மலேசியத் தமிழர்களின் இனம் ஒரு தொங்கு அவதாரமா ?

மலேசியத் தமிழர்களின் இனம்  ஒரு தொங்கு அவதாரமா ?

சீனர்களுக்கு பல பேசும் மொழிகள் இருந்தாலும் அவர்கள் எழுதப படிக்க மேண்டரின் மட்டுமே உலகம் முழுதும் வியாபிக்கின்றன.இது சீனர் ஆட்சி காலத்தில் சின் மன்னர் அதாவது இனம் மொழி பாதுக்காப்பு கருதி சீனாவின் சுவரை எழுப்பியவர் செய்த முடிவு என்று படித்த ஞாபகம்.

ஆனால் இந்தியன் என்ற  உலகியல் மொத்த நாகரீகத்தில் இந்தியனுக்கு என்று ஒரு மொழி இல்லை. உலகிலே ஒரு மொழிக்கும் உரிமை இலாத /கொள்ளாத இந்தியனுக்கு ஒரு அனைத்துலக அடையாளம் “இந்தியன்” தமிழ் மன்னர்கள் பல கோட்டைகளை கோபுரங்களை கட்டி ஆண்டதாக நமது இதிகாசாங்கள் சொல்கின்றன. ஆனால் இன உணர்வும் மொழி உணர்வும் இந்த நூற்றாண்டில் பாமரர்களால் தான் தலை தூக்கி நிற்கிறது. படித்த அறிவாளிகள் எல்லாம் சம்பளத்துக்கும் கப்பம் காண்பதில் கண்ணாய் இருந்து இந்த இனத்தை ஒதுக்கிய காலம் இன்றும் தொடர்கிறது.இது வேறு நடப்பு நடிப்பு அரசியல்.

உலகம் முழுதும் பரவிக்கிடக்கும் இந்தியனுக்கு அவனுள் இன்னொரு மொழி- தாய் மொழி இனம் உண்டு ,என்றாலும் அவன் அடையாளப்படுத்தி உதிர்ப்பது மொழியற்ற இந்தியன் என்ற அவலமே !

இந்தியன், அது ஒரு நாடு, ஆக இந்தியன் என்பது சரியே என்று நமது விரும்பிகள் மனம் அலசுவதை யானும் அறிவேன். இப்படிதான் கடந்த 30 ஆடுகளாக நானும் மூழ்கி இருந்தேன். முழுமையான மலேசியத் தமிழர்களும் இதில் இன்னமும் குழப்பத்தில் உள்ளோம்.

ஏன் ? அதிகம் படித்த தலைவர்களும் கல்வி சால் முனைவர்களும் பத்திரிக்கை ஆசான்களும் கூட நாமெல்லாம் இந்தியர்கள். தமிழ் உணர்வுமிக்க தமிழன் கூட அரசு அரசியல் பதவிகளுக்கு அடிமையாகி தன்னை இந்தியன் என்றே சொல்கிறான். தமிழன் என்ற அந்த தாய் மொழி உணவுகள் தோற்றுப்போய் உலா வருகிறான்.

இன்னதுதான் தமிழன் என்ற வரையறை தமிழிலும் தமிழனுக்கும் இல்லை போலும் அதுபோலவே அர்த்தமற்ற இந்தியன் என்ற மொழியற்ற இனமும் அடிபட்டு போவதால் தமிழனும் இந்தியனும் மேலும்  இந்தியன் சார்பு பல மொழிகள் பல தடைகளை பாதிப்புகளை சந்தித்து வருகிறது அல்லது வருகிறான்.

நமது மலேசிய அரசியல் தலைவர்களில் பலர் ஒரு நாள் நாமெல்லாம் இந்தியன் என்கிறான். மதிய நிகழ்வில் நாமெல்லாம் தமிழன் என்கிறான். இரவில் மலேசியா இந்தியர்கள் என்கிறான் வீட்டுக்கு போனதும் அதி  திராவிடனாகி தன் தாய் மொழியில் பேசுகிறான்.

கேட்டால் என் தாய் மொழியை விட்டு கொடுக்க லேதுலா என்றும் உணர்ச்சி பொங்க மனைவி மெச்சிக்க அப்படிதானே டார்லிங் என்கிறான்.

