யார் பாதுகாக்கிறார்கள்? அவைகள் ஏன் தடுக்கபடுவதில்லை? என்பதுபோன்ற விஷயங்களை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகிறேன். கவனத்தில் கொண்டால், அதன் பின்னணியில் இந்துமதமும், அதன் பின்னணியில் மனுதர்ம மகானுபாவர்களும்,சாதிய கட்டமைப்பும்,அதனைக் கட்டியமைத்து காப்பாற்றிவரும் பிராமணீயமும் இருப்பது புலப்படும்!
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு எனபது, அரசியல் சட்ட நிலைப்பாடு! அரசு அலுவலகங்கள் தொடக்கி, சட்டத்தை காக்கும் காவல் நிலையம், நீதிமன்றங்கள் அனைத்தயும் கட்டும்போதே… இந்து முறைப்படி பூமிபூசை போட்டு, பிராமணர்களைக் கொண்டு வேதம் ஓதச் செய்து, கட்ட ஆரம்பிப்பது முதல், ஆயுத பூசை,சரசுவதி பூசை என்று இந்துமதப் பண்டிகைகளை மட்டுமே கொண்டாடுவது போன்ற மத சார்பற்ற, சமத்துவமான(?) கடமைகளை, எல்லோருக்கும் பொதுவான, சமயசார்பற்ற அரசு அலுவலகங்களிலே செய்வது, அப்புறம் கோயில்களை அரசு வளாகங்களிலேயே கட்டி இருப்பது வரையில்… ஏன்? அதன் பின்னணியில் இருப்பது எது? என்று சிந்தித்துவிட்டு, விவாதிக்க வருமாறு வேண்டுகிறேன்!
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வரும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல்,அதிகார துஷ்பிரயோகம் குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளில்தான் எத்தனை பாரபட்சங்கள்?
ஊடகங்கள் பாசிச ஆட்சியாளர்களுக்கு பரிந்து செய்தி வெளியிடுவதையும் , அரசின் உயர் கல்வி அமைப்பான ஐ.ஐ.டி யில் நடந்துவரும் சமூகக் கொடுமை,உடகங்களின் இந்துத்துவ பாசம், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொண்டுள்ள வெறுப்புணர்வு, போன்ற செய்திகளை அடுத்தடுத்து பார்க்கலாம்!
பார்பனிய ஆதிக்க சக்திகளின் பிடியில் கிடந்த தமிழர்களின் சமூக விடுதலைக்குப் பெரியாரின் பங்களிப்பு எந்த அளவிற்குத் தேவை என்பதற்கு மேற்கண்ட ஓசூர் ராஜனின் அரிய ஆராய்ச்சி கட்டுரைகளே சான்று. அவருக்கு நன்றி . முற்றும்.