உலக வரப்பில் ஐரோப்பியர்களின் படித்த எழுத வந்த ஆங்கிலம் விலை போவதுபோல மற்றது போகாது என்பது நிதர்சனம்.மேலை நாட்டு மொழி அறிஞர்கள் மொழிகளை பற்றிய   என்ன என்னமோ எண்ணம் போன போக்கில் சொல்லி உள்ளார்கள்.ஆனால் தமிழன் மீதும் தமிழ் மொழி மீதும் அறிஞர்கள் தாக்கம் அவ்வளவு பெரிதாய் இல்லை என்று பெங்களூர் இன உறவாளர் அறிஞர் குணா சொல்லி உள்ளார்.

பொது உடமை கருத்தியலின் அடிப்படையில் மொழியை பற்றி வந்தேறிகள் கருத்துகளே நம்மை ஆட்கொண்டுள்ளன. அவ்வாறு வந்த மொழி  கோட்பாடுகளை குறிப்பிடலாம்.

எண்ணத்தின் உடனடி மெய்மையே மொழி. இந்தியன் என்ற மொழி இல்லாதவன் எந்த எண்ணத்தில் ஒரு பொருளை ,கண்டு, உணர்ந்து அப்பொருளின் உருவத்தை சொற்களாக உதிர அவன் வந்த தாய் மொழி உதவும். இதனால் எண்ணம் என்பது மொழி சார்ந்தது. அதாவது எண்ணம் மொழி வடிவானது ; இன்னும் ஒரு படி போனால் எண்ணம் என்பது மாந்த மூளையின் இயற்பாடு. இன்னும் போனால் மூளையின் உயிரியலையும் மாந்தரின் உளதியலும் தழுவியதாகவே மொழி உள்ளது. “எண்ணத்தின் உடனடி மெய்மையே மொழி” எனும் கூற்றின் பொருள் இதுவேயாகும்.

இந்த மொழி ஆய்வை குறிப்பாக தமிழ் ,தமிழர் இனம் மீதான மொழி ஆய்வை சுருக்கமாக சொன்னால் மரபணு மிக்க மொழி உணர்வை எளிதில் மறந்து தமிழன் தன்னை இந்தியன் என்கிறானே என்ற விபரீதம்தான் இந்த கட்டுரையின் நோக்கம்.மற்ற இனத்தவனை ,வந்தேறிகள் செய்த மொழி கோளாறுகளை நாம் நோண்டாமல்.பன்னூறு ஆண்டுகள் தமிழ் மொழியின் சிறப்பு இருந்தும் தமிழை உலக மொழியில் 6வது இடத்துக்கு தள்ளி வாய்த்த அரசு அரசியல் சூழ்சிகளை சான்றோர் அறிவர். இது பதை என் பார்வை போனால் நான் என் இன தமிழர்களுக்கு சொல்ல வந்த விஷயம் தடம் புரளும் என்பதால் மொழி இலக்கிய இயற்கையும் செயற்கையையும் இதனுடன் நிறுத்தி அல்லது மற்றவர்கள் தொடர இடம் விட்டு என் வயிற்று வாயு எரிச்சலை முன் வைக்க இடம் கேற்கிறேன்!

மலேசியாவில் மகாதீர் காலம் வரை தெரியாமல் “இந்தியனாக” இருந்த தமிழர்கள் ,மலையாளிகள், தெலுங்கர்கள். மேலும் பல திராவிட குழுமங்களை இன்றைய பிரதமர் தம் அரசியல் வசதிக்காக இந்தியர்களை “பிரித்தாளும்” சூத்திரத்தை எங்கோ கற்று  ம இ கா கட்டியாக, கெட்டியாக, கோட்டையாக வைத்திருந்த குறிப்பாக தென்னக தோப்பை கூறு போட்டு தேர்தல் வசதிக்கு இந்தியர்கள் வாசலை அதிகப்படுத்தி வீதி வேட்டையில் நம்மை நாமே கொட்டும் தேனீக்களாக பறக்க விட்டு உள்ளார்.

இது ம இ காவின் ஒட்டு மொத்த பலவீனம் என்பதால் அவர் அவர் தேவைக்கு பிரிவினையில் ஒற்றுமை என்ற நல்ல எண்ணமாகவும் இருக்கலாம். ஆனால் அரசு அரசியல் பார்வையில் அவரின் சுமை தீர்க்க நம்மை பலி வாங்கும் படலம் இன்றைய நாகரீக வளப்பத்துக்கும் நீண்ட தூர பயணத்தில் சிறு பான்மை இனமாக கணக்கிட்டு கழிக்கும் திட்டமா என்பதை நாம் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும். அல்லது பிரித்தது நன்மைகே என்று 85% விழுக்காடு தமிழர்கள் அதிலும் இல்லை இதிலும் இல்லை என்ற தொங்கும் நிலையில் வௌவால் கூட்டமாய் தலைகீழ தொங்கியே இந்த நாட்டில் வாழப் போராமா? என்ற கேள்வியை முன் வைக்கிறேன் !

இந்தியன் பட்டியலிருந்து தமிழன் பிரிவதும் ,பிரித்தாள்வதும் காலத்தின் தேவையா?

இதையும் தாண்டி மலேசியத் தமிழர்களின் அரசியல் பங்கு சந்தையில் விலைபோகாத பங்குகளையும் அதன் பலவீன சரக்குகளையும் வெறும் முதலீட்டுக்கு மட்டும் மூலதன பொம்மைகளாக இந்தியன் தலை மறைவு தமிழ் தலைவர்களும் இதற மலாய் சீன அரசியல் சாணக்கியர்களும் கடிச்சி உருஞ்சும் கருப்பு சக்கைகளாக பாவித்து கசக்கி துப்புவதை நாம் காணாமல் இல்லை.

நல்ல பல தமிழ் தலைவர்கள் அந்த துப்பளில் அடிப்படாமல் இருப்பதையும் நாம் கவனிக்கிறோம்.  இவர்கள் அரசியல் ஒரு ராஜாங்கம் என்பதை உணர மறந்து ஐந்தடி தள்ளி நின்று மேடை விவேகம் மற்றும் பேசி காலங்கடந்த புத்தி மதிகளை முன் வைத்து இளஞர்களை அரசியல் வெறுப்புக்கு ஆளாக்கி தப்பு தப்பா இனத்தை அமுக்கி கருவருக்கின்றனர்.

மலேசியத் தமிழர்களின் அரசியல் தொங்கு  நிலைக்கு யார்தான் காரணம். ஒரு சிறிய இனம் 13 கட்சிகளில் என்ன கிழிக்க என்ன போராட்டம் நடத்துகின்றனர். தமிழர்களின் அதிகபட்ச வாக்குகளை பிச்சை பாத்திரங்களாக பிரித்து ஓட்டை குடிசையில் இன்னும் ஆஸ்ட்ரோ படம் காட்டுவதில் என்னதான் ஊடக பெருமை? கடந்த 20 ஆண்டுகளாக ஆயிரமாயிரம் செலவு செய்து பல மாநாடுகள், அரசியல் விழிப்பு உணர்வுகள், பொருளாதார ஓலங்கள் ஒன்றும்
நடப்பு வாழ்வாதார விளைச்சலுக்கு வேட்டாகதான் உள்ளது.

இன்று நாம் வாரியம் அந்த விடியலை நோக்கி தன விவசாய கீற்றை பரப்ப வந்துள்ள வேகம் ஒரு மாற்று பொருளாதார சித்தனை சக்தியை அரசியல் வேளாண்மையை பதிவு செய்தால்… செய்யும் நம்ம்பிகையில் இதன் வழி தமிழர் சமூக புரட்சி சித்தனை மலரும் என்றும் நம்புவோம்.

அதோடு முடிக்காமல் பாகாதான் ஆட்சிபீடத்துக்கு அமோக ஆதரவு தந்துள்ள தமிழர்களின் அடுத்த வளர்ச்சி தாவல் எல்லை தெரியாமல் வெறும் பாசத்துக்கும் நேசத்துக்கும் விலைபோகும் அல்லது விளைச்சல் செய்யும் பாகாதான் கூட்டணிக்கு யார்தான் தமிழ் தலைவன்? எல்லோரும் சிப்பாய் வேசம்தான் என்றால் யார் அந்த இந்த இனத்தின் பாகாதான் மாலுமி ? யாருமே இல்லாத அந்த சம்பான் தொடர்ந்து நட்டாற்றில்தான் பயணிக்குமா ? என்ற கேள்வியை முன் வைப்பதும் நியாயம்தாம்!  தமிழர் என்ற இன மான உணர்வை தமிழன் எடுக்கணுமா  ,அல்லது இந்தியன் உறசளில தமிழன் இனம் ஒரு தொங்கு அவதாரம்  தேய்வதுதான் விதியா? சதியா ? மதியா ?

-பொன் ரங்கன